Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அங்கிய குழுவினர் மட்டும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

இதேவேளை, கொரோனா நிலைமைகள் அடுத்துவரும் காலத்தில் தீவிரமடையும் பட்சத்தில் இந்தப்பயணம் தள்ளிப்போகலாம் என்றும் அறிய முடிகின்றது. (நன்றி கேசரி)

https://athavannews.com/2021/1233083

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு

நூறு வருசத்துக்கு பிறகும் கூத்தமைப்பு  இதே  போக்குவரத்து வேலையைத்தான் செய்யும்.தமிழ்ச்சனத்துக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா மற்றும் வயிறு நன்றாக இருக்க வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்...போய்?

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு டெல்டா வைரஸை இலவசமாக இன்னும் இன்னும் இறக்குமதி செய்யவா.

டெல்லியின் இராஜதந்திரம் பாடையேறிப் பரலோகமே போயிட்டுது. இவை.. டெல்லிக்கு போய். வேணுன்னா.. பீஜிங்.. வாசிங்கடனுன்னு போங்க. ஏதாவது பெட்டி கிடைக்க வாய்ப்பிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாநிலத்துக்கு பேச்சுவார்த்தை நடக்குது போல..

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யமார் தூக்கத்தில் இருந்து எலும்பித்தனம் வந்துகொண்டு இருக்கும் தீபாவளியில் தீர்வு இருக்கும்மாய் பையில நிரப்பிக்கொண்டு வரினம் பொறுங்க மக்காள் குடுகுடுப்பை ஸ்டைலில் படிக்கவும் .

அங்கு போயும் கொறட்டை விட்டு   தூங்காமல் இருக்க கடவுளை வேண்டுகிறேம் .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

சுற்றுலா மற்றும் வயிறு நன்றாக இருக்க வாழ்த்துக்கள் 

கருணா அம்மான் சுற்றுலா போன காலத்தில் வயிறு நிறைத்தவர்களை இன்னமும் நினைவில் இருக்கிறது. 

15 hours ago, குமாரசாமி said:

நூறு வருசத்துக்கு பிறகும் கூத்தமைப்பு  இதே  போக்குவரத்து வேலையைத்தான் செய்யும்.தமிழ்ச்சனத்துக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது.

வித்தியாசமாக செய்யக்கூடிய பத்து ஆலோசனைகளை அப்படியே எடுத்து விடலாமே?

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

டெல்லி மாநிலத்துக்கு பேச்சுவார்த்தை நடக்குது போல..

அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் 33,000 ஏக்கர் நிலத்தை கொடுக்க மூன்று பில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள சூடு ஆறமுதல் அடுத்த நகர்வு ஆரம்பம்.

ஆதாரம்: https://www.sundaytimes.lk/210808/business-times/us-firm-to-develop-oil-refinery-at-trincomalee-harbour-site-451516.html

சுமந்திரனின் இரகசிய நகர்வுகள் வேலைசெய்ய ஆரம்பித்திருக்கின்றன. பசிலின் மறுவரவும் இதனோடு சம்பந்தப்பட்டதாகவே தெரிகிறது.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இவர்கள் டெல்லி போகிறார்கள்....?? உண்மை வெளிவந்தது.!! 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை!- பரிசுகள் உண்டு! – பிரதமர் மோடி தகவல்!

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2021 at 19:24, குமாரசாமி said:

நூறு வருசத்துக்கு பிறகும் கூத்தமைப்பு  இதே  போக்குவரத்து வேலையைத்தான் செய்யும்.தமிழ்ச்சனத்துக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது.

டெல்லிக்கு பிரயோசனம் இருக்கு ....எங்களை வைத்துதானே சிங்களவர்களை வெருட்ட முடியும்....வடக்கு கிழக்குக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் ....இந்திராகாந்தியிலிருந்து இது தானே நடக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2021 at 16:50, தமிழ் சிறி said:

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தர்  இலங்கைப்பாராளுமன்றம் வருவதற்கே கைப்பிடிக்க, கால்பிடிக்க இரண்டுபேர் தேவைப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க எப்படி டெல்லிக்கு ஏத்தி, இறக்கப்போகிறார்கள்?

அப்பப்ப டெல்லிக்கு காவடி எடுப்பது என்று வேண்டுதல்.  கொஞ்ச நாளாய் மறந்து போச்சினம் என்றிருந்தேன், அவர்களால் மறந்து இருக்க முடியாது டெல்லியை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அப்பப்ப டெல்லிக்கு காவடி எடுப்பது என்று வேண்டுதல்.  கொஞ்ச நாளாய் மறந்து போச்சினம் என்றிருந்தேன், அவர்களால் மறந்து இருக்க முடியாது டெல்லியை. 

இவர்கள் மறந்தாலும் அவர்கள் மறக்காமல் தேவையான நேரத்தில் அழைத்து சப்பாத்தியும் சணா கறியும்  கொடுத்து உபசரித்து அனுப்புவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

இவர்கள் மறந்தாலும் அவர்கள் மறக்காமல் தேவையான நேரத்தில் அழைத்து சப்பாத்தியும் சணா கறியும்  கொடுத்து உபசரித்து அனுப்புவார்கள்....

இதை சொன்னதுக்கு தான் ஒருத்தர் சிங்கக்கொடியோட என்னைக்கலைத்து  திரிகிறார்?😪

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு பேர் கூத்தமைப்பை எதிரக்கிறார்கள்.இதை தேர்தலில் ஏன் தோற்கடிக்க விடுகிறார்கள் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சுவைப்பிரியன் said:

இவளவு பேர் கூத்தமைப்பை எதிரக்கிறார்கள்.இதை தேர்தலில் ஏன் தோற்கடிக்க விடுகிறார்கள் இல்லை

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, சுவைப்பிரியன் said:

இவளவு பேர் கூத்தமைப்பை எதிரக்கிறார்கள்.இதை தேர்தலில் ஏன் தோற்கடிக்க விடுகிறார்கள் இல்லை

பேயா

பிசாசா???  என்றால்  தெரிந்த பேய் பரவாயில்லை என்பது   போலத்தான்???

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் 33,000 ஏக்கர் நிலத்தை கொடுக்க மூன்று பில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம்

திருமலை துறைமுக நிலபரப்பே  16000 ஏக்கர்தான் என்று கேள்விபட்டிருக்கிறேன், அதில் 33000 ஏக்கர் எப்படி அமெரிக்காவுக்கு கொடுத்தார்கள்?

எதையாவது அடிக்கடி உருட்டிவிடுவது கற்பகதருவின் வழக்கம்தான் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் உருட்டா இருக்கே

1 hour ago, சுவைப்பிரியன் said:

இவளவு பேர் கூத்தமைப்பை எதிரக்கிறார்கள்.இதை தேர்தலில் ஏன் தோற்கடிக்க விடுகிறார்கள் இல்லை

வீட்டுக்காரன் குடும்பத்தை கவனிக்காத உதவாக்கரை என்றாலும் தாயானவள் விதவை என்று சொல்லிக்கொள்ளாமலிருக்க வீட்டோடு வைத்துக்கொள்வதில்லையா அதுபோலதான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இவளவு பேர் கூத்தமைப்பை எதிரக்கிறார்கள்.இதை தேர்தலில் ஏன் தோற்கடிக்க விடுகிறார்கள் இல்லை

முதலில் 22 ஆக இருந்த கூட்டமைப்பில் இப்போ எத்தனை பேர் உள்ளனர்?

  • கருத்துக்கள உறவுகள்

மயிலுக்கு தீனி போடுரது, வாத்துகூட போட்டோ புடிக்கிரது, ஆயில் இல்லாமலே வாய்ல வடை சுடுரது எல்லாம் மோடி ஜீக்கு ரெம்ப புடிக்கும்.. நோட்டு எடுத்துன்னு போய் ஜீய கரெக்ட் பண்ணுங்க…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு பேர் கூத்தமைப்பை எதிரக்கிறார்கள்.இதை தேர்தலில் ஏன் தோற்கடிக்க விடுகிறார்கள் இல்லை

சுவைப்பிரியன்! உங்களுக்கு திருநாளைப்போவார் கதை தெரியுமோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

திருமலை துறைமுக நிலபரப்பே  16000 ஏக்கர்தான் என்று கேள்விபட்டிருக்கிறேன், அதில் 33000 ஏக்கர் எப்படி அமெரிக்காவுக்கு கொடுத்தார்கள்?

