Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு..

Charles2020_1080.jpg

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி - 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/21413

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டால் தமிழர்களைக் கொண்டே தமிழர்கள் மீது மண் அள்ளிப் போடலாம் பாருங்கோ ....

ஹி..ஹி..ஹி.. 😜

எனக்கு மட்டும் கற்பனை செய்ய முடியாதா என்ன.... 😝

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு..

Charles2020_1080.jpg

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி - 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/21413

இருக்கிற ஆக்களுக்கு வேலை இல்லாமல், வெவசாயம், வீடமைப்பு, கொரோணா கட்டுப்படுத்தல் எண்டு திரியிற நிலையில், பம்மாத்து விடப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இருக்கிற ஆக்களுக்கு வேலை இல்லாமல், வெவசாயம், வீடமைப்பு, கொரோணா கட்டுப்படுத்தல் எண்டு திரியிற நிலையில், பம்மாத்து விடப்படாது.

சும்மா விவசாயம் செய் மாடு மேய் என்டால போக மாட்டினம் எங்கடை வெள்ளை பான்ட் குஞ்சுகள்.அரசாங்க வேலை என்டால்
க...ம் களுவிவனம்.அப்படியாவது தொழில் பழகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள் அரசுகள் தமிழரின் எழுச்சியை சூழ்ச்சிகள் பல செய்து அடக்கினாலும் அது மீண்டும் எழும். அதனை நீர்த்துபோகச் செய்ய முடியாது என்பது சிங்களத்தின் பட்டறிவு.

தற்போது தமிழரைக்கொண்டே தமிழரை அடக்கினால்... அது அடங்கி நீர்த்துப்போகவும் கூடும் என்பது புதிய அரசின் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் நிலை கொண்டுள்ள அளவுக்கதிகமான இராணுவத்தினால் ஏற்படும் சர்வதேச விமர்சனங்களை தவிர்க்க செய்யப்படும் ஏற்பாடாக இருக்கலாம். கட்டளை அதிகாரி சிங்களவராகவே இருக்கும். அவர் இடும் கட்டளையை நிறைவேற்றவே தமிழர். இருக்கும் தமிழரை தமிழ் இராணுவம் கைது செய்யும், சிறையில் அடைக்கும், சித்திரவதை செய்யும். தமிழர் பங்கரவாதிகள்.  இது எனது கற்பனை.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகணத்திலிருந்து 9 ஆயிரம் பேரை இராணுவத்துக்குத் திரட்ட முடிவு

SL-army.600.png
 16 Views

வடக்கு மாகாணத்தில் இருந்து 9 ஆயிரம் பேரைப் புதிதாகத் திரட்டி இராணுவத்தில் இணைக்க அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்று யாழ்ப்பாணத்தில் ஆளுநர் நடத்திய சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக குடாநாட்டுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஐந்து மாவட்ட அதிகாரிகளுடனும் வடக்கு ஆளுநர் இன்று நடத்திய சந்திப்பின் போதே இந்த விவரம் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 பேரும், வன்னிப் பகுதியில் இருந்து 4 ஆயிரத்து 5 00 பேருமாகவே இந்த 9 ஆயிரம் பேரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இராணுவ உதவிப் பணியாளர்களாக மரவேலை, மேசன் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கான ஆள்திரட்டாக இதுஅமையும் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறு பணிக்கு அமர்த்தப்படுவோர் வடக்கு மாகாணத்திலேயே பணியாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதோடு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும். விண்ணப்ப முடிவு தினம் இம்மாதம் 29ஆம் திகதி எனவும் தெரிவிக்கப்பட்டது.

https://www.ilakku.org/வடமாகணத்திலிருந்து-9-ஆயி/

  • கருத்துக்கள உறவுகள்

குடுவடிச்சு ,பெண்பிள்ளைகள் பின்னால் சுற்றி , வாள் வெட்டி திரியும் கூட்டங்கள் 
இதுல  போய் சேர்ந்தால் வீட்டிற்கு உழைச்சாவது கொடுக்கலாம் , எப்படியும் கழிவுகள் தானே கழிவுகளுடன் போய் சேர்வதில் தப்பில்லையே 

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயம் காலம் கடந்த பின்பு செய்யும் ஒர் செயல் ...இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதி ஒர் தமிழர் ....

