Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தி 1981ம் ஆண்டு தொடக்கம் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து இந் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன் போது பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை,மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பி.கிருஸ்ணகுமார், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு.அருட்செல்வம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://ibctamil.com/article/eastern-province-memorial-1624087398

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல்  நிகழ்வுகளில் மக்கள்  கலந்து  கொள்ள அனுமதிக்கப்படுவதில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

நினைவேந்தல்  நிகழ்வுகளில் மக்கள்  கலந்து  கொள்ள அனுமதிக்கப்படுவதில்லையா??

பிரான்ஸில் இவர்களை நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் மனதில் நின்றாடும் சம்பவம்.. யாழ் பரியோவான் கல்லூரி மாணவன் அறிவை கொன்றுவிட்டு யாழ் அரசடிச் சந்தியில் வெள்ளைவானில் இருந்து தள்ளிவிட்டு போன இந்தக் கூட்டம்.. அன்று அந்த காலைவேளையில் தனியார் வகுப்புக்குப் போய் கொண்டிருந்த எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி வெருட்டிவிட்டுப் போன நிகழ்வுகள்... 

இவங்கள் எல்லாம் யாருக்கு தியாகிகள்..????!

அடிப்படை மனிதப் பண்பை இழந்து சொந்த மக்களையே காட்டிக்கொடுத்து காவுகொண்ட கூட்டம். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டுழீயங்களுக்கும், கட்டாயமாக இளைஞர்கள், சிறுவர்களைப் பிடித்து மொட்டை அடித்தும், இமை மயிர்களைக் கூட மழித்தும் TNA (தமிழ் தேசிய இராணுவம்) என்று படை கட்டியவர்கள்.  அந்த அராஜகங்களுக்கு எல்லாம் எப்போதாவது மன்னிப்பு கேட்டதாக நினைவு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கற்பகதரு said:

பிரான்ஸில் இவர்களை நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

நடக்கலாம் நான் கலந்து கொள்வதில்லை. மன்னிக்கவும்

அழிக்க உதவி விட்டு இரங்கல் செய்யும் ஆள் நான் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

87-89 வட கிழக்கில் இவர்களின் அராஜகத்துக்குள் வாழ்ந்த யாரும் இவர்களை நல்லவகையில் நினைவுகூரல் செய்யார்கள்.
ஆனால் கொல்லப்பட்டவர்களும் இப்போ இல்லை, கொன்றவர்களும் இல்லை. இதில் தப்பிய ஒரே ஒருவர் எனப்படுபவரும் பின்னர் கொன்றவர்களால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டுவிட்டார்.

30 வருடத்தின் பின் இரெண்டு பகுதியின் வால்களும் பொது வெளியில் பழைய ரணங்களை கிண்டுவதில் ஒரு பலனும் இல்லை.

Time to reconcile, time to move on. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டுழீயங்களுக்கும், கட்டாயமாக இளைஞர்கள், சிறுவர்களைப் பிடித்து மொட்டை அடித்தும், இமை மயிர்களைக் கூட மழித்தும் TNA (தமிழ் தேசிய இராணுவம்) என்று படை கட்டியவர்கள்.  அந்த அராஜகங்களுக்கு எல்லாம் எப்போதாவது மன்னிப்பு கேட்டதாக நினைவு இல்லை.

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

காலத்தின் கோலம் இந்த மண்டையனையும் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி கிளிநொச்சிவரை அழைத்து தலைவரும் சந்தித்திருந்தார்.

சொந்த இன மக்களை என்னமோ ஜென்மவிரோதிகள்போல் தேடி தேடி வேட்டையாடிவிட்டு இந்தியபடை திரும்பும்போது தாயக பகுதியெங்கும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொந்த மக்களின் உயிர்களை சுருட்டியது போதாதென்று உடமைகளையும்  சுருட்டிக்கொண்டு  ஓடி தப்பியவர்கள் பதிலுக்கு வேட்டையாடப்பட்டார்கள். அவ்வளவுதான் இவர்களுக்கு அஞ்சலியெல்லாம் கிடையாது.

 அந்நிய சக்திகளின் பிராந்திய ஆக்கிரமிப்பு போதைக்கு அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை வகை தொகையின்றி  படுகொலை செய்து அவர்களிடம் வாங்கி உண்ட சோற்றுகடன் தீர்த்தார்கள்.

காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சியின்போது ஒரு ஈபி போராளி இறந்ததாக ஞாபகம், ஈபிஆர் எல் எவ்.வில் அந்த ஒரேயொரு போராளிக்கு மட்டும் அஞ்சலிகள்.

