Jump to content

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

என்னைப்பற்றிய மிகத் தவறான புரிதலும் இங்கே என்னால் எழுதப்பட்ட விடயங்களை மிகத் தவறான வாசித்தலும் வகுப்பெடுப்பும். 

நன்றி வணக்கம் 

விசுகர் இப்ப என்ன சொல்லுகிறீர்கள். அந்த மாபெரும் தலைவன் ஈனப்புத்தியுள்ள இந்த தமிழினத்திற்காக ஒருமுறை தனதுயிரை தந்தது போதாதா? மீண்டும் வரச்சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்

நிழலி

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான்.  நெடுமாறன் எட

ரதி

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் உயிருடன் இல்லை" - பழ. நெடுமாறன் கூற்றை மறுக்கும் இலங்கை ராணுவம்

13 பிப்ரவரி 2023, 08:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்
பிபிசி விளையாட்டு வீராங்கனை
 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் முதலில் வாசித்தார்.

"தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஓர் அறிவிப்பை ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு தலைவர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

சர்வேதச சூழலும் இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி, இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்," என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நெடுமாறன், "பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்திகளை, அவர்களுடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் விரைவில் வெளிப்படுவார். மனைவி, மகள் நலமுடன் இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவ்வளவு நாள் கழித்து இதை அறிவிக்க என்ன காரணம் என செய்தியாளர்கள் கேட்டபோது, "சர்வதேச சூழல் தற்போது கனிந்திருக்கிறது. எந்த சிங்கள மக்கள் ஆட்சி அவரை (மஹிந்த ராஜபக்ஷ) பீடத்தில் உட்கார வைத்தார்களோ, அதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராக கொதித்தெழுந்து போராடி அவருடைய ஆட்சியை வீழ்த்தியிருக்கிறார்கள்.

சிங்கள மக்களுக்கு இப்போதுதான் உண்மைகள் புரியத் துவங்கியிருக்கிறது. இதைவிட நல்ல சூழல் என்ன இருக்க முடியும்?" என்றார்.

பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் மறுப்பு

ஆனால், பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்த செய்திகளை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் கேட்டபோது, "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக" தெரிவித்தார்.

மேலும், "2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்.

பிரிகேடியர் ரவி ஹேரத்

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

 
படக்குறிப்பு,

பிரிகேடியர் ரவி ஹேரத்

குறித்த தேதியில் பிரபாகரனை கொல்லப்பட்டமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள்.

இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை," என்று பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பின்னணி என்ன?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் சில நாட்களுக்கு முன்பாக தொடர்புகொள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இன்று தஞ்சாவூரில், பழ. நெடுமாறன் தலைமையில் ஈழத்திற்கு ஆதரவாக உள்ள தமிழ்நாட்டு தலைவர்களை ஒன்று திரட்டி செய்தியாளர்களைச் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

இந்த ஏற்பாடுகள் ஞாயிற்றுக்கிழமையன்று உச்சகட்டத்தை எட்டின. ஆனால், பிரபாகரன் குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், பல தலைவர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-64622538

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரவிய தகவல் - இலங்கையில் மாறுபடும் அரசியல் கருத்துகள்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிரபாகன் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவிடத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். அது குறித்து பொதுமக்கள் பாதுபாப்பு முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராணுவ வீரருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் பிபிசி தமிழ் வினவியது.

பிரபாகரன் பல லட்சக்கணக்கான உயிர்களை கொலை செய்துள்ளமையினால், அவர் தற்போது நரகத்திலேயே இருப்பார் எனவும், பழ.நெடுமாறன் நரகத்திற்கு சென்றே அவரை அழைத்து வர வேண்டும் எனவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

''பிரபாகரன் தற்போது நரகத்தில் உள்ளார். நரகத்திலிருந்து வருகைத் தருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும். பல லட்சம் மக்களை அமானுஷ்யமாக கொலை செய்துள்ளமையினால், அவர் தற்போது நரகத்திலேயே இருக்க வேண்டும். அப்படியென்றால், இவரும் நரகத்திற்கு சென்றே அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும்." என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 
பிபிசி இலங்கை
 
படக்குறிப்பு,

சரத் வீரசேகர

இந்தியாவிடம் டிஎன்ஏ அறிக்கையை ஏன் பகிரவில்லை?

பிரபாகரன் உயிரிழந்தமையை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனை அறிக்கையை இந்தியா தொடர்ச்சியாக கேட்ட போதிலும், அந்த அறிக்கை இன்று வரை வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் சரத் வீரசேகரவிடம் நாம் வினவினோம்.

''அதனை செய்வதற்கான தேவை எமக்கு கிடையாது. பிரபாகரனை கொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தோம். மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பித்து, யாருக்கும் அதனை உறுதிப்படுத்தும் தேவை எமக்கு இல்லை. அதற்கான தேவை என்ன? பிரபாகரன் எம்முடைய எதிரி. இந்தியாவின் எதிரி அல்ல. அதனால், யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது தொடர்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. பிரபாகரன் உயிரிழந்ததை கருணாஅம்மான் உறுதிப்படுத்தினார். அதனால் யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது" என சரத் வீரசேகர கூறினார்.

