Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதாவுல்லா மீது குடிநீரை வீசிய மனோ கணேசன்! காரணம் என்ன?

Featured Replies

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,

பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேசையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் “சூட்டை”, நான் எறிந்த “நீர்” குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகின்றேன்.

என்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை பயன் படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன். நடந்தவைகளை “எடிட்” செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும் படியும் தெரிவித்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/232138?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலடி கொடுத்த, மனோ கணேசனுக்கு.. பாராட்டுக்கள். tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.. பயத்தில எழும்பி ஓட தயாராக நிற்கிறார். 

அதாவுல்லாவுக்கு மூஞ்சில குத்தி இருக்கனும். 

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் - சிறிரெலோ

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்  என்று சிறிடெலோ கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

sri_telo.jpg

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது மலையக மக்கள் தொடர்பாக சர்ச்சையான முறையில் பேசியிருந்தார்.குறித்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து சிறி டெலோ கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகம் ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள் இங்கு வடக்கு தமிழன், கிழக்கு தமிழன், மலையக தமிழன், கொழும்பு தமிழன், வன்னி தமிழன் என்று பிரிவினைகளை உருவாக்கி தமது சுய அரசியல் இலாபங்களை அடைய முயற்சிக்கும் கீழ்த்தர அரசியல்வாதிகளே உங்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

உங்கள் வக்கிரக அரசியலுக்காக ஒற்றுமையாக வாழும் தமிழ் சமூகத்தை பிளவு படுத்த நினைக்காதீர்கள்

உலக வரலாற்றில் தமிழரின் வீரமும் தமிழ் இனத்தின் வரலாற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் 

ஈழ விடுதலைக்காக தம் உயிரை துச்சமென நினைத்து ஆயுதம் ஏந்தி போராடி தம் உயிர்களை நீத்த பல போராளிகள் நாம் தமிழினம் என்ற ஒன்றை மாத்திரமே மனதில் கொண்டு உயிரை நீத்தார்களே தவிர யாரும் வேற்றுமை பார்த்து போராட்டத்திற்கு வரவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பொறுப்பு வாய்ந்த ஒரு முன்னால் அமைச்சர் பொதுநிலையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருப்பது என்பது அவரது முட்டாள் தனத்தையும் அவரது உள்ளத்தில் தமிழர்கள் பற்றிய மனநிலையையும் தெட்டத்தெளிவாக காட்டுகிறது. எனவே தமிழ் மக்களை இவ்வாறு கீழ்த்தரமாக நினைத்திருக்கும் அதாவுல்லா மற்றும் அவர் போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் இத்துடன் உங்கள் மனதில் இருந்து வக்கிரக எண்ணங்களை மறந்து விடுங்கள் என கேட்டுக்கொள்கிறோம். 

இதேவேளை குறித்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளை அழித்தோம் என்றும் அதாவுல்லா கருத்து தெரிவித்திருந்தார் அதாவுல்லாவுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் இலங்கையில் இடம்பெற்றது உரிமைக்கான விடுதலைப்போராட்டமே தவிர பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லை அது பயங்கரவாதம் என்றால் ஈஸ்டர் தினத்தன்று மத ஸ்தலங்களில் குண்டு வெடித்து பல உயிர்களை பலியெடுத்தது என்பது புனித போரா? என்ற கேள்வியையும் எழுப்புகிறோம்

எனவே தொடர்ந்தும் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறி தமிழீழ விடுதலை இயக்கம் (சிறிரெலோ) எச்சரிக்கை  விடுவதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/69655

சபாஷ் மனோ கணேஷன்!

முசுலீம் அரசியல்வாதிகளில் மிகக் கேவலமா ஒராள் இந்த அதாவுல்லா!

