Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவமயம் 

பெர்லின் மேற்கு
ஜெர்மனி
15.10.1982

 

அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது!
நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்

நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள்  பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.

இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕

இப்படிக்கு
அன்பு அத்தான் குமாரசாமி 💘

 

அடுத்த கடிதம் வரும்......

 

 

  • Replies 294
  • Views 47.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க

உடம்புக்கு போடுற கீற்றரைப் பற்றி ஒன்றுமே எழுதல்ல.
காசு முடிந்து போச்சோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உடம்புக்கு போடுற கீற்றரைப் பற்றி ஒன்றுமே எழுதல்ல.
காசு முடிந்து போச்சோ?

 அவசர குடுக்கையள்...... இப்பவே கிண்ட வெளிக்கிட்டாச்சா.....😄
 அதையும் சொல்லுவன் தானே...😀

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரின் கடிதங்களை ப்படிப்பது நாகரீகமில்லை . எங்களை  படிக்க ச்சொல்லி எழுதுகிறீர்கள். ஆவலுடன் படிக்க  காத்திருக்கிறோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, நிலாமதி said:

மற்றவரின் கடிதங்களை ப்படிப்பது நாகரீகமில்லை . எங்களை  படிக்க ச்சொல்லி எழுதுகிறீர்கள். ஆவலுடன் படிக்க  காத்திருக்கிறோம். 

எல்லாமே கற்பனை உலகம் சகோதரி. நிஜகடலில் மூழ்க வேண்டாம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அன்புள்ள என்ரை செல்லம் அறிவது!
நான் நல்ல சுகம். உங்கடை சுகத்துக்கும் கடவுள் அருள் புரிவாராக.
நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டனான்.கிடைச்சிருக்குமெண்டு நம்புறன்.
இப்ப நான் பேர்லினை விட்டு   மேற்கு ஜேர்மனியிலை நிக்கிறன். சுவீஸ் இல்லாட்டி கொலண்டுக்கு போனால் நல்லது எண்டு இஞ்சை எங்கடை ஆக்கள் கனபேர் கதைக்கினம்.எனக்கும் என்ன முடிவெடுக்கிறதெண்டு தெரியேல்லை. பாப்பம்.
உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது. அவன் ஒரு மாதிரியானவன் தெரியும் தானே.கொய்யா கொம்மாவை சுகம் கேட்டதாய் சொல்லவும். தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும். வேறை என்னதை எழுத....பிறகு விரிவாய் எழுதுறன். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை  அனுப்புறன். 

இப்படிக்கு
அத்தான்💓

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 அவசர குடுக்கையள்...... இப்பவே கிண்ட வெளிக்கிட்டாச்சா.....😄
 அதையும் சொல்லுவன் தானே...😀

முதல் கடிதத்தில தானே இதுகளை எழுத வேணும்.நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேக்காமல் பரிக்கிப் போட்டாங்கள் என்று.

அடுத்தடுத்த கடிதத்தில் எழுதுவம் என்று இருந்தா அதுக்கிடையில் ஊருக்கு தகவல் போடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...அந்தக்காலத்திலேயே....இந்த  அடையாளம் ðஎல்லாமே....தூள் பறந்திருக்குது...!
நாங்கள் தான்.....பட்டிக்காட்டுச்  சீவியம்...சீவிச்சிருக்கிறம் போல கிடக்குது...!

தொடருங்கள்....அத்தான்!


மன்னிக்கவும்....அண்ணை...!😀

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, புங்கையூரன் said:

தொடருங்கள்....அத்தான்!

அக்காவின் கணவன் அத்தான் தானே.தப்பே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சுழியும்   போட்டு பக்தி முக்தியாய் கடிதம்  எழுதத் தொடங்கியது எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு     

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிவமயம் 

பெர்லின் மேற்கு
ஜெர்மனி
15.10.1982

அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது!
நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்

நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள்  பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.

இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕

இப்படிக்கு
அன்பு அத்தான் குமாரசாமி 💘

அடுத்த கடிதம் வரும்......

Bildergebnis für balkon schlafen

அன்புள்ள அத்தான்.... குமாரசாமி   அறிவது, ❤️

இப்ப அரசடி பிள்ளையார் கோயிலடியில்... புத்த விகாரை வந்து, கனகாலமாச்சு.
நீங்கள் எனக்கு கடிதம் போட்டது, உங்கடை வீட்டுக்காரருக்கு தெரிந்தால்...
உங்களை,   "பல்கணியில்" படுக்க விட்டுடுவார்கள் என்பதால், நான் அதை வெளியில் சொல்ல மாட்டேன். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கடிதத்தில் "அன்பு அத்தான் "   இரண்டாவதில் "அன்பை "காணேல்ல அன்புத் தங்கச்சி வந்திருக்கிறா......இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ பார்ப்பம்.........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கடிதங்கள் சுவாரஸ்யமானவை!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும்

பாசமுள்ள அத்தான்......தூர தேசம் போனாலும் மறக்காமல் சுகம் விசாரிக்கின்றார்

7 hours ago, குமாரசாமி said:

எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

அடுத்த கடிதம் வரும்......

