Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசுவது பௌத்த வர்ணமல்ல ஒலிம்பிக் வர்ணமாம் - அங்கஜன் இராமநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம்  நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

0__4_.jpg

யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக  சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , 

யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். 

அதற்கு,  குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

0__2_.jpg

எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

வர்ணப்பூச்சு வேலைகள் இடைநிறுத்தம். 

அதேவேளை , வர்ண சர்ச்சை காரணமாக குளத்திற்கு நேரடியாக சென்ற யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்  வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசுவது பௌத்த வர்ணமல்ல ஒலிம்பிக் வர்ணமாம் - அங்கஜன் இராமநாதன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது.

பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்?

பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, பிழம்பு said:

பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம்  நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது? 😎

  • கருத்துக்கள உறவுகள்

அதிகூடிய விருப்பு வாக்குப் பெற்ற பா.உ சொன்னால் நம்பவேணும் கண்டியளோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது? 😎

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கொழுக்கட்டை, மோதகம் உண்ணும்  போட்டி இணைக்கப்படலாம் சாமியார். அங்கயனை நீங்கள் நேரில் கண்டதில்லையா.... போட்டியில் பங்குபற்றப் பயிற்சியை எப்போதோ தொடங்கிவிட்டார். 🤗

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒலிம்பிக் வர்ணம் பூசுறதுக்கு இப்ப என்ன பிள்ளையார் கோயிலடியிலை ஒலிம்பிக் போட்டியே நடக்கப்போகுது? 😎

ஊர் அழகாவதை சிலர் விரும்புவதில்லை சும்மா கிடப்பதை சொரண்டினால் எப்பவும் பிரச்சினைதான் 

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்கு கோவில் சுற்றயலுக்கு என்று ஒரு வர்ணம் தனித்துவாம இருக்குத்தானே.. அதையேன் இவர் கெடுக்கிறார்.

தமிழன் தனித்துவமாக இருக்கக் கூடாதுன்னு எஜமானர்கள் எழுதிக் கொடுத்திருப்பினம் போல.

அதுசரி.. யாழ்ப்பாணம்.. இதோ அதோ ஆகுது என்றதன்.. பொருள் இதுதானோ. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

வர்ண சர்ச்சை காரணமாக குளத்திற்கு நேரடியாக சென்ற யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்  வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளார். 

😂

தங்களது வீட்டு சுவர் மதில் வர்ணம் தீட்டப்படாமல் அழகிழந்து காட்சி அளிக்கிறது பிள்ளையார் கோவிலுக்கு புது மதில் வர்ண பூச்சு அழகு எல்லாம் எதற்கு என்று பொறாமைபட்டவர்கள் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

Quote

எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது.

பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்?

பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?

உப்பிடி பலவற்றை கண்டுங்காணாமல் விட்டதன் பயன்; இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். அது சரி ஒலிம்பிக் போட்டிக்கும் பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம்? தமிழர் பிரதேசத்தில்  பெயர்பலகையில் தமிழில்  முதலில்  போட்டதால் அதகளம் பண்ணி  அழித்து சிங்களத்தில் போடும்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். எங்களுக்கென்றொரு தனித்துவம் இருக்கும்போது, ஏன் எங்களோடு தொடர்பில்லாத  மற்றவர்களின் அடையாளங்களுக்கு எங்களை இழந்து முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்? சொரணை கெட்ட அங்கஜனுக்கு அரசியல் பெரிதாக இருக்கலாம் எல்லோரும் அப்படி இருக்க முடியாது என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது.

பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்?

பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?

பள்ளிவாயலுக்கு பணிய நீன் போயி நின்னு பள்ளிவாயலும் LGBT friendly ஏன்னு செல்லியிருந்தீன்னாக்க எல்லோரும் நல்லா வாழணும் அப்பிடீங்கிறத்துக்கு நல்ல பலாய் கெடைச்சஇருந்திருக்கும்.

மட்டுறுத்துனர் அப்பிடீன்னு செல பேத்து இருக்கங்கக்ன்னு அங்கினைக்குள்ள பேசிக்கினாங்க ...🤨

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

சக்கரத்தையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

சக்கரத்தையா?

image.jpeg.083535edd56735f4b9e4bb031b81702b.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

அடுத்த ஒலிம்பிக், நீச்சற் போட்டிக்கான... குளம் இலங்கையில் நிறுவப்படுகின்றது. 🤣

-இணுவையூர் மயூரன்.-

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

பவுத்த கொடி என்று நீங்கள்  எதை சொல்லுகிறீர்கள்? ஒருக்கா இணைத்துவிட்டால் நாங்களும் பாப்போமில்ல!

சக்கரத்தையா?

கீழே புங்கை அண்ணா இணைத்த கொடிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

image.jpeg.083535edd56735f4b9e4bb031b81702b.jpeg

நன்றி புங்கையூரன் இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

அவையின்ரைநோக்கம் அதுவாகத்தான் இருந்திருக்கும். தனக்கு வாக்கு இல்லாமல் போனாலும் என்று பச்சையைக்கலந்திருப்பினம். இந்த இடத்துக்கும் ஒலிம்பிக்குக்கும் என்ன சம்பந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியை  யாழ்ப்பாணத்தில் நடாத்தும்  அளவுக்கு அண்ணன் அங்கஜன் இராமநாதன் மகிந்தவுக்கு  சேவை  செய்து  பெற்றிருப்பது  புல்லரிக்கிறது???

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி ஒரு கதையும் கதைக்காதவர்கள்...
குளம் குட்டைகளுக்கு வர்ணம் பூசியதற்கு கதைகள் பல சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாதவூரான் said:

அவையின்ரைநோக்கம் அதுவாகத்தான் இருந்திருக்கும். தனக்கு வாக்கு இல்லாமல் போனாலும் என்று பச்சையைக்கலந்திருப்பினம். இந்த இடத்துக்கும் ஒலிம்பிக்குக்கும் என்ன சம்பந்தம்

On 14/9/2021 at 23:58, பிழம்பு said:

பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். 

மக்கள் மறந்துபோக அதுவும் ஒருநாள் இரவோடிரவாக மறையும். ஒரு நிறந்தானே! ஒரு நொடியில் மறைந்து போகும். இரவோடிரவாக புத்தர்  எழுந்தருளும்போது இது பெரிய வேலையா என்ன? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/9/2021 at 18:12, தனிக்காட்டு ராஜா said:

ஊர் அழகாவதை சிலர் விரும்புவதில்லை சும்மா கிடப்பதை சொரண்டினால் எப்பவும் பிரச்சினைதான் 

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

சும்மா கிடப்பதை சுரண்டக்கூடாது

ஆனால் ர்   டிக்லாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

The Olympic symbol consists of five interlaced rings of equal dimensions, used alone, in one or in five different colours, which are, from left to right, blue, yellow, black, green and red.

  • கருத்துக்கள உறவுகள்

Colour blind toilet boy.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.