Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா

- அக்கரைப்பற்று மாணவி சாதனை

13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா-13 Gold Medals in MBBS-Akkaraipattu Girlகொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First Class) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டார்.

அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) ஆகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 7/3 ஜ சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இச்சாதனையை புரிந்து, பிறந்த மண்ணிற்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் கல்வி சமூகத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா-13 Gold Medals in MBBS-Akkaraipattu Girl

அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பாடசாலையில் ஆரம்ப கல்வியை ஆரம்பித்த இவர் 5ஆம் ஆண்டுவரை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்திலும் உயர்தரம் வரை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் கல்வி பயின்றார்.

 

பாடசாலை கல்வி சாதனையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன், க.பொ.த. சாதாரண தரத்தில் ஆங்கில கல்வி மூலமாக 8A, 1B பெறுபேற்றை பெற்றுக்கொண்டார்.

https://www.thinakaran.lk/2021/12/20/உள்நாடு/78228/13-தங்கப்-பதக்கங்களுடன்-mbbs-முதல்-தரத்தில்-சித்தி-பெற்ற-topper-தணிகாசலம்

  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலம் தர்ஷிகா வுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி தர்சிகாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் தர்சிக்கா.

முழுக்க முழுக்க அக்கரை பற்றிலேயே படித்துள்ளார். அம்பாறை மாவட்ட வெட்டு புள்ளியில் உள் நுழைந்து (கொழும்புக்கு வந்ததால் மேரிட்?), கொழும்பு பல்கலை கழகத்தில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

சாதனையாளர் 👏🏾👏🏾👏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

தர்சிகாவுக்கு வாழ்த்துக்கள்👏💐

  • கருத்துக்கள உறவுகள்

13 தங்கப்பதக்கங்களை தனதாக்கி கொண்ட சாதனையாளர் 💐

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அம்பாறை மாவட்ட வெட்டு புள்ளியில் உள் நுழைந்து (கொழும்புக்கு வந்ததால் மேரிட்?)

சுப்பர் மெரிட் காயண்ணை (Island ரேங்க் 100 இற்குள்) 
District Rank 1st
All Island Rank 4th

 

Quote
நேற்றைய தினம் வெளியாகிய உயர் தரப் பரீட்சை முடிவுகளின்படி அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் மாணவி தணிகாசலம் தர்ஷிகா உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இம்மாணவி அக்கரைப்பற்று - 7/3ம் கிராம சேவகர் பிரிவிலுள்ள நாவலர் வீதியில் வசிக்கும் அதிபர் தணிகாசலம் குமுதா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியாவார்.
 
!!..எமது வாழ்த்துக்கள் ..!!

 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா; பாராட்டுக்கள் செல்வி தர்ஷிகா தணிகாசலம்.

  • கருத்துக்கள உறவுகள்

13 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ் மாணவிக்கு தமிழ் மாணவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராட்டு!

தேசிய ரீதியில் மருத்துவதுறையில் அதிக தங்கப்பதக்கங்களைப்பெற்று  சாதனை படைத்த அக்கரைப்பற்றை சேர்ந்த மாணவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்து நேரில் சென்று வாழ்த்துதெரிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா என்ற கொழும்பு பல்கலைக்கழக மாணவி.இவர் மருத்துவத்துறை இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று தேசிய ரீதியான சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். இன்றைய தினம் அவரது வீட்டிற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் ஜெயசிறில்,தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

spacer.png

https://athavannews.com/2021/1258776

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த மாணவிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்......!   💐

மனம் நிறைந்த வாழ்த்துகள் தர்சிக்கா 💐

Edited by தமிழினி

வாழ்த்துகள் தர்சிகா. 

  • கருத்துக்கள உறவுகள்

பதின்மூன்று தங்க பதக்கங்களா?  அப்போ என்னைவிட ஒரு பதக்கம் குறைவு இருந்தாலும் வாழ்த்துக்கள்.

தாயகத்திலிருந்தபடியே ஆங்கில கல்விமூலம் கற்று அதி உச்ச பெறுபேறு எல்லாம் பெற்று அசத்தியிருக்கா.

