Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை
 
இது வரைக்கும்... எரியூட்டப்பட்ட,  வீடுகள்.
 
1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை 
நீர்கொழும்பில்
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு
 
Edited by தமிழ் சிறி

  • Replies 132
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சன் பெர்னாடோவின் மயிரை தொட விடமாட்டேன் எண்டார், குருநாகல் மேயர். 

இப்ப, ஜோன்சன் வீடு, மகிந்தா வீடு எல்லாம் எரியுது.

மேதுமில்லன்னா ராஜபக்சக்களின் பரம்பரை வீடு தீக்கிரையாகி தரைமட்டமானது.

அவரது மகன்களில் ஒருவரின் லம்போகினி காரும் தப்பவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, body of water and text

Mahinda~ சொல்லிடாதீங்க🙏

That சாராய Gang~ எதடா சொல்ல வேணாங்கிற?🤔

Mahinda~ அடிச்சு கூட கேப்பாங்க
ஒண்டயும் சொல்லிடாதீங்க 
🙏  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

விதம் விதமாக கதைகள் வருகிறது, ஏது உண்மை என்று தெரியவில்லை. கோத்தா மஹிந்தவை போடும் அளவுக்கு வருமா? அவர்களின் ஆதரவு தளத்தை முற்றிலும் இழந்து விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Elugnajiru said:

3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

கோத்தாவுக்கு எதிராக திரண்ட மக்களை மகிந்த பக்கம் திருப்பி இதுவரை பாதுகாப்பாக இருக்கிறார்.

இதுவே அவருக்கு பெரிய வெற்றியே.

கோத்தாவின் தேவை கருதி பிக்குகள் தான் திசை திருப்பிவிட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

இது என்ன புதிதா அவர்களுக்கு???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

No...no..no... it is photo shoot:::

Rajapaksa-Thug-was-attacked-by-people-Gota-Go-Home-.jpeg?fit=498%2C356&ssl=1

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

இது என்ன புதிதா அவர்களுக்கு???

ராஜபக்‌ஷக்களின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்  இரண்டு பக்கமும் காடைத்தனத்தைக் காட்டும் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள்.
இதே காட்டான்கள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழரையும் குடும்பங்களின் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தினார்கள். அடிப்பது, உதைப்பதை விட நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது அவர்களின் விகாரமான மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது.

இதில் தமிழர்கள் இரசிக்க எதுவுமில்லை. நாளை இந்த இரண்டு பக்கமும் சேர்ந்து தமிழரையும், முஸ்லிம்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தவும் கூடும். ஏற்கனவே செய்தவர்கள்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் மக்களால் நேசிக்கப்பட்ட மார்க்கோஸை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு அக்கினோவை பதவிக்கு கொண்டு வந்த வரலாறுகள் தான் ஞாபகத்தின் பக்கங்களில் வந்து போகிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

தம்பி விசுகு.   அப்போ தமிழ்ஈழம். வேண்டாமா  ?ஆடும்  ...மாடும்....போதுமா  ....?  😂🙏👍😂🙏👍😂

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.

வலிகள் வேறு வேறானாலும்
சிலவற்றையாவது அவர்கள் உணர காலம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது
இதுவரை எரிக்கப்பட்ட மகிந்த, அவரது அரச அமைச்சர் கள் மற்றும் ஆதரவாளர்களின் வீட்டு விபரங்கள்
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயர் மாளிகை
6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்
12-அருந்திகாவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
லான்சாவின் 17-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-யானை சபர் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40
25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50
27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40
31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45
32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45
33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

இவ்வளவையும் வாங்கிப்போட்டு விட்டு சந்தோஷத்தில நீங்கள் சாப்பிட மறந்திடாதீங்கோ!

7 hours ago, தமிழ் சிறி said:

பெனியன், போடத்  தெரிஞ்சவனுக்கு... ஜட்டி போடத்  தெரியலையே..

அவ்வளவு அவசரம்.

7 hours ago, தமிழ் சிறி said:

 வயிறு நோக  சிரிக்க... மேலே உள்ள காணொளியை பாருங்கள். 👆

எங்கள் சொத்துக்கள், உடல்கள்,  நூலகம் எரியூட்டி விடுதிகளில் இருந்து ரசித்தார்கள், நம்மால் முடியவில்லை! அத்தனையும் ஏழைகளின் வயிறு எரிய சேர்த்து கட்டினவையை இப்போ தீ கொண்டு போகுது. 

10 hours ago, தமிழ் சிறி said:

நாடு முழுக்க...  
அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அதி உத்தமரான... ஜனாதிபதி  கோத்தபாய என்ன செய்கிறார்?
இராணுவம், போலிஸ், கடற்   படை, அதிரடிப் படை எல்லாம் எங்கே?

ஏதோ... நம்மால், முடிந்தது. 😎

இவர்கள் வெளியில் வந்தால் அவ்வளவேதான்! அவர்கள் கொடுத்த பயிற்சி அவர்களையே பதம் பாக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1280978

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

தாக்குதலில்.... இமதுவ பிரதேச சபையின் தலைவர், உயிரிழப்பு

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காலத்திலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

ஊரடங்கு காலத்திலும்.... பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக அலரி மாளிகை அருகே நேற்று இரவு மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்த நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கான சனத் நிஷாந்தவின் வீடு, குருநாகல் மேயரின் இல்லம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வீடு மற்றும் அலுவலகம், பந்துல குணவர்தன , காமினி லொக்குகே , டி.பி . சன்ன ஜெயசுமண, மஹிபால ஹேரத் , ரமேஷ் பத்திரண , திஸ்ஸ குட்டியாராச்சி , சாந்த பண்டார , அலி சப்ரி ரஹீம் உட்பட்ட பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலனவின் இல்லத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது.

3-1-600x450.jpg

2-1-600x450.jpg

1-1-600x450.jpg

https://athavannews.com/2022/1280982

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.
மனித விரோத ரஷ்யா சீனா போன்றவை தமிழர்களை இலங்கை மக்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவாகவே செயல்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/cVPJtQlkTF/

சிங்கள காடையர்களினால் அப்பவியான நீர்கொழும்பு போதகரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.

நீங்கள் குறிப்பிட்ட சனநாயக நாடுகள் கடந்த பதினைந்து வருடங்களாக கோமாவிலா இருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

அதெல்லாம் சரிதான,

இதனால் எங்களுக்கு என்ன நன்மை ?

🧐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு...   எரிக்கப்பட்ட பேருந்துகள்; நொறுக்கப்பட்ட கார்களின்... காணொளி   காட்சிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.