Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழர் கடையில் களவெடுத்த வேலையாள்: ஆனால் இப்படி மிரட்டலாமா ?

Featured Replies

https://athirvu.in/3111/

ஈழத் தமிழர் ஒருவரது கடையில் வேலை பார்த்த தமிழர் ஒருவர். கடையில் கல்லாப் பெட்டியில் அடிக்கடி கை வைத்து மாட்டிக்கொண்டார். CCTV ல் பார்த்தவேளை அவர் பல தடவை காசை களவாடியது தெரியவந்துள்ளது. அவரை வேலையால் நிறுத்தி இருக்கலாம். இல்லையென்றால் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் இங்கே தான் சர்சை வெடித்துள்ளது. களவாடிய நபரை தண்டைக்கு உற்படுத்த இவர்கள் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலையத்தளங்களில் பரவி சர்சையை தோற்றுவித்துள்ளது.

https://youtu.be/HP79DyAJiGc

tamil-gun-_com-shop-tamilgun-_com.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாட்டின் சட்டத்தை தெரியாமல், தாமே ஜட்ஜ், ஜூரி என்றபடி ஊர்ப்பாணியில் நடந்திருக்கிறது. 

இந்த வீடியோ வை களவெடுத்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர், தகுந்த சொலிசிட்டர் ஐ நாடினால் சிலவேளைகளில் கடையை இழுத்து மூட வேண்டிய அளவிற்கும் வரலாம்.  

குற்றம் சுமத்தப்பட்டவர் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிநாட கவுன்சில் பக்கம் போனால் உரிமையாளர்கள் தான் மாட்டு படனும் இங்கிலாந்து அடிப்படை சம்பளம் அவர்கள் வாயால் போட்டுடைத்துள்ளார்கள்  . இங்கு அடிப்படை சம்பளம் 7.86 வேலையாட்கள் இல்லாமல் எச்ஸ்பிரஸ் tesco,கோப் போன்றவை மூடப்படும் நேரம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இங்கு அடிப்படை சம்பளம் 7.86 வேலையாட்கள் இல்லாமல் எச்ஸ்பிரஸ் tesco,கோப் போன்றவை மூடப்படும் நேரம் 

கடை உரிமையாளர், வேலையாள் போக்குவரத்திற்கும் பணம் கொடுத்த்ததாக சொல்கிறார். சிலவேளைகளில், கண்ணக்கு சரியாக இருக்கும்.

7 minutes ago, பெருமாள் said:

இந்த ஒளிநாட கவுன்சில் பக்கம் போனால் உரிமையாளர்கள் தான் மாட்டு படனும் இங்கிலாந்து அடிப்படை சம்பளம் அவர்கள் வாயால் போட்டுடைத்துள்ளார்கள்  . இங்கு அடிப்படை சம்பளம் 7.86 வேலையாட்கள் இல்லாமல் எச்ஸ்பிரஸ் tesco,கோப் போன்றவை மூடப்படும் நேரம் 

அதை வீடெளியாவாக எடுத்து யூடூபில், தாம் ஏதோ நல்லது செய்கிறோம் என்று நினைத்து தமக்கு தாமே ஆதாரத்தையும் தாமாகவே வழங்கியுளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது பேச்சும், செயலும், மிக மனவேதனையை தருகிறது. ஒருவரை கல்லா பெட்டிக்கு பொறுப்பாக விட முதல், கடையில் வேலைக்கு விட்டு தானே அவரின் நம்பகத்தன்மையினை பார்ப்பார்கள்.

சட்டப்படி சம்பளம் கொடுத்தால், ஏனப்பா கையை வைக்கப் போகிறார்.

