Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு

Featured Replies

ஈகுருவியின் தொல்லை வரவர தாங்கலை.. :D

 

விசில் அடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் விசில் அடித்தால் அதை என்ன என்பது? ஒன்றில் அவர்களுக்கு தமிழ் விளங்காததாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன கேட்கிறது என்கிற தலைக்கனமாக இருக்க வேண்டும். :wub: எனக்குப் பின்னால் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒரு பணிஸ் தலையர் கடைசிவரையில் தன் இரு விரல்களையும் உபயோகித்து விசில் அடித்தபடியே இருந்தார். :D

 

இரண்டாவது தோளில் கை போடுவது. முன்னைப் பின்ன சந்தித்திராதவர்களை இவ்வாறு தொடுவதே முதலில் அநாகரிகமானது. இந்த இங்கிதம்கூட ஈகுருவியின் பத்தி எழுத்தாளாருக்குத் தெரியவில்லை. இவரும் நின்று விசில் அடித்த ஆளாகத்தான் இருக்க வேணும்.. :D

1988ம் ஆண்டு என்று நினைக்கிறேன் லண்டனில் கங்கைஅமரன் குழுவினரின் இசை நிகழ்வு,இதே மாதிரி தான் நிகழ்வு தொடக்கி இரண்டு பாட்டு பாடவில்லை விசில் சத்தம் . கங்கை அமரன் பல தடவை கேட்டும் ஒரு சிலர் தொடர்ந்து குழப்பி கொண்டே இருந்தார்கள்.

 

கடைசியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடைக்கு வந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் பணிவாக வேண்டுகோள் விடுத்தார் அமைதியாக இருந்து இசை நிகழ்வை காணும்படி. ஆனால் சபை குழப்பிகள் தொடர்ந்தும் தங்கள் பணியை செய்ததினால் அந்த நிகழ்வு தொடக்கி பத்து நிமிடத்திலேயே

இடைநிறுத்தபட்டது

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 
 
நிறைவுகளில், என்னை மிகவும் கவர்ந்த ஒருவர் பெயர் தெரியாப் பாடகர். மலேசியா வாசுதேவன் ஜெயராமன் குரலில் பாடிய பாடலைக்கூட அற்புதமாய்ப்பாடினார். ஐயர் ஓதும் மந்திரங்களை அவர் இசைத்தபோது அவையும் இனித்தன. என்ன குரல்வளம் அந்த மனிதரிற்கு. யாரிற்காவது அவரின் பெயர் தெரியுமா.

 

மிக அருமையாகப் பாடினார். இவரை அதிகம் உபயோகித்திருக்கலாம். போன நிகழ்ச்சியிலும் ஆயிரம் மலர்களே என்கிற பாட்டை நன்றாகப் பாடினார். பெயர் தெரியவில்லை.

 

இசைக்கலைஞன் தன்னைப் பற்றி, பாலசுப்பிரமணியம் பாடிய பாடலை தேடிப் பிடித்து போட்டமைக்கு நன்றி. :D  :lol:

 

இப்பிடி ஒரு ஆங்கிள்ல திங்க் பண்ணி சொன்னதுக்கு நன்றி தமிழ்சிறி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

காசைக் கரியாக்கிற வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

 

பேசாமல்.. ஒரு ஓமேகா வோர்ச் வாங்கிக் கட்டிக்கொண்டு.. ராஜாவின் பாடல்களை யுரியுப்பில் கேட்டு ரசிச்சிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். :lol:

 

மேலும் தமிழ் ஆக்கள் தியேட்டருக்கு இவ்வாறான நிகழ்வுகளுக்கு வாறது... விசில் அடிக்க.... குடும்பக் கதை கதைக்க.. பொண்டில் பிள்ளைகளோட இழுபட.. கூப்பாடு போட என்று இருக்கத் தானே. இதனால் தான் எம்மவர்கள் கூடும் தியேட்டர்களுக்கே போறதில்லை..!

