Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சின்ன உதவி....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது வாழ்க்கையில் நான் பல கஸ்டங்களை அனுபவித்திருக்கிறேன்இன்றும் கஸ்டத்தில்தான் உள்ளேன்நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் விரைவில் கஸ்டத்திற்குள் தள்ளப்படுகிறேன்பணம்கூட எவ்வளவு சம்பாதித்தாலும் கையிருப்பில் இருப்பதில்லைதொடர்ந்து ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேயிருக்கிறதுநானும் தியானம் போன்றவற்றைக்கூட முயற்சி செய்துள்ளேன்இருந்தும் என்னால் எனது கஸ்டங்களிலிருந்து வெளிவர முடியவில்லைசின்ன வயது எனில், அறியா வயது என விடலாம்புத்திசாலித்னமாக இருந்தாலும், என்னதான் திட்டமிட்டு வாழ முற்பட்டாலும் என்னால் முன்னேற முடியவில்லைஎன்னைச் சுற்றியிருப்பவர்கள் (குடும்பத்தினர்) மிகவும் நன்றாகவே உள்ளார்கள்அவர்கள் எனக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்இதனால் வேறு வழியின்றி நான் அவர்களது உறவையே முறித்து விட்டேன்ஏனெனில், அவர்கள் தமது குடும்பத்தோடு சந்தோசமாக இருந்து கொண்டு என்னை நையாண்டி செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்எனது விதி, அப்படியானதொரு குடும்பத்திற்குள் என்னைப் பிறக்க வைத்துவிட்டது.   என்னைப் புரிந்து கொண்டவர்கள் எனக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள் (கஸ்டத்தில் இருக்கிறார்கள்).   என்னில் அக்கறை உள்ளவர்கள் எனது விதி எனக் கூறுகிறார்கள். எனது படிப்பும் இடையில் நிறுத்தப்பட்டு விட்டதுபடிக்க விருப்பம் இருந்தாலும், ஏதாவதொரு தடை வந்து கொண்டேயிருக்கிறதுநான் சென்ற சாத்திரிகள் அனைவரும் விரைவில் நல்ல காலம் வரும் எனக் கூறுகிறார்கள்இதுவரை நான் பார்த்த சாத்திரங்களின் அடிப்படையில் அவர்கள் கூறிய நல்ல விடயங்கள் எதுவும் எனக்கு நடக்கவில்லைஎன்னதான் நான் கவனமாக இருந்தாலும், யோசித்து நடந்தாலும் ஏதாவதொரு ரூபத்தில் எனக்குப் பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கின்றனபல பரிகாரங்கள்கூடச் செய்திருக்கிறேன்சிலவற்றை அந்தந்த கோயில்களுக்குச் சென்றுகூடச் செய்திருக்கிறேன்உதாரணமாக, நான் சனிக்காகத் திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்துள்ளேன்இந்தியாவில் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறேன்சிலவற்றை மீண்டும் மீண்டும் ஒரு தடவைக்கு மேல் செய்திருக்கிறேன்.  இப்படிப் பலவற்றைச் செய்தும் என்னால் உய்ய முடியவில்லைஇதற்கு மேல் நான் என்ன செய்யலாம்இனிச் சாகும் வரை, எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, எந்த ஆசைகளும் இன்றி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முற்படுகின்றேன்இதற்கு மேலும் ஒரு உயிரை விதி விரட்ட முடியுமாயாராவது அனுபவம் உள்ளவர்கள் உதவி செய்வீர்களாஎனக்கு மட்டும், வாழ்க்கை முழுவதும் கஸ்ட நிலையில் இருக்க வேண்டிய விதி இருக்க முடியுமா

 

 

குறிப்பு,  நான் சனி, ஞாயிறுகளில் வேலை செய்வதாலும் கம்பியூட்டர் வசதி இல்லாததால் யாழுக்கு வரமுடியாது.  ஆகவே, திங்கள் முதல் வெள்ளிவரை மட்டுமே பதில் எழுத முடியும்.  புரிதலுக்கு நன்றி.

Edited by நிழலி
இரு முறை பதியப்பட்டது சரி செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிரச்சினையை வெளிப்படையாக பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் துணிவு உங்களிடம் இருக்கின்றது. அந்தத் துணிச்சலை வாழ்வின்மீதான நம்பிக்கையை ஏற்படுத்தப் பாவிக்கக் கற்றுக்கொண்டால் பாதை தெளிவாகக் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரின் நிலைமையும், சூழ்நிலைகளும் வேறு. அவற்ரைப் பொதுமைப்படுத்த முடியாது. இருந்தாலும்..

 

சேமிப்பு என்கிற ஒன்றில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தை நெருங்கியதும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். (குறிப்பு: சேமிப்பு சேமிப்பாக மட்டுமே இருக்க வேண்டும். அதை எடுத்து விளையாடக் கூடாது. :D )

 

நீங்கள் கனடாவில் இருப்பவரானால் மாத வருமானத்தில் 5% அல்லது 10% ஐ RRSP இல் கழிபடுவதுமாதிரி செய்து கொள்ளுங்கள். வங்கி அட்டைகளில் கடன் இருந்தால் தானியங்கி முறையில் ஒரு குறித்த தொகை அதற்கு கட்டுவது மாதிரி செய்து கொள்ளுங்கள் (Online Banking இல் செய்யலாம்.)

 

இவ்வாறாக, கடன்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்போது, உங்களுக்கு அதிகமான positive energy கிடைக்கும். இதுவே பல பிரச்சினைகளை தீர்க்க வல்லது.