 

 

அந்தக்காலத்தில் கடிதங்கள் மூலம் உறவைப் பேணிய மகிழ்ச்சி தற்போதய மின்னஞ்சல், குறுந்தகவல் தொடர்புகளில் தெரிவதில்லை. 

முப்பது வருஷத்துக்கும் முந்தைய திகதியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கடிதம் படிக்க மேலும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள் குமாரசாமி அண்ணை. 🙂

 

நம்மட பங்குக்கு ஒரு 'சிற்ருவேஷன் ஸோங்' போட்டாச்சு! 😍

 

 

Edited by Shanthan_S

குமாரசாமி அண்ணா!

உங்களின் பகிர்வுகள் எல்லாம் நகச்சுவையுடன் இருக்கும். நானும் ரசிப்பேன்.தொடருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் குமாரசாமி. நல்ல ஐடியா😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையார் துணை

பிறேமன்
மேற்கு ஜேர்மனி 
19,10.1982

அன்புள்ள தேன் பரிமளம் அறிவது!
                                                         நான் நல்லசுகம்.உங்கடை சுகங்கள் எப்பிடி?

என்னையும் இன்னும் கொஞ்ச  ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை  கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம்.

காம்பிலை கனசனம் இருக்கினம்.எல்லாம் வேறை வேறை நாட்டுக்காரர். எங்கடை சனமும் கனபேர் இருக்கினம்.அதாலை ஒரு பயமும் இல்லை. கடியன் கந்தையாவின்ரை மூத்த பெட்டையும் இஞ்சைதான் நிக்குது. நான் திரும்பியும் பாக்கேல்லை.நான் இருக்கிற றூமிலை 8பேர் இருக்கிறம்.புங்குடுதீவு,அரியாலை,கொழும்புத்துறை,மானிப்பாய்,முல்லைத்தீவு,கொழும்பு,பூநகரி எண்டு எல்லாரும் வேறைவேறை இடத்து ஆக்கள்.பழகிறதுக்கு நல்லவை போலை கிடக்கு.

இஞ்சை வரவர குளிர் கூடுது.குளிருக்கு பியர் நல்லதெண்டு அரியாலைப்பொடியன் ஈழக்குமார் சொன்னவர்.ஒரு சில ஆக்கள் பியர் ரின் வாங்கி குடிப்பினம்.நான் குடிக்கிறதில்லை.இஞ்சையெல்லாம் பியர் குடிக்கிறது கெட்டபழக்கம் இல்லையாம்.இஞ்சை காம்பிலை மூண்டு நேரமும் பெட்டிச்சாப்பாடு தருவினம்.மாதம் 75ருபாயும் கைச்செலவுக்கு தருவினமாம்.

நான் உங்களுக்கு கடிதம் போடுறது ஒருத்தருக்கும் சொல்லவேண்டாம்.பீயோன்  ஏகாம்பரம் ஐயாவிட்டை எல்லாம் விபரமாய் சொல்லியிருக்கிறன்.அவர் இரகசியமாய்த்தான் கடிதங்களை கொண்டுவந்து தருவார்.நீங்கள் கடிதம் எனக்கு போடேக்கை அவரிட்டையே குடுத்து விடுங்கோ.அவர் முத்திரை ஒட்டி எனக்கு போடுவார்.என்ரை செல்லம் நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.வேலை கிடைச்சவுடனை நான் எல்லாத்தையும் பாக்கிறன்.கொஞ்ச நாள் போக  ஒவ்வொருத்தருக்கும் வீடடிச்சு விடுவினமாம்.அதுக்குப்பிறகு வேலை தேடி எடுக்கலாமாம்.இல்லாட்டி சுவீஸ் போகலாம் எண்டு கதைக்கினம்.

என்ரை வில்லன்  அதுதான் உங்கடை பொடிகாட் கொண்ணர் என்ன செய்யிறார்? நான் இல்லாதது அவருக்கு ஒருசோலி முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். நான் என்ரை மாம்பழம் உங்கடை நினைப்பிலை தான் இருக்கிறன்.அதை ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது.  சரி செல்லலம் கனக்க எழுதிப்போட்டன் போலை கிடக்கு. இப்ப இஞ்சை நேரம் இரவு ஒன்பதரை.மற்றவை காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.நான் படுக்கப்போறன்.என்ரை தற்போதைய விலாசம் பின்பக்கம் எழுதிவிடுறன்.பதில் கடிதத்தை  ஏகாம்பரம் ஐயாவிட்டை குடுத்து விடுங்கோ.உங்கடை பதில் கடிதம் காண வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன் அன்பே.