கடையில், வேறு பொருட்களை எடுத்ததாக நிரூபிக்காவிடில், கல்லாபெட்டியில் வேலை செய்ய அனுமதி இருந்தால், தனது சட்டப்படியான சம்பளத்தினை மட்டுமே எடுத்தேன் என்று போலீசில் சொன்னால் இவர்கள் பயமுறுத்தியதாக பிரச்சனைக்கு உள்ளாவர். 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. சமூக வலைத்தளங்களின் சிக்கல்கள் புரியாமல் தமக்கு தாமே ஆப்பு வைத்திருக்கின்றனர் இந்த தொழில் அதிபர்கள்(?). 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்த youtube வீடியோ வை http://www.acas.org.uk/index.aspx?articleid=4489 அனுப்ப வேண்டும்.

தமிழ் கடைகள் நேஷனல் minimum wage சம்பளமாக லொடுக்க வேண்டும்.

வேலியே பயிரை மேயும் நிலை தமிழ் கடைகளில் ஆகக்குறைந்தது தமிழர் என்று சொல்லி வேலைக்கு அமர்த்தி வேலை செய்வோருக்கு இருக்க கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களவு ஒருபுறமிருக்க் அவர்கள் வெருட்டும் மற்றும் பேசும் விதம் கவலையை தருகின்றது.

சட்டத்தின்  முன்   நிறுத்தியிருக்கலாம்.யாருக்கும் வேதனை தராது.

அவர்கள் யாவரும் அந்த பெரியவரை ஐயா என சொல்லி அவரை திட்டும் போதும் அடிப்பேன் என்று வெருட்டும் போதுதான்......

அந்த பெரியவர் மீது அனுதாபம் எற்படுகின்றது.

இந்த பகிரங்க ஒளிப்பதிவை அவரது மனைவி மக்கள் உறவினர்கள் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வீடியோவைக் காணவில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ரதி said:

எங்கே வீடியோவைக் காணவில்லை 

அய்யோ தங்கச்சி படுத்துற பாடு கொஞ்ச நஞ்சமில்லை.....:grin:

இந்த அட்ரசை கூகிளிலை தேடிப்பாருங்கோ. இல்லாட்டி யூரியூப்பிலை தேடுங்கோ..

https://youtu.be/HP79DyAJiGc

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அய்யோ தங்கச்சி படுத்துற பாடு கொஞ்ச நஞ்சமில்லை.....:grin:

இந்த அட்ரசை கூகிளிலை தேடிப்பாருங்கோ. இல்லாட்டி யூரியூப்பிலை தேடுங்கோ..

https://youtu.be/HP79DyAJiGc

இணைப்பிற்கு நன்றி அண்ணா...பாவம் அவருக்கு என்ன கஸ்டமோ...கடையில் வேலை செய்ப்பவர்கள் எல்லாம் களவெடுத்துட்டுப் போனால் கடைக்காரரும் பாவம் ...

இந்த வீடியோவை வெளியாலை விட்டது  பெரிய பிழை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி அண்ணா...பாவம் அவருக்கு என்ன கஸ்டமோ...கடையில் வேலை செய்ப்பவர்கள் எல்லாம் களவெடுத்துட்டுப் போனால் கடைக்காரரும் பாவம் ...

களவெடுக்கிறார் எண்டு அவைக்கு முதலே தெரியுமாமெல்லோ......அப்பவே வந்து கதைச்சிருக்கோணும்....நிப்பாட்டி இருக்கோணுமெல்லோ.....அதை விட்டுட்டு வந்து நீ இந்தியன்...நான் முந்தியும் ஒராளை அடிச்சு அனுப்பின்னான் .... சம்பந்தமில்லாமல் மனுசி பிள்ளையளை இழுத்து கதைக்க யார் இவையளுக்கு உரிமை குடுத்தது?

