Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

12 வயதில் அப்பாவான கேரள சிறுவன்

Featured Replies

12 வயதில் அப்பாவான கேரள சிறுவன்

கோப்புப்படம்: ஏ.பி.
கோப்புப்படம்: ஏ.பி.
 
கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும்.

எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியின் உட்சுரப்பியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான பி.கே.ஜப்பார் இதுகுறித்துக் கூறும்போது, ''இளம் வயதிலேயே தந்தையாகியுள்ள சிறுவன் உரிய வயதுக்கு முன்பே பருவமடைந்திருக்கலாம்.

இது வழக்கத்துக்கு மாறான நிலை அல்ல. ஆனால் 12 வயதில் ஒரு சிறுவன் தந்தையான சம்பவத்தை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை'' என்றார்.

குழந்தை பிறந்து 18 நாட்கள் ஆகியிருந்தபோது, தந்தைக்கும், குழந்தைக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கொண்டு தந்தைமை பரிசோதிக்கப்பட்டது.

அதில் அவர்தான் குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தையாகியுள்ள சிறுவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாய் மற்றும் தந்தை 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், வழக்கில் சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/12-வயதில்-அப்பாவான-கேரள-சிறுவன்/article9597992.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

வழக்காவது புண்ணாக்காவது..., அவர்கள் வாலிபர்கள் வயசுல வாழுறாங்கள். விடுங்கோ வாழட்டும். இஞ்ச முன் பின் எல்லாம் முடிச்சுக் குடுத்து முடிக்க முப்பத்தைஞ்சாச்சு.....!  tw_angry:  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

நானெல்லாம் 12 வயதில் இதுக்கும் மேலே சாதனைகள் செஞ்சிருக்கிறேன். :unsure: மரத்தில் செய்த ட்ரெயின் பொம்மை வேணும் எண்டு அடம்பிடித்திருக்கிறேன். tw_cold_sweat: முதுகில் கொழுவுற பள்ளிக்கூட பை வேணும் எண்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறேன். tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

நானெல்லாம் அண்டவெயர் என்று போட்டதே 12 வயதில்த் தான்.

அதுவும் கோம்மேட் காரிக்கன்.

  • கருத்துக்கள உறவுகள்

12  வயதிலா?

வடிவாக ஞாபகம் வருகுதில்லை

ஒரு வெளை  இப்ப பெண்கள்  வயதுக்கு வருவது முந்துவது மாதிரி

ஆண்களுக்கும்??:love:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

. இஞ்ச முன் பின் எல்லாம் முடிச்சுக் குடுத்து முடிக்க முப்பத்தைஞ்சாச்சு.....!  tw_angry:  tw_blush: 

நானும் இப்படித்தான் சுவி. லேட்டாகி திருமணம் செய்ய கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும்.

12 வயதிலை அப்பனாகினது பெரிய விசயமாய் இருக்கலாம்.ஆனால்......
மிச்ச விசயங்களைப்பற்றி நான் வாயே திறக்கமாட்டன்...:grin:

முதுகு ஊத்தை உருட்டிவிட்டதைப்பற்றியெல்லாம் மூச்சும் விடமாட்டன்:mellow:

அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டன் <_<

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் யாருய்யா சொன்னா.... 
சிறுபிள்ளை வெளாண்மை வீடு வந்து சேராதுன்னு " 
இது அடி  வயிறு வரைக்குமில்லையா வந்திருக்குது ... :unsure:

3 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

மலையாள சினிமாக்களில் ஷகீலாவின் படங்களை மட்டும் அறிந்து வைத்து இருக்கின்றீர்கள் போல இருக்கு நெடுக்கு. அங்கிருந்து மிகவும் தரமான படங்கள் தான் அதிகம் வருகின்றன. பிரேமம் போன்ற படங்களையாவது பார்த்து இருக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

18 hours ago, இசைக்கலைஞன் said:

நானெல்லாம் 12 வயதில் இதுக்கும் மேலே சாதனைகள் செஞ்சிருக்கிறேன். :unsure: மரத்தில் செய்த ட்ரெயின் பொம்மை வேணும் எண்டு அடம்பிடித்திருக்கிறேன். tw_cold_sweat: முதுகில் கொழுவுற பள்ளிக்கூட பை வேணும் எண்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறேன். tw_anguished:

15 hours ago, ஈழப்பிரியன் said:

நானெல்லாம் அண்டவெயர் என்று போட்டதே 12 வயதில்த் தான்.

அதுவும் கோம்மேட் காரிக்கன்.

13 hours ago, விசுகு said:

12  வயதிலா?

