Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனங்காயின் முடிவு,

Featured Replies

பனங்காயின் முடிவு,

சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன்.

பெயர்; பனக்காய்

பாஸ்வார்டு; watchyarl

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி பனங்காய். ஆனால் உங்களின் கடவுசச்சொல்லை மீண்டும் ஒரு தடவை தரமுடியுமா?? வேலை செய்யவே இல்லை... வேறு யாராவது ஆட்டையைப் போட முன், என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் என்ன!

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு அதி உன்னதமான பதவியை கொடுத்த பனங்காயை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்கள் மாற்றத்துக்கு உண்டு பண்ணுங்கள்

எமக்கும் வெட்டுவிழுந்துள்ளது

ஆனால் தங்களது எழுத்துக்களில் எந்தவித ஒழுங்குகளையும் இதுவரை நான் கண்டதில்லை.

எனவே கைவிரலை நீட்டும்முன்பு 4 விரல்கதைக்கான மாற்றத்தினை நீங்கள் ஏற்படுத்துவதே சிறந்தது.

மற்றும்படி தங்களின் வெளியேற்றத்தை நான் ஆதரிக்கவில்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனிப்பட்ட முறையில் உங்களின் இந்த முடிவை ஆதரிக்கவில்லை.

இங்கு எழுதும் பலரினதும்.. கருத்துக்கள்.. பல வித சூழ்நிலைகளில் நிர்வாகத்தால் அகற்றப்பட்டே வந்துள்ளன. உங்களுக்கு மட்டும் இந்த நிலை என்றில்லை.

யாழ் நிர்வாகம் அரசியல் ரீதியில் இப்போது ஒரு தளர்வான போக்கையே கடைப்பிடிக்கிறது. அதேவேளை அவதூறான.. புலிக்காய்ச்சல்... ஆக்கங்கள்.. எழுத்துக்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பதற்கு இது நேரமல்ல.

புலியோ.. எலியோ பாதிக்கப்பட்டது அனைவரும் தமிழர்கள். சிங்களவர்கள் கட்சி பிரதேச வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து தமிழ் மக்களை அழிக்கும் அதேவேளை தமிழர்களோ கட்சி மாற்றுக்கருத்து.. ஜனநாயகம்... பிரதேசவாதம்.. புலம்பெயர்... வன்னி.. யாழ்ப்பாணம்.. திருமலை... மட்டக்களப்பு என்று பிரிந்து நின்று சிங்களம் வேட்டையாட உதவி செய்து வருகின்றனர்.

அடிப்படையில் அடிவாங்கும் இனம் ஒன்றிணைவதே வழமை. ஆனால் அவன் நல்லவண்டா என்று சொல்லி அடிக்கிறான் என்று அடிவாங்கும் நிலையில் தமிழர்களை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் கருத்துக்களை நிதானமாகவும்.. இனத்துக்கு உபயோகமாகவும் முன் வைப்பது ஒவ்வொருவரினதும் கடமை.

ஒரு சிலரை மாற்ற முடியாது எனும் போது அவர்களை விட்டுவிட்டு உண்மைகளை உணர்ந்து உணர்வுகளால் இணைந்து மாறக் கூடியவர்கள் எனியும் தமிழர்களின் எதிரிகளுக்கு மறந்தும் உதவும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.

அந்த வகையில் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து உருப்படியான விடயங்களை பேசி யாழோடு சக கள உறவாக இணைந்திருக்க வேண்டுகிறேன்.

நன்றி.

Edited by nedukkalapoovan

எமது கருத்துக்களை அகற்றியதால் நாம் விலகுவதா? இல்லை, விலகக்கூடாது.

மாறாக எமது கருத்தை எவ்வாறு நீக்கமுடியாத மாதிரி பதிய வேண்டும் என பார்த்து பதிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு துரோகி பட்டம் கட்டுவதற்கு பதிலாக அதனை மாற்ற ஆக்கபூர்வமாக ஏதாவது எழுதலாமே?

