Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த அம்பிகா..? மறைக்கப்படும் சில உண்மைகள்..

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நீண்ட கால அங்கத்தவர்களையும் விசுவாசிகளையும் எதேச்சையாக புறம் தள்ளிவிட்டு எதிர்வரும் தேர்தலிற்கு வேட்பாளராக முன்மொழியும் அம்பிகா சற்குணநாதன் யார்.. என கட்டுரையாளர் ஜெஸ்லின் கேள்வி எழுப்பியதுடன் அது தொடர்பான பல வாதங்களையும் முன்வைத்துள்ளார்.

குறித்த விபரங்கள் வருமாறு,

இலங்கை மனித உரிமை குழு என்பது மேற்கு நாடுகளிலுள்ள அரசுகளைப் போல சுதந்திரமானதும் முழுமையானதும் அல்ல. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் ஊதுகுழல்.

மறுபுறம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி டீபிகா உடுகம, முன்பு ஐ.நா மனித உரிமை உப ஆணைககுழுவின் உப அங்கத்தவராக 1998 முதல் 2001 வரை கடமையாற்றிய வேளை இலங்கை அரசின் நிலைப்பாட்டை பிரச்சாரங்களாக மேற்கொண்டவர் என்பதுடன் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நிலைப்பாடுகளை சர்வதேசம் ஆதாரங்களுடன் கண்டித்த வேளை இலங்கை அரசின் பிரதிநிதிகளைவிட தமிழர்களை தரம்தாழ்த்தி. ஐ.நா சபையில் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கூட பயங்கரவாத அமைப்பு என்று கூறியவர்.

இந்த நிலையில், குறித்த டீபிகா உடுகமவிற்கு வலது கையாக செயற்பட்டுவருபவரே இந்த அம்பிகா சற்குணநாதன்.

மிக அண்மைய காலங்களில் ஜெனிவா சென்றிருந்த அம்பிகா வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அநீதி, கடத்தல், காணமல் போதல், இன அழிப்பு போன்றவை ப்றறி பந்த ஒரு கருத்தும் கூறாமல் இலங்கையில் நல்லாட்சி எனும் பொய்யாட்சிக்கு ஆதரவாகவும், டீபிகா உடுகமவின் கருத்துக்கும், தான் ஒரு தமிழ் பெண் என்பதை மறந்து ஆதரவாக குரல்கொடுத்து வந்தவர் இந்த அம்பிகா.

அத்துடன் மறைந்த நீலன் திருச்செல்வத்தின் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைக்கிறதா அல்லது மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைக்கின்றதா?

இன்னும் பலவற்றை கூறுவதாயின் தமிழ்த் தேசிய சிந்தனையற்ற பலரை இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் திரு. சுமந்திரன் களமிறக்குவது ஒட்டுமொத்த தமிழர்களின் தேசிய சிந்தனையையும் மலுங்கடித்து எதிர்வரும் காலங்களில் ஒரு பொடியாமி பியசேனவைப் போல் ஒரு கூட்டான பியசேனக்களை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமா?

இவற்றின் பின்னணிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனி வழி பயணத்திற்கு தயார்ப்படுத்தும், அரசியல் சட்டம் மட்டும் அல்ல எல்லாவற்றிலும் திகழ்ந்து விளங்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு நன்கு புரியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்னும் பொம்மைகளாக வாய்பேசா பிராணிகளாக பயணத்தை தொடர்வீர்களாக இருந்தால் வெகு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பௌத்த சிங்கள கூட்டமைப்பாக மாறி எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துவக்கக் கூட்டத்தில் புத்தம் சரணம் கச்சாமி.. தம்மங்க சரணம் கச்சாமி... எனும் பௌத்த மகுட வசனம் கூறியே தொடங்குவதை யாரும் தவிர்க்க முடியாது.

அண்மையில் சுமந்திரன் அவர்களின் மேடையில் ஒரு பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதனால் ஒருவேளை அம்பிகா போன்றவர்கள் சுமந்திரனுக்கு தேவையாக இருந்திருக்கலாம் என்று.

அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். பொது அரங்கில் அவமதிப்புக்கு உட்படுத்தப்பட்டமையைக் கூட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்தார்களா அல்லது பயந்து கொண்டிருக்கின்றார்களா என்பதுதான் கேள்விக்குறி..

ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்தின் அடையாளம். அதனை யாரும் திசை மாற்றி அல்லது கொள்கை மாற்றுவதற்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து அனுமதிப்பீர்களாக இருந்தால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் மீது நீங்கள் நின்று பேசுகின்ற பேச்சுக்கு உங்களை தெய்வம் தண்டிக்காவிட்டாலும் இவர்களின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது.

