Jump to content

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்


Recommended Posts

பதியப்பட்டது

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்

 
Friday, May 08, 2020  www.jaffnamuslim.com  6
 

 

image_1caff3764f-560x416.jpg
 
 
 
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் கட்டணமின்றி ஆஜராகுவதற்கு, பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்ததாக அறிய வருகிறது.
 
 

முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும் - என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும்தான் மிச்சம்

 
Saturday, May 09, 2020  www.jaffnamuslim.com  0
 

 

55485_LKA190507SriLankanMuslimsGetty_1557755695627.jpg
 
ஓர் கசப்பான உண்மைய, சொல்ல வேண்டும். 
 
ஜனாசா எரிப்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஒரு முஸ்லிம் ஜனாதிபதி சட்டத்தரனி முன் வரவில்லை. 
 
முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வரவில்லை. யாராவது முன்வந்தவர்களுக்கு அவர்கள் அனுசரனை வழங்குவதற்கும்  தயாராக இருக்கவில்லை. 
 
பல முஸ்லிம் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என எவரும் முன்வரவில்லை. 
 
குறிப்பிட்ட சில முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வந்தாலும், நிதிப்பற்றாகுறை, நிதி சேகரிக்க விடாமை என ஓரிரு சம்பவங்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்பட்டது. 
 
உண்மையிலேயே ஜனாதிபதி சட்டத்தரனி  சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராவதை நினைத்து முஸ்லிம் சமுதாயம் வெட்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் முதுகெலும்பற்ற,  சமூகமாக மாறியதை இங்கு வெளிக்காட்டி தந்திருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.  
 
எமக்கான குரல், என் சமூகத்திற்கான பலமான  குரல் இங்கு இல்லை என்பதனை சுமந்திரன்  இந்த வழக்கில் ஆஜராவதில் உறுதிப்படுத்துகிறது. வெட்கப்பட வேண்டிய விடயத்திற்கு இங்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம். !  
 
சுமந்திரன் வந்ததன் நோக்கம் எனக்கோ,உங்களுக்கோ தெரியாது. ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதொரு பாடத்தை சொல்லித்தந்து விட்டார் திரு.சுமந்திரன் அவர்கள் ! 
 
வெட்கப்பட்டு பதிவு போட வேண்டிய நாம்தான், சுமந்திரனுக்கு வாழ்த்து பதிவு இடுகின்றோம். ! 
 
இன்னமும் சமூகத்திற்கான தலைவர், இவர்கள் தான் முஸ்லிம் மக்களின் தலைவர், அந்த தலைவர், இந்த தலைவர் என கூப்பாடு போட்டுக்கொண்டு இன்னமும் தான் வால் பிடிக்க போகிறீர்களா? ஒட்டு மொத்த சமூகத்திற்கான பிரச்சினையின் போதாவது ஒன்று சேர்ந்து பிரச்சினைக்கு முடிவு கட்ட தயாரானார்களா? 
 
ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்டி, அதில் குளிர் காய்ந்து மையத்திலும் அரசியல் செய்த, செய்து கொண்டிருக்கின்ற கேவலமானவர்களுக்கு தான் இங்கு பல பேர் குடை பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து அந்த கிணற்றிலிருந்து வெளியே வாருங்கள். ! 
 
என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும் தான் மிச்சம் 
 
Azeem Jahufer 
09.05.2020
 
 
  • Replies 71
  • Created
  • Last Reply
Posted
12 minutes ago, கற்பகதரு said:

குறிப்பிட்ட சில முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வந்தாலும், நிதிப்பற்றாகுறை, நிதி சேகரிக்க விடாமை என ஓரிரு சம்பவங்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்பட்டது. 

ஆமாம், பொருளாதார ரீதியாக கடினப்படும் மக்களுக்காக நீதி கேட்டும் பண்பை பாராட்டித்தான் ஆகவேண்டும்  👏

14 minutes ago, கற்பகதரு said:

முஸ்லிம் சமூகம் முதுகெலும்பற்ற,  சமூகமாக மாறியதை இங்கு வெளிக்காட்டி தந்திருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.  

