Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Blue label whisky உம் நானும்

Featured Replies

அவனது மகளது பிறந்த தினத்துக்கு போக வேண்டி வந்தது காலத்தின் கட்டாயம் என்று பெரிய எடுப்புடன் சொன்னால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்கள் என்று தெரிந்தாலும் சொல்ல வேண்டி இருக்கு

என் மனைவியின் சொந்த மச்சான் ஒருவர் அடிக்கடி என்னைப் பற்றிக் குறை சொல்வார் "நான் IT யில் இருப்பதால் எனக்கு பெரிய திமிராம் அதனால் தான் நான் அவர் கூப்பிடும் பார்ட்டிகளுக்கு நான் போவதில்லையாம். (IT filed இல் வேலை செய்பவர்களின் நிலை நவீன அடிமைகளின் நிலை என்பது யாருக்கு புரியும் ?)

அவர் ஒரு நாளைக்கு 2 shift வேலை செய்து பின்னிரவு 2 மணிக்கு வீட்டை போய் குடும்பம் நடத்துவார் (முதல் பிள்ளை கலியாணம் கட்டி 4 வருசங்களின் பின்)...

அவர் மனிசி ஓரளவுக்கு வடிவு என்றதையும் சொல்ல வேண்டும்

அவர் எவ்வளவு தான் முக்கினாலும் ஆகக் குறைந்தது 200 டொலர்களேனும் மாதாந்தம் சேமிக்க முடியாதளவுக்கு பொறுப்புகள்

ஊரில் இருந்து கனடா மாப்பிள்ளை கிடைத்த சந்தோசத்தில் பறந்து வந்த மனிசியை கோவிலைத் தவிர வேறு இடங்களுக்கு அவர் கூட்டிச் சென்றதும் இல்லை (அவாவுக்கு இருக்கும் சாதித் திமிர் பற்றி இன்னொரு கட்டுரை எழுதலாம்)

அவருக்கு ஒரு மகள் பிறந்தாள்

அவளது ஒரு வயது பிறந்த தினத்துக்கு போன வாரம் என்னையும் (+ என் குடும்பத்தையும்) அழைத்து இருந்தனர்.

அந்த பிறந்த தினத்தில் பரிமாறிய விஸ்கி: Blue Label !! இதன் கனடிய விலை 290 கனடிய டொலர்கள் (http://www.lcbo.com/...*&UNIT_VOLUME=*

வாழ்க்கையில் நான் Blue label பெயரைக் கேட்டது மட்டும் தான். அன்று தான் அதன் சுவையை அறிய முடிந்தது. வயிறு இடம் கொடுக்கும் மட்டும் குடித்தேன்... நான் குடித்து விட்டு ஆடிய ஆட்டம் தான் எம் உறவுகள் மத்தியில் hot news இப்ப. பல உறவுகள் தம் FB இல் என் கூத்தை போட்டு நிரப்பியுள்ளார்கள்

சரி,

ஒட்டு மொத்தமாக அவர் இந்த party க்கு செலவளித்தது எவ்வளவு தெரியுமா?

just 12,000 Canadian dollars Your Honor !!

இந்த பார்ட்டிக்கு பின் அவரிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்டன்? ஏன் இப்படி 'தண்ணி' க்கு மட்டும் செலவழித்தீர்கள் என?

அவர் சொன்னது

"அப்ப தான் இன சனம் என்னை மதிக்கும்"

  • கருத்துக்கள உறவுகள்

கடன் அட்டைகள் ஒட்டியிருக்கும் வரை இப்படிதான், வாழ்கையை திட்டமிட்டு வாழத் தெரியாதவர்கள்,

பார்ட்டி வந்த எல்லோரும் மனதுக்குள் சிரிந்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"அப்ப தான் இன சனம் என்னை மதிக்கும்"

