Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம் சொல்லலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

110.jpg

 பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள்,

அதனை... பிள்ளையிடம்,  சொல்லலாமா?   

எனது நண்பர் ஒருவர்.... தனது பிள்ளைக்கு  திருமணம் செய்து வைப்பதற்காக... அந்தப் பிள்ளைக்கு தெரியாமல்,  
அதற்கான... முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். (சாதகம் பார்ப்பது... போன்ற விடயங்கள்.)

இவ்வளவிற்கும்... அந்தப் பிள்ளை, மேற் படிப்பு  படிக்க வேண்டும் என்ற... ஆர்வத்தில், உள்ளது.
இப்படியான சூழ் நிலையில்.... இதனை, எப்படிக் கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

Edited by தமிழ் சிறி

  • Replies 51
  • Views 6.3k
  • Created
  • Last Reply

உங்கள் நண்பர் மிகவும் முட்டாள்தனமான செயலில் இறங்கியுள்ளார். இதனை எப்படி உங்கள் நண்பருக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி, தமிழ்சிறி ?:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

உங்கள் நண்பர் மிகவும் முட்டாள்தனமான செயலில் இறங்கியுள்ளார். இதனை எப்படி உங்கள் நண்பருக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி, தமிழ்சிறி ?:rolleyes:

ஆம்... இணையவன். 
நான், ஏதாவது சொல்லப் போக... வில்லங்கமாக வந்திடுமோ என்று தான், யாழ். கள உறவுகளின் அபிப்பிராயத்தை, பார்த்து விட்டு, 
அவருக்கு... ஏதாவது, சொல்லலாம் என்று, யோசிக்கின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவனைத் தவிர,  வேறு. ஒருவரும், பதில் எழுதாமல்,  இருப்பதால்....
கனக்க... யோசிக்கினம் போலை கிடக்கு. 

"வீட்டுக்கு... வீடு,  வாசல் படி"  

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கு திருமணம் என்பதால் பிள்ளையிடம் கேட்காமல் எப்படி திருமண நடவடிக்கையில் இறங்க முடியும்? பிள்ளையின் கருத்து மிக முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்தப்பிள்ள அப்பிராணி போலக் கிடக்கு..!

இப்பொழுதெல்லாம் படிப்பு முடித்தவுடனே அவர்களாகவே 'இன்னமாதிரி பெண் தேடுங்கோ!' என பெற்றோரிடம் சூசகமாக சொல்லிவிடுவார்கள், சிறீ..! எதற்கும் பையனின் அம்மாவிடம் வற்புறுத்தி கேட்க சொல்லுங்கள், அவரிடம் பச்சைக்கொடி காட்டியிருப்பார். :)

தமிழ் சிறீ - இது அடி முட்டாள்தனமான வேலை.
 
ஒரு வருடத்திற்கே பாவிக்க முடியாத உடையை வாங்கும்போதுகூட அந்தப் பிள்ளையின் அபிப்பிராயத்தை கேட்க்கும் பெற்றோர், அல்லது அவர்களின் தெரிவிற்கு அனுமதிக்கும் பெற்றோர் - பிள்ளையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதுக்கு மட்டும் அனுமதிக்கவில்லை என்பது மிகவும் கேவலமான விடயம்.

கட்டி வைத்து விட்டு இவர்கள் கம்மென்று இருந்து விடுவார்கள். வாழப்போவது பிள்ளைதான். சரி இல்லை என்றால் புதிதாக வேண்ட இது ஒன்றும் உடை இல்லை - மனது.

பிள்ளையின் தெரிவுக்கு விட்டுவிடலாம். பிள்ளைக்கு தெரிவு இல்லை என்றால் எமது சமூகத்தில் பெற்றோர் வரன் பாப்பது அவர்கள் கடமை. அப்படியான சந்தர்ப்பத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும், ஒவ்வொரு விடயமும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கலந்ததாலோசித்துத்தான்  செய்ய வேண்டும். திருமணமான பின்னர் பிள்ளை தனது காலில் நின்று சுதந்திரமான முடிவுகளை எடுத்து ஒரு குடும்பத்தை வழிநடத்தும் என்று நம்பித்தானே திருமணம் செய்து வைக்கிறார்கள். அதாவது பிள்ளை அறிவிலும், வயதிலும் முதிர்ச்சி அடைந்தது என்ற எண்ணம்தானே திருமண ஏற்பாட்டில் பெற்றோர் இறங்க காரணம்.

ஆனால் அந்த துணையை தேர்ந்தெடுப்பதற்கு பிள்ளைக்கு முதிர்ச்சி போதாது என்று பெற்றோர் நினைப்பது சுத்த முட்டாள்தனம்.

