Jump to content

இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

February 8, 2020

mahinda-meets-modi.jpg

இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ராஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போதே இந்திய பிரதமர் இந்த  விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், “இந்தியா முழு இந்து சமுத்திரம் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளது. வெறுமனே இலங்கையின் நிலைப்பேறு தன்மை மற்றும் பாதுகாப்பு அமைதி ஆகியவற்றை உறுதிபடுத்துவது மாத்திரம் எமது நோக்கம் அல்ல. இதனால் இலங்கையுடனான எமது உறவு முதன்மையானது, கொள்கைகள் மற்றும் சமுத்திரக் கோட்பாடுகளுக்கு இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவோம். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு இந்தியாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கும் விடயங்களை வரவேற்கின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் எமக்கிடையிலான கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொலிஸார் இந்தியாவின் முன்னணி பயிற்சி நிலையங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை முன்னெடுக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களுக்கு தேவையான சமத்துவம், நீதி, அமைதி மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என நம்புகின்றேன். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். தீவிரவாதம் பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆகவே தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, “இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் டொலரை கடனாக வழங்கியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய பயணத்தின் போது இந்தியா வழங்குவதாக உறுதியளித்த கடன் உதவிகள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினோம். இந்தியாவால் வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் இலங்கையில் கிராம புற மக்களின் நலன்களுக்கு பயன்படும்.´

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இன்று முற்பகல் சந்தித்து கலந்துஐரயாடியமை குறிப்பிடதக்கது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

மேலும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைநகர் டெல்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் இன்று மாலை சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்
 
http://globaltamilnews.net/2020/136795/

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

மக்களை ஏமாற்ற கொலைகாரர்கள் வழமையான வெளிவிடும் இன்னொரு அறிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் சீனாவுக்கெல்ல போரெண்டு புறப்பட்டவர், மாறி இந்தியாக்கு போயிட்டார் போல.
கொரொணா வைரசு தாக்கத்தில சிக்கி அவதிப்படும் சீனாக்கு போக மகிந்தரும் இப்ப விரும்பமாட்டார். ஒன்றில்  திரிசா இல்லாட்டி ஒரு நயந்தாரா !

Link to comment
Share on other sites

இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் கருத்துக்கு நன்றி. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் உரிமைகள் தொடர்பான  இந்திய அரசின் கரிசனைகளை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பது கவலைதருகிறது. இலங்கை அரசின் அலட்ச்சியத்துக்கு இந்தியா தொடர்ந்து போதிய அரசியல் அழுத்தங்கள் கொடுக்காதமைதான் காரணம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.  1987 ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைகள் தீரும்வரை காலாவதியாகாது என்கிற சர்வதேச நடைமுறையை நீங்கள் இலங்கைக்கு உணர்த்த தேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, poet said:

1987 ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைகள் தீரும்வரை காலாவதியாகாது என்கிற சர்வதேச நடைமுறையை நீங்கள் இலங்கைக்கு உணர்த்த தேண்டும்.

“I am confident that the government of Sri Lanka will realize the expectations of the Tamil people for equality, justice, peace, and respect within united Sri Lanka. For this, it will be necessary to carry forward the process of re-conciliation with the implementation of the Thirteenth Amendment to the Constitution of Sri Lanka,” said Modi.

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் ஒரு முறை அம் மரத்தில் தொங்கும் 
13 வது வேதாளத்தை இழுத்து வர முயன்றான்.சிரித்தபடி மீண்டும் அங்கு தொங்கிய வேதாளம் சொன்னது மன்னனே சற்றும் மனம் தளராதா உன் முயற்சியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை என்று கூறி சீனா நோக்கி நகர்ந்து சென்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு மச்சான் சீனாப் பக்கம் தலை வைச்சுப் படுக்கமாட்டார் என்கிற தைரியத்தில்    நல்லாய் உறுக்கிப்போட்டார் போல. மாத்தையா முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு நிக்கிறார். 