இனபாகுபாடு பார்க்காமல் 50 வருடங்களுக்கு முதலே இராணுவத்தில் தமிழர்களை சேர்த்திருந்தால்  ....இன்று சர்வதேசத்திடம் உள்ள இனபடுகொலை என்ற துறும்பு சீட்டை இலகுவாக வென்றிருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

குடுவடிச்சு ,பெண்பிள்ளைகள் பின்னால் சுற்றி , வாள் வெட்டி திரியும் கூட்டங்கள் 
இதுல  போய் சேர்ந்தால் வீட்டிற்கு உழைச்சாவது கொடுக்கலாம் , எப்படியும் கழிவுகள் தானே கழிவுகளுடன் போய் சேர்வதில் தப்பில்லையே 

சும்மாவே ஆயுதப்படையின் உதவியுடன்  இத்தனை அட்டூழியங்கள் செய்பவர்கள்  கையில் ஆயுதமும் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதை  கற்பனை செய்து பாருங்கள். பெண்பிள்ளை இவர்களை  ஏற்க மறுத்தால் மரணம், தட்டிகேட்டால் மரணம், தொட்டதற்கெல்லாம் மரணம். சம்மதமா?....

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

சும்மாவே ஆயுதப்படையின் உதவியுடன்  இத்தனை அட்டூழியங்கள் செய்பவர்கள்  கையில் ஆயுதமும் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதை  கற்பனை செய்து பாருங்கள். பெண்பிள்ளை இவர்களை  ஏற்க மறுத்தால் மரணம், தட்டிகேட்டால் மரணம், தொட்டதற்கெல்லாம் மரணம். சம்மதமா?....

இவர்கள் அப்படியெல்லாம்  இராணுவத்திலிருந்து கொண்டு ஆடினால் இராணுவத்திற்கே  கெட்ட பெயர் 
வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையாகப்போயிடும் என்று சிங்களவனுக்கே தெரியாதா, போட்டு முறிக்கும் முறியில் குடல் வாயால் வரும் , பல்கலை போன பார்ட்டிகளுக்கே தலைமைத்துவ பயிற்சி என்று கொடுத்த ட்ரைனிங்கில்  ICU  இல் வாரக்கணக்கில் கிடந்த கதைகளும் உண்டு 

மட்டு ரெஜிமென்ட், யாழ் ரெஜிமென்ட், வன்னி ரெஜிமென்ட் என்று மூன்று ரெஜிமெனட் உருவாக்கவேண்டியது தான். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

மட்டு ரெஜிமென்ட், யாழ் ரெஜிமென்ட், வன்னி ரெஜிமென்ட் என்று மூன்று ரெஜிமெனட் உருவாக்கவேண்டியது தான். 😂😂

தமிழரின் தவிப்புகளில் மகிழ்ச்சி உங்களுக்கு??? வாயில வருகுது? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவர்கள் அப்படியெல்லாம்  இராணுவத்திலிருந்து கொண்டு ஆடினால் இராணுவத்திற்கே  கெட்ட பெயர் 
வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையாகப்போயிடும் என்று சிங்களவனுக்கே தெரியாதா, போட்டு முறிக்கும் முறியில் குடல் வாயால் வரும் , பல்கலை போன பார்ட்டிகளுக்கே தலைமைத்துவ பயிற்சி என்று கொடுத்த ட்ரைனிங்கில்  ICU  இல் வாரக்கணக்கில் கிடந்த கதைகளும் உண்டு 

