Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

Screenshot-2020-12-25-21-46-15-704-com-a 

மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

காயப்படுத்தப்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே காணப்படுகின்றதுடன்இ இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் எச்சங்கள் அப்பகுதியெங்கும் சிதறிக் காணப்படுகின்றது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகளின் இவ் அட்டுழியத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://aruvi.com/article/tam/2020/12/25/20818/

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் முரண்படக்கூடாது. மாடுகள் தானே??

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குக் கருத்தெழுதப்போய், இரதி அக்கா வந்து வன்னியில, நாவற்குழியில நடக்கிற பிரச்சனையத் தீர்க்க வழி இல்ல. இஞ்ச வந்துட்டானுகள் என்று கூற.... ஏன் பிரச்சின.. 

பேசாம வாய மூடிகொண்டே இருப்போம்.  எதுக்கு வீண் பொல்லாப்பு... ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணையத்தின் செய்திகள் அனைத்தும் கிழக்கு அரசியல் எதிர்ப்பாக இருப்பதால், இந்த சம்பவங்கள் உண்மையா என்று தனி உறுதி செய்யும் வரை எதுவும் சொல்ல முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் கொதி நிலையில் எமது பிரச்சனைகளை வைத்திருக்கவே விரும்பிகிருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

Screenshot-2020-12-25-21-46-15-704-com-a 

மனித உருவில் பிறந்த சில மிருகங்களின் செயல்பாடுகளுக்கும் சாட்சியம் தேடும் நிலை.

பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகள் மைலத்தமடுவில் கால்நடைகளை காயப்படுத்தியும் கொன்றும் அட்டகாசம்.!

சிங்களவர்களின் அட்டகாசம் என்பதால் நான் இந்த செய்தியை நான் நம்பமாட்டேன். தகவல் தந்த ஊடகமும் நம்பிக்கைக்கு உரியதல்ல.
நான் ரூபவாகினி சொன்னால்த்தான் நம்புவன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிவெள்ளிகளான முரளிதரனும், சந்திரகாந்தனும் இந்தப்பிரச்சனையை வெட்டியாடுவினம் பொறுத்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

கிழக்கின் விடிவெள்ளிகளான முரளிதரனும், சந்திரகாந்தனும் இந்தப்பிரச்சனையை வெட்டியாடுவினம் பொறுத்திருங்கள்!

சிங்கள இனவாதிகளுக்குப் பினாமிகளாக இருப்பவர்களால், சிங்கள ஆக்கிரமிப்பினை எப்படித் தடுப்பது என்று நீங்கள் விளங்கப்படுத்துவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் விளங்கப்படுத்துவதற்கு ஒன்றுமில்லை, கடந்த கால அனுபவம். ஆனால் செல்வத்துக்கு சந்திரகாந்தன் சவால் விட்டிருக்கிறார். தான் அரசாங்கத்தோடு முரண்படாமல் கடிதம் எழுதித் தீர்ப்பாராம்.   உள்ளதும் பறிபோனபின் வேறொருவரை குற்றம் கூறிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் அவ்வளவே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகள் வேட்டை.!! 

வெள்ளி டிசம்பர் 25, 2020

Screenshot-2020-12-26-11-03-02-052-org-m 

மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நடைகள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

காயப்படுத்தப்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே காணப்படுகின்றதுடன்இ இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் எச்சங்கள் அப்பகுதியெங்கும் சிதறிக் காணப்படுகின்றது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகளின் இவ் அட்டுழியத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://sankathi24.com/news/cainakala-kautaiyaeraravaacaikalaala-tamaila-makakalaina-kaalanataaikala-vaetataai

டிஸ்கி: 

நான் கூட இந்த செய்திக்கு வேறு மூலம் இல்லையோ(?) என்று கவலைபட்டனன் ; 😢 யாழ்தள கறுப்பு பட்டியலை சரிபார்த்து உப மூலம் இணைக்கபட்டது ..👍