எதையாவது அடிக்கடி உருட்டிவிடுவது கற்பகதருவின் வழக்கம்தான் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் உருட்டா இருக்கே

ஆதாரம் தந்திருத்தேனே? சண்டே ரைம்ஸ் —- ஓ… ஆங்கிலத்தில் உள்ளதால் புரியவில்லையா?

18 hours ago, கற்பகதரு said:

கருணா அம்மான் சுற்றுலா போன காலத்தில் வயிறு நிறைத்தவர்களை இன்னமும் நினைவில் இருக்கிறது. 

வித்தியாசமாக செய்யக்கூடிய பத்து ஆலோசனைகளை அப்படியே எடுத்து விடலாமே?

அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் 33,000 ஏக்கர் நிலத்தை கொடுக்க மூன்று பில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள சூடு ஆறமுதல் அடுத்த நகர்வு ஆரம்பம்.

ஆதாரம்: https://www.sundaytimes.lk/210808/business-times/us-firm-to-develop-oil-refinery-at-trincomalee-harbour-site-451516.html

சுமந்திரனின் இரகசிய நகர்வுகள் வேலைசெய்ய ஆரம்பித்திருக்கின்றன. பசிலின் மறுவரவும் இதனோடு சம்பந்தப்பட்டதாகவே தெரிகிறது.

துறைமுகத்தை சுற்றியுள்ள நிலமும் சேர்த்து என்றுள்ளது. யாராவது வல்லவனுக்கு மொழிபெயர்த்து உதவ மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அங்காலை மத்திய அரசு காசி ஆனந்தனை கூப்பிட்டு வட்டுக்கோட்டை இரண்டாவது தீர்மானம் போட இருக்கிற மாதிரித்தான் உந்தக்கதையும்.

இந்தியாவின் எல்லா விளையாட்டும் எங்களுக்கு உயிர்போற விளையாட்டு.

பார்த்து பத்திரமா இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு  வாணை ஆனையிறவுக்கு என்ற ரீதியில்
எங்கள் நிலைமை,
யாரைச் சொல்லி அழ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஆதாரம் தந்திருத்தேனே? சண்டே ரைம்ஸ் —- ஓ… ஆங்கிலத்தில் உள்ளதால் புரியவில்லையா?

துறைமுகத்தை சுற்றியுள்ள நிலமும் சேர்த்து என்றுள்ளது. யாராவது வல்லவனுக்கு மொழிபெயர்த்து உதவ மாட்டீர்களா?

அது என்ன இப்போ திடீரென்று ஒரு வரி அவசர அவசரமா சேர்த்து செருகியிருக்கிறீங்க? 

ஓ இப்போதான் எழுத்துக்கூட்டி சண்டே ரைம்ஸ் சொன்னதை சரியா படிச்சு பார்த்தீங்களா? 

ஆமா அவங்க சொன்னது  

According to the Ministry memorandum, the oil refinery and an investment promotion zone with industrial park will be established in a 33000 acre land near this port.

நீங்கள் சொல்லியிருந்தது 

20 hours ago, கற்பகதரு said:

அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் 33,000 ஏக்கர் நிலத்தை கொடுக்க மூன்று பில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம்

அதாவது 

33,000 acres of land in the port of Trincomalee

இரண்டும் ஒன்று இல்லீங்களே கற்பகதரு.

ஓ ஆங்கிலத்தில் செய்தி இருந்தபடியா புரியலியாக்கும், சரி தவறு செய்வது மனித இயல்புதானே விடுங்கள். தவறை சுட்டிகாட்டியவுடன் ’’துறைமுகத்தை சுற்றியுள்ள நிலமும் சேர்த்து என்றுள்ளது’’ என்று பல்டி அடித்து திருத்திக்கொண்டீர்கள்,

இருந்தாலும் , பண்றதையும் பண்ணிவிட்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக பேராசிரியர் நினைப்பில் அடுத்தவருக்கு ஒன்றும் தெரியாது உங்களுக்கு  ஆங்கிலத்தில் புலமை இருப்பதாக உங்களை நீங்களே நினைத்து கொண்ட்டிர்களே அதை நினைக்கத்தான் மனசு லேசா வலிச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

33,000 acres of land in the port of Trincomalee

வல்லவனுக்கு ஆங்கில உதவி செய்து 33,000 ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க உதவிய புண்ணியவானுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.