மொத்தத்தில் முடிவை அந்த பிள்ளை எடுத்ததாகவே இருக்க வேண்டும்.

1 hour ago, nunavilan said:

பிள்ளைக்கு திருமணம் என்பதால் பிள்ளையிடம் கேட்காமல் எப்படி திருமண நடவடிக்கையில் இறங்க முடியும்? பிள்ளையின் கருத்து மிக முக்கியமானது.

பிள்ளைகளுக்கு Surprise Birthday வைப்பது இல்லையா? அது போல் இதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். tw_smiley:

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் பிள்ளைகளுடன் கலந்தாலோசித்து செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.9.2016 at 8:04 PM, தமிழ் சிறி said:

 

110.jpg

 பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள்,

அதனை... பிள்ளையிடம்,  சொல்லலாமா?   

எனது நண்பர் ஒருவர்.... தனது பிள்ளைக்கு  திருமணம் செய்து வைப்பதற்காக... அந்தப் பிள்ளைக்கு தெரியாமல்,  
அதற்கான... முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். (சாதகம் பார்ப்பது... போன்ற விடயங்கள்.)

இவ்வளவிற்கும்... அந்தப் பிள்ளை, மேற் படிப்பு  படிக்க வேண்டும் என்ற... ஆர்வத்தில், உள்ளது.
இப்படியான சூழ் நிலையில்.... இதனை, எப்படிக் கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தின் நல்லதொரு சமுதாய சிந்தனை திரி.....
நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் எழுதலாம் என நினைக்கின்றேன்.

சிறித்தம்பி! சேம் பிளட்.
 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை மாட்டிவிட்டதுக்கு,பிள்ளைகளை பழிவாங்ககூடாது

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ஆணா , பெண்ணா.... சுமாராகவேணும்  அவர்களின் வயது விபரம் தெரியாமல் ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கு....!அந்தப் பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்தவையாகவோ அல்லது சிறுவயதில் இங்கு வந்து ஆரம்பக் கல்வியில் இருந்து படித்து வரும் பிள்ளைகளாக இருந்தால் , பெற்றோர் எவ்வளவுதான் சுழிச்சு ஓடினாலும் அவர்கள் சரியான நேரத்தில் தத்தமது துணையை நேரிடையாகவே கூட்டிவந்து தகவல் சொல்லுவார்கள்....!  :119_busts_in_silhouette:

பின்பு பெற்றோர் அதை ஏற்பதற்கோ அன்றி ஜீரணிப்பதற்கோ தம்மைத் தயாரிப் படுத்தித்தான் ஆகவேண்டும்....!  tw_cold_sweat:

பெற்றோரின் மனம் ஓரளவாவது குளிர்வதற்கு சில சாய்ஸ் உண்டு....!  tw_cry:

--- தன் பாலினத்தில் ஒருவரை கொண்டு வராமல் எதிர்பாலினத்தில் கொண்டு வருதல்....!     ஸ்...ஸ்......ஸ்.....!  tw_dissapointed:

--- வேற்று நாட்டவரை தேர்ந்தெடுக்காமல் தன் நாட்டவரைத் தேர்ந்தெடுத்திருப்பது ....!         ம்...ம்...ம்......!  tw_confused:

--- வேற்று மொழி பேசுபவர் இல்லாமல் தன் தாய்மொழி  பேசுபவரை அறிமுகப் படுத்துவது ...!   க்கும் ...க்கும்....! :rolleyes:

--- வேறு மதம் பிடிக்காமல்  தன் மதம் பிடித்தவரைச் சுட்டுவது ....!   ஐயோ ... ஐயோ.....! :unsure: 

--- ஒரு ஹிப்பியோ ,குருவியோ இல்லாமல் பார்வைக்கு லட்ஷணமாய் இருப்பது ....!    கக்கக்க  போ ....! tw_blush:

--- தனது சாதியுடையவனாய், நண்பனின் நன்பனுக்குத் தெரிந்தவராய்  இருப்பது ....!  ஓஹோ ....ம் ....!  :224_monkey:

--- ஆச்சரியமாக  தனது வழியிலோ, மனைவி வழியிலோ உறவினனாய் இருப்பது ......! ஆஹா ...ஆஹாஹா ....! :108_metal:

அவர் ஜென்ம விரோதியின் மகனோ,மகளாகவோ இருந்தாலென்ன... ஏலே சின்ர்ராசு  அடிடா மேளத்தை , நீ கட்றா  தாலியை ......! :112_lips: :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 1.10.2016 at 0:59 AM, தமிழ் சிறி said:

இணையவனைத் தவிர,  வேறு. ஒருவரும், பதில் எழுதாமல்,  இருப்பதால்....
கனக்க... யோசிக்கினம் போலை கிடக்கு. 

