Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

s_n_lakshmi.jpg

sn1.jpg

sn2.jpg

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்!

பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர்.

இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணசித்திர நடிகையாகப் பரிணமித்தார். பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக விருமாண்டி, மகாநதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பைப் பாராட்டாதவர் இருக்க முடியாது.

சர்வர் சுந்தரம் படத்தில் கண்டிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கு வலுவூட்டின. தேனும் பாலும் படத்தில் சரோஜா தேவிக்கு தாயாக, மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் ஊர்வசியின் பாட்டியாக, மகாநதியில் கமலின் மாமியாராக, தேவர் மகன் படத்தில் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் என அவருடைய நடிப்புலக பயணம் மிக நீண்டது.

நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந்தரின் ராஹினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளில் நடித்து மெருகேறியவர்.

செய்தி மூலம் நக்கீரன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

20-sn-lakshmi-300.jpeg

தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார்.

பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.

தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே அம்மாகவாக நடித்து அசத்தியவர். இந்தக் காலத்து நடிகர்களுடனும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000. ஆனால் அதில் இவரது நடிப்பு பல ஆயிரம் படங்களுக்குச் சமமானது.

சமீப காலமாக டிவி தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது முதுக் தண்டுவடத்தில் அடிபட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி. தனது சாலிகிராமம் வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நாளை உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

நாடகங்களிலேயே அசத்தியவர்

ஆரம்ப காலத்தில் இவர் நாடக நடிகையாக இருந்தார். என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார்.

நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம்.

எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள். ஆனால் சர்வர் சுந்தரம்தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது.

பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.

அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

படம்: தி ஹிண்டு

thatstamil.com

++++++++++++++++++++++++++++++++++

இவாவின் பாட்டி வேசங்கள் நிஜத்தை பிரதிபலிப்பனவாக கருத்தை மனதை ஈர்ப்பனவாக அமைந்து விடும்..! சொந்தப் பாட்டியாகவே எண்ணத் தோன்றிவிடும். அப்படிப்பட்ட இந்தப் பாட்டிக்கு கண்ணீரஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடிகை, கண்ணீர் அஞ்சலிகள்

எனக்கு மிகவும் பிடித்த பாட்டி இவர்... கிட்டடியில் கூட ஒரு புதிய படத்தில் இவரைக் கண்டுவிட்டு, 'இந்தப் பாட்டி எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டு இருக்கின்றார்" என்று சொன்னேன்.

கண்ணீர் அஞ்சலிகள் பாட்டி

நினைவு தெரிந்த காலம் தொட்டு இவர் பாட்டியாக நடிப்பதைப் பார்க்கிறேன். முன்பு இவர்தான் கேபி சுந்தராம்பாள் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.

கண்ணீர் அஞ்சலிகள்.

Edited by தப்பிலி

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...

''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''

''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''

''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''

(பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...) ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல ##~##நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

p125.JPG

அந்தக் காலத்துல நாடகம் போட டெல்லி, மும்பைனு போவோம். ஒரு முறை டெல்லியில மகாபாரதம் நாடகம். அதுல எனக்கு குந்தி வேஷம். ரெண்டு நாள் நாடகத்தில் ரெண்டாவது நாளில்தான் குந்தி கேரக்டர் வரும். அப்ப ரயில்வே அமைச்சரா இருந்த ராஜேந்திரபிரசாத் நாட கத்துக்கு வர்றதா இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாமப் போனதால் அவர் வரலை. என் கேரக்டரையும் அவர் பார்க்கலை. பிறகு உங்க நடிப்பைப் பார்க்கலைனு ரொம்பவே வருத்தப்பட்டேனு வேறொரு நாடகத்துக்காக டெல்லி போனப்ப சொன்னார். இப்படி நேரு, ராதாகிருஷ்ணன்னு ஏகப்பட்ட தேசத் தலைவர்களுடன் எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு.

p125a.JPG

எப்ப வாச்சும் நேரம் கிடைக்கிறப்ப பார்த்து பழைய விஷயங்களை நினைச்சுப் பார்த்துக்குவேன். நாடகம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, என்.எஸ்.கே. நாடகக் குழுவுல இருக்கும் போது, என்.எஸ்.கே. நடுராத்திரி 12 மணிக்கு நாடகம் முடிஞ்சி படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்திருச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவார். அவரோட கற்பனாசக்தியை நினைச்சு வியந்திருக்கேன். இதை மறக்காம எழுதுங்க தம்பி!'' என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் அன்பான கோடம்பாக்கப் பாட்டி.

- அ.முகமது சுலைமான்

படங்கள்: அ.ரஞ்சித்

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டியின் நடிப்பு எனக்கு பிடிக்கும்...பாட்டியின் ஆத்மா சாந்தியடையட்டும்

என்னபா மீனாசி சுன்தரதில மீனாசிகு பாட்டியா வாற அம்மாமோசெத்தது?விஜய்டீவில

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிகை ..........என் அஞ்சலிகள். இப்பவும் இவர் நடித்த டி வீ சீரியல் விஜே டிவி இல் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறந்த, குணச்சித்திர நடிகை!