யாழில் பலரது கருத்தும் வெட்டப்பட்டுள்ளது (என்னுடையதும் தான்).மீண்டும் அதே கருத்தை சொல்லாமல் விட்டிருக்கிறோமா?

பனங்காய், பட்டம் கொடுப்பதை விடுத்து மீண்டும் யாழில் வந்து எழுதவும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயின் முடிவை நான் வரவேற்கிறேன்...பனங்காய் போய் தேங்காயாய் வர வாழ்த்துகிறேன் :icon_idea::icon_idea::lol:

அட என்ன இது சின்னபுள்ளையாட்டம்... பனங்காய் போகாதீங்க

பனங்காயின் முடிவை நான் வரவேற்கிறேன்...பனங்காய் போய் தேங்காயாய் வர வாழ்த்துகிறேன் :icon_idea::icon_idea::lol:

பனங்காய் பனம்பழம் ஆகத்தானே ஆக முடியும், எப்படி தேங்காய் ஆகலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முடிவை மீளாய்வு செய் வது நன்று ......

சக கருத்தாளர்களை மண்டையில் போடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக எழுதுகின்ற பனங்காய் யாழ் கருத்துக்களத்தில் நின்று மினக்கடுவதைவிட வன்னிக்கு நேரில் சென்று தனது திறமைகளை காட்டுவதே சிறந்தது. :icon_idea: ரவுடீசம் செய்வதற்கு கருத்துக்களம் தேவையில்லை. கருத்துக்களத்தில் ஆரோக்கியமான வகையில் கருத்துக்களை, சிந்தனைகளை மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

பனங்காய் “உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதும்போது பதில் கருத்தாக “அதற்குமுன் உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதுவதற்கு அதிகநேரம் எடுக்காது. சக கருத்தாளர்களினாலும் ரவுடித்தனமாக எழுதமுடியும் என்பது பனங்காயிற்கு விளங்கவில்லை.

வெற்று உணர்வுகள் பயன் தரப்போவதில்லை. வெற்று உணர்வுகள் மூலம் தாயக மக்களிற்கு எதுவித பயனும் ஏற்படப்போவது இல்லை. வெட்டுவேன், கொத்துவேன், குத்துவேன், கிழிப்பேன் என்று புலம்புவதற்கு பனங்காய் யாழ் கருத்துக்களத்திற்கு வந்து மினக்கடவேண்டுமா? :icon_idea:

Resistant for Change என்பது வியாபார உலகில் முக்கியமாக கவனம் கொடுத்து ஆலோசிக்கப்படுகின்ற விடயம். நேற்றுப்போல் இன்று காணப்படாது, இன்று போல் நாளை காணப்படாது. இது உலக நியதி. எமது வாழ்க்கையே தொடர்ச்சியாக மாற்றங்கள் நிகழ்கின்ற ஓர் செயன்முறை.

தனது கையெழுத்தில் இவ்வாறு கூறுகின்ற பனங்காய் மூலம் தாயக மக்களிற்கு அல்லது தமிழ்ச்சமூகத்திற்கு ஆக்கபூர்வமான வகையில் எவ்வாறு உதவமுடியும்? கீழே இவ்வாறு கூறுகின்ற பனங்காயிற்கு மற்றவனை துரோகி என்று கூறுவதற்கு என்ன அருகதை உள்ளது?

நான் புலத்திற்க்கு வந்தபோது கிடைத்த முதலாவது அட்வைஸ்..... தமிழ்ச்சனியன்களுடன் சேராதே எண்டு........

நான் கேக்கவில்லை...

16 வருசத்துக்கு பிறகு உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது..... தமிழரை கண்டால் தூர விலகுங்கள்..

வாழ்வு நிம்மதியாய் இருக்கும்.......

நேற்று பனங்காய் ஊர்ப்புதினத்தில் இணைத்த செய்தியில் வெளிநாடுகளில் சட்டவிரோதமான செய்கைகளை ஊக்கப்படுத்தும்வகையில் கருத்து காணப்பட்டது.