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

சிங்களவர்களும்  மாட்டிறைச்சி சாப்பிட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
எப்படி இறைச்சிக்காக ....? சந்திரக்காந்தனிடமும் வியாளனிடமும் கருணாவிடமும் கேட்பதை போன்று 
ஏற்கனவே மாட்டிற்கு பின்னுக்கு திரிந்த மறவன்புலவு சச்சியிடமும் கேட்கலாம், மாட்டு விவகாரம் என்பதால் 
அவரிடம் தான் சரியான தீர்வை பெற்றுத்தரும் கெத்து இருக்கிறது 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்களவர்களும்  மாட்டிறைச்சி சாப்பிட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
எப்படி இறைச்சிக்காக ....? சந்திரக்காந்தனிடமும் வியாளனிடமும் கருணாவிடமும் கேட்பதை போன்று 
ஏற்கனவே மாட்டிற்கு பின்னுக்கு திரிந்த மறவன்புலவு சச்சியிடமும் கேட்கலாம், மாட்டு விவகாரம் என்பதால் 
அவரிடம் தான் சரியான தீர்வை பெற்றுத்தரும் கெத்து இருக்கிறது 

வெறி சாறி.... அக்கினி., அவர் தலையிட மாட்டார். ரதி அக்கா வடக்கு பிர்சனையை முதலில் பார் என்பார்... எது வீண் வம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கூடிய படு ஈனச் செயல்களால் தான் கடந்த காலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகின.

மீண்டும்.. பழதை மறந்து ஆடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

இந்த இணையத்தின் செய்திகள் அனைத்தும் கிழக்கு அரசியல் எதிர்ப்பாக இருப்பதால், இந்த சம்பவங்கள் உண்மையா என்று தனி உறுதி செய்யும் வரை எதுவும் சொல்ல முடியாது!

இன்னும் சரியான தகவல்கள் இல்லை காரணம் அதிக வெள்ளம் சில பகுதிகள் தொடர்பில்லாமல் இருக்கிறது இன்று மீண்டும் மழை  பெய்கிறது 

வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார்கள் மயிலத்த மடு மேய்ச்சல் தரை பற்றி ஆனால் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சரியான தகவல்கள் இல்லை காரணம் அதிக வெள்ளம் சில பகுதிகள் தொடர்பில்லாமல் இருக்கிறது இன்று மீண்டும் மழை  பெய்கிறது 

வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார்கள் மயிலத்த மடு மேய்ச்சல் தரை பற்றி ஆனால் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை 

அவசரமில்லை, ஆனால் முடியும் போது விபரம் கேட்டு போட்டுவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவசரமில்லை, ஆனால் முடியும் போது விபரம் கேட்டு போட்டுவிடுங்கள். 

மேய்ச்சல் தரையில் அரசியலும் ஒளிந்திருக்கிறது . சுமந்திர(ம்)ன் ,சாணாக்கியர் , ஜனா எல்லோரும் வந்து குத்தி முறிச்சு வழக்கு தொடரப்போவதாக சொன்னார்கள் ஆனால் நடந்தபாடில்லை. 

எப்போதே நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது முண்டு கொடுத்தவர்கள் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினை இப்ப குத்துது குடையுது என்று சொல்கிறார்கள் 

விபரம் கேட்டிருக்கிறேன் ஆனால் அதையும் மாறி அரசியல் செய்வார்களாம் என்று சில விடயங்களை சொல்ல மறுக்கிறார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்  வாக்கு தொடரப்படும் வரை 

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: மயிலத்தனை மேய்ச்சல் நிலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையை நீங்கள் எவ்வாறு கையாளுகின்றீர்கள் ?