 இவர்கள் அசாதாரண திறமை சாலிகள்  மென்மேலும் உயர்ந்து தென் தமிழீழத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

ஆனால் புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, colomban said:

ஆனால் புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. 

பொதுவாக தமிழரில், குறிப்பாக இலங்கை தமிழரில் இருப்பது.

குழுவாக தோல்வியை தாண்டி, குழுவை இழக்கும் நிலைக்கு வந்து  நிற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

ஆனால் புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. 

பொறாமையின் உச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பொறாமையின் உச்சம் 

அப்படியல்ல மீரா தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் பில் கேட்சில் இருந்து பலர் ஒரளவு படித்தவர்கள் தான். வாழ்க்கையில் அவர் அவர்க்கு அளந்து வைத்த படியே கிடைக்கும். நன்றாக யோசித்து பாருங்கள் உங்களுடன் வகுப்பில் படித்த பலர் நல்ல புள்ளிகள் எடுத்திருப்பார்கள் ஆனால் இன்னும் அவர்கள் சாதரண நிலையிலேயே இருப்பர்கள். ஆனால் ஒரளவு படித்தவர்கள் இன்று பெரிய பொஸ் ஆகி பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்திருப்பார்கள். உலகம் படிப்பை வைத்து வெற்றியை மதிப்பிடுவதில்லை  valuation creation வைத்து  மதிப்பிடப்படுகின்றது 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, colomban said:

அப்படியல்ல மீரா தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் பில் கேட்சில் இருந்து பலர் ஒரளவு படித்தவர்கள் தான். வாழ்க்கையில் அவர் அவர்க்கு அளந்து வைத்த படியே கிடைக்கும். நன்றாக யோசித்து பாருங்கள் உங்களுடன் வகுப்பில் படித்த பலர் நல்ல புள்ளிகள் எடுத்திருப்பார்கள் ஆனால் இன்னும் அவர்கள் சாதரண நிலையிலேயே இருப்பர்கள். ஆனால் ஒரளவு படித்தவர்கள் இன்று பெரிய பொஸ் ஆகி பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்திருப்பார்கள். உலகம் படிப்பை வைத்து வெற்றியை மதிப்பிடுவதில்லை  valuation creation வைத்து  மதிப்பிடப்படுகின்றது 

தனியே ஒவொருவருக்கும் திறமை உள்ளது. ஒப்பீட்டளவில் கூட, குறைவாக இருப்பது இயற்கை.

team ஆகும் போது, தனி திறமைகள் team க்குள் முடங்கிவிடும்.

நீங்கள் சோழிய எவரும், team என்பதை கொண்டே அநேகமா முன்னேம் இருக்கும். 

இந்த நிலையில் தனித்து சாதிப்பது ஒப்பீட்டளவில் இலகு. 

மேலே செல்லும் போது டீம் ஆக சாதிக்க பழகவேண்டும். அது தமிழருக்கு இன்னும் வசப்படவில்லை. 

team என்பது ஓர் நெம்பு.

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா சாதனை

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
27 டிசம்பர் 2021
 

Dharshika

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் முதன்நிலைப் பல்கலைக்கழகம் என தரப்படுத்தப்பட்டுள்ள, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர் தர்ஷிகா.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம் நடைபெற்றபோது, தனது பட்டத்துடன் 13 தங்கப் பதக்கங்களையும் தர்ஷிகா பெற்றுக் கொண்டார்.

ஐந்து வருடங்களைக் கொண்ட மருத்துவ பீடக் கற்கையில் வெளிக்காட்டிய திறமைகளுக்காக, இந்தப் பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

சிறந்த மருத்துவபீட மாணவி, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு பரீட்சையில் பெற்றுக் கொண்ட சிறந்த பெறுபேறு, சிகிச்சை மருத்துவத்தில் சிறப்பினை வெளிப்படுத்தியமை மற்றும் அறுவை சிகிச்சையில் சிறப்பான பெறுபேற்றினை அடைந்து கொண்டமை உள்ளிட்ட 13 விடயங்களில் சிறப்புத் தேர்ச்சியினை வெளிப்படுத்தியமைக்காக இவருக்கு இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

 

Dharsika with family

குடும்பப் பின்னணி

தர்ஷிகாவின் தந்தை தணிகாலசம் பாடசாலை அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். தாயார் குமுதா. இவர்களின் நான்கு பிள்ளைகளில் தர்ஷிகா இரண்டாமவர்.