இத்தனை குற்றங்களை புரிந்த இராணுவம் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. மாறாக பதவியுயர்வு, சிறப்பு கவுரவம், விடுதலை, விளக்கம் வேறு. இந்த லட்ஷணத்தில் சிங்கள ஆமி இவர்களை போட்டுத்தள்ளி விட்டு, மறைத்திருந்த பயங்கரவாதிகளோடு ஏற்படட மோதலில் இத்தனை படையினர் கொல்லப்பட்டனர் என சிறப்புச் செய்தி வெளிவரும். அப்போது ஓரிரு சாதாரண அப்பாவி  தமிழரும் கொல்லப்படலாம் இறந்த  படையினரும், மறைந்திருந்த பயங்கரவாதியும் தமிழராயிருப்பர். அல்லது இராணுவத்தினர் வரம்பு மீறி நடந்து மக்களுடன் எற்பட்ட மோதலில் இத்தனை படையினர் கொல்லப்பட்டனர் என்றும் செய்தி வரலாம்.   இது நான் சிங்களவனிடம் இருந்து பெற்ற பட்டறிவு. அதை ஆமோதிக்க நம்மிலும் பலர் இருப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கிற்கு  பொலிஸ் அதிகாரம் கொடுக்க பயப்பிடும் சிங்களம், ஒருநாளும் தமிழரை இராணுவத்தில் சேர்த்து அவர்கள் கையில் ஆயுதமும் கொடுக்காது. அந்தத் தப்பை செய்து தன் கையை தானே சுட்டுக்கொள்ளாது. வேணுமென்றால்; முகாமில்  துப்பரவு, சமையல், தோட்ட வேலைக்கு ஆயுதம் இல்லாமல் இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு என்கிற பெயரில் சேர்க்கலாம்.   எல்லாம் கற்பனையே! 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

மட்டு ரெஜிமென்ட், யாழ் ரெஜிமென்ட், வன்னி ரெஜிமென்ட் என்று மூன்று ரெஜிமெனட் உருவாக்கவேண்டியது தான். 😂😂

அப்படியல்ல பிள்ளையான் ரெஜிமென்ற்
கருணா ரெஜிமென்ற்  டக்ளஸ் ரெஜிமென்ற்
இப்படித்தான் வரும்

அதைவிட ஆலோசனையில் இருப்பது சுமந்திரன் ரெஜிமென்ற் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

வடகிழக்கிற்கு  பொலிஸ் அதிகாரம் கொடுக்க பயப்பிடும் சிங்களம், ஒருநாளும் தமிழரை இராணுவத்தில் சேர்த்து அவர்கள் கையில் ஆயுதமும் கொடுக்காது. அந்தத் தப்பை செய்து தன் கையை தானே சுட்டுக்கொள்ளாது. வேணுமென்றால்; முகாமில்  துப்பரவு, சமையல், தோட்ட வேலைக்கு ஆயுதம் இல்லாமல் இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு என்கிற பெயரில் சேர்க்கலாம்.   எல்லாம் கற்பனையே! 

சரியான அனுமானம் 
ராணுவத்திற்குள்  ராணுவத்திற்கு சேவகம் செய்ய பணியாட்கள் அவ்வளவே 
ரோட்டில் போதையில் ஆளாளுக்கு வாள்  வெட்டி திரிவதை காட்டிலும் இப்படி போய் வீட்டிற்கு  உழைத்தாவது  கொடுக்கட்டும் 

11 hours ago, tulpen said:

மட்டு ரெஜிமென்ட், யாழ் ரெஜிமென்ட், வன்னி ரெஜிமென்ட் என்று மூன்று ரெஜிமெனட் உருவாக்கவேண்டியது தான். 😂😂

45 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சரியான அனுமானம் 
ராணுவத்திற்குள்  ராணுவத்திற்கு சேவகம் செய்ய பணியாட்கள் அவ்வளவே 
ரோட்டில் போதையில் ஆளாளுக்கு வாள்  வெட்டி திரிவதை காட்டிலும் இப்படி போய் வீட்டிற்கு  உழைத்தாவது  கொடுக்கட்டும் 