ஏற்கனவே தமிழ் சமூகத்தை முதுகுள்ள  சமூகமாக மாற்றிவிட்டார் ...எனக்குத்தான் அது விளங்கவில்லை😇

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இங்கு உலமா கட்சித் தலைவரின்  வேண்டுகோள்/ சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முசிலிம்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். முசிலிம்கள் தவிர்த்து யார் அவர்களுக்கு உதவினாலும் அவர்கள் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவார்கள். என்பதைக் கட்டுரை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. ☹️

பாவம் சுமந்திரன். 🤥

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லீம் தலைவர்கள் இப்பொழுது சொல்வார்கள்.....நாங்கள்(முஸ்லீம்கள்)சிறிலங்கா சட்டத்தை மதித்து எமது மத சம்பிரதாயங்களையே விட்டு கொடுக்கிறோம்....ஏன் இந்த" த"காபீர் தேவையில்லாமல் எமது சமுகத்தை கொச்சைப்படுத்துகிறார் ..என்று...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை வைத்தே  முசிலிம்கள் அரசியல் செய்வார்கள், இப்போது வாழ்த்தும் அனைவரும் அவர்களுடன் சேர்ந்து காறித்துப்புவார்கள் , அதுசரி மானம் ரோஷம் இருந்தால்தானே இதுவெல்லாம் பெரிதாக தெரிய ...
கட்டணம் இல்லாமல் அதுவும் ...பலே பாண்டியா அதுசரி சுமந்திரன் தொழில்முறைவாதியாக  மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டதற்கும் இப்போது கட்டணம் இல்லாமல் என்பதற்கும் எங்கேயோ இடிக்கிறதே ,
ஒருவேளை சும்  சமஷ்ட்டி ,ஏக்கிய ராஜ்ய சூத்திரத்தை வைத்து தமிழர்களின் மண்டையை கழுவ முற்பட்டது போல தனது மந்தைகளின் மண்டையையும் கழுவுகிறாரோ  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

முசிலிம்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். முசிலிம்கள் தவிர்த்து யார் அவர்களுக்கு உதவினாலும் அவர்கள் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவார்கள். என்பதைக் கட்டுரை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. ☹️

பாவம் சுமந்திரன். 🤥

ஏற்கெனவே முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது பற்றி அறிக்கை விட்டு, அவர்களின் மேடைகளில் கூடிக் குதூகலித்தார். அப்புறம் அவர்களின் சமயத்தைப் பற்றி கருத்துச் சொல்லப்போய் மூக்குடைபட்டவர். ஆனாலும் அவருக்கு அவர்கள் தான் தோது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளை பரப்புகின்றனர் - விளக்கமளிக்கிறார் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

 

அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் தங்களது இயலாமையை மறைப்பதற்காகவே முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிராக நண்பன் சுமந்திரன் எடுத்திருக்கும் முயற்சியை நான் விமர்சித்து வருவதாக போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அத்துடன் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கு  சிறிலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


Hakeem.jpg

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை தான் விமர்சித்துவருவதாக முகநூலில் பதிவாகியுள்ள போலியான செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது சம்பந்தமாக இந்த அரசாங்கம் பிடிவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதனை சவாலுக்குட்டுத்துகின்ற முயற்சியில் ஒருசில சகோதரர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விவகாரத்தை தன்னுடைய கையில் எடுத்திருக்கின்றது. 

அதேநேரம் இந்த வழக்கொன்றில் என்னுடைய நண்பன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வந்து, எந்த ஊதியமும் பெறாமல் வழக்கில் ஆஜராகுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்ற நிலையில், வேண்டுமென்று எமது கட்சிக்கு எதிரான ஒருசாரார் தங்களுடைய வங்குரோத்து அரசியலை அடிப்படையாகவைத்து, நண்பன் சுமந்திரன் இந்த விடயத்தில் தலையிடுவதை நான் விமர்சித்ததாக தெரிவித்து முகநூல் பதிவொன்றை போலியாக இட்டு அவர்களது வங்குரோத்து நிலைமையை காட்டி நிக்கின்றது.

நண்பன் சுமந்திரன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சிறந்த உறவைப்பேணிவரும் ஒரு அரசியல்வாதி மத்திரமல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல விவகாரங்களில் குறிப்பாக சிறுபான்மை இனங்கள் சகோரத்துவத்துடன் செயற்படவேண்டும்.

இந்த நாட்டு அரசியலிலே எம்மவருக்கு எதிராக எவ்வாறான சவால்கள் வந்தாலும் இயன்றவரை நாங்கள் ஒன்றாக இருந்து போராட வேண்டும் என்ற கொள்கையில் பயணிப்பவர்கள்.

