Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவனுக்கு அஞ்சலி செலுத்த வாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலவன் - அழகான தமிழ்ப் பெயர். வயது 2 வருடங்கள் மூன்று மாதம். நிலவனின் தகப்பன் இப்பொழுது உயிருடன் இல்லை. நிலவன் தனது தாயாருடனும், சகோதரியுடனும் சென்ற வருடம் சிங்கள தேசத்தில் இருந்து தப்பி நிம்மதியான வாழ்க்கையினை நடாத்த அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்தார்கள். சென்ற மாதம் தான் அக்குடும்பத்துக்கு 'community detention'ல் கிடைத்து சிட்னிக்கு வந்தார்கள். அதாவது அவர்களுக்கு இன்னும் நிரந்தர தங்குமிட வசதி கிடைக்கவில்லை. அக்குடும்பம் சிட்னிக்கு வந்தது பற்றி அவுஸ்திரெலியாத் தமிழர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரெலியாவுக்கு வரும் வழியில் நிலவனுக்கு சிறிய வியாதி ஏற்பட்டது. அகதிகளுக்கான தடுப்பு முகாமில் இருக்கும் போது அச்சிறுவனின் வியாதியினை தாயார் எடுத்துரைத்தும் அங்கு கேட்பதற்கு யாரும் இல்லை. சாதாரண வருத்தம் என்று தான் அங்குள்ளோர்கள் நினைத்தார்கள் அல்லது அக்கறை கொள்ளவில்லை. சென்ற மாதம் சிட்னிக்கு வந்ததும் அச்சிறுவனின் நிலமை மோசமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலைக்கு

கொண்டு செல்லப்பட்டார். அங்கும் வைத்தியர்கள் இவருக்கு சாதாரண வருத்தம் என்று நினைத்து அக்கறை காட்டவில்லை. தாயார் போராடித்தான் அச்சிறுவனுக்கு சத்திர சிகிச்சை நடாத்தினார்கள். சென்ற கிழமை 5ம் திகதி வைத்தியச்சாலையில் அச்சிறுவன் அகால மரணம் அடைந்திருக்கிறார்.

அவர் இறந்தபின்பு தான் அக்குடும்பத்தினைப் பற்றி தமிழர்கள் அறிந்தார்கள். அச்சிறுவனின் பூதவுடல் நாளை 14 ம்திகதி மாலை 1 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்கு என்ற இடத்தில் வைக்கப்படவுள்ளது. தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் படி கேட்படுகிறார்கள்.

They came to Sydney on 21 May 2012 on community detention and have been residing in

Auburn.

On Tuesday 5th of June her Nilavan, aged 2 years and 3 months, tragically died at Westmead Hospital.

Along with the help of the Red Cross and DIAC, the Tamil community is organising the Funeral service

on Thursday 14th of June, 1pm at TJ Andrew Funeral Services, Auburn Rd, Auburn 2144.

Thereafter the body will be buried at Rockwood Cemetery, Lidcombe.

Please join the ceremony and pass this message to your friends to lend your support to his Mother and his sister.

For more details please contact on 0415978826 or 0422224789

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உறவுக்கு அஞ்சலி ... ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமையும், அறியாமையும் சேர்ந்ததால், நிகழ்ந்த இழப்பு!

நிலவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உறவுக்கு அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

மரித்த இன்னுயிர் சாந்தியடைய, ஆழ்ந்த அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

பூ வாடுவதையிட்டு கருணை கொள்ளும் உலகம்

ஒரு தளிரை சாவடித்துள்ளது.

நிலவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !

நிலவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்....

ஆத்மா சாந்தியடையட்டும் ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..:(

sympathy11.gif

ஆழ்ந்த இரங்கல்கள் நிலவனின் குடும்பத்திற்கு.

சோகத்தின் மேல் சோகத்தில் தவிக்கும் குடும்பத்திற்கு உதவ அங்குள்ள மக்கள் ஒரு வங்கிக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

உயிரை காக்க வந்து பறிகொடுத்த நிலவனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

நிலவனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.............! :(

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனுக்கு அஞ்சலிகள். குழந்தை நோயில் தவிப்பதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாதிருக்கும் நிலை ஒரு தாய்க்கு நரகத்தை விடக் கொடியதானது. அந்த அம்மாவின் மனம் சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனின் ஆத்மா சாந்தி அடையட்டும்."வருமுன் காத்தல்","வந்த பின் காத்தல்" எதுவும் நடைபெறவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிலவனது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை இழந்து தவிக்கும் நிலவனின் குடும்பத்தினருக்கு எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வளரும் பயிரை, இள வயதிலேயே இழந்த நிலவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

எவ்வளவோ... வசதி உள்ள நாட்டில், இந்த இழப்பு தவிர்த்திருக்கப் பட்டிருக்க வேண்டும்.

கொடியவர்களிடம் இருந்து தப்பிய அந்தப் பிஞ்சைக் காலன் விடாமல் துரத்தியிருக்கிறான்.

நிமலனின் ஆத்மா சாந்தியடையட்டும். அவனது குடும்பத்துக்கு ஆறுதல் கிடைக்க காலம் தான் துணை போக வேண்டும்.

ஆழ்ந்த இரங்கல்கள், நிமலனின் ஆத்மா சாந்தியடையட்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.