Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி தமிழ் மக்கள் மீதான.. மற்றும் அப்பாவி மக்கள் மீதான இந்த மிலேச்சத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

  • Replies 76
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்? பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

இலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது.

இதுவரை ஆறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் கடும் அல்லோலகல்லோலத்தில் காணப்படுகிறது.

இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என இன்னமும் தெரியவராத நிலையில் வெளி நாட்டுத் தீவிரவாதப் பின்புலத்தில் இது நடத்தப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேக எழுந்துள்ளது.

கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினம் இன்றைய நாளில் கடைப்பிடிகபடும் நிலையில் இந்த சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் இதனை நன்றாக திட்டமிட்டே மேற்கொண்டதாக பலதரப்பட்ட தரப்பினரும் தமது சந்தேகங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாபு பலப்படுத்தப்பட்டுலதால் பாதிப்புக்கள் ஏதும் நேரும் என்ற நிலையில் குறித்த இடங்களுக்கு மக்களைச் செல்லவேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/118153?ref=home-imp-flag

இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் !

இலங்கையின் பல இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு ; 98 பேர் பலி , பலர் காயம் ; பலியானோரின் எண்ணிக்கை உயருமென அச்சம் !

இலங்கையின் பல பாகங்களில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார்  பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

FB_IMG_1555822825032.jpg

இதுவரை இலங்கையின் 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், 2. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

03.jpg

இதேவேளை, நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார்  ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 160 க்கும் மேற்பட்டடோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

02.jpg

இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

http://www.virakesari.lk/article/54318

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரஞ்சித் said:

இரு தேவாலயங்களுல் நடத்தப்பட்டவை தற்கொலைத் தாக்குதல் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 

சில் தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்லீம் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் பற்றி அதிகாரப் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாம். 

 

14 minutes ago, ரஞ்சித் said:

தாக்குதலை நடத்தியது ஐஸிஸ் அமைப்பென்று சிங்களவரின் இணையங்களில் எழுதுகிறார்கள்.

முஸ்லிம்கள் கிறீஸ்தவ தேவாலயங்களை தாக்குவதில்லை. இயேசு  கிறீஸ்து அவர்களுக்கு ஈசா நபி ஆவர். கிறீஸ்தவ தேவாலயங்களை மதிக்க வேண்டும் என்று  முஹம்மது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டுள்ளார்.

முஸ்லிம், கிறீஸ்தவ, யூத மதங்கள் ஒரே ஆரம்பத்தை கொண்டவை. முஸ்லிம் பெண்கள் கிறீஸ்தவர்களை திருமணம் செய்வதை கூட இஸ்லாம் அனுமதிக்கிறது. 

Edited by Jude

17 minutes ago, ரஞ்சித் said:

தாக்குதலை நடத்தியது ஐஸிஸ் அமைப்பென்று சிங்களவரின் இணையங்களில் எழுதுகிறார்கள்.

இந்த வெடிப்புகள் இலங்கையில் திட்டமிடட படுகொலைகளை மற்றவர்கள் பெயரில் அரங்கேற்றும் நிபுணத்துவம் வாய்ந்த கொலைகாரக் ராஜபக்ச கும்பலின் வேலையாக இருக்கும் என்ற சந்தேகம் பரவலாக தமிழரிடம் உள்ளது.

பெருமளவு தமிழர் கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

திசை திருப்பும் முயற்சியாக சில நட்சத்திர விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன.

கொலைகாரன் கோத்தபாயவின் அரசியல் கனவை நிறைவேற்ற இந்த குண்டுவெடிப்புகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பலத்த சந்தேகம் ஏற்படுகிறது!  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Jude said:

 

முஸ்லிம்கள் கிறீஸ்தவ தேவாலயங்களை தாக்குவதில்லை. இயேசு  கிறீஸ்து அவர்களுக்கு ஈசா நபி ஆவர். கிறீஸ்தவ தேவாலயங்களை மதிக்க வேண்டும் என்று  முஹம்மது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டுள்ளார்.

முஸ்லிம், கிறீஸ்தவ, யூத மதங்கள் ஒரே ஆரம்பத்தை கொண்டவை. முஸ்லிம் பெண்கள் கிறீஸ்தவர்களை திருமணம் செய்வதை கூட இஸ்லாம் அனுமதிக்கிறது. 

