Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


அவரால் முடிந்திருக்கும். முடியாதிருந்திருக்கும்.
அதுவும் பிரச்சனையில்லை. எதுவுமே தேவையில்லை.
அன்று நாம் அவரிடமிருந்து எதிர்பாத்தது ஒன்றே ஒன்று   தான்.
அவருடைய உண்மையான, நேர்மையான,  தார்மீகமான ஆதரவு அன்று ஈழத்து தமிழர்கள் பக்கம் இருந்திருக்க வேண்டும்.  
எதுவுமே அவரால் நடக்காது என்று அவருக்குத் தெரியும். தெரிந்தும் எதற்காக உண்ணாவிரத நாடகம்.

எத்தனையோ தடவை தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாதையை அமைத்த கலைஞர்.....
இன்னொரு தடவை தான் நேசித்த தமிழுக்காக .... அவர் நேசித்த தமிழ்  இனத்திற்காக ,,,
அவர் ஆதரவால் வளர்ந்த தமிழ் ஈழத்திற்காக .... இன்னும் ஒரேயொரு தடவை .... தனது ஆதரவை .... கொடுத்து ... அன்று அவருடைய ஆதரவுடன் இருந்த மத்திய அரசிலிருந்து வெளியேறி...,,, தனது இதயம் எப்போதும் தமிழிற்காகவே.... தமிழ் இனத்திற்காகவே..... உலகமெங்கும் வாழும் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தால்.... என் இதயம் அழும்..... என்று அடித்துக் கூறியிருந்தால்......
அவர் மீண்டும் வெற்றி முரசோடு வீறு கொண்டு எழுந்திருப்பார்.
கோடானு கோடி   தமிழ் மக்கள் இன்றும் அவர் பின்னால் அணி வகுத்துச் சென்று விடை கொடுத்திருப்பார்கள்.

  • Replies 124
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

நவீனன் செய்திகளை தொடர்ந்து “கருத்துக்களாக” பக்கம் பக்கமாக ஒட்டுவதால்தான் பலர் “இரங்கல் புறக்கணிப்பு” செய்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லையென்று தெரிகின்றது.

புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்டதற்கும், இறுதிப்போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணத்தை எமக்குள்ளே தேடாமல் எல்லா அழிவுக்கும் “வெளியார்”தான் காரணம் என்று இலகுவாக பிறர்தலையில் ஏற்றிவைத்துவிட்டு,  படுகொலைகளை தடுக்க கலைஞர் உதவவில்லை என்று அவரையும் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாகக் காட்ட ஒரு கூட்டம் இருக்கின்றது. தமது வங்குரோத்தை மறைக்க இப்படியான சந்தர்ப்பத்தை நழுவவிடுவார்களா என்ன!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றவர். பலகோடி தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அம்மக்களை இழிவுசெய்யாமல் இருக்கவேண்டியது சில இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்யும்.

கலைஞர் அவர்கள் ஈழப்போராட்ட இறுதிக்கட்டத்தில் அவசியமற்ற பண்டைத்தமிழை உதிர்க்காமலும்.....பகட்டுக்கு உண்ணவிரதமிருந்து போர்முடிந்துவிட்டது என அறிக்கை விடாமலிருந்திருந்தால்  இன்று அகில  தமிழரே  உலகம் வியக்கும் வண்ணம் பிரியாவிடை செய்திருப்பர்.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கலைஞர் அவர்கள் ஈழப்போராட்ட இறுதிக்கட்டத்தில் அவசியமற்ற பண்டைத்தமிழை உதிர்க்காமலும்.....பகட்டுக்கு உண்ணவிரதமிருந்து போர்முடிந்துவிட்டது என அறிக்கை விடாமலிருந்திருந்தால்  இன்று அகில  தமிழரே  உலகம் வியக்கும் வண்ணம் பிரியாவிடை செய்திருப்பர்.
 

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, கிருபன் said:

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

அது இந்திய அரசியலுக்குள் இருந்த வரட்டு கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டது. கருணாநிதியின் பூதவுடல் புதைக்கப்பட்ட இடம் உட்பட.......

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

கிருபன் பல ஆயிரங்களைப் பற்றிக் கதைக்கின்றார்.
நாங்கள் பல கோடிகளைப்பற்றிக் கதைக்கின்றோம்.

21 குண்டுகளின் மரியாதையைவிட
பத்து ஏழை விதவைகளின் கண்ணீரின் மதிப்பு அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

கிருபன் பல ஆயிரங்களைப் பற்றிக் கதைக்கின்றார்.
நாங்கள் பல கோடிகளைப்பற்றிக் கதைக்கின்றோம்.

21 குண்டுகளின் மரியாதையைவிட
பத்து ஏழை விதவைகளின் கண்ணீரின் மதிப்பு அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

மக்கள் தி மு க வின் துரோகத்துக்கு தேர்தல் தோல்விகளால் பரிசளித்துள்ளனர். எவரும் போராட்டத் தோல்விக்கு அவர் காரணம் என்று சொல்லவில்லை. அவர் செய்த கபடத்தனமான துரோகத்தையுயம் அதனால எழும் வெறுப்பையும் காட்டுகிறோம். அவர் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டங்களை அடக்கி தனது குடும்ப வியாபார நலங்களைக் காப்பாறி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை கிருபன்.
இங்கு நான் கூறுவது அதுவல்ல.எத்தனையோ தடவை எங்களுக்காய் பதவியை இழந்த கலைஞர் அவர்கள் இறுதி யுத்த நேரத்தில் எங்களுடன் உண்மையான நேர்மையான வழியில் கை கோர்க்கவில்லை.
எத்தனை அழிவுகளும்  நடந்திருக்கலாம். இழப்புக்களை அவரால் நிறுத்தியிருக்க முடியாது. அவலங்களையும் நிறுத்தியிருக்க முடியாது.
ஆனாலும் கலைஞரும் எங்களுக்காகத் தனது குடும்ப அரசியலைப் புறக்கணித்து பதவி ஆசைகளை புறந்தள்ளி தமிழிற்காக தமிழ் இனத்திற்காக மட்டுமே,,, தமிழிற்காக மட்டுமே ,,,, தான் வாழ்கின்றேன் என்று வாழ்ந்து காட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமில்லை.

ஏனெனில்.. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துக்கு முன்னரே.. ஈழத்தில் ஹிந்தியாவின் அராஜகம் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. அதனை தடுக்க கருணாநிதியோ.. அல்லது அம்மையார் செயலலிதாவோ எந்த திடமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக தமிழீழ ஆதரவை எடுத்திருந்த கருணாநிதி.. எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்.. ஈழத்தமிழினத்தை நட்டாற்றில் விட்டது தான் அதிகம்.

எமது போராட்டம் என்பது.. குறிப்பாக.. ஆயுதப் போராட்டம் என்பது தமிழகத்திடம் இருந்து தார்மீக ஆதவரை எம் ஜி ஆருக்குப் பின் பெறவில்லை என்பது தான் யதார்த்தம். அதற்கு எம் ஜி ஆருக்குப் பின் ஆட்சிப் பீடமேறிய கருணாநிதி.. செயலலிதா போன்றோரின் சுய நல அரசியலும்.. மத்திய ஹிந்திய சர்க்காரை திருப்திப்படுத்தி தமது தேவைகளை தீர்த்துக் கொள்வது என்ற கொள்கையும் தான் முக்கிய காரணம். 

ராஜீவ் கொலை தமிழகத்தில் பெரிய செல்வாக்குச் செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால்.. அதைச் சாட்டு வைத்து.. ஈழ ஆதரவு அரசியலை பலவீனப்படுத்த கருணாநிதியும் செயலலிதாவும் முண்டு கொடுத்தார்கள் என்பதே கள யதார்த்தமாகும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உடன்பிறப்புகள் பத்திரமாக வீடு திரும்பியப் பிறகே உறங்கச் செல்வேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கம்

 
 

கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றத் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்களுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'நம் உயிருடன் கலந்துவிட்ட தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும் நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம். அவர், நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

 

 

karunanidhi_23546.jpg

ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தமத் தலைவராகவும் திகழ்ந்த தலைவர் கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளைப் போற்றிப் பாதுகாத்தவர். 

 

 

அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள்-அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், கருணாநிதியின் உயிர் காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும் பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்து பொதுமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை-ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

homage_3_23271.jpg

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி, தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் தலைவருக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்பு உணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.