இந்த நிலையில் சகோதரர் சுமந்திரன் எடுத்திருக்கும் முயற்சியை நாங்கள் எல்லோரும் மனதார பாராட்டவேண்டுமே ஒழிய, இவ்வாறு தங்களது வங்குரோத்து அரசியலுக்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்துவதற்காக செய்கின்ற நடவடிக்கையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இந்த விடயத்தை ஆரம்பத்திலே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவன் என்ற அடிப்படையிலே இது சம்பந்தமாக நாங்களும் நீதிமன்றம் கொண்டு சென்று அதனூடாக நியாயம் கேட்பதற்கு  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் இந்த விவகாரத்தில் நண்பன் சுமந்திரன்  எந்த ஊதியமும் பெறாமல் ஒரு வழக்கறிஞராக முன்வந்திருப்பது, இரு சமூகங்களுக்கிடையில் இருக்கின்ற சகோதர உணர்வை மாத்திரமல்ல, நியாயம் கேட்டு போராடுகின்ற விவகாரத்திலே நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை உரத்துச்சொல்கின்றது.

இந்த பின்னணியிலே முஸ்லிம்களும் தமிழர்களும் மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கின்ற சிங்கள, பெளத்தர்களும் கூட முஸ்லிம்களின் உணர்வு ரீதியான இந்த விவகாரத்திலே, அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் குறித்து ஒன்றாக குரல் எழுப்பவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கின்றது.

எனவே இந்த விடயத்திலே நீதிமன்றம் ஊடாக நியாயத்தை பெறுகின்ற முயற்சியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கின்றது.

அந்த வழங்குகளிலே நாங்களும் பங்குகொள்கின்றோம். இந்த நிலையில் சகோதரர் சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளை பரப்புகின்ற, இந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கின்ற ஒருசில ஒட்டுண்ணி கட்சிகள் தங்களுடைய வங்குரோத்து அரசியலுக்கு வேறு வழியில்லாமல் தங்களது இயலாமையை மறைப்பதற்காக செய்கின்ற இந்த ஈனச்செயலையிட்டு கவலையடைக்கின்றேன்.
 

https://www.virakesari.lk/article/81731

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். 

அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும். 

Posted

ஒரு மாபெரும் உயிர் கொல்லி வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மத வழிபாட்டு தலங்களை பூட்டிவைக்ப்பட்டதை ஏற்றுக்கொண்ட அறிவு  மதங்கள் பரப்பிய அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதாடுவதில்  எங்கு போய்விட்டது.  சடலங்களை எரித்தால் அல்லாவின் கோப‍த்திற்கு ஆளாக நேரிடும் என்று முட்டாள்தனமாக நம்பும் இஸ்லாமியர்கள் கொரோணாவில் இருந்து அந்த அல்லாவால் மக்களை காப்பாற்ற முடியவில்லை என்று அறிவு ரீதியாக சிந்திக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். 

அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும். 

சிறந்த கருத்து.
உழுத்து போன காலாவதியான முஸ்லிம் மத கொள்கைகளுக்கு முண்டு கொடுப்பதே சிலருக்கு வேலையாக போய்விட்டது.

Posted

மட்டக்களப்பில் நோன்புப்பெருநாளுக்காக கள்ளமாடு பிடிக்கப்போன 4முஸ்லிம் காடைகளும் வாகனமும் தமிழ்இளைஞரகளால் பிடிக்கப்பட்டுள்ளது .இவர்களுக்காகவும் சுமந்திரன் ஆஜராகவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

PicsArt_05-10-02.12.05.jpg

 

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது  சடலங்களை

எரிப்பதனை ஆட்சேபித்து உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை கட்டணமின்றி பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள பிரபல்யமான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக முன்னாள் மேல் மாகாண சபை உறுபபினர் சாபி றஹீம் தெரிவித்தார்.
 
 
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
உண்மையிலேயே சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களது சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகுவதையிட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக எனவும் இந்த நாட்டினுடைய முஸ்லிம் சமூகத்தினுடைய வரலாற்றில் வாழ் நாள் நன்றிமறவாத மனிதராக திகழ்வார் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
 
;இந்த வழக்குத் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் எத்தனையோ சட்டத்தரணிகள் அரசியல் தலைவர்கள் இருந்த போதிலும் தற்போது திராணியற்ற நிலையிலுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மை.
 
 
இருப்பினும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களுடைய உடலை உலக சுகாதார ஸ்தாபனம் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விதிகளுடன் புதைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
 
 
ஆனால் இலங்கையில் முஸ்லிம்களின் உடலை அடக்கும் செய்யும் விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் அரசியல் இலாபம் கருதி வீரியமிக்க செயற்பாடாக மேற் கொண்டு வருகின்றார்கள். இதனால் அனைத்து முஸ்லிம் மக்களது மனங்களும் புண்படுத்தப்பட்டுள்ளன. இம்மக்களது பிரச்சினையை சகோதர சிறுபான்மையின தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் படுத்தும் சட்டத்தரணி சுமந்திரன் மட்டுமல்ல பெரும்பான்மையின மக்களைச் சார்ந்த அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மனமுவந்து காருண்ணியத்துடன் நோக்க வேண்டி இருக்கிறது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முடக்கப்பட்ட நாடு தளர்த்தப்பட்டு மீளவும் இன்று திறந்து விடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
 
இது தேர்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் வேலைத் திட்டமாக இருப்பின் இதனால் ஏற்படும் விளைவு ஆபத்தானது. முழு நாட்டு மக்களையும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளிவிடுமளவுக்கு அபாயரகமானது.
 
 
இது எவ்வாறாயினும்; நாடு தளர்த்தப்பட்டபின்னர் மக்கள் நடந்த கொள்ளும் விதம் முடக்கப்பட்டு இருந்த காலத்தை விட இனி வரும் காலங்களில் மிக மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமானதாகவும், நீண்ட ஆயுளுடனனும் கூடிய மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய வகையில் அரசாங்கம் விதித்துள்ள சமூக இடைவேளியைப் பேணி சுகாதார ஒழுங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பேணி நடத்தல் அவசியம்.
 
 
இந்த இக்கெட்டான கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனமுடைந்த நிலையில் உள்ள நேரத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை இஸ்லாமிய மார்க்க விழுமியங்களுக்கு மாறாக தகனம் செய்வதை ஆட்சேபித்து உயிர் நீதி மன்றத்தில் எந்தவொரு கட்டணமுமின்றி வாதிடுவதற்கான ஆஜராகவுள்ள சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்கு என் சார்பாகவும் எமது முஸ்லிம் சமூகம் சார்ப்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைந்து கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
அம்மார்
10-05-2020
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜ‌னாஸாக்க‌ளை எரிக்கும் ம‌ருத்துவ‌ துறையை எதிர்த்து சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி ஒருவ‌ருட‌ன் இணைந்து ஹ‌க்கீம் வ‌ழ‌க்காடுவ‌தே சிற‌ந்து.- ‌ உல‌மா க‌ட்சி

 

collage.jpg

 

கொரோனா முஸ்லிம் ஜ‌னாஸாக்க‌ளை எரிக்கும் ம‌ருத்துவ‌ துறையை எதிர்த்து சும‌ந்திர‌ன் மூல‌ம் வ‌ழ‌க்கு தாக்க‌ல் செய்வ‌து சிங்க‌ள‌ இனவாதிக‌ளுக்கு தீணியாக‌ இருக்கும் என்ப‌தால் அதை விட‌ ஹ‌க்கீமின் த‌லைமையில் அல்ல‌து சிற‌ந்த‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி ஒருவ‌ருட‌ன் இணைந்து ஹ‌க்கீம் வ‌ழ‌க்காடுவ‌தே சிற‌ந்து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் இது ப‌ற்றி தெரிவித்த‌தாவ‌து,
ஜ‌னாஸாக்க‌ளை எரிப்ப‌தை நாம் ஏற்றுக்கொள்ள‌வே இல்லை. இது சுகாதார‌ அமைச்சு ம‌ற்றும் சுகாதார‌ துறையின‌ரின் மிக‌ப்பெரிய‌ த‌வ‌று என்ப‌தே எம‌து க‌ட்சியின் நிலைப்பாடாகும். இது த‌வ‌று என்ப‌தை நாம் அர‌சின் அனைத்து உய‌ர் ம‌ட்ட‌த்துக்கும் எழுத்து மூல‌ம் தெரிவித்துள்ளோம்.
இந்த‌ விட‌ய‌த்தில் அர‌சுக்கு சார்பான‌ உங்க‌ளின் க‌ருத்தை ஏன் அர‌சு ஏற்க‌வில்லை என‌ ப‌ல‌ரும் எம்மிட‌ம் கேட்கிறார்க‌ள்.