கடல்கடந்துபோய் இந்திய மண்ணில் இவர்களை போட்டு தள்ளியது தவறு என்று ஒரு விமர்சனம் உண்டு, 

கடல்கடந்து வந்து சொந்தமக்களை கொன்று குவித்துவிட்டு மீண்டும் கடல்கடந்து ஓடி தப்பி இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தது தவறில்லையென்றால், கடல்கடந்துபோய் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும் தவறில்லை.

அது தவறு என்று வாதிட்டால், இங்கிலாந்திலிருந்து கடல் கடந்து வந்து இந்தியாவில் ஜூலியன்வாலா படுகொலைகளை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டயரை இங்கிலாந்துவரை தேடி சென்று இந்தியரான ஷாஹீத் உதம்சிங் அவரை கொன்று பழி தீர்த்ததும்  தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

அதே..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, valavan said:

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

நாங்கள் தவ்வல்களாக இருந்த காலம். புலிகள் என்று அச்சில் கூட வரமுடியாத அளவு தணிக்கைகள் நிலவிய காலம். எனினும் தினமும் செய்திகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இவர்களின் அசோகா ஹோட்டல் அராஜகங்கள் ஓரளவுதான் தெரிந்திருந்தன. இந்திய இராணுவத்தின் கொடுமைகளால், எனது நண்பனின் தமையனை கோப்பாய் பகுதிக்கு பாதுகாப்பாக படிக்க அனுப்பியிருந்தனர். ஆனால் இவர்கள் பிடித்து தலைக்கு மொட்டையும் அடித்து இமை மயிர்களையும் மழித்து வைத்திருந்தனர். பெற்றோர், பலரின் கையைக் காலைப்பிடித்து நண்பனின் தமையனை மீட்டிருந்தனர். 

வடமராட்சிப் பகுதியில் இவர்களின் அட்டகாசங்கள் அதிகம் இருக்கவில்லை. எனினும் முக்கிய இடங்களில் ஆள்காட்டிகளாகவும், தலையாட்டிகளாகவும் இருந்தனர். இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களை எல்லாம் உச்சிக்கொண்டிருந்ததால், அவர்களிடம் அடி வாங்கியதில்லை. ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இடமும் ஒருமுறை அகப்பட்டு திமிர்க்கதை (அரசியல்தான்) கதைத்து முட்டுக்காலில் வெயிலுக்குள் பலமணி நேரம் நின்றதும்,  ரெலோவிடம் அகப்பட்டபோது நண்பன் ஒருவன் மட்டக்களப்பு சாயலில் கதைத்தற்காக (அவன் ஒன்றிரண்டு வருடங்கள் இருந்து படித்தான்), அவன் சேர்ட் கிழிந்துபோகுமளவிற்கு அடித்தார்கள்.  இப்படித்தான் இவர்களை நினைவில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். இவர்களின் இறப்பை நியாயப்படுத்தவும் இல்லை!

எண்பதுகளின் இறுதிகளில் EPRLF இனர் ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் மறக்கமுடியாதது. மனித குலத்துக்கு எதிரான படுபாதகங்களை புரிந்திருந்தனர். இன்று பத்மநாபா பற்றி பேசும் எஞ்சியுள்ள EPRLF இனர் அவர் ஏதோ சிந்தனைச் சிற்பி, மாபெரும் போராளி, சமூக விடுதலையாளர் போன்ற ரேஞ்சில் பேசித் தள்ளுவதுதான் காலத்தின் கொடுமை. மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. 

மக்களைப் பாதுக்காக்க என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இப்படி நடந்தது கேவலம். அராஜகமும் அட்டூழியமும் பெரும் அளவில் நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நேரில் கண்ட சம்பவம்:  கண்டி தெருவில் வசிக்கும் ஒரு மத்திய தர வர்க்க மனிதன். தமிழரசு, கூட்டணி என யார் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களின் பக்கம் நிற்கும் சாதாரண புகையிரத ஊழியர். அந்த வகையில் இயக்கங்கள் உருவெடுத்த போது தனது பரிபூரண ஆதரவை (பணமாகவோ, எதுவாகவோ) கொடுக்க தயங்கவில்லை. இறுதியில் மூத்த மகன் புலிகளில்  இணைகிறார். எந்த இயக்கம் உதவி கேட்டாலும் உதவி செய்ய தயங்காதவர். அது எந்த சின்ன இயக்கமாக இருந்தாலும் சரி.
மகன் புலியில் இணைந்ததற்காக அவருக்கான பரிசு கண்டி வீதியின் நடுவில்  வீட்டில் இருந்து அடித்து இழுத்து வரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டார் இந்த ஈபிஆர் எல் எவ் காடைகளால். 
சில வேளை கந்தன் கருணை பிழை எனும் போதும் கூட இந்த கொலையை புலிகள் செய்ய காரணிகள் இருந்தாகவே நினைக்கிறேன்.
தாமும் நினைக்க முடியாத தவறுகளை இழைத்து விட்டு புலிகள் தம்மை அழித்து விட்டார்கள் என்பது எவ்வகையில் நியாயம் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது.