Link to comment
Share on other sites

நாயும் நரியும் நண்டுகளும்

     நாற்றப் பன்றி கழுதைகளும்

பாயும் புலியும் சிறுத்தைகளும்

     பறக்கும் கழுகு ஆந்தைகளும்

பேயும் பிறவும் அலைமோதும்

    சில அரசியல் தலைகளின் உருவமதில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் கருத்துக்கு நன்றி. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் உரிமைகள் தொடர்பான  இந்திய அரசின் கரிசனைகளை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பது கவலைதருகிறது. இலங்கை அரசின் அலட்ச்சியத்துக்கு இந்தியா தொடர்ந்து போதிய அரசியல் அழுத்தங்கள் கொடுக்காதமைதான் காரணம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.  1987 ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைகள் தீரும்வரை காலாவதியாகாது என்கிற சர்வதேச நடைமுறையை நீங்கள் இலங்கைக்கு உணர்த்த தேண்டும்.

மாண்புமிகு பெரு மதிற்பிற்குரிய கவிஞர் ஐயா அவர்கள்  எமது தமிழின தலைவர்கள் அன்று தொடக்கம்  இன்று வரைக்கும் வெளியிடும் அரசியல் கூட்டறிக்கை மாதிரியே நீங்களும்?????

தமிழ்நாட்டில் பாஜக என்ன செய்கின்றது என தெரிந்தும்!!!!!!! 😂

Link to comment
Share on other sites

"இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் டொலரை கடனாக வழங்கியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய பயணத்தின் போது இந்தியா வழங்குவதாக உறுதியளித்த கடன் உதவிகள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினோம். இந்தியாவால் வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் இலங்கையில் கிராம புற மக்களின் நலன்களுக்கு பயன்படும்.´

கந்து வட்டி இல்லாமல், ஒருவரை ஒருவர் கவரும் நோக்கில் பரிமாறப்படும் பணம்.
சீனாவின் பக்கமும் இந்தியாவின் பக்கமும் தலையையும் வாலையும் காட்டி பணம் பெறும் சிங்களம்.
இலங்கை இராணியை தம் வசம் வைத்திருக்க முனையும் பிராந்திய வல்லரசுகள்.
தமிழர்கள் இவர்கள் பசிக்கு தொடர்ந்தும் பலியாகாமல் இருக்கவேண்டும்.
 
Link to comment
Share on other sites

On 2/9/2020 at 6:57 PM, போல் said:

மக்களை ஏமாற்ற கொலைகாரர்கள் வழமையான வெளிவிடும் இன்னொரு அறிக்கை.

வருடாந்த திருவிழா போல , இவர்களும் வருடா வருடம் அங்கு போவார்கள்। இந்தியனும் வழமையான பல்லவியை பாட வேண்டியதுதான்। இலங்கையை ஆள்பவனுக்கு தெரியும் இந்தியாக்காரன் இதுக்கு மேல ஒண்ணுமே செய்ய மாடான் என்று। நம்முடைய அரசியல்வாதிகள் , இந்திய பிரதமர் சொல்லிவிட்டார் இனி ஈழம்தான் எண்டு அறிக்கைவிட்டுக்கொண்டிருப்பார்கள்।

Link to comment
Share on other sites

பிரதமரின் இந்திய விஜயம் நாட்டிற்கு பெரும்தலைகுனிவு : அஜித் மன்னப்பெரும

(செ.தேன்மொழி)

சர்வதேச கடனை செலுத்துவதற்காக உதவி கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்றும் கூறினார்.

ajith.jpg

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் நலன்கருதி எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருக்கின்றது. இதனால் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும்.

தேர்தல்காலங்களின் போது வெங்காய விலையை காண்பித்து பெரிதும் விமர்சனங்களை முன்வைத்தனர். என்று உலக சந்தையில் எண்ணையின் விலை குறைந்துள்ள போதிலும் அந்த சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர்.

அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தனர்.  தேர்தலுக்கு முன்னர் அவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும் என்கின்றனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது பாராளுமன்றத்தில் குறைவான ஆசனங்களையே பெற்றிருந்த போதும் மக்களுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றியிருந்தோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.   

https://www.virakesari.lk/article/75388

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

வருடாந்த திருவிழா போல , இவர்களும் வருடா வருடம் அங்கு போவார்கள்। இந்தியனும் வழமையான பல்லவியை பாட வேண்டியதுதான்।

leave-of-absence-letter-form-template.pn 

அதென்ன தோழர்.. லீவு லெற்றர் ரெம்ப்லெற் மாதிரி அறிக்கை ரெம்ப்லெற் போல சொல்லுறியள்.. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக்கூடிய கௌரவம்

தனியே வீடு

கிணறு

கக்கூசு

5இப்ப  இருப்பதே அதிகம்  தான்  தமிழருக்கு...

Link to comment
Share on other sites

On 2/10/2020 at 1:01 PM, uthayakumar said:

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் ஒரு முறை அம் மரத்தில் தொங்கும் 
13 வது வேதாளத்தை இழுத்து வர முயன்றான்.சிரித்தபடி மீண்டும் அங்கு தொங்கிய வேதாளம் சொன்னது மன்னனே சற்றும் மனம் தளராதா உன் முயற்சியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை என்று கூறி சீனா நோக்கி நகர்ந்து சென்றது.

நிதர்சனத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
போலிகளுக்கு துதி பாடும் ஒருசிலர் திருந்துற மாதிரி தெரியல்ல.

Link to comment
Share on other sites

13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

leave-of-absence-letter-form-template.pn 

அதென்ன தோழர்.. லீவு லெற்றர் ரெம்ப்லெற் மாதிரி அறிக்கை ரெம்ப்லெற் போல சொல்லுறியள்.. 😢

உண்மை சுடும்। இதுவும் டெம்ப்லேடா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டில்லியின் நிலைப்பாட்டை உதாசீனம் செய்யாதீர்கள்! – ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்துR.sampanthan.jpg?resize=300%2C185“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும். இதையே இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அத்துடன், இந்தியாவின் விருப்பத்தை ராஜபக்ச அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

“இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்கனவே புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமும் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஆனால், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய கூறி வருகின்றார். ஆனால், மீண்டும் இந்தியா தனது நிலைப்பாட்டை கோட்டாபயவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமும் எடுத்துரைத்துள்ளது. எனவே, இந்த நிலைப்பாட்டை ராஜபக்ச அரசு உதாசீனம் செய்ய முடியாது” எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

‘இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடு. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம்’ என்று புதுடில்லி சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

Link to comment
Share on other sites

28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Mr புரட்சி , இதுவும் Template மாதிரி இருக்கே ।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Vankalayan said:

Mr புரட்சி , இதுவும் Template மாதிரி இருக்கே ।

தோழர் .. ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே ரெம்ப்ளெட்.. சம்மந்தன் ஐயாவின்ர அறிக்கை சமஸ்டி, சுய நிர்ணயம்,  உள்ளகம் ,சுயாட்சி  13+ , இப்போ 13 என்டு மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.👍

Link to comment
Share on other sites

17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் .. ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே ரெம்ப்ளெட்.. சம்மந்தன் ஐயாவின்ர அறிக்கை சமஸ்டி, சுய நிர்ணயம்,  உள்ளகம் ,சுயாட்சி  13+ , இப்போ 13 என்டு மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளது.👍

முதலும் இந்த மாதிரி வாசித்த ஞாபகம்। இந்த சுயநிர்ணயம், சுயாட்சி , 13 ப்ளஸ் , மைனஸ் எல்லாம் எத்தனையோ தடவை கேட்டிடோம்। இன்னும் சில நாளைக்குள் 19 மைனஸ் , பிளஸ் எல்லாம் வரும்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.