 

பணம் இருந்தால் பிணமும் வாயைப் பிளக்குமாம்.. :D பிரிந்தவர்கள் கூடி வருவார்கள். முயன்று பாருங்கள். பலன் நிச்சயம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நிலைமை   புரிகிறது.  கையில்  பணம் இல்லாவிடால் உறவுகளும் தேடமாட்டார்கள். உங்கள் வாழ்க்கை துணை எப்படி. கொஞ்சம் சிக்கனமாய் இருக்க  வேண்டும். அங்க  இங்க  போகும் செலவை  நிற்பட்டுங்க  உங்கள் மனம்தான் வாழ்க்கை .ராசாவுக்கு மந்திரி போல இல்லத்துனையின்  ஒத்துழைப்பு அவசியம். கடன்களுக்கு வட்டி கட்டுவதை  குறைத்து  கொள்ள பார்க்கவும். அனாவசிய செலவை தவிர்க்கவும். நான் சொல்வதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொள்ளவும். வளமான வாழ்வுக்கு  என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிரி உங்கள் பார்வையில் மற்றவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று தோன்றலாம் எல்லோருக்கும் பிரச்சனைகளும் சோதனைகளும் தோல்விகளும் இல்லாமல் இல்லை அதனை அவர்கள் எத்தகைய முறையில் எதிர் கொள்கிறார்கள் என்பதில்தான் ஒவ்வொருவருடைய வாழ்வும் திடப்படுகிறது. மனவலிமை உள்ளவர்கள் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர் கொள்வதில் தோற்றுப்போவதில்லை. நாம் எப்போது எங்கே தோற்கிறோம் என்று உன்னிப்பாகக்கவனித்தால் எங்கள் அன்புக்குரியவர்கள் எம்மை உதாசீனம் செய்யும்பொழுது வேறு முனையிலிருந்து சின்னத்தூசு வந்து படியம்போது அது மிகப்பாரிய தாக்கம்போல் மனம் உணரும். அந்த வேளைகளில் எம்முயற்சியில் ஈடுபட்டாலும் அதிகரித்திருக்கும் நம்பிக்கையீனம் செயல்களில் படிந்து எதையும் பொசிட்டிவாக என்னத்தோன்றாது எல்லாமே நெகடிவாகவே புலப்படும் காரணம் நமது மனமே. தொடர்ச்சியாக அவநம்பிக்கையில் மனம் லயித்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற விரக்தியுற்ற மனநிலை வியாபிக்கும். அத்தகைய மனநிலையை நீடிக்கவிடுவது தவறானது. உங்கள் இடுகையின் ஆரம்பத்தை வாசித்தபோது கிண்டலாக ஏதாவது எழுதலாமா என்று யோசித்தேன் ஆனால் முழுமையாக வாசித்தபின்னர் அப்படியொரு எழுத்தை தவிர்க்க மனம் வேண்டுகிறது. போக்கிரி. உங்களை மன அழுத்தம் அதிகமாக ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன். உறவுகள் கிண்டல் அடிக்கிறார்கள் என்று நீங்கள் வேதனைப்படுவது உங்கள் உறவுகளுக்குத் தெரியுமா? உறவுகளுடன் கதைக்காமல் விட்டுவிட்டேன் என்பது உங்களுடைய இயலாமையின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது. உங்களை சிறிது புடம்போட வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். முதலில் கோபப்படுவதால் யாருக்கு நஷ்டம் என்பதை உணருங்கள். கோபத்தை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள்தான் எதனையும் வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள். எமக்கான துன்பத்தை நாமே உருவாக்குகிறோம் என்பதை நன்கு அறிந்து வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை..அறிவுரை சொல்லும் அளவுக்கு போறதும் இல்லை...சொல்லப்போனால் நானும் உங்கள் நிலையில் தான் இருக்கிறேன்..எவ்வளவு தான் அமைதியாக இருந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் கோவம் என்ற ஒன்று முன் வந்து சிலவற்றை குளப்பியடிச்சுட்டு போய் விடும்.மறுபடி,மறுபடி சாதரண விடையங்கள் எல்லாம் பிரச்சனைகளாக மாறும் போது வெறுப்பாகத் தான் இருக்கும்..என்ன செய்வது நாங்கள் தானே எங்கள் பிரச்சனைகளை தீர்க்கவேணும்..

.

மற்றபடி சொல்லப்போனால் எல்லாரும் கஸ்ரப்பட்டுத் தானே உழைக்கிறார்கள் அப்படி இருக்கையில் எங்களுக்கு உதவவில்லை என்று எதிர்பார்ப்பது கூட தவறு என்று தான் சொல்ல வேண்டும்.நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டால் யாரையும் எதிர்பார்க்க கூடாது..எங்கள் கூடவே இருப்பார்கள் என்று எதிர்பார்த்த உறவுகள் கூட ஒரு கட்டத்தின் மேல் எங்களுக்காக இருக்க பேச,விருப்பப்பட மாட்டார்கள்...நாங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும் அவர்கள் செயல்பாடுகள் வேறாக இருக்கும்..