"வலுவாக நம்புகின்றேன்" - டக்ளஸ் தேவானந்தா

பிபிசி இலங்கை
 
படக்குறிப்பு,

டக்ளஸ் தேவானந்தா

பிரபாகரன் தொடர்பான தமிழக தலைவர்களின் இவ்வாறான கருத்துக்கள் இலங்கை தமிழர்களை கஷ்டத்திற்கு உட்படுத்தும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''பழ. நெடுமாறன் அறிந்து கதைக்கின்றாரா? அறியாமல் கதைக்கின்றாரா? என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் என்னை பொறுத்தவரையில் எமது அனுவத்தில் பிரபாகரன் உலகத்திலேயே இல்லை என்பதே என்னுடைய தகவல். அதை நான் நம்புகின்றேன். நான் குறுட்டுத் தனமாக நம்புவதோ, பொய்யாக பேசுவதோ இல்லை. இவர்களின் இப்படியான கருத்துக்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு சாதகமாக இருந்தது. ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகும் அதை அவர்கள் தொடரும் போது, இங்குள்ள தமிழ் மக்கள் தான் கஷ்டப்பட போகின்றார்கள்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று நாம் எவ்வளவு சௌகரியமாக இருந்திருப்போம். பிரபாகரன் இல்லை என்பதே உண்மை. ஆனால் அவர் என்ன மாதிரி இறந்தார் என்றதில் வாத பிரதிவாதங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி நான் இப்போது கதைக்க விரும்பில்லை." என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

"அரசாங்கமே உறுதிப்படுத்தியது" - சிவநேசத்துரை சந்திரகாந்தன்

சிவநேசத்துரை சந்திரகாந்தன்
 
படக்குறிப்பு,

சிவநேசத்துரை சந்திரகாந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பழ.நெடுமாறன் ஐயா, தமிழீழ போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். அவர் அப்படி சொல்வதாக இருந்தால் அதில் காரணங்கள் இருந்தால், அதை அவரே உறுதிப்படுத்த வேண்டும். போராட்டம் நடந்த இடம் வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில், இறுதிக் கட்டத்தில் நியாயமான போராட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசாங்கமும், பல அமைப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன," என தெரிவித்தார்.

"பிரபாகரன் உயிருடன் இல்லை" - அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல்

''பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். அவரின் லட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது. அது பிழை என்றே நான் சொல்வேன்" என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிரபாகரனின் உறவினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பின் ஊடாக விரைவில் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கப் பெறும் என கூறினார்.

இலங்கை

''தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் சம்பந்தமாக, பழ.நெடுமாறன் ஐயா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கின்றார். இது 2009ம் ஆண்டு மே 18ஆம் தேதிக்கு பின்னர் இலங்கை அரசு தலைவர் பிரபாகரனின் உடல் என ஒரு உடலை காட்டிய போது, அது அவருடைய உடல் அல்ல, முடிந்தால், மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பிக்குமாறு சவால் விடுத்திருந்தேன். அவர்கள் அதற்கு முன்வரவில்லை. பரிசோதனை முடிவடைந்ததாக சொன்னார்கள். ஆனால் அது போலியானது. தலைவர் பிரபாகரனின் உடலை புதைத்து விட்டோம் என ஒரு தரப்பும், எரித்து விட்டோம் என கூறினார்கள். பிரபாகரனின் தயார் மற்றும் தந்தை ஆகியோர் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தலைவர் பிரபாகரனின் தந்தையார் இறந்து அவரது உடல் என்னிடம் கையளிக்கப்பட்டது. தகன கிரியைகள் நடைபெற்றன.

தாயார் என்னுடைய பொறுப்பில் இருந்து இறந்ததை தொடர்ந்து, அவருடைய உடலும் தகனம் செய்யப்பட்டன. அவர்களுடைய அஸ்தியை தலைவர் பழ.நெடுமாறன் ஐயாவிடமும், தலைவர் வைகோவிடமும், தலைவர் சீமானிடமும் அனுப்பி வைத்தேன். என்னிடமும் இருக்கின்றது.

இந்த சூழ்நிலையிலேயே டீ.என்.ஏ பரிசோதனையை இலங்கை அரசு இன்று வரை செய்யவில்லை. ஆகவே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சந்தேகம் தொடர்ந்தும் இருக்கின்றது. அவருடைய மரண சான்றிதழை கூட இலங்கை அரசாங்கம் இன்னும் பதிவு செய்யவில்லை. நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை மாத்திரம் தாக்கல் செய்தார்கள்.

இந்த பின்னணியில் பழ.நெடுமாறன் ஐயா இந்த செய்தியை சொல்லியிருக்கின்றார் என்றால், எனக்கு தெரியாமல் இருக்கலாம். அனால், அவருக்கு தெரிந்திருக்கின்றது என்பதற்காக எனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. இந்த அறிவிப்பானது, உலக தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும். தலைவர் பிரபாகரனுடையது என காட்டப்பட்ட உடல் அவருடையது அல்லவென்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்," என்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-64626782

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Eppothum Thamizhan said:

விசுகர் இப்ப என்ன சொல்லுகிறீர்கள். அந்த மாபெரும் தலைவன் ஈனப்புத்தியுள்ள இந்த தமிழினத்திற்காக ஒருமுறை தனதுயிரை தந்தது போதாதா? மீண்டும் வரச்சொல்கிறீர்களா?

 

பிரபாகரன் இருக்கிறார்  என்றவுடன்

இலங்கைக்கோ இந்தியாவுக்கோ  ஏன்  சர்வதேசத்துக்கோ 

அவர்  வந்தால்  போர்  வரும்  என்ற எண்ணம்  வரலாம்

ஆனால்  எமது  மக்களுக்கே  அதுவும்  அவரை நேசிக்கும் பிள்ளைகளுக்கே அவ்வாறான ஒரு  எண்ணம்  வரலாமா?