பதில்: நானும் ஆட்சியாளர்களின் பங்குதாரி என்றவகையில் இப்பிரச்சனையை அணுகமுடிந்த போதும் அரசுடன் இணைந்த கடும் போக்கு அரசியல் வாதிகள் இது ஒரு பௌத்த நாடு, இங்கு மாடுகள் வதைப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதனை “மாட்டிறைச்சி அரசியல்” எனறும் பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க கிழக்குமாகணத்தை பொறுத்தவரை காலம் காலமாக மாடுவளர்ப்பும், பண்ணை முறையும் இதன்வழி போடிமார் செல்வாக்கு போன்ற அம்சங்கள் கொண்ட நீண்ட வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட துறையாகும். இருப்பினும் தற்போது உத்தியோகப்பற்றற்ற கணக்கெடுப்பின் மூலம் சுமார் 500000 ற்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கும் நிலையில் 100000 மாடுகள் வரையே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையானது அரசாங்கம் இதனை சரியான முறையில் திட்டமிடுதலில் பாரிய சவாலை உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் சுய உற்பத்தி துறையை அதிகரிக்கும் கொள்கை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தி;ற்கு சொந்தமான காணியினை பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் என்ற அடிப்படையில் கபளிகரம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஆயினும் மாகாவலி அதிகார சபைக்கு ஒதுக்கிய இந்த மட்டகளப்பு மாவட்ட காணியாது மேச்சல் தரை என்பது யதார்த்தமானது. ஆகவே மாடுகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் அவற்றுக்கு தேவையான மேச்சல் தரையினை மாவட்ட எல்லை நிர்வாகத்துடன் தீர்த்து சட்டரீதியாக பாதுகாப்பான மாடு வளர்ப்பினையும் பண்ணையாளார்களையும் பாதுகாப்பதென்பதில் திடசங்கட்பம் பூண்டு உள்ளேன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனை கிழக்கு மாகாணத்தில் உணர்வூட்டி அரசியல் செய்ய எத்தனிப்பதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியலை அஸ்தமிக்க செய்யும் ஒரு முயற்சியாகவே இதை காண்கின்றேன். ஏனெனில் வடகிழக்கு பிரிப்பு அதியுயர் பாதுகாப்பு வலயம் அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றில் காட்டியிருக்க வேண்டிய சட்ட நடவடிக்கை வேகத்தை மேச்சல் தரை விவகாரத்தில் காட்டியிருப்பது நீதிமன்ற நடவடிக்கை மூலம் இழுத்தடித்து அதனை தமது அரசியலுக்கான பகடையாக உபயோகிக்கவே எனவே இவ்வகையான விடயங்களை தவிர்த்து மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்குவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறையல் தீர்வினை நான் எமது மக்களுக்கு பெற்று கொடுப்பேன் என்பதில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கின்றேன்.

http://www.battinews.com/2020/12/pillayan-interview.html?fbclid=IwAR3CoSlOV_JvfAsp5xwl3Va8Vmef8Jp5Pe1brxtyReOZ-kw-SUT9LJxaelo
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆரு இது நம்மட வாத்தியா? கூட்டமைப்பை குறை கூறுவதை விட்டுத்து, தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்த காணிகளை காப்பாற்றவேண்டும்.

இதைதான் தன்னால் செய்யகூடியதாக இருக்கும் என்றுதான் தேர்தல் நேரம் சொன்னவர் இல்லையா?

வழக்கெல்லாம் கூட்டமைப்பின் வேலை, இவர் மினிஸ்டர் - செல்வாக்கை காட்டவேண்டும்.

காட்டலாம், காட்டுவேன் என்றுதான் சொன்னார். 

இந்த செல்வாக்குத்தான் அபிவிருத்தி அரசியலின் அடிப்படையும் கூட.

இல்லாவிட்டால் கூட்டமைப்பு ரணிலுக்கு முட்டு, இவர்கள் மகிந்தவுக்கு முட்டு. 