 

தனித்து உங்கள் ஒருவருக்குத் தான் பிரச்சனை என்றும் நினைத்து விடக் கூடாது..ஆகவே எல்லாப் பணத்தையும் கொண்டு போய் சாத்திரம்,கோயில் என்று கொட்டுவதிலும் பார்க்க அப்படிக் செலவளிக்கும் பணத்தையாவது சேமிப்பாக்கிக் கொள்ளுங்கள்...நானும் சாமி கும்பிடுறனான் தான்,விரதம் பிடிக்கிறனான் தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சாத்திரம் கேட்பது அதை தொடர்ந்து அவே. சொல்கிறது எல்லாம் செய்யிற கட்டத்தில்  இல்லை.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதுவதை வைத்து பார்த்தால் எதுக்கெடுத்தாலும் ரோசம் பொத்துக்கிட்டு வரும் ஒரு பேர்வளியாகவே உங்களை எண்ண தோன்றுகிறது. அப்படியானல் நீங்கள் முதலில் தொடங்கவேண்டிய இடம் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கற்றுக்கொள்ள்வதேயாகும். முக்கியமாக நீங்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்வதுடன்(வரவையும் செலவையும் குறித்தும் வைக்கலாம்) எந்த காரியங்களையும் அலசி ஆராய்ந்து அதன் முக்கியத்தை அறிந்தபின் அந்த ஒழுங்குமுறையில் அதை செயல் படுத்துங்கள். வாழ்க்கையில் உங்கள் இயல்புக்கு ஏற்ற குறிக்கோள் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். சொந்தங்களை பகைப்பதும் உகந்தது அல்ல. அடுத்ததாக நான்கு பேர் மதிக்கும்படியாக உங்கள் பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ளுங்கள். இந்த உலகில் படித்தவன் படிக்காதவன் பணக்காரன் ஏழை எல்லோருக்குமே வாழ்வதற்கு இடமுன்டு என்பதை நம்புங்கள்.

சாத்திரி ,கோயில் குளம் என்று எழுதும்போது கொஞ்சம் குழப்பமாக இருக்கு .

விடிய எழும்பி வேலைக்கு போனால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் .

கனடாவில் இருந்தால் வேலைக்கு என்னை அணுகவும்  அல்லது மன நிம்மதி என்றாலும் வாங்கோ ஒன்றாக பாருக்கு போகலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிரச்சனை, உங்களுக்குள்ளேயே உருவானது போல உள்ளது. நீங்கள் அநேகமாகக் குடும்பத்தில், கடைசியாக அல்லது, கடைசிக்கு முதலாகப் பிறந்திருக்க வேண்டும்! 

 

சிறுவயதில் மற்றைய சகோதரர்களின் பராமரிப்பில் வளர்ந்திருக்க வேண்டும்! அதனாலேயே நீங்கள் அவர்களிடம் 'உரிமையுடன்' எதிர்பார்க்கின்றீர்கள்!

 

நீங்கள் சொல்லுகின்ற பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுபவை!

 

சாத்திரி, கோவில், குளம் போன்றவை உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்துமெனில் விரும்பத் தக்கதே..! ஆனால் அவ்வாறு நடந்தது போலத் தெரியவில்லை!

 

முதலில் உங்களை, நீங்களே தாழ்த்திக்கொள்ளும் மனப்பாங்கை உடனே நிறுத்திவிடுங்கள்! இது, உங்கள் மற்றைய சகோதரர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்டது!

 

அதன் பின்னர், எல்லாமே சரிவரும்!

 

யாழ் களத்தில் பலர் நடந்து வந்த பாதையை, நீங்கள் பார்த்தால், அதில் காலே பதிக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!

 

 

'காண்டீபம் எழுக.....!

 

உன் கை வண்ணம் எழுக..!

 

களமெலாம் சிவக்க வாழ்க !' :D

காலில் செருப்பில்லை என்று கவலைப்பட்டவன் காலே இல்லாத ஒருவனைக் கண்டு அந்த கவலையை விட்டான் என்று எங்கோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.

 

எம்மை விட எத்தனையே மடங்கு துன்பத்தை அனுபவிப்பவர்கள் இருக்கின்றார்கள். சிறைகளில் அகதிமுகாம்களில் வதைகூடங்களில் பசி பட்டிணி ஊனம் என்று நிறைந்திருக்கின்றது. ஏதோ ஒரு விதத்தில் இவ்வாறான நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் உங்கள் துன்பம் குறைவானது அல்து நீங்கள் பரவாயில்லை என்ற நிலை உண்டு. அவ் நிலைகளை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். என்னிடம் என்ன இல்லை என்று சிந்திக்க முதல் என்ன உள்ளது என்று தேடுங்கள்,

 

எங்கள் சமூகம் ஒரு ஒட்டுண்ணி சமூகம் அல்லது ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கு நிகரான சமூகம். ஒருவன் உழைப்பை உறிஞ்சி ஒன்பதுபேர் வாழ முற்படும் சமூகம். அதுவும் வெளிநாடு செல்லுதல் என்ற அடிப்படையானது பல விடங்களில் ஒரு அடிமையை உழைப்புக்கு அனுப்பும் நிலை. அதை குடும்பம் பந்தம் பாசம் பொறுப்பு என்ற சோடனைகளால் மறைத்துவிடுவார்கள். அதேபோல் தனக்கான வாழ்வை வாழ்வதை விட அடுத்தவனுக்காக பக்கத்து வீட்டுக்காரனுக்காக அடுத்தவன் என்ன சொல்வான் நினைப்பான் என்பதற்காக வழ்பவர்கள் அதையே அனுதினமும் யோசிப்பவர்கள் ஏராளம். குடும்பம் அதை தாண்டிய சமூகம் இவற்றில் எந்த நீதியும் நேர்மையும் மனிதநேயமும் கிடையாது. இது ஒரு மோசமான சமூக குடும்ப சூழல். பலரின் வாழ்வு இந்தச் சமூகச் சூழலில் சிறைப்பட்டுள்ளது. இந்த நரகத்தில் இருந்து  விடுவித்துக்கொள்வது அவரவரின் கெட்டித்தனம்.