எமது மலையக உறவுகளை "தோட்டக்காட்டான்" என்றழைத்த ரவுடி அதாவுல்லா மன்னிப்பு கேட்கும்வரை அவனை எந்தவொரு தமிழ் மண்ணிலும் காலடி வைக்க அனுமதிக்கக் கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு கொடி  பிடிச்சா

தமிழரை   என்னவும் செய்யலாம்

என்னவும்   பேசலாம்  என்று  நினைக்கும் வால்க்குணம் இது

அதெல்லாம்  இந்த  மண்ணில்  சாத்தியமல்லை  ராசா

Edited by விசுகு

தனது மக்களை தரக் குறைவாக பேசிய உடனடி பதிலடி கொடுத்த மனோ கணேசனுக்கு பாராட்டுக்கள். அதே வேளை ஈழத்தமிழர்களாக நாம் தான் மலயக தமிழரை அவ்வாறு அழைக்க தொடங்கி வைத்தது என்பதை நாம் மறக்க கூடாது. எனது சிறு வயதில் எம்மவரில் பலர் அந்த மக்களை அவ்வாறு தரக்குறைவாக அழைத்ததைக் கண்டிருக்கிறேன்.  இந்த சம்பவம் எம்மையும் திருத்தட்டும்....... 

  • கருத்துக்கள உறவுகள்

அதாவுல்லா விவகாரம் தமிழ்-முஸ்லிம் பிரச்சினை அல்ல. - மனோ கணேசன்...

 

IMG_ORG_1574668622129.jpeg

 

அதாவுல்லா விவகாரம்
 தமிழ்-முஸ்லிம் பிரச்சினை அல்ல.
- மனோ கணேசன்...!
 
(மனோ கணேசன் ஊடகப் பிரிவு)
 
அதாவுல்லா விவகாரம்”, தமிழ்-முஸ்லிம் பிரச்சினை அல்ல. அவர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக இதை கூறவில்லை. கூறவும் முடியாது. பெருந்தொகையான முஸ்லிம் சகோதரர்கள் நேரடியாகவும். பகிரங்கமாகவும் என்னிடம் வருத்தமும், அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்நாட்டில் இன ஒற்றுமைக்கு இந்த சம்பவம் குந்தகமாக அமைய கூடாது. 
 
 
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இந்த மின்னல் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே நிதானம் இல்லாமலே நடந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அவரது நடத்தையை முதலில் இருந்தே பார்ப்பவர்களுக்கு இது புரிகிறது. (அது ஏன், என்ன.... என அவரிடம்தான் கேட்க வேண்டும்!). சக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கூட அவர் “அவன்-இவன்” என்ற ஏக வசனத்தில்தான் பேசினார். தோட்ட தொழிலாளர் பற்றியும், முதலிலேயே சில இடங்களில், “அவன்-இவன்” என்று குறிப்பிட்டபடி வந்தார். பொறுமையாக இருந்தேன். 
 
 
நிகழ்ச்சியில் பல நல்ல கருத்துகளையும் அவர் சொன்னார். பல இடங்களில் நடுநிலை தவறி, எல்லாவற்றுக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள்தான் காரணம் என்றும் கூறினார். ஆயுதம் தூக்கும்வரை தமிழ் இளைஞர் சென்றதன் பின்னணியில், பேரினவாதம் இருந்திருக்கின்றது என அவருக்கு புரிய வைக்க பல இடங்களில் நான் முயன்றேன். 
 
 
கடைசியில், அந்த “இழிச்சொல்லை” பயன்படுத்தி தோட்ட தொழிலாளர்களை விளித்தார். “அந்த சொல் பிழையானது. அதை வாபஸ் வாங்குங்கள்” என்று எழுந்து நின்று நான் அவருக்கு திரும்ப, திரும்ப சொன்னேன். அவர் வாபஸ் வாங்க மறுத்து பேசிக்கொண்டு போனார். அப்போதுதான் அந்த “சம்பவம்” நிகழ்ந்தது. 
 
 
மனோ கணேசன் குவளையில் இருந்த தண்ணீரை அதாவுல்லா முகத்தை நோக்கி வீசியது நிதானம் தவறிய தவறு என சிலர் இப்போது கூறப்பார்க்கின்றார்கள்.
 
முதலில் ஒன்றை கூறுகின்றேன். நான் நிதானம் தவறவில்லை. நினைவுபூர்வமