Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதின் வலி

Featured Replies

இன்றைய நாள் எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாகும் . அதை உங்களிடம் பகிரலாம் என்று நினைக்கின்றேன். நான் வேலை செய்கின்ற தங்கு விடுதியில் (Hotel Mercure ) பலதரப்பட்ட உணவு ரசனைகளையும் , குணாம்சங்களையும் , உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கின்றேன் . ஒருசிலர் எனது கையாலேயே சாப்பிடவேண்டும் என்று அடம் பிடிப்பவர்களும் இருக்கின்றார்கள் . ஜோன் பிரான்சுவா (Johon François ) என்பவரும் அந்த ரகத்தைச் சேர்ந்தவரே . பிரான்ஸ்சின் வட மேற்குப்பகுதியான கப்பல் கட்டும் துறையில் பெயர்போன நகரான செயின் நாசர் (Saint nazer ) பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த ஜோன் பிரான்சுவா . பிரான்ஸ் மின்சாரசபையில் (EDF ) பாரிஸ்சின் தென்மண்டல நிறைவேற்று இயக்குனராக இருக்கின்றார் . வேலை நிமித்தம் பாரிஸ்சுக்கு அடிக்கடி வந்து எமது தங்கும் விடுதியில் நிற்பவர் . நீண்டகாலமாக , நான் காலை உணவைக் கொடுத்தால்தான் சாப்பிடும் ரகம் . அவர் சாப்பிடும் பொழுதே இருவருக்கும் இடையில் உள்நாட்டு , வெளிநாட்டு அரசியல் தூள் பறக்கும். சிலவேளைகளில் குடும்பத்துடன் வந்து நிறபதால் , குடும்பத்தாரும் என்னைத் தங்களில் ஒருவராகப் பார்த்து வந்தனர் . இன்று காலை நான் வேலை செய்துகொண்டிருந்தபொழுது , வழக்கத்துக்கு மாறாக ஜோன்பிரான்சுவாவிடம் இருந்து தனது அறைக்கு காலை உணவை எடுத்து வரும்படி தொலைபேசியில் கேட்டார் . நான் உணவு சாலையில் உள்ள வாடிக்கையளர்களை கவனிக்கும்படி எனது உதவியாளரிடம் சொல்லி விட்டு அவருடைய காலை உணவைத் தயாரித்துக் கொண்டு ஐந்தாம் மாடியிலுள்ள அவரது அறைக்கு லிப்ற் ( தமிழ் தெரியாது ) ஆல் போய் அவரது கதவைத் தட்டினேன் . கதவு திறக்கப்படவில்லை . பதில் இல்லாதபடியால் எனது இலத்திரனியல் மட்டையால் கதவைத் திறந்தேன் . அங்கே ஜோன்பிரான்சுவா மூச்சுத்திணறலுடன் , அவரது மார்பைப் பொத்தியவாறு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார் . நான் ஒருகணம் நிலைகுலைந்து விட்டேன் . ஆயினும் , என்னை சுதாகரித்துக் கொண்டு மின்னலென இயங்கினேன் . நான் , அவரை நேராகப் படுக்க வைத்து எனது கைகளினால் அவரது இயங்க மறுத்த இதயத்தை மசாஜ் செய்துகொண்டே , அவரது வாயில் எனது வாயால் செயறகைச் சுவாசம் கொடுத்துக் கொண்டேன் . அவசர முதல் உதவிப் படைக்கு Sapour pompiér ) தொலைபேசியில் அவர் சம்பந்தமான விபரங்களை கூறினேன் . எனது செயற்கை சுவாசத்தின் இறுதியில் அவரது மூச்சு சீராக இதையம் மெதுவாக இயங்கும் ஒலி எனக்குக் கேட்டது . அவரது உடல் வியர்வையால் தொப்பலாக நனைந்திருந்தது . நான் போனகிழமை எமது வேலை செய்கின்ற குழுமத்தால் ஒழுங்கு செய்திருந்த அடிப்படை முதல் உதவி சிகிச்சைப் பட்டறையில் (Softeur secour de travaille , S.S.T) கற்ற அனுபவம் , நன்றாகவே எனக்கு ஜோன்பிரான்ஸ்சுவா விடையத்த்தில் கைகொடுத்தது . இப்பொழுது பிரான்சில் உயர்குழுமங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்தக் கற்கை நெறி கட்டாயமாக்கபட்டுள்ளது . சிறிது நேரத்தில் விரைந்து வந்த அவசர முதல் உதவிப் படையினர் , அவரிற்கு செயற்கை சுவாசம் வழங்கும் கருவியைப் பொருத்தி வைத்தியசாலைக்கு கொண்டோடினார்கள் . அப்பொழுது அந்தக் கருவி இதயத்துடிப்புக்கு ஏற்ப ஏறிஇறங்கிக்கொண்டிருந்தது எனது மனதைப் பிசைந்தது . வந்த முதல் உதவிப் படையினர் எனது செயலை வெகுவாகப் பாராட்டினார்கள் . என்னால் ஜோன்பிரான்சுவாவைக் காப்பற்ற முடிந்தாலும் , அந்த சம்பவத்தால் நான் மிகவும் மனங்குளம்பி விட்டேன் . என்னால் வேலையைத் தோடர்ந்து கவனிக்க முடியாமல் போய்விட்டது . நான் எனது இயக்குனருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் . நன்றாக நித்திரை கொண்டு எழும்பனாலும் , என் மனமோ ஜோன்பிரான்சுவாவையே சுற்றி வட்டமடிக்கின்றது . கள உறவுகளாகிய உங்கள் மன உணர்வுகளையும் பதியுங்கள் .