3 hours ago, குமாரசாமி said:

சட்டத்தின்  முன்   நிறுத்தியிருக்கலாம்.யாருக்கும் வேதனை தராது.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

களவெடுக்கிறார் எண்டு அவைக்கு முதலே தெரியுமாமெல்லோ......அப்பவே வந்து கதைச்சிருக்கோணும்....நிப்பாட்டி இருக்கோணுமெல்லோ.....அதை விட்டுட்டு வந்து நீ இந்தியன்...நான் முந்தியும் ஒராளை அடிச்சு அனுப்பின்னான் .... சம்பந்தமில்லாமல் மனுசி பிள்ளையளை இழுத்து கதைக்க யார் இவையளுக்கு உரிமை குடுத்தது?

கடைக்காரர் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை அண்ணா...களவு பிடிக்கும் போது இரண்டு,மூன்று நாள் விட்டுப் பார்த்து தான் பிடிப்பினம்...குடும்பத்தை இழுத்து ஒருவர் தான் கதைத்தார் என்று நினைக்கிறேன்...அது மிகப் பெரிய பிழை...அதை விடப் பிழை இந்த காணொளியை வெளியாலை விட்டது.

அவருக்கு விசா இல்லா விட்டால் போலீசில் பிடித்து கொடுத்தால் நாட்டை விட்டு அனுப்பி விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

களவு ஒருபுறமிருக்க் அவர்கள் வெருட்டும் மற்றும் பேசும் விதம் கவலையை தருகின்றது.

சட்டத்தின்  முன்   நிறுத்தியிருக்கலாம்.யாருக்கும் வேதனை தராது.

அவர்கள் யாவரும் அந்த பெரியவரை ஐயா என சொல்லி அவரை திட்டும் போதும் அடிப்பேன் என்று வெருட்டும் போதுதான்......

அந்த பெரியவர் மீது அனுதாபம் எற்படுகின்றது.

இந்த பகிரங்க ஒளிப்பதிவை அவரது மனைவி மக்கள் உறவினர்கள் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்?

வேதனைதான்....என்ன கஸ்டமோ...இது எங்கடை புலம் பெயர்சை நக்கலடிக்கும் கூட்டத்துக்கு அவல் ...ஊரில் இருந்து கோவிலுக்கு கோபுரம் கட்ட...மைதானம் வாங்க காசூகேட்பவைக்கும்..அதை னேரடியாக ..ஒளிபரப்பி காசு பண்ணுறவைக்கும் இது சமர்ப்பணம்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ இணைப்பை நிறுத்தி விடுங்கள்...
பாவம் அவரின் சூழ்நிலை  என்னவோ யாருக்கு தெரியும்...
கடைக்காரரும் பாவம், கொஞ்ச மனிதாபிமானத்தோடு தான் அவரும் கதைக்கிறார்...
பக்கத்தில் இருப்பவர்கள் தான் மரியாதை இல்லாமல் கதைக்கிறார்கள்... 

லண்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் விசா இல்லாத தமிழர்களைத் தமிழர்கள் அடிமைகள் போல் நடத்துகின்றனர்.

பெரியவரைப் பேச விடவில்லை.

வீடியொவை ஏன் பொதுவெளியில் வெளியிட வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

லண்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் விசா இல்லாத தமிழர்களைத் தமிழர்கள் அடிமைகள் போல் நடத்துகின்றனர்.

பெரியவரைப் பேச விடவில்லை.

வீடியொவை ஏன் பொதுவெளியில் வெளியிட வேண்டும் ?

அந்த பெரியவரை இவர்கள் பேசவே விடவில்லை என்பது இன்னும் கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:
2 hours ago, ரதி said:

எங்கே வீடியோவைக் காணவில்லை 

1 hour ago, ரதி said:

அதை விடப் பிழை இந்த காணொளியை வெளியாலை விட்டது.

45 minutes ago, இணையவன் said:

வீடியொவை ஏன் பொதுவெளியில் வெளியிட வேண்டும் ?

இந்த பகிரங்க ஒளிப்பதிவை அவரது மனைவி மக்கள் உறவினர்கள் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்?

