Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்

தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சென்னையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை தமிழர்களில் பிரச்சினைகள் தொடர்பாக விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிக்கு விளக்கியுள்ளர்.

இதேவேளை வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரனால் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3)
 
http://www.samakalam.com/செய்திகள்/ரஜினியை-சந்தித்த-விக்னேஸ/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, கிருபன் said:

தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஆக ரஜனிகாந்துக்கும் அரசியல் செய்ய ஈழத்தமிழர் தேவைப்படுகின்றனர்.
விக்கியருக்கு தேவையில்லாத வேலை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

"மூஞ்சுறு தான் போக வழியைக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேர்த்து காவிச்ச்சுதாம்"....ரஜனியை பார்க்க விருப்பம் என்றால் போய் பார்த்திட்டு வாறது தானே 🤨
 
  • கருத்துக்கள உறவுகள்

1. ஈழத்தமிழர் விவகாரத்தில் விமர்சனப் பார்வை உடையவர் ரஜனி

2. பாஜகவில் கணிசமான ஆளுமை உள்ளவர் ரஜனி

3. தமிழ்நாட்டு மக்களை சொல்ல முடியாது - ரஜனியை அடுத்த முதல்வர் ஆக்கி அழகு பார்த்தாலும் பார்பார்கள்.

4. கூப்பிட்டால் முகத்தை முறிக்காமல் போய் சந்தித்து, அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்த முடியாவிட்டாலும், முனைவதில் தப்பில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வாஸ்தவமான பேச்சுத்தான்,
ஆனால் எல்லா விதத்திலும் முயற்சிப்பதில் தவறில்லையே.

அவர்களை வழிக்கு கொண்டுவர, இந்திய அழுத்தமும் கட்டாயம் தேவை.

இந்திய அளுத்தத்தை கொண்டுவர ரஜனி பயன்படக்கூடும். 

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆன்மீக அரசியல் கொஞ்சமேனும் வேறூன்ற இலங்கை விடயத்தில் அக்கறை வேண்டும் என்ற நிலையை பிஜேபிக்கு ஏற்படுத்த ரஜனி உதவக்கூடும்.

இது ஒரு வகை உணவுச் சங்கிலி.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி 

அப்படியெனில் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பிலும் ஒருக்கால் மகிந்த தரப்பைச் நீங்கள் சந்திக்கலாம்தானே, தமிழ்மக்கள் நலனுக்காக நீங்களொருசில விட்டுக்கொடுப்பை நீங்கள் முதலில் செய்யலாம்தானே.   

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நன்பர்களை உருவாக்க மாட்டோம் என்டு ஆடும் பிடிக்கிற குட்டைகள் ஆச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இந்த திரி பற்றி எரியும் என்டு நினைக்குறன் ..👍

78340375_2786210318111352_89337608845519

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

இதுதான் நிகழ்கால & எதிர்கால யதார்த்தம்.

ஆனால் சிங்களவர்கள் மனங்களை மாத்த முயலவேண்டும் என்று சொன்னீர்கள் பாருங்கள், அவர்கள் மனம் மாறுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இலங்கை எனும் குட்டி தீவில் அவர்களுக்கெதிராக ஒருகாலம்..

குட்டி தொகை கொண்ட தமிழர் இனம் சம பலம் கொண்ட ராணுவத்தை வைத்திருந்தபோதே  ஆயுதத்தை முதலில் கீழே வைய்யுங்கள் தீர்வு தருகிறோம் என்று சொன்னவர்கள் அவர்கள்...

இப்போ எந்த பலமும் எம்மிடம் இல்லாதபோது மனம் மாறுவார்கள் அல்லது அவர்கள் மனங்களை மாற்ற முடியும்  என்பது தங்களின் அதீத கற்பனை.

அதெல்லாம், உங்கள் பேரன் பேர்த்திகள், அவர்களுடைய பேரன் பேர்த்திகள் காலத்திலும் சாத்தியமில்லை.