எனவே தமிழ் மக்களின் விடியலுக்காக தங்களுடைய கண்களை மூடிய இந்த கனவான்களுக்காக ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஓரணியில் நின்று பதில் சொல்லுமா? தென்னிலங்கை முகவர் அமைப்புக்களை இன்னும் களமிறக்கி, இருக்கும் தமிழ் தேசிய சிந்தனையும் சிதைக்கப்பட்டு ஒரு உணர்வற்ற கட்சியாக மக்களை நடைபிணங்களாக மாற்றுமா.

இந்த நிலை மாற வேண்டும். ஒரு ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு கூட்டமைப்பு ஒழுங்குபடுத்த வேண்டும். பொறுப்பு மிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களே இன்னும் ஒன்றும் மாறவில்லை.

இன்னும் பலவற்றை அம்பிகாவின் பின்னணி பற்றி இங்கு கூறுவதை தவிர்த்து சுருக்கமாக கூறுவதானால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை பொடிகாமி பியசேனபோல் பலரை இழக்க கூடிய வேட்பாளரையே இறக்குகிறார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

இது போன்று சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலரும் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

https://www.tamilwin.com/politics/01/241007?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தமிழர் வாக்குப் பலத்தை சிதறடித்து நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநித்துவத்தை குறைப்பதற்கு ஏற்ற  வழியில் சிங்கள அதிகாரவர்க்கம் மற்றும்  சிங்கள இனவாதிகளின் திட்டமிடலின் படி தான் நிகழ்ச்சி நிரல்கள் அண்மைகாலங்களில் மேடை ஏறுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட அரசியல்வாதிகளை கொண்டே இதை சாதிக்கிறார்கள்.

சிங்கள அரசின்  நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை அவர்கள் தமிழராக இருந்தாலும் கூட  கட்சிக்குள் உள்வாங்கி தேர்தலில் வேட்பாளராக களமிறக்குவது மிக ஆபத்தானது. அதுமட்டுமின்றி முக்கிய தொகுதிகளில் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி தோல்வியை தழுவும் பட்சத்தில் கூட்டமைப்பின் பிரதிநித்துவம் நாடாளுமன்றத்தில் கணிசமான அளவு குறைக்கப்படும் அபாயமும் உண்டு. இதனால் தமிழர் தமது அரசியல் பலத்தை இழப்பது திண்ணம்.

அம்பிகா போன்றவர்கள் மனம்மாறி தமிழினத்துக்காக சேவைசெய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர்களின் ஆளுமையை பயன்படுத்த வேறு இடங்களை இனங்கண்டு அவர்களுக்கு வழங்கவேண்டுமே தவிர பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் தமக்குள்ள அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து தன்னிச்சையாக எடுத்த எடுப்பிலேயே அவர்களை தேர்தலில்  வேட்பாளராக நியமனம் செய்வது அரசியல் தற்கொலைக்கு சமம்.

அம்பிகாவை ஜெனிவாவுக்கு அனுப்பி உலக அரங்கில் தமிழர் பிரச்சனைகளை முன்னிறுத்தி சிங்கள அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கும்படி செய்ய ஏன் முடியாது. கூட்டமைப்பின் மகளிர் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்தியுண்டு. எனவே இறக்குமதி செய்த புதுமுகங்களுக்கு தோல்வி நிச்சயம்.

Edited by vanangaamudi

12 hours ago, vanangaamudi said:

தீபிகாவை ஜெனிவாவுக்கு அனுப்பி உலக அரங்கில் தமிழர் பிரச்சனைகளை முன்னிறுத்தி சிங்கள அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கும்படி செய்ய ஏன் முடியாது

யார் அந்த தீபிகா? அம்பிகாவோ?

அம்பிகாவோ தீபிகாவோ உங்க கருத்து மிக நல்ல கருத்து. அவங்க முதல்ல ஐநா, சர்வதேசம் போய் சொறிலங்காட வேஷங்களை கலைக்கட்டும்.

சுமந்திரன் **** *****அம்பிகாவை உள்ளுக்கு விட்டு சொறிலங்காட பிளான்களுக்கு இன்னொரு 5 வருஷம் முண்டு கொடுக்க செய்த முயற்சிகளுக்கு.ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழரை மோசமான ஏமாளிகளா நினைச்ச சுமந்திரன்-சம்பந்தன் கபடதாரிக் கோஷ்டிக்கு மரண அடி விழுந்துகொண்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த தீபிகா? அம்பிகாவோ?