 

எம்மவர்களுக்கு பொது நடத்தை பற்றிய அறிவும் பழக்கமும் காணாது..! அது முன்னேறும் வரை எல்லாமே கஸ்டம் தான்.  :icon_idea::)

நிழலி அண்ணா எப்ப எழுதுவார் என்று தெரியவில்லை. அவர் துப்பாக்கி படம், விஸ்வரூபம் படம் பார்த்து விட்டு கடுப்பில் வந்து சுடச்சுட விமர்சனம் எழுதியது போல் இதற்கும் எழுதுவார் என்று நினைக்கிறேன். :lol:  தனியாக சென்றாரா மகனை கூட்டிக்கொண்டு சென்றாரா தெரியவில்லை. :rolleyes:  கூட்டிக்கொண்டு சென்றிருந்தால் பாவம் மகன். ஏற்கனவே விஸ்வரூபம் பார்த்த பாதிப்பில் இருந்தார்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சபைகளுக்குச் சென்று அங்கு சென்ற நோக்கத்தை விட்டு வேறு விடயங்களைச் செய்வது எங்கள் பண்பாட்டில் ஊறிவிட்டது. :rolleyes:

 

உதாரணமாக, ஒரு திருமண விழாவுக்குச் சென்றால், அங்கே அமர்ந்து நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். தாலி கட்டும் நேரம் வந்ததும் நெருங்கிய உறவினர்கள் மேடையைச் சூழ்ந்து கொள்வார்கள். தாலிகட்டும்போது அரிசியை எறிவார்கள். நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது. பலத்த தவில் மற்றும் நாதஸ்வர ஒலியை வைத்து தாலி கட்டுகினம் எண்டு அறிந்துகொள்ள வேண்டியதுதான்.. :D அவர்களும் ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ஊர்க்கதையைத் தொடர்வார்கள்..! :huh:

 

இவ்வாறான செயல்கள் திருமணமாகும் சோடிகளை அவமதிக்கும் செயல் போல் இருக்கும். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை. சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாகவே இது உள்ளது.. :unsure:

 

 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை; வேறு பாடல்களின் இணைப்பும் இருந்கிறதா? உங்கட கருத்துக்கள் சரியோ பிழையோ என பார்பதற்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

இசை; வேறு பாடல்களின் இணைப்பும் இருந்கிறதா? உங்கட கருத்துக்கள் சரியோ பிழையோ என பார்பதற்கு :)

 

வேறு காணொளிகள் இன்னும் தரவேற்றப்பட்டமாதிரி தெரியவில்லை.. :rolleyes:

 

நான் இணைத்த காணொளியைப் பார்க்க நல்லாத்தான் இருக்கு.. :D  நேரில் பார்க்கக்குள்ளைதான் மிச்ச எரிச்சல் எல்லாம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர்பாத்த மாதிரியே இசையின் கருத்தும் நிகழ்ச்சி பற்றி அமைந்தது.மற்றும் இன்னுமொருவனின் இரன்டாவது பதிவு அவருக்கு கொதி கொஞ்சம் அடங்கீட்டுது போல இருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இங்கு எழுதும் வேகத்தைப்பார்த்தால்..நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள்..இடியப்பம் றோல் வாங்க என்டு லூசுத்தனமாய்..தமிழ் சனம் கூடி இருக்கிற றொறாண்டோ தமிழ்க்கடையள் பக்கம் கொஞ்சகாலத்துக்கு ஒதுங்காமல் இருந்தால் நல்லதுபோல இருக்கு... :D

7 :30 மணிக்கே இளையராஜா குழுவினர் மேடைக்கு வந்தனர். விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்த கெளதம் மேனன், மனோ, ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. யாரும் நிகழ்விற்கு வரவில்லை. இளையராஜாவும் அவர் குழுவினரும் தெரிந்தெடுத்திருந்த பாடல்களின் தொகுப்பும் மக்களின் மனம் கவரக் கூடியதாய் இல்லை. ஏதோ ஒப்புக்கு 7:30 - 11 மணி வரையிலும் நேரம் கடத்த வேண்டும் என்கிற பாணியிலேயே இளையராஜா குழுவினர் பாடிய பாடல்கள் அனைத்தும் இருந்தது.