"வீட்டுக்கு... வீடு,  வாசல் படி"  

,

இந்தத் தலைப்புக்குள் நுளைவதெனில் பலவிடயங்களைத் தொடவேண்டும். எமது இளையோரின் வாழ்வோடு விளையாட முடியாது. தொடருவேன்...

தலைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2016 at 5:36 AM, நந்தன் said:

எங்களை மாட்டிவிட்டதுக்கு,பிள்ளைகளை பழிவாங்ககூடாது

ஆசைப்பட்டால் அனுபவிக்க தான் வேணும் சொன்னால் கேட்டால் தானே கிகிகிகி

சிறியர் ஒருநாள் வாழ்ந்துவிட்டு போவது இல்லை வாழ்க்க்கை இருமணம் இணைய திருமணம் கூடவேண்டும் பிள்ளை படிக்க ஆசைப்படுதல்லவா பிறகு என்னத்திற்கு கல்யாணம் அதுவா அமையும் சில காலம் பொறுத்து  பார்க்கலாம் அவளுக்கும் அவள் மனதிற்கும் பிடித்த வாழ்க்கை இயற்கையாக கூட அமையலாம் அது பல ஆண்டுகள் வரைச் செல்லும் அது வாழ்க்கை .

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் பிள்ளை சொல்லக்கூடும் நான் ஏற்கனவே எனது துணையை தெரிவு செய்து விட்டேன் என்று.....ஆகவே பிள்ளையிடம்  அனுமதி கேட்ட பின்பு பார்ப்பது நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு மூன்று பிள்ளைகள் .இருவர் தானே விரும்பி இருந்தனர்.சுலபமாக முடித்து விட்டோம்.எப்போ கடைக்குட்டி (பொண்ணு) என்னம்மா உனக்கும் அக்கா அண்ணனுக்கு செய்த மாதிரி நாம் சுகமாக இருக்கும் போதே செய்து பார்க்க வேண்டும்.உன் மனதில் யாராவது இருந்தா எதையும் யோசிக்காமல் சொல்லு.எப்படி எதுவும் இல்லை நீங்களே பாருங்கோ என்று எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று பரு லிஸ்ரோ தந்திருக்கிறா.

உனக்கு விருப்பமில்லாமல் இதில் எதுவும் இருக்காது என்ற உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை (Authority) கொடுத்தால் அவருக்கு ஒரு பலம் (power) வந்துவிடுகிறது. அந்தப் பலத்தைப் பெற்றுக்கொண்டவர் பொறுப்புக்கூறுதல் (Responsibility) செய்ய வேண்டியவராகிறார்.

பிள்ளைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தால் அப்பிள்ளைக்கு பலம் கிடைக்கிறது. திருமணத்தை வெற்றியடையச் செய்ய வேண்டிய பொறுப்பு பிள்ளைக்குக் கொடுக்கப்படுகிறது.

மாறாக பெற்றோர்கள் முடிவெடுத்தால் திருமணத்தின் வெற்றி தோல்விக்கு அவர்களே பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14470489_746287878858033_3358638563549774925_n.jpg?oh=573e24c2cf530d4b3588a318b1d07a0b&oe=5876D87E

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்குத்தான் கண்ணில  அம்புட்டுது...

இதெல்லாம் நடக்கா இப்பவும்......

 

நான் பிள்ளைகள் என்னுடன்  கதைக்கத்தொடங்கும்போதே  சொல்லிவிட்டேன்

திருமணம் உங்க விருப்பப்படி தான் என்று.

சிறி

உங்களது நண்பருக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால்

உடனே இந்த மாதிரி மூடநம்பிக்கைளிலிருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2016 at 2:32 PM, விசுகு said:

இன்றைக்குத்தான் கண்ணில  அம்புட்டுது...

இதெல்லாம் நடக்கா இப்பவும்......

 

நான் பிள்ளைகள் என்னுடன்  கதைக்கத்தொடங்கும்போதே  சொல்லிவிட்டேன்

திருமணம் உங்க விருப்பப்படி தான் என்று.

சிறி

உங்களது நண்பருக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால்

உடனே இந்த மாதிரி மூடநம்பிக்கைளிலிருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.