எந்த‌ அர‌சாங்க‌மாக‌ இருந்தாலும் த‌ம‌து சார்பு ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ளான‌ எம் பீக்க‌ள் உள்ள‌ க‌ட்சிக‌ளின் க‌ருத்துக்கே இட‌ம‌ளிக்கும். எம் பி அல்லாத‌ சாதார‌ண‌ க‌ட்சிக‌ளுக்கு அர‌சாங்க‌ங்க‌ள் இட‌ம‌ளித்த‌தாக‌ இல‌ங்கை வ‌ர‌லாற்றில் இல்லை. ஆனாலும் உல‌மா க‌ட்சிக்கு ம‌ட்டுமே ஓர‌ள‌வு ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌ போது இட‌ம‌ளித்தார். ச‌மூக‌த்தின் சில‌ கோரிக்கைக‌ளை நிறைவேற்றித்த‌ந்தார். பின்ன‌ர் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ள் பெரிதாக‌ இல்லை என்று தெரிந்த‌தும் எம‌க்கு அர‌சில் போதுமான‌ இட‌மில்லை என்ப‌து உண்மை. சில‌ வேளை ம‌ஹிந்த‌ இப்போதும் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்திருந்தால் நிச்ச‌ய‌ம் நாம் ப‌ல‌தை சாதித்திருப்போம்.
ந‌ம‌து முஸ்லிம் மக்க‌ளே வோட்டு இல்லாத‌ க‌ட்சிக‌ளுக்கு இடம் த‌ராத‌ போது அர‌சு த‌ரும் என‌ எதிர்பார்ப்ப‌தும் முட்டாள்த‌ன‌மாகும்.

ஜ‌னாஸா எரிப்பு விட‌ய‌த்தில் ஹ‌க்கீம் முத‌லில் ந‌ட‌ந்து கொண்ட‌மை பெரும் த‌வ‌று. அவ‌ர் ஒரு எம் பியாக‌ அமைச்ச‌ராக‌, ஒரு ல‌ட்ச‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம்களின் ஓட்டு பெற்ற‌ க‌ட்சி த‌லைவ‌ராக‌ இருக்கும் நிலையில் இந்த‌ விட‌ய‌த்தை அணுகிய‌ முறை பிழை என்ப‌தை அப்போதே நாம் ஊட‌க‌ வாயிலாக‌ சுட்டிக்காட்டினோம். ஹ‌க்கீமின் இட‌த்தில் ஒரு சாதார‌ண‌ மீன் வியாபாரி த‌லைவ‌ராக‌ இருந்தாலும் ஹ‌க்கீமை விட‌ திற‌மையாக‌ இத‌னை கையாண்டிருப்பான்.

ஹ‌க்கீம் என்ன‌ செய்தார்? சாதார‌ண‌, ம‌க்க‌ள் செல்வாக்கே இல்லாத‌ க‌ட்சி போல் முக‌நூலில் எரிக்க‌ கூடாது என‌ அறிக்கை விட்டார். அதுவும் ஆங்கில‌த்தில். அந்த‌ அறிக்கை சாதார‌ண‌மாக‌த்தான் இருந்த‌து. பின்ன‌ர் அவ‌ர‌து ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அந்த‌ அறிக்கையில் இல்லாத‌ வ‌ச‌ன‌ங்க‌ளை சேர்த்து க‌ண்ட‌ன‌ அறிக்கையாக‌ த‌மிழில் வெளியிட்ட‌ன‌ர். த‌மிழ் அறிக்கை சிங்க‌ள‌த்துக்கு மாற்ற‌ப்ப‌ட்டு அர‌சை ஆத்திர‌ம் கொள்ள‌வைத்த‌து.
உண்மையில் ஹ‌க்கீம் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்?
ஹ‌க்கீம் ம‌க்க‌ள் வாக்குள்ள‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் என்ப‌தால், முன்ன‌ள் அமைச்ச‌ர் என்ப‌தால் இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஜ‌னாதிப‌தியுட‌ன் பேசுவ‌த‌ற்கு முய‌ற்சித்திருக்க‌ வேண்டும். அவ்வாறு செய்வ‌தாக‌ பேஸ்புக் அறிக்கைக்கு முன் எந்த‌ த‌க‌வ‌லும் வெளிவ‌ர‌வில்லை.