இந்த காணொளியில் யாரும் அவருக்குத் தண்டனை கொடுத்த மாதிரித் தெரியவில்லை.
அநாகரிகமான விதத்தில் அவரை மிரட்டுகின்றார்கள்
பேசக்கூடாத வார்த்தைகளை பேசுகின்றனர்.

ஆனாலும் அவரை மிரட்டி அவர் திருடிய   பணத்தின் அளவை அவரின் வாயினாலேயே வரவைக்க முயல்கின்றனர்.
அது தான் நடக்கின்றது.இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது

அவர் திருடியது என்பதை அவரே ஏற்றுக்கொள்கின்றார் என்பது அவரது பார்வையிலேயே தெரிகின்றது.

ஜனநாயகம் மிக்க இந்த யாழ் களத்திலேயே இந்த வீடியோவை வைத்த்து அலசி ஆராயும் பொழுது யு டியூபில் வெளிவந்தது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

தண்டனை வழங்கும் விதமாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்கள்.  இதற்கு சட்டத்தில் நிச்சயமாக இடமில்லை. பாதிக்கப்பட்டவர் சட்டப்படி முறைப்பாடு செய்தால் கடைக்கும் மூடுவிழா நடத்தி நஷ்ட ஈடும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவரது புகைப்படத்தையோ காணொளியையோ அவரது அனுமதி இன்றி பதிவுசெய்து வெளியிடமுடியாது. குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமும் காவல்துறையும் இருக்கின்றது. இவர்கள் அவர்களது வேலையை எப்படி கையில் எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை. சட்டத்திற்கு புறம்பாக குறைவான ஊதியம் கொடுத்து கடைநடத்துபவர்கள் முதற்குற்றவாளிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

இப்படியான  கடையின்  கல்லா பெட்டியில்...  ஒருவரை உட்கார வைக்கும் போது,
பெரும்பாலானோர் தங்களின் நெருங்கிய   இரத்த உறவுகளான  மனைவி, மாமா போன்றவர்களைத்தான் அமர்த்துவார்கள். 

அப்படி இல்லாத பட்சத்தில். பொருட்களை "ஸ்கேன்" பண்ணி, பணத்தை அறவிடும் முறை கடையில்.. இருந்திருக்க வேண்டும். பணத்துடன் புழங்கும் விடயங்களில்.. சம்பந்தப் பட்ட  நபரின் மனம், அவரின் பொருளாதார கஷ்டங்களால் தடுமாறத்தான் செய்யும். 
"தேன்  கூட்டை  தொட்டவர்கள் , புறங்கையை நக்கத்  தான் செய்வார்கள்"
என்பது... கடை முதலாளிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இவர்கள் தங்களில்... பிழையை வைத்துக் கொண்டு அந்தப்  பெரியவரின் நாட்டை சொல்லி, மிரட்டுவது மன்னிக்க  முடியாது.
தயவு செய்து... அந்தக் காணொளியையும், அவரின் படத்தையும் நீக்கி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கானொளி யோக்கியன் வாறான் செம்பை ஒழிச்சுவை என்பதுபோலாகும்

யாராக இருந்தாலும் ஒரு செயலில் நாணயம் இருத்தல்வேண்டும், வேலையாளுக்குச் சிலவேளை அது இல்லாதிருக்கலாம் ஆனால் கடை உரிமையாளருக்கு ஒரு பொதுவான அறம் எனப்படுவது எது எனத் தெரியவில்லை. 

ஐரோப்பிய நடைமுறை மற்றும் பண்பாடு , சட்டம் இவைகளை நாம் கவனத்திலெடுத்தால் குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் பொதுவெளியில் இனம்காட்டப்படுவதில்லை. 

