Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையோ கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனாலும் நம் இரத்தம் களஉறவு  மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

  • Replies 264
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

  • பகலவன்
    பகலவன்

    அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

  • கருத்துக்கள உறவுகள்

4ஆம் இணைப்பு:-ஜெயபாலன் இராணுவப் புலனாய்வாரள்களால் கண்காணிக்கப்பட்டு - மாங்குளத்தில் கடத்தப்பட்டு பின் கைதனவரானார்

 

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:- 4ஆம் இணைப்பு:-

jeyapalan_CI.jpg

 

நீண்ட இடைவெளியின் பின்னர் யாழ்.குடாநாட்டிற்கு சென்றிருந்த  ஜெயபாலன் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் அவரது நடமாட்டங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டிருந்த நிலையில் அவர் யாழை விட்டு வெளியேறியிருந்தார். எனினும்; அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் அவரை மாங்குளத்தில் வைத்து கடத்தியதாக தெரியவருகிறது. இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அவரை தாம் கைது செய்திருப்பதாகவும் விசா விதிகளை மீறி ஜெயபாலன் செயற்பட்டார் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:-

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றிருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறிய காவற்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும்; அவர் தெரிவித்துள்ளனர்.

 

2ஆம் இணைப்பு:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:-

11:10am

கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.

மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.  

நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை  தமிழகத்தில் கழித்து வந்தார்.

கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும்  பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

 

இவரது கைது குறித்து நோர்வே தூதுவராலையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக உறவினர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சுகமாக  வீடு திரும்பவேண்டுகின்றேன்

அவர் எமது சொத்து

சரி

பிழைகளுக்கு அப்பால்

அவர் பிடிபட்டிருப்பது சிங்களம் என்ற வெறியனிடம் என்பதை இங்கு கருத்து  எழுதும் எவரும் மறக்கவேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையோ கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனாலும் நம் இரத்தம் களஉறவு  மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

 

நீங்கள் நினைக்கிற அளவுக்கு, பயப்படும் படியாக ஒன்றும் இல்லை, பெருமாள்.

எங்களது, "ஜெயபாலன் கைது மூலம்" ஒரு நாளில்... தமிழ் உலகப் பிரசித்தி பெற்று விட்டார் அவ்வளவுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நலமாக விடுதலையாகி வீடு  சேர வேண்டும்!

அவர் விரைவில் விடுதலையாக வேண்டும். அவரின் கைது குறித்து கவலையோடு இருக்கும் அவரின் குடும்பத்தின் கவலைகளில் நானும் பங்கு கொள்கிறேன் .

 

என்ன இருந்தாலும் அவரும் ஒரு தமிழர். தமிழரின் அடையாளம். அவரை கைது செய்தது சிங்கள இராணுவம். அவரின் கைதையும் ஒரு ஊடக பிரச்சாரமாக முன்னெடுக்க  வேண்டும். அதுவும் உலக ஊடகங்களின் பார்வை இலங்கையை நோக்கி திரும்பி இருக்கும் இந்த தருணத்தில்.

 

இந்த இடத்தில் அவரை வசை பாடுதலும். அவரின் நிலைப்பாடு தொடர்பான விமரிசனங்களும் தவிர்க்கப்பட வேண்டும். அதை வெளிபடுத்த காலம் இருக்குது. இப்போ தனி ஒரு தமிழனுக்கு சிங்களவனால் பிரச்சனை என்றாலும் சேர்ந்து குரல் கொடுப்போம்.

 

 

சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லி தான், கூழ்ப் பானைக்குள்ளை விழுமாம்..."

என்னமா திங் பண்ணிறாங்க  .....

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் அவர்களின் கைதிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும்....... இல்லையேல் சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும் பொயட் அவர்களின் நண்பர் நீதியமைச்சர் ஹக்கீம் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் விரைவில் விடுதலை பெற வேண்டும்!

