Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தேர் இழுக்கும் இராணுவத்தினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கில் தற்போதும் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றைய தேர் திருவிழாவின் போது ஆலயத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து தேரும் இழுத்துள்ளனர்.

தமது மேலாடைகளை கலைந்து விட்டு, தமது காலணிகளை கழட்டி விட்டு பக்தர்களுடன் இணைந்து இராணுவத்தினர் தேரினை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90http://www.tamilwin.com/festival/01/111370

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் பல்கலையில் பிரச்சினைக்கு தூண்டுகோலாக இருப்பது இங்கு பிராயசித்தம் நல்லா இருக்குடா உங்க நடிப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நல்லிணாக்க அய்யா சொல்லுவார் இனி தேரில் புத்தருக்கும் ஒரு இடம் கொடுங்கோ...நாம் இலங்கையர்...நமது மொழி சிங் தமிழ்....இது  விரைவில் அறீக்கையாக வரும்...

தமிழின அழிப்பை செய்துகொண்டு, தமிழரின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு தேர் இழுத்தாலும் செய்யும் பாவங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.

தமிழின அழிப்பை செய்துகொண்டு, தமிழரின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு "நல்லிணக்கம்", "நல்லாட்சி" வேடங்கள் போட்டால் செய்யும் பாவங்களுக்கு பலமடங்கு தண்டனைகள் கிடைத்தே தீரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:
625.0.560.320.160.600.053.800.668.160.90

ஆக்கள் நிக்கிற மாதிரியைப் பார்த்தால்.. தேரைத் தள்ளிறாங்களா அல்லது இழுக்கிறாங்களா எண்டு வடிவாக அனுமானிக்க இயலவில்லை!

எனினும் இவர்களது இவ்வகையான முன்னெடுப்புக்களை வரவேற்பதே.. காலத்துக்குப் பொருத்தமானது!

இரு சமூகங்களுக்கிடையிலுமான புரிந்துணர்வுக்கு.. இம்முயற்சிகள் நிச்சயம் உதவும் என நினைக்கிறேன்!

நீங்களும் விகாரைக்கு வந்து.. பெரஹராவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்களைக் கட்டாயப் படுத்தாத வரை ஓகே தான்!

மக்களாக விரும்பிச் சென்றால்...அது அவர்களது முடிவு!

  • கருத்துக்கள உறவுகள்

பாவமும் நானே பரிகாரமுன் நானே.. பக்தனும் நானே பதியும் நானே. 

சிங்களவன் தன்ர ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக எப்படியும் நடிப்பான். நடிக்கச் சொல்லிக் கொடுக்க சர்வதேச வல்லாதிக்க சக்திகள் வரிசையில வேற நிற்கினம். :rolleyes:

ஒரு தடவை நல்லூரில் வெள்ளை வேட்டியோடு நூற்றுக்கணக்கில் கொண்டு வந்து விட்டவர் கோத்தா. tw_angry:

 

தேரும் இழுப்பம்.. தேவைன்னா.. தமிழர்களை நரபலியும் கொடுப்பம் - சிங்கள பெளத்த பேரின இன அழிப்பு இராணுவம். 

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் கலை கலாச்சார நிகழ்வுகளில் சிங்கள இராணுவத்தின் அத்துமீறிய தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கக் கூடியதும் ஆகும். ஓரிருவர் கால்சட்டையுடன் நின்று வடம்பிடித்தால் அதை தற்செயலாக நடந்தது என்று தள்ளிப்போடலாம் ஆனால் ஒரு இராணுவ முகாமே வந்து வடம்பிடித்து தேரிழுக்கும்போது அதில் பின்புல சக்திகளின் மறைமுக நோக்கம் ஏதோ ஒன்று இருக்கிறது. அது தமிழருக்கு சாதகமானது என்று நம்புவதற்கு துளிகூட இடமில்லை. தமிழினத்தின் தற்போதைய மெளனத்தையும் இயலாத்தன்மையையும் தங்களுக்குச் சாதகமாக்கி சிங்கள அடக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் பயன்படுத்தி தமிழ்பிரதேசங்களை சிங்களமயமாக்குதலே சிங்கள அரசின் திட்டம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் ரொம்ப நல்லவங்கள். தமிழ்ச்சனங்கள் தான் ஒரு சதத்துக்கும் உதவாதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சிங்களவன் ரொம்ப நல்லவங்கள். தமிழ்ச்சனங்கள் தான் ஒரு சதத்துக்கும் உதவாதுகள்.

