Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா நல்ல எழுத்தாற்றல் கதை சுப்பராய் போகுது...விமானத்தில் நடந்ததை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா நல்ல எழுத்தாற்றல் கதை சுப்பராய் போகுது...விமானத்தில் நடந்ததை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்

உண்மைதான் ரதி! ஜீவாவின் எழுத்தாற்றலை  பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.பயணங்களை எழுத்துவடிவில் தருவதற்கு ஒரு தனியான திறமை வேண்டும்.அது தம்பி ஜீவாவிடமும் நிறையவே இருக்கின்றது. சந்தோசம் ஜீவா!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுக் குடும்பம், என்னால் நினைத்தும் பார்க்க முடியாதது. ஓரிரு நாட்கள்
என்றால் பரவாயில்லை. பிரைவேசி, அதுவும் ஹொலிடே போகும்போது, மிக அவசியம் எனக்கு மச்சான். உன்னுடைய சிட்டுவேசன் விளங்குகிறது. அருமையாகப் போகிறது, ரசித்து வாசிக்கிறேன்.

 

 

வாசிக்கும் போது கவலையாக உள்ளது. இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல எமது நாட்டிலும் தான்...

வெளிநாடுகளில் சிறு பிள்ளைகளுக்கு பிச்சை போடுவதில்லை. பிச்சை போட்டு பழக்கினால் அவர்கள் படிக்க, வேலை செய்ய முயற்சிக்காமல் பிச்சையையே தொழிலாக்கி விடுவார்கள் என்று.. ஆனால் இந்தியாவில் அல்லது எமது நாட்டில் எனும் போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேறு யாரும் பெரியவர்கள் கூறட்டும்.

 

நான் இந்தியாவுக்கு சென்றதில்லை. எனினும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் உணர்வு. தொடர்ந்து எழுதுங்கள். :)

 

 

இலங்கையையும் தமிழ் நாட்டையும் ஒப்பிடுவதை வன்மையாக் கண்டிக்கிறேன். அக்கா.
சினிமாப் படத்தில் மட்டுமே தமிழ் நாடு அந்தமாதிரி, மற்றும்படி போய்
 வந்தவர்களின் அனுபவப் படி ஒரு ஊத்தை இடம். இலங்கையில் பிச்சைக்காரச்
சிறுவர்களை நான் கண்டது குறைவு. அதுவும் கோயில்களில், இல்லை என்றே
சொல்லலாம். தமிழ் நாட்டை விட இலங்கையில் தனிமனித கல்வி, சுகாதார, பொருளாதார
மேம்பாடு அதிகம். மூட நம்பிக்கைகளும், சுயநலமும் எம்மவர்களிடம் மிகக்
குறைவு. இதில் பலர் என்னுடன் உடன்படுவார்கள் என நம்புகிறேன்.

ஜீவா இலகு நடையில் அருமையாக தொடரை கொண்டு செல்கின்றீர்கள். பாராட்டுக்கள், தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை 6:30 இற்கு எழும்பி விட்ட இடத்தில் இருந்து மிச்சமெல்லாம் வாசிச்சாச்சு...நல்லா இருக்கு ஜீவா... இளமைத் துடிப்புடன் தொடர் இருக்கின்றது. இன்னுமொருவன் குறிப்பிட்டுள்ளது போன்று பிரத்தியேகம் (Privacy) என்ற விடயத்துக்கு நாங்கள் கொடுக்கும் அளவு இன்று மிகவும் அதிகரித்துவிட்டது. என்னால் ஒரு கூட்டுக் குடும்பத்தின் சூழ்நிலையை நினைத்தும் பார்க்க முடியாது.

 

இவ்வளவு ஆவலாலப் படிக்கிறீர்கள் எனும் போது உண்மையில் சந்தோசமாக இருக்கிறது அதே நேரம் சங்கடமாகவும் இருக்கிறது. அந்தளவுக்கு எழுதுகிறேனா என்ற சந்தேகம் தான் வருகுது.நிற்க,

 

புதிய சூழ்நிலை என்பதால் பிடித்துக்கொண்டதோ இல்லை  இருக்கும் கொஞ்சநாளும் சந்தோசமாய் இருப்போம் என்றோ ...... காரணம் புரியவில்லை, ஆனால் இதுவும் மாறக்கூடும், காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மாற்றம் ஒன்று தானே மாறாதது.