ஜுட் அப்படியென்றால், ஒவ்வொரு முறையும் எகிப்து, பாக்கிஸ்தான் போன்ற இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் எத்தனை தேவாலயங்கள் குண்டு வைத்து தகர்கப்ப்டுகின்றது. இன்று நடந்தது போல் எகிப்தில் பலமுறை நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

 

முஸ்லிம்கள் கிறீஸ்தவ தேவாலயங்களை தாக்குவதில்லை. இயேசு  கிறீஸ்து அவர்களுக்கு ஈசா நபி ஆவர். கிறீஸ்தவ தேவாலயங்களை மதிக்க வேண்டும் என்று  முஹம்மது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டுள்ளார்.

முஸ்லிம், கிறீஸ்தவ, யூத மதங்கள் ஒரே ஆரம்பத்தை கொண்டவை. முஸ்லிம் பெண்கள் கிறீஸ்தவர்களை திருமணம் செய்வதை கூட இஸ்லாம் அனுமதிக்கிறது. 

ஜூட், இன்னுமா அப்படி நினைக்கிறீர்கள்? சிலுவைப்போர் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா நீங்கள்? 

சிரியாவிலும், ஈராக்கிலும், எகிப்திலும், பாக்கிஸ்த்தானிலும், இந்தோனேசியாவிலும் கிறீஸ்த்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்தது யார்?

உங்கள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன், தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள்.

புனித நாளென்றும் பாராமல் நிகழ்த்தப்பட்ட கொடுமையான செயல். அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும். 

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka explosions: 50 killed as churches and hotels targeted

p0771ycm.jpg
Deadly explosions strike across Sri Lanka

At least 50 people are reported to have been killed and more than 200 injured in explosions at churches and hotels in Sri Lanka.

At least six explosions have been reported. Three churches in Kochchikade, Negombo and Batticaloa were targeted during Easter services.

The Shangri La, Cinnamon Grand and Kingsbury hotels, all in Colombo, were also hit.

Easter Sunday is one of the major feasts in the Christian calendar.

Images on social media showed the inside of one of the churches - St Sebastian's in Negombo - with a shattered ceiling and blood on the pews.

Sri Lankan media report that foreign tourists may be among the casualties.

Some media outlets have also put the death toll higher and a hospital source in Batticaloa told the BBC the death toll there alone could be 27.

And Reuters quoted a police source as saying more than 50 died in Negombo alone.

A hotel official at the Cinnamon Grand, near the prime minister's official residence, told Agence France-Presse the explosion there had ripped through a restaurant, killing at least one person.

President Maithripala Sirisena has issued a statement calling for people to remain calm and support the authorities in their investigations.

No-one has yet said they were responsible for the attacks.

There have been fears that returning fighters from the Islamic State group could pose a threat in the country.

There has been some sporadic violence in Sri Lanka, with members of the majority Buddhist Sinhala community attacking mosques and Muslim-owned properties. It led to a state of emergency being declared in March 2018.

Map

 

https://www.bbc.co.uk/news/world-asia-48001720

  • கருத்துக்கள உறவுகள்

புனித நாளில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்! கோத்தாவோ ராஜபக்சவோ உடுக்கடிச்சு இந்த லூசு  கூட்டம் திடிரென வந்து குண்டு வைத்து இருக்கமாட்டினம் கண்ணுக்கு தெரியாமால் இன்னும் எத்தனை குண்டுகளுடன் வரபோகினமோ தெரியாது. 

 
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

ஜூட், இன்னுமா அப்படி நினைக்கிறீர்கள்? சிலுவைப்போர் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா நீங்கள்? 

சிரியாவிலும், ஈராக்கிலும், எகிப்திலும், பாக்கிஸ்த்தானிலும், இந்தோனேசியாவிலும் கிறீஸ்த்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்தது யார்?

உங்கள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன், தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள்.

ரஞ்சித்,

இங்கே கிறீஸ்த்தவர்களுக்கெதிரான தாக்குதல்களை  கிறீஸ்த்தவ தேவாலயங்களுக்கு எதிரான தாக்குதலிகளில் இருந்து நான் வேறு படுத்தி பார்க்கிறேன். முஸ்லிம்கள் தாரளாமாக கிறீஸ்த்தவர்களுக்கெதிரான தாக்குதல்களை  நடத்தி இருக்கிறார்கள். இவ்வாறான தாக்குதல்கள் பெருமளவு நடந்தும் இவை கிறீஸ்த்தவ தேவாலயங்களில் இடம் பெற்ற செய்திகளை நான் அறியவில்லை.  முஹம்மது நபி அவ்வாறான கிறீஸ்த்தவ தேவாலயங்களுக்கெதிரான தாக்குதல்களைஅவரது காலத்திலேயே தடை செய்ததாக  படிக்க கிடைத்தது.  