 

 

கவிஞர் ஜெயபாலன் விரைவில் விடுதலை பெற வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் விரைவில்... யாழ்களம் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது கவிஞர் அங்க சும்மா போக அவர் ஒன்றும் முட்டாள் இல்லை போறதுக்கு முதல் பலரை தொடர்பு கொண்டு தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை சோ எனக்கு என்னமோ இந்த கைதில் பெருசா அனுதாபம் வரல்ல

  • கருத்துக்கள உறவுகள்

சரி நான் பறப்படும் நேரம். நாளை நல்ல செய்தி வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் கைது மிகவும் கவலையளிக்கின்றது. மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களுக்கும், சிறிலங்கா அரசின் போக்கை விமர்சிப்பவர்களுக்கும் மகிந்த குடும்பத்தினர் சுதந்திரமாக நடமாடவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ அனுமதிப்பதில்லை என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கவிஞர் விரைவில் விடுதலை பெற்று வெளியே வருவார் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது கவிஞர் அங்க சும்மா போக அவர் ஒன்றும் முட்டாள் இல்லை போறதுக்கு முதல் பலரை தொடர்பு கொண்டு தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை சோ எனக்கு என்னமோ இந்த கைதில் பெருசா அனுதாபம் வரல்ல

 

எனக்கும் தான்...

கவிஞரா.. கொக்கா...

இராணுவத்தால்... கைது செய்யப் பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கிறார்களாம் என்று... செய்தியில் உள்ளது.

நல்ல, சனநாயக நாட்டில் தான் இது நடக்கும்.

வெள்ளை வானிலை... ஏத்தியிருந்தால், டக்ளசை சந்தேகப்பட்டிருந்து... கவலை தெரிவிப்பேன்.

ஆனபடியால்... கவலைக்கு, நோ... சான்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

Thirumurugan Gandhi

இலங்கை அரசு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ பிரதேசத்தில் ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனை கைது செய்திருக்கிறது. இலங்கையில் இலக்கியக் கூட்டம், மாநாடு நடத்தலாம் ஆனால் மக்கள் உரிமையைப் பற்றி பேசக்கூடாது என்கிறது பாசிச அரசு. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய கைது இது.

அந்த முதியவரை நான் சன் தொலைக்காட்சியின் பேட்டியின் போது சந்தித்தேன்.. அமெரிக்க தீர்மானம் மூலமாக பாதுகாப்பாவது குறைந்தபட்சம் கிடைக்கும் அதனால் அதை ஆதரிக்கிறேன் என்றவர். அமெரிக்க தீர்மானம் நிறைவேறி இரண்டு முழுவருடங்கள் முடியவில்லை, இக்கவிஞரை கைது செய்திருக்கிறது பாசிச அரசு.

துன்புறுத்தல், சித்திரவதை என்பதை சர்வசாதாரணமாக செய்யும் இலங்கை அரசு அப்படியேதேனும் செய்திருமோ என்று அச்சம் எழுகிறது. ஒரு அரைமணி நேரம் தொலைக்காட்சி அரங்கில் முழுமையாக உட்காரவோ, பேசவோ அவரால் இயலாமல் இருப்பதை நேரில் கவனித்தேன். முதுமையும், உடல்நலக்குறைவும் உடைய ஒருவரை கைது செய்து எதை சாதிக்கப் போகிறார்கள் பாசிஸ்டுகள்.

தமிழகத்தில் இருக்கும் இலக்கியவியாதிகள் தற்போதாவது வாய் திறப்பார்களா?... புலிப்பாசிசம் புலிப்பாசிசம் என்று பேரினவாத பாசம் பொங்கி வழிந்தவர்கள் இந்த மூத்த இலக்கிய நண்பருக்காகவாவது குரல் கொடுப்பார்களா? அல்லது எப்பொழுதும் போல தமது மனித உரிமை வியபாரம், டாக்குமெண்டரி வியாபாரம், எழுத்து-கட்டுரை-திரைக்கதை வியாபாரம் நடத்திவிட்டு காணாமல் நகருவார்களா?..

தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்தியமும், இலங்கையும் இணைந்து செய்யும் அராஜகத்தினை தட்டிக்கேட்போம். இனப்படுகொலையையே கண்டு கொள்ளாத இலக்கியவியாதிக் கூட்டம் சகபடைப்பாளிக்கு குரல் கொடுக்கும் எனத் தோன்றவில்லை. மனிதம் தொலைத்த படைபபாளிகள் என்ன செய்யப்போகிறார்கள் எனப் பார்ப்போம். நம்முடன் கைகோர்ப்பார்களா அல்லது எப்போதும் போல க்டந்து செல்லப்போகிறார்களா என்று...

வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை...