அவர்  மீண்டும்  வந்தால்  ரத்த ஆறு  தான்  ஓடும்  என்பதும்

வலுவாக  இருந்தபோதே சாதிக்கமுடியாததை  இனியா சாதிப்போறார்  என்பதும் 

இனி  அவர்  உயிருடன்  இருந்தாலும் வரவேண்டாம்  என்பதைக்குறிக்கிறதா?

என்பதே  எனது கேள்வி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

பிரபாகரன் இருக்கிறார்  என்றவுடன்

இலங்கைக்கோ இந்தியாவுக்கோ  ஏன்  சர்வதேசத்துக்கோ 

அவர்  வந்தால்  போர்  வரும்  என்ற எண்ணம்  வரலாம்

ஆனால்  எமது  மக்களுக்கே  அதுவும்  அவரை நேசிக்கும் பிள்ளைகளுக்கே அவ்வாறான ஒரு  எண்ணம்  வரலாமா?

அவர்  மீண்டும்  வந்தால்  ரத்த ஆறு  தான்  ஓடும்  என்பதும்

வலுவாக  இருந்தபோதே சாதிக்கமுடியாததை  இனியா சாதிப்போறார்  என்பதும் 

இனி  அவர்  உயிருடன்  இருந்தாலும் வரவேண்டாம்  என்பதைக்குறிக்கிறதா?

என்பதே  எனது கேள்வி?

நான் நுனா அண்ணாவுக்கு எழுதின‌ ப‌திவு அது 

உங்க‌ளுக்கு அரைகுறை புரித‌ல் என்றால் நான் என்ன‌ செய்ய‌ 

 

நான் மேல் ஓட்ட‌மாய் எழுதினான் த‌மிழீழ‌ ம‌ண்ணில் இனி ஆயுத‌ போராட்ட‌ம் ச‌ரி வ‌ராது அறிவாயுத‌ம் மூல‌ம் த‌மிழீழ‌ம் அடைவ‌து சிற‌ந்த‌ வ‌ழி

 

 

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் சொல்லும் போது கோவ‌ம் வ‌ராம‌ அவ‌ர்க‌ளை க‌ட்டி பிடிச்சு முத்த‌ம் கொடுக்க‌வா தோனும்

 

த‌லைவ‌ர் சிங்க‌ள‌ அர‌சை எதிர்த்து போர் செய்ய‌ வில்லை 2009ப‌ல‌ நாட்டு குண்டுக‌ள் இந்திய‌ ப‌டைக‌ள் இந்திய‌ நேவி இவைக‌ள் அனைத்தையும் எதிர்த்து தான் ச‌ண்டை போட்டார்..............

 

 

இல்லாத‌ த‌லைவ‌ரை த‌லைவ‌ர் வேனுமா வேண்டாமா என்றால் என்ன‌ அர்த்த‌ம்

 

எம‌க்காக‌ போராடின‌துக‌ள் கை கால‌ இழ‌ந்து தெரு தெருவாய் பிச்சை எடுக்குதுக‌ள்...............போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஒரு நேர‌ உண‌வுக்கு எவ‌ள‌வு க‌ஸ்ர‌ப் ப‌டுதுக‌ள்.................இவ‌ர்க‌ளின் துய‌ர‌ம் க‌ஸ்ர‌ங்க‌ள் ம‌ற்றும் மீண்டும் அந்த‌ நாட்டில் போர் வ‌ந்தால் த‌மிழ‌ர்க‌ள் ஈழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது

 

ஏதும் வ‌ல்ல‌ர‌சு நாடு ந‌ம்மோடு நின்றால் நில‌மை வேறு..............இப்போது உள்ள‌ சூழ் நிலையில் அகிம்சை முறையில் த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு கிடைச்சா மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போக‌ வில்லை என்று ஆகி விடும் 

 

யாரோ புர‌ளிய‌ கில‌ப்ப‌ அதில் இல்லாத‌ த‌லைவ‌ரை வேனுமா வேண்டாமா என்றால் ப‌ல‌ர் உங்க‌ளை பார்த்து ப‌ல‌ கேள்விக‌ள் கேப்பார்க‌ள்

அந்த‌ ம‌னிஷ‌ன் த‌மிழின‌த்துக்காக‌ சிந்தின‌ வேர்வை செய்த‌ தியாக‌ம் வார்த்தையால் சொல்ல‌ முடியாது , ம‌றைந்த‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று சொல்லும் போது என்ன‌ சொல்ல‌...............😏

 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

 

அந்த‌ ம‌னிஷ‌ன் த‌மிழின‌த்துக்காக‌ சிந்தின‌ வேர்வை செய்த‌ தியாக‌ம் வார்த்தையால் சொல்ல‌ முடியாது , ம‌றைந்த‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று சொல்லும் போது என்ன‌ சொல்ல‌...............😏

 

இந்த  முடிவுக்கு எப்பொழுது  வந்தீர்கள்  ராசா?

இங்கே யாழில் தலைவருக்கு அஞ்சலி  செலுத்துவதை கடுமையாக  எதிர்த்தவர்களில்  நீங்களும்  ஒருவர் (எனது  நினைவு  சரியாக  இருந்தால்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

 

பிரபாகரன் இருக்கிறார்  என்றவுடன்

இலங்கைக்கோ இந்தியாவுக்கோ  ஏன்  சர்வதேசத்துக்கோ 

அவர்  வந்தால்  போர்  வரும்  என்ற எண்ணம்  வரலாம்

ஆனால்  எமது  மக்களுக்கே  அதுவும்  அவரை நேசிக்கும் பிள்ளைகளுக்கே அவ்வாறான ஒரு  எண்ணம்  வரலாமா?

