Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் மற்றும் வினோத் என ழைக்கப்படும் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு தலா 1லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/154911

  • Replies 133
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் பிணையில் விடுதலை

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போதே அவர் பிணையில் விடுதலை செய்யப்படதுடன் வழக்குடன் சம்பந்தப்படட ஏனைய ஐவரும் தலா இரு சரீரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் குறித்த வழக்குதொடர்பான வழக்கு டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, nunavilan said:

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

இரண்டு கிழமைக்கு முதல், கொரோனாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்று சொன்னவர். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

கரை புரண்டோடப்போகின்றது பிள்ளையான் & CO வின் வங்கி கணக்குகளில்😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு கிழமைக்கு முதல், கொரோனாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்று சொன்னவர். 🙂

பிள்ளையாருக்கு  இருக்கிற கூத்து காணாதெண்டு கொரோனா கூத்து வேறை.....:cool:

20 minutes ago, உடையார் said:

கரை புரண்டோடப்போகின்றது பிள்ளையான் & CO வின் வங்கி கணக்குகளில்😎

எண்டாலும் கருணாவின்ரை லெவலுக்கு வரமாட்டார்...😛

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

அது ஒரு சரித்திரம் ;
இது ஒரு சகாப்தம் ;..👍

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

இங்கே கேள்வி இவரது விடுதலை நியாயமானதா? சட்டத்துக்கு உடன்பாடானதா? என்பது தான்???

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

இங்கே கேள்வி இவரது விடுதலை நியாயமானதா? சட்டத்துக்கு உடன்பாடானதா? என்பது தான்???

இல்லை என்றால் என்ன செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இங்கே கேள்வி இவரது விடுதலை நியாயமானதா? சட்டத்துக்கு உடன்பாடானதா? என்பது தான்???

அதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். 

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார் சாட்சிகளை வரும் 8ம் திகதி முன்னிலைப்படுத்தி நிருபிக்க வேண்டும் இல்லையேல் கேஸ் தள்ளுபடி  

தீர்ப்பு வழங்கியிருப்பது நீதிபதிகள் சட்டம் படித்து குடித்தவர்களே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் நான் , பிள்ளையான் , கர்ணா என்பவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் நானும் ஓர் ஒட்டுக்குழு என நினைத்தால் நினைப்பவர்களுக்கு  எதுவும் செய்ய முடியாது இருக்கின்ற (இங்கு) ஏதாவது நன்மை கிடைத்தாலும் ஏன் ஓர் கங்கூஸ் கிடைத்தாலும் சந்தோசமே ஏனென்றார் ஓர் பெண் கழிப்பறை இல்லாமல் காட்டுக்க போவதால் பூச்சி , யானை அடித்த சம்பவங்கள் , துரத்திய சம்பவங்களும் உண்டு . பலர் நினைக்கலாம் ஒரு கக்கூசிக்கா என இல்லாதவனுக்குதான் அதன் அருமை தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

45 minutes ago, நந்தன் said:

இல்லை என்றால் என்ன செய்யலாம்

இல்லையென்றால் இதில்  மெச்ச  எதுவுமில்லையே??

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் நல்லவர் வல்லவர் ஆகிட்டார். கொம்மான் நல்லவர் வல்லவர் ஆகிட்டார். அப்படியே கோத்தா மகிந்த நல்லவர்கள் வல்லவர்கள்.

இறந்தது.. இழந்தது எல்லாம்.. கொடியது கெட்டது.

எப்படி எல்லாம் தமிழன் மூளை பச்சோந்தித்தனமா சிந்திக்கும் என்பதற்கு இந்த தலைப்பு நல்ல உதாரணம்.

இதனால் தான் சொந்த வரலாறிழந்து.. வாழ்விழந்து.. நாடிழந்து உலகம் பூராவும் தமிழன் அடிமையாகவே வாழ்கிறான்.

ஒரு பக்கம்.. இறந்த போன மாவீரர்களுக்கு மக்களுக்கு அஞ்சலி செய்ய முன்கூட்டிய தடை. வாழும் கொலைகாரர்களுக்கு பிணை. சொறீலங்கா நீதித்துறை எவ்வளவு அரசியல்படுத்தப்பட்டு சாக்கடையாகக் கிடக்கு என்பதற்கு இதுவும் நல்ல உதாரணம்.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். 

