Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட  ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D :D :D

  • Replies 136
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:D  :D .....சும்மா ஒரு விளம்பரம் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா..

  • நடுத்தர வயதைக் கடந்த ஆன்ட்டி..
  • அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்.
  • தாழ்வு மனப்பான்மை சிறிது உள்ளது.. :D
  • சமையலில் விருப்பமில்லாதவர்..
  • பஞ்சி பிடித்தவர்..
  • செம்மஞ்சள் உடை பிடிக்கும்.
  • கொஞ்சம் குண்டாக இருப்பார்.
  • கதைக்கும்போது தடிப்பு இருக்கும் பேச்சில். :lol:
  • குழந்தைகளை அதட்டும் பழக்கம் உள்ளவர். :(

:D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சுமோ அக்கா..
  • நடுத்தர வயதைக் கடந்த ஆன்ட்டி..
  • அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்.
  • தாழ்வு மனப்பான்மை சிறிது உள்ளது.. :D
  • சமையலில் விருப்பமில்லாதவர்..
  • பஞ்சி பிடித்தவர்..
  • செம்மஞ்சள் உடை பிடிக்கும்.
  • கொஞ்சம் குண்டாக இருப்பார்.
  • கதைக்கும்போது தடிப்பு இருக்கும் பேச்சில். :lol:
  • குழந்தைகளை அதட்டும் பழக்கம் உள்ளவர். :(

:D

 

 

இசை;

மெசு அக்காவை விடுங்கோ;

நான் நிறப்படுத்திய இரண்டும் பொதுவாக buy one get one free என்கிற வகைக்குள் வரும். பொதுவாக எல்லாருக்கும் இருக்கும், ஆனால் அதை பிரயோக்கிற இடம்தான் வேறுபாடும். சிலபேருக்கு  வேலையிடத்தில், சிலபேருக்கு வீட்டில், கொஞ்ச பேருக்கு இரண்டு இடத்திலும்-என்னையே போட்டு கொடுத்து விடுவம் போல இருக்குது.

ஒரு வருத்தம் depression மற்றது mania. இரண்டுக்கும் இடையில் உள்ளது bipolar, அதில் கொஞ்சம் தாக்கம் குறைந்த நிலைமை Dysthymic, பெரிய பெரிய விளக்கங்களை விட்டாலும் - எனக்கு தெரியாது அது வேற- இந்த dysthymic ஆக்கள் தான் மூட் ஸ்விங் பண்ணுவினம். சமரில் கடைசி ஆளா always STOP sign நின்று போவினம், ஆனால் வின்டரில் லேனே மாத்த மாட்டினம்- 

இது ஒரு வகையான spectrum , எல்லோரும் ஒன்றுக்குள் வருவோம். சிலபேரை சொல்லுவம் கொதியன் என்று, சிலபேரை சொல்லுவம் அப்புராணி என்று, இன்னும் கொஞ்ச பேரை சொல்லும் வெளியில தான் வாய் வீட்டை வந்தால் பெட்டி பாம்பு.   இப்படி எல்லோரும் எதோ என்றில் வருவோம்.  இதில் எந்த இடத்தில் நீ இருக்கிறார் என்று தெரிஞ்சுகோ?-ரஜனி இன் பட்டு மாதிரி இல்லையா ? -

இசை நீங்கள் ஒரு நல்ல ஒப்சேர்வர் :)    

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா..
  • நடுத்தர வயதைக் கடந்த ஆன்ட்டி..
  • அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்.
  • தாழ்வு மனப்பான்மை சிறிது உள்ளது.. :D
  • சமையலில் விருப்பமில்லாதவர்..
  • பஞ்சி பிடித்தவர்..
  • செம்மஞ்சள் உடை பிடிக்கும்.
  • கொஞ்சம் குண்டாக இருப்பார்.
  • கதைக்கும்போது தடிப்பு இருக்கும் பேச்சில். :lol:
  • குழந்தைகளை அதட்டும் பழக்கம் உள்ளவர். :(

:D

 

இசையே... எல்லாத்தையும், எழுதிப்போட்டார். நாங்கள் இனி,என்னத்தை எழுதுறதாம். :rolleyes:

 

வேம்படியில்... படித்தவர்.

அநேகமாக... கலைப்பிரிவில், படித்திருக்கலாம்.

மற்ற‌வர்கள் சைட் அடிப்பதை... உள்ளூர‌ ரசிப்பவர். :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

no comment

துணிவான ஒரு பெண்மணி ............மனதில் உள்ளதை நேருக்கு நேர் பேசும் ஒருவர் ,,,,,,,,,,,,,, :D