அவர்  மீண்டும்  வந்தால்  ரத்த ஆறு  தான்  ஓடும்  என்பதும்

வலுவாக  இருந்தபோதே சாதிக்கமுடியாததை  இனியா சாதிப்போறார்  என்பதும் 

இனி  அவர்  உயிருடன்  இருந்தாலும் வரவேண்டாம்  என்பதைக்குறிக்கிறதா?

என்பதே  எனது கேள்வி?

டக்ளசுக்கு இறுதி நேரத்தில் என்ன நடந்தது என முழுசாகத்தெரியும் அந்தவேளையில் அவர் எப்படிச்செயல்பட்டார் என எனக்கு நன்றாகத் தெரியும் இறுதிக்கணங்களில் சம்பந்தபட்ட ஒருவரில் டக்ளசும் அடக்கம். மேலதிகமாக இதைப்பற்றிக் கூற விரும்பவில்லை.

ஆனால் முள்ளிவாய்க்கால் முழுமைக்கும் மக்களுடனும் போராளிகளுடனும் சிங்கள இராணுவக் கைக்கூலி கருணாவின் கையாள்கள் முற்றிலும் இணைந்திருந்தார்கள் அங்கு யார் உண்மையான போராளி யார் எதிரி எனக் கண்டுபிடிப்பது கஸ்டமாக இருந்தது இனிமேல் எக்காரணத்தைக்கொண்டும் இப்படியான எதிரிகள் உள் நிளைந்த படையணியை வைத்துக்கொண்டு போராட முடியாது எனும் முடிவுக்குத் தலைமை வந்து அனைவரையும் கலைந்துசெல்ல வைப்பதே இப்போதைக்கு நல்லம் இல்லையேல் பெரும் விளைவுகள் ஏற்படும் என்றே தப்பித்தல் சரணடைதல் மரணத்தைச் சந்தித்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. 

தலைவரது இறுதி நிமிடங்கள் எம்மால் சகிக்க முடியாததாகும்.

ஆனால் தலைவரைப்போலவே ஒருவர் கொழும்பில் வாழ்ந்ததும் இறுதி யுத்தத்தில் அவரது மகனுக்கு காலில் குண்டடிபட்டதும் யாரோ கொழும்பில் ஒருவர் அவரைச் சுட்டதாக கூறியதும் அதன் பின்பு தலைவரைப்போல இருந்த அந்த கொழும்புவாழ் தமிழர் காணாமல் போனதும் என ஒரு கதை உலாவுகிறது. 

அதனாலேயே பல சந்தேகங்களை அனைத்துத் தரப்பாலும் எழுப்பப்படுகிறது.

இறுதி யுத்தத்தில் பசில் ராஜபக்சவுக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து பல மில்லியன் டாலர்கள் புலிகள்தரப்பால் கொடுக்கப்பட்டது எனவும் பசில் தனது இரகசியத் தொடர்பாடல்களைப் பயன்படுத்தி கடற்பகுதியில் சில இடங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதாகவும் ஆனால் தலைவரது முண்ணணித் தொடர்பாளர்கள் மற்றும் ஏனையோர் பசிலை நம்பாது டம்மியாக சிலரை அப்பாதையில் நகர்த்தி அவர்கள் தப்பித்ததாகவும் அச்சந்தர்பத்தில் தலைவரைக் காப்பாற்றுவது தோல்வியடைந்ததாவும் கூறுகிறார்கள் .

முண்ணணிக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த வேளையில் பசிலுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் ஓரளவு நம்பிக்கையானவர்களிடமிருந்து வந்த செவிவழிச்செய்திகளே. ஊகங்களாகவும் இருக்கலாம்

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

 

இந்த  முடிவுக்கு எப்பொழுது  வந்தீர்கள்  ராசா?

இங்கே யாழில் தலைவருக்கு அஞ்சலி  செலுத்துவதை கடுமையாக  எதிர்த்தவர்களில்  நீங்களும்  ஒருவர் (எனது  நினைவு  சரியாக  இருந்தால்)

நான் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று எழுதின‌து நினைவில் இல்லை

த‌லைவ‌ர் உயிருட‌ன் இல்லை என்று 10 , 12 வ‌ருட‌த்துக்கு முத‌லே தெரியும்...........இன‌ அழிப்பு ந‌ட‌ந்து 14ஆண்டு ஆக‌ போகுது

இனி ந‌ட‌க்க‌ வேண்டிய‌தை பாப்போம் அது த‌மிழீழ‌ம் ப‌ற்றிய‌தே...............🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Elugnajiru said:

தலைவரது இறுதி நிமிடங்கள் எம்மால் சகிக்க முடியாததாகும்.

இதன் அர்த்தம் என்ன? தலைவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தலைவர் வேண்டாம் என்றாலும்

இந்திய இலங்கை அரசுகளுக்கு தேவையாக உள்ளது.

அவர்களுக்கு எப்பஎப்ப பிரச்சனைகள் வருதோ அப்போதெல்லாம்

குண்டுகள் கண்டெடுப்பார்கள்

புலிகள் புத்துயிர் பெற உதவினார்கள் என்று கைதாவார்கள்

இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்.

தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிக்க பிரபாகரன் கோழையல்ல’’ சீமான் பதிலடி

எங்கள் அண்ணன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

 

சீமான் பதிலடி

 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீமான்,

என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச்சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன்.