பெயர் திருத்தப்பட்டுள்ளது.
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

***** இணையதள எழுத்தாளர்கள் எதை எழுதினாலும், இலங்கையர்களாகிய நமே எமது பிரதிநிதிகளை தேர்வு செய்வோம்। அது அம்பிகாவோ, சம்பிக்கவோ, தீபிகாவோ யாராகவோ இருக்கலாம்।

ஐக்கிய நாடுகள் போவதோ, சர்வதேசம் போவதோ, எமது பிரச்சினை பற்றி பேசுவதோ அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்। நீங்கள் கவலை பட தேவை இல்லை। ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்।

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அமபிகா என்டவுடன் ஒடி வந்து ஏமாந்திட்டன்😁

சொறிலங்கா அரச போர்க்குற்றவாளிகளின் கைக்கூலிகள் இப்பவே தமிழர்ற தலையெழுத்தை தங்கட கைகளில் புடுங்கி வைத்திருப்பதா நெச்சு கூப்பாடு போட தொடக்கிருக்கினம். சுமந்திரன்ட கைக்கூலி வேலைக்கு பிரான்ஸ்ல இருந்து தொடங்கி ஆப்பு இறுகி வருது.

இன்றைக்கு யாழ்பாணத்தில முடிவு செய்த லிஸ்ட்ல இந்த அம்பிகா என்ற ரகசிய பேர்வழிய நுழைக்க சுமந்திரனால முடியாம போச்சாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

***** இணையதள எழுத்தாளர்கள் எதை எழுதினாலும், இலங்கையர்களாகிய நமே எமது பிரதிநிதிகளை தேர்வு செய்வோம்। அது அம்பிகாவோ, சம்பிக்கவோ, தீபிகாவோ யாராகவோ இருக்கலாம்।

ஐக்கிய நாடுகள் போவதோ, சர்வதேசம் போவதோ, எமது பிரச்சினை பற்றி பேசுவதோ அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்। நீங்கள் கவலை பட தேவை இல்லை। ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்।

அப்ப  என்ன இழவுக்கு பாரிஸ் லண்டன் கனடா விழுந்து உருண்டு வருகிறீர்கள் வந்து செருப்பால் எறி  வாங்கிறது உங்கள் சுமத்திரன் .

கணக்க  வேண்டாம் உங்கடை  ஆட்களை ஒரு ஆறு மாதம் வெளிநாடுகளுக்கு வந்து புலம்பெயரை சந்திக்காமல் இருக்க சொல்லுங்க பார்க்கலாம் .

காசு பிச்சை மாத்திரம் வேணும் ஆனால் நாங்க சரி  பிழை கதைக்க கூடாது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Vankalayan said:

***** இணையதள எழுத்தாளர்கள் எதை எழுதினாலும், இலங்கையர்களாகிய நமே எமது பிரதிநிதிகளை தேர்வு செய்வோம்। அது அம்பிகாவோ, சம்பிக்கவோ, தீபிகாவோ யாராகவோ இருக்கலாம்।

ஐக்கிய நாடுகள் போவதோ, சர்வதேசம் போவதோ, எமது பிரச்சினை பற்றி பேசுவதோ அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்। நீங்கள் கவலை பட தேவை இல்லை। ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்।

நாங்கள் ஓநாயாகவே இருந்திட்டு போறம்......சிங்களவன்ரை கறிச்சட்டிக்கை போற ஆடுகளை யோசிக்கத்தான் பாவமாய்கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

இது சரியாக புரியவில்லை கொஞ்சம் விளக்கமாக தயவு செய்து எழுதுவீர்களா?

தேர்தலில் நிற்பவர்கள் யார் என்று யாரும் இனி எழுத கூடாதா?
அல்லது உங்களுக்கு விரும்பிய படிதான் எழுதவேண்டுமா?

"நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்"
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து ஈழ தமிழினம் இழந்து வருவது தான் வரலாறு 
இதுவரை  நீங்கள் எதை பார்த்தீர்கள் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா?

"இலங்கையராகிய நாமே"
இதுதான் எனக்கு கொஞ்சமும் புரியவில்லை 
நீங்கள் யார் உங்களின் விசேடம் சிறப்பு என்ன .... எத்தனை பேர் இருக்குறீர்கள்?
என்பது ஒன்றும் புரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

உட்கட்சி எதிர்ப்பு இருக்குமானால் இருக்கும் வேலைய விடுத்து கடலில் இறங்கி கப்பலை தள்ளவிடுவார்கள் போல கிடக்கு..👍

உங்கள் நோக்கத்தையும் உண்மையான உணர்வையும் கொச்சைபடுத்த என்றே இருக்கும்சில பேர் வெளிநாடு உரிமை என்று உங்கள் உள்ளத்தை காயப்படுத்துவதும் புரிகிறது என்ன செய்ய

3 hours ago, Maruthankerny said:

இது சரியாக புரியவில்லை கொஞ்சம் விளக்கமாக தயவு செய்து எழுதுவீர்களா?

தேர்தலில் நிற்பவர்கள் யார் என்று யாரும் இனி எழுத கூடாதா?
அல்லது உங்களுக்கு விரும்பிய படிதான் எழுதவேண்டுமா?

"நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்"
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து ஈழ தமிழினம் இழந்து வருவது தான் வரலாறு 
இதுவரை  நீங்கள் எதை பார்த்தீர்கள் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா?

"இலங்கையராகிய நாமே"
இதுதான் எனக்கு கொஞ்சமும் புரியவில்லை 
நீங்கள் யார் உங்களின் விசேடம் சிறப்பு என்ன .... எத்தனை பேர் இருக்குறீர்கள்?
என்பது ஒன்றும் புரியவில்லை.  

இது தான் எனக்கும் புரியவில்லை யார் இவர்கள் எங்கள் கருத்தை குறுக்கிட இப்படியே உண்மையான அக்கறையுள்ளவரை வெறுக்க வைக்கும் தந்திரமோ

12 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் அமபிகா என்டவுடன் ஒடி வந்து ஏமாந்திட்டன்😁

large.6E7C10F6-BA96-402E-B0DA-A3B370BDD67D.jpeg.4e7534efe13714edc0616e57019a52cb.jpeg
 
உங்களுக்கு ஏமாற்றமல்லாமல் அம்பிகாவை அழைத்து வந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 6:32 AM, Vankalayan said:

***** இணையதள எழுத்தாளர்கள் எதை எழுதினாலும், இலங்கையர்களாகிய நமே எமது பிரதிநிதிகளை தேர்வு செய்வோம்। அது அம்பிகாவோ, சம்பிக்கவோ, தீபிகாவோ யாராகவோ இருக்கலாம்।

ஐக்கிய நாடுகள் போவதோ, சர்வதேசம் போவதோ, எமது பிரச்சினை பற்றி பேசுவதோ அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்। நீங்கள் கவலை பட தேவை இல்லை। ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்।

ஐயா பிச்சை போடுங்கள் என்று கூடமைப்பு உட்பட பல கட்சிகள் புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்தி நிற்கிறது..

17 hours ago, Maruthankerny said:

இது சரியாக புரியவில்லை கொஞ்சம் விளக்கமாக தயவு செய்து எழுதுவீர்களா?

தேர்தலில் நிற்பவர்கள் யார் என்று யாரும் இனி எழுத கூடாதா?
அல்லது உங்களுக்கு விரும்பிய படிதான் எழுதவேண்டுமா?

யாரும் எழுதலாம்। ஆனால் யாரை தேர்தலில் நிறுத்த வேண்டுமென்பதை இங்குள்ள காட்சிகள் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

"நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்"
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து ஈழ தமிழினம் இழந்து வருவது தான் வரலாறு 
இதுவரை  நீங்கள் எதை பார்த்தீர்கள் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா?

நாங்கள் இழப்புகளை சந்தித்தாலும் சுய நலத்துக்காக நாடடை, எமது தேசத்தை விட்டு ஓடிப்போகவில்லை। இன்று புலம் பெயர்ந்த சமூகத்தால்தான் நன்மைகளை விட தீமைகள் அதிகரிக்கின்றது। தமிழ் இளையவர்கள் வாள் வெட்டு குழுக்களாகவும், குடு கஞ்சா அடிப்பவர்களாகவும் மாறி இருக்கிறார்கள்। இன்று பெரும் பணக்காரராக இருக்கும் யாராவது மக்களை அவர்வது வாழ்வாதாரத்தை உயர்த்த  பாடு படுகிறார்களா ஏண்டா இல்லை।

"இலங்கையராகிய நாமே"
இதுதான் எனக்கு கொஞ்சமும் புரியவில்லை 
நீங்கள் யார் உங்களின் விசேடம் சிறப்பு என்ன .... எத்தனை பேர் இருக்குறீர்கள்?
என்பது ஒன்றும் புரியவில்லை.  