தர்ஷிகாவின் சகோதரர்கள் அனைவரும் உயர் தரத்தில் (பிளஸ் 2) விஞ்ஞானத்துறையை தேர்ந்தெடுத்து கற்றவர்கள். தர்ஷிகாவின் அண்ணன் விஞ்ஞானத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். தற்போது ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகின்றார்.

மருத்துவ பீடத்தில் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட தர்ஷிகா தற்போது மருத்துவராக பணியாற்றத் தொடங்கியுள்ளார். இவரின் தம்பி ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாமாண்டு மாணவராக உள்ளார். தங்கையும் உயர்தரத்தில் (பிளஸ் 2) விஞ்ஞானத்துறையைக் கற்று வருகின்றார்.

பிள்ளைகள் எல்லோரும் விஞ்ஞானத் துறையைக் கற்பதற்கு பெற்றோர்களின் அழுத்தம் அல்லது விருப்பம் காரணமாக இருந்ததா என, தர்ஷிகாவின் அம்மாவிடம் கேட்டபோது; "இல்லை" என்றார். "நாங்கள் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை, விஞ்ஞானத்துறை என்பது அவர்களின் விருப்பத் தெரிவாக இருந்தது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்களாக நாங்கள் உதவி வருகின்றோம்" என அவர் பதிலளித்தார்.

விஞ்ஞானத் துறையைக் கற்பதில் தனது அப்பாவின் குடும்பத்தினர் இயல்பாகவே ஆர்வமுடையவர்கள் என்று கூறும் தர்ஷிகா, "அம்பாறை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தின் முதலாவது பெண் விஞ்ஞானப் பட்டதாரி (பி.எஸ்.சி) சொர்ணசோதி, எனது அப்பாவின் தங்கை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார்" என்றார்.

அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மிடின் மாகா வித்தியாலயத்தில் ஆரம்பம் முதல் 05ஆம் வகுப்பு வரையிலும், 06ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அக்கரைப்பற்று ராமகிருஷ்ணா கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியைப் பயின்ற தர்ஷிகா, 2014ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குத் தேர்வானார்.

 

Dharshika 1

''சிங்கள மொழி தெரியாமல் பெரும் பிரச்னை''

சாதாரண கிராமம் ஒன்றிலிருந்து தலைநகரில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட தர்ஷிகா, ஆரம்பத்தில் நகர்ப்புற வாழ்க்கையுடன் ஒத்துப் போவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகின்றார். "சிங்கள மொழி தெரியாமலிருந்தமை பெரும் பிரச்னையாக இருந்தது" என்கிறார்.

இருந்தபோதும் சவால்களையெல்லாம் கடந்து, ஐந்து ஆண்டுகளைக் கொண்ட மருத்துவப் படிப்பில், ஒவ்வொரு வருடமும் முதன்நிலை மாணவியாக தான் தெரிவாகி வந்ததாக பூரிப்புடன் கூறினார்.

37 பதக்கங்களில் 13 பதக்கங்கள் உங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா என தர்ஷிகாவிடம் கேட்டதற்கு, சிரித்தபடி "இல்லை" என்றார்.

தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தர்ஷிகா டாக்டராக நியமனம் பெற்றுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59798964

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 20:23, nedukkalapoovan said:

 

மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள் தர்ஷிகா👏👏👏

நல்லதோர் செவ்வி.. தேர்ந்த பேச்சாளர்கள் பாவிக்கும் கையசைவுகளும் உடல்மொழியும் இயல்பாகவே  செவ்வியின்போது வந்துள்ளது.👍🏾

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.