சிங்கள மினிசு ‍ஹறி கொந்தாய் ,தெமிழு கட்டி ‍‍ஹொந்த ந

7 hours ago, புங்கையூரன் said:

ஆக்கள் நிக்கிற மாதிரியைப் பார்த்தால்.. தேரைத் தள்ளிறாங்களா அல்லது இழுக்கிறாங்களா எண்டு வடிவாக அனுமானிக்க இயலவில்லை!

 

பீரங்கிகளை தள்ளி பழகினபடியால் தேரையும் தள்ளி பார்க்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

ஆக்கள் நிக்கிற மாதிரியைப் பார்த்தால்.. தேரைத் தள்ளிறாங்களா அல்லது இழுக்கிறாங்களா எண்டு வடிவாக அனுமானிக்க இயலவில்லை!

 

 

 

 

பின்னே வரும் தேரை இழுப்பதும் முன்னே செல்லும் தேரைத் தள்ளுவதும் இயற்கை . அதே வேளை எதிரே நிற்கும் பிகரை என்ன செய்யலாம் என மனம் நினைப்பதும் இயற்கை.

ராணுவத்தினருக்கு வடக்கில் வேலை இல்லை என்பது மட்டும் உறுதி

  • கருத்துக்கள உறவுகள்

 எப்பிடியாவது தாங்கள் வடக்கில்  நிரந்தரமாக காலூன்ற செய்யும் தந்திரங்கள்.

13 hours ago, புங்கையூரன் said:

ஆக்கள் நிக்கிற மாதிரியைப் பார்த்தால்.. தேரைத் தள்ளிறாங்களா அல்லது இழுக்கிறாங்களா எண்டு வடிவாக அனுமானிக்க இயலவில்லை!

 

 

ஆமியின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுவதற்காகப் படங்கள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. ஒரே ஆமியை இரு தடவை காணலாம். படம் எடுக்கும்போது panorama முறையில் தரம் குறைந்த படக் கருவியில் எடுத்தார்களா அல்லது புலம்பெயர்ந்த தமிழரை உசார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தமிழ்வின்னுக்குத்தான் தெரியும். :)

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் இழுபடுறாங்கள் இந்த தேருக்கு பின்னால் என்பது மட்டும் உன்மை

 

2 hours ago, இணையவன் said:

 

ஆமியின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுவதற்காகப் படங்கள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. ஒரே ஆமியை இரு தடவை காணலாம். படம் எடுக்கும்போது panorama முறையில் தரம் குறைந்த படக் கருவியில் எடுத்தார்களா அல்லது புலம்பெயர்ந்த தமிழரை உசார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தமிழ்வின்னுக்குத்தான் தெரியும். :)

நீங்கள் எழுதிய பின்னர்தான் நானும் பார்த்தேன்.

முந்தையநாள் குளோபல் நியூஸில் இருந்து காங்கேசன்துறையில் மேலும் ஒரு பகுதி விடப்படும் என்று மாவை தமது யாழ் அலுவலகத்திலிருந்து கூறியதாக ஒரு செய்தி இணைத்திருந்தேன். நேற்று விசாரித்து பார்த்ததில் மாவை யாழிலேயே இருக்கவில்லை என்று தெரிந்தது.

இதை யார் செய்கிறார்கள்?
இதை ஏன் செய்கிறார்கள்?