நாங்கள் கூட‌ ஜ‌னாதிப‌தியை நேர‌டியாக‌ ச‌ந்திப்ப‌து க‌ஷ்ட‌ம். கார‌ண‌ம் நாங்க‌ள் முஸ்லிம்க‌ளின் ஆணை பெற்ற‌வ‌ர்கள் இல்லை. ஜ‌னாதிப‌திக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ நாம் இருந்தும் அவ‌ர் ப‌த‌வியேற்ற‌திலிருந்து இன்று வ‌ரை அவ‌ரை ச‌ந்திக்க‌ எம‌க்கு நேர‌ம் த‌ர‌ப்ப‌ட‌வில்லை.
ஆனால் ஹ‌க்கீம் நினைத்தால் உட‌ன‌டியாக‌ ஜ‌னாதிப‌தியை ச‌ந்திக்க‌ முடியும். அப்ப‌டி செய்ய‌வில்லை.
பின்ன‌ர் ம‌ஹிந்த‌வை ச‌ந்திக்க‌ முய‌ற்சி செய்தார். அப்போதும் அவ‌ர் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்?
இது ஒட்டுமொத்த‌ முஸ்லிம் ச‌மூக‌ பிர‌ச்சினை என்ப‌தால் முத‌லில் ஆளுந்த‌ர‌ப்புக்கு ஆத‌ர‌வான‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளையும் ஆளுந்த‌ர‌ப்பில் அங்க‌ம் வ‌கிக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளையும் கூட்டி ஆலோசித்திருக்க‌ வேண்டும்.
அத‌ன் பின் ஆளுந்த‌ர‌ப்பு முஸ்லிம் க‌ட்சிக‌ள், எதிர் த‌ர‌ப்பு முஸ்லிம் க‌ட்சிக‌ள் இணைந்து கூட்டாக‌ இந்த‌ விட‌ய‌த்தை முத‌லில் ஜ‌னாதிபதியுட‌னும் பின்ன‌ர் ம‌ஹிந்த‌வுட‌னும் பேசியிருக்க‌ வேண்டும்.
ஆனால் ஹ‌க்கீம் எரிப்பு விட‌ய‌த்தில் த‌ன‌து க‌ட்சிக்கு அர‌சிய‌ல் லாப‌ம் தேட முய‌ற்சித்த‌தால்த்தான் அவ‌ரும் அவ‌மான‌ப்ப‌ட்டு ச‌மூக‌மும் அவ‌மான‌ப்ப‌ட்டு நிற்கிற‌து.
இன்ன‌மும் கூட‌ ஹ‌க்கீம், வ‌ட‌ கிழ‌க்கை இணைக்க‌ வேண்டும் என‌ போராடும் சும‌ந்திர‌னைத்தான் ந‌ம்புகிறாரே த‌விர‌ தானும் ஒரு ச‌ட்ட‌த்த‌ர‌ணி என்ப‌தை ந‌ம்ப‌வில்லை.
இவ்வாறு சும‌ந்திர‌ன் மூல‌ம் இது விட‌ய‌ம் வ‌ழ‌க்காட‌ப்ப‌டும் போது சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள்தான் ச‌க்தி பெறுவார்க‌ள்.
அதோ த‌மிழ‌ரும் முஸ்லிம்க‌ளும் சிங்க‌ள‌ அர‌சுக்கெதிராக‌ ஒன்று சேர்ந்து விட்டார்கள். சிங்க‌ள‌வ‌ர் நாம் ஒன்று ப‌ட‌ வேண்டும் என்ப‌ர்.