‘‘தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிக்க பிரபாகரன் கோழையல்ல’’ சீமான் பதிலடி | Ltte Leader Velupillai Prabhakaran Is Alive

போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி இருப்பார்... எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருவபர் அல்ல எங்கள் அண்ணன்...வந்துவிட்டு சொல்வார். அது தான் அவருக்கு பழக்கம் அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். 

சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் அதனால் தேவையின்றி குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதல்ல. பிரபாகரன் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று பழநெடுமாறன் கூறுகிறார்.தோன்றும்போது பேசுவோம். அன்பழகன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒரு நாள் நேரில் வந்துவிட்டால் வந்ததில் இருந்து பேசுவோம்' என்றும் பதிலளித்துள்ளார்.

https://tamilwin.com/article/ltte-leader-velupillai-prabhakaran-is-alive-1676299192

 

Edited by ஈழப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களுக்கு தலைவர் வேண்டாம் என்றாலும்

இந்திய இலங்கை அரசுகளுக்கு தேவையாக உள்ளது.

அவர்களுக்கு எப்பஎப்ப பிரச்சனைகள் வருதோ அப்போதெல்லாம்

குண்டுகள் கண்டெடுப்பார்கள்

புலிகள் புத்துயிர் பெற உதவினார்கள் என்று கைதாவார்கள்

இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்.

இதுக்கு தான் அண்ணா 
த‌லைவ‌ரின் நாட‌க‌ம் அர‌ங் ஏற்ற‌ ப‌டுது.............. 

13 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களுக்கு தலைவர் வேண்டாம் என்றாலும்

இந்திய இலங்கை அரசுகளுக்கு தேவையாக உள்ளது.

அவர்களுக்கு எப்பஎப்ப பிரச்சனைகள் வருதோ அப்போதெல்லாம்

குண்டுகள் கண்டெடுப்பார்கள்

புலிகள் புத்துயிர் பெற உதவினார்கள் என்று கைதாவார்கள்

இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்.

சிந்த‌னைக‌ள் ப‌ல‌ வித‌ம் அதில் இது ஒரு வித‌ம்

இப்ப‌டி யோச‌னை கால‌ என‌க்கும் வ‌ந்த‌து எழுத‌ வில்லை

அதை நீங்க‌ள் ச‌ரியாக‌ எழுதி உள்ளீர்க‌ள் அண்ணா

ந‌ன்றி..................🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரஞ்சித் said:

இதன் அர்த்தம் என்ன? தலைவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்கிறீர்களா? 

ஆம் இறுதித் தினங்களில் அவர் மிகவும் தனிமையையே விரும்பினார் யாரையும் சந்திக்க விரும்பவில்லை கஸ்ரோ ஓரளவு தொடர்பில் மற்றவர்களை ஒப்பிடும்போது மிக அண்மையிலேயே இருந்தார் ஆனால் அவரையும் இறுதி நேரத்தில் பார்க்கவிரும்பவில்லை யாரோடோ தொடர்பை ஏற்படுத்தி நான் போராட்டத்தில் எனது பிள்ளைகள் இருவரையும் பலிகொடுத்துவிட்டேன் எனக்கூறியாதாக அப்போதிருந்தவர்கள்மூலம் வெளியே வந்த தகவல். 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு அங்கிருந்கு தப்பி புலம்பெயர்தேசங்களுக்கு வந்த போராளிகளில் மூத்த போராளிகளுக்கு இப்படியான நினைவுகளே இங்கிருந்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வேலைகளைச் செய்தவர்கள் மீது கோபமும் அதிரிப்தியும் வரக்காரணம் அதைவிட புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக லண்டனில் ப்ல ரில்லியம் பவுண்டுகள் பெறுமதியான சொத்துக்கள் அப்படியானவர்களால் கையாடப்பட்டது இதற்குக்காரணம் .

பதினெட்டாம் திகதி எனக்கு வந்த தகவலின்படி 

"அண்ணா, தலைவர் இனிமேல் சாமியாராக மாறி ஆன்மீகத்தில் உண்மையாகவே ஈடுபட்டாலும்கூட இந்தச் சர்வதேசமும் அதன் வலைப்பின்னலும் அவரை விட்டுவைக்காது மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள், இல்லடியான நிலைக்கு நாமும் ஒரு பொறுப்பே எனக்கூறி முடித்துக்கொண்டார்.

ஆம் தலைவரதும் அவரது தன்னிகரல்லாப் போராட்ட வழிமுறைகளையும் இல்லாதொழிச்சதில் புலம்பெயர் புலிவால்களுக்குப் பாரிய பொறுப்பு இருக்கு அதில் சிலவேளை நானும் உட்படுவேன் என நினைக்கிறேன்.

உங்கள் கேள்விக்கு இது சரியான பதில் இல்லை மன்னிக்கவும்

இப்போதும் தூக்கமில்லா இரவுகளில் தவறுகள் பேயாய்ப் பயமுறுத்துகின்றன.

தண்ணீர்விட்டோ வளர்த்தோம்

 

  • Sad 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறார்  இல்லை என்பதெல்லாம் காலத்துக்கு காலம்   ":தேவைகளுக்கு"  ஏற்ப சொல்லப்பட்டு வருகிறது. 

Edited by நிலாமதி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காசி ஐயா கனகச்சிதமாக வேலை  செய்கிறார்.

90 ஆம் ஆண்டு தீவிரமாக துவங்கிய நோய் 2009களில் நிறைவடைந்து,

இன்னும் துரோக சிந்தனைகளும், ஆரவாரங்களும் ஏன்?