 

இவர்கள் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. ஜேசுதாஸ், மனோ ஆகியோர் வந்து தாம் பாடிய பாடல்களை அங்கு பாடியிருந்தாலும் நிகழ்வு கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நான் நேற்றே  கேட்டேன்

இளையராசாவின் இசைநிகழ்ச்சிக்கு

கோபிநாத்  எதற்கு  என்று???

இத்தனை  கலைஞர் பட்டாளம் எதற்கு???

இசை  நிகழ்ச்சியை   மெருகு படுத்தவா???

கொலை  செய்ய.

அது தான் நடந்திருக்கிறது.

பிரமாண்டம் என்ற  ஒன்றை  எடுத்துவிட்டால்

இத்தனை கலைஞர்களைக்கொண்டு வந்த காசைக்கழித்தால் சிறு மண்டபத்தில்  வருமானம்  அதிகமாகத்தான் இருக்கும்.

ஆனால்  பிரமாண்டம் என்ற  பெயர் அடிபட்டிருக்காது.

இப்பொழுது அடிபட்டது அப்பாவிகளின் பணம் தானே........???

அடுத்த முறையாவது இளையராசா  உணர்வாரா???

Edited by விசுகு

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றிகள், இன்னுமொருவன்!

 

 

ஒரு வேளை வி.ஐ.பி சீட்டு எடுத்ததால், உங்கள் எதிபார்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம்! :D

ஓரே மண்டபத்திற்குள், பல மடங்கு விலை வித்தியாசமான ரிக்கற்றுக்கள் வடிவமைக்கப்பட்டால் எதிர்பார்ப்பு இருக்காதா என்ன? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்காக நுகர்வோன் பணம் கொடுப்பான்? எனினும் எனது எதிர்பார்ப்பு அதிகம் இசைஞானியிடமே இருந்தது.

நானும் நொந்து நூடில்சாகித்தான் போனேன்.   இத்தனை வருடங்களாக பல நூற்றுக்கணக்கான இசைநிகழ்ச்சிகள் செய்த இளையராஜாவுக்கு இந்நிகழ்ச்சியை மட்டும் ஏன் சிறப்பாகச் செய்ய முடியாமல் போய்விட்டது?  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் கலைஞர்களும் அவரது குழுவில் வந்தவர்கள்தான்.  இது முழுக்க முழுக்க இளையராஜாவின் பொறுப்பேயன்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவாகத் தெரியவில்லை.

 

 

நியாயந்தான் தமிழச்சி .

 

 

 

 

நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்திருந்தாலும், உணர்ச்சிவசப்படாமல் ஏற்கனவே நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்த தமிழச்சி அக்காவுக்கும் நிகழ்வு பிடிக்கவில்லை. எனவே நிகழ்வு நன்றாக இருந்ததா இல்லையா என்பது உணர்ச்சிவசப்படுவதில் தங்கியில்லை. ஆனால் செல்ல வேண்டும் என்று இறுதியில் முடிவெடுத்த உங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்ததால் செல்லாமல் விட்டிருக்கலாமோ என்று அடிக்கடி தோன்றும். அது இயல்பு...

 

 

 

உண்மைதான் துளசி. நான் எனது மட்டத்தில் அவ்வாறு உணர்ந்தேன். ஆனால் பலரிற்கும் ஒரே உணர்வு தான் ஏற்பட்டுள்ளது.
 

 

உண்மையில் இந்த வசனநடை உங்களிடம் இருந்து வரும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை.  :D

 

 

ஏதோ என்னால் முடிந்தது   :D

 

 
நன்றி வொல்க்கேனோ. நீங்கள் சொல்வதும் சரிதான். 7 மணிநேரம் அறையில் இருந்து இசைகேட்பது நடைமுறைச்சாத்தியப்படாது. நீண்ட தனித்த வாகனப் பயணங்கள் தான் சரிவரும். அதுவும் இரவில்.
 
உண்மைதான் யாயினி, எம்மவர்கள் இசைநிகழ்வுகள் சார்ந்து மாறவேண்டிய பல விடயங்கள் இருப்பது போல், இந்தியக் கலைஞர்களும் நிறைய மாறவேண்டும். 
 