என‌வேதான் சொல்கிறோம். முஸ்லிம்க‌ள் ஓட்டுப் பெற்ற‌ க‌ட்சியின் த‌லைவ‌ரான‌ ஹ‌க்கீம் த‌லைமையில் எரிப்புக்கெதிராக‌ நீதிம‌ன்ற‌ம் போக‌ வேண்டும். ஹ‌க்கீமுக்கு வாதிடும் அறிவு இல்லை என்றால் சிற‌ந்த‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் த‌லைமையில் வாதாடலாம். அத‌ற்கான‌ ப‌ண‌த்தை முஸ்லிம்க‌ளின் ஓட்டுக்க‌ளை கோடிக்க‌ன‌க்கான‌ ரூபாய்க‌ளுக்கு விற்ற‌ முஸ்லிம் காங்கிர‌சின் நிதியில் இருந்தும் தாருஸ்ஸ‌லாமில் கொள்ளைய‌டித்த‌ ப‌ண‌த்திலிருந்தும் பெற‌லாம். அப்ப‌டியும் முடியாது என்றால் முஸ்லிம் த‌ன‌வ‌ந்த‌ர்க‌ளிட‌மிருந்து பெற‌லாம். ஹ‌க்கீம் அடுத்த‌ பாராளுமன்றிலும் இந்த‌ அர‌சுக்கு ஆத‌ர‌வ‌ளித்து அமைச்சாராகுவார் என்ப‌தால் நிச்ச‌ய‌ம் த‌ன‌வ‌ந்த‌ர்க‌ள் அவ‌ருக்கு ப‌ண‌ம் வ‌ழ‌ங்குவ‌ர் என்ற‌ ந‌ம்பிக்கை எம‌க்குண்டு.

http://www.importmirror.com/2020/05/blog-post_767.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, colomban said:

ஜ‌னாஸாக்க‌ளை எரிக்கும் ம‌ருத்துவ‌ துறையை எதிர்த்து சிங்க‌ள‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி ஒருவ‌ருட‌ன் இணைந்து ஹ‌க்கீம் வ‌ழ‌க்காடுவ‌தே சிற‌ந்து.- ‌ உல‌மா க‌ட்சி

முசிலிம்களின் உண்மையான முகம் இது. 👍

அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். ☹️

நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kapithan said:

முசிலிம்களின் உண்மையான முகம் இது. 👍

அவர்கள் பலவீனமான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் தங்கள் எதிரியாகக் கொள்கிறார்கள். பலமான நிலையில் உள்ள சிங்களத்துடன் கூட இருப்பதையே விரும்புகிறார்கள். ☹️

நாம்தான் அவர்களை எங்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ☹️

 

இவர்களை சிங்களவர்கள் மிதி மிதி என்று மிதிச்சாலும்.. அவன் நல்லவன்டா என்று தான் சொல்வார்கள். 

காரணம்.. இவர்கள் சிங்கள பெரு விருட்சத்தைப் பற்றி வளரும் கொடியாகவே இருக்க விரும்புகின்றனர். தமிழர்களைப் போல்.. தனி விருட்சமாக இருக்க விரும்பவில்லை. அதற்கான முகாந்திரம் இவர்களிடம் இல்லை... என்பது தெரிந்ததே. இது சிங்களவனுக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலோலியூரான் ரவீ..ன் said:

மட்டக்களப்பில் நோன்புப்பெருநாளுக்காக கள்ளமாடு பிடிக்கப்போன 4முஸ்லிம் காடைகளும் வாகனமும் தமிழ்இளைஞரகளால் பிடிக்கப்பட்டுள்ளது .இவர்களுக்காகவும் சுமந்திரன் ஆஜராகவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறேன்.

இடம் தெரிந்தால் ஆஜாராவார்...தமிழ்ப் பொடியளை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டார்...யுவர் ஆனர்..

Posted

ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தொடர்ச்சியாக தகனம் செய்யப்படுவதால், முஸ்லிம் சமூகம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

உலகில் 180 க்கு மேற்பட்ட நாடுகளிலும் உலக சுகாதார ஸ்தாபனம்  2020.03.24 ஆம் திகதி வெளியிட்ட, 'கொவிட் – 19 இன் காரணமாக மரணிக்கும் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு வழிகாட்டல்களின்' பிரகாரமும், கொரோனா தொற்றுநோய் காரணமாக மரணித்த உடல்களை புதைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் பல்லாயிரக்கணக்கான உடல்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் போன்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்ற நாடுகளில் கூட பாரிய புதைகுழிக்குள் அடக்கம் செய்வதனை சர்வதேச செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

ஆனால், எமது நாடான இலங்கையில் 2020.04.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் முடியும் என்பதனை மாற்றி, தகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஏப்ரல் 11 ஆம் திகதி  வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதிக்கு-ரிஷாட்-கடிதம்/175-250004

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் கூட‌ ஜ‌னாதிப‌தியை நேர‌டியாக‌ ச‌ந்திப்ப‌து க‌ஷ்ட‌ம். கார‌ண‌ம் நாங்க‌ள் முஸ்லிம்க‌ளின் ஆணை பெற்ற‌வ‌ர்கள் இல்லை. ஜ‌னாதிப‌திக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌ட்ட‌ க‌ட்சியாக‌ நாம் இருந்தும் அவ‌ர் ப‌த‌வியேற்ற‌திலிருந்து இன்று வ‌ரை அவ‌ரை ச‌ந்திக்க‌ எம‌க்கு நேர‌ம் த‌ர‌ப்ப‌ட‌வில்லை.