 

சந்தோசம் என்பது அவரவர் மனம் சார்ந்தது. சிலருக்கு நீச்சல் குளத்துடன் வீடு இருந்தால் தான் சந்தோசம் சிலருக்கு ஒரு தேத்தண்ணியும் ஒரு சிகரெட்டும் போதும் சந்தோசத்துக்கு.

 

 

 

இப்போது என்ன வேலை செய்கிறீர்களோ அதை தொடருங்கள்.
 
மற்ற எந்த நிகழ்வுகளையும் தற்காலிகமாக நிறுத்துங்கள்.
 
கோவில்கள் தேவையில்லை.
 
சாத்திரங்கள் தேவையில்லை.
 
சிக்கனத்தை இன்னும் இறுக்கமாக கடைப்பிடியுங்கள்.
 
இசை சொல்வதுபோல் சற்று சேமிக்கப் பழகுங்கள்.
 
மனைவி சிக்கனமற்றவராக இருந்தால் அவர் கையில் பணம் செல்வதை நிறுத்துங்கள்.
 
 
ஒரு மூன்று மாதம் இவற்றைக் கடைப்பிடியுங்கள். இந்த மூன்று மாதங்கள் காசை மிச்சம் பிடிக்கும் போட்டியில் நீங்கள் இறங்கியிருப்பதாக நினையுங்கள்.
 
3 மாதத்தின் பின் போட்டியில் வெற்றியா என்று சொல்லுங்கள்.
 
இந்த 3 மாதங்களில் காசை மிச்சம் பிடிப்பதைத் தவிர வேற எந்த நினைப்பும் வேண்டம்.
 
அப்படி வேறு நினைப்பு வந்தால் இடையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு பரதேசம் செல்லுங்கள்!!
  • கருத்துக்கள உறவுகள்

இன்பமும் துன்பமும் பிறர்தரவாராது இதனை உணர்ந்துகொண்டாலே போதும். எத்தனை பெரும் துன்பம் வந்தாலும் அது ஏதோ நன்மைக்கே வந்துள்ளது என எண்ணிக்கொள்வேன். இன்றுவரை அது எனக்குக் கைகொடுக்கிறது. :)  :D  

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வேண்டிய கருத்துக்களை..... எல்லாம், மேலே களஉறவுகள் அழகாக எழுதியுள்ளார்கள்.

 

நீங்கள், வாரம் ஏழு நாள் வேலை செய்தும்.... பணம் கையிருப்பில் இல்லை என்று கூறுவதைப் பார்க்க,

தவறு உங்கள் மேல் தான் உள்ளது. உங்களுக்கு சம்பளம் வந்தவுடன்.... அதனை கட்டாய சேமிப்பாக கழிப்பதற்கு, வங்கியில் ஒரு கணக்கை இன்றே... ஆரம்பியுங்கள். மிகுதிப் பணத்தில்.... செலவை திட்டம் போட்டு செலவழியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
போக்கிரி  துணிந்து உங்களைப்பற்றி எழுதியமைக்கு நன்றி. முதலில் சாத்திரிமார் தலையில் உங்களுக்கு வைத்து அரைத்துள்ளார்கள். அவர்களை நம்பாமல் உங்களை நம்புங்கள். இந்தியாவுக்கு கோவில்களுக்கு சென்று பணத்தை விரயமாக்காமல்  சேமியுங்கள். அருகில் உள்ள கோவிலிலேயே மன அமைதியை தேடுங்கள். எது உங்களை மனச்சந்தோசப்படுத்துமோ அதனை செய்ய தயங்காதீர்கள். திட்டமிட்டு சரிவரவில்லை என்கிறீர்கள். சின்ன திட்டமாக ஒரு கிழமைக்கு என செய்யுங்கள். அதில் வெற்றி கிடக்கிறதா என பாருங்கள். அடுத்து அடுத்த திட்டம் 2 கிழமைக்கு இடுங்கள்.செயற்படுத்துங்கள். இதன் மூலம் உங்களுக்கு மனதில் உற்சாகமும் தன்நம்பிக்கையும் வந்து விடும். பின்பு மாத திட்டம்  என காலத்தை கூட்டி செல்லலாம். மற்றவர்கள் சிரிப்பதை பற்றி கவலைப்படாதீர்கள். 
 
உங்களுக்கு எனக்கு தெரிந்த சிலர் பட்ட கஸ்டங்கள் உங்களுடன்  ஒப்பிடும் போது உங்களின் கஸ்டம் மிகச்சிறியது. வேலை எடுத்து தருவதாக அர்ஜுன் அண்ணா சொல்கிறார்.கேட்டுப்பார்க்கவும். மேலும் உதவி  தேவை என்றால் எனக்கு தெரிந்தவர்களை தொடர்பு படுத்தி விடுகிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்
போக்கிரி, 
 
தன்னம்பிக்கைதான் வாழ்வில் முக்கியம். சாத்திரம், கோவில் என பணத்தை வீணாக்கதீர்கள். நானும் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டேன், தோல்வியின் அனுபவங்களை வெற்றிப்படிகளாக மாற்றுங்கள். மனதில் உறுதி கொள்ளுங்கள். எண்ணமே வாழ்வு.
 
think---->Idea--->Try--->do---->do again---->do again---->do again---->keep doing---->success
  • கருத்துக்கள உறவுகள்

 யாராவது அனுபவம் உள்ளவர்கள் உதவி செய்வீர்களாஎனக்கு மட்டும், வாழ்க்கை முழுவதும் கஸ்ட நிலையில் இருக்க வேண்டிய விதி இருக்க முடியுமா

 

வணக்கம் சகோதரா....