 

நன்றி நிழலி அண்ணா வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.. :)

ஜீவா மிகவும் அழகாக எழுதுகிறீர்கள். பதில் போடாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கிறேன், தொடருங்கள்.

 

தொடர்ந்திருங்கள்..

 

உங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் அண்ணா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

மாமியார் வீடு நல்லா இருக்கு, தொடருங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஐயா எழுத்து . ம் அந்த மாதிரி.

என்ன ஐயா எழுத்து . ம் அந்த மாதிரி.

 

:unsure: :unsure:

நன்றி விழி அண்ணா, உங்கள் கருத்து பகிர்வுக்கு...

ஜீவா

 

 

எந்த பொருளும்

எந்த விடயமும் கடின உழைப்பின்றி

அல்லது நேரவிரயமின்றி

அல்லது முழுவதும் இலவசமாக கேட்கும் போதெல்லாம் கிடைக்குமாயின்

பக்கத்திலிருக்குமாயின்

அதற்கு பெறுமதியோ

கேள்வியோ

தேடுதலோ கிடையாது.

 

இன்றைய  புலம் பெயர் சீர்கேடுகளுக்கு ஒரு காரணம்

இந்த  தனித்து வாழுதல் ராசா.

ஒருவரையே  தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதால் வரும் சலிப்பே இன்றைய பல திருமண  முறிவுகளுக்கு காரணம்.

கூட்டுக்குடும்பம் என்பதும் இதை ஒரு அளவுக்கு தவிர்த்து தள்ளி  வைப்பதால் சில வேள்விகளை  எழுப்பி வாழ்க்கை  இன்பமாக தொடர வைக்கிறது.

இதற்கு மேல் எழுதினால்  அது.........??? :icon_idea:

 

உண்மை,

 

"இக்கரைக்கு அக்கரை பச்சை"

 

நன்றி விசுகு அண்ணா. :)

இவ்வளவு விரைவாக எழுதிவிட்டீர்களா. நன்றாகப் போகிறது ஜீவா. :)

 

விட்டு விட்டு எழுதினால் சுவாரசியம் குறைந்து விடும் அக்கா, படிப்பவர்களுக்கும் சலிப்பு வந்திடும்

அதனால் தான் விரைவில் முடித்துவிடப் பார்க்கிறேன்.

 

தொடர்ந்து ஊக்கம் குடுத்து வருகிறீர்கள், நன்றி அக்கா... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நீர் பழைய கோயம்பேடு பஸ் ஸ்ராண்டை பாக்கேலையோ ஜீவா  :lol:  :lol:  :D ???  இதுக்கே இப்பிடி ஃபீல் பண்ணினா எப்பிடி :icon_mrgreen: ??? தொடருங்கோ :) .

 

பழைய பஸ் ஸ்ராண்டா? அது எங்கை இருக்கு?????? :rolleyes:

 

நாங்க ஏரியாக்கு புதுசண்ணே.. :D

மிக சுவாரஸ்யமாக தொடர்கின்றது ,உங்களது எழுத்தின் சிறப்பு அனைத்து விடயங்களையும்(காதல் ,சுகம்,சோகம் ,பஞ்சம் ,இயற்கை அழகு ) தொட்டு செல்வதுதான் .

புலம் பெயர்ந்து என்னவெல்லாவற்றையும் இழந்துவிட்டோம் .தொடருங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்கும் போது கவலையாக உள்ளது. இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல எமது நாட்டிலும் தான்...

வெளிநாடுகளில் சிறு பிள்ளைகளுக்கு பிச்சை போடுவதில்லை. பிச்சை போட்டு பழக்கினால் அவர்கள் படிக்க, வேலை செய்ய முயற்சிக்காமல் பிச்சையையே தொழிலாக்கி விடுவார்கள் என்று.. ஆனால் இந்தியாவில் அல்லது எமது நாட்டில் எனும் போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேறு யாரும் பெரியவர்கள் கூறட்டும்.