வெளிப்படையாக உங்களது தமிழினம் சார்ந்த பொது வேலை அனைத்தும் (***காசி அய்யா உங்களது பொதுப்பணி 2001  முடிவுற்றது***) 2009 இல்லாமல் போய்விட்டது இன்னும் உங்களை தன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

தமிழர் எழுச்சி தானே தனக்குரிய பாதையினை உருவாக்கி விட்டது.

இறையாகி,இயற்பியலை தூண்டி  சுதந்திரமாக காலசக்கரத்தை  ஆக்கிரமித்து அக நிறைகளின் ஈர்புடன்,

எழுச்சி காலம் தானாகவே கனிந்து வரும் நேரத்தில்,

காசி ஐயா ,

உங்களுக்கு ஏன் இந்த வியாபாரம்?

தயவு செய்து நிறுத்துங்கள்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் உயிரோடிருப்பதாக என்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை!" - வைகோ

தமிழ்நாட்டில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்' என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், ``தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்" என்று கூறியிருந்தார்.

ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் முற்றிலுமாக மறுத்து, பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக, பிபிசி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், பிரபாகரன் குறித்து பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தன்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள், பழ.நெடுமாறனின் செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்று அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

வைகோ
 
வைகோ

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது" என்று வைகோ கூறியிருக்கிறார்.

"பிரபாகரன் உயிரோடிருப்பதாக என்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை!" - வைகோ | mdmk leader Vaiko on Nedumaran's latest information about Prabhakaran - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இதன் அர்த்தம் பிரபாகரன் இனி வேண்டாம் என்பது தானே தம்பி??

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரிகள் சொல்வது உண்மையாகி விடும் .. தலைவர் இருக்கிறார் ,திரும்பி வருவார் என்று சொல்பவர்கள் அவரை அவமதிக்கிறார்கள் என்று உங்களுக்கு விளங்கவில்லையா அண்ணா?

6 hours ago, விசுகு said:

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை விட்டு விடுவோம்

தலைவர் மீண்டும் வந்தால் ஆயுதத்தை தான் கையில் எடுப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்??  

நமக்கே அறிவாயுதம் பற்றிய தெளிவிருக்கும்போது????

கடந்த கால அனுபவங்களை வைத்து தான் ...அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று எனது அசைக்க முடியா நம்பிக்கை ...அப்படி அவர் உயிரோடு இருந்தால் எங்கேயாவது அமைதியாய், நிம்மதியாய் இருக்கட்டும் ...பாழாய் போன இம்மக்களுக்காய் போராடி கண்ட பலன் என்ன ?

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து நெடுமாறன் உசுரோட இருக்கார்னு தெரியுது…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பாழாய் போன இம்மக்களுக்காய் போராடி கண்ட பலன் என்ன ?

சொந்த குடும்பத்தை பலிகொடுத்ததுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கடந்த கால அனுபவங்களை வைத்து தான் ...அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று எனது அசைக்க முடியா நம்பிக்கை ...அப்படி அவர் உயிரோடு இருந்தால் எங்கேயாவது அமைதியாய், நிம்மதியாய் இருக்கட்டும் ...பாழாய் போன இம்மக்களுக்காய் போராடி கண்ட பலன் என்ன ?

உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

ஆம் இறுதித் தினங்களில் அவர் மிகவும் தனிமையையே விரும்பினார் யாரையும் சந்திக்க விரும்பவில்லை கஸ்ரோ ஓரளவு தொடர்பில் மற்றவர்களை ஒப்பிடும்போது மிக அண்மையிலேயே இருந்தார் ஆனால் அவரையும் இறுதி நேரத்தில் பார்க்கவிரும்பவில்லை யாரோடோ தொடர்பை ஏற்படுத்தி நான் போராட்டத்தில் எனது பிள்ளைகள் இருவரையும் பலிகொடுத்துவிட்டேன் எனக்கூறியாதாக அப்போதிருந்தவர்கள்மூலம் வெளியே வந்த தகவல். 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு அங்கிருந்கு தப்பி புலம்பெயர்தேசங்களுக்கு வந்த போராளிகளில் மூத்த போராளிகளுக்கு இப்படியான நினைவுகளே இங்கிருந்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வேலைகளைச் செய்தவர்கள் மீது கோபமும் அதிரிப்தியும் வரக்காரணம் அதைவிட புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக லண்டனில் ப்ல ரில்லியம் பவுண்டுகள் பெறுமதியான சொத்துக்கள் அப்படியானவர்களால் கையாடப்பட்டது இதற்குக்காரணம் .

பதினெட்டாம் திகதி எனக்கு வந்த தகவலின்படி 

"அண்ணா, தலைவர் இனிமேல் சாமியாராக மாறி ஆன்மீகத்தில் உண்மையாகவே ஈடுபட்டாலும்கூட இந்தச் சர்வதேசமும் அதன் வலைப்பின்னலும் அவரை விட்டுவைக்காது மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள், இல்லடியான நிலைக்கு நாமும் ஒரு பொறுப்பே எனக்கூறி முடித்துக்கொண்டார்.

ஆம் தலைவரதும் அவரது தன்னிகரல்லாப் போராட்ட வழிமுறைகளையும் இல்லாதொழிச்சதில் புலம்பெயர் புலிவால்களுக்குப் பாரிய பொறுப்பு இருக்கு அதில் சிலவேளை நானும் உட்படுவேன் என நினைக்கிறேன்.

உங்கள் கேள்விக்கு இது சரியான பதில் இல்லை மன்னிக்கவும்

இப்போதும் தூக்கமில்லா இரவுகளில் தவறுகள் பேயாய்ப் பயமுறுத்துகின்றன.

