Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார்.

கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.

விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் உரிமை

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார். 

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார் | Vikrmabahu Paassed Away

 இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.

அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.

இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://tamilwin.com/article/vikrmabahu-paassed-away-1721874586

  • கருத்துக்கள உறவுகள்

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்

Published By: DIGITAL DESK 3   25 JUL, 2024 | 09:27 AM

image
 

நவ சமசமாஜ கட்சியின் (Nava Sama Samaja Pakshaya NSSP) தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தனது 81 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருணாரத்ன 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.

1977 இல், நவசமசமாஜக் கட்சியை (புதிய சமூக சமத்துவக் கட்சி) ஸ்தாபிப்பதற்காக வாசுதேவ நாணயக்கார உட்பட லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) மற்ற முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டார். இலங்கையின் அரசியலில் அவரது பங்களிப்புகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/189311

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 🙏 ஒம் சாந்தி 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது! உண்மையை உரக்கக் கூறிய விக்கிரமபாகு கருணாரத்ன!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

thumbnail_IMG_0186.jpg

(உண்மையை எப்போதும் உரக்கக் கூறிய நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.

விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

வந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா?” என வெளிப்படையாகவே அவர் சவால் விடுத்திருந்தார்.

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒலித்த குரல் இன்று மறைந்தது. சிங்கள பேரினவாத தலைமைகளுக்கு மத்தியில், ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன பிரச்சினைக்களுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் தனித்து நின்று குரல் கொடுத்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.

சிங்கள இனத்தவராக இருந்தாலும் அவருடைய மறைவு தமிழ் மக்களுக்கு ஓர் பேரிழப்பாகவே அமையும். ஈழத் தமிழரின் விடுதலையையும், உரிமைகளையும் சிங்கள மக்கள் அறியும்படி செய்த பெரும் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களாவார்.

தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல எனவும், இது தொடர்பில் செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் அவர் முறையிட்டிருந்தார்.

ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணம் பெரும்பான்மை இனத்தவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோல தான் வடக்கு மற்றும் கிழக்கிலும்.

வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத தலங்களின் ஊடாகவும், மத வழிப்பாடுகளுடனும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான தன்மையே கிழக்கிலும் காணப்படுகிறது.

இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது அனைவரும் அறிந்த விடயமே என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

நீண்டகாலமக சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் பல தவறான செயற்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதுடன் அவற்றிற்கு எதிராகவும் போராடினார். அத்துடன் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை உலகறிய செய்ததில் இவருக்கும் ஒரு பாரிய பங்குண்டு.

ஈழப்போர் மௌனிக்கப்பட்ட 2009 இன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்தை சிங்கள அரசும் பறைசாற்றி வந்தது. இது

முற்றிலும் தவறானது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

அவரின் மறைவின் பின்னரும் இலங்கையின் யதார்த்த அரசியலையும் ஆளுமையையும் அவர் வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=285324

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

சிங்களத்தில் எமக்கான குரல் ஒன்று ஓய்ந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக தமிழர்களுக்கு குரல் கொடுத்த மனிதன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர் விக்கிரமபாகு. 

எப்போதும் தமிழர்களுக்காக குரல்கொடுத்த  விக்கிரமபாகு அவர்களுக்கு அஞ்சலி.

ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்களே, வந்தேறு குடிகள் சிங்களவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பேன் என பகிரங்கமாக கூறி வந்தவர் நவசமாஜ கட்சித்தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன நண்பர்கள் பட்டியலில் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு தனியிடமுண்டு - சித்தார்த்தன்

25 JUL, 2024 | 04:37 PM
image
 

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இடதுசாரித் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது என நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நவ சமசமாஜ கட்சியின் தலைவராக தனது 81ஆவது வயதில் காலமான அவர், தமிழ் மக்களது சுய நிர்ணய அடிப்படையிலான ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் குரல் கொடுத்துவந்த ஒருவர். 

எங்களுடைய செயலதிபர் உமாமகேஸ்வரனுடனும் பிற்பாடு என்னுடனும்  மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அவர், தனது இறுதிக் காலம் வரையிலும் அந்த உறவுகளை பேணி வந்தார்.

தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகள், இராணுவத்தின் வசமிருக்கும் நிலங்களை உரிமையாளர்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களுக்காக உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் மிக தீவிரமாக குரல் கொடுத்து வந்தார். 