 

நான் இந்தியாவுக்கு சென்றதில்லை. எனினும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் உணர்வு. தொடர்ந்து எழுதுங்கள். :)

 

2008ஆம் ஆண்டுக்கு பின்னரான தாயகத்து,இலங்கை நிலமை எனக்கு தெரியாது சிஸ்டர். செய்திகளிலும் ஊரில் உள்ளவர்களுடன் பேசும் போது தான் தாயகத்து நிலமைகளை அறிய முடியும் ஆனால் அதற்கு முன்னர் தாயகத்தில் இருந்ததால் தெரியும், இந்தியாவின் நிலையோடு ஒப்பிடும் போது இலங்கை எவ்வளவோ பரவாயில்லை. ஆழ அதன் வேர்களுக்குள் ஊடுருவிப்பார்க்கவில்லை, எந்த கருத்துக்கணிப்பீட்டையோ,மதிப்பீட்டையோ காட்டவும் முடியாது, மேலோட்டமாகப் பார்க்கப்போனால் சமூக,பொருளாதார அடிப்படையில் மேம்பட்டவர்களாகச் சொல்லலாம்.

 

சந்தர்ப்பம் கிடைத்தால் போய்ப்பாருங்கள் பலவற்றைக் கண்கூடாகப்பார்க்கலாம்.

 

நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு .. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 9

 

வீட்டை வந்ததுமே முதல் கேள்வி "மம்மி இரவுக்கு என்ன சாப்பாடு"

 

"இப்ப தானேடி சாப்பிட்டோம்" !

 

அதென்ன அதிசயமோ தெரியாது பிறந்த வீடும் சரி,புகுந்த வீடும் சரி அடுப்பு பத்தாத நாள் இருக்காது அப்படி ஒரு கொடுப்பனவு.

 

சாப்பிட்டுக்கொண்டே அடுத்த நாள் "காணும்பொங்கலுக்கு" எங்கு போவது என்று தீவிரமாக மந்திராலோசனை செய்துகொண்டிருந்தார்கள்.

 

"மெரீனா" தான் எனது தேர்வு.. கண்ணுக்கு குளிர்ச்சியா கலர் கலரா பார்க்கலாம் என்பதால் எனது தெரிவு அதுவாகத்தான் இருந்தது. ஆனால் அத்தையோ நீலாம்பரி ரேஞ்சில் வேண்டாம் என்று சொன்னா..

எல்லாம் இந்த "தினத்தந்தி" பேப்பர்காரன் பண்ணிய வேலை தான்.

 

"தைப் பொங்கலுக்கு மெரீனாவில் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர், போலீசார் தடியடி"

என்று கொட்டை எழுத்தில் போட்ட செய்தியைப் படித்து விட்டு..

 

பொங்கலுக்கே இப்படியென்றால், காணும் பொங்கலுக்கு ஊர்ச்சனம் முழுக்க அங்கை தான் நிக்கும் போய்வரச் சரிவராது எங்களுக்கு என்றாலும் பரவாயில்லை இந்த ஊர் பழக்கம், பாவம் பிள்ளைக்குச் சரிவராது என்று என்ரை ஆசையிலை பெரிய கிளைமோரையே கட்டிவிட்டா..

 

பிறகு ஒரு மாதிரி பெசன்ட்நகர் பீச்சுக்கு போறதா முடிவு..

 

சனநெரிசல் அதிகமாய் இருக்க முதல் போய் வரவேண்டும் என்று மத்தியானமே வெளிக்கிட்டு விட்டோம்.

இடையில் ஒரு குடும்பம் பஸ்ஸில் ஏறினார்கள் கணவன்,மனைவி,ஒரு பையன் சின்ன பொண்ணு ஒன்று, ஓரளவு பெரிய பொண்ணு, இவளும்,விஷாலியும் மட்டும் அவர்களைப் பார்த்து ஏதோ குசுகுசுத்தார்கள்.