 

 

பேரறிஞர் அண்ணாவுக்கு நம் தலைவர் கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். தலைவர் கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய கழக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வில் அழுத்தம் திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்கச் செய்த கழக சட்டத்திட்ட திருத்த குழுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை - ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து தலைவர் கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்களை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது "கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை" சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. தலைவர் கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளைச் செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  மிகச் சோதனையான காலகட்டத்தில் தலைவர் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கும், இந்தியத் திருநாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாகனங்களில் வந்ததால் ஓய்வு இல்லாமல் தவிக்கும் உடன்பிறப்புகள் இன்று இரவு சென்னையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு நாளை காலை புறப்பட்டுச் செல்லலாம். தூக்கத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதைக் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். தலைவர் கருணாநிதியைப் பார்த்துவிட்டுச் செல்லும் ஒவ்வொரு உடன்பிறப்பும் பத்திரமாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி கடைசி உடன்பிறப்பிடமிருந்தும் கிடைத்த பிறகுதான் `உங்களில் ஒருவனான' நான் உறங்கச் செல்வேன் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்புகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவர் கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

https://www.vikatan.com/news/tamilnadu/133422-mkstalin-letter-to-his-party-cadres.html

நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழ் தலைவர் அவர், இது போல் ஒரு தமிழ் தலைவரின் இறுதி ஊர்வலத்தை நான் இனி  பார்க்க போறது இல்லை 

பெருவாழ்வு வாழ்ந்த பெருமகன் தொண்டர்களும் அவர் மக்களும் சிறப்பாக விடை கொடுத்தார்கள் 

அவர் தனது இரத்த உறவுகளின் (மகன் மகள்,பேரன் பூட்டன் மரணத்தை அவர் கண்ணால் பார்க்கவில்லை என்பது சிறப்பு ?

ஒருவித உணர்ச்சிகொந்தளிப்புடன் உறுதி ஊர்வலத்தை  தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தேன், நீதிமன்ற தீர்ப்பு வந்து ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி கை குவித்து விட்டு துரைமுருகன் தோளில் சாயும் போது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த்து,மற்றது விஜயகாந் எமோஷனல் இரங்கல், இறுதியில் கனிமொழி கன்னத்தை கைகளால்  தொட்டு முத்தமிட்டு இறுதி விடை கொடுத்தது என்பன உணர்வு பூர்வமாக இருந்த்து,

இறுதியாக தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இரங்கல் தெரிவித்து இருப்பார் ..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். 

இச்செய்தி தவறானது . முதன் முறையாக அவர் 1977ல் பதவி இழக்கப்பட்டார். அக்காலங்களில் ஈழப்போராட்டம் எழுச்சி பெறவில்லை.

http://www.keetru.com/literature/essays/packiyarasan.php

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீள கோட்பட்டுக்கு 100% மான தமிழர்களே ஆத‌ரவில்லாத‌தபோது பிறகேன் இன்னோர் நாட்டின் அரசில்வாதியை குற்றம் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய தலிவர் என்ற வரிசையில் இடம்பிடித்துவிட்டார்....
அதை நிருபிப்பதில் இந்திய மத்திய அரசு முன்னுக்கு நின்று உழைத்துள்ளது...

இந்திய தேசியக்கொடிபோர்க்கப்பட்டு
இந்திய இராணுவ ம‌ரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்..

உதய சூரியன் கொடி,திராவிட கொடி எதுவும் அவர் மேல் போர்க்கப்பட‌வில்லை....வாழும் பொழுது கிந்தி எதிர்ப்பு,தேசிய எதிர்ப்பு, ....

  • தொடங்கியவர்

தமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்!


 

 

m-karunanidhi-a-lifelong-warrior-for-sri-lankan-tamil-cause-but-misunderstood-in-the-end

 

கட்டுரையாளர்: கே-வெங்கடரமணன்

ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அந்தத் தலைவரின் சமீபத்திய நடவடிகைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது பொதுவெளியில் உருவான கருத்துகளால் மறைக்கப்படுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

 

அதுதான் கருணாநிதிக்கு நடந்திருக்கிறது. 50 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த கருணாநிதியின் குரலின் மீது 2009-ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிநாட்களில் அவர் செயலற்று இருந்ததாக உருவான பார்வையால் களங்கப்பட்டது.

கருணாநிதியின் ஆதரவாளார்களுக்கு அவர் இன்றளவும் தமிழ் இனத்தலைவர் தான். அவரது அரசியல் ஆரம்ப காலகட்டத்தில் அவர் இந்த அடையாளத்தை பெருமிதத்துடன் சுமந்திருந்தார். ஆனால், அவரது இறுதிகாலகட்டத்தில் பலரும் கருணாநிதியை தமிழ் இனத்தலைவராகப் பார்க்கவில்லை. 
கருணாநிதி மீதான வெறுப்பு 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் மறைவுக்குப் பின்னர்தான் உருவெடுத்தது என்று கூறலாம்.