கஸ்டப்பட்டு 2 வேலை செய்து ஓர் இரவில் காசை 12000 செலவளித்து மதிப்பு வந்திருக்கும் என அவர் நினைத்தாலும் வந்தவர்கள் நிச்சயமாக என்ன சொல்லி இருப்பார்கள்/நினைத்து இருப்பார்கள் என்பது செலவளித்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை.அத்தோடு 12000 உழைக்க 3 ஆவது வேலையை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை party முடிந்த அடுத்த நாள் உணர்ந்து இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நாம் வாழ வேண்டிய நிலை ஏற்படாததையிட்டு நானும் மனைவியும் மிகவும் நிம்மதி அடைகிறோம். வாராந்தப் பார்ட்டி, அந்தப் பார்ட்டி இந்தப் பார்ட்டி, அதுக்குப் போகாட்டிக் குற்றம் இந்தச் சில்லெடுப்பு எதுவும் இன்றி நிம்மதியாக இருக்கிறோம். முகநூலில் ஒரு 10 வயதுப் பையனுக்குச் செய்த கிறிஸ்தவ மதச் சடங்கொன்றின் படங்கள் பார்த்தேன். "படாடோபம்" என்பதன் வரைவிலக்கணம் புரிந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

Blue label whisky உம் நானும்

தலைப்பை பார்த்தவுடனே கிக் தலைக்கு ஏறுதே

.

என் பிள்ளையுடன் அவர்கள் பிள்ளையும் Pre school இல் படித்தது.

வேத்தே பார்ட்டிக்கு கூப்பிட்டிருந்தார்கள். :D

தோப்பனாருக்கு ஒழுங்கான வேலையில்லை. ஒரு $6000‍ மட்டில் செலவு வந்திருக்கும்.

10 பவுன் நகை வாங்கிப் போட்டிருக்கலாம். :icon_idea:

போகாவிட்டாலும் முகத்தை திருப்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அடுத்த கிறுக்கலில் இப்படி ஒரு சம்பவமும் வருகிறது .....அதாவது எல்லாம் டொப் ரேஞ் கதைக்காரரின் கிறுக்கல்.....போனமுறை சிட்னி தவறனைக்கு போய் பார்த்தேன் சிவப்பு லேபிளும் பார்க்க நீலம் நாலு மடங்கு அதிகமான விலையாக இருந்தது....நீலத்தில் ஒன்று வாங்கி அடிக்கிறதிலும் பார்க்க சிவப்பு நாலு வாங்கி அடிச்சு உற்சாகமாக இருக்கலாம் என்று போட்டு ஒரு சிவப்போடு வீட்டை வந்திட்டேன்

சிவப்பு,< கறுப்பு,

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, வெளிப்படையான எனது கருத்துக்குக் கோவிக்க மாட்டீங்க, என்று தெரியும்!

எனது பார்வையில் அவர் ஒரு 'பேய்க் குஞ்சு! :wub:

Edited by புங்கையூரன்

ஆகா ... 195 .95 euro

இன்னும் இல்லை இதற்கு பிறகாவது குடித்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை .

முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி நிழலி :D :D :icon_idea:

post-7765-0-31744700-1339744948.jpg

post-7765-0-59351800-1339744996.jpg

ஏனய்யா எல்லாரும் அந்த மனிசனை போட்டு இந்தக் குத்துக் குத்திறியள்?

எனது கணிப்பின் படி இந்த வெட்டி செலவு அவரின் மனைவியின் பெயராலயே அவர் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். அவாக்கு சாதி திமிர் என்டு வேற சொல்லீட்டியள். அப்ப சொல்லவே வேணும் ஆடம்பரத்தை பற்றி. அதுமட்டுமில்லாமல் அவர் 2 சிப் வேலை செய்கிறார். அவரிற்க்கு பணத்தின் அருமை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

எங்கட பொம்பிளயளின்ர ஆட்டகாசம் வர வர தாங்க முடியல.

இப்படியானவர்கள் எப்ப திருந்த போகிறார்கள்? :( :( :(

கஸ்டப்பட்டு 2 வேலை செய்து ஓர் இரவில் காசை 12000 செலவளித்து மதிப்பு வந்திருக்கும் என அவர் நினைத்தாலும் வந்தவர்கள் நிச்சயமாக என்ன சொல்லி இருப்பார்கள்/நினைத்து இருப்பார்கள் என்பது செலவளித்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை.அத்தோடு 12000 உழைக்க 3 ஆவது வேலையை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை party முடிந்த அடுத்த நாள் உணர்ந்து இருப்பார்.