 

"என்னடி என்னை விட்டு பேசுறிங்கள்"

 

அங்கை பாருங்க அவருக்கும் அந்த ஃபமிலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கிறது போல தெரியலை

 

"அடி பிசாசு, இது உனக்கு தேவையா? அவங்களுக்கே இப்படி ஒரு எண்ணம் வந்திருக்காது, நீங்கள் அதை ஆராய்ச்சி பண்ணுறிங்களா?"

 

"வடிவா பாரு பொடியனோடை முகத்தை தகப்பன்டை ஷேப் அடிக்குது"

 

"இருந்தாலும் கொஞ்சம் தான்"

 

பாருங்கள் மகா ஜனங்களே ரெண்டு பெண்கள் சேர்ந்தாலே இதே கதை தான்.

 

ஆகப்பெரிய பெண் இல்லை என்றாலும் பார்த்து சைட் அடிக்கக் கூடிய அளவு பிள்ளை தான்.

அக்காவின் மடியில் இருந்த சின்னப் பொண்ணுக்கு நாக்குக் காட்டி நான் செய்ய அதுவும் செய்தது..

 

"அக்கா,அக்கா.. அங்கை பார் நீ இருக்கவே அண்ணா அந்தப் பிள்ளைய சைட் அடிக்கிறார் என்று போட்டுக்குடுத்தாள் விஷாலி.."

இவள் என்னைக் கிள்ளிவிட்டு கொழுப்படா உனக்கு.. இரடா உன்னைக் கவனிக்குறேன்.

 

"லூசாடி நீ .. நான் அந்த சின்னப் பிள்ளை கூட எல்லோ விளையாடினான்"

 

அங்கை பார்.. பார்க்குது.. நீ வேணும் என்றால் செய்து பார் என்றதும் இவள் செய்ய அதுவும் செய்தது..

 

 

"ஆமாம்லே.."

 

நல்ல காலம் தப்பிச்சேன்.

 

இடையிலை அதுகள் ஒரு சிறுவர் பூங்காவில் இறங்கியதும், இருந்த ஒரு என்டடெயின்மென்டும் போட்டுதே என்று மனம் ஃபீல்

பண்ணிச்சுது.

 

இறங்கியதும் அருகில் இருந்த சேர்ச் இற்கு போய்விட்டு கோவிலை நோக்கி நடக்கிறோம்.

மிகவும் ஒடுங்கிய பாதை வீதியின் இருமருங்கிலும் நெருங்கிய வீடுகள் பான்சி கடை,படக்கடை என்று ஒரு கடற்கரை கிராமத்தின் அத்தனை அழகும் அங்கே..அன்று பண்டிகை கூட்டம் அதிகம் என்பதால் வீட்டு வாசலிலேயே "தாழ்வாரம்" போலக் கட்டி மீன்பொரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கோவிலை நெருங்க நெருங்க கூட்டம் அதிகமாய் இருந்தது.

"துப்பட்ட்டாவால் கழுத்தை மூடிக்கட்டிக்கொண்டு என் கையைப்பிடித்து வந்தாள் நடை பழகும் கிள்ளை போல.."

 

அந்தளவு கூட்டம் வரிசையில் நிற்கும் போது நாங்கள் போகமுடியாது என்று தெரியும்.. அப்படியே அந்த வீதியில் சிறிது காலாற நடந்து விட்டு கொஞம் தள்ளி இருக்கும் கடலை நோக்கி நடக்கிறோம்.

 

69642_408642639210025_36454507_n.jpg

 

கடற்கரைக்கு போன எமக்கு ஏமாற்றம் தான் மிச்சம். யாரையும் கடலுக்கு செல்ல அனுமதிக்காமல் தடுப்புக்காவல் கட்டி பொலிசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தார்கள், அந்த ஊர் இளைஞர்கள் வேறு உயிர்காப்பு பணியில் ஈடுபடுவதற்காய் இருந்தார்கள்.