கொசுறுச் செய்தி :

ஒப்பீட்டளவில் அடிப்படை முதல்உதவி அறிவு உள்ளவர்கள் மொத்த சனத்தொகையில் அமெரிக்காவில் 97% மும் , பிரான்ஸ்சில் 6% மும் உள்ளோர் என புள்ளி விபரம் சொல்கின்றது . அமெரிக்காவில் சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பாடசாலைகளில் படிப்பித்து விடுகின்றார்கள்.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மனதில் வலிக்க எதுவுமில்லை.

நல்ல விடயம்தானே. ஏற்கனவே அறிமுகமானவர். அத்துடன் குடும்ப நண்பர் என்றரீதியில் நீங்கள் அங்கு சென்றது கடவுளே வந்ததுபோலிருக்கும் அவருக்கு.

ஒரு உயிரைக்காப்பாற்றியமைக்காக எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

தமிழன் எல்லாத்துறையிலும் எல்லோர் மனதிலும் வளரணும். இதுவே எனது அவா.

உங்களின் விவேகத்தையும் அதனால் ஒரு உயிர் காப்பற்றப்பட்டுள்ளதும் மிகவும் பாராட்டப்பட, பெருமைப்பட வேண்டிய விடயம்.

உங்களைப்போன்றவர்களால் எமதினத்திற்கே பெருமை.

கனடா மாதிரி நாடுகளில் இப்படி உதவியர்களை அதியுயர் விருதுகளுக்கு பரிந்துரைத்து (Order of Canada) அவ்வாறான பெருமை தரும் பட்டங்களும் கிடைப்பது உண்டு.

பி.கு. முதலுதவியை கற்று இருப்பது மிக அவசியம், தேவையான நேரத்தில் கைகொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு உயிரை மீட்டு இருக்கிறீங்கள் அந்தவகையில் நன்றிகளும் பாராட்டுக்களும்..அவசரசிக்சை செய்ய அனேகமாக அனைவரும் கற்று வைத்திருந்தால் இப்படியான தருணங்களில் நிறையவே கை கொடுக்கும்..அதே நேரம் சின்ன,சின்ன எழுத்துப் பிழைகள் கவனித்துக் கொள்ளுங்கள்.மற்றும் Elevator சொல்லுக்கு உரிய தமிழ் விளக்கம் உயர தூக்கும் (அ) கீழே இறக்கும் பொறி  மற்றும் மின் தூக்கி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் விவேகமான செயலால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்.

அவர் உங்களையும் நீங்கள் அவரையும் வாழ்க்கையில் மறக்க முடியாது.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கை கொடுங்கள்... மிக நல்ல காரியம் செய்துள்ளீர்கள் கோம்ஸ்...

நான் "ஜோன் பிரான்சுவா"க இருந்திருந்தால் தக்க சமயத்தில் உயிர் பிழைக்க வைத்து குடும்பத்தை காப்பற்றியதற்காக தங்கள் உள்ளங்கையில் முகம் புதைத்து அழுதிருப்பேன்...

உங்கள் புண்ணிய காரியத்திற்கு வாழ்த்துக்கள்.

Note: 'Lift' in Tamil is 'மின் தூக்கி'.