வேறு தேசத்தில் ஓடிப்போய் அங்கு குடியுரிமையை பெற்ற நீங்கள் உண்மையான இலங்கையராக  இருக்க முடியாது। நீங்கள் இங்குள்ள உரிமையை இழந்து விடீர்கள்।

இதில் நிறைய இணையதள போராளிகள் வெற்று ஊமை குண்டுகளை எரிவதால் ஒரு பிரயோசனமும் இல்லை।நான் ஒரு தேசப்பற்றுள்ள இலங்கையன்। இதில் வெற்று குண்டுகளை போடும் எவராலும் அப்படி சொல்ல முடியாது। அப்படி சொன்னாலும் பொய்யாகத்தான் இருக்கும்। உண்மை சுடும்।

1 hour ago, MEERA said:

ஐயா பிச்சை போடுங்கள் என்று கூடமைப்பு உட்பட பல கட்சிகள் புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்தி நிற்கிறது..

எச்சிக்கையால காக்காய் துரத்தாதவர்கள்  எல்லாம் இப்போது பிச்சை பற்றி கதைக்கிறார்கள்।

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

எச்சிக்கையால காக்காய் துரத்தாதவர்கள்  எல்லாம் இப்போது பிச்சை பற்றி கதைக்கிறார்கள்।

புனை பெயருக்குள்  பதுங்கிக்கொண்டு  மற்றவன் மேல் குற்றம் சாட்டுவது இலகுவானது சைனாவின் அறிவிக்கப்படாத மாகாணம் முன்னாள் ஸ்ரீலங்கா என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லையாக்கும் இறுதி போருக்கு  வாங்கின கடனுக்கு பிச்சை எடுத்து வட்டி கட்டும்  நாட்டில் இருந்து கொண்டு எச்சிக்கை பற்றி கதைப்பது டூமச் .

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 6:32 AM, Vankalayan said:

***** இணையதள எழுத்தாளர்கள் எதை எழுதினாலும், இலங்கையர்களாகிய நமே எமது பிரதிநிதிகளை தேர்வு செய்வோம்। அது அம்பிகாவோ, சம்பிக்கவோ, தீபிகாவோ யாராகவோ இருக்கலாம்।

1 hour ago, Rajesh said:

இன்று கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
அதில் சுமந்திரன் கபடமாக நுழைத்த ரகசிய பெண் அம்பிகாவுக்கு ஒரேடியா ஆப்பு வைத்தாகிவிட்டது.

அது அம்பிகாவோ, சம்பிக்கவோ, தீபிகாவோ யாராகவோ இருக்க முடியாது எனும்  முடிவை இலங்கையர்கள் எடுத்ததை மதிக்கிறோம் .

On 3/17/2020 at 6:32 AM, Vankalayan said:

ஐக்கிய நாடுகள் போவதோ, சர்வதேசம் போவதோ, எமது பிரச்சினை பற்றி பேசுவதோ அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்। நீங்கள் கவலை பட தேவை இல்லை।

போவதற்கான மக்கள் எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது.

நீங்கள் போகாத படியால் நாங்கள் எமது உறவுகளுக்காக சென்றோம்.

பரிகார பொறிமுறையாக மாற்றாக கூடி வாய்ப்பை ஏற்றப்படுத்தினோம், நீங்களே அதை மூடி விட்டீர்கள்.

On 3/17/2020 at 6:32 AM, Vankalayan said:

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்।

சொந்த மக்களை, உறவுகளை ஆடாக நினைத்தவருக்கு, மக்கள் வேட்பு மனு தாக்கல் கட்டத்தில் ஆப்படித்து விட்டார்கள். 

நீங்கள் அழுவது உங்களுக்கு தேர்தலில் ஆப்பு அடிக்கப்படப்போவதை நினைத்து.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது முற்றிலும் தனது சொந்த முடிவாகும் : அம்பிகா சற்குணநாதன்

(எம்.மனோசித்ரா)
 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனக்கு வழங்கிய வாய்ப்பை பின்னர் வாபஸ் பெற்றதாகவும் பிறகு தேசிய பட்டியலில் தனது பெயரைச் சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் வெளியாகின்ற செய்திகளை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று நிராகரித்திருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான செல்வி அம்பிகா சற்குணநாதன் , தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு முற்றிலும் தனது சொந்த முடிவேயாகும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

24-Ambika.jpg

இது தொடர்பில் செல்வி அம்பிகா சற்குணநாதன் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் உனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பற்றி நான் ஆழமாக சிந்தித்தேன். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது தேசிய பட்டியலில் என்னுடைய பெயரை உள்ளடக்குவதற்கும் முன்வந்தனர்.