 

நீந்தவேறை தெரியாது, கரையிலை நின்று தெப்பல் அடிக்கலாம் என்று பார்த்தால் அதையும் கெடுத்துப் போட்டாங்கள்.

காவலுக்கு வெளியே நின்று கடலைப் பார்த்தது தான் மிச்சம்.

 

"சுண்டல்".. "சுண்டல்" .. "சுண்டல்" என்று கூவி வந்தவனிடம் சுண்டல் சாப்பிடலாம் என்று பார்த்தால், என்ன அநியாயம்

ஒரு "உசுக்குட்டி" பேப்பரிலை சொட்டு கடலையப் போட்டு தந்தான் பத்து ரூபாவுக்கு, ஒரு வாய்க்கு கூட போதாது.

 

வந்திட்டமே ஏதாவது பண்ணணுமே எனும் போது இராட்டினத்தில் சுத்துறது என்றால் இவளுக்கு கொள்ளை பிரியம், எனக்கோ தலைய சுத்தும். அத்தை யாரும் வரவில்லை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாருமில்லாமல் தனிய என்னவளை மட்டும் வைத்து சுற்றவேண்டும் என்று ஆசை எல்லாரும் இறங்கியதும் கேட்டேன்.

 

"ஆக்கள் இல்லை இன்னும் கொஞ்சப்பேர் வரட்டும்".

நான் உங்களுக்கு காசு அதிகமா தாறேன் அவளை மட்டும் வச்சு சுத்துங்கோ .. சரி சொன்னவரிடம் இவளை ஏத்தி விட்டு காய்வெட்டலாம் என்று பார்த்தல், இவள் அருகில் விஷாலியும் ஏறிவிட்டாள். போனால் போகட்டும் என்ன செய்ய என்று பார்த்தால், பாவிப்பயல்..

 

"நீங்களும் அந்தப் பக்கம் ஏறுங்க சேர்.. பலன்ஸா இருக்கும்."

 

மாட்டேன் என்று சொன்னாலும் மானம் போயிடும்.. உள்ளுக்குள்ளை பம்மியவாறு போய் ஏறி இருந்தேன்.

 

ராட்டினம் சுத்த பூமியே சுத்துவது போல இருந்திச்சு.. இறங்கினதும் எங்கையாவது கொண்டுபோய் "ஒத்தப்போகுது" போல இருந்திச்சு.. அப்பவும் காசை மட்டும் தெளிவா எடுத்து குடுக்கிறேன். அவள் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள்.

ஆம்பிளைப்பிள்ளையாச்சே .. இதைச்சொனாலும் வெட்கக்கேடு .. சொல்லாமல் தலையச் சுத்தி விழுந்தாலும் மானகேடு

நான் எவ்வளவு நேரமென்று தான் இதையே மெயின்டெய்ன் பண்ணுறது?

 

"குட்டிமா.. கொஞ்ச நேரம் இந்த மணலிலை இருப்பமா?"

 

இந்த வெய்யிலுக்கா? " அப்புறம் உச்சா போகக் கடுக்கும் டா" நிலம் வேறை சரியில்லை வா போவம்..!!

 

"ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்ஸ்.. என் ஃபீலிங்கை ஒருத்தரும் புரிஞ்சுக்கிறாங்க இல்லையே"

 

தெய்வம் போல ரீ விக்கிற பொடியன் வந்தான்..

 

குட்டிமா வா.. ரீ குடிப்பம்.

 

"என்ன அதிசயமாக் கிடக்கு ... நீ தான் ஒரு இடமும் குடிக்க மாட்டியேடா, ஆயிரம் கதை கதைப்பாய். இப்போ என்னடான்னா..

இங்கை அதுவும் இவன்கிட்டையா?"

 

நீ இத்தனை கேள்வி கேட்கிறதுக்கு அதுவே பரவாயில்லை டி.."

 

"என்ன அது?" எதுவும் தெரியாத அப்பாவியாக் கேட்டாள்.

 

இல்லை சென்னை ல எல்லாத்தையுமே அனுபவிச்சுப் பார்க்கணும்லே அதான்..