இலக்கியவாதிகள் வெறுத்தாலும் தமிழீழம் மட்டுமே கருத்து-படைப்பு சுதந்திரத்தினை உறுதி செய்யும். வியபாரிகளுக்கு காது கேட்கிறதா எனப்பார்ப்போம்.

FB

 தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை

 

இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு என்ன பலம் இருக்குது என்று நினைக்கின்றீர்கள் சுண்டல்?  அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்கள். இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட நீட்ட உரிமையற்றவர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

இந்த வாரம் நிந்தவூரில் அதிரடிப்படையினரின் அட்டகாசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை அதிரடிப்படையினரும், பொலிசாரும் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியவில்லை. முஸ்லிம் இளைஞர்களை கைதைக் கூட எதிர்க்க முடியாதவர்களாகத்தான் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அஸ்வராலும், ஹக்கீமாலும் இலங்கை பேரினவாததுக்கு எதிராக எப்போது குரல் கொடுக்கினமோ அன்றே அவர்களுக்கும் இதே நிலைதான் வரும்.

வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை...

 

 

இது தான் யதார்த்தம்.

விரைவில் விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் நாட்டிற்கு போன இடத்தில் ஆமி பொலிஸ் என்று அலைவதைப்போல அரியண்டம் வேறில்லை .

விடுமுறைக்கு போன இடத்தில் சும்மா ஒரு காச்சல் வந்தாலே விசர் வரும் .

தனது தாயின் கல்லறை தரிசிக்கச் சென்ற கவிஞர் ஜெயபாலன் விரைவில் வெளியில் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் நாட்டிற்கு போன இடத்தில் ஆமி பொலிஸ் என்று அலைவதைப்போல அரியண்டம் வேறில்லை .

விடுமுறைக்கு போன இடத்தில் சும்மா ஒரு காச்சல் வந்தாலே விசர் வரும் .

 

அடுத்த முறை போக முன்னமே.. போய் வாற நோக்கத்தைச் சொல்லிட்டால் மகிந்தரே ரெட் காப்பெட் போட்டு வரவேற்பார்..! ஏன் ஆமி பொலிஸ் கவலை..???! :rolleyes::o

வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை...

 

 

இதனை இப்போதாவது பொயட் உணர்ந்திருக்கனும்..! இல்லைன்னா..????! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு முன்னால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக முக்கியஸ்த்தர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் புலிகளை விமர்சிப்பவர். இந்திய தமிழக அரசியலில் நண்பர்கள் பலரைக் கொண்டவர். சாதாரணத் தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் நடக்கும் அநீதிகள் இவருக்கு நடக்க வாய்ப்புக் குறைவு. விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் எனது எண்ணம்.

 

இவர் ஒன்றும் புதுவை ரத்திணதுரை அல்லவே கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட??

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு... பப்ளிக்குட்டி விவகாரம்.
பொயட் அண்ணா... நாளைக்கோ.. நாளைஇண்டைக்கோ.. வெளியில வந்து..
ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிகைகளில்... விலா வாரியான பேட்டி தருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல கவிஞர், நண்பர்....விடுதலைபெற்று வெளியே வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில நாட்கள் விசாரணை என்று அலட்டுவார்கள்....இருப்பினும் தமிழர் என்பதற்காகவே அவர் இக்கைதிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது.

இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு என்ன பலம் இருக்குது என்று நினைக்கின்றீர்கள் சுண்டல்?  அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்கள். இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட நீட்ட உரிமையற்றவர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

இந்த வாரம் நிந்தவூரில் அதிரடிப்படையினரின் அட்டகாசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை அதிரடிப்படையினரும், பொலிசாரும் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியவில்லை. முஸ்லிம் இளைஞர்களை கைதைக் கூட எதிர்க்க முடியாதவர்களாகத்தான் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அஸ்வராலும், ஹக்கீமாலும் இலங்கை பேரினவாததுக்கு எதிராக எப்போது குரல் கொடுக்கினமோ அன்றே அவர்களுக்கும் இதே நிலைதான் வரும்.

 

இது தான் யதார்த்தம்.

 

மிகவும் பிழையான கருத்து நிழலி.

அதிகாரங்களுக்கு எதிராக சுண்டு விரல் நீட்டமாட்டார்கள். அதனோடு இணைத்து போய் வெல்லும் திறமைதான் நீந்தவூரில் நடக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.