நான் நினைக்கிறன் சீட்டு கட்டி எடுத்த காசாக இருக்கும். (எவர்களால் காசு சேமிக்க முடியாது என்று நாம் நினைக்கிறோமோ அவர்களில் சிலர் எமக்கு தெரியாமல் சீட்டு கட்டிக்கொண்டு இருப்பார்கள் :D )

ஏனய்யா எல்லாரும் அந்த மனிசனை போட்டு இந்தக் குத்துக் குத்திறியள்?

எனது கணிப்பின் படி இந்த வெட்டி செலவு அவரின் மனைவியின் பெயராலயே அவர் செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். அவாக்கு சாதி திமிர் என்டு வேற சொல்லீட்டியள். அப்ப சொல்லவே வேணும் ஆடம்பரத்தை பற்றி. அதுமட்டுமில்லாமல் அவர் 2 சிப் வேலை செய்கிறார். அவரிற்க்கு பணத்தின் அருமை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

எங்கட பொம்பிளயளின்ர ஆட்டகாசம் வர வர தாங்க முடியல.

இங்கு அந்த பெண்ணிலும் பிழை உண்டு. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவாவை மட்டும் நீங்கள் குறை சொல்ல முடியாது.

நிழலி அண்ணா குறிப்பிட்ட நபர் 2 shift வேலை செய்தாலும் பணத்தின் அருமை தெரிந்தாலும் வெட்டி பந்தா காட்ட நினைக்கும் போது அதெல்லாம் தூசுக்கு சமனாகி விடும்.

"அப்ப தான் இன சனம் என்னை மதிக்கும்" என்ற வார்த்தை அவரின் அடி மனதிலிருந்து தான் வந்திருக்கும். (அவர் மனைவியின் support இருந்தாலும் கூட)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

"அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்தரியில் குடைபிடிப்பான்"

தலைப்பை பார்த்தவுடனே கிக் தலைக்கு ஏறுதே

உண்மை தான். நானும் இதை இன்னமும் சுவைக்கவில்லை.

என் நண்பர்கள் யாரும் இப்படி கொடையாளிகளாகவும் (!) இல்லை.! :lol:

இவ்வளவு பணத்தில் பாதியையாவது அந்த குழந்தைக்கு சேமிப்பாகப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். :(

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

"அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்தரியில் குடைபிடிப்பான்"

அப்ப ராத்திரியில. மழை பெய்தால். குடை வேணாம் எண்டு சொல்லுறியள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் கொஞ்சம் தள்ளியே இருக்கிறன்.. :unsure: ஆனால் அதுக்கும் ஆப்பு வந்திட்டிது.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நிழலியைப்பிடிக்காது

இங்கு போட்டதையும் பார்த்தால்............??? :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு அவர் இப்படி ஒரு பார்ட்டி வைத்தது பொறாமை :D ...அவர் 2 வேலை செய்தால் என்ன 3 வேலை செய்தால் என்ன கஸ்டப்படப் போறது அவரும்,அவரது குடும்பமும் தானே ^_^போனமா விஸ்கியை குடிச்சமா என்று வர வேண்டாமா :lol:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு அவர் இப்படி ஒரு பார்ட்டி வைத்தது பொறாமை :D ...அவர் 2 வேலை செய்தால் என்ன 3 வேலை செய்தால் என்ன கஸ்டப்படப் போறது அவரும்,அவரது குடும்பமும் தானே ^_^போனமா விஸ்கியை குடிச்சமா என்று வர வேண்டாமா :lol:

போதாதற்கு குத்தாட்டம் வேறு போட்டிருக்கிறார். :lol: :lol:

பிள்ளைகளுக்கு பாட்டி வைத்தால் பரவாயில்லை ஐம்பதாவது பிறந்த நாளை மண்டபம் எடுத்து இருபதினாயிரம் டொலர்வரை செலவழித்து வைக்கின்றார்கள்.பெல்லி டான்ஸ் ,ஸ்ரிப் டான்ஸ் என்று போகின்றது.மனைவிமார்தான் செர்பிரைஸ் பாட்டி என்று எடுப்பு எடுக்கின்றது .நாமள் போனமா குடித்தமா சாப்பிட்டமா நாலு பேருடன்? டான்ஸ் ஆடினாமா என்று வந்துவிடுவேன்.