ஆனால், இந்த வெறுப்பு கருணாநிதி மீது திணிக்கப்பட்ட அநீதி. காரணம், கருணாநிதி இலங்கை தமிழ்த் தலைவர்கள் பலருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர்களது மரியாதையும் பெற்றிருந்தார். பாக் ஜலசந்தியில் தமிழர்கள் அடைந்த துயரத்தில் பங்கேற்பவராக அவர்களது அரசியல் பிரச்சினையை நன்கு அறிந்திவராக இருந்தார்.
தனித் தமிழ் ஈழம் என்ற அவரது கோரிக்கையுடன் நிறைய பேர் உடன்படாவிட்டாலும்கூட தான் தமிழர்களுக்கான நியாயமான தீர்வுக்காக துணை நிற்பதாக அப்போது கருணாநிதி தெளிவுபடுத்தினார்.

1956-ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். இலங்கை அரசின் 'சிங்களம் மட்டுமே' (Sinhala Only) என்ற கொள்கையைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் அது.
இலங்கை தமிழரின் அரசியல் தலைவராக தந்தையாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சா.ஜே.வே.செல்வநாயகத்தை (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) கருணாநிதி நன்கு அறிந்திருந்தார். தமிழர் விடுதலை கூட்டணியின் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துக்கு நெருங்கிய நண்பராக கருணாநிதி இருந்தார். 
1977-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பேரணிகளை ஒருங்கிணைத்தவர் கருணாநிதி. 1983-ல் நடந்த வன்முறைகளையும் அவர் கண்டித்தார். இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக 1983-ல் நடந்த கலவரத்துக்குப் பிறகு கருணாநிதியும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். 

1983-க்குப் பின்னர் தமிழ் போராளிகள் இயக்கம் சென்னையிலேயே தலைமையிடம் கொண்டு இயங்கத் தொடங்கின. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவை எல்டிடிஇ பெற்றிருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) திமுகவின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதன் நீட்சியாகத் தமிழ் ஈழ ஆதரவு இயக்கத்தை (TESO) கருணாநிதி உருவாக்கினார். 
1986-ல் மே மாதத்தில் மதுரையில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டை கருணாநிதி ஒருங்கிணைத்தார். இலங்கையில் தமிழர்கள் தங்களின் சுய அதிகாரத்தை கோருவதற்கு டெசோ மாநாடு பரந்துபட்ட அரசியல் தளமாக இருந்தது.
மதுரை கூட்டத்தில், வாஜ்பாய், எச்.என்.பகுகுணா, சுப்பிரமணியன் சுவாமி, என்.டி.ராமா ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தகாலகட்டத்தில்தான் இலங்கையில் இயங்கிய பல தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு இடையே நிலவிய சகோதர யுத்தத்தை கருணாநிதி தெரிந்து கொண்டார். 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் டெலோ போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வேளையில் எல்டிடிஇ அமைப்புக்கு கருணாநிதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்னத்தை விடுவிக்குமாறு கோரியிருந்தார். ஆனால், இதற்கெல்லாம் புலிகள் செவிசாய்க்கவே இல்லை. அடுத்தடுத்து டெலோ தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 
இதை கருணாநிதி என்றுமே மறக்கவில்லை. அதன்பின்னர் நிறையமுறை தனது உரையின்போது தமிழ் ஈழம் அமையாததற்கு தமிழ் இயக்கங்கள் மத்தியில் நடந்த சகோதர யுத்தமே காரணம் எனக் கூறிவந்தார்.

ஐபிகேஎப்-க்கு எதிர்ப்பு
இந்தியா - இலங்கை 1987 ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு இந்தியா அமைதிக் குழுவை அனுப்பும் முடிவை கருணாநிதி வெகுக் கடுமையாக விமர்சித்தார். இலங்கையில் ஐபிகேப் மேற்கொண்ட அத்துமீறல்களை சுட்டிக்காட்டியதாலேயே அவர் தேச விரோதியாக அடையாளம் காட்டப்பட்டார்.