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Daily-News-Paper_90479242802.jpg

அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும்,

எனது கண்ணீர் அஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

லட்சுமி என்றோர் ஆலமரம்!

1.jpg

சன் டி.வி-யில் வரும் 'விகடன் டெலிவிஸ்டாஸ்'-ன் 'தென்றல்' சீரியலில் பேத்தி படும் வேதனையைப் பார்த்து, புயலாக சீறும் பாட்டியைப் பாராட்டாத தமிழ் சீரியல் நேயர்களே இல்லை. அசதி வருத்துகிற இந்த எண்பது வயதிலும், அசராமல் நடித்து அசத்தி வருகிற எஸ்.என்.லட்சுமியின் நினைவு அடுக்குகளில் பதிந்து கிடக்கின்றன திரை உலகில் அவரின் மூன்று தலைமுறை அனுபவங்கள், பொக்கிஷமாக!

சூப்பர் பாட்டியின் பேச்சு முழுக்க நிரம்பியிருந்தது உற்சாகம்; திருமணமே செய்துகொள்ளாத அவர் வாழ்க்கை நெடுக நிரம்பியிருந்தது தியாகம்!1.jpg

''விருதுநகர் பக்கத்துல சென்னல்குடிங்கிற சின்ன கிராமம்தான் சொந்த ஊர். அப்பா நாராயண தேவர், ராஜா கம்பளத்து நாயக்கர் அரண்மனையில நிர்வாகம் பண்ணிட்டிருந்தாரு. எங்க வீட்டுல ரெண்டு பொண்ணு, பதினோரு ஆணுனு மொத்தம் 13 புள்ளைங்க (அட, 13-ம் ஆண்டு சிறப்பிதழ்ல மிஸ்ஸாயிட்டீங்களே!). நான்தான் கடைக்குட்டி. நான் பொறந்தப்போ, அப்பாவுக்கு வேலை போயிடவே... வீட்டுல ஒரே வறுமை. சாப்பாட்டுக்கே வழி இல்லாம, பஞ்சம் பிழைக்க பக்கத்து டவுனுக்கு வந்தோம். அப்பா, எங்கள அநாதரவா விட்டுட்டுப் போயிட, அம்மாவால எங்க பதிமூணு பேரோட பசியை ஆத்த முடியல. அப்ப பதினஞ்சு வயசிருக்கும். குடும்பச் சூழ்நிலைய நினைச்சு, ரோட்டுல நின்னு அழுதுட்டு இருந்ததைப் பார்த்த ஒரு அம்மா... 'எங்கூட மெட்ராசுக்கு வர்றியா?'னு கேட்டப்போ, சட்டுனு டிரெயின் ஏறிட்டேன் வீட்டுல சொல்லாமலே'' என்றவரை, மதராசப்பட்டினம்தான் அடைக்கலப்படுத்தி இருக்கிறது.2.jpg

''ஆயிரம் விளக்கு பகுதியில ஒரு வீட்டுல வேலைக்குச் சேர்த்து விட்டாங்க அந்தம்மா. அப்போதான் ஜெமினி ஸ்டூடியோவுல வேலைக்கு ஆள் எடுக்கறாங்கனு பரவலா பேசிக்கவே, ஸ்டூடியோவுக்குப் போனேன். அங்க இருந்த வெங்கட்ராம அய்யர், 'உனக்கு என்ன தெரியும்?'னு கேட்டாரு. 'நல்லா நீச்சலடிப்பேன். கும்மி, கோலாட்டம் ஆடுவேன்'னு சொன்னேன். என்ன நெனச்சாரோ, வேலைக்கு சேர்த்துக்கிட்டாரு. மாசம் 60 ரூபாய் சம்பளம். 1948-ல வந்த 'சந்திரலேகா' படத்துல, பிரமாண்ட டிரம் பாட்டு செம ஃபேமஸ். அதுல மூணாவது டிரம்ல நானும் ஆடியிருப்பேன்'' என்று பெருமிதத்தோடு சொன்னவர்,

''பதினெட்டு வயசு பெண்ணுக்கு என்னவெல்லாம் ஆசைஇருக்குமோ, அது எதுவுமே அப்ப எனக்கு இல்ல. நிறைய சம்பாதிக்கணுங்கற நெனப்புதான் இருந்துச்சு. நாடகங்கள்ல நடிச்சேன். 'தாமரைக்குளம்', 'சர்வர் சுந்தரம்'னு படங்கள்லயும் வாய்ப்புகள் கிடைச்சது. நிஜத்துல பூனையைப் பார்த்தாகூட பயப்படறவ நான். ஆனா, 'பாக்தாத் திருடன்' படத்துல குழந்தையைக் காப்பாத்தறதுக்காக நிஜ புலிகூட சண்டை போட்டேன். எம்.ஜி.ஆரே வியந்து பாராட்டினாரு'' என திரையுலக ஆச்சர்யங்களுக்கு நடுவே, தன் குடும்பத்தையும் சந்தித்திருக்கிறார்.