 

 

 

 

 இன்னுமொருவனின் இரன்டாவது பதிவு அவருக்கு கொதி கொஞ்சம் அடங்கீட்டுது போல இருக்கு  :D

 

 

 

:D

 

 

 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

அதிக எதிர்பார்ப்புகளும்  ஆரவாரங்களும் கூட 

ஒரு பெரிய கலைஞனை ஒன்றும்  இல்லாதவன் ஆக்கிவிடும். :D    

  • கருத்துக்கள உறவுகள்

சபைகளுக்குச் சென்று அங்கு சென்ற நோக்கத்தை விட்டு வேறு விடயங்களைச் செய்வது எங்கள் பண்பாட்டில் ஊறிவிட்டது. :rolleyes:

 

உதாரணமாக, ஒரு திருமண விழாவுக்குச் சென்றால், அங்கே அமர்ந்து நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். தாலி கட்டும் நேரம் வந்ததும் நெருங்கிய உறவினர்கள் மேடையைச் சூழ்ந்து கொள்வார்கள். தாலிகட்டும்போது அரிசியை எறிவார்கள். நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது. பலத்த தவில் மற்றும் நாதஸ்வர ஒலியை வைத்து தாலி கட்டுகினம் எண்டு அறிந்துகொள்ள வேண்டியதுதான்.. :D அவர்களும் ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ஊர்க்கதையைத் தொடர்வார்கள்..! :huh:

 

இவ்வாறான செயல்கள் திருமணமாகும் சோடிகளை அவமதிக்கும் செயல் போல் இருக்கும். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை. சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாகவே இது உள்ளது.. :unsure:

 

எனக்கென்னவோ, இந்தத் தாலிகட்டைப் பாக்கிறபோது, எப்பவுமே 'சேர்க்கஸ்' தான் நினைவுக்கு வாறது. 

 

நான் எமது பண்பாட்டை அவமதிக்கும் நோக்கோடு இதை எழுதவில்லை. 

 

ஏனெனில் இதை எமது பண்பாடாக நான் நினைக்கவில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ஆரூம் வந்து,

 

;இளையராஜா பழி வாங்கினாரா?

 

எனக்கெண்டா அப்பிடி யாராவது தலையங்கத்தோடை திரி திறவுங்கோ என்று நீங்கள் சொல்வதுபோல் இருக்கே புங்கை :D :D

 

வெள்ளிக்கிழமை காலை வேலைக்குப் புகையிரதத்தில் சென்றுகொண்டிருந்தேன். புத்தகம் ஏதும் இருக்கவில்லை. அதனால் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை (C.B.C) காதுக்குள் ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகை ஒரு தமிழர் பற்றிய ஒலிப்பேளை ஒலிபரப்பாகியது. றாஜீவ் என்ற இயற்பெயரும், Prophecy என்ற புனைபெயரும் கொண்ட ஒரு கனேடிய ஈழத்தமிழ் இ;ளைஞன்பற்றியது அது.
 
