Jump to content

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்: கவிதை நிழலி


Recommended Posts

பதியப்பட்டது

இரண்டு ஈர உதடுகள்

என்னை முத்தமிட்டு

நீங்கின

ஒன்றில்

பொத்தி வைத்த காதலும்

வெளிப்படுத்தி வெளிப்படுத்தி

அடங்கா(த)

காமமும் நிறைந்து இருந்தன

இன்னொன்றில்

வெள்ளை நிறத்தில்

அன்பு இருந்தது

"இவன் என் அப்பா"

என கட்டிப் பிடித்து

இறுக்கி சிரிக்கும்

சின்னச்

சிறுக்கியின்

பாசம் இருந்தது

இரண்டு முத்தங்களிலும்

என் வாழ்வு

தொங்கி நின்றது

********

அவர்களை அனுப்பிவிட்டு

வீடு செல்கின்றேன்

வாசல் திறக்கும் போது

சூனியம் அப்பிக் கொள்கின்றது

கட்டிலும், தொட்டிலும்

சோபாவும்,

சட்டியும் முட்டியும்,

முட்டை பொரித்த பின்

எஞ்சிப் போன தாச்சியும்

சிந்தப் பட்ட ஒரு சொட்டு

எண்ணெயும்,

என்னவள் கழட்டிப் போட்ட

பனிச் சப்பாத்தும்

என் மகள் அணிந்து கழட்டிய

'ஸ்கேர்ட்டும்"..

எல்லாமும் அப்படியே

இருக்க

எதுவும் அற்ற சூனியம்

அப்பிக் கொள்கின்றது

எல்லாம் இருந்தும்

எதுவும் அற்ற பெரு வெளியில்

மனம் அலைந்தது

என்னவளது

ஒரு விரலின்

தொடுகைக்காக

ஓராயிரம் யுகங்கள்

தொடுதல் அற்று காத்திருக்கும்

ஒரு

கள்ளிச் செடியாக

மாறலாம் என்று இருந்தது

என் மகளின்

மழலைச் சொல்லுக்காக

மெளனமாகவே இருக்கும்

எட்டாவது ஸ்(சு)வரம் ஆக

மாறலாம் என்று இருந்தது

***************************************

நடு இரவில் விழித்து

Flight Status பார்த்து

மீண்டும் படுக்கின்றேன்

பல யுகங்களாக

நித்திரை கொள்ளாத

கண்களின் சுமை

மனதில் ஏறுகின்றது

கால பைரவன் எப்படித்தான்

கண் தூங்காது

புளிய மரத்தின் உச்சிக் கொம்பில்

தவம் இருக்கின்றானோ

**

தூரத்தே

கொழும்பு ரயில் ஒன்றில்

குருட்டு சிங்கள பிச்சைக் காரன்

பாடியதை

மனம் மீண்டும் கேட்டது

அருகில்

"ஓராயிரம் ஆண்டு

வாழ்ந்த வாழ்வின்

அர்த்தத்தை ஒரு நாள் பிரிவு

தரும் என"

:நிழலி

(ஊருக்கு மனிசி மற்றும் மகளை அனுப்பிய பின் வீட்டை வந்த பின் தோன்றிய ஒரு உணர்ச்சி இது)

சனவரி 04, 2012

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமை நிழலி, நன்றி பகிர்வுக்கு, உங்கள் உணர்வை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள், பச்சை இல்லை நாளைதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள், நிழலி!

இனிக் கொஞ்ச நாளைக்கு, ஆட்டுக்குடலும் இல்லை! ஈரல் வறையும் இல்லை!

நண்டுக் கறியும் இல்லை!

சோறும் பருப்புக் கறியும் தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிமையின் தவிப்பும் ஒருவித இனிமைதான்

இல்லாத போது தெரியும் அருமை

;பக்கத்தில் இருப்பதைக்காட்டிலும் அதிகமானது என்பதும் ஒரு அனுபவமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி அண்ணா.. நீங்கள் உங்கள் துணைவி மகளைப் பிரிந்து மன உருகிப் பாடிய இக்கவிதையை வரவேற்றுக் கொண்டு.. இதே நிலையில் உங்கள் அப்பா.. அம்மா உங்களைப் பிரிந்து கவிதையே வடிக்காமல்.. உருகி இருந்திருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா...???! (ஏனெனில் பலர் தமது தனிமையை உணரும் போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த வகையில் இதனை முன் வைக்கிறேன். மற்றும்படி வேறு எதுவும் இல்லை..!) :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலியின் கவிதை வரிகளை வாசித்த போது.... பிரிவின் ஏக்கத்தை நன்கு, உணரக்கூடியதாக இருந்தது.