தண்ணீர்விட்டோ வளர்த்தோம்

 

என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
என் வாழ்வில் எதையெல்லாம் வாசிக்க/கேட்க/பார்க்க கூடாது என நினைத்தேனோ அதெல்லாம் கண்முன்னே நிகழ்கின்றது.

இதெல்லாம் பொய்யாக இருக்கக்கூடாதா என மனம் தவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நம்பிக்கை

 

2 hours ago, ரதி said:

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரிகள் சொல்வது உண்மையாகி விடும் .. தலைவர் இருக்கிறார் ,திரும்பி வருவார் என்று சொல்பவர்கள் அவரை அவமதிக்கிறார்கள் என்று உங்களுக்கு விளங்கவில்லையா அண்ணா?

கடந்த கால அனுபவங்களை வைத்து தான் ...அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று எனது அசைக்க முடியா நம்பிக்கை ...அப்படி அவர் உயிரோடு இருந்தால் எங்கேயாவது அமைதியாய், நிம்மதியாய் இருக்கட்டும் ...பாழாய் போன இம்மக்களுக்காய் போராடி கண்ட பலன் என்ன ?

உங்கள் கருத்தை மதிக்கிறேன்

இவ்வாறான நேரடியான பதிலையே நானும் கேட்டேன். நன்றி.

மீண்டும் சொல்கிறேன்

முள்ளிவாய்க்காலில் தலைவர் எடுத்த முடிவு ஒரு தீர்க்கதரிசியான தலைவரால் மட்டுமே முடியும். அன்றிலிருந்து அவர் எனக்கு கடவுள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரபாகரன் போனால்.. ஆயிரம் பிரபாகரன்கள் உருவாவார்கள் என்று முழங்கின இனத்தில் இருந்து இன்று வரை இன்னொரு பிரபாகரனை அடையாளம் காணவே முடியவில்லை.. ஏன் பிரபாகரன் தன் மக்களுக்காக சுமந்த இலச்சியத்தைக் கூட சுமக்க ஒருவரும் இதய சுத்தியோடு இல்லை. இதுதான் தமிழர்களின் நிலை.

ஆனால்.. இலங்கையில் பிரபாகரன் உருவாக முன்னிருந்த அதே அரசியல் இராணுவச் சூழல் தான் இப்பவும் இருக்கிறது. அது தமிழீழ மண்ணிலும் நிலவுகிறது. அடிமைத்தனமும்.. ஆக்கிரமிப்பும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க அரசியல்.. மத வெறி தான் நாட்டை ஆளுகிறது. அடிமைத்தனமும் ஆக்கிரமிப்புத் திமிரும் தலைவிரித்தாடுகிறது.

இந்தச் சூழலில்.. பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பைக் கூட சகிக்க முடியவில்லை.. தமிழினத் துரோகிகளாலும்.. தமிழினப்படுகொலையாளர்களாலும். 

செத்துப் போன 13ம் தூக்கி வைச்சுக் காவடியாடும் ஹிந்தியாவும்.. ரணிலும்.. அதற்கு எதிர்ப்புக்காட்டுவதாகப் பாசாங்கு செய்யும்.. சிங்கள பெளத்த பேரினவாதமும் ஆடும் ஆட்டத்துக்கு ஒரு வேளை.. இந்த அறிவிப்பு.. ஒரு சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் என்ற தோறணையில் கூட இது அறிவிக்கப்பட்டிருக்கக் கூடும்.

நிச்சயமாக.. ஏதோ ஒரு அரசியல் தேவைக்காவே தான் இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டுள்ளது. இது ஹிந்திய உளவுத்துறை சார்ந்து அதன் இரட்டை நோக்கிற்காகக் கூட வெளிவந்திருக்கலாம். 

ஆனாலும்.. எம்மவர்களில் கூட  பலரும்.. பிரபாகரன் என்றால்.. போர் என்று நினைக்கிற அளவுக்கு எம்மவர்களின் மனநிலை இருப்பது மிகக் கேவலம். பிரபாகரன் போரை செய்யவில்லை. தமிழ் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதத்தால்.. திணிக்கப்பட்ட இனக்கலவரங்களும் படுகொலைகளும் இன ஒடுக்குமுறைகளும் கண்டு அதற்கு எதிராக செயற்பட்டது தான் பிரபாகரன். மாறாக அதைச் செய்தவர்களுக்கு வால்பிடிச்சு அமைச்சர் பதவியோ.. அரச பதவியோ வகித்து இனத்தை காட்டிகொடுக்கவோ.. அழிக்கவோ இல்லை.

இன்று 13 ஐ சாட்டி.. சிங்கள பெளத்த பேரினவாதம் ஒரு இனக் கலவரத்துக்கு தூபமிடும் வகையில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கும் சமயத்தில்.. இந்த அறிவிப்பு வந்திருப்பது.. நிச்சயம் சில பிராந்திய அரசியலுக்காக தேவைகளுக்காக இருக்கலாம். உண்மையாக இருந்தால் கூட சொந்த இனத்துக்காக இதய சுத்தியோடு போராடிய தலைவர் நீடுழி வாழ வாழ்த்தவே வேண்டும். அதற்காக தலைவர் போர் படை பீரங்கியோடு வருவதாக ஏன் கற்பனை செய்கிறீர்கள்...??!

சிறைக்குச் சென்ற பயங்கரவாதி நெல்சன் மண்டேலா... சிறையில் இருந்து வந்த போது.. உலகம் மெச்சும் சனநாயகவாதியாகவே வெளியே வந்தார். ஆனால்.. தனது இலச்சியத்தை கைவிடவில்லை. காப்பாற்றி அதனை சாத்தியப்படுத்தினார். 