நாளை யாழ் இணையத்திற்கு சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வந்தால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் கூறுவதற்கு பனங்காய் தயாராக உள்ளாரா?

இது வலைத்தளம்தானே என்னவும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று பனங்காய் நினைக்கின்றாரா? காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து சட்டரீதியாக கடுமையான பிரச்சனைகள் வரும்போது கருத்துக்களத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தின் ஐபி முகவரியை கண்டறிந்து, பின்னர் குறிப்பிட்ட நபரை கண்டறிவதற்கு யாழ் நிருவாகத்தின் அனுமதிகூட காவல்துறைக்கு தேவைப்படாது. யாழ் இணையத்தின் சேவை வழங்கியுடன் காவல்துறை நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும்போது குறிப்பிட்ட சேவை வழங்குனரே தேவையான தகவல்களை வழங்குவார்.

உங்கள் சண்டித்தனங்களை காட்டுவதற்கு யாழ் இணையம் பொருத்தமான ஓர் இடம் இல்லை. யாழ் இணையம் மூலம் தமிழிற்கு, தமிழ் மக்களிற்கு, பல்வேறு பிரச்சனைகளுடன் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு, தாயகத்தில் உள்ள மக்களிற்கு பயனுள்ள வகையில் பலவகையில் சேவையை வழங்கமுடியும்.

Edited by கரும்பு

வீக்கிலீக்க்ஸ் அதிபர் கைதுக்கு பிறகு மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயமாக போய்ட்டுதய்யா இந்த பனங்காய் விவகாரம்.

பனங்காய் களத்தைவிட்டு வெளியேறுறன் என்டு சொன்னதும் '' நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்'' அப்புறம் என்ன எப்படி வெட்டினாலும் தாங்கிக்கிறான்டா உவன் ரொம்ப நல்லவன்டா என்டு என்னை நானே தேத்திக்கிட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய்! சும்மாய் விழல்கதை கதைக்காமல் பேசாமல் இரும் ஐசே

நாங்கள் ஒண்டுக்கொண்டாய் ஒண்டாய் இருப்பம்

சக கருத்தாளர்களை மண்டையில் போடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக எழுதுகின்ற பனங்காய் யாழ் கருத்துக்களத்தில் நின்று மினக்கடுவதைவிட வன்னிக்கு நேரில் சென்று தனது திறமைகளை காட்டுவதே சிறந்தது. :icon_idea: ரவுடீசம் செய்வதற்கு கருத்துக்களம் தேவையில்லை. கருத்துக்களத்தில் ஆரோக்கியமான வகையில் கருத்துக்களை, சிந்தனைகளை மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

பனங்காய் “உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதும்போது பதில் கருத்தாக “அதற்குமுன் உனக்கு நான் மண்டையில் போடுவேன்” என்று எழுதுவதற்கு அதிகநேரம் எடுக்காது. சக கருத்தாளர்களினாலும் ரவுடித்தனமாக எழுதமுடியும் என்பது பனங்காயிற்கு விளங்கவில்லை.

வெற்று உணர்வுகள் பயன் தரப்போவதில்லை. வெற்று உணர்வுகள் மூலம் தாயக மக்களிற்கு எதுவித பயனும் ஏற்படப்போவது இல்லை. வெட்டுவேன், கொத்துவேன், குத்துவேன், கிழிப்பேன் என்று புலம்புவதற்கு பனங்காய் யாழ் கருத்துக்களத்திற்கு வந்து மினக்கடவேண்டுமா? :icon_idea:

Resistant for Change என்பது வியாபார உலகில் முக்கியமாக கவனம் கொடுத்து ஆலோசிக்கப்படுகின்ற விடயம். நேற்றுப்போல் இன்று காணப்படாது, இன்று போல் நாளை காணப்படாது. இது உலக நியதி. எமது வாழ்க்கையே தொடர்ச்சியாக மாற்றங்கள் நிகழ்கின்ற ஓர் செயன்முறை.