கிறீஸ்த்தவர்களுக்கெதிரான தாக்குதல்களையும் சிலுவைப்போரையும் நான் அறிவேன். இன்று வரை அது தொடர்கிறது. யூத, இஸ்லாமிய, கிறீஸ்த்தவ சமயங்கள் ஒரே அடியில் தோன்றிய வரலாற்றிலேயே இவற்றிற்கு இடையே ஆன பகைமையும் அமைந்து இருக்கிறது. இந்த பகைமை காரணமான போர்களின் பின்னணியிலேயே கிறீஸ்த்தவ தேவாலயங்களுக்கெதிரான தாக்குதல்களை தடை செய்தததும் அமைந்து இருக்கறது,

31 minutes ago, colomban said:

ஜுட் அப்படியென்றால், ஒவ்வொரு முறையும் எகிப்து, பாக்கிஸ்தான் போன்ற இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் எத்தனை தேவாலயங்கள் குண்டு வைத்து தகர்கப்ப்டுகின்றது. இன்று நடந்தது போல் எகிப்தில் பலமுறை நடந்துள்ளது.

இவ்வாறான தேவாலயங்களை குண்டு வைத்து தகர்த்த தகவல்களின் இணைப்பு ஏதாவது தந்தால் மேலும் அறிந்து எனது சிந்தனையில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும், நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
12 minutes ago, Jude said:

,

இவ்வாறான தேவாலயங்களை குண்டு வைத்து தகர்த்த தகவல்களின் இணைப்பு ஏதாவது தந்தால் மேலும் அறிந்து எனது சிந்தனையில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும், நன்றி.

https://www.bbc.com/news/world-middle-east-46075969

இணைபொன்று தந்துள்ளேன் ஜுட். என்னுடன் வேலை செய்யும் பலர் இந்த எகிப்து கொப்டிக் கிறிஸ்தவர்கள். இவர்களது நேரடி அனுபவங்களயும் நான் கேட்டுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

Warning about the bomb blast, why not take action? asking Public

குண்டு வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது… நடவடிக்கை எடுக்காதது ஏன்?... அதிர்ச்சி தகவல்

இலங்கையில் குண்டு வெடிப்பு குறித்து போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பை அதிகரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் 100 பேர் பலியாகி உள்ளனர். 280 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே நேரம், 10 நாட்களுக்கு முன்பு, இலங்கையில் பெரும் தாக்குதல் நடத்த சில அமைப்பினர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ராணுவ பாதுகாப்பு, சோதனைகள் சொல்லும் அளவுக்கு இல்லாமல் போனது தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதிற்கு காரணம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தினத்தை குறி வைத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சதிதிட்டம் பல நாட்களாக தீட்டப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்பை தொடர்ந்து, ராணுவத்தினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள், உதவி தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Read more at: https://tamil.oneindia.com/news/colombo/warning-about-the-bomb-blast-why-not-take-action-asking-public-347576.html

https://www.news18.com/news/world/sri-lanka-terror-attack-live-six-blasts-at-churches-hotels-rock-easter-sunday-24-killed-2110779.html?ref=hp_top_pos_1

தற்கொலைதாரியின் பெயர் எல்லாம் வருகிறது உண்மையா தெரியல 

 

 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

https://www.bbc.com/news/world-middle-east-46075969

இணைபொன்று தந்துள்ளேன் ஜுட். என்னுடன் வேலை செய்யும் பலர் இந்த எகிப்து கொப்டிக் கிறிஸ்தவர்கள். இவர்களது நேரடி அனுபவங்களயும் நான் கேட்டுள்ளேன். 

நன்றி கொழும்பான். இந்த இணைப்பு கூட கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலே அன்றி கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதான தாக்குதல் பற்றியதல்ல.