நிறைய நண்பிகள் இருப்பார்கள்

கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பவர்

சமையல் சுமாராகவே தெரியும்

நன்கு தூங்குபவர்

கவலைகளை வெளியில் சொல்லாமல் மறைப்பவர்

தனது வயதை மற்றவர்கள் தெரியக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளவர், எப்படி எண்டாலும் 40- 45 க்குள் வயதிருக்கும். அசைவ உணவுகளையே விரும்புபவர். பெண் உருவத்தில் இருக்கும் ஆண் என்றே சொல்லலாம் :lol: . பிடிவாதக்காரி, எதையும் வெளிப்படையாகப் பேசுபவர், சுறுசுறுப்பானவர், 1,5, அல்லது 6 நம்பர் ஏதோ ஒண்டு இருக்கும், நல்லாய் பெடியளைச் சுற்றியிருப்பார், படிப்பில் மந்தமாய் இருந்திருப்பார் :lol: , வீட்டில் காளி (பெண்) ஆட்சி தான், வாயால் வங்காளம் போய்வருபவராய் இருப்பார். எது எவ்வாறாயினும் தன்னுடன் இருப்பவர்களுக்கு உயிரையே கொடுக்கும் நல்ல மனமுடையவாராக இருப்பார்! அத்தோடு குழந்தைகளுக்கு நல்ல தாய், என்ன தான் காளியாட்டம் போட்டாலும் கனவருக்கு நல்ல மனைவி!!



தாழ்வு மனப்பான்மை இடைக்கிடை இருக்கும், சிறிது சந்தேகக்காரி



சரியா சுமோ????

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் இன்னும் உங்களைப்பற்றி மட்டுக்கட்ட முடியவில்லை. :rolleyes:

உறுதியான எண்ணங்கள் மனதில் உதிக்கவில்லை :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்னுடைய பார்வையில்.. ஒரு காமடி பீசு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுவதற்கு எதுவுமில்லை

ஏனெனில் உங்களிடம் எதையும் இதுவரை பொறுக்கமுடியவில்லை.

 

ஆனால் இந்த திரியில் உண்மையை  எழுத அனுமதித்தால்

அதிகப்பிரசங்கி  என்ற  சொல் தங்களுக்கு பொருந்தலாம்.

(பொல்லைலக்கொடுத்து அடி வாங்குவது என்பது இதைத்தான்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேம்படி அக்காக்களை கிண்டலடிச்சுத்தான் பழக்கம். ஏன்னா அவையள் கோவிக்க மாட்டினம். பொதுவா நல்லா அக்காக்கள். சின்னனில.. எனக்கு பாடமும் சொல்லித் தந்திருக்காங்க. குறிப்பாக கேத்திர கணிதம். அப்புறம் தான் நான் கேத்திர கணிதத்தில ஒரு கில்லாடி ஆகினனான்.  :lol:  :icon_idea:

 

(நீங்க வேம்படின்னு எங்கையோ பகிர்ந்து கொண்டதால்.. சொன்னன். அதுவும் பொய்யுன்னா.. சாரி.. இது உங்களுக்குப் பொருந்தாது.) ஆனா காமடி பீசுன்னது எப்பவும் பொருந்தும். :lol:

Edited by nedukkalapoovan

உங்களுக்கு இது தேவையா இத்தனை, எல்லோர் வாயிலும் இப்ப நீங்கள் போட்ட அவல்.

 

சுமே நீங்கள் கள்ளம் கபடமற்ற ஒரு நேர்மையான குழந்தை மனசுடையவர், தொடர்ந்து உங்கள் படைப்புகளை யாழில் பகிருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இவ்வளவு பேர் மினக்கட்டு பதிந்திருக்கிறோம், உங்கடை திருவாயையும் மலரலாமே :)

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் பகுதியில் போட்டு இருக்கிறீர்கள்.............நான் சீரியஸ் ஆக சொல்கிறேன் ..ஒரு அம்மா..... குழந்தைகளுடன் கண்டிப்பானவர். நிர்வாகக் திறமை உள்ளவர். வயது முப்ப துகளின் இறுதி ........நி றைய அவதானம் உள்ளவர். சற்று துணிச்சல் மிக்கவர். ஐந்து எண்ணின் ஆதிக்கம் மிக்கவர்.  ( ஐந்து எண்ணுக்குரிய குணாதிசயம் உள்ளவர்.)கணவன் ராசா எனில் இவர் தான் மந்திரி ...மறை முகமாக் பேச தெரியாதவர் பட் பட்  என்றுபோட்டு உடைபவ்ர். :D

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன?........... வேம்படியோ?........என்ரை சிவனே பிச்சை வேண்டாம் நாயை புடி....தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்dogrun-1.gif

ஏன் சூடு பட்டனீங்களோ....எல்லாம் சும்மா வேஷம்ம....கையில் விக்ஸூடன் தெரிவார்கள் தெரியுமா? 