 

விசுகர்! உங்களது / உங்கள் சகோதரங்களது திருமணங்கள் எப்படி நடந்தன? காதல் திருமணங்களா அல்லது பேச்சு திருமணங்களா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2016 at 2:32 PM, விசுகு said:

இன்றைக்குத்தான் கண்ணில  அம்புட்டுது...

இதெல்லாம் நடக்கா இப்பவும்......

 

நான் பிள்ளைகள் என்னுடன்  கதைக்கத்தொடங்கும்போதே  சொல்லிவிட்டேன்

திருமணம் உங்க விருப்பப்படி தான் என்று.

சிறி

உங்களது நண்பருக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால்

உடனே இந்த மாதிரி மூடநம்பிக்கைளிலிருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.

 

எமது நாளைய சமுதாயம் துருக்கி,ஈராக்,துனேசியன் என நடு வீட்டுக்குள் அழைத்து வருகின்றார்கள். உங்களைப் பொறுத்தவரைக்கும் இது பற்றிய கருத்து என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எமது நாளைய சமுதாயம் துருக்கி,ஈராக்,துனேசியன் என நடு வீட்டுக்குள் அழைத்து வருகின்றார்கள். உங்களைப் பொறுத்தவரைக்கும் இது பற்றிய கருத்து என்ன? 

அண்ணா

நான் பிரான்சுக்கு வந்த புதிதில் ஒரு கிரேக்க முதலாளியிடம் வேலை செய்தேன்

அவர்களும் கிட்டத்தட்ட எமது கலாச்சாரத்தோடு

தகப்பனாருக்கு 

ஆண்களுக்கு அதிக அதிகாரம் தரும் பரம்பரையில் வந்தவர்கள்.

அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரப்படி வாழத்தலைப்பட்டபோது..

அவருடன் இது பற்றி கலந்து பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன

அவர் சொன்னது இன்றும் என்னுள் ஆளப்பதிந்துள்ளது.

எனது சமுதாயப்படி வளர்க்கணும் என்றால் நான் முதலில் எனது நாட்டில் இருக்கணும்

இங்கு இருப்பதென்றால் இப்படித்தான் வளரும்

ஒரேயொரு வழிதான் இருக்கு

 நான் தான் என்னை மாற்றிக்கணும் என்றார்.

இது இன்று எமக்கும் பொருந்துகிறது.

உங்கள் கேள்விக்கு இரண்டு பதிலிருக்கு.

1- நான் மாற்றங்களுக்கு தயாராகிவிட்டேன் (காரணம் எனது திருமணத்தில் நான் எனது பெற்றோர் சொல் கேட்டதில்லை)

2- நாட்டிலும் இப்போ அந்த நிலைமை (நாம் கற்பனை செய்யும்நிலை)  இல்லை

 

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில்.. பிள்ளைகள் பார்க்கிறதை.. அப்பா அம்மா கட்டி வைச்சு.. தமது கெளரவத்தை காத்துக் கொள்வதே சிறந்தது. ஏனெனில்.. அப்பா அம்மா.. பிள்ளைகளின்.. எல்லா உணர்வுகளையும் அறிந்து கொள்ள முடியாது. அந்த வகையில்.. இந்த விசயத்தில்.. பெற்றோர் எதனையும் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். அவர்களின் தெரிவுக்கு முதன்மை அளியுங்கள். நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.. அவர்கள் வாழ இருப்பவர்கள். அதனை சிதைக்காதீர்கள். அவர்களின் தெரிவில்.. அவர்கள் விடும் தவறுகளுக்கு அவர்களே பொறுப்பு என்பதை தெளிவாகச் சொல்லிடுங்கள். முன்னெச்சரிக்கையாக. இதே தான் எங்கள் வீட்டில்.. எங்களுக்குச் சொல்லப்பட்டது.

நீ விரும்பிறதை நீ செய்து கொள்ளலாம். ஆனால்.. அதன் விளைவுகளுக்கு நீயே பொறுப்பு. நீ சந்தோசமா இருந்தால் நாங்களும் சந்தோசப்படுவோம். இன்றேல் கவலை தான்.. இதுதான் எங்கட அப்பா அம்மா எங்களுக்குச் சொன்னது. இதுவே இப்பவும் பலருக்கு பொருந்துகிறது. tw_blush:

பெற்றோரின் எச்சரிக்கை என்பது இயல்பாக எச்சரிக்கையை அவதானத்தைக் பொறுப்பை கூட்டி விட்டதே தவிர.. கண்டபடி தீர்மானிக்கும் நிலைக்கு இட்டிச் செல்லவில்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

சொல்லிட்டாங்களே. நீயே உன் வாழ்க்கையை தெரிவு செய்யுன்னு.  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.