இங்கே கிறீஸ்த்தவர்களுக்கெதிரான தாக்குதல்களை  கிறீஸ்த்தவ தேவாலயங்களுக்கு எதிரான தாக்குதலிகளில் இருந்து நான் வேறு படுத்தி பார்க்கிறேன். முஸ்லிம்கள் தாரளாமாக கிறீஸ்த்தவர்களுக்கெதிரான தாக்குதல்களை  நடத்தி இருக்கிறார்கள். இவ்வாறான தாக்குதல்கள் பெருமளவு நடந்தும் இவை கிறீஸ்த்தவ தேவாலயங்களில் இடம் பெற்ற செய்திகளை நான் அறியவில்லை.  முஹம்மது நபி அவ்வாறான கிறீஸ்த்தவ தேவாலயங்களுக்கெதிரான தாக்குதல்களைஅவரது காலத்திலேயே தடை செய்ததாக  படிக்க கிடைத்தது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புனிதத்திருநாளில் இறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்.
யாரோ ஒரு குழுவின் அரசியல் லாபத்திற்க்காக நடத்தப்பட்ட தாக்குதல் போல் தெரிகின்றது.

குறுந்தகவலொன்றில் வந்த வேண்டுகோள்:

"இலங்கை நாட்டின் பல்வேறு பாகங்களில் நிகழ்ந்திருக்கும் அனர்த்த சம்பவங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். அரசாங்க வைத்தியசாலைகளில் குருதித் தட்டுப்பாடு, குறிப்பாகக் குருதிச் சிறு தட்டுக்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. 

குருதிக் கொடையாளிகள் தமக்கருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்குச் சென்று ( சிலாபம், நீர்கொழும்பு, மற்றும் மட்டக்களப்பு) இரத்ததானம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்"

"As you know there have been a few tragic incidents reported in Sri Lanka, it would be a great service if you could visit your local hospital blood banks and donate blood since there is a shortage especially for platelets. (Specially to the govt hospitals- Chilaw, Negombo and Batticaloa)."

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........!

இங்கு இனம் மதம் என்பதையும் தாண்டி அப்பாவி மனிதர்கள்.நடுத்தரவர்கத்தினர்,எத்தனை எத்தனை குடும்பங்கள், பிள்ளைகள் அனாதையாக்க பட்டனரோ தெரியாது. இவர்களை குறி வைத்து அழிப்பது மிக மிக கேவலமான செயல்.தேசம் முழுதும் வெடிகுண்டுகளையும்  துப்பாக்கிகளையும் நிரப்பி வைத்துக்கொண்டு எங்கே நிம்மதியையும், அமைதியையும் தேடுவது.......!     

  • கருத்துக்கள உறவுகள்

கனத்துப்போன இதயத்துடன் ஆழ்ந்த இரங்கல்களும்..,அஞ்சலிகளும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது விடுதலைப்புலிகள் காலத்து செய்தியாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் பல மாற்றுக்கருத்து மாணிக்கங்களிடம் காணக்கூடியதாக இருக்கின்றது.எதற்கெடுத்தாலும் விடுதலைப்புலிகளையே திட்டி பழக்கப்பட்ட வாய்களும் சுயநல ஊடகங்களும் அண்ணார்ந்து காறித்துப்பிய கதையாகவே இருக்கின்றது.இன்றைய சம்பவத்திற்கு அவர்கள் இல்லாதது பெரும் வெற்றிடமாகவே பார்க்கின்றார்கள்.எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது பழி போட்டவர்கள் இன்று  என்ன சொல்லப்போகின்றார்கள்?

அன்று தொடக்கம் இலங்கையை   கலவர பூமியாகவே வைத்திருக்க விரும்பியவர்கள் இன்றும் அதை தொடர்கின்றார்கள். கொஞ்ச காலம் இனக்கலவரங்கள்.பின்னர் விடுதலைப்போர்.இன்று இந்த புதிய வடிவில் பல கொடூரங்கள்.இது இன்னும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

ஆழ்ந்த இரங்கல்கள்.........!

இங்கு இனம் மதம் என்பதையும் தாண்டி ...........தேசம் முழுதும் வெடிகுண்டுகளையும்  துப்பாக்கிகளையும் நிரப்பி வைத்துக்கொண்டு எங்கே நிம்மதியையும், அமைதியையும் தேடுவது.......!     

அவற்றுடன் இன,மத விரோத கருத்துக்களை வெளியிடும் அரசியல்வாதிளையும்,மதத்தலைவர்ளையும் நிரப்பி வைத்துக்கொண்டு எங்கே நிம்மதியையும், அமைதியையும் தேடுவது.......!     