என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். 

இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர்.

புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள். 

விடுதலைக்காக புறப்பட்ட ஆயுத இயக்க தலைமைகள்  ஒவ்வொன்றும் திசை மாறி தமக்குள் பகையுணர்வையும் வெறுப்பையும் வளர்தது பழிவாங்க புறப்பட்டு தம்மை நம்பிவந்த சொந்த இயக்க இளைஞர்களையும்  சக இயக்க  இளைஞர்களையும்  வேட்டையாடி இறுதியில் அதன் விளைவாக  நம்பிய  மக்களுக்கு பேரழிவை உண்டாக்கி தாமும் அழிந்த பிறகும், அத்தவறுகளை பற்றி வெளிப்படையாகவும் இயக்க சார்பின்றி பொதுவாகவும் உணமைகளை  உரையாட விரும்பாமல்,  இங்கு அவரவர் தத்ததமது  தலைமை விசுவாசத்தை காட்டுவதற்காக,  1986 ம் ஆண்டில் ஆரம்பித்து பின்னர் சொந்த இன இயக்கங்களாலேயே இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட அத்தனை இளைஞர்களின்/ பொதுமக்களின்   படுகொலைகளுக்கு ஏதோ தம்மளவில் சப்பைக்கட்டு  காரணம் காட்டி வக்காலத்து வாங்குவதைப்  போலவே சிங்கள பேரினவாதமும்  உலக நாடுகளும்  எமது மக்களின் இறுதிப்  படுகொலைகளுக்கும்  இதைப் போலவே ஏதேனும் காரணங்களை காட்டி தப்பிக்கொள்ளும். ஏனெனில் எம்மை போலவே ஒரு தலைப்பட்ச சுயநலமனிதர்கள் தானே அவர்களும். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பாத்தேன் ஆளை இன்னும் காணேல்லையே என்று. வந்திட்டார்! இனி களம் சூடு பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2021 at 22:58, விளங்க நினைப்பவன் said:

மக்களைப் பாதுக்காக்க என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இப்படி நடந்தது கேவலம். அராஜகமும் அட்டூழியமும் பெரும் அளவில் நடந்துள்ளது.

அந்தத் காலம் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபாவின் சிந்தனை என ஒரு வாக்கியம் அவர்களது வெளியீடுகளில் வந்தது. 

"மக்களில்லா மண்ணை நான் நேசிக்கவில்லை" 

இப்படி சிந்தனை கொண்ட ஒருவரின் தலைமையில் இந்திய இராணுவகாலம் நடந்த அனியாயங்கள் பார்த்து அறிந்து அனுபவித்த அனுபவங்கள் நிறைய.

 இவர்கள் மரணம் எந்த வருத்தத்தையும் தரவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கு என்ன ? இவர் மீது புலிகள் ஏன் கை வைக்கவில்லை ?

இந்தக் கொலைகள்-சுரேஸ் பிரேமச்சந்திரன்-புலிகள் : இவற்றிற்கிடையிலான தொடர்பு என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 22:20, ரஞ்சித் said:

ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது.

என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். 

இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர்.

புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள். 

