Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன்

[ Saturday,12 December 2015, 02:47:35 ] video1.png  
Sequence%2069.Still001.jpg

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போரில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று அரசாங்கம் நிராகரித்துவருகின்ற நிலையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

சர்வதேச ஈடுபாட்டோடு நீதிமன்றப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது. அதில் வேறு பல குற்றங்களுக்கான சாட்சியங்கள் முன்வைக்கப்படும் அதேவேளை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்களும் வரும். 

அதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு, பொறிமுறை முன்னெடுக்கப்படுகின்றபோது இனப்படுகொலைக்கான வரைவிலக்கணத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஆதாரங்களை போர்க் குற்ற நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். பற்றாக்குறையான சாட்சியங்களும் சேகரிக்கப்பட்டு அந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் - என்றார்.

http://ibctamil.com/news/index/14930

  • Replies 58
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியான தெளிவான இடத்துக்கு வந்திருக்கிறார்...

தொடரட்டும் தங்கள் பணி...

கனடாவில் முதன் முறை வந்த போது சொன்ன கருத்துதான் .

இப்போ இருக்கும் தரவுகளின் அடிப்படையில் இனப்படுகொலை என்ற சொல்லை யு என் பயன்படுத்த மறுக்கின்றது காலப்போக்கில் அதில் மாற்றம் வரலாம் என்றார் .

அப்படி சொன்னதை கூட விளங்காத சனம் வேறு இருக்கு .

44 minutes ago, arjun said:

கனடாவில் முதன் முறை வந்த போது சொன்ன கருத்துதான் .

இப்போ இருக்கும் தரவுகளின் அடிப்படையில் இனப்படுகொலை என்ற சொல்லை யு என் பயன்படுத்த மறுக்கின்றது காலப்போக்கில் அதில் மாற்றம் வரலாம் என்றார் .

அப்படி சொன்னதை கூட விளங்காத சனம் வேறு இருக்கு .

இலங்கையில் இராணுவம் ஆயுதங்களுடன் இப்போது திரிவதில்லை, நான் கண்டதில்லை என்றால் அதனை நக்கலடிக்கவும் இங்கு சனமிருக்கு. மாற்றங்களை விரும்பாதவர்கள் அல்லது மாற்றங்கள் தாம் விரும்பியவாறு நிகழவில்லை என்ற புலம்பல்களிற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்தால் அம்புட்டுத்தான்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இலங்கையில் இராணுவம் ஆயுதங்களுடன் இப்போது திரிவதில்லை, நான் கண்டதில்லை என்றால் அதனை நக்கலடிக்கவும் இங்கு சனமிருக்கு. மாற்றங்களை விரும்பாதவர்கள் அல்லது மாற்றங்கள் தாம் விரும்பியவாறு நிகழவில்லை என்ற புலம்பல்களிற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்தால் அம்புட்டுத்தான்.
 
ராணுவம் ஆயுதத்துடன் நடமாடாத அளவிற்கு வடகிழக்கில் புரட்சி நடந்திருக்கின்றது என்றால் அது ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான்.
அதே மாதிரி ஆயுதத்துடன் அலையும்  புலனாய்வுத்துறையினரையும் காவற்துறையினரையும் முடக்கி விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே வடக்கு மாகாண சபை ஒரு தீர்மானத்தைப் போட்டு ஆதாரங்களில் ஒரு பகுதியையும் ஐநா பிரதிநிதிகளிடம் கொடுத்த போது இதே வாய் என்ன சொல்லிச்சுது.... இப்ப இதைச் சொல்லுது.

இவருக்கு மிக விரைவில் சுடலை ஞானம் பிறக்கலாம்.. ஏனெனில்.. இவர் எதிர்பார்த்த திசையில் சிங்களம் நகர்வதாக இல்லை. அந்த நிலையை மாற்றி அமைக்க.. இப்ப இவருக்கு இனப்படுகொலை பற்றி கதைக்க வேண்டி இருக்குது.