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார் சாட்சிகளை வரும் 8ம் திகதி முன்னிலைப்படுத்தி நிருபிக்க வேண்டும் இல்லையேல் கேஸ் தள்ளுபடி  

தீர்ப்பு வழங்கியிருப்பது நீதிபதிகள் சட்டம் படித்து குடித்தவர்களே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் நான் , பிள்ளையான் , கர்ணா என்பவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் நானும் ஓர் ஒட்டுக்குழு என நினைத்தால் நினைப்பவர்களுக்கு  எதுவும் செய்ய முடியாது இருக்கின்ற (இங்கு) ஏதாவது நன்மை கிடைத்தாலும் ஏன் ஓர் கங்கூஸ் கிடைத்தாலும் சந்தோசமே ஏனென்றார் ஓர் பெண் கழிப்பறை இல்லாமல் காட்டுக்க போவதால் பூச்சி , யானை அடித்த சம்பவங்கள் , துரத்திய சம்பவங்களும் உண்டு . பலர் நினைக்கலாம் ஒரு கக்கூசிக்கா என இல்லாதவனுக்குதான் அதன் அருமை தெரியும்

ஒரு பெண்ணின் கக்கூசுக்காக. பிள்ளையான் நல்லவர். பல பெண்களின் விதவைக் கோலத்துக்கு காரணமான அதே பிள்ளையானும் நல்லவரிலும் நல்லவர். உலகம் எப்படி எல்லாம் மாற்றி யோசிக்கும்....

நினைச்சால் தலை சுத்துது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது ? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியும் என்றால் எந்தவித சாட்சியும் இல்லாது வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எமது தமிழ் இளைஞர்களை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று அரசாங்கம் கூறுவது என்னவென்றால் அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை முன்வைக்கின்றனர். 

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்கு பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தவர்களுக்கு பிணை வழங்க முடியாது என அரசாங்கதினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். 

பயங்கரவாத தடை சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துகொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா. இது வெறுமனே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசாங்கத்தை ஆதரித்த காரணத்தினால் தான் பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என்றார். 

பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது ? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன் - பிணையில் வெளிவந்த பிள்ளையான்

மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139266/DSC00301.JPG

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கடந்த ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் அவரது சாகாக்களும் இன்று செவ்வாய்கிழமை (24) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு தனது விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 

என்னுடைய வழக்கு திட்டமிட்ட ஒரு பழிவாங்கல் அதை இன்றுதான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்கனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி என்னை நம்பி நான் வெளியில்வர வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

குறித்த வழக்கில் இன்று செவ்வாய்கிழமை ஆஜராகிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பற்றி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139267/DSC00275.JPG

உங்களுக்கு சுமந்திரன் யார் எனத் தெரியும் அவர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், நான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு கிடைத்த வாக்குகள் என்ன? எனக்கு கிடைத்த வாக்குகள் என்ன? அவருடைய வாதம் என்னவென்றால் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆகவே அவரை வெளியில் விடக்கூடாது என்பது.

அப்படியாயின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளும் விடுதலை செய்யப்படாத ஒரு நிலையே உருவாகும். ஆகவே அவரது வாதத்தை வேடிக்கையான ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன் - பிணையில் வெளிவந்த பிள்ளையான்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

அவர்களுக்கு வேண்டுமென்றால் எதுவும் நடக்கலாம், வேண்டாம் என்றாலும் கடத்தி எதுவும் நடக்காதது போலவும் செய்யலாம். எல்லாமே அவர்கள் கையில்.  பிள்ளையான் அவர்களுக்காக கூலி வேலை செய்தும், இவ்வளவு காலம் சிறையில் இருந்ததே ஒர வஞ்சகம். அடிமை உரிமைக்கு குடிமகனாக முடியாது என்பதற்கு இவர் இப்போதைய உதாரணம்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு நிரபராதி விடுதலையானமாதிரி இடும் தலையங்கமும் குதூகலிப்பதும் தாங்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். 