ஆனால்.. தலைவரை நேசிக்கிறோம் என்ற போர்வையில்.. அவரின் இருப்புப் பற்றிய அறிவிப்பை.. போர் வரவாகக் காட்டி கதறுபவர்களை நினைக்கையில்.. எப்படியான ஒரு சனக்கூட்டத்துக்காகவா இவ்வளவு ஈகங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியே எழுகிறது. அதேவேளை தமிழின அடக்குமுறைக்கு உந்தப்பட்ட ஒவ்வொரு சிங்களப் படைவீரனையும் சிங்களவர்கள் இப்பவும் போர்.. இழப்பு.. இவற்றுக்கு அப்பால் நேசிப்பதை காண்கையில்.. தமிழர்கள் சிங்களவனின் உச்சாவை தான் குடிக்கனும். இன மான ரோசம் வருவதற்கு. 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

 

ஒரு பிரபாகரன் போனால்.. ஆயிரம் பிரபாகரன்கள் உருவாவார்கள் என்று முழங்கின இனத்தில் இருந்து இன்று வரை இன்னொரு பிரபாகரனை அடையாளம் காணவே முடியவில்லை..

 

 

நீங்கள் யாழ் கருத்துக்களத்தை இன்னும் முழுமையாக பார்க்க தொடங்கவில்லை போல. 

அதுசரி, பிரபாகரன் ஏன் பழ. நெடுமாறனுடன் மட்டும் தொடர்பில் உள்ளார்?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுப்புதான் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே. சந்தர்ப்பம் இருந்தால் சிங்கத்திடம் ரெண்டு கேள்விகள் கேட்கலாம் என்ற நினைப்பில் தான் போனேன். அதுவும் தவிர கனடாவில் வசிக்கும் மனோரஞ்சன் எனப்படும் முன்னாள் ENTLF நபரை  (புலிநீக்க அரசியல் சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்), இவரையும் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் இருந்த படியால் போனேன். அனுரகுமார  வழமையான அரசியல்வாதிபோல் சிங்களத்துக்கான அரசியலை பேசினார். தமிழருக்கு அரசியல் பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தால் கிலோ எத்தனை ருபாய் என்பது போலத்தான் அவரின் பேச்சு இருந்தது. சிங்களம் ஆராவாரமாய் கைதட்டியது. மனோரஞ்சன் அனுரகுமாராவை விட அழகான நேர்த்தியான சிங்கள மொழியில் அனுராவுக்கு புகழாரம் சூட்டி செம காமெடி பண்ணி இருந்தார்.  தமிழர்கள் சார்பில் கேட்கப்பட்ட இன்றைக்கும் தொடரும் அநீதிகள் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் சிங்கனிடம் பதில் இல்லை. வெறும் சடையில் தான் இருந்தது. ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் சகோதரத்துவ சக ஜீவன சுகவாழ்வு பற்றி சிங்கம் பேசப் பேச ... வந்திருந்த சிங்களம் அவரை ஆபத்பாந்தவராக கைநீட்டி, உச்சம்குளிர்ந்து  ஜயவேவா...ஜயவேவா கோசம் போட்டது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும் என்று விழா ஒருங்கிணைப்பாளரை  பார்த்து நக்கலாக சிரித்து, உருத்தும் படி சில விடயங்களை சொல்லிவிட்டு நான் பார்க்கிங் லாட் நோக்கி நடையை கட்டினேன்.  எதிரில் தெரிந்த எல்லா சிங்களவரும் எதிரியை போல தெரிந்தார்கள்!!!
    • ஓம் விக்னேஷ் வரைய நமக ஓம் விக்னேஷ் வரைய நமக சந்தன சேற்றின் மகிமை கண்டாயா சண்முக அண்ணன்  
    • ஈழத்து இசைப்பரப்பில் தவிர்க்க முடியாத ஆனால் ஆர்ப்பாட்டமில்லா ஆளுமை     பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ஓரிரு நாட்களுக்குள்ளே அவர் மறைந்த நாள் வந்தது. நெஞ்சம் கனக்கிறது. "பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது" அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் காலத்தாலும் அழிக்க முடியாதது. அவை பற்றி விரைவில் பதிவிடுவேன். அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய இசைப் பணிகளில் சிலவற்றைத் தகவலுக்காக இங்கே பதிவிடுகிறேன். 1.இந்திய அமைதிப் படை ஆக்கிரமித்திருந்த 80களின் இறுதியில் சுய முயற்சியாக விடுதலைப் பாடல் தொகுப்பு. (இதன் தலைப்பு நினைவிலில்லை) 2. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த"ஓ.... மரணித்த வீரனே" பாடல் சில மாற்றங்களுடன் மீள் ஒளிப்பதிவு. 3.1994 இல் "பிஞ்சுமனம்" திரைப்படத்திற்கு இசையமைப்பு. இது தான் அவர் இசையமைத்த முதல் திரைப்படம். 4. 1995இல் கலைண்பாட்டுக் கழகம்- மகளிர் பிரிவு தயாரித்து வெளியிட்ட இவர் இசையமைத்த "நெருப்பு நிலவுகள்" இசைப் பாடல் தொகுப்பு. 5. 1995இல் "திசைகள் வெளிக்கும்" திரைப்படத்திறகு் இசையமைத்தமை. ஆம். அருமையான மனிதர். அமைதியில் உறங்கட்டும்...! "ஈழத்துத் திரைத்துறையின் அஞ்சலிகள்"   ---> Kesavarajan Navaratnam ()      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.