==============

இராணுவம் ஆயுதத்தோடு திரியவில்லை என்றது சிலருக்கு அடக்குமுறை அல்ல என்று படுகுது போல. இராணுவம் ஆயுதத்தை தூக்க அதிக நேரம் எடுக்காது. அந்தளவுக்கு அதற்கு ஆளணியும் ஆயுதமும் வழங்கப்பட்டு அது குவிஞ்சு நிற்குது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இடைஞ்சலாக உள்ள இராணுவம் வெளிநாட்டு தமிழ் உல்லாசப் பிரியர்களுக்கு இருக்க வேண்டும் என்றில்லை தானே. இராணுவ உல்லாச விடுதியில் போய் தங்கிட்டு வந்து.. அங்க சொர்க்கம் தெரியுது என்ற ஆக்களின் மோட்டுத்தரவுகளின் அடிப்படையில்.. எதனையும் தாயகம் தொடர்பில் தீர்மானிக்க முடியாது. விக்கி ஐயா சொன்னது போல.. எல்லாம் நுனிப்புல்..மேய்ச்சல். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்....இங்கு சிலருக்கு ...சிங்கள நாற்றம் சுவாசிக்கவிட்டால்...நித்திரை வராது...அதைவிட இப்ப  சும் மாதிரி யாழ்கள உறவுகளின் தீவிரத்தன்மையையும் குறைத்தாயிற்றுப் போலாவும் இருக்கு...காலப்போகீல் களத்துக்கும் எதுவும் நடக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

இலங்கையில் இராணுவம் ஆயுதங்களுடன் இப்போது திரிவதில்லை, நான் கண்டதில்லை என்றால் அதனை நக்கலடிக்கவும் இங்கு சனமிருக்கு. மாற்றங்களை விரும்பாதவர்கள் அல்லது மாற்றங்கள் தாம் விரும்பியவாறு நிகழவில்லை என்ற புலம்பல்களிற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்தால் அம்புட்டுத்தான்.
 
உங்களைப்போன்றவர்களின் வாயால் உப்படிப்பட்ட வார்த்தை வந்ததே அவனுக்கு கிடைத்த பெரிய வெற்றி. புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக செய்கிறபோராட்டங்களால் இலங்கை அரசுக்கு அபகீர்த்தியும், தலையிடியும், சிலநாடுகள் இலங்கையை ஆபத்தான நாடாகக்கருதி தமது பிரசைகளை சுற்றுப்பயணம் செய்யும்போது கவனமாக நடக்கும்படி எச்சரித்தும் வருகிறது. ஆனால் உல்லாசத்துக்காகவே ஓடிப்போன சில எங்கடையள் இஞ்ச ஓடி வருகுதுகள். அதுகளுக்கு இப்பிடியொரு படம் காட்டினால் வெளிநாடுகளில் தங்களுக்கு எதிரான போராட்டங்கள் குறையும், மதிப்பு கூடும் என்று அவன் செய்கிறான். அவர்களது வாகனங்களாலும், இன்னும் சில மர்ம மரணங்களும்  தொடர்கின்றன. ஆயுதம் இல்லாமல் திரிந்தால் பிரைச்சனை  இல்லை என்ற அர்த்தமா? அப்படியாயின் ஏன் இன்னும் எமது நிலங்களில் அவர்கள் குடியிருக்கவேண்டும்? எமது நிலங்கள் ஏன் இன்னும் உயர்பாதுகாப்பு நிலமாக அவர்கள் பாதுகாக்க வேண்டும்? விட்டில் பூச்சி விளக்கில் விழுந்தமாதிரி சிலர் விழுவினம் என்றுதான் இந்த நாடகங்கள். அதுபுரியாமல் புகளுகிறீர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்திற்கு அலுவல்இல்லை என்றால் மூட்டை முடிச்சுகளைக் கட்டிகள் கொண்டு கிளம்பியது வேண்டியதுதானே? தமிழர்கள் சொந்த வீடுகளை விட்டு அங்கும் அலைந்து கொண்டிருக்க அவர்கள் வீடுகளில் காணிகளில் ஏன் இருக்க வேண்டும்?ஆக்கிரமிப்பு என்பது எந்த வடிவத்திலும் இருக்கக்கூடாது.தமிழர்கள் சொந்த நிலத்தில்சுதந்திரமாக எந்த வித நெருங்குவார்கள் இன்றி வாழவேண்டும் . அதுவே நிரந்தரத்தில் தீர்வை நோக்கிய முதல்படி.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் முழுவதுமாக வெளியேறுவது தான் சாதாரண நிலைக்குத் திரும்புவதன் அடையாளம். ஆனால், 80 களின் ஆரம்பத்தில் பிரச்சினை பெரிதாக முன்னரே யாழில் இராணுவம் ஒரு சில முகாம்களில் இருந்தது. வெளியே வரும் போது ஆயுதமோ சில சமயம் சீருடையோ இல்லாமல் வந்து போவார்கள். ஆயுதத்தோடு மக்கள் மத்தியில் வராமல் இருப்பது இராணுவத் தலைமையிடம் இருந்து வந்த உத்தரவுப் படியாக நடக்கும் ஒரு மாற்றமாகத் தான் இருக்க முடியும். அப்படியென்றால் அது நல்ல திசையில் நடக்கும் மாற்றம் என்பது என் கருத்து. சிறிது சிறிதாக வரும் மாற்றங்களை தாயக மக்கள் மட்டுமே நேரில் காண்கின்றனர். புலத்தில் இருக்கும் எங்களது ஸ்ராண்டர்ட் கொஞ்சம் உயர்வாக இருப்பதால், இவையெல்லாம் எங்களுக்கு ஒன்றும் இல்லாதது போன்று தெரிகின்றன. 