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு - குறைந்தது 185 பேர் உயிரிழப்பு, 471 பேர் காயம் - LIVE

இலங்கையில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 185 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

1:30 PM - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

1:05PM - இந்திய பிரதமர் மோதி கண்டனம்

இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi
 

Strongly condemn the horrific blasts in Sri Lanka. There is no place for such barbarism in our region. India stands in solidarity with the people of Sri Lanka. My thoughts are with the bereaved families and prayers with the injured.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi

12:59 PM -முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் சந்திப்பு

தாக்குதலுக்கு யார் பொறுப்பாக இருக்கலாம் என்பது குறித்த தகவல்களை மக்கள் பரப்ப வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை முப்படைகளின் தளபதிகளை, அந்நாட்டு பிரதமர் சந்தித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @HarshadeSilvaMP
View image on TwitterView image on Twitter
 

PM @RW_UNP met w ministers n senior military personnel; all measures taken to maintain peace. Security tightened. Please stay calm. Please act responsibly. Please NO politics. We must all act together as #SriLanka citizens. My condolences to all families who lost loved ones.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @HarshadeSilvaMP

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 2 இவரது @HarshadeSilvaMP

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @HarshadeSilvaMP

இலங்கை

12:50 PM- ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து

தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளதை தொடர்ந்து மாலை நடைபெறவிருந்த பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பாதிரியார் அறிக்கை விடுத்துள்ளார்.

12:46 PM- கொழும்பு தேசிய மருத்துவமனை நிலவரம்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள்.

இலங்கை

12:36 PM - நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்'

கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடந்த இடத்தில் பிபிசியின் சிங்கள சேவையின் செய்தியாளர் அசாம் அமீன் உள்ளார்.

அவர் கூறுகையில், "அமைதியாக இருந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலையில், அனைவரும் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகளில் இருந்தனர். திடீரென்று இந்த தாக்குதல் நடந்தது.

தேவாலயத்தில் உள்ள சில பாதிரியார்களிடம் நான் பேசிய போது, அவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார்கள். புலனாய்வு போலீஸாரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு தன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகும்.

பாதிரிபடத்தின் காப்புரிமைREUTERS

தேவாலயத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பேசியபோது, அவரும் அதிர்ச்சியில் இருந்தார். இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை தற்போது கூற முடியாது.

2009ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வாறான ஒரு சம்பவத்தை இலங்கை பார்த்ததில்லை. இலங்கை மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது "

இலங்கை

இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பொது மருத்துவமனை, கொழும்பு கலுபோவில மருத்துவமனை, மட்டக்களப்பு மருத்துவமனை மற்றும் நீர் கொழும்பு ஆதார மருத்துவமனை ஆகிய இடங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொழும்புவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்புவில் கட்டுபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்தபோது சீயோன் தேவாலயத்தில் 33 பேர் உயிரிழந்தனர். பின்னர் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இறந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததால், அருகில் இருந்த பிற மோட்டார் சைக்கிள்களில் இருந்த பெட்ரோல் மூலம் பாதிப்பு அதிகமானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்துள்ள பலரும் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொழும்பு

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள்.

குண்டுவெடிப்பு குறித்த விசாரணைக்கு அனைத்து பாதுகாப்புப் பிரிவு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பாக பகிரப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்பு குறித்த அவசரக் கூட்டம் கூட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று இலங்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

இலங்கையில் கொழும்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய ஊர்களில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 105 பேர் உயிரிழந்துள்ளது தற்போது வரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Posted by BBC News தமிழ் on Saturday, 20 April 2019

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

ருத்தவமனைக்குபடத்தின் காப்புரிமைTWITTER / AZZAM AMEEN மக்கள்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மக்கள்

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பாதையில் சோதனைகளும் இடம்பெறும். அத்துடன் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48001635

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் / கண்ணீரஞலிகள். 

அன்றன்று உழைத்து சாப்பிடும் வறுமையான மக்கள் இவர்கள். சிறு குழந்தைகள் / குடும்பங்கள் என்று, இன்று எத்தனை குதுகலமாக தேவாலயத்திற்கு சென்ரிருப்பார்கள்

இப்படியெல்லம் குரூரமாக சக மனிதனை கொல்ல மனம் வருமா?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.