சுவரில்லா சித்திரங்கள் படத்தில் கல்லாபெட்டி சிங்காரம் ஒரு வசனம் பேசுவார்..

‘கண்ணடிச்சா வராத பொம்பள கையை பிடிச்சு இழுத்தா வரவா போறா’?

ஈழ தமிழரின் நிலை என்பது இனிமே சுவரில்லாத சித்திரங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...

நாம்பன் மாட்டில் பால் கறந்து பொங்கல் கொண்டாடப் போகிறோம். நம்பிக்கை தருகிறார் நங்கை. 😋

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

ரதியின் இந்தப்பதிலை ஏற்றுக்கொள்ள யாரும் தயார் இல்லை ஆனால் இதுதான் உன்மை தமிழர்கள் நண்டுகள் இழுத்துகொண்டே இருப்பார்கள் மேல் ஏறும் நண்டை சிங்களவர்கள் சட்டிகள் அந்த சட்டிக்குள் நாம்  சட்டியை விட்டு வெளியில் இறங்கும் முடியாது ஓடவும்முடியாது .

ரதி தமிழர்கள் பிரச்சினையை சிங்களவர்களுக்கு எடுத்துரைக்க இதுவரைக்கும் ஆள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

BFC613-D2-3893-4127-8-EE7-618-ED9-C1-A9-

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியும் விக்கியும் ஆன்மிகவாதிகள் காரியவாதிகள். அவர்களின் ஆன்மிக சந்திப்பு,கலந்துரையாடலை இலங்கை தமிழர்களில் பிரச்சினைகளோடு கற்பனை செய்து எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனம் மனம் மாறவேண்டும் என்பதை எப்படி நாங்கள் எதிர்பார்க்கிறோமோ அதேபோல் தமிழினமும் மனம் மாறவேண்டும். தமிழ் தலைமைகளின் மனங்கள் மாறவேண்டும்.

இனப்பிரச்சினையை முன்வைத்து உழைப்பு தேடும் இன்றைய தலைமைகளுக்கு பதிலாக அதை சேவை எனக்கருதி உழைக்கும் உத்தமர்கள் தோன்றவேண்டும். சுக்கு நூறாக சிதறியிருக்கும் எமது அரசியல் பலம் மீண்டும் ஒன்றாக வேண்டும்.

முதற்கட்டமாக குறைபாட்டை எமது தரப்பில் இருந்து சரி செய்துகொள்ள முயற்சிப்பதே சிறந்தது. நல்ல அரசியல் அடித்தளத்தை கட்டியிருக்கிறோமா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு ஒருமித்த நோக்குடன் பயணித்தால் மட்டுமே தீர்வு சாத்தியப்படும்.

10 hours ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் நன்பர்களை உருவாக்க மாட்டோம் என்டு ஆடும் பிடிக்கிற குட்டைகள் ஆச்சே.

இதற்கும் புதிய கட்சி ஆரம்பித்ததிலிருந்து அரைவேக்காட்டு அரசியல் செய்யும் மோட்டு அரசியவாதி விக்னேஸ்வரனுக்கும் எட்டா பொருத்தம்.  
உதாரணம் கீழே:

மேலுள்ள கூற்றில் இஸ்ரேலை வரிந்துகட்டியதன்  மூலம் விக்னேஸ்வரன் நண்பர்களை உருவாக்கிறாரா அல்லது பகைவர்களை உருவாக்கிறாரா?

எனவே விக்னேஸ்வரனின் அண்மைக் கால செயற்பாடுகளை பார்க்கும் போது, அவர் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதியாக, மோட்டு அரசியல்வாதியாக, பித்தலாட்ட அறிக்கைகளை விடும் நயவஞ்சக அரசியல்வாதியாக பரிணமித்து வருவது தெளிவு.