இராணுவத்தை  முற்றாக வெளியேற்ற சிலகாலங்கள் கட்டயாம் எடுக்கும் ஆனால் மக்களின் காணிகளை மீள் கையளிப்பதும் மீள் குடியேற்றமும் விரைவில் நடைபெறவேண்டும் ,

மனைவி சொன்னார் அவங்கள் சும்மா போனாலும் எங்கட பெண் பிள்ளைகள் அவர்களை பார்த்து சும்மா  வெருள்கின்றார்களாம்  ,வயசு கோளாறு போல 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, arjun said:

திரி இனிப் பத்தி எரியும்! எதுக்கும் ஈரச்சாக்கோட இருங்கோ! :cool:

8 minutes ago, Justin said:

திரி இனிப் பத்தி எரியும்! எதுக்கும் ஈரச்சாக்கோட இருங்கோ! :cool:

அப்படி பத்தி எரியபண்ணி  அதில் குளிர்காயந்து பொழுது போக்க தானே ஒவ்வொரு வார இறுதியிலும் யாழ் களம் சிலருக்கு  இருக்கு. நீங்கள் ஈரச்சாக்கை எடுக்க சொல்லி அதை கெடுக்க பார்ககிறீங்களே ஜஸரின் ஐயா. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, trinco said:

அப்படி பத்தி எரியபண்ணி  அதில் குளிர்காயந்து பொழுது போக்க தானே ஒவ்வொரு வார இறுதியிலும் யாழ் களம் சிலருக்கு  இருக்கு. நீங்கள் ஈரச்சாக்கை எடுக்க சொல்லி அதை கெடுக்க பார்ககிறீங்களே ஜஸரின் ஐயா. 

மற்றவர்களுக்குப் பொழுது போக்காகிறோம் என்று விளங்கிறதல்லவா? அந்த விளக்கத்தைச் செயலாக மாற்றினால் என்ன? சீண்டல்களை யார் செய்தாலும் உதாசீனம் செய்து விட்டு பயனுள்ள தகவல்களை மட்டும் பரிமாற வேண்டியது தான்!:cool:

Just now, Justin said:

மற்றவர்களுக்குப் பொழுது போக்காகிறோம் என்று விளங்கிறதல்லவா? அந்த விளக்கத்தைச் செயலாக மாற்றினால் என்ன? சீண்டல்களை யார் செய்தாலும் உதாசீனம் செய்து விட்டு பயனுள்ள தகவல்களை மட்டும் பரிமாற வேண்டியது தான்!:cool:

ஜஸரின் ஐயா உண்மையில் அதைத்தான்  தான் விரும்புகிறேன். உங்கள் அறிவுரைப்படி நடக்க முயற்சி எடுக்கிறேன். என்ன தான் சில விடயங்களில் முரண்பட்டு கொண்டாலும் தங்களில் எனக்கு விசேட  மரியாதை உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, arjun said:

இராணுவத்தை  முற்றாக வெளியேற்ற சிலகாலங்கள் கட்டயாம் எடுக்கும் ஆனால் மக்களின் காணிகளை மீள் கையளிப்பதும் மீள் குடியேற்றமும் விரைவில் நடைபெறவேண்டும் ,

மனைவி சொன்னார் அவங்கள் சும்மா போனாலும் எங்கட பெண் பிள்ளைகள் அவர்களை பார்த்து சும்மா  வெருள்கின்றார்களாம்  ,வயசு கோளாறு போல 

எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, trinco said:

ஜஸரின் ஐயா உண்மையில் அதைத்தான்  தான் விரும்புகிறேன். உங்கள் அறிவுரைப்படி நடக்க முயற்சி எடுக்கிறேன். என்ன தான் சில விடயங்களில் முரண்பட்டு கொண்டாலும் தங்களில் எனக்கு விசேட  மரியாதை உண்டு. 

ட்ரிங்கோ, இது உங்களுக்கான அறிவுரையல்ல! எனக்கு நானே கடந்த ஒரு வாரமாகச் சொல்லிக் கொண்டது, அதன் பிறகு தான் மீண்டும் யாழுக்கு எழுத வந்திருக்கிறேன்! எனது அனேகமான கருத்துகள் ஒரு நக்கலோடு முடிவதால் சொன்ன விடயம் அடிபட்டுப் போனதையும், எதிராளி புண்பட்டதையும் அறிந்த பின்னர் வந்த யோசனை இது! மற்ற படி நீங்கள் மதிக்கும் அளவு பெரிய மனிதன் அல்ல நான்! நட்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் இருக்குது பலரின் குடியிருப்புகள் விடுபடவில்லை என்பது எல்லாம் உண்மைதான்.ஆனால் எத்தனையோ காணிகள் வீடுகள் அதன் உரிமையாளர்களால் அறா விலைக்கு விற்க்கப்படுகுது.விற்றுப்போட்டு கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும் போவதற்க்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.அதை தடுத்து எப்படி மக்களை அங்கு வாழ வைக்கலாம் என்பது பற்றியும் ஆராய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கறுப்பி said:

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன்

சும்மின் பூட்டபிள்ளையின் காலத்திலும் ஆதாரம் தேடுவினம் இனப்படுகொலை நடந்து ஆறு வருடங்களுக்கு மேல் என்னமும் திரட்டிக்கொண்டு இருக்கினமாம் இதெல்லாம் மக்களை ஏமாத்தும் விளையாட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இராணுவ/ கடற்படை வீர்ர்கள் சீருடையில் வந்து கலாச்சார அழிவுகள் செய்தார்கள் என்றதிற்கு நடேசன் சிங்களப்பெண்ணை கலியாணம் கட்டினார் என்று உதாரணம் காட்டும் புத்திமான்களை என்ன சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

சும் அண்ணே ...சும்மா போங்கோ ......

எங்கேயோ வகை தொகையில்லாமல் வாங்கி கட்டிக்கொண்டார் போல ......சரியான தள்ளுவண்டி கேஸ் (பொறுமை, எல்லை, ஆதாரம் சேகரிப்பு எல்லாம் இப்ப தான் கண்ணுக்கு தெரியுது) ....ஜஸ்டின் அர்ஜுன் அண்ணைமார்களே உங்களுக்கு அண்ணையிண்ட லெவல் சரியாக தெரியவில்லை போல 
விசிலடித்து ஹீரோ ஆக்கி விட்டீங்கள் ....இது முழு ஜீரோ 

Quote

இலங்கையில் இராணுவம் ஆயுதங்களுடன் இப்போது திரிவதில்லை, நான் கண்டதில்லை என்றால் அதனை நக்கலடிக்கவும் இங்கு சனமிருக்கு. 