வடிவாக ஞாபகம் வருகுதில்லை

ஒரு வெளை  இப்ப பெண்கள்  வயதுக்கு வருவது முந்துவது மாதிரி

ஆண்களுக்கும்??:love:

நீங்கள் எல்லோரும் 12 வயது சிறுவனைப் பற்றி மட்டுமே மட்டுமே கதைத்துக் கொண்டு இருக்கின்றிர்கள். அவனுக்கு 16 வயதில் ஒரு குருஜி இருக்கின்றா என்பதை சுலபமாய் மறந்து விடுகின்றிர்கள்.....!  tw_blush:

8 hours ago, குமாரசாமி said:

12 வயதிலை அப்பனாகினது பெரிய விசயமாய் இருக்கலாம்.ஆனால்......
மிச்ச விசயங்களைப்பற்றி நான் வாயே திறக்கமாட்டன்...:grin:

முதுகு ஊத்தை உருட்டிவிட்டதைப்பற்றியெல்லாம் மூச்சும் விடமாட்டன்:mellow:

அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டன் <_<

சேம் பிளட் ......!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொதாரி இது 16 வயது பெண்ணை கைது செய்யாமல் 12 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். கிந்திய சட்டம் இப்பிடிதான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

என்ன கொதாரி இது 16 வயது பெண்ணை கைது செய்யாமல் 12 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். கிந்திய சட்டம் இப்பிடிதான்

சிங்கம்  ஆட்டை  சாப்பிடுவது இயற்கை எனும் விதிக்குள் இதுவும்  வரும் போல....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

சோப்பு போடுவதை மட்டும் பார்த்து விட்டு சொல்லப்படாது மலையாளப்படங்கள்    மசாலா இல்லாத படங்களை நீங்கள் பார்க்க வேண்டும்  நெடுக்ஸ் tw_blush:

  • தொடங்கியவர்

12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது

03_BABY__BRITAIN_I_3147328f.jpg
 
கேரள மாநிலத்தில் 12 வயது சிறுவனுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் மீது பாஸ்கோ சட்டத்தின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயதே நிரம்பிய குழந்தையின் தாய் மீதும் குழந்தைகள் பாலினக் கொடுமை (போஸ்கோ சட்டம்) தடுப்புச் சட்டப்படி, சட்டப்பிரிவுகள் 7.8-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறுவன்தான் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமியின் மீது போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் விநோதம்..

இந்த வழக்கின் விநோதம் என்னவென்றால், ஒரு பிரிவின் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படும் சம்பந்தப்பட்ட நபர் மற்றொரு சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார். இந்த வழக்கு இப்போது, சிறுவன், சிறுமி மற்றும் அவர்களுடைய குழந்தை என மூன்று சிறாரின் நலன் சார்ந்ததாக மாறியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்துவரும் அதிகாரிகள், குழந்தைக்கு 12 வயது சிறுவன்தான் தந்தை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, பாலுறவு கொள்வதற்கு இருவரில் யார் முதலில் தூண்டியது என்பதின் அடிப்படையில் நீதி வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.

மாநிலத் தலைவர் கூறுவது என்ன?

இந்நிலையில், கேரள மாநில குழந்தைகள் நல வாரியத் தலைவர் சோபா கோஷி, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குழந்தைகளின் உரிமையும் பேணப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தைகள் என்பதால் அவசரகதியில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி 18 வயது கீழ் உள்ளவர்களை ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதில்லை, குழந்தைகளாகவே பாவிக்கிறோம். போலீஸார்தான் இவ்வழக்கில் குற்றவாளி யார் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

http://tamil.thehindu.com/india/12-வயதில்-தந்தையான-கேரள-சிறுவன்-மீது-பலாத்கார-வழக்கு-பாய்ந்தது/article9601111.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான பெண் சிசுக்களைக் கொல்வதில் (பிறப்பின் முன்பும்...பிறந்த பின்பும்)..பல இந்திய மாநிலங்கள் இன்னும் முன்னிலையில் நிற்கின்றன!

ஒரு வேளை.....இயற்கை விழித்துக் கொண்டு  விட்டதோ?tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

இந்த வழக்கின் விநோதம் என்னவென்றால், ஒரு பிரிவின் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படும் சம்பந்தப்பட்ட நபர் மற்றொரு சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார். இந்த வழக்கு இப்போது, சிறுவன், சிறுமி மற்றும் அவர்களுடைய குழந்தை என மூன்று சிறாரின் நலன் சா

12 வயதில் உள்ளவர்களை "குற்றவாளிகள்" (criminals) என சட்ட்ப்படி சொல்ல முடியுமா? :unsure:

On 24.3.2017 at 4:42 AM, குமாரசாமி said:

முதுகு ஊத்தை உருட்டிவிட்டதைப்பற்றியெல்லாம் மூச்சும் விடமாட்டன்:mellow:

அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டன் <_<

On 24.3.2017 at 1:15 PM, suvy said:

சேம் பிளட் ......!tw_blush:

முதுகில அவ்வளவு ஊத்தையா இருக்குது ஆளாளுக்கு உருட்டி விளையாட.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 24.03.2017 at 8:45 AM, suvy said:

நீங்கள் எல்லோரும் 12 வயது சிறுவனைப் பற்றி மட்டுமே மட்டுமே கதைத்துக் கொண்டு இருக்கின்றிர்கள். அவனுக்கு 16 வயதில் ஒரு குருஜி இருக்கின்றா என்பதை சுலபமாய் மறந்து விடுகின்றிர்கள்.....!  tw_blush:

சேம் பிளட் ......!tw_blush:

என்ன கன பிளட் ஒரே மாதிரி இருக்குது.:unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் படித்தவர்கள் நிறைந்த  மாநிலமான கேரளாவின் immoral நடவடிக்கை கேலிக்குரியது.