"அப்பா இல்லை. அம்மா தனித்து என்னை வளர்த்ததால் வாடகை வசதிப்பட்ட ஆபத்தான இடத்தில் குடியிருப்பு. அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. சும்மா பலரும் சொல்வது போலன்றி, என் அம்மா உண்மையில் மூன்று வேலை செய்து தான் தினம் ஒரு நேர உணவை எம்மால் உண்ண முடிந்தது. வாடகை போன்ற இதர செலவுகள் போக, நாளைக்கு ஒரு உணவிற்கே அம்மாவின் மூன்று வேலை ஊதியம் போதியது. அம்மா கடினமாக உழைப்பதைச் சகிக்க முடியவில்லை. ஏதேனும் வேலை செய்யவேண்டும் என்று நினைத்தேன். உழைப்பதற்கான வயதில்லை என்று வேலை கிடைக்கவில்லை. ஒரு தந்தை அடையாளத்திற்காக என் மனம் ஏங்கியது. அப்போது தான் எனது சுற்றாடலில் அவர்களைக் கண்டேன். விலையுயர் கார்களில் நாகரிக உடை அணிந்து திரிந்தார்கள். பணம் பண்ண வயது பிரச்சினை இல்லை என்றார்கள். என்னைத்; துவட்டிய நான் ஏங்கிய அப்பா வெற்றிடத்தை அண்ணாக்களாக நிறைத்தார்கள். அவர்கள் கனேடிய தமிழ் வன்முறைக்குழுவினர். அவர்களால் ஏகப்பட்ட சிக்கல்களில் நான் மாட்டி, காவல்துறையால் சிறையனுப்பப்பட்டேன். தினம் ஒரு உணவிற்கு மட்டுமே காசு சரிப்பட்ட அம்மா, இல்லாத காசை எவ்வாறோ புரட்டி என்னை பெயிலில் எடுத்தார். அப்போது தான் ஒரு மாமா துணைக்கு வந்தார். என்னையும் என் அன்னையையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பாதுகாப்பான அவரது மிசிசாகா வீட்டுச் சூழலில் வாழ்வில் முதன்முறையாகப் பயமின்றி பாதுகாப்புணர்வுடன் நான் பள்ளி சென்றுவந்தேன். என் மாமா என் இசையார்வத்தை நான் தொடர்வதற்காக தன்காசில் உபகரணங்கள் வாங்கித் தந்தார். அவ்வாறு நான் ஒலிப்பதிவு செய்த "I have a dream" ('எனக்கொரு கனவிருக்கிறது') என்ற மாட்டின் லூத்தர் கிங்கின் பாதிப்பில் உருவான ஒரு சொல்லிசைப்பாடல் எனது சமூகத்தின் பலத்த வரவேற்பைப் பெற்றது. முள்ளிவாய்க்காலிற்குச் சற்று முந்திய இந்தக் காலப்பகுதியில் எனது பாடல் மக்களிற்கு மருந்தானது. நான் பிரபலமானேன்.
 
மேடைகள் எனக்குச் சாதாரணமாகின. எவருமே கவனிக்காது கிடந்து பழகிய எனக்கு இந்த வெற்றி புதிதாக இருந்தது. நான் தலைக்கனமிக்கவனானேன். என் நண்பர்களோடு சண்டையிட்டேன். எனது காதலியைத் தூக்கியெறிந்தேன். குடித்துக் கும்மாளமிட்டேன். தலைகால் தெரியாது நடந்துகொண்டேன். என் வாழ்வு மீண்டும் சரியத் தொடங்கியது. மீண்டும் சட்டம் என்னைநோக்கிச் சாட்டை வீசியது. நான் வெறும்பயலாயப் படுத்துக் கிடந்தேன். மதியம் தாண்டி ஒரு மணிக்குப் பின் தான் தூக்கத்தால் எழுவேன். இலக்கின்றிக் கிடந்தேன். அப்போது என் அம்மா இரண்டாம் முறையாக இல்லாத பணத்தை எவ்வாறோ புரட்டினார். என்னைப் பார்த்துச் சொன்னார். இந்த உலகில் நீ பிறந்ததில் இருந்துஇந்தச் சமூகம் உன்னை மனிதனாய்ப் பார்த்தது நீ இசையோடு சேர்ந்தபோது தான். அது மட்டும் தான் உன்னிடம் உண்டு. அதைப்பற்றித் தான் நீ எழவேண்டும். வெளிக்கிடு இந்தியாவிற்கு என்று எனது தாயார் மீண்டும் என்னைத் தூக்கிவிட்டார். நான் சென்னை சென்றேன். அமீர் என்னை அடையாளங்கண்டார். இன்று ஆதிபகவனில் எனது பாடல் வருகிறது.
 