தனது கையெழுத்தில் இவ்வாறு கூறுகின்ற பனங்காய் மூலம் தாயக மக்களிற்கு அல்லது தமிழ்ச்சமூகத்திற்கு ஆக்கபூர்வமான வகையில் எவ்வாறு உதவமுடியும்? கீழே இவ்வாறு கூறுகின்ற பனங்காயிற்கு மற்றவனை துரோகி என்று கூறுவதற்கு என்ன அருகதை உள்ளது?

நேற்று பனங்காய் ஊர்ப்புதினத்தில் இணைத்த செய்தியில் வெளிநாடுகளில் சட்டவிரோதமான செய்கைகளை ஊக்கப்படுத்தும்வகையில் கருத்து காணப்பட்டது.

நாளை யாழ் இணையத்திற்கு சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வந்தால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் கூறுவதற்கு பனங்காய் தயாராக உள்ளாரா?

இது வலைத்தளம்தானே என்னவும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று பனங்காய் நினைக்கின்றாரா? காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து சட்டரீதியாக கடுமையான பிரச்சனைகள் வரும்போது கருத்துக்களத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தின் ஐபி முகவரியை கண்டறிந்து, பின்னர் குறிப்பிட்ட நபரை கண்டறிவதற்கு யாழ் நிருவாகத்தின் அனுமதிகூட காவல்துறைக்கு தேவைப்படாது. யாழ் இணையத்தின் சேவை வழங்கியுடன் காவல்துறை நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும்போது குறிப்பிட்ட சேவை வழங்குனரே தேவையான தகவல்களை வழங்குவார்.

உங்கள் சண்டித்தனங்களை காட்டுவதற்கு யாழ் இணையம் பொருத்தமான ஓர் இடம் இல்லை. யாழ் இணையம் மூலம் தமிழிற்கு, தமிழ் மக்களிற்கு, பல்வேறு பிரச்சனைகளுடன் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு, தாயகத்தில் உள்ள மக்களிற்கு பயனுள்ள வகையில் பலவகையில் சேவையை வழங்கமுடியும்.

உங்கள் கருத்துக்கள் இந்த களத்தை விட்டு இந்த உறவை "கலைக்கவேண்டும்" என்ற தொனியுடன் எழுதப்பட்டுள்ளது வருந்தக்கதக்கது. ஏனெனில், அவரும் எமது உறவு, அவரை நாம் பிழை விடும்போது சொல்லித்திருத்தி எம்முடன் இணைத்து செல்வது தான் அழகு, பண்பு.

  • கருத்துக்கள உறவுகள்

.

பனங்காய், உங்கடை கருத்துக்கு வெட்டு விழுகுதெண்டால்.... பெருமைப் பட வேண்டும். :icon_idea:

காய்கிற மரத்துக்குத்தான் கல்லெறி விழும். இதுக்கெல்லாம் பயந்து, மரம் காய்க்காமல் விடுகிறதில்லை.others-209.gif

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை யாழ் இணையத்திற்கு சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வந்தால் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் கூறுவதற்கு பனங்காய் தயாராக உள்ளாரா?

இது வலைத்தளம்தானே என்னவும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று பனங்காய் நினைக்கின்றாரா? காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து சட்டரீதியாக கடுமையான பிரச்சனைகள் வரும்போது கருத்துக்களத்தில் குறிப்பிட்ட ஒரு கருத்தின் ஐபி முகவரியை கண்டறிந்து, பின்னர் குறிப்பிட்ட நபரை கண்டறிவதற்கு யாழ் நிருவாகத்தின் அனுமதிகூட காவல்துறைக்கு தேவைப்படாது. யாழ் இணையத்தின் சேவை வழங்கியுடன் காவல்துறை நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும்போது குறிப்பிட்ட சேவை வழங்குனரே தேவையான தகவல்களை வழங்குவார்.