இதேவேளை, எனக்கு எதிராக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிழையான தகவல்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கு போட்டியிட வழங்கப்பட்ட வாய்ப்பினை வாபஸ் பெற்றதாகவும், மற்றும் தேசிய பட்டியலில் என் பெயரை சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வலம் வருகின்றன. உண்மை என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் எதுவுமே அவர்களால் வாபஸ் பெறப்படவில்லை.

மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக என்னுடைய முடிவேயாகும். இம்முடிவை சில தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே நான் எடுத்துள்ளேன்.

அத்துடன் அரசியலில் மற்றும் பொது விடயங்களில் ஈடுபட எண்ணம் கொள்ளும் அல்லது அவ்வாறு எண்ணுவதாக நம்பப்படும் பெண்களுக்கு எதிராக பொய்யான பிரசாரங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது கவலைக்கிடமான விடயமாகும். ஆண் ஆதிக்கம் செரிந்த இந்தத் துறையில் பெண்களின் செயல்திறன் மிக்க மற்றும் சமமான பங்குபற்றலை தடுக்கும் வண்ணமானதாகவே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் சில ஊடக நிறுவனங்களும் ஊடக தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை புறக்கணித்து நேர்மையான விதத்தில் சரியான செய்திகளை வெளியிடும் பணியில் இருந்து விலகி பொய்யான மற்றும் பிழையான தகவல்களை பரப்புகின்றமை சமூகப் பொறுப்பற்ற செயலாகும்.

இத்தருணத்தில் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவினை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பொதுச் சேவைகளில் எனது பணி இடைவிடாது தொடரும் என உறுதியளிக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/78168

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

நாய்களரசு (நிர்வாகம் மன்னிக்க நாய்கள் ஒருபோதும் தம்மினத்துக்கு விசுவாசமாய் இருப்பதில்லை அது போல் இந்த தமிழரசு கட்சியும் இன்றுவரை தமிழ் இனத்துக்கு விசுவாசமாய் இருந்தது கிடையாது )கட்சி மகளீர்  அணியினரும் உங்களை  எதிர்த்து புரட்சி  செய்தவையே ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது முற்றிலும் தனது சொந்த முடிவாகும் : அம்பிகா சற்குணநாதன்

(எம்.மனோசித்ரா)
 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனக்கு வழங்கிய வாய்ப்பை பின்னர் வாபஸ் பெற்றதாகவும் பிறகு தேசிய பட்டியலில் தனது பெயரைச் சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் வெளியாகின்ற செய்திகளை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று நிராகரித்திருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான செல்வி அம்பிகா சற்குணநாதன் , தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு முற்றிலும் தனது சொந்த முடிவேயாகும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

24-Ambika.jpg

இது தொடர்பில் செல்வி அம்பிகா சற்குணநாதன் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் உனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பற்றி நான் ஆழமாக சிந்தித்தேன். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது தேசிய பட்டியலில் என்னுடைய பெயரை உள்ளடக்குவதற்கும் முன்வந்தனர்.

இதேவேளை, எனக்கு எதிராக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிழையான தகவல்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கு போட்டியிட வழங்கப்பட்ட வாய்ப்பினை வாபஸ் பெற்றதாகவும், மற்றும் தேசிய பட்டியலில் என் பெயரை சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வலம் வருகின்றன. உண்மை என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் எதுவுமே அவர்களால் வாபஸ் பெறப்படவில்லை.

மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனும் முடிவானது முற்றுமுழுவதுமாக என்னுடைய முடிவேயாகும். இம்முடிவை சில தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே நான் எடுத்துள்ளேன்.

அத்துடன் அரசியலில் மற்றும் பொது விடயங்களில் ஈடுபட எண்ணம் கொள்ளும் அல்லது அவ்வாறு எண்ணுவதாக நம்பப்படும் பெண்களுக்கு எதிராக பொய்யான பிரசாரங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது கவலைக்கிடமான விடயமாகும். ஆண் ஆதிக்கம் செரிந்த இந்தத் துறையில் பெண்களின் செயல்திறன் மிக்க மற்றும் சமமான பங்குபற்றலை தடுக்கும் வண்ணமானதாகவே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் சில ஊடக நிறுவனங்களும் ஊடக தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை புறக்கணித்து நேர்மையான விதத்தில் சரியான செய்திகளை வெளியிடும் பணியில் இருந்து விலகி பொய்யான மற்றும் பிழையான தகவல்களை பரப்புகின்றமை சமூகப் பொறுப்பற்ற செயலாகும்.