ஆனால் எனக்கினித்தலைக்கனம் வராது. எனது இசை மட்டும் அன்றி நான் ஒரு மனிதனாகவும் வளர்ந்துவிட்டேன். எனக்கு வாழ்வில் இப்போது ஒரு நம்பிக்கை தெரிகிறது. போற்றவேண்டிய விடயங்கள் புரிகின்றன. என் அன்னையின் அர்ப்பணிப்புப் புரிகிறது. கடவுளை நான் அதிகம் நம்புகிறேன். வாழ்வு இனிச் சீராகச் செல்லும் என்று தோன்றுகின்றது. என்னைப்போன்ற ஒரு தமிழன் இசையினால் பிளைக்கணும் என்றால் அது தமிழகத்தில் தான் சாத்தியம். அந்தத் தமிழகம் எனக்கு இப்போது ஒரு பாதையினைத் தந்துள்ளது"
 
ஏறத்தாள அந்த இளைஞனின் பேட்டியின் சாராம்சம் அப்படித் தான் இருந்தது. எனது மண்டையில் யாரோ சுத்தியலால் தாக்கியது போலிருந்தது. எனது தாயகம் தொடர்பில் எனது மசாட்சிக்கு எந்த உழல்தலையும் கொடுக்காதவகை எனது வாழ்வு நகர்ந்தது. முள்ளிவாய்க்காலின் பின்னரும் எனது மனசாட்சி நிம்மதியாய் உறங்கும் வகை மனிதாபிமானம் தொடர்கிறது. ஆனால் நான் வாழும் அதே மாகாணத்தில் எனக்குச் சிலமணிநேர தூரத்தில் ஒரு தமிழ்ச்சிறுவன் நாளைக்கு ஒருநேர உணவு மட்டுமே உண்ண முடிந்து பசியோடு கிடந்தான் என்ற செய்தியினை எனது காதிற்குள் சி.பி.சி அறைந்தபோது மனசு பிசைந்தது. அப்போது அந்த ஒலிப்பேளை சொன்ன ஒரு உதிரித் தகவல் மனதின் முற்புறத்திற்கு வந்தது. அந்த இளைஞன் இன்று நம்பிக்கையோடு பயணிப்பதற்குத் தென்னிந்திய திரையுலகு தான் வழி செய்தது என்பது மட்டுமன்றி, புலம்பெயர் சமூகத்தில் இரண்டாம் தலைமுறைக்குக் கூட கோடம்பாக்கம் ஒரு பற்றிக்கொள்ளக் கூடிய கிளையாய் இருக்கிறது என்பது தெரிந்தது. அந்த இளைஞனிற்கு அந்த நம்பிக்கைக் கீற்றை வழங்கிய அந்தத் திரையுலகிற்கு ஒரு நன்றி செலுத்தத் தோன்றியது. இளையறாஜா நிகழ்விற்குப் போக முடிவெடுத்தேன்.

 

இந்த இளையவரை பற்றி அடிக்கடி எமது வானொலிகளில் ஒன்றான சி.எம்.ஆர். பேசியதுண்டு. அந்த வானொலியில் ஒவ்வொரு வாரமும் எமது புதிய கலை ஆர்வலர்களுக்கு ஒரு மணித்தியாலம் தரப்படுகின்றது. பலரையும் ஊக்குவிக்கின்றது.

 

 

ஆனால் சாதாரண மக்கள், இசைப்பிரியர்கள் தகுந்த ஆதரவு தருவில்லை, இல்லை தரும் ஆதரவு காணாது. இதனால் பலர் தமிழகம் நோக்கி செல்கிறார்கள்.அப்படி சென்றவர்களில் இவர் ஓரளவு வெற்றி கண்டுள்ளார் (ஆதிபகவான்) .

 

http://www.facebook.com/ThaProphecy06

https://twitter.com/thaprophecy06

 

நல்ல வேளை நான் தப்பித்துக் கொண்டேன். நான் நிகழ்ச்சிக்கு போகவில்லை. போகாதது நல்லதாப் போயிற்று என்று இப்பதான் விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான இன்னுமொருவனின் பாணி கோவத்திலே தொலைந்துவிட்டதோ என்னமோ. ஜீவா
சொன்னது போல நானும் உங்கள் வாயால் "நொந்து நூடில்ஸ்" வசனம் வந்ததைப்
பார்த்து சிரித்து விட்டேன். எல்லாரும் இளையராஜாவிடம் அதிகம்
எதிர்பார்த்துவிட்டார்கள் போல. அத்துடன் ட்ரினிட்டி நடாத்திய முதலாவது
மாபெரும் நிகழ்வு என நினைக்கிறேன். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நான் தப்பித்துக் கொண்டேன். நான் நிகழ்ச்சிக்கு போகவில்லை. போகாதது நல்லதாப் போயிற்று என்று இப்பதான் விளங்குது.