 

ஓ.. சரி ..

5 ரீ குடுங்க..

 

ரீ.. குடிச்சதும் தான் தலைச்சுத்து நோர்மலுக்கு வந்திச்சு..

 

"வெள்ளை மணலில் அவள் தன் காலால் இதயம் வரைய

அதில் நான் நம் இருவரின் பெயரை எழுதினேன்

எத்தனையோ பேரின் காதல் நினைவுகளைச் சுமந்த கடற்கரை

எமது நினைவுகளையும் சேர்த்தே சுமக்கிறது.."

 

தொடரும்..

 

 

 

Edited by ஜீவா

"ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்ஸ்.. என் ஃபீலிங்கை ஒருத்தரும் புரிஞ்சுக்கிறாங்க இல்லையே"

 

இங்கை நிக்கிறியள்  :lol: :lol: . எண்டாலும் வடிவாய் காய்வெட்டியிருக்கலாம் . அந்த " உசுக்குட்டி " என்ற சொல்லாடல் பருத்தித்துறைக்கே உரியது .  தொடருங்கோ :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

உக் குட்டி ... பேப்பர் சுருளில்  இத்தனூண்டு கடலையா ? :D 

 

நல்லா போகிறது

ஜீவா..உங்கட கதையை வாசிச்ச பிறகு , நான்  திரும்ப ஒருக்கா கல்யாணம் கட்டவேணும் போல இருக்கு  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யீவா அசத்தல்தான்

 

கடக்கு முடக்கென்று இல்லாமல் எழுத்தின் நடை ஒரு எழிலான பெண்ணின் நளினநடைபோல இருக்கிறது. நீண்ட காலத்திற்குப்பின்னர் இரசித்து வாசிக்கிறேன். :rolleyes:

நல்லாருக்கு ஜீவா,அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

 

அதென்ன தலைப்பு ?  'மாமியார் வீடு' என்றால் ஜெயில் என்றும் சொல்லுவார்கள். :D 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரைக்கும் இக்கதையோடு பயணித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்து  என் கிறுக்கல்களையும் ரசித்த கருத்துரைத்த, விருப்புவாக்குகளையும் அளித்த உறவுகளுக்கும்,வாசகர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜுவா அண்மைக்காலமாக  உங்கள் கதையை அனுபவித்து படித்த அளவிற்கு எந்த கதையையும் நான் படிக்கவில்லை.  கதை  சொன்ன விதம் அதற்குள்ளான உணர்வு .  சேர்க்கப் பட்ட நகைச்சுவை.     இன்றைய தலைமுறைக்கு ஒரு  சிறந்த மசாலா படத்தின் கதை வசனத்தை ஒழுதும் திறைமை உங்களிடம் உள்ளது .  வாழ்த்துக்கள்.  யாழில் பகலவனின்  தொடர் கதைக்கு  அடுத்த படியாக  நான் இரசித்து படித்த  தொடர்  இதுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்த்ஸ் அண்ணா பகலவன் அண்ணா கோமகன் அண்ணா வல்வை அக்கா என்று யாழ் களத்தின் எழுத்துலக ஜாம்பவான்களே அசந்து நிற்கும் போது நான் என்ன சொல்ல இருக்கு அழகான ஒரு திரைப்படம் பார்த்த திருப்த்தி வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு முறை சென்னைக்கு அழைத்து சென்றதற்கு ....நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா இங்கு எல்லாரும் சொன்ன மாதிரி உங்கள் எழுத்தோடு எல்லோரையும் கட்டிப்போட்டு விட்டீர்கள்.அருமையான பதிவு நன்றி.

வணக்கம் ஜீவா!

 

இன்று தான் உங்கள் பதிவை வாசித்தேன். முதலாவது பகுதியிலிருந்து இறுதிப் பதிவுவரை ஒரு மூச்சாக வாசித்து முடித்தேன். அதற்குக் காரணம் உங்கள் எழுத்து.