ஒரு 12 வயது அறியாச் சிறுவன், 16 வயது பெண்ணால் seduced பண்ணப்பட்ட நிலைமை கண்டு கொள்ளப்படவில்லை.

இங்கே பிரித்தானியாவில் இந்த நிலை வந்தபோது, சட்டமும், சமூகமும், அவர்களை ஆதரித்து, பிறந்து விட்ட குழந்தையின் நலன் கருதி நடந்து கொண்டது. 

Sensation: Baby-faced Alfie Patten shocked the world when he hit the headlines as a dad at 13

https://www.thesun.co.uk/archives/news/746069/britains-youngest-parents/

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இந்தியாவில் இப்படி சிந்திக்க மாட்டார்கள். Sex என்றால் ஆண் பெண்ணுக்கு செய்வது என்று தான் அவர்களுக்கு தெரியும். 17 வயதுக்காரிக்கு 12 வயதுக்காரன் பிள்ளையை கொடுத்துட்டான் என்ற நோக்கிலேயே செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இந்தியாவில் இப்படி சிந்திக்க மாட்டார்கள். Sex என்றால் ஆண் பெண்ணுக்கு செய்வது என்று தான் அவர்களுக்கு தெரியும். 17 வயதுக்காரிக்கு 12 வயதுக்காரன் பிள்ளையை கொடுத்துட்டான் என்ற நோக்கிலேயே செல்வார்கள்.

அதுதான் உன்மை மீரா

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விதமான அழுத்தங்களோ, நிர்பந்தங்களோ இல்லாது, ஆணும் பெண்ணுமாக கட்டில் செல்வார்கள்... பலமுறை...

ஆனாலும்.... ஆண் வேறு கலியாணம் செய்யப் போகிறார் என்றவுடன்.... அந்தப் பெண்... ஆற அமர... போய்... அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துட்டார்.. என்றால் உடனே அவர் கைது.

ஆண்... பலாத்காரத்துக்கு உட்படுவதில்லை என்பது அடிப்படை நிலை (default position)

அதுதான் இந்தியா.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வழக்கு.

ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி... இளைஞர்.

ஒரு வழக்கு விடயமாக வைத்தியசாலைக்கு, ஒரு statement எடுக்க, தாதி ஒருவரை சந்திக்கிறார்.

இருவருக்கும் ஒரு கவர்ச்சி.... வெளியே சந்தித்துக் கொள்கின்றனர். 

கட்டில் வரை போகின்றனர். அவர் இயங்கிக் கொண்டிருக்கும் போது, 'நிறுத்து, நிறுத்து' என்கிறார் அவர்.

அவர் நிறுத்தாமல் தொடர்கிறார். இவர் பின்னர், பாலியல் பலாத்காரம் என முறையிட, 'நிறுத்து' என்று சொன்னபின்னும் அத்துமீறினால், அது பாலியல் பலாத்காரம் தான் என்ற சட்ட பிரிவின் கீழ் இவர் கைதாகிறார்.  

வழக்கு நீதிமன்றம் வருகின்றது. 

அவரோ, இணக்கத்துடன் தான் ஆரம்பித்தோம். இடையே எப்படி பாலியல் பலாத்காரமானது என்கிறார். அவர், பலவகையான சத்தங்கள் (முனகல்கள்) போட்டுக் கொண்டிருந்ததால்,  'நிறுத்து' என்று சொன்னதாக எனக்கு நினைவே இல்லை. என்கிறார். மேலும் அவர் நிறுத்து என்று சொல்லி இருந்தால் அந்த நேரத்தில் அதன் அர்த்தமே வேறு.... மேலும் நானும் நிறுத்தக் கூடிய நிலையில் இருந்திருக்க முடியாது... என்கிறார்.

ஜட்ஜ் ஐயாவுக்கு கோபமான கோபம்.

அரச வழக்கு தொடுனரை கடாசி தொலைத்து விடடார். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இது போன்ற வழக்குகளைக் கொண்டுவந்து, நீதிமன்ற நேரத்தினையும், மக்களின் வரிப் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று சொல்லி வழக்கினை தள்ளி விட்ட்டார்.

நீட்டி முழங்கிய, பெண் உரிமை சங்கத்துக்கும், இது போன்ற அபத்தங்களை ஆதரவு அளித்து, உங்கள் மதிப்பினைக் கெடுத்து, பின்னர், உங்கள் உதவி உண்மையாக தேவைப்படுபவர்களுக்கு தீங்கு இலைக்காதீர்கள் என்று குட்டும் வைத்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அவரோ, இணக்கத்துடன் தான் ஆரம்பித்தோம்

இணக்கத்துடன் ஆரம்பித்ததால் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்குள் நுழைந்துவிட்டதாக எழுத்துக்கொள்ள வேண்டும் யுவர் ஆனர். :D: பிறகு நிறுத்து என்று சொன்னால் அது Breach of Contract என எடுத்துக்கொள்ள வேண்டும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.