குடும்பத்தில் உள்ள ஒருவர், தற்காலிகமாகப் பிரியும் போது.... ஏற்படும் ஏக்கம் வேதனையானது.

பிற்குறிப்பு: நிழலி இப்போ... சமைக்க பஞ்சிப் படுவார் என்பதால், நிழலியின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற உறவுகள்.. தினமும் ஒரு நேரச் சாப்பாடு செய்து கொடுத்தால் நல்லது. :D:icon_idea:

டிஸ்கி: துணைவி ஊருக்கு போகப் போறா... என்று தெரிந்தவுடன், நிழலி முதலே திட்டமிட்டு... ரொறொன்ரோ யாழ் கள உறவுகளை கூப்பிட்டு விருந்து வைத்திருக்கிறார் போலை... உள்ளது. :lol::icon_mrgreen:

Posted

"உப்பில்லாத போது தான் உப்பின் அருமை தெரியும்" என்பார்கள்.அதுவா நிழலி?.

பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்.. :rolleyes:

ஆக மொத்தம் நமக்கு கடுப்பேத்திடிங்கப்பா :lol::icon_idea:

(சாறி பாஸ் பச்சை காலியாகிட்டுது) :)

Posted

பிரிவின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் நன்று.

"பலர் தமது தனிமையை உணரும் போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள்"-நெடுக்ஸ்- நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் அப்பா.. அம்மா உங்களைப் பிரிந்து கவிதையே வடிக்காமல்.. உருகி இருந்திருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா...???! (..!) :):icon_idea:

இதுக்குள்ளும் இந்த குண்டக்க மண்டக்க கேள்வியா?

அந்தாளே தனிய நொந்து நூலாகக்கிடக்கு

நீங்க வேற

அதற்கு முன்னைய பிரிவுகளையெல்லாம் சேர்த்து அனுபவி என்பதுபோல்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்குள்ளும் இந்த குண்டக்க மண்டக்க கேள்வியா?

அந்தாளே தனிய நொந்து நூலாகக்கிடக்கு

நீங்க வேற

அதற்கு முன்னைய பிரிவுகளையெல்லாம் சேர்த்து அனுபவி என்பதுபோல்...

இது என்னோட ஆதங்கமும் கூட. யாழிலும் சரி பலர் துணைவியை.. பிரிஞ்சிட்டு.. பிரிவின் வலின்னு கவிதை.. கட்டுரை.. கதை எல்லாம் எழுதி தங்க பிரிவை துணைவிக்கு சொல்லுறாங்களோ.. இல்லையோ.. அடுத்தவங்களுக்கு வெளிப்படுத்திறாங்க... ஆனா நான் அறிய.. எத்தனையோ பெற்றோர் தாயகத்தில் பிள்ளைகளைப் பிரிந்து கண்ணீரோடு வாழ்வதை கண்டிருக்கிறன். ஏன் வெளிநாட்டில் உள்ள தன் பிள்ளைக்கு கடிதம் போட ஆங்கிலத்தில் விலாசம் எழுத முடியாது..தபால் நிலையத்தில் அந்தரித்து நின்ற தாயைக் கண்டிருக்கிறேன்.. உதவி இருக்கிறேன். அந்த வகையில் தான் பிரிவின் வேதனை சொல்லும் இந்த இடத்தில் அதனையும் முன் வைத்தேனே அன்றி நிழலி அண்ணர் சங்கடப் படனும் என்பதற்காக அல்ல..! :):icon_idea:

இதையும் ஒருக்கா நேரம் கிடைச்சா படியுங்கோ...