அப்ப இவரு ஒரு கிணத்து தவளை என்பதை ஒத்துக்கிட்டாரெல்லே...

Posted
4 hours ago, nedukkalapoovan said:

மதத்துக்கும் சட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராதவர்களின் சட்டம் பொய்த்தே போகும். 

அறிவியல் எரிக்கச் சொன்னால் எரியுங்கள்.. அங்கு சட்டமும் மதமும் செல்வாக்குச் செய்யக் கூடாது. காரணம்.. அறிவியல் ஆய்ந்து சொல்லும்.. சட்டம் தர்க்கிச்சு வெல்லும்..மதம் கற்பனையில் செல்லும். 

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, ampanai said:

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

அந்த மேலை நாடுகளில் அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப் படுகின்றன...இங்கு பச்சைதுணியால் மூடிகட்டிவிட்டு ஊர்வலம் நடாத்தி புதைப்பினம்..பரவல் விரைவாகும்...இதற்கு டெல்லியில் நடந்த முசுலீம் மாநாடு உதாரணம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனை முஸ்லீம்கள் மெச்சி பாராட்டுவார்கள் நாலு நாள் கழித்து சுமந்திரனை தூற்றுவார்கள் பிரபாகரன் எனும் தலைவரை போற்றினார்கள் புலிகளால்தான் நாங்களும் இலங்கையில் வாழ்கிறோம் என சொன்னவர்கள் 

புலிகள் முற்றாக அழிந்தார்கள் பிரபாகரனும் இறந்து போய்விட்டார் என பால் சோற்றும் , யூஸ்சும் கொடுத்து கொண்டாடியவர்கள் இவர்கள் இவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் அத்தனையையும் பயன்படுத்தி பலனை அடைந்துவிட்டு நமக்கே ஆப்படிப்படிப்பவர்கள் 

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதை வைத்தே  முசிலிம்கள் அரசியல் செய்வார்கள், இப்போது வாழ்த்தும் அனைவரும் அவர்களுடன் சேர்ந்து காறித்துப்புவார்கள் , அதுசரி மானம் ரோஷம் இருந்தால்தானே இதுவெல்லாம் பெரிதாக தெரிய ...
கட்டணம் இல்லாமல் அதுவும் ...பலே பாண்டியா அதுசரி சுமந்திரன் தொழில்முறைவாதியாக  மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டதற்கும் இப்போது கட்டணம் இல்லாமல் என்பதற்கும் எங்கேயோ இடிக்கிறதே ,
ஒருவேளை சும்  சமஷ்ட்டி ,ஏக்கிய ராஜ்ய சூத்திரத்தை வைத்து தமிழர்களின் மண்டையை கழுவ முற்பட்டது போல தனது மந்தைகளின் மண்டையையும் கழுவுகிறாரோ  

நமக்கு இவங்கள் திருகு தாளங்கள் தெரியும் தானே 

10 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

முடிந்தால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணச் சொல்லுங்கள் அவர் புடுங்கிற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணியாத்தான் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

தமிழ் மக்கள் மேல் கொஞ்சசமாவது அக்கறை இருந்தால் தொடந்து அரசியலில் இருக்க சொல்லுங்கள் ...அப்படி இல்லாதவிடத்து பதவியை இராஜினாமா செய்து விட்டு வக்கீல் தொழிலை மட்டும் பார்க்க சொல்லுங்கள் அல்லது சிங்கள கட்சிகள் ஏதாவது ஒன்றில் போய் சேர சொல்லுங்கள் 
அதை விட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஆட்களை மதம் மாற்றுவதை நிறுத்த சொல்லுங்கள் 😉
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

நீங்கள் திரு சுமந்திரன் அவர்களின் அரசியல் ரீதியாக என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள் என்பது தெரியாமல் உங்களிடம் எப்படி கேள்வியை கேட்பது. கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடும் என்பார்கள். கேள்விக்கு பதில் வழங்குவது சுமந்திரனா அல்லது நீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.