 

 

நிழலி அண்ணா நீண்டதொரு விமர்சனத்தோடு வருவார் என்று எதிர்பார்த்தேன்..

Edited by யாயினி

உண்மையில் இதில் கருத்தெழுதுவதில் எனக்கு இச்டமில்லை............ஆனால் கருத்த்தேழுதிய எனைய உறவுகளின் கருத்துக்களையும் மதிக்க தவறவில்லை ........உண்மையில் மேடை நிகழ்ச்சி என்பது .ஒரு விளையாட்டைப்போன்றது ................அது ஒரு லக்கி  என்று கூட சொல்லல்லாம் ............எந்தப்பெரிய கலைஞர்களாலும் வழுக்கி விழாவும் முடியும் ,,,,,,,,,சாதாரண கலைஞர்களாலும் சிகரத்திற்குப்போகமுடியும் ...............அந்த அந்த சூழலை பொறுத்தே அது அமையும் ..............எனது சிறு துளி அனுபவம். இசை ஞானி ஞானிதான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா வந்தார். தயவு செய்து விசில் அடிக்காதீர்கள்.. எனக்கு ஒவ்வாமையாக இருக்கும் என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அவர் சொல்லி முடித்த பின்பும் விசில் அடித்து தமது ஆதரவைத் தெரிவித்தார்கள் சில இரசிகப் பெருமக்கள். 

 

ஆட்டமா?பாட்டமா? எண்டு பாடிக்கொண்டு விசிலடிக்காதை எனக்கு வயித்தை பிரட்டும் எண்டால் இது நியாயமோ தர்மமோ???? :D

 

கர்நாடக கச்சேரி வைச்சுப்பாருங்கோ வாறவையள் விசிலும் அடிக்கமாட்டினம்....பிட்சாவும் தின்னமாட்டினம். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

 

பாடல்: ஓம் சிவோகம்

படம்: நான் கடவுள்

 

தொலைக்காட்சியில் வரும்போது நன்றாக இருக்கும்போல்தான் தோன்றுகிறது. :rolleyes: காது ஒலிப்பானில் கேளுங்கள்.

 



பாடல்: அன்னக்கிளி

படம்: அன்னக்கிளி

 

சூடு தணிந்து இப்ப கேட்கும்போது சிலிர்க்குது.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

பகுதிப் பாடல்கள்:

 

1) நானாக நானில்லை (தூங்காதே தம்பி தூங்காதே..)

2) ஆனந்தத் தேன்காற்று (மணிப்பூர் மாமியார்)

 

ம்தலாவது பாடல் பாலு அவர்களுடையது. வழக்கம்போல அசத்தியிருந்தார். இரண்டாவது பாடல்தான் இன்ப அதிர்ச்சி. இன்னுமொருவன் குறிப்பிட்ட்ட அந்த நபர் இவர்தான். அழகாக்ப் பாடினார். ரம்யாவும் ஒரு சிறந்த பாடகி.

 

  • கருத்துக்கள உறவுகள்
சில நேர‌ம் இந்த நிகழ்வு குறிப்பிட்ட நேர‌த்திற்கு தொட‌ங்கப்பட்டு இருந்தால் இதே பாட‌ல்களை பாடினாலும் பிடித்திருக்கும்...நேர‌த்திற்கு தொட‌ங்காத படியால் ர‌சிகர்களும் எரிச்சலில் இருந்திருப்பர்...டிர‌பிக் மாட்டுப் பட்டதால் இசைக் குழுவினருக்கும் டென்ச‌னாக இருந்திருக்கும்...ஆக்கத்திற்கு நன்றி இன்னுமொருவன்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.