1989-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது அவர் பங்கு வகித்த தேசிய முன்னணி கூட்டணி, எல்டிடிஇ தலைமையுடன் தொடர்பு கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கருணாநிதியைக் கோரியது. அந்த நேரத்தில் இலங்கையில் இருந்து ஐபிகேஎப்-பும் திரும்பப் பெறப்பட்டிருந்தது. கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகள் தமிழகத்தில் சுதந்திரமாக உலவினர் என்ற குற்றச்சாட்டை கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார். அதேவேளையில், தமிழகத்தில் தங்களுக்கு சாதகமாக நிலவிய சூழலை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். 
இந்நிலையில்தான், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதாக கருணாநிதியின் ஆட்சி 1991 ஜனவரி 30-ல் கலைக்கப்பட்டது. 4 மாதங்களுக்குப் பின்னர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் எல்டிடிஇ ஆதரவாளர்களுக்கு அவர்சற்றும் இரங்கவில்லை. 
ஆனால், தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை மட்டுமே அவர் அடிக்கடி நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். 

2000-ல் மத்தியில் வாஜ்பாய் அரசுடன் கூட்டனியில் இருந்தபோது இலங்கையில் சிங்களர்கள் - தமிழர்கள் இடையேயான பிரச்சினைக்கு செக்கஸ்லோவாகியா மாதிரியில் தீர்வு காணலாம் என யோசனை கூறியிருந்தார்.
2006-ல் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு மீண்டும் இலங்கையில் வெறுப்புணர்வு மேலோங்கியது. 2008-09 காலகட்டத்தில் இலங்கையில் போர் தீவிரமடைந்தது. அப்போது, இலங்கை தமிழர்களை அழிவிழிருந்து மீட்க கருணாநிதி போதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறாரா என்ற விமர்சனங்கள் மேலோங்கியபோது. இந்த விமர்சனங்கள் அவரை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆட்சியில் இருந்தது அவருக்கு அரசியல் நெருக்கடியைத் தந்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்ததால், இலங்கை போரில் அப்பாவி தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு ஆவண செய்து வருகிறது என்ற காங்கிரஸ் கூறிய வாக்கினை நம்பியாக வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்தார்.

போர் சூழல் முற்றியிருந்ததால் இலங்கையில் போரை திரும்பப் பெறச் செய்வது என்பதை கருணாநிதி நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால் ஒரு நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆனால், மதியப் பொழுதிலேயே, மத்திய அரசு தங்களுக்கு இலங்கையிடம் இருந்து உறுதிமொழி வந்திருப்பதாகத் தெரிவிக்க உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். 
பெரிய அளவிலான தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக இலங்கை உறுதி அளித்ததாக மத்திய அரசு கூறியதால்தான் கருணாநிதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

1533706664.jpg

ஆனால், போர் அதன் பின்னரும் நீடித்தது. மே மாத மத்தியில் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அப்போது கருணாநிதி மீது விமர்சனங்கள் குவிந்தன.

போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அறிவித்ததை நம்பிதான் உண்ணாவிரதத்தை முடித்ததை தன் மீது பழியாக சுமத்த முடியாது என்று கருணாநிதி மீண்டும் மீண்டும் விளக்கினார்.

அன்றிலிருந்து இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தத் தொடங்கினார். 2012-ல் டெசோ மறு ஆய்வுக் கூட்டம் நடந்தது. கொசோவா, மான்டெனக்ரோ, கிழக்கு தைமோர், தெற்கு சூடான் உதாரணங்களை சுட்டிக்காட்டி தமிழர்களுக்கு தனி நாடு தர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்மொழிந்தார்.

கருணாநிதி தனது கடைசி காலகட்டத்தில் தன் மீது சுமத்தப்பட்ட இருமைக் கொள்கை மீதான விமர்சனங்களை எதிர்கொண்டே வாழ வேண்டியிருந்தது. கருணாநிதி எதிர்ப்பாளர்கள் அவரை எல்டிடிஇ ஆதரவாளர் என்றனர். தமிழ்த் தேசியவாதிகளோ அவரது வார்த்தையிலோ செயலிலோ ஏதோ ஒரு தடுமாற்றம் ஏற்படாதா அதை வைத்து கருணாநிதி இன விரோதி என வியாபாரம் செய்யலாமா எனக் காத்திருந்தனர்.