''எட்டு வருஷம் கழிச்சு என் அம்மா, உடன் பிறந்தவங்களைப் பார்க்க ஆசையோட, அழுகையோட போனேன். என்னைக் கட்டிப் பிடிச்சு கதறிட்டாங்க எங்கம்மா. எனக்கும் வரன் பார்த்தாங்க. ஆனா, அதுல நான் விருப்பம் காட்டல. 'செல்வி லட்சுமி'யாவே இருந்துட்டேன்'' என்றவர்,

''கூடபொறந்த பன்னிரண்டு பேரும் மேல போயிச் சேர்ந்துட்டாங்க. இப்போ அவங்க பிள்ளைங்க, பேரன், பேத்திங்கனு எல்லாருக்கும் மிச்சமிருக்கற ஒரே ஜீவன் நான்தான். ஒரு காலத்துல வறுமைக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிட்டாலும், தொடர்ந்து ஒரு ஆலமரமா அவங்களை எல்லாம் தாங்கின... தாங்கிக்கிட்டிருக்கற திருப்தி இருக்கு எங்கிட்ட!'' என்றபோது, லட்சுமியின் வார்த்தைகளில் நெகிழ்ச்சியின் ஈரம்!

தொடர்ந்தவர், திரையுலக அனுபவங்களால், சூழலை கலகலப்பாக்கினார். '' 'தொழிலாளி' படத்துல எம்.ஜி.ஆருக்கு அம்மாவா நடிச்சேன். அதுல எம்.ஜி.ஆர். என் காலை பிடிக்கற மாதிரி ஒரு ஸீன் வரும். அவர் கால்ல விழும்போது நான் தள்ளிப் போயிட, 'என்னை உங்க புள்ளையா நினைச்சுக்கோங்க'னு சொன்னதோட, அங்க இருந்த ஸ்டில் கேமராமேன் நாகராஜ ராவைக் கூப்பிட்டு, 'போட்டோ எடுங்க'னு சொல்லி, அதை எனக்கு கொடுத்தும் அனுப்பினாரு. எம்.ஜி.ஆர்... பாசத்துல பிதாமகன்! நடிகர் திலகம் சிவாஜிகூட நடிக்கும்போது, 'நீங்க நின்னீங்கனா எனக்குதான் கால் வலிக்கும். உட்காருங்கம்மா'னு சேரை இழுத்துப் போடுவாரு.!

1.jpg

ஜெயலலிதா, ஸ்டூடியோவுல யாரையும் அனுமதிக்காத தன்னோட அறையில, 'நீங்க இங்கயே டிரெஸ், மேக்கப் பண்ணிக்கோங்கம்மா'னு சொன்ன அவங்களோட அக்கறைய இன்னும் என்னால மறக்க முடியல. சரோஜாதேவி, விஜயகுமாரி, வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா எல்லாம் இப்பவரைக்கும் என் மேல பாசத்தைப் பொழியற அன்பு செல்லங்க. ரஜினி, கமலஹாசன்னு இன்னிக்கு இருக்கற தலைமுறையும் என்கிட்ட பாசமாவே இருக்கறாங்க!'' என்று சினிமா பேசிய லட்சுமி,

''சினிமாவுல என் அறிமுகம் எஸ்.எஸ். வாசனோட 'சந்திரலேகா'... சீரியல் அறிமுகம் விகடன் டெலிவிஸ்டாஸோட 'தென்றல்'! அப்புறம் 'முந்தானை முடிச்சு' (சன்.டி.வி.), 'உறவுக்கு கை கொடுப்போம்' (கலைஞர் டி.வி.)னு ஓடிட்டேயிருக்கேன்'' என்ற லட்சுமி,

''இன்னிக்கு ஞாயித்துக்கிழமையில்ல... டிரைவரை வரச் சொல்லி, சாய் கிருபா மெடிக்கல் சென்டருக்குப் போகணும். ஏழைப் பிள்ளைங்களுக்கு என்னால ஆன உதவியை செஞ்சுட்டு இருக்கேன்!''

- விடை பெற்றுச் சென்ற அந்த வயோதிக உருவம், நம்மை நெகிழ்ச்சியில் நிறைத்தது!

http://shockan.blogspot.com/2010/10/blog-post_26.html

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்:(

ஆழ்ந்த அஞ்சலிகள் .

சரவணன் மீனாட்சியில் பார்த்து மனுசி இப்பவும் அப்படியே இருக்கு என்று நாவுறுபடித்திவிட்டோம் போலிருக்கு .மன்னித்துவிடுங்கள் பாட்டி.துணிவான பாட்டிக்கு மிக சிறந்த நடிகை இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

http://www.youtube.com/watch?v=465RsI5PNOo

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான நடிப்பால் பலரையும் பிரமிக்க வைத்தவர்

ஆழ்ந்த இரங்கல்கள்

மகாநதி, மைக்கேல் மதனகாமராஜன், வானத்தைப்போல படங்களில் நன்றாக நடித்திருப்பார். மிகவும் கருணை வெளிப்படுத்தும் நடிப்பு. கடைசிவரை நடித்ததால் சந்தோஷமாக இருந்திருப்பார் என்று நம்புகிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.