மனசுக்குள் என்ன..?!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84659

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி... அழகான கவிதைகள் எப்போது பிறக்கும் என்றால் மிகவும் பிரியத்திற்கு உரியவர்கள் பிரிந்திருக்கும்போதுதான் இனி கொஞ்சநாளைக்கு உங்களிடமிருந்து அதிகமான கவிதைகளை எதிர்பார்க்கலாம் :wub:

நெடுக்கர் கேட்டதில் எதுவும் குண்டக்க மண்டக்கவாக இல்லை

எத்தனை பிள்ளைகளை தாய் தந்தையர் விட்டுப்பிரிந்து எவ்வளவு ஏக்கங்களை மனங்களில் தேக்கி வாழ்கிறார்கள் என்பது அந்த நிலையில் வாழ்கின்ற உறவுகளுக்குத்தான் புரியும். வெளிநாட்டில் எல்லோரையும் கூப்பிட்டு வைத்துவிட்டு இலகுவாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஏக்கம் தெரியாது. :icon_mrgreen:

Posted

ம்ம்ம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள் - பிரிவு

கவிதை அழகு நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மைய காலங்களில் வரும் கவிதை,கதைகளுக்கு கருத்து எழுத முன்வருவதில்லை..அதுவும் சில,பல வலிகளால் ஏற்பட்ட தாக்கம் தான்...உங்கவிதைக்கு நான் தான் முதல் பச்சை குத்தினேன்...பிரிவு பற்றி எழுதிய கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...பிரிவின் வலியால் இனி யாழிலும் வெட்டு,கொத்து அதிகரிக்கப் போகிறது.ம்ம்ம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிவில் தெரியும் வலி , கவி வரிகளாக........

..கணணியிலுங்கள் திறமைகளை,காட்ட சிறந்த தருணம் அதிக படைப்புக்களை தாருங்கள்

எல்லாம் உள்ளது தான் வாழ்க்கை

(இன்பம் துன்பம் ,பிரிவு சோகம் ,.தனிமை உறவு இணைவு .மகிழ்வு .)

Posted

பிரிவின் ஏக்கத்தை அழகாக கூறும் நல்லதொரு கவிதைக்கு நன்றிகள் நிழலி அண்ணா.

Posted

இது கவிதை .

மனைவி பிள்ளைகள் பிரிவு வெறுமையையும் ஒரு வித பயத்தையும் தரும்.

எமது பெற்றோரை நாம் பிரிந்திருக்கும் போது இப்படியான உணர்வு வரமாட்டாது ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம வரும் வெறுமை வராது.

மனைவி வரமட்டும் சோனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்கவேண்டியதுதான்.

சோனா -எனது பெரிய புஷ்டி தலையணைக்கு நான் வைத்த பெயர்.

Posted

ஒரு குடும்பஸ்தன் (மகளைப் பிரியும் தகப்பன்/ மனைவியைப் பிரியும் கணவன்) என்ற முறையில் உங்கள் பிரிவு புரிந்து கொள்ளப்படுகிறது நிழலி!

அதே நேரம் தாயை, தங்கையைப் பிரிந்த உங்கள் மகனிடம் அவனது மனநிலையைக் கேட்டீர்களா? (மனைவியும் மகளும் என்று மட்டும் போட்டதால் கேட்கிறேன்) முடிந்தால் அதையும் இங்கே உங்கள் ஆக்கத்தில் தாருங்கள்...

இது கவிதை .

மனைவி பிள்ளைகள் பிரிவு வெறுமையையும் ஒரு வித பயத்தையும் தரும்.

எமது பெற்றோரை நாம் பிரிந்திருக்கும் போது இப்படியான உணர்வு வரமாட்டாது ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம வரும் வெறுமை வராது.

மனைவி வரமட்டும் சோனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்கவேண்டியதுதான்.

சோனா -எனது பெரிய புஷ்டி தலையணைக்கு நான் வைத்த பெயர்.

அர்ஜுன், நீங்கள் சொல்வது ஒரு வேளை உங்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என நினைக்கிறன். "எமது" என்று பன்மையில் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

எனது பெற்றோரை/ உடன் பிறந்தோரைப் பிரிந்து இங்கே வந்த பின்பு எவ்வளவோ வெறுமை, ஏக்கம், கவலை, கோபம், தனிமை என்று அவர்களின் பிரிவின் வலியை நான் உணர்ந்தேன். இன்று வரை பல சந்தர்ப்பங்களில் அந்த உணர்வுகள் வந்து போவதை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது பெற்றோரை/ உடன் பிறந்தோரைப் பிரிந்து இங்கே வந்த பின்பு எவ்வளவோ வெறுமை, ஏக்கம், கவலை, கோபம், தனிமை என்று அவர்களின் பிரிவின் வலியை நான் உணர்ந்தேன். இன்று வரை பல சந்தர்ப்பங்களில் அந்த உணர்வுகள் வந்து போவதை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது!!

குட்டியின் இந்தக் கருத்து மிகவும் நிஜமானது.