அண்ணை ஜீவன் சிவா ....இதை இப்பதானா கண்டநீங்கள் ....ஓ கனகாலத்திட்கு பிறகு இலங்கை வந்திருக்கியல் போல 
முந்தி எங்கடை சந்தியால ஒவ்வொரு நாள் காலை ஆறுமணிக்கும் பின்னேரம் ஆறுமணிக்கும் ஆர்மி சயிக்கிளில் ரோந்து போறவைகள்....கிழமைக்கு ஒருக்கா ரவுண்டப் நடக்கும் ...சந்திக்கு கொஞ்சம் தள்ளி ஆர்மி செக் பாயிண்ட் ஒன்று இருந்தது 
இப்ப அர்மியே ரோந்து வரதில்ல ....ரௌன்டப் இப்ப சின்னப்பிள்ளைகளுக்கு சொல்லிற கதை ....செக்போயின்ட் இருந்த இடமே இல்லாமல் போய் அய்ங்கரன் அண்ணை கடை வைச்சியிருக்கிறார்....இப்ப நான் சொல்லிறன் நாங்கள் சந்தோசமாயிருக்கம் 
ஆர்மி இல்ல ,ரௌன்டப் இல்ல ,செக்போயின்ட் இல்ல ஆகவே  ...தீர்வு,சுயநிர்ணயம்,சமவுரிமை எல்லாம் கிடைத்து விட்டது. 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு 2 வருடத்துக்கு முன்பே இலங்கையில் இனப்படுகொலை நடந்த்துள்ளதை நிறுவி உள்ளது. இனி என்ன ஆதாரத்தை சுமந்திரன் தேடப்போகிறார்??

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் இதற்குள் ஏன்புலியை இழுக்கிறீர்கள்? பழகிப்போய் விட்டதா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின் இதற்குள் ஏன்புலியை இழுக்கிறீர்கள்? பழகிப்போய் விட்டதா???

ஆமாம் தோழரே! பழகித் தான் போய் விட்டது, என்ன செய்யப் போகிறீர்கள் இப்போது?:cool:

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

சும் அண்ணே ...சும்மா போங்கோ ......

எங்கேயோ வகை தொகையில்லாமல் வாங்கி கட்டிக்கொண்டார் போல ......சரியான தள்ளுவண்டி கேஸ் (பொறுமை, எல்லை, ஆதாரம் சேகரிப்பு எல்லாம் இப்ப தான் கண்ணுக்கு தெரியுது) ....ஜஸ்டின் அர்ஜுன் அண்ணைமார்களே உங்களுக்கு அண்ணையிண்ட லெவல் சரியாக தெரியவில்லை போல 
விசிலடித்து ஹீரோ ஆக்கி விட்டீங்கள் ....இது முழு ஜீரோ 
 
அக்னி, நான் சும்மைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. இந்த வீரர் தீரர் வெட்டுவார் விழுத்துவார் என்ற மனநிலை த.தே.கூ ஆதரவாளர்களிடம் இல்லை! அது இருப்பது தீவிர தமிழ் தேசிய வாதிகளிடம் மட்டுமே! உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதால் பாரிய எழுத்தில் ஒரே தடவையில் கீழே:

தமிழருக்காக வேலை செய்யும் எல்லாரையும் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டும் என்பதே என் நிலை!

முப்பது வருடமாக எதிர் நீச்சல் மாதிரி யுத்தம் நடத்தியவர்களை விமர்சிக்கக் கூட அனுமதியில்லையென்போர் இப்போது சில வருடங்களாக மக்களுக்கு ஒரு சில சலுகைகளையாவது பெற்றுக் கொடுத்துள்ள த,தே.கூ உறுப்பினர்களை அவர்களது ஒவ்வொரு வசனத்திற்காகவும் திட்டுவது முரண் நகை!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

இந்த வரிகளை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா??

உங்களை மாற்றிவிட்டீர்களா???

சொல்லி  அனுப்புங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.