இனி ஒரு ஆயுதப்போராட்டம் வருவதட்கு சந்தர்ப்பம் இல்லை. எந்த நாட்டுடனும் யுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி வந்தால் சீனாவோ , அமெரிக்காவோ பார்த்துக்கொள்ளும். எனவே இராணுவத்தில் இணைந்து வடக்கில் பணியாற்றுவது பிரச்சினையாக இருக்காது. மக்களின் பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி காணப்படும். மற்றவர்களின் கதைகளைக்கேட்டுக்கொண்டு எந்த நாளும் பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்கள் இணையாவிடடாள் மாற்று இனத்தவர் நுழைந்து இன்னும் அதிக சேதாரத்தை ஏட்படுத்துவார்கள். எனவே இதனை இங்குள்ள தமிழர்கள் ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் அவர்களுக்கும் நல்லது, சமூகத்துக்கும் நல்லது. ஆளுநரின் இந்த தீர்மானத்தை வரவேற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வீட்டிற்கு  உழைத்தாவது  கொடுக்கட்டும் 

வீட்டுக்கு உழைத்துக்கொடுக்கும் பொறுப்புள்ளதுகள் இந்த வேலையெல்லாம் செய்யாதுகள். இராணுவத்தில் சேர்த்தால் கேட்கிறதுக்கு ஆளில்லை என்கிற எண்ணத்தில் பதவி கூடி இன்னும் எத்தனையோ செய்யுங்கள். இருந்தாலும் போடுற  போட்டில் பொறுப்பு  வந்தாலும் வரலாம்.

முதலில் ஆள் சேர்க்க விண்ணப்பம் கேட்கட்டும், இணைவதைப்பற்றி பிறகு யோசிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

மட்டு ரெஜிமென்ட், யாழ் ரெஜிமென்ட், வன்னி ரெஜிமென்ட் என்று மூன்று ரெஜிமெனட் உருவாக்கவேண்டியது தான். 😂😂

ஏன் அப்படி விரும்புகிறீர்கள் ?

அதனால் பயன் உண்டா ?

உங்களுடையது சீண்டல் கருத்து என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் வேலைவாய்பு ஏற்படுத்த வேண்டுமேனில் ராணுவ வேலையைவிட எத்தனையோ வேலைகளை உருவாக்கலாம் உதாரணத்திற்கு;

1: அரசாங்க கட்டுமான ஒப்பந்தங்களை தெற்கு நிறுவனங்களுக்கு கொடுக்கும் பொழுது உள்ளூர் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கலாம் ( வளர்ந்த நாடுகளில் இது ஒரு criteria )

2: உள்ளூர் உற்பத்தி ( பனம் சாராயம், தோலகட்டி wine, றால், பனைசார்ந்த கைவினைப் பொருட்கள் ... etc...) ஏற்றுமதி சந்தையை உஊக்குவிக்கலாம்

3: உள்ளுர் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யலாம் ( வெங்காயம், புகையிலை... etc...)

இதனை விட்டு, ராணுவ பிரசின்னத்தை அதிகரிப்பது வடமாகாண பொருளாதரத்தை ஊக்குவிக்காது மாறாக தமிழ்மக்களிடையே பிரச்சனைகளையே ஏற்றபடுத்தும். சிங்களம் தள்ள நன்று வேடிக்கை பார்க்கும்

4 hours ago, பெருமாள் said:

ஏன் அப்படி விரும்புகிறீர்கள் ?

அதனால் பயன் உண்டா ?

உங்களுடையது சீண்டல் கருத்து என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

இது சீண்டல் பதிவு அல்ல. இப்போதைக்கு ஒரு ஜோக் மட்டுமே. இலங்கையில் தற்போதைய அரசியல் நிலையில்  இதற்கு சாத்தியம் இல்லை என்பது தெரியும். ஆனால் தமிழ்மக்கள்  எதிர்பார்ககும் உண்மையான கூட்டாட்சி உருவானால் அதாவது இரண்டு இனங்களும் பகைமையை மறந்து எதிர்காலத்தில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கினால் இது சாத்தியமான விடயமே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragaa said:

வடக்கு மாகாணத்தில் வேலைவாய்பு ஏற்படுத்த வேண்டுமேனில் ராணுவ வேலையைவிட எத்தனையோ வேலைகளை உருவாக்கலாம் உதாரணத்திற்கு;
 
1: அரசாங்க கட்டுமான ஒப்பந்தங்களை தெற்கு நிறுவனங்களுக்கு கொடுக்கும் பொழுது உள்ளூர் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கலாம் ( வளர்ந்த நாடுகளில் இது ஒரு criteria )

உள்ளூரில் இவ்வாறான கட்டுமான ஒப்பந்தங்களை செய்யக்கூடிய நிறுவனங்கள் இல்லாத காரணத்தால் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் எல்லாம் தெற்கிலே இருப்பவைகளாக உள்ளன. உள்ளூர் நிறுவனங்களை உருவாக்க என்ன செய்யலாம் என்றும் எழுதுவீர்களா? நிறுவனங்கள் உருவாகி அனுபவம் பெற்று ஒப்பந்தகளை செய்யும் அளவுக்கு வளர்ச்சிபெற பல ஆண்டுகள் எடுக்கும். ஆகவே இப்போதாவது ஆரம்பிக்கலாம் அல்லவா?

3 hours ago, ragaa said:

2: உள்ளூர் உற்பத்தி ( பனம் சாராயம், தோலகட்டி wine, றால், பனைசார்ந்த கைவினைப் பொருட்கள் ... etc...) ஏற்றுமதி சந்தையை உஊக்குவிக்கலாம்

எந்த நாடுகளுக்கு ஏற்றுதி செய்யலாம்? பிரான்சுக்கு தோலகட்டி வயினை ஏற்றுமதி செய்யும் செலவுக்கு கட்டுப்படியான விலையில் வயினை விற்கும் போது உலகப்புகழ் பெற்ற பிரஞ்சு வயின்களின் விலைகளிலும் பார்க்க கூடுதலான விலையாக இருக்கும், யார் வாங்குவார்கள்?

3 hours ago, ragaa said:

3: உள்ளுர் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யலாம் ( வெங்காயம், புகையிலை... etc...)

புகையிலை ... எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அரசாங்க அனுமதியுடன் கூடினவிலையில் புற்றுநோயை வேகமாக பரப்பலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

எந்த நாடுகளுக்கு ஏற்றுதி செய்யலாம்? பிரான்சுக்கு தோலகட்டி வயினை ஏற்றுமதி செய்யும் செலவுக்கு கட்டுப்படியான விலையில் வயினை விற்கும் போது உலகப்புகழ் பெற்ற பிரஞ்சு வயின்களின் விலைகளிலும் பார்க்க கூடுதலான விலையாக இருக்கும், யார் வாங்குவார்கள்?

நீங்கள் தான் பனை உற்பத்திக்கு நல்ல கேள்வியிருக்கு என்று சொன்னீர்கள், இப்ப இப்படி கேட்கின்றீர்கள்,

என் மனதிலும் ஆசையை விதைத்துவிட்டு. ஒருவரை இப்படி ஏமாற்றலாமா?😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

எந்த நாடுகளுக்கு ஏற்றுதி செய்யலாம்? பிரான்சுக்கு தோலகட்டி வயினை ஏற்றுமதி செய்யும் செலவுக்கு கட்டுப்படியான விலையில் வயினை விற்கும் போது உலகப்புகழ் பெற்ற பிரஞ்சு வயின்களின் விலைகளிலும் பார்க்க கூடுதலான விலையாக இருக்கும், யார் வாங்குவார்கள்?

லைசன்ஸ் மட்டும் எடுத்து தாங்கோ 
பாக்கியம் அக்காவை வைத்து ஜோனி வாக்கரையே கவுத்து காட்டுறம் 
எங்கடை போர்மியூலா ,Manufacturing cost  கிட்ட யாராலும் தாக்கு பிடிக்க முடியாது.
Marketing campaigns இற்கு மட்டும் கொஞ்சம் பசை தேவைப்படும் , அப்புறம் என்ன ஒரே பாட்டில் கோடிஸ்வரன் தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.