 

நீங்கள் எழுதியிருக்கிற விசயம் ஒன்றும் புதியதல்ல. அனேகமாக அனைவரும் சென்று வருகின்ற விமானப் பயண மற்றும் தமிழகப் பயண அனுபவம் தான். ஆனாலும் உங்கள் எழுத்து நடை கவரக்கூடியதாக இருக்கிறது. தொடர்ச்சியாக வாசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்....

 

தொடர்ந்து உங்கள் படைப்புக்களைத் தாருங்கள். 

இன்று தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது உங்களின் மாமியார் வீட்டுக் கதையை வாசிப்பதற்கு .... உண்மையாகவே நன்றாக அனுபவித்து எழுதி இருக்குறீங்க ஜீவா அண்ணா . உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தது போன்று உள்ளது . அத்துடன் உறவுகளை வெறுக்கும் இக் காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ நினைக்கும் உங்களை பார்க்க பெருமையாக இருக்குறது . இன்னும் நீங்கள் நிறையவே கதைகள் எழுதணும். நாங்கள் வாசிக்க காத்திருக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் தம்பி ஜீ வாவுக்கு ............


........அருமையான் காதல்  கதையை பா தியில் நிறுத்தி விடீர்களே.. மீண்டும் என்  இளமைக் கால நினை வுகளுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவர்களுக்காக ஏ ன் உங்கள் திறமையை .. முடக்க வேண்டும்.  சவாலை  சந்தியுங்கள் ஒரு தொடர் மட்டுமாவது   எழுதி சுபம் போட்டு முடியுங்கள்.  இங்கு ஊதி ஊதி  பெரிதாக்குபவ ர்கள் தான் அ திகம். பிளீஸ் ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டு நிறைவாக்குங்கள்.


நிலா அக்கா

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் தம்பி ஜீ வாவுக்கு ............

........அருமையான் காதல்  கதையை பா தியில் நிறுத்தி விடீர்களே.. மீண்டும் என்  இளமைக் கால நினை வுகளுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவர்களுக்காக ஏ ன் உங்கள் திறமையை .. முடக்க வேண்டும்.  சவாலை  சந்தியுங்கள் ஒரு தொடர் மட்டுமாவது   எழுதி சுபம் போட்டு முடியுங்கள்.  இங்கு ஊதி ஊதி  பெரிதாக்குபவ ர்கள் தான் அ திகம். பிளீஸ் ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டு நிறைவாக்குங்கள்.

நிலா அக்கா

 

கதையை தொடருங்கோ அத்து... :)

அன்புடன் தம்பி ஜீ வாவுக்கு ............

........அருமையான் காதல்  கதையை பா தியில் நிறுத்தி விடீர்களே.. மீண்டும் என்  இளமைக் கால நினை வுகளுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவர்களுக்காக ஏ ன் உங்கள் திறமையை .. முடக்க வேண்டும்.  சவாலை  சந்தியுங்கள் ஒரு தொடர் மட்டுமாவது   எழுதி சுபம் போட்டு முடியுங்கள்.  இங்கு ஊதி ஊதி  பெரிதாக்குபவ ர்கள் தான் அ திகம். பிளீஸ் ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டு நிறைவாக்குங்கள்.

நிலா அக்கா

 

கதையை தொடருங்கோ அத்து... :)

அன்புடன் தம்பி ஜீ வாவுக்கு ............

........அருமையான் காதல்  கதையை பா தியில் நிறுத்தி விடீர்களே.. மீண்டும் என்  இளமைக் கால நினை வுகளுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவர்களுக்காக ஏ ன் உங்கள் திறமையை .. முடக்க வேண்டும்.  சவாலை  சந்தியுங்கள் ஒரு தொடர் மட்டுமாவது   எழுதி சுபம் போட்டு முடியுங்கள்.  இங்கு ஊதி ஊதி  பெரிதாக்குபவ ர்கள் தான் அ திகம். பிளீஸ் ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டு நிறைவாக்குங்கள்.

நிலா அக்கா

 

கதையை தொடருங்கோ அத்து... :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூண்டுதரம் எக்கோ பண்ணுது? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.