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார் சாட்சிகளை வரும் 8ம் திகதி முன்னிலைப்படுத்தி நிருபிக்க வேண்டும் இல்லையேல் கேஸ் தள்ளுபடி  

தீர்ப்பு வழங்கியிருப்பது நீதிபதிகள் சட்டம் படித்து குடித்தவர்களே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்

ஆகவே இதற்குள் எந்தவொரு அரசியல் பின்ணணிகளும் எவ்வித உந்துசக்திகளும் இல்லையென அறுதியிட்டு கூறுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

அப்படி யாரும் உங்கள் கருத்தை மறுதலித்ததாக தெரியவில்லை இருந்தாலும் நாட்டின் காட்டுச் சட்டத்தை அறியாத விடலைகள் யாரும் கூறியிருக்கலாம் அதை விடுங்கள்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார்

சுமந்திரன் வாதாடியது யாருக்காக?

15 hours ago, MEERA said:

இது தொடர்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு தலா 1லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/154911

இனி இவர்தான் பிள்ளையானுக்கு அடுத்த நிலையில் வர இருக்கிறவர். கொலையாளி பிரசாந்தன் வெளியே (இப்போது உள்ளே)

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையாளியை விடுதலை செய்ய வீதியில் குதித்த மக்கள் -  Jvpnews

சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகிய... 
யோசேப் பரராஜசிங்கம் அவர்களை, தேவாலயத்தில் வைத்து... 
நத்தார் ஆராதனையில்  கலந்து கொண்டிருக்கும் போது... 
கொலை செய்த, குற்றச் சாட்டில்தான்.. பிள்ளையான் சிறைக்கு சென்றவர்.

இப்போ... அவர் பிணையில் வந்திருப்பதைப் பார்க்க,
கொலையாளி... தப்பி விடுவார் என்றே தோன்றுகின்றது.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

அபாரம் தோழர்.. 👌 கத்தி , கடப்பாரை வாயில் காவி வரும்படி செய்திருந்தால் இன்னும் அருமை..👍

  • கருத்துக்கள உறவுகள்

20A திருத்தச்சட்டம் நடை முறையில்: ஆரம்பித்தது தனிமனித சர்வாதிகாரம்

இலங்கை முழுவதும் வரலாறு காணாத சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் நுளைந்துகொண்டிருக்கிறது. பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பிள்ளையானைப் போன்றே போதைப் பொருள் கடத்தலில் கைதான கருணாவின் சகபாடி இனியபாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக லஞ்சம் வழங்கிய லலித் வீரதுங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

20A ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி உட்பட அரச அதிகாரிகளை நியமிக்கும் உரிமை இலங்கையின் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

spacer.png

உள்துறை அமைச்சு, தொழில் நுட்பத் துறை அமைச்சு, தொழில்துறை மற்றும் திறன் மேம்படுத்தல் அமைச்சு, வர்த்தக அமைச்சு போன்றன ஒரு தனிமனிதனின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

20A திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்த மறு நாளே அதன் நடைமுறைகளை அரசு ஆரம்பித்துவிட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசு அதிகாரம் இன ஒடுக்குமுறையைப் பயன்படுத்தியே சர்வாதிகார அரச கட்டமைப்பாக மாற்றம்பெற்றது. இலங்கையில் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான முழக்கத்தை முன்வைக்காத எந்த அரசும் அரசியல் இயக்கமும் குறைந்தபட்ச சனநாயகத்தைக்கூட மீளமைக்க முடியாது என்பது மட்டுமன்றி, ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியை மிக நீண்ட காலத்திற்கு அழிக்க முடியது.

http://inioru.com/20a-amendment-in-operation/

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியும் எனதே.

13 hours ago, பிழம்பு said:

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று அரசாங்கம் கூறுவது என்னவென்றால் அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை முன்வைக்கின்றனர். 

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்கு பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பதிலும் எனதே.

13 hours ago, பிழம்பு said:

அரசாங்கத்தை ஆதரித்த காரணத்தினால் தான் பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என்றார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.