ஆழமான பங்களிப்பு:
ஆனால், கருணாநிதியின் உண்மையான ஆதரவாளர்கள் இன்றளவும் தமிழர் நலனுக்காக அவர் ஆழமாக பங்களித்திருப்பதாக நம்புகின்றனர். அவர் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாளராக இருந்திருக்கலாம் ஆனால் அதை பயன்படுத்தி தமிழகத்தில் எல்டிடிஇ ஆதரவு இயக்கங்கள் பிரிவினைவாதத்தை விதைக்காமல் காப்பதில் கவனமாக இருந்தார்.

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழ் அகதிகள் மீது கருணாநிதி தனிப்பட்ட கரிசனம் கொண்டிருந்தார். அவர்களுக்காக நலத்திட்டங்களை அறிவித்தார். 2006-ல், இலங்கை அகதிகள் முகாம்களில் நிலைமையை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவர்கள் வசிப்பிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கினார்.

https://www.kamadenu.in/news/politics/4614-m-karunanidhi-a-lifelong-warrior-for-sri-lankan-tamil-cause-but-misunderstood-in-the-end.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

வாங்கோ வாங்கோ !
எப்போதும் கூடத்துக்குள் நிக்கிறதிலே 
சில நண்மைகள் உண்டு. 

தனித்து நின்று கல்லெறி வாங்கிய 
இளமைக்காலம் கடந்து போகிறது.

இப்ப நான் எங்க போனாலும் அட‌க்கித்தான் வாசிக்கிறது....உடம்பும் தாங்காது,மனசும் தாங்காது
tw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்

AA8_D7_E69-353_C-4_D17-_A9_E6-76_B441_F8

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

இப்ப நான் எங்க போனாலும் அட‌க்கித்தான் வாசிக்கிறது....உடம்பும் தாங்காது,மனசும் தாங்காது
tw_tounge:

எனக்கு உடம்புதான் அப்பிடி இப்பிடி.....
ஆனால்  மனசு பதினாறிலைதான் நிப்பன் எண்டு அடம்புடிக்குது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இந்திய தேசிய தலிவர் என்ற வரிசையில் இடம்பிடித்துவிட்டார்....
அதை நிருபிப்பதில் இந்திய மத்திய அரசு முன்னுக்கு நின்று உழைத்துள்ளது...

இந்திய தேசியக்கொடிபோர்க்கப்பட்டு
இந்திய இராணுவ ம‌ரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்..

உதய சூரியன் கொடி,திராவிட கொடி எதுவும் அவர் மேல் போர்க்கப்பட‌வில்லை....வாழும் பொழுது கிந்தி எதிர்ப்பு,தேசிய எதிர்ப்பு, ....

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

அவர் வாழும் பொழுது அப்படி வாழவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

ஆனால் உண்மை ....அவ்வாறில்லை!

இந்திய நடுவண் அரசு....தமிழ் நாட்டை என்றுமே....மாற்றாந்தாய்....மனப்பான்மையுடனேயே நடத்துகின்றது!

 

வட இந்தியர்களின் பார்வையில்......மெட்ராஸ் காரன்....இந்தியனே அல்ல!

சுரண்டப் படுவதற்காகவே...கடவுள்களால் படைக்கப்பட்டவன்!

 

அதே போலத் தான்......சிங்கள மக்களின் பார்வையிலும் தமிழனின் நிலை!

 

நீ வேண்டாம்.....ஆனால் உனது பணமும் உழைப்பும் வேண்டும்!

அண்மைய இராணுவத் தளபதியின்.....அழைப்பைப் பாருங்கள்! 

ஆசையிலா...அவர் உங்களை அழைக்கிறார்?

 

இதைப் போய்...இலங்கை முஸ்லிம்களிடம் சொல்லிப்பாருங்கள்!

முதலில்....சிறிலங்கன்......பிறகு தான் முஸ்லிம் என்று!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

நீங்கள் என்னவென்றாலும் சொல்லலாம்.. ஆனால் நாங்கள் யாரும் அப்படி நினைப்பதில்லை..!

முதலில் தமிழன்,

விதி வசத்தால் பின் 'பொந்தியன்' priso.gif

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பெருந்தன்மையாக 
குட்ட குட்ட குனிந்துகொண்டு இருந்தால் 
பின்பு குட்டியவர் ஏதும் தருவார் என்று எதிர்பார்க்கிறார்கள் 

கடந்த வரலாறும் தொடரும் வரலாறும் 
அவர் குட்டி முடிய ... குட்டுவதற்கு வேறு ஆட்களை 
கூட்டிவந்த கதைதான் தமிழனோடு உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.