 

உங்களுடன் உறவுகள்  குறித்த திரியில் முரண்பட்டதாக   ஞாபகம்.....

 

நீங்கள் உங்களைப்பற்றி  எழுதியுள்ளவை  அனைத்தும் எனக்கும் பொருந்தும்

எல்லாவற்றையும் கண்டுள்ளேன்

பல  லட்சங்களைத்தொலைத்து

நண்பர் யார்

சுயநலவாதி  யார்

உதவுபவன் யார்

ஓடி  ஒழிபவன் யார்

எல்லாவற்றையும் கண்டுள்ளேன்

 

எவை  வந்தபோதும்

நான் நானாகவே  இருந்தேன்

இருக்கின்றேன்

காரணம்

எந்த எதிர்பார்ப்புமில்லை

அளவான  ஆசைகள்

கிடைத்தது போதும் என்ற  மனம்

இரு கால்களும் இரு கைகளும் இருப்பதற்காக திருப்திப்படுபவன் யான்

நாளைக்கு எனது பிள்ளை  என்னைவிட்டு அகன்றாலும் எனக்கு  இடி விழாது

காரணம் அவனது பக்கமாக இருந்து   யோசிக்க  முயல்பவன் நான்.

அதேநேரம் எவரையும் நம்பி

எனது வாழ்வை  அமைத்தது கிடையாது

அதனால் அது ஆடாது

 

உலகத்தின் முதல்  இடத்திலுள்ள  பணக்காரன்

இன்னும் நித்திரை கொள்ளாது பணத்துக்காக ஊடிக்கொண்டிருப்பதையும்  பாருங்கள்

உங்கள் சகோதரர்கள் அவ்வளவு பணமா வைத்துள்ளார்கள் என்பதை  உணர்வீர்கள்

 

வாழ்க்கை  என்பது தனிப்பட்டவரின் விவகாரம் என்று சொல்கின்றோம்

அதன் அர்த்தம்

தனித்தே இயங்கவேண்டும் என்பதே.

விரலுக்கேற்ற  வீக்கம் என்பார்கள்

இதைப்புரிந்து கொண்டால் வாழ்வைப்புரிந்து கொள்வீர்கள்

 

நான்

நான் எழுதியதற்காக மன்னியுங்கள்

எனது வாழ்வைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும்

மற்றவர்களுடையவைகளை  அல்ல

அது எனது அனுபவம் ஆகாது.....

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் விரைவில் கஸ்டத்திற்குள் தள்ளப்படுகிறேன்

இவை இல்லாவிட்டால் வாழ்வில் ஏது சுவாரஸ்யம்?

 

பணம்கூட எவ்வளவு சம்பாதித்தாலும் கையிருப்பில் இருப்பதில்லை

இது பணத்தின் சிறப்பு குணம் பணம் வெறும் கருவி மாத்திரமே. அது அளவுக்கதிமாக இருந்தால் மகிழ்ச்சி இருக்காது. கொஞ்சகாலம் பணம் இல்லாமல் இருந்து பழகிவிட்டால் பணம் வருகின்ற போது அதன் மேல் உள்ள ஆசை போய்விடும். 

நானும் தியானம் போன்றவற்றைக்கூட முயற்சி செய்துள்ளேன்இருந்தும் என்னால் எனது கஸ்டங்களிலிருந்து வெளிவர முடியவில்லை

தியானம் என்பது பிரச்சனைகளிற்கான தீர்வு அல்லவே. 

சின்ன வயது எனில், அறியா வயது என விடலாம்புத்திசாலித்னமாக இருந்தாலும், என்னதான் திட்டமிட்டு வாழ முற்பட்டாலும் என்னால் முன்னேற முடியவில்லை

உலகில் உள்ள பெரும் பணக்காரன் மற்றும் பெரும் அதிகாரம் உள்ளவர்களிற்கும் இதே பிரச்சனை தான். திருப்தியடையும் வரை முயற்சி செய்யுங்கள். திட்டமிடலை சற்று நீளமாக்குங்கள் (நீண்டதூர திட்டமிடல்). 

என்னைச் சுற்றியிருப்பவர்கள் (குடும்பத்தினர்) மிகவும் நன்றாகவே உள்ளார்கள்அவர்கள் எனக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்இதனால் வேறு வழியின்றி நான் அவர்களது உறவையே முறித்து விட்டேன்ஏனெனில், அவர்கள் தமது குடும்பத்தோடு சந்தோசமாக இருந்து கொண்டு என்னை நையாண்டி செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்

இதைவிட ஒரு உற்சாகம் வேண்டுமா சாதித்துக்காட்டுவதற்கு? இந்த அவமானங்களை மூலதானமாக்குங்கள். நீங்கள் சோர்ந்துபோகும் நேரங்களை இவைகளை நினைத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக வெற்றியடையலாம். 

எனது விதி, அப்படியானதொரு குடும்பத்திற்குள் என்னைப் பிறக்க வைத்துவிட்டது.   

விதி என்று இருந்தீர்கள் என்றால் எதுவும் நடக்கப்போவதில்லை. 

எனது படிப்பும் இடையில் நிறுத்தப்பட்டு விட்டதுபடிக்க விருப்பம் இருந்தாலும், ஏதாவதொரு தடை வந்து கொண்டேயிருக்கிறது

என்ன கஸ்ரம் வந்திருந்தாலும் படிப்பை நிறுத்தியிருக்க தேவையில்லை. தொலைநோக்குப்பார்வையில் படிப்பு தான் உங்களை தூக்கிவிடும். 