தவிர ஒரு குடும்பத்தின் உறுப்பினர் தவறுசெய்தால் "எங்கள் நடைமுறைப்படி" அவரைத் தெருவில்வைத்து அடிக்கலாம் அத்தகைய நடைமுறை அது தவறாக இருந்தாலும்கூட  ஆனால் எம்மீது சிலவேளைகளில் மதிப்பு ஆச்சரியம் சந்தேகம் வெறுப்பும் பயம் இவைகளைக் கலந்துகட்டிய ஒரு அபிப்பிராயமுள்ள இதுவரை புலம்பெயர் தேசங்களில் எம்முடன் பொதுவான சமூகநடைமுறைகளிலோ அன்றேல் வேறெந்தக்காரணிகளிலோ இணையத்தயங்கும், தவிர்க்கும் ஒரு இனக்குழுமமான தமிழ்நாட்டுத்தமிழர் ஒருவரை இப்படி வரவேற்பது எனக்கு ஏற்புடையதல்ல, இக்காணொளியை இன்னுமொரு தமிழ்நாட்டைச்சேர்ந்த எமது உறவுகள் பார்த்தால் எம்மீதான மேற்கூறிய விடையங்களில் பாரதூரமானவை அதிகரிக்கவே செய்யும். 

தவிர, யூ ரியூப் வலைத்தளத்தில் காசு பண்ணுவதற்காக ஒரு கோஸ்டி இப்படி அதிரி புதிரியான காணொளிகளை இணைக்கின்றன இக்காணொளியும் அவற்றில் ஒன்றோ என என்னால் சந்தேகம் கொள்ளவைக்கின்றது.

யாழ் இணையம் இப்படியானவைகளை எப்போதும் வரவேற்காது என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Elugnajiru said:

யாழ் இணையம் இப்படியானவைகளை எப்போதும் வரவேற்காது என நம்புகிறேன்.

திருட்டு கூடாதது தான், ஆயினும் இவர்களின் வார்த்தைப் பிரயோகம், தனிப்பட்ட முறையில் இல்லாமல் அவர் சார்ந்த ஊரை, நாட்டை இழுப்பதே தேவையற்றது. அதன் காரணமாக அனுதாபத்தை இழக்கின்றனர். இங்கே கூட யாருமே அவர்களுக்கு ஆதரவு தரவில்லை.

13 hours ago, வாத்தியார் said:

ஜனநாயகம் மிக்க இந்த யாழ் களத்திலேயே இந்த வீடியோவை வைத்த்து அலசி ஆராயும் பொழுது யு டியூபில் வெளிவந்தது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

4 hours ago, Elugnajiru said:

யாழ் இணையம் இப்படியானவைகளை எப்போதும் வரவேற்காது என நம்புகிறேன்.

இப்படி நம்பித்தான் பல பேர் காணாமல் போனார்கள் 

வாழ்க ஜனநாயகம் 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு என்று  கூறி விட்டு சம்பந்தரும் சுமந்திரனும் ஓரம் கட்டியவர்களின் எண்ணிக்கை என்ன?
கஜேந்திரன்
கஜேந்திரன் பொன்னம்பலம்

பத்மினி
அனந்தி
சுரேஸ் பிறேமச்சந்திரன்
சிவசக்தி ஆனந்தன்(?)                        இன்னும் பலர்

இதுவும் ஒரு வகை ஜனநாயகம் தானே???

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தான் வீடியோவை வெளியால விட்டமாதிரி கொஞ்சப் பேர் கதைக்கினம்...அந்த நபரின் அக்கறை இருப்பவர்கள் யூ டியூப்பில் போய் வீடியோவை ரிப்போட் பண்ணி  புளக் பண்ணலாமே !

கடைக்காரரோ அல்லது அவரது நின்று கதைப்பவர்களோ இந்த வீடியோவை வெளியால விட்டு இருக்க சான்ஸ் இல்லை..இது யாரோ மூன்றாம் நபரின் வேலையாகத் தான் இருக்கும்.