கொழும்பில் இருந்து புகையிரத்தில் யாழ் வருகையில் சாவகச்சேரியில் சிலர் ஆயுதங்களுடன் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இளம் வயது பெடியலை இறக்கினார்கள், அதில் நானும் ஒருவன். TNA இக்கு ஆட்கள் சேர்ப்பதாக கதைக்க பட்டது. புகையிரதம் புறப்பட்ட நேரம் எங்கள் பக்கத்தில் ஒரு ஆயுத தாரியும் நிக்காததால் நாங்கள் 4, 5 பேர் புகையிரத்திற்குள் ஏறி கொண்டோம். ஒரு வழியாக வீட்டுக்கு வந்தது நிம்மதி என்றால் அடுத்த நாள் சுற்றி வளைப்பில் என்னை மட்டும் தலையாட்டி கையை காட்டினார். மற்றவர்கள் எல்லாம் போக என்னை மட்டும் கடற்கரையை  அண்டிய தென்னம் தோப்பிற்குள் இந்திய ராணுவமும் ஒட்டுக்குழுவினரும் அழைத்து சென்றனர். எனது மூத்த அண்ணர் (என்னை விட 10 வயது கூடியவர்) இவர் படிக்கிறார், புலிகளுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி பார்த்தும் அவர்கள் விடவில்லை. தூரத்தில் இன்னுமொரு ஆள் மக்கள் கூட்டத்தில் இருந்து எங்களை நோக்கி நடந்து வந்தார், அவர் சாந்தன் (இந்த இடத்தில இவரை நினைவு கூறுவது சால சிறந்தது). என்னுடன் 5ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்.  83இல் பல இளைஞர்கள் இயக்கங்களுக்கு போக இவரும் டெலோவில் சேர்ந்தார். புலிகள் டெலோவை தடை செய்யும் போது இவரை ஊருக்குள் மட்டும் இருக்க சொல்லி விட்டு விட்டார்கள். இந்தியன் ஆமி ஒட்டுக்குழுக்கள் இவரை கூப்பிட்டும் தான் இனிமேல் இயக்கங்களுக்கு வர மாட்டேன் என்று தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விட்டார். இவர்தான் அந்த கும்பல்களுடன் இருந்து என்னை காப்பாற்றியவர். எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை என்று கூறினார், அவர்களும் அவர் சொன்னதை நம்பினார்கள் . துரதிஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.
பிள்ளை பிடிகாரர்கள் தீவிரமாக இயங்கியதால் மயிலிட்டி வைத்தியசாலையில் பணியாற்றிய ஓன்று விட்ட அண்ணரின் உதவியுடன் அவரது அறையில் ஒழித்து இருந்து சிறி லங்கா ராணுவத்தின் விமானத்தில் 1000 ரூபாய் டிக்கெட் எடுத்து ரத்மலானை வந்து சேர்ந்தேன்.

ஆனையிறவு சோதனை சாவடியில் ஆசிரியைகள் ஒருவர் இருவர் தலையை சொரிஞ்சதால் தாக்கப்பட்டார்கள் என்று அறிந்தேன். காரணம் ஈரும்-பேனும் (EP). மறந்தும் தலையில் விரலை விட்டு நோண்ட கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, Kapithan said:

இந்தக் கொலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கு என்ன ? இவர் மீது புலிகள் ஏன் கை வைக்கவில்லை ?

இந்தக் கொலைகள்-சுரேஸ் பிரேமச்சந்திரன்-புலிகள் : இவற்றிற்கிடையிலான தொடர்பு என்ன ?

 இப்ப இப்படி கேட்பீர்கள் 
போட்டிருந்தால் .......புலிகள் சுட்டதாலேயே 
தியாகிகள் .... கல்விமான்கள் ... கவரிமான்கள் ஆக்கி இருப்பீர்கள் 

புலிகளின் ரவைக்கு அவ்வளவு மவுசு 
பட்டதும் உடனேயே மக்களுக்கு மாங்கு மாங்கு என்று உழைத்த 
சிந்தனை சிற்பிகள் தியாகிகள் ஆகிவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வேவுத்தகவலின் படி இவரும் நின்றிருக்க வேண்டும் என்றுதான் போனார்கள் 
இவர் அங்கு இருக்கவில்லை 

மாவை தப்பியதுபோல 
அமீர்தலிங்கத்தை சுட்ட போது அவர் மேலே மாடியில் நின்று இருந்தார் 
இவர்களுடன் சென்று வாசலில் நின்றவர் கொஞ்சம் நெர்வோசாக இருந்தார் 
அவரை பார்த்த அமீரின் போலீஸ் பாதுகாவலர் கொஞ்சம் சந்தேகப்பட தொடங்கிவிட்டார் 

இவர்கள் சுட தொடங்கியதுமே அந்த போலீஸ் காரர் அவரை சுட்டுவிட்டார் 
இவர்களின் முழு திட்டமும் அதோடு குளம்பிவிட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

பிறேம்சந்திரன் மேற்படி கொலை நடந்த போது வெளியில் உணவு வாங்க அனுப்பப்பட்டதாகவும் அதிஸ்டவசமாக உயிர்தப்பியதாகவும் செய்திகள் கூறின.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

 இப்ப இப்படி கேட்பீர்கள் 
போட்டிருந்தால் .......புலிகள் சுட்டதாலேயே 
தியாகிகள் .... கல்விமான்கள் ... கவரிமான்கள் ஆக்கி இருப்பீர்கள் 

புலிகளின் ரவைக்கு அவ்வளவு மவுசு 
பட்டதும் உடனேயே மக்களுக்கு மாங்கு மாங்கு என்று உழைத்த 
சிந்தனை சிற்பிகள் தியாகிகள் ஆகிவிடுவார்கள். 

அட விசயத்துக்கு வாங்கப்பூ..

இந்தக்கொலைகளில் இவருக்கும் பங்கு என்கிறது பட்சி..😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.