புளுலேபல் இடைக்கிடை அடித்திருக்கின்றேன்.குடிக்க தொடங்கும் போதுதான் வித்தியாசம் தெரியும் கிக் ஏற எல்லாம் ஒண்டுதான்.

பல விதநிலைகளில் இருந்தும் புலம் பெயர்ந்ததால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு போவைதை தவிர வழியில்லை. மனிதர்களில் இத்தனை நிறங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

போதாதற்கு குத்தாட்டம் வேறு போட்டிருக்கிறார். :lol: :lol:

அந்தக் குத்தாட்டம் தானாம்....

FB யிலை, ஹாட் டாப்பிக்காம்.

அங்கை... என்ன, எங்கடை நிழலியைப்பற்றி கதைக்கிறார்கள் என்று... யாராவது சொன்னால், நல்லாயிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது உங்களைப்போன்றோரை திருப்தி படுத்தவேண்டுமே ....... அது சரி அதென்ன வயிறு முட்ட குடிக்கிறது ? :rolleyes: போதைக்குத்தானே குடிப்பார்கள் . :)

எல்லாத்துக்கும் மேல அவர் உங்களின் மனைவியின் சொந்த மச்சான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அவர் தன் சொந்த மச்சாளுக்கு பந்தா காட்ட 12,000 Canadian dollars செலவு செய்து உங்களை விட தான் பெறுமதியானவர் என காட்ட முயன்றுள்ளார் . :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலமாக நல்ல குத்தாட்டம் பார்க்கவில்லை , எனக்கு உங்களின் குத்தாட்டத்தை பார்க்க ஆவலாகவுள்ளது படமிருந்தால் இணைத்து விடவும் . :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகாலமாக நல்ல குத்தாட்டம் பார்க்கவில்லை , எனக்கு உங்களின் குத்தாட்டத்தை பார்க்க ஆவலாகவுள்ளது படமிருந்தால் இணைத்து விடவும் . :D

ஆசை தோசை அப்பளம் வடை :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய கொண்டாட்டத்தைப் பார்த்து விட்டுப் பக்கத்து வீட்டுத் தமிழன்

20,000 டொலர் செலவழிக்கப்போகின்றார் :D

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இடியப்பச்சிக்கல் விளையாட்டு

தமிழர்களால் சில நன்மைகள் கருதி செய்யப்பட்டு வந்த இந்த விசேசத்துக்கு சிறு பொருளைக்கொடுத்து உதவுதல் எனும் வழக்கம் தற்போது வெளிநாடுகளில் பணப்பெருக்கம் காரணமாக ஊதிப்பெருத்து உள்ளது.

அவர் 10 ஆயிரம் செலவளித்துள்ளார் என்பதை பார்க்கும்போது அதே அளவுக்கு மேல் பரிசுகளும் வந்திருக்கும். அத்துடன அவை ஏற்கனவே அவர் கொடுத்ததாகவும் இருக்கும். இதில் பல சிக்கல்கள் உள்ளன.

இந்த சமூகத்திலிருந்து எல்லோரையும் அலட்சியம் செய்து ஒதுங்கியிருக்க முடியாது.

அத்துடன் முக்கிய பல உறவுகளின் விசேங்களில் உறவு முறை சார்ந்து பெரும் பரிசுகளை நாம் கட்டாயம் கொடுக்கவேண்டிவரும். உதாரணமாக சொந்த மாமன் மூத்த அண்ணன் மூத்த அக்கா..................?

எனது ஊரைச்சார்ந்தவர்கள் அதிகமாக இங்குள்ளதால்

அநேகமாக அழைத்தால் போவேன்.

சும்மா போய் சாப்பிட்டுவிட்டுவரமுடியாது தானே.....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.