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ் பாராட்டுக்கள்

நானும்முதலுதவிக்கான உபகரணங்கள் பொதி செய்யும் இடத்தில்தான் வேலை செய்கிறேன்.... அங்குள்ள மருந்து வகைகளை பற்றி எனக்குச் சீனியராக இருப்பவர்களிடம் கேள்விமேல் கேள்வியாக துளைத்துக் கொண்டிருப்பேன்... அப்பத்தானே சமயம் வாய்க்கும்போது பயன்படுத்தலாம்... முதலுதவி என்பது எவ்வளவு இன்றியமையாதது... ஆமா யாழில் முதலுதவிக்குறிப்புகள் என்று ஒரு பக்கத்தை ஆரம்பிக்க ஏன் இன்னும் ஒருவருக்கும் தோன்றவில்லை??????

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்ததுதான் நிஜமான அற்புதம்! பல செய்முறைகள் தெரிந்த போதும் சமயத்தில் ஒன்றும் கை கொடுக்காது. அனால் நீங்கள் உங்கள் மட்டையால் கதவைத் திறந்து பதட்டப் படாமல் அவருக்கும் முதலுதவி செய்ததுடன் வைத்தியர்களுக்கும் அறிவித்துக் காப்பாற்றி இருக்கின்றீகள். இதுக்கு நிட்சயமாக உங்கள் நிர்வாகமும் , அனேகமாக அந்த இடத்து மேரியும் (marie. hôtal de ville) பாராட்டும், சான்றிதழும் தருவார்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் அவரது குடும்பமும் உங்களை வாழ்த்தும்.இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களும் வழங்கட்டும்!

வாழ்த்துக்கள் கோமகன்.

குழப்பமான நேரத்தில் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு சாதனை செய்திருக்கிறீர்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள், கோமகன்!

இங்கு, இப்படியான சேவை சம்பந்தந்தப்பட்ட தொழில் நிலையங்களில் கட்டாயம் 'முதலுதவி' தெரிந்த வேலையாட்கள் இருக்க வேண்டும்! அவர்களுக்கு ஒவ்வொரு கிழமையும் ஒரு 'அலவன்ஸ்' சம்பளத்துடன் சேர்த்துக் கொடுக்கப் படும்! என்னிடமும் 'முதலுதவி' சேவைக்கான ஒரு சான்றிதழ் உண்டு!

உங்கள் மனதில் ஏன் வலி ஏற்பட வேண்டும்! உங்கள் மனிதத்தை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்! அது உங்களையறியாமலே வெளிப்பட்டிருக்கின்றது!

வாழ்த்துக்கள், உங்கள் சேவைக்கு!!!

பாராட்டுக்கள் கோமகன். உங்கள் காருண்ய மனப்பான்மை தொடரட்டும்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கோமகன்.தக்க தருணத்தில் விவேகமாகவும் துணிவாகவும் செயற்பட்டு ஒருவரின் உயிரைக் காப்பாற்றி உள்ளீர்கள். மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.இதில் நீங்கள் மனம் சஞ்சலப்பட ஏதுமில்லை.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கோமகன்..

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..........அந்த நேரத்தில் சமயோசிதமாய்

துணிவாய் செயல்பட்டமை பாராட்ட் தக்கது .........

இன்று தான் பார்த்தேன் கோமகன். சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளீர்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.

உங்கள் துணிச்சலுக்கு முதலில் பாராட்டுக்கள் கோமகன் அண்ணா. என்ன தான் முதலுதவி தெரிந்தாலும் அந்த நேரத்தில் பதற்றப்படாமல் செயலாற்றுவது எல்லோராலும் முடியாதவிடயம். ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சி இருக்கனும் எதற்கு வலி என புரியவில்லை. மீண்டும் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா....!

  • தொடங்கியவர்

உங்கள் எல்லோருடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் கள உறவுகளே . ஜோன்பிரான்சுவா இப்பொழுது அவசரப்பிரிவில் இருந்து சாதாரண நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் . அந்தவகையில் எனக்கு சந்தோசமே . ஏன் நான் வலி என்று சொன்னேன் என்றால் , நான் முதன் முதல் அதுவும் தெரிந்தவரின் பார்த்த மரணத்தின் வாசல் . ஆகையால் மனதில் ஒரு வலி ஏற்பட்டது அவ்வளவுதான் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

பதற்றப்படாமல் விவேகமாகச் செயற்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளீர்கள் கோமகன். மரணத்தின் வாசலுக்குச் சென்றவரை மீண்டும் அழைத்து வந்த தங்களின் செயல் ஒப்பற்றது.