 

நான் சென்ற சாத்திரிகள் அனைவரும் விரைவில் நல்ல காலம் வரும் எனக் கூறுகிறார்கள்இதுவரை நான் பார்த்த சாத்திரங்களின் அடிப்படையில் அவர்கள் கூறிய நல்ல விடயங்கள் எதுவும் எனக்கு நடக்கவில்லை

முதலில் இதை நிறுத்துங்கள். இது சோம்பேறிகளின் வேலை. 

 

 உதாரணமாக, நான் சனிக்காகத் திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்துள்ளேன்இந்தியாவில் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறேன்சிலவற்றை மீண்டும் மீண்டும் ஒரு தடவைக்கு மேல் செய்திருக்கிறேன்.  

பரிகாரம் செய்து வாழ்க்கையின் முன்னேறிவிடலாம் என்று நினைக்கின்றீர்களா? பரிகாரம் செய்வதில் பல முறை முயற்சிசெய்த நீங்கள் ஏனை விடயங்களிலும் இந்த விடாமுயற்சியை பின்பற்றிப்பாருங்கள். 

 

இப்படிப் பலவற்றைச் செய்தும் என்னால் உய்ய முடியவில்லைஇதற்கு மேல் நான் என்ன செய்யலாம்இனிச் சாகும் வரை, எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, எந்த ஆசைகளும் இன்றி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முற்படுகின்றேன்இதற்கு மேலும் ஒரு உயிரை விதி விரட்ட முடியுமாயாராவது அனுபவம் உள்ளவர்கள் உதவி செய்வீர்களாஎனக்கு மட்டும், வாழ்க்கை முழுவதும் கஸ்ட நிலையில் இருக்க வேண்டிய விதி இருக்க முடியுமா

 

இதென்ன கொடுமை. பிரச்சனையே இல்லாத வாழ்க்கை வேண்டுமென்றால் அது யாருக்கு தான் அமைந்துள்ளது? நீங்கள் பிரச்சனைகளை கண்டு சோர்ந்து போகின்றீர்கள் என நினைக்கின்றேன். வருகின்ற பிரச்சனைகளை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள். காலப்போக்கில் இதெல்லாம் ஒரு பிரச்சனையா என எண்ணத்தோன்றும். 

 

 

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களைவிட ஆயிரம் மடங்கு பிரச்சனைகள் உள்ள மனிதர்களும் உங்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிங்கம் வசிக்கின்ற அதே காட்டில் தான் மானும் வாழ்கின்றது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காலையில் எழுந்தால் மாலை தூங்க செல்வதற்குள் ஆயிரம்,ஆயிரம் அனுபவங்களை பெற்றும்,கேட்டும்,பார்த்தும் விட்டுத் தான் இரவு தூங்க செல்கிறோம்.
 அண்மையில் சுப்பர்சிங்கர் நிகழ்ச்சி ஊடாக செந்தில்நாதன் என்று ஒரு சிறுவன் அறிமுகமாகி இருக்கிறார்.நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காது என்று நினைக்கிறன் போக்கிரி...
பெற்ற தாய் கூட வேணாம் என்று ஒதுக்கிய பிள்ளை தானாம் செந்தில்நாதன்.காரணம் அறியப்படாத உண்மை அவன் கூடவே இருப்பது உடல் ஊனம்..

பாடுவதைத் தவிர வேறு எதையும் சுயமாக செய்ய முடியாத பிள்ளை.இப்போ அந்தப் பிள்ளையினது குரல் வளத்தால் பட்டி,தொட்டி எங்கும் பேசப்படுகிறான்..ஆகவே ஒரு கதவு மூடப்பட்டாலும் வேறு இடம் சிறு கண்டிப்பாகத் திறக்கப்படும்..நல்ல உள்ளங்கள் எப்போதும் உங்கள் கூடவே இருப்பார்கள்...கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மனசு ஜீரணிக்க கூடியதாக இருக்காது தான்  எல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடுங்கள்..

 

 

Edited by யாயினி

எப்பவும் நான் நம்பும் ஒரே விடயம்:

 

தீதும் நன்றும் பிறர் தர வரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக் கூறிய எல்லா உறவுகளுக்கும் நன்றிநீங்கள் நினைப்பதுபோல, நான் அநாவசியமாகச் செலவு செய்வதில்லை.    புங்கையூரான் கூறியதுபோல, நான் கடைசிப் பிள்ளைதான்பொதுவாகக் கடைசிப் பிள்ளை எனில் செல்லமாக வளர்வார்கள்என்னுடைய குடும்பத்தில் செல்லம் என்பது வெறும் பெச்சளவில் மட்டும்தான் இருந்ததுஎனக்கு மூத்த அனைவருடைய விருப்பங்களுக்கேற்றவாறுதான் நடக்க வேண்டிய நிலை இருந்ததுமூத்தவருக்கு நான் சிறிய வயதில் நான் வேலைக்குப் போவதில் பிரச்சனை இருக்கவில்லைகொஞ்சம் சுதந்திரமாக இருப்பதிலும் பிரச்சனை இருக்கவில்லைஆனால் மூன்றாமவருக்கு இவை எதுவும் பிடிக்காதுஅதனால் நான் சிறிய வயதில் வேலைக்குச் செல்ல முயற்சித்தபோது, பெற்றோரிடம்கூறி என்னை நிறுத்தி விட்டார்அதனைப் போலத்தான் வெளியில் சுதந்திரமாகத் திரிவதற்கும் அவர்தான் தடை விதித்தார்அதேபோல, இரண்டதமவருக்கு இன்னொரு விடயம் பிடிக்காமல் இருக்கும்அதனை நான் செய்ய முற்பட்டால் அவரும் பெற்றோரிடம் குறை கூறி என்னை அதனைச் செய்வதிலிருந்து நிறுத்தி விடுவார்.  அதாவது எனக்கு மூத்த அத்தனை பேரின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றவாறு நான் நடக்கவேண்டும்.  யாராவத ஒருவருக்குப் பிடிக்காவிட்டாலும் அதனைக் குறையாகக் கூறி மாட்டிவிடுவார்கள்.  அப்படி நான் அவர்களை மீறிச் சில செயல்களைச் செய்ய முற்பட்டபோதுஈ வெளியாட்களிடம் என்னைப் பற்றிக் கூறி எனக்கு மற்றவர்களும் உதவி செய்ய நிலையை ஏற்படுத்தி விட்டார்களட. இதனால் மற்றவர்களின் உதவிகளையும் பெற முடியவில்லை.  காலப்போக்கில் நானே பல தடைகளைத் தாண்டித்தான் முன்னேறி வற்தேன். 