இல்லை என்றால், இவற்றை  விக்னேஸ்வரன் தெளிவாகத்தான் செய்கிறார் என்றால், விக்னேஸ்வரன் ஒரு கைக்கூலி அரசியல்வாதியாக, எலும்புத்துண்டுக்கு பின்னால் அலையும் கேவலமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெளிவு.

எனவே, விக்னேஸ்வரன் மாற்றுத் தலைலைமை வழங்குவார் என நம்புபவர்கள், அவர் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் அல்லது டக்ளஸ் கும்பலின் அல்லது கஜேந்திரகுமார் கும்பலின் அல்லது ஆனந்தசங்கரி வகை அரைவேக்காட்டு/கைக்கூலி அரசியல்வாதிகளை சிறந்தவர் என கூறும் நிலை தற்போது இல்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்தும் தான் மாற்றுத் தலைமையை வழங்க முடியுமென்று விக்னேஸ்வரன் நம்புவாரானால், அவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நம்புவார்களானால், முதலில் விக்னேஸ்வரன் தனது தான்தோன்றித் தனமான / அரைவேக்காட்டு / கைக்கூலி அரசியல் முயற்சிகளை நிறுத்தி ஒரு சிறந்த குழுவின் வழிநடத்தலுடன் பொறுப்புடன் நடக்க தன்னை மாற்றிக்கொள்வதுடன், அந்த உறுதிமொழியை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது..

விக்கி ஐயாவின் வங்குரோத்து அரசியலை இது காட்டுகிறது. இலங்கை தமிழர்பற்றி அக்கறையே இல்லாத அல்லது ஒரு ஐந்து சதமெனும் செலவு செய்யாத  ஒரு நடிகன்தான் இந்த மராட்டியன். அது சரி இவனிடம் என்ன இருக்குதென்று இவர் போய் ரஜனி வீடு தேடி சென்று  சந்திக்கிறார். அவன் இன்னும் ஒரு கட்சியே ஆரம்பிக்கவில்லை. எல்லாம் மாட்டு தலைமைக்கு வந்த ஆசைதான்.   

1 hour ago, போல் said:

இதற்கும் புதிய கட்சி ஆரம்பித்ததிலிருந்து அரைவேக்காட்டு அரசியல் செய்யும் மோட்டு அரசியவாதி விக்னேஸ்வரனுக்கும் எட்டா பொருத்தம்.  
உதாரணம் கீழே:

மேலுள்ள கூற்றில் இஸ்ரேலை வரிந்துகட்டியதன்  மூலம் விக்னேஸ்வரன் நண்பர்களை உருவாக்கிறாரா அல்லது பகைவர்களை உருவாக்கிறாரா?

எனவே விக்னேஸ்வரனின் அண்மைக் கால செயற்பாடுகளை பார்க்கும் போது, அவர் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதியாக, மோட்டு அரசியல்வாதியாக, பித்தலாட்ட அறிக்கைகளை விடும் நயவஞ்சக அரசியல்வாதியாக பரிணமித்து வருவது தெளிவு.

இல்லை என்றால், இவற்றை  விக்னேஸ்வரன் தெளிவாகத்தான் செய்கிறார் என்றால், விக்னேஸ்வரன் ஒரு கைக்கூலி அரசியல்வாதியாக, எலும்புத்துண்டுக்கு பின்னால் அலையும் கேவலமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெளிவு.

எனவே, விக்னேஸ்வரன் மாற்றுத் தலைலைமை வழங்குவார் என நம்புபவர்கள், அவர் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் அல்லது டக்ளஸ் கும்பலின் அல்லது கஜேந்திரகுமார் கும்பலின் அல்லது ஆனந்தசங்கரி வகை அரைவேக்காட்டு/கைக்கூலி அரசியல்வாதிகளை சிறந்தவர் என கூறும் நிலை தற்போது இல்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்தும் தான் மாற்றுத் தலைமையை வழங்க முடியுமென்று விக்னேஸ்வரன் நம்புவாரானால், அவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நம்புவார்களானால், முதலில் விக்னேஸ்வரன் தனது தான்தோன்றித் தனமான / அரைவேக்காட்டு / கைக்கூலி அரசியல் முயற்சிகளை நிறுத்தி ஒரு சிறந்த குழுவின் வழிநடத்தலுடன் பொறுப்புடன் நடக்க தன்னை மாற்றிக்கொள்வதுடன், அந்த உறுதிமொழியை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது..