இவர்களது நோக்கம் என்ன?

புரியவே இல்லை. 

confused face smiley

முதலாவது படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்புச் சக்திகளின் செயற்பாடுகளெப்போதாவது, அடிமைகளின் நலன்சார்ந்திருப்பதுண்டா? நல்லாட்சியில் மட்டுமல்ல நாளை தமிழ்ச் சனாதிபதியே வந்தாலும் இதுதான் நிலமை. ஒற்றையாட்சிப் பௌத்த சிங்களப் பயங்கரவாத நாடாளுமன்றத்திலும் சரி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சரி தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவதோடு, இலங்கைத் தீவை முழுமையான சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கபளீகரம் செய்வதற்கான அடையாளமே இது. சந்நிதி முதல் கதிர்காமம்வரை எப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது என்பதை பாhர்த்தாலே போதும் இவர்களின் நடிப்பைப் புரிந்துகொள்ள. ஏமாறுவோர் இருக்கும்வரை எமாற்றுவோரும் இருப்பர். சரியானதொரு நல்லாட்சி சமாதான சகவாழ்வை மீட்கவிரும்பும் அரசாயின் வட – கிழக்கிலிருந்து வெளியேறும்வரை இராணுவம் முகாமுக்குள் முடக்கப்பட்டு, மக்களின் இயல்புவாழ்வுக்கு வழிவிடுவதோடு, இதுபோன்ற தொந்தரவுகளையும் தலையீடுகளையும் நிறுத்த வேண்டும். அதேவேளை, ஆக்கிரமித்து இடித்தழித்த ஆலயங்கள், தேவாலயங்கள் பள்ளிவாசல்களுக்கான மீளமைப்புக்கான நிதியை வழங்க முன்வருவதே சரியானது. அதைவிடுத்துத் தேரிழுத்து நாடகம் போடுகின்ற நரித்தனமும் ரணிலாரின் குள்ளநரித்தனமும் மைத்திரியின் நல்லாட்சி வேடமும்  விரைவில் கலையும்.
 காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதில்லை. காலமும் எப்போதும் ஒரே திசையில் நகர்வதுமில்லை.  
 

10312626_758502497503998_838213514093886
 
 
Pathmanathan Nalliah shared Kalai Marx's post.
10 hrs · 
 

அரோகரா அரோகரா..

 
 
Kalai Marx's photo.
Kalai Marx
10 hrs · 
 

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில்.

இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர்.

தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது. இதைப் பார்க்கும் பொழுது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை தான் ஞாபகம் வரும்.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக் கதை உலாவியது:
"இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!"

  • கருத்துக்கள உறவுகள்

3437-2-8501f3bd4fae881a9e50b5a95212d2c0

 

அரசு சார்பான ஊடகங்களிலும் அதே படம் உள்ளது. லட்சக்கணக்கில் உள்ள இராணுவத்தில் ஒரு நூறு பேர் வருவது ஒன்றும் ஆச்சரியம் தருவதாக இல்லை.

On ‎19‎/‎07‎/‎2016 at 11:18 PM, இணையவன் said:

 

ஆமியின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுவதற்காகப் படங்கள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. ஒரே ஆமியை இரு தடவை காணலாம். படம் எடுக்கும்போது panorama முறையில் தரம் குறைந்த படக் கருவியில் எடுத்தார்களா அல்லது புலம்பெயர்ந்த தமிழரை உசார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தமிழ்வின்னுக்குத்தான் தெரியும். :)

2+3=1 ஆகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் அது ஆமியில்லை ... என்று யாரும் சொல்லாதது 
ஆச்சரியமாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இன்னமும் அது ஆமியில்லை ... என்று யாரும் சொல்லாதது 
ஆச்சரியமாக இருக்கிறது!

சரி நான் சொல்லுறன் அது சிறிலங்கா ஆமியில்லை......கன தெய்யோவின் தொண்டர் படை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.