ஜோன் பிரான்சுவா நன்றாகக் குணமடைவார் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனம் பதறாமல் துணிச்சல்மிக்க செயலுக்கு பாராட்டுகள்.

அதனை எம்முடன் பகிர்ந்தமையும் அழகு.

பிறகு ஜோன்பிரான்ஸ்சுவா அவரை சந்திக்கவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் ஒரு உயிரைக் காப்பாற்றிய பெருமையை பெற்றுவிட்டீர்கள் கோமகன்.

இப்படியான சந்தர்ப்பங்களில் தான்... கடவுள் மனிதரூபத்தில் தென்படுகின்றார் என்று சொல்வார்கள்.

உயிருக்கு போராடும் சந்தர்ப்பத்தை தங்க மணித்தியாலம் (Golden hours) என்று குறிப்பிடுவார்கள்.

குறிப்பிட்ட மணித்துளிகளுக்குள், தகுந்த முதலுதவி செய்யாவிட்டால்... உயிரை இழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

ஜோன்பிரான்ஸ்சுவா தான் செய்த புண்ணியத்தால்... உங்கள் மூலம் மறுபிறவி எடுத்துள்ளார்.

நீங்கள் சில நிமிடங்கள் தாமதமாக சென்றிருந்தாலும், அவர் இன்று எங்கோ... ஒரு மயானத்தில் புதைக்கப்பட்டிருப்பார்.

மனதில் சஞ்சலம் வேண்டாம். தகுந்த நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டமையை இட்டு பெருமை கொள்ளுங்கள் கோமகன். :)

  • தொடங்கியவர்

பதற்றப்படாமல் விவேகமாகச் செயற்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளீர்கள் கோமகன். மரணத்தின் வாசலுக்குச் சென்றவரை மீண்டும் அழைத்து வந்த தங்களின் செயல் ஒப்பற்றது.

ஜோன் பிரான்சுவா நன்றாகக் குணமடைவார் என்று நம்புகின்றேன்.

மிக்க நன்றிகள் கிருபன் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :):) :) .

  • தொடங்கியவர்

மனம் பதறாமல் துணிச்சல்மிக்க செயலுக்கு பாராட்டுகள்.

அதனை எம்முடன் பகிர்ந்தமையும் அழகு.

பிறகு ஜோன்பிரான்ஸ்சுவா அவரை சந்திக்கவில்லையா

மிக்க நன்றிகள் கறுப்பி , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . இல்லை , நேரடியாக இல்லை . நத்தார் நெருங்குவதால் எனக்கு வேலை கூட . தோலைபேசியில் அவருடைய குடும்பத்தவருடன் கதைத்தேன் :) :) :).

வாழ்வில் ஒரு உயிரைக் காப்பாற்றிய பெருமையை பெற்றுவிட்டீர்கள் கோமகன்.

இப்படியான சந்தர்ப்பங்களில் தான்... கடவுள் மனிதரூபத்தில் தென்படுகின்றார் என்று சொல்வார்கள்.

உயிருக்கு போராடும் சந்தர்ப்பத்தை தங்க மணித்தியாலம் (Golden hours) என்று குறிப்பிடுவார்கள்.

குறிப்பிட்ட மணித்துளிகளுக்குள், தகுந்த முதலுதவி செய்யாவிட்டால்... உயிரை இழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

ஜோன்பிரான்ஸ்சுவா தான் செய்த புண்ணியத்தால்... உங்கள் மூலம் மறுபிறவி எடுத்துள்ளார்.

நீங்கள் சில நிமிடங்கள் தாமதமாக சென்றிருந்தாலும், அவர் இன்று எங்கோ... ஒரு மயானத்தில் புதைக்கப்பட்டிருப்பார்.

மனதில் சஞ்சலம் வேண்டாம். தகுந்த நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டமையை இட்டு பெருமை கொள்ளுங்கள் கோமகன். :)

மிக்க நன்றிகள் சிறியர் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ் பின்னீட்டிங்கள்.இப்ப அது மனதின் இன்ப வலி.வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன்! நீங்களும் கடவுள் தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்! இன்றுதான் வாசித்தேன்...பாராட்டுக்கள் உங்கள் சரியான நேரத்தில் சரியான செயற்பாட்டுக்கு...ஜோன் பிரான்சுவாவால் உங்களைக் கடசிவரை மறக்கமுடியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.