அதோடு என் குடும்பத்தினர் மற்றவர்களின் அறிவுரைகளையும் கேட்கக் கூடியவர்கள் இல்லை. 

 

சண்டமாருதன் கூறியதுதான் எனது வாழ்க்கையில் நடந்தது.  மிகவும் ஒட்டுண்ணிச் சமூகத்திலும் குடும்பத்திலும் பிறந்து விட்டேன்.  சொன்னால் நம்பமாட்டீர்கள் நான் எனக்ச் செலவழித்ததைவிட எனது சகோதரர்களின் குழந்தைகளுக்குச் செலிவழித்ததுதான் அதிகம்.  நான் என்றைக்குமே பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை.  குடும்பத்திற்கும் பாசத்திற்கும்தான் முக்கியத்துவம் கொடுத்திருந்தேன்.  ஆனால் எனது குடும்பம் அப்படி இருக்கவில்லை.  இருந்தும் கடைசிவரை முயற்சி செய்து கொண்டே இருந்தேன். 

 

 

நான் சாத்திரங்கள் பார்த்து சில வருடங்களுக்கு முன்னர்.  காண்டம்கூட இரண்டு முறை பார்த்திருக்கிறேன் என்றால் பாருங்கள்.  இப்போது அதை எல்லாம் விட்டுவிட்டேன்.  இப்போது இன்ரநெட்டில் பார்ப்பதோடு சரி.  நான் என்னை வன்னியிலுள்ள மக்களோடு பொருத்திப் பார்க்க முடியாது.  என்னருகில் வாழ்பவர்களோடுதான் என்னைப் பொருத்திப் பார்க்க முடியும்.  அப்படிப் பார்த்தால் என்னோடு வளர்ந்தவர்கள், படித்தவர்கள் எல்லோருமே மிகவும் நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள். 

 

நான் அதிகச் செலவாளி கிடையாது.  நான் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே எனது பணம் முழுவதையும் சீட்டில் போட்டு வந்தேன்.  சீட்டுப் போட்டவரும் எனது பணத்தை உடனடியாகத் தந்து முடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்தும், அடுத்தமா சீட்டுக் காசில் கழிப்பதற்குக் கழித்தும் நான்  சேமிக்க முடியாதபடி செய்து விட்டார்.  இப்போது அவற்றிலிருந்து நான் மீண்டு விட்டேன்.  இருந்தாலும் இன்னும் ஒரு வருடத்திற்கு நான் சீட்டுக் கட்ட வேண்டும்.

வேலையில்கூட நான் மிகவும் விரைவாக வேலை செய்வேன்.  மிக நன்றாகவும் வேலை செய்வேன்.  ஆனால், மற்றவர்களின் கண் பட்டோ அல்லது அவர்களின் நெகடிவ் சக்தியோ ஏதோ ஒன்று எனக்கு அடிக்கடி பிரச்சனையையே தந்து கொண்டிருக்கிறது.  அது அவர்களின் பொறாமையாகக் கூட இருக்கலாம்.  பொறாமையினால் என்னை அவர்கள் மேலிடத்திற்குப் போட்டுக் கொடுக்கிறார்கள் போலும்.

 

யாயினி, நீங்கள் கூறிய அந்தப் பிள்ளைக்கு ஒரு நல்ல உள்ளம் மூலம் இந்த வாய்ப்பு வந்ததால் அவர் தப்பிவிட்டார்.  அவரைப் போல எத்தனை பிள்ளைகள் அங்கு இருக்கிறார்கள்.  இவை எல்லாம் வாழ்க்கையில் அடிபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உதவாத விடயம்.  நீங்கள் கூறியது போலக் கதவு திறக்கும் திறக்கும் என நான் பல வருடங்களாகக் காத்திருந்தேன்.  இன்னும் திறக்கவில்லை என்பதுதான் எனது பிரச்சனை.  அப்படியே திறந்தாலும் கொஞ்ச நாளில் அது அதைவிடப் பாதாளத்துக்குள் தள்ளும் நிலையே எனக்கு இருக்கிறது.

 

நான் இன்றும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.  இப்போதும் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  இப்போது உழைப்பது வாழ்க்கைச் செலவிற்கும் கடனை அடைப்பதற்குமே போகிறது.   