உங்கள் சண்டித்தனங்களை காட்டுவதற்கு யாழ் இணையம் பொருத்தமான ஓர் இடம் இல்லை. யாழ் இணையம் மூலம் தமிழிற்கு, தமிழ் மக்களிற்கு, பல்வேறு பிரச்சனைகளுடன் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு, தாயகத்தில் உள்ள மக்களிற்கு பயனுள்ள வகையில் பலவகையில் சேவையை வழங்கமுடியும்.

onionroutingfig7.png

Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது .

Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torprojec...ownload.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் அவர்கட்கு நான் நினைக்கிறன் யாழ் களத்தில், தனிப்பட்ட நபர்களை தாக்குதல் செய்தவர் எனும் எச்சரிக்கையுடன்கூடிய அங்கத்தவராக நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வண்அன்ஒண்லி (one & only) அங்கத்தவர் நானாகத்தானிருக்கும் அதுக்காக கோவிச்சுக்கொண்டு போகேல்லை. விமர்சனங்கள் எடுத்தெறிதல்கள் இவைகளதான் ஒருத்தரை சுயமாக நெறிப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இன்று உங்கள் இடுகைகளை ஏற்காத யாழ் இணையம் நாளை உங்கள் கருத்துக்காகக் காத்துநிற்கும் காலத்தை தாங்கள் உருவாக்கலாம். இதுக்குமேல் ஒங்கட விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடமும் போக்க வேண்டான் இங்கையே இருங்கோ.. நமக்குள்ள கருத்து சண்டை வாரது அதை நிர்வாகம் வெட்டுரது எல்லாம் சகஜம் தானே

இதுக்குப் போய் குழந்தை பிள்ளை மாரி யாழை விட்டு போக்க போறேன் என்று சொல்லுறது அழகல்ல :rolleyes:,

வெற என்னதையும் வெட்டியிருந்தால் ஒண்டும் செய்யேலாது விட்டுட்டு போகலாம்,எழுதினதை வெட்டினா திருப்பி எழுதலாம் தானே.

'வெரி ஸ்பெஷல் மெம்பர்' ஆக இருந்து கொண்டு என்ன இது சிறுபிள்ளைத் தனமான முடிவு?????

பல கள உறவுகள் அவர்களின் கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்துள்ளார்கள், ஒரு சிலரை மட்டும் ஏன் கணக்கில் எடுத்து கவலைப்பட்டு கருத்துக் களத்தை விட்டு போகிறீர்கள்?

இன்றைக்கும் நான் எழுதிய ஒரு கருத்து வெட்டப்பட்டுள்ளது. இதுக்கெல்லாம் போய் உணர்ச்சிவசப்பட்டு ........ பீலிங் விட்டிட்டு.....

ஒவ்வொருவரின் கருத்துக்களும் முக்கியம் அதே வேளை யாழ் இணையத்திற்கும் பொறுப்புகள் உண்டு.

பனங்காய் நீங்கள் விலகிப்போவதில் இஷ்டமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை சினம் தவிர்த்து மென்மையாய் கூறுங்கள். விலகும் என்னத்தை விலக்கி விடுங்கள் பனங்காய்!!

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக் அதிபர் பற்றி நான் எழுதினதும்தான் வெட்டுப்பட்டிட்டுது..! :rolleyes: அதுக்காக கோவிச்சுக்கொண்டு போக முடியுமே? :)

நான் இது வரைக்கும் எழுதினது 10482 கருத்தாம்.... ஆனால் Active Posts: 9,076 எண்டு காட்டுது.... அப்படி எண்டால் பாருங்கோவன்... :rolleyes::lol: :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக் அதிபர் பற்றி நான் எழுதினதும்தான் வெட்டுப்பட்டிட்டுது..! :rolleyes: அதுக்காக கோவிச்சுக்கொண்டு போக முடியுமே? :lol:

நான் எழுதினதையும் வெட்டி.... தலைப்பையும் மூடிப் போட்டினம். இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது.

மனம் தளராத விக்கிரமாதித்தனாய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற வேண்டும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.