கணவன்.. துணைவியை.. பிரியலாம்.. குழந்தையைப் பிரியலாம்.. ஆனால் ஒரு குழந்தை தாயை.. தந்தைப் பிரிவது வேதனை கூடியது. இதனை நானும் உணர்ந்திருக்கிறேன். ஏதாவது ஆசையா வாங்கப் போனால் கூட.. அம்மா அப்பா ஞாபகம் வர வாங்குவதை பின்போட்டு விட்டு வந்திருக்கிறேன். பிள்ளைகள் பெற்றோரைப் பிரிவது என்பது மிகவும் சங்கடமான வாழ்க்கையை வெறுமைக்குள் தள்ளக் கூடிய விடயங்களில் ஒன்று..!

துணைவியை பிரிஞ்சா.. தலையணையாவது கிடக்கு.. பெற்றோரைப் பிரிஞ்சா என்ன இருக்குது.. அவர்கள் போல.. பாசம் காட்ட..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குட்டிக்கு என் நான்காவது பச்சை..நீங்கள் எழுயது போல் நானும் எழுதிட்டு அளிச்சுட்டன் காரணம் நிழலி அண்ணாவிடம் திட்டு வாங்க வேண்ட வேண்டி வருமோ என்ற பயம் தான்..நிழலி அண்ணாவின் மகனும் ஒரு பாலகன் ஆகவே அவருக்குள்ளும் வெளியே காட்டிக் கொள்ளாத கவலைகள்,ஏங்கங்கள் கண்டிப்பாக இருக்கும்.தாயாரை,தங்கையை தான் பிறந்த பின்பு முதல் தடவையாக தற்காலிகமான பிரிவு ஒன்றை சந்தித்திருப்பார் இல்லையா...அது மட்டுமில்லை நிழலி அண்ணாவின் துணைவியார் பிள்ளைகள் எப்படித் தான் குளப்படி செய்தாலும் அடிப்பதில்லை,பேசுவதில்லை என்ற கருத்தை கூட முன்பு ஒரு திரியில் படித்திருக்கிறேன்..ஆகவே அந்தக் குழந்தையின் மனமும் நிறையவே கனத்துப் போய் இருக்கும்.நிழலி அண்ணா அவரையும் பேசாது,அடிக்காது அனுசரிச்சு போக வேண்டிடும்..உங்களுக்கு உணர்வுகளை கொட்டுவதற்று யாழ்களமவாது இருக்கிறது..சின்னவருக்கு.........??

Posted

உணர்வுகளுக்கு உருவம் இல்லை என்பார்கள். ஆனால், உணர்வுகளுக்கும் வடிவம் கொடுப்பவைதான் கவிதை வரிகள்.

உணர்வுகள் வரிகளாய் வடிவமாகி மீண்டும் உணர்வாகவே வந்து நிற்கும் . உணர்வுகளின் வலிமை என்பது சோகத்திலும் பிரிவிலும்தான் தோல்வியிலும் வெறுமையிலும்தான் மிக அதிகமாக வெளிப்படுகின்றன. அந்த வகையில் இந்தக் கவிதையில் பிரிவின் வலியும் உறவுகளின் வெறுமையினால் உருவாகிய வலியும் அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் உணர்வு பூர்வமான கவிதை! :) 0

பி.கு:

ஆனாலும் குட்டியும், யாயினியும் சொன்ன விடயங்கள் கவிதைக்கு அப்பால் என்னை கொண்டுசென்றதனால் அவர்களின் கருத்துக்களை நான் ...... பார்க்கவே இல்லை என நினைத்துக் கொள்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி உங்கள் கவிதையில் பிரிவு,ஏக்கம்,பாசம் எல்லாம் தெரிகிறது...நீங்களும் மகனைக் கூட்டிக் கொண்டு மனைவியோட போயிருக்கலாம் என்ன காரணமோ தெரியவில்லை நீங்கள் போகவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டில் தனிய இருக்கவேண்டி வந்தால் சமைக்கத் தெரிந்திருந்தாலும் சமைக்க மனம் வராது! நித்திரைக்கு மட்டும்தான் வீடு என்றாகிவிடும். நல்லவேளை மகனும் பயணம் போகவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உணர்ச்சிக் கவிஞன் நிழலியின் கவிதை

நன்றி

தனிமையை அனுபவிக்கும் போது தான்

அதன் கொடுமை தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.