என்ரை ராசாத்திக்கு ஆயிரம் முத்தங்கள்.💕

இப்படிக்கு 
அத்தான் குமாரசாமி💘
     

 

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

அண்ணரிண்ட  விளையாட்டு, இப்பதான் தங்கச்சியாருக்கு தெரியுது போல...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிவப்பு நீலக்கரை போட்ட கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஞாபகங்களை மறக்கக் கூடியதா? அந்த நாளில் செல் போனும் இல்லை கணனியும் இல்லை. கடிதம் ஒன்றுதான் தொலைத் தொடர்பு சாதனம். அசத்தலாகக் கடிதம் எழுதும் குமாரசாமியின் கடிதங்கள் அபாரம். தொடருங்கள் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துர்க்கை அம்மன் துணை

கரணவாய் சென்ரல்
கரணவாய்
2.11.1982

அன்புள்ள ஆசை அத்தானுக்கு.

நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மனை வேண்டுகின்றேன்.

உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான  முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன்.

உவ்விடம்  கடுமையான குளிர் என எழுதியிருந்தீர்கள். நல்ல உடுப்புகள் வாங்கி போடுங்கோ. சாப்பாடுகள் எல்லாம் என்ன மாதிரி?  கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ? உங்களுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் போட்ட புட்டு நல்ல விருப்பம் என்று உங்கடை அம்மா சொன்னவ .

செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம்.நான் இப்ப அம்மனுக்கும் முருகனுக்கும் விரதம் பிடிக்கிறன்.      சொண்டு வெடிச்சுப்போச்சுதெண்டு எழுதியிருந்தீர்கள்.டாக்குத்தரிடம் போய் மருந்து எடுங்கோ. உங்கை பாசைப்பிரச்சனை இல்லையோ?

கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்?

அய்யாவும் அம்மாவும் சுகமாய் இருக்கினம்.நீங்கள் சுகம் கேட்டதாய் சொன்னேன். சந்தோசப்பட்டினம். அய்யா உங்கடை அய்யாவோடை எங்கடை கலியாணத்தை பற்றி கதைக்கப்போறன் எண்டு சொன்னார். தங்கச்சி வசந்தி உங்களைப்பற்றியே நெடுக விசாரிச்சுக்கொண்டிருப்பாள்.நீங்கள் சுகம் விசாரிச்சதாய் சொன்னேன். அவளுக்கும் நல்ல சந்தோசம். அத்தான் என்னைத்தான் எண்ட பாட்டை நான் பாட அவளும் சேர்ந்து பாடுவாள். சின்னப்பிள்ளை தானே.  

நீங்கள் இருக்கிற அறையிலை எட்டுப்பேர் என எழுதியிருந்தீர்கள். எல்லாரும் உங்கடை வயதுக்காரார்களோ? எல்லாரும் குடிக்கிறவையோ? நீங்கள் கவனமாய் இருங்கோ.நீங்கள் கெட்ட பழக்கம் பழக என்ரை அம்மன் விடமாட்டா. இருந்தாலும் நீங்கள் கவனமாய் இருக்கவும்.பியோன் ஏகாம்பரம் நல்ல மனிசன்.அய்யாட்டை வாற சாட்டிலை உங்கடை கடிதத்தை என்னட்டை ஒருத்தருக்கும் தெரியாமல் தெரியாமல் தருவார்.

எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும்  என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.

இப்பவும் நோகுதா அத்தான்?

நான் எத்தனை முறை தடவினாலும் அந்த வலி ஆறாது என்பது எனக்குத்தெரியும் அத்தான். இதை எழுதும் போது என்மனம் அழுகின்றது அத்தான்.உங்களை கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருக்கின்றது அத்தான். ஆயிரம் முத்தங்கள் என் அத்தானுக்கு.

நீங்கள் எனக்கு கைச்செலவுக்கு தந்த பத்தாயிரம் ரூபாய் அப்பிடியே வைச்சிருப்பன்.அதை செலவழிக்க மாட்டன்.உங்களுக்கு சொந்தமான 85 ஏக்கர் முரசுமோட்டை வயலை உங்கடை தங்கச்சிக்கு எழுதினதை ஊரிலை பெரிசாய் கதைக்கினம். அண்ணா என்றால்  இப்படித்தான் இருக்கோணுமாம். பளையில் இருக்கும் தென்னம் தோப்புகளை என்ன செய்யப்போகின்றீர்கள். அதையும் தங்கச்சிக்கு எழுதி விடுறது நல்லது என நான் நினைக்கின்றேன். அத்தான் உடம்பை கவனியுங்கோ.நேரத்துக்கு சாப்பிடவும். உங்களை காணாதது எனக்கு ஏதோ விடியாதது மாதிரி இருக்கின்றது.இத் துடன் முடிக்கின்றேன். உங்கள் பதில் கடிதம் கண்டதும் முத்த மழை பொழிவேன்.
அன்பு ஆசை அத்தானுக்கு அளவில்லா முத்தங்கள்.

இப்படிக்கு
உங்கள் அன்பு வருங்கால துணைவி
பரிமளம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவோட தான் சாமியார் எழுதிறார்!
தொடர்கிறேன்... தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பீயோன் ஏகாம்பரம் ஐயா காட்டில....இனி ஒரே மழை தான்...!😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.