என்பதே உண்மையாகும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கால்நடை உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கால்நடைகளை பொதுக்காணிகளில் மேச்சலுக்கு விட்டு ஆனால் கால்நடைகளிடமிருந்து எந்தவித உழைப்புமின்றி வருவாயீட்டி வந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றவர்கள்நிலையையும் சிந்திக்கவேண்டும் இதுவே உங்கள் விளைநிலத்தில் கால்நடைகள் வந்து நாசம் செய்தால் அனுமதிப்பீர்களா? அவர்கள் செய்த ஒரு பிழை கால்நடைகளை அடித்து விர்ட்டினால் மீண்டும் திரும்ப வரா என்பதால், ஆனால் அவைகள் பாவம் வாயில்லாப்பிராணிகள் அவற்றிற்கு அடிப்பதற்குப்பதிலாக அவர்களது உரிமையாளர்களுக்கு அடித்திருக்கவேண்டும் என்று கூறவில்லை அவர்களுடன் பேசி சுமுகமாகப்பிரச்சனையைத்தீர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்தும் மிருகங்கள். மீண்டும் தமிழரையும், அவர்கள் பொருளாதாரத்தையும், சொத்துக்களையும் குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீக காணிகள், உடமைகளை பறித்தெடுத்து, அவர்களை விரட்டியடிக்கும்போது அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

16 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்களவர்களும்  மாட்டிறைச்சி சாப்பிட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்

  அது அரசியல். ஆனால் மனிதரையும், விலங்குகளையும் வதைப்பார்கள், கொல்வார்கள். அதுதான் வீரம் என்று ரசிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

கால்நடை உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கால்நடைகளை பொதுக்காணிகளில் மேச்சலுக்கு விட்டு ஆனால் கால்நடைகளிடமிருந்து எந்தவித உழைப்புமின்றி வருவாயீட்டி வந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றவர்கள்நிலையையும் சிந்திக்கவேண்டும் இதுவே உங்கள் விளைநிலத்தில் கால்நடைகள் வந்து நாசம் செய்தால் அனுமதிப்பீர்களா? அவர்கள் செய்த ஒரு பிழை கால்நடைகளை அடித்து விர்ட்டினால் மீண்டும் திரும்ப வரா என்பதால், ஆனால் அவைகள் பாவம் வாயில்லாப்பிராணிகள் அவற்றிற்கு அடிப்பதற்குப்பதிலாக அவர்களது உரிமையாளர்களுக்கு அடித்திருக்கவேண்டும் என்று கூறவில்லை அவர்களுடன் பேசி சுமுகமாகப்பிரச்சனையைத்தீர்த்திருக்கலாம்.

பொதுக் காணியில் பயிர் செய்யலாம்(உங்கள் கருத்துப்படி)  ஆனால் கால்நடைகள்தான் மேச்சலுக்கு வரக்கூடாதா... 🤥

ஆஆஆஆ........... 😫😫😫😫

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனை பேசி தீர்க்காமல் அரசியலுக்காய் பூதாகாரமாக்குகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2020 at 12:34, சுவைப்பிரியன் said:

எப்பவும் கொதி நிலையில் எமது பிரச்சனைகளை வைத்திருக்கவே விரும்பிகிருகிறார்கள்.

“மக்கள் போர்குணத்தை இழந்துவிட்டால் விடுதலைக்கு பங்களிக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.” கோட்டை அமைதியாகி விட்டால் அதற்கு ஷெல் அடித்து மீண்டும் மக்களை நோக்கி ஷெல் தாக்குதலை வரவழைப்பது பற்றி அந்த நாட்களில் தரப்பட்ட விளக்கம் இது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களை உறவினர்களே அழைத்து சென்று இயக்கங்களிடம் கையளிக்க இந்த கொதிநிலை உதவியது. மீண்டும் தொடருகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

“மக்கள் போர்குணத்தை இழந்துவிட்டால் விடுதலைக்கு பங்களிக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.” கோட்டை அமைதியாகி விட்டால் அதற்கு ஷெல் அடித்து மீண்டும் மக்களை நோக்கி ஷெல் தாக்குதலை வரவழைப்பது பற்றி அந்த நாட்களில் தரப்பட்ட விளக்கம் இது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களை உறவினர்களே அழைத்து சென்று இயக்கங்களிடம் கையளிக்க இந்த கொதிநிலை உதவியது. மீண்டும் தொடருகிறதா?

நல்ல கற்பனை வளம்  உள்ளவர் நீங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.