இத்தருணத்தில் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவினை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பொதுச் சேவைகளில் எனது பணி இடைவிடாது தொடரும் என உறுதியளிக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/78168

ஆ ஊ .. என்றால் பெண்ணியத்தை துணைக்கு அழைப்பது பேசனாகி போட்டுது.. தங்களை தவிர வேறு ஒரு பெண்ணுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லவா..? 👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

யாரும் எழுதலாம்। ஆனால் யாரை தேர்தலில் நிறுத்த வேண்டுமென்பதை இங்குள்ள காட்சிகள் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

மக்கள் எப்படி தீர்மானிப்பது?
இது வரையில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு 
மக்கள் தீர்மானித்த இரண்டு பேர்களை அறிய தாருங்கள் 

நாங்கள் இழப்புகளை சந்தித்தாலும் சுய நலத்துக்காக நாடடை, எமது தேசத்தை விட்டு ஓடிப்போகவில்லை। இன்று புலம் பெயர்ந்த சமூகத்தால்தான் நன்மைகளை விட தீமைகள் அதிகரிக்கின்றது। தமிழ் இளையவர்கள் வாள் வெட்டு குழுக்களாகவும், குடு கஞ்சா அடிப்பவர்களாகவும் மாறி இருக்கிறார்கள்। இன்று பெரும் பணக்காரராக இருக்கும் யாராவது மக்களை அவர்வது வாழ்வாதாரத்தை உயர்த்த  பாடு படுகிறார்களா ஏண்டா இல்லை।

என்னுடைய கேள்வி விளங்கியதா? இல்லையா?
இதுவரை எதை பார்த்தீர்கள்? என்பதுதான் எனது கேள்வி 
திரும்பவும் வந்து... நாட்டில் இல்லாதவனே நாட்டை கெடுக்கிறான் என்று புலம்புகிறீர்கள் 
நாட்டில் இல்லதவனால் கூட அவனுக்கு வேண்டிய தீமைகளை செய்ய முடிகிறதே...
"நாங்கள் பார்த்துக்கொள்வோம்" எதை என்பதுதான் நான் அறிய விரும்பியது  

"இலங்கையராகிய நாமே"
இதுதான் எனக்கு கொஞ்சமும் புரியவில்லை 
நீங்கள் யார் உங்களின் விசேடம் சிறப்பு என்ன .... எத்தனை பேர் இருக்குறீர்கள்?
என்பது ஒன்றும் புரியவில்லை.  

வேறு தேசத்தில் ஓடிப்போய் அங்கு குடியுரிமையை பெற்ற நீங்கள் உண்மையான இலங்கையராக  இருக்க முடியாது। நீங்கள் இங்குள்ள உரிமையை இழந்து விடீர்கள்।