என்ன?........... வேம்படியோ?........என்ரை சிவனே பிச்சை வேண்டாம் நாயை புடி....தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்dogrun-1.gif

 

  :D  :lol: ஏன் சூடு பட்டனீங்களோ....எல்லாம் சும்மா வேஷம்....கையில் விக்ஸூடன் தெரிவார்கள் தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய நந்தன், இசை, வொல்கானோ, தமிழ்ச்சிறி, கறுப்பி,தமிழ்ச் சூரியன், போக்குவரத்து, அலை, சகாரா, வந்தி,நிலா,குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு நன்றி. இசை என்னைப் பற்றி எழுதியதில் நான்கு உண்மை. வொல்கானோ, தமிழ்ச் சிறி, தமிச் சூரியன்,போக்குவரத்து ஆகியோர் கூறியவற்றில் ஒன்று உண்மை. அலை கூறியவற்றில் நான்கு தவறு. நிலா எழுதியதில் மூன்று உண்மை. வந்தி சொல்வதும் ஓரளவு உண்மைதான். இன்னும் வேறு யாராவது எழுதுகிறார்களா என்று ஒருநாள் பாக்கலாம் தானே. :D :D :D

 

குமாரசாமி அண்ணா வேம்படி என்றதும் இப்பிடி ஓடுவானேன். என்னைப் போன்ற நல்ல பிள்ளையளும் அங்க கனபேர் படிச்சவை. :lol:  :lol: 

 

பந்திபந்தியா  எழுதிற நெடுக்கிற்கு ஆட்களை எடை போடவே தெரியவில்லை. :(

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

மெசோ அக்கா.....

உங்களை பற்றி சொல்லணும் எண்டா உங்களுக்கு செய்ய தெரிந்த ஒரே உணவு தோசை அடிக்கடி உங்க வீட்ட அத தான் செய்வதாக புலணாய் சொல்லுது.....

மற்றது நீங்க நல்லா சௌண்டு விடுவிங்க ஆனா சண்டை எண்டு வந்தா ஓடிடுவிங்க....

வேற என்னத்த சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்
சுமோவுக்கு 40யில் இருந்து 45 இருக்கும்
கொஞ்ச‌ம் அழகாக இருப்பார்
சுறுசுறுப்பானவர்
தைரியசாலி
சமையலில் ஈடுபாடு உடையவர்
எதையும் முகத்திற்கு நேரே சொல்லும் துணிவுடையவர்.
வெட்டொன்று துண்டிர‌ன்டு என சொல்லி விடுவார்.
கணவரை அட‌க்கி ஆள்வார்.
குழந்தைகளுக்கு கண்டிப்பான தாய்.
கண் முன்னே மற்றவர்கள் அக்கிர‌மம் செய்தால் அதை நேரே தட்டிக் கேட்கா விட்டாலும் மற்றவரிம் சொல்லிப் புலம்புவார்.
பொறுமை இல்லை.
திமிர் பிடித்தவர்
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலவரிகள் எழுதி இருக்கன் உங்களைப்பற்றி என் மனதில் பட்டதை...

 

      http://www.yarl.com/forum3/index.php?showtopic=113070&p=836733

  • கருத்துக்கள உறவுகள்
பந்திபந்தியா  எழுதிற நெடுக்கிற்கு ஆட்களை எடை போடவே தெரியவில்லை. :(

 

ஐஸ்வர்யா ரேஞ்சில இருந்தால் எடைக்கு எடை தூக்கிப் பார்திருக்கலாம் (இப்போதைய ஐஸ்வர்யா என்றாலும்) . ஆனால் ஐஸ்வர்யாவின் மாமியார் மாதிரி இருந்தால் தூக்கமுடியாதே! :icon_mrgreen:

வெளியே துணிவாக இருந்தாலும் உள்ளுக்குள் பயந்தவர்.

 

விளம்பரப் பிரியை.

 

நல்ல எழுத்தாற்றல் உள்ளது.

 

பல நல்ல விடயங்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று யோசிப்பவர். உங்கள் ராசியில் மூன்றாம் இடத்தில் ராகு 

சஞ்ஞாரிப்பதால், அவற்றை ஒருமுகப் படுத்திச் செய்யமுடியவில்லை.  

 

முன்னேற வேண்டும் என்ற ஆவலும் தன்னம்பிக்கையும் உள்ளது. அது வெற்றியைத் தரும்.

 

:D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, நீங்கள் ஒரு மிகவும் இயல்பான எழுத்தாளர்.

 

ஆனால், விவாதம் என்று வரும்போது, அதனை விவாதமாகப் பார்க்காது, தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கின்றீர்களோ, என்னும் எண்ணத்தை, உங்கள் கருத்துக்கள் சிலவேளைகளில் பிரதிபலிக்கின்றன போல எனக்கு உள்ளது!

 

நீங்கள், பொது வாழ்க்கையில் அதிகம் ஈடு படுபவர் போலத் தெரிகின்றது.

ஆனால், உங்கள் வாழ்க்கையில், பெரும்பகுதியைச் சமையலில் வீணாக்கி விடுகின்றீர்கள் போல இருக்கின்றது!

உதாரணமாகப் பெரிய வெங்காயங்கள் இருக்கத்தக்கதாகச், சின்ன வெங்காயங்களை, வாங்கி உரித்து மினக்கடுவதைச் சொன்னேன்! :D 

 

ஆனால், உங்கள் துணிவு, சில வேளைகளில், என்னை மூக்கில் விரலை வைக்கச் செய்கின்றது!

 

இதை வாசிக்கும் போது, என் மீது கோபம் வந்தால், 'சிவாயநம' என்று நூறு தடவை சொல்லுங்கள்.

கோபம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்!   :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.