அந்த கடைக்காரர் வலு டீசன்டாய்த் தான் கதைக்கிறார்...கடை பூட்டி இருந்த நேரம் கூட அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கார்...அதை செய்,இதைச செய் என்று அந்த நபரிடம் வேலை வாங்கி இருக்கவில்லை .காசு தேவை என்டால் கேட்டால் தந்து இருப்பேன் என்றும் சொல்கிறார்..கூட இருந்த ஒரே ஒரு ஆள் தான் மரியாதை இல்லாமல் கதைத்து இருக்கிறார்.

இன்னும் சிலர் சொல்லினம் அவருக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்று 😞..எத்தனை தரம் அவர்கள் மரியாதையாய் கேட்டும் அவர் பதில் சொல்லாத படியால் தான் அந்த ஒரு ஆள் கோபத்தில் கத்தினவர்..ஆனால் அவர் கதைத்தது படு பிழை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கூட்டமைப்பு என்று  கூறி விட்டு சம்பந்தரும் சுமந்திரனும் ஓரம் கட்டியவர்களின் எண்ணிக்கை என்ன?
கஜேந்திரன்
கஜேந்திரன் பொன்னம்பலம்

பத்மினி
அனந்தி
சுரேஸ் பிறேமச்சந்திரன்
சிவசக்தி ஆனந்தன்(?)                        இன்னும் பலர்

இதுவும் ஒரு வகை ஜனநாயகம் தானே???

சரி, இங்க இதை உதாரணமாகக் காட்டியதால் மட்டும் கேட்கிறேன்! இந்தப் பட்டியலில் இருப்போர் ஏன் த.தே.கூவை நாட வேண்டும்? இவர்கள் வெளியே போய் நேரடியாக மக்களிடம் ஆணை கேட்ட சந்தர்ப்ப்பங்களில் மக்களின் பதில் என்னவாக இருந்தது? அதுவல்லவா உண்மையான ஜனநாயகம்? சம்மும் சும்முமா "ஜனங்கள்"? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

15 minutes ago, ரதி said:

யாழ் தான் வீடியோவை வெளியால விட்டமாதிரி கொஞ்சப் பேர் கதைக்கினம்...அந்த நபரின் அக்கறை இருப்பவர்கள் யூ டியூப்பில் போய் வீடியோவை ரிப்போட் பண்ணி  புளக் பண்ணலாமே !

கடைக்காரரோ அல்லது அவரது நின்று கதைப்பவர்களோ இந்த வீடியோவை வெளியால விட்டு இருக்க சான்ஸ் இல்லை..இது யாரோ மூன்றாம் நபரின் வேலையாகத் தான் இருக்கும்.

அந்த கடைக்காரர் வலு டீசன்டாய்த் தான் கதைக்கிறார்...கடை பூட்டி இருந்த நேரம் கூட அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கார்...அதை செய்,இதைச செய் என்று அந்த நபரிடம் வேலை வாங்கி இருக்கவில்லை .காசு தேவை என்டால் கேட்டால் தந்து இருப்பேன் என்றும் சொல்கிறார்..கூட இருந்த ஒரே ஒரு ஆள் தான் மரியாதை இல்லாமல் கதைத்து இருக்கிறார்.

இன்னும் சிலர் சொல்லினம் அவருக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்று 😞..எத்தனை தரம் அவர்கள் மரியாதையாய் கேட்டும் அவர் பதில் சொல்லாத படியால் தான் அந்த ஒரு ஆள் கோபத்தில் கத்தினவர்..ஆனால் அவர் கதைத்தது படு பிழை 

இனி யார் எப்படிக் கதைத்தார் என்பது முக்கியமில்லை! மூன்றாம் ஆள் எடுத்துப் போட்டிருந்தால் இவர்கள் எல்லாரதும் தனியுரிமையை மீறியிருக்கிறார் என்று தண்டனை கொடுக்கலாம். இவர்களே போட்டிருந்தால் இவர்கள் தண்டனையும் பெற்று தங்கள் வியாபாரத்தையும் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டியிருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.