தமிழ் மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன நண்பர்கள் எனும் பட்டியலில் அமரர் தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு என்றென்றும் தனித்துவமான இடமிருக்கும். 

இவருடைய இழப்பு இலங்கையில் இருக்கும்  இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, தங்களின் அடிப்படை உரிமையை கோரி நின்று போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/189364

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........! 

வாக்களிக்கும் வயதை அடைந்த பின் நான் இலங்கையில் வாக்களித்த போது, இவருக்கு மட்டுமே (கொழும்பில்) வாக்களித்து இருந்தேன். அதன் பின் எந்த சிங்கள தலைவர்களுக்கும் நான் வாக்களித்தது கிடையாது.

மஹிந்த காலத்தில் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளானார்.

இறுதி வரைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனாலும், அதே தமிழ் மக்களால் புறக்கணிப்பட்டவரும் ஆவார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாரத்ன போன்றவர்களின் நியாயமான அரசியல் தென்னாசியாவின் (ஆரிய மாயை) கூட்டத்துக்கு  சரி வராது.

ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இறுதி வரைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனாலும், அதே தமிழ் மக்களால் புறக்கணிப்பட்டவரும் ஆவார்.

லண்டனில் நடைபெற்ற மாவீரர் கூட்டத்தில் ஒரு முறை சிறப்புரை இவர்தான் அதன் பின் திரும்பி  கொழும்பு சென்றபோது இனவாத சிங்களவர்களால் தாக்கபட்டார் அதன் பின்னரும் தமிழர்களுக்கு ஆதரவாகவே இருந்தார் .

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

இவரால் தான் நவ சம சமாஜக் கட்சி மீதும், அதில் இருந்தோர் மீதும் பெரும் மதிப்பு உண்டாகியது. பின்னர் அந்தக் கட்சியில் இருந்த வாசுதேவ தடம் மாறி, ஒரு சாதாரண பெரும்பான்மை அரசியல்வாதி ஆகினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு இந்த புலமைப் பரிசிலில் போய், கலாநிதிப் பட்டம் பெறும் வாய்ப்பு வருடத்திற்கு இலங்கையில் ஒருவருக்கு வழங்கப்படும். திறமை தான் அளவுகோல், இனப்பாகுபாடு அங்கில்லை. மூவினத்திலிருந்தும் போய் இருக்கின்றார்கள். ஆனால் இவர் அங்கிருந்து திரும்பி வந்தும் இடதுசாரியாகவே இருந்தது ஆச்சரியம். ரோஹண சோவியத் யூனியன் போய் வந்தவர் என்று ஞாபகம்.   

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் விக்கிரமபாகு - தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுதாபம்

Published By: DIGITAL DESK 7   25 JUL, 2024 | 07:19 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த மாமனிதரான சிறந்த முற்போக்கு அரசியல்வாதியான  விக்கிரமபாகு கருணாரட்னவை  தமிழர்கள் இழந்துள்ளதாக கருதுகிறோம். அவரது மறைவுக்கு இந்த உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

இந்த நாட்டில் சிறந்த இடதுசாரி கொள்கையுடையவராக வாழ்ந்து, மண்ணோடும், மக்களோடும் வாழ்ந்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மண்ணில் இருந்து விடைப் பெற்றுள்ளார்.

81 ஆவது வயதில் காலமான விக்கிரபாகுவை இந்த சபையில் நினைவு கூர்கிறேன். சிறந்த இடதுசாரி கொள்கைவாதியும், நவசமசமாஜக்  கட்சியின் தலைவரும், ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதி வரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்த முற்போக்கு அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரட்னவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

தமிழர் பிரச்சினையில் ஒரே கொள்கையை கடைபிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தவர். சிங்கள தேசிய இனத்தில் பிறந்த இனவாதமற்ற பெருமனிதர். இந்த நல் மனிதரை இந்த தேசம் இழந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தனமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த மாமனிதரை தமிழர்கள் இழந்துள்ளதாக கருதுகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/189376

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

large.IMG_6892.jpeg.271ac94ac890a6ec302b

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கள் இனத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி... சென்று வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி தமிழ் மக்களுக்காககடைசி வரை கத்தி கொண்ட சிங்கள இடது சாரிக்கு நம்ம தமிழ் அரசியல் வாதிகள் என்ன மரியாதை  கொடுத்தார்க\ல்;  ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் இருந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமயை ஓங்கி ஒலித்த குரல் மெளனமாகிவிட்டது.ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.