 

வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது சகஜம் என எனக்கு நன்றாகவே தெரியும்.  ஆனால், ஒரு உயிருக்கு வாழ்க்கை முழுவதுமே அப்படி இருக்க முடியுமா என்பதுதான் எனது பிரச்சனை.  இப்போதும் நான் கவனமாகத்தான் இருக்க நினைக்கிறேன்.  ஆனால், எல்லா இடத்திலும் என்னை என் விதி துரத்துவதாகவே உணர்கிறேன்.  என் உடம்பு முழுவதும் ஏதோ ஒரு தீய சக்தி இருப்பதாகவே உணர்கிறேன்.  அந்தத் தீய சக்தியிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதுதான் எனது கேள்வி.   

  • கருத்துக்கள உறவுகள்

சுய பச்சாதாபத்தை கலைப்பது.ரொம்ப கஸ்ரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய பச்சாதாபத்தை கலைப்பது.ரொம்ப கஸ்ரம்

 

மற்றவர்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டோ அல்லது அரசாங்கப்பணத்தில் வாழ்ந்து கொண்டோ நான் இப்படி எழுதினால் நீங்கள் எழுதுவது நியாயம்.  ஆனால் கடுமையாக உழைத்தும் எதுவும் மிஞ்சுதில்லைலேயே என்பதுதான் எனது வருத்தம்.  அதைவிடக் கஸ்ட காலத்தில் எல்லாம் சேர்ந்து வருகிறது என்பதைத் தான் கூறவிரும்புகிறேன்.  உதாரணமாக, என்னிடம் பணம் இருந்தபோது எனது காரில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.  ஆனால் இப்போது பணத் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் காரில் நிறையப் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.  ஒன்றைத் திருத்த மற்றொன்று வருகிறது.  காரின்றி வேலைக்குப் பொவதும் கடினம்.    இன்னும் ஒரு வருடத்தில் என்னால் நிமிர முடியும்.  ஆனால், அதற்குள் வேறு எப்படி எப்படியெல்லாம் பிரச்சனைகள் வரப் போகின்றதோ என்பதுதான் எனது கவலை. 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனத்தில் ஒரு வித தாள்வு மனப்பாண்மை இருக்கிறது என்று நினைக்கிறன்...நோ நான் சொல்வது தான் சரி போன்ற பிடிவாதம்...இவ்வாறன பிரச்சனைகளுக்கு தகுந்த மன நல வைத்தியரைப் பார்ப்பது தான் சரி என்று நினைக்கிறன்..ஒருவர் நொந்த நிலையில் இருக்கும் போது நான் இப்படிக் கூறுவது தப்பு...கார் இன்றி வேலைக்கு போறது கஸ்ரம் என்றால் பஸ்ஸில போக முயற்சிக்கலாம்,மெற்றோவில போக முயற்சிக்கலாம்.முயற்சித்தால் வாழ்வைக் கொண்டு நகர்த்துவதற்கு வழியா கிடையாது...
ஆனால் கடந்த காலத்தை விட்டு,நிகழ் காலத்தை விட்டு,எதிர்காலத்தில் எழக் கூடிய பிரச்சனைகளுக்கு கூட இப்பவே பயப்பிடுறீங்கள் என்றால்,ஒரு பிரச்சனையையும் எதிர் கொள்ளாமல் வாழ முயற்சிக்கிறீர்கள்...அப்படி எழக் கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழி தெரியாமல் நிக்கிறீர்கள்..நாளாந்த வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்காமல் வாழ்வது என்பது மிக,மிக கடினம்....

ஆகவே குழந்தைப் பிள்ளை மாதிரி இப்படித் தான் இருப்பன்,பிரச்சனைகளை எதிர் கொள்வது கடினம் என்றால் எதையுமே சாதித்து விட முடியாது..

https://www.youtube.com/watch?v=_M-C7Ui1HFw

 
https://www.youtube.com/watch?v=2HSfAQOp1RY

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக்கிரி பட்ட காலிலையே படும் என்பார்களே அது தான் இப்போது  உங்கள் வாழ்க்கையல் நடக்கின்றது .

நீங்கள் தன்னம்பிக்கை உள்ளவராக இருக்கலாம்
ஆனால் உங்கள் வாழ்க்கையை ஒருங்கமைக்க  முடியாமல் இருக்கின்றீர்கள். இந்த ஒருங்கமைப்பு என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. திட்டமிடல், நடைமுறைப்படுத்தல்,தேவையான நேரத்தில் உதவிகளை உள்வாங்கிதல் எனப் பல ஒழுங்கு அமைப்புக்கைளை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல சிறு சிறு கடன்கள் உங்ககள் கைகளில் இருக்கும் பணத்தைச் சுரண்டிவிடும். அப்படி இருந்தால் நீங்கள் வேலை செய்வதால் வங்கியின் மூலம் கடன் பெற்று இந்தச் சில்லறைக் கடன்களை கொடுத்துவிட்டு வங்கிக்கு உங்களால் முடிந்த தொகையைக் கட்டலாம்

அடுத்த முக்கியமான விடயம் சீட்டு.
சீட்டு என்பது தரித்திரம். ஒருமுறை நீங்கள் சீட்டுக் கட்ட வெளிக்கிட்டால் அதிலிருந்து உங்களால் மீழ முடியாது.
கிட்டத்தட்ட சூதாட்டம் என்றே சொல்லலாம்.
சீட்டு எனும் சூதாட்டத்தில்  இருந்து எப்போது நீங்கள் விலகுகின்றீர்களோ
அன்றிலிருந்து உங்கள் வாழக்கையில் ஒளிவீசும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.