உங்களுக்கு தமிழில் நான் எழுதுவது புரிகிறதா?
இங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் நீங்கள்தான் வந்து அந்த அந்த குடியுரிமையை வழங்குகிறீர்களா?
இலங்கையில் இரட்டை குடியுரிமை வைத்திருக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
(என்னுடைய கேள்வி அது பற்றியது அல்ல) 
உங்களின் சிறப்பு என்ன? விசேடம் என்ன? என்றுதான் எழுதி இருந்தேன் 
எங்கள் தலைகளில் வீடுகளில் வந்து இலங்கை அரசு குண்டு போட்டு கொல்ல முனைந்த போதுதான் 
நாம் இலங்கைக்கு சொந்தமில்லை என்று இலங்கை அரசு சொல்வதை புரிந்துகொண்டு 
நாம் அடுத்த கட்டம் நோக்கி நகர தொடங்கினோம். உடன் கூட்டிவர பொருளாதார வசதி இல்லாது 
விட்டு வந்த பாதி உறவுகள் இறந்து விட்டார்கள் மிகுதி வீடு இழந்து நாதி இழந்து நின்றார்கள் 
நாமும் அவர்களும் இன்னமும் சோரவில்லை மீண்டும் மீண்டும் எமது பொருளாதாரத்தையும் 
அவர்கள் மன வலிமையையும் சேர்த்து மீண்டும் மீண்டும் ஊர்களை புதுப்பிக்கிறோம்.
அவர்களுக்கும் எங்களுக்கும் இன்னமும் எந்த அரசியல் அதிகாரமும் எழுதிலோ பாராளுமன்ற 
உறுத்திலோ இல்லை .......... எங்களது தாய்மொழி தமிழ் ஆகும். (உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்)
எங்கள் மொழி நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பரம்பரம்பரையாக வாழ்ந்த மண்ணிலேயே 
இன்று இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. 
இதை உங்களுக்கு எனது கேள்வி விளங்குவதுக்காக மட்டுமே எழுதுகிறேன்.....
எனது கேள்வி? உங்கள் விசேடம் என்ன சிறப்பு என்ன ...... "இலங்கையராகிய நாமே" இதன் பொருள் என்ன?
நாமும் நாம் விட்டு வந்த மிகுதி உறவுகளும் எமது உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள ஒன்றாகவே 
கடந்த 30 வருடமாக பயணிக்கிறோம் ..... இப்போ பாராளுமன்ற தேர்தல் வருகிறது ஆதலால் 
எமது குரல்களை சிங்கள பாராளுமன்றில் எமது குரல்களாக ஒலிக்க வேண்டும் என்பதால் யாரை தேர்வு செய்வது யாரை  செய்ய கூடாது என்பது பற்றி பேசிக்கொள்கிறோம்.
அது உங்களுக்கு தேவை இல்லாதது என்றுதான் நான் நினைக்கிறேன்.
எனது கேள்வியை மீண்டும் எழுதுகிறேன் 
உங்களின் சிறப்பு என்ன? உங்கள் கூட்டத்தில் இன்னமும் மொத்தமாக எத்தனை பேர் இருக்கிறீர்கள்?   

1 hour ago, ampanai said:

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது முற்றிலும் தனது சொந்த முடிவாகும் : அம்பிகா சற்குணநாதன்

(எம்.மனோசித்ரா)
 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனக்கு வழங்கிய வாய்ப்பை பின்னர் வாபஸ் பெற்றதாகவும் பிறகு தேசிய பட்டியலில் தனது பெயரைச் சேர்த்துக் கொள்ள மறுத்ததாகவும் வெளியாகின்ற செய்திகளை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று நிராகரித்திருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான செல்வி அம்பிகா சற்குணநாதன் , தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு முற்றிலும் தனது சொந்த முடிவேயாகும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

24-Ambika.jpg

உண்மை என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் எதுவுமே அவர்களால் வாபஸ் பெறப்படவில்லை.

என்னடா இது எதோ கிசு கிசு செய்திமாதிரி இருக்கு 
அக்கா தன்வாயாலேயே உளறி கொட்டுறா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 3:19 PM, குமாரசாமி said:

நாங்கள் ஓநாயாகவே இருந்திட்டு போறம்......சிங்களவன்ரை கறிச்சட்டிக்கை போற ஆடுகளை யோசிக்கத்தான் பாவமாய்கிடக்கு...

அருமை அருமை தாத்தா 👏
 
அக்கா நான் நடுவில நீங்கள் உங்கடை விளக்கத்தை சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 9:22 AM, போல் said:

ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்தின் அடையாளம். அதனை யாரும் திசை மாற்றி அல்லது கொள்கை மாற்றுவதற்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து அனுமதிப்பீர்களாக இருந்தால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் மீது நீங்கள் நின்று பேசுகின்ற பேச்சுக்கு உங்களை தெய்வம் தண்டிக்காவிட்டாலும் இவர்களின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது.

இப்படி ஒரு விசயம் உள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரியுமா? இந்த வாதத்தில் போரில் இறந்து போன பல்லாயிரம் சனங்களின் ஆத்மாக்கள் கணக்கில் எடுக்கப்பட தேவை இல்லை? 

பெரிய விளக்கங்கள், பெரிய கட்டுரைகள் எல்லாம் எழுதுகிறார்கள்। எனக்கு வாசிக்க நேரமில்லை। யாராவது சுருக்கமாய் எழுதினால் வாசிக்கலாம்।

வெளி நாடுகளில் பிச்சை எடுக்கிறவர்களைப்பற்றி எழுதினால் இலங்கை சீனாவில் பிச்சை எடுக்குதாம்। அதுக்கும் இதுக்கும் என்ன சம்மபந்தமோ?

எதோ இவர்கள்தான் இப்போது இலங்கை தமிழனுக்கு ஈழத்தை பெற்றுக்கொடுப்பவர்கள் போல எழுதுகிறார்கள்। நீங்கள் உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை இலங்கையில் உள்ள தமிழனுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும்। *****

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.