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. சும்மா இருந்த அரசை இவர்தான் இன்னும் தூண்டி விடுகிறார் மேலும் மேலும் குடியேற்றங்களை செய்யும்படி. அவன் பாட்டுக்கு இருந்த இஸ்ரவேலயும் இதுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் இந்த அரசியல் அஞ்சானி. தமிழனின் தலை எழுத்து இப்படியான மாட்டு தலைமைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டி இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகள் மென்மேலும் சிதைக்கப்படுகிறது. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பதுபோல எப்பக்கத்திலும் எதனையும் உறுதியாக முன்னெடுக்கமுடியாத அவலம் எம்மக்களைச்சூழ்ந்திருக்கிறது. மூழ்கிறவன் கிடைக்கும் சின்னத் துரும்பையும் பற்றுவான் என்பதற்கிணங்க விக்னேஸ்வரன் இதனை மேற்கொண்டிருக்கலாம். ஏனெனில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எவராலும் தீர்வெழுத முடியாது என்பதே நிதர்சனம். அவ்வகையில் விக்னேஸ்வரன் பிரபலங்கள் ஊடாக ஏதாவது முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்று அறிய முயற்சித்திருக்கக்கூடும். ரதி சொல்வதுபோல சிங்களம் நினைத்தாலன்றி தமிழருக்கான எதனையும் எவராலும் பெற்றுத்தரமுடியாது. புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு அவன் பிழை இவன் பிழை என்று உரைப்பதைத்தவிர எம்மால் எதனை உறுதியாக உருவாக்க முடிந்தது? நம்பிக்கையீனங்களூடாக பயணிக்கும் நாம் வெற்றியை தொடுவது கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, goshan_che said:

எல்லா விதத்திலும் முயற்சிப்பதில் தவறில்லையே.

19 hours ago, goshan_che said:

இது ஒரு வகை உணவுச் சங்கிலி.

16 hours ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் நன்பர்களை உருவாக்க மாட்டோம் என்டு ஆடும் பிடிக்கிற குட்டைகள் ஆச்சே.

இதே சிந்தனையைத்தான் ஒரு சாரார் சீமான் மீதும் வைத்திருக்கின்றார்கள்.

சீமான் தனிக்கட்சி!!

அகில உலக தலைவர் ரஜனி கட்சி? அந்த ஆண்டவனுக்கே தெரியாதாம்.😎

3 hours ago, வல்வை சகாறா said:

மூழ்கிறவன் கிடைக்கும் சின்னத் துரும்பையும் பற்றுவான் என்பதற்கிணங்க விக்னேஸ்வரன் இதனை மேற்கொண்டிருக்கலாம்.

இதைத்தான் சீமானை ஆதரிக்கின்றவர்களும் சிந்திக்கலாம் இல்லையா? 
 
3 hours ago, குமாரசாமி said:

இதே சிந்தனையைத்தான் ஒரு சாரார் சீமான் மீதும் வைத்திருக்கின்றார்கள்.

சீமான் தனிக்கட்சி!!

அகில உலக தலைவர் ரஜனி கட்சி? அந்த ஆண்டவனுக்கே தெரியாதாம்.😎

இதைத்தான் சீமானை ஆதரிக்கின்றவர்களும் சிந்திக்கலாம் இல்லையா? 
 
இன்று இருக்கும் சாக்கடை அரசியல்வாதிகள் மத்தியில் சீமானை பலமடங்கு சிறந்த அரசியல்வாதியாக கருதலாம்.

இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு

இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
சென்னையில் உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி  நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
 
இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன்  கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினார்.
 
இந்நிலையில், தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஷ்வரன் சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலை குறித்து ரஜினிகாந்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் இலங்கைக்கு விரைவில் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. சும்மா இருந்த அரசை இவர்தான் இன்னும் தூண்டி விடுகிறார் மேலும் மேலும் குடியேற்றங்களை செய்யும்படி. அவன் பாட்டுக்கு இருந்த இஸ்ரவேலயும் இதுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் இந்த அரசியல் அஞ்சானி. தமிழனின் தலை எழுத்து இப்படியான மாட்டு தலைமைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டி இருக்குது.

உண்மை தான் முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று கொள்ளலாம் என்ற முயற்ச்சியாக இருக்குமோ:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அநேகமாக இந்த திரி பற்றி எரியும் என்டு நினைக்குறன் ..👍

:)

ரஜனி தமிழக மக்கள் மக்கள் நலன்கள் சிறக்க பணியாற்றுபவர் விக்கி ஈழத்து தமிழர்கள் நலன்கள் சிறக்க பணியாற்றுபவர். இருவரும் சந்தித்துள்ளார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரதியின் இந்தப்பதிலை ஏற்றுக்கொள்ள யாரும் தயார் இல்லை ஆனால் இதுதான் உன்மை தமிழர்கள் நண்டுகள் இழுத்துகொண்டே இருப்பார்கள் மேல் ஏறும் நண்டை சிங்களவர்கள் சட்டிகள் அந்த சட்டிக்குள் நாம்  சட்டியை விட்டு வெளியில் இறங்கும் முடியாது ஓடவும்முடியாது .

ரதி தமிழர்கள் பிரச்சினையை சிங்களவர்களுக்கு எடுத்துரைக்க இதுவரைக்கும் ஆள் இல்லை 

மிகத்தவறான

வரலாற்றை அறியாத  பதிலும்  எதிர்பார்ப்பும்

சிங்களவரால்   தூக்கிச்செல்லப்பட்ட தமிழர்களாலும்  முடியுல

சம பங்கு நிலையிலிருந்து சம பங்கு கேட்டவர்களாலும்  முடியல

சம பலத்துடன் நின்று தீர்வுகேட்டவர்களுக்கும்  கிடைக்கல

தவறு கேட்பவர்களிடமில்லை

இதை உணராதவரை தீர்வென்ன எதுவுமில்லை

சிங்களவருடன்  ஒட்டினால்  தான் வாழ்வு என்பது தனி  மனிதருக்கு கூட நிலைக்காது

இனத்துக்கு??????

இது எனக்கு 1983 இல் சிங்களவரால் உணர்த்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

மிகத்தவறான

வரலாற்றை அறியாத  பதிலும்  எதிர்பார்ப்பும்

சிங்களவரால்   தூக்கிச்செல்லப்பட்ட தமிழர்களாலும்  முடியுல

சம பங்கு நிலையிலிருந்து சம பங்கு கேட்டவர்களாலும்  முடியல

சம பலத்துடன் நின்று தீர்வுகேட்டவர்களுக்கும்  கிடைக்கல

தவறு கேட்பவர்களிடமில்லை

இதை உணராதவரை தீர்வென்ன எதுவுமில்லை

சிங்களவருடன்  ஒட்டினால்  தான் வாழ்வு என்பது தனி  மனிதருக்கு கூட நிலைக்காது

இனத்துக்கு??????

இது எனக்கு 1983 இல் சிங்களவரால் உணர்த்தப்பட்டது

கிடைக்காத ஒன்றை ஆட்சியாளர்களால் கொடுக்க முடியாத ஒன்றையும் தான் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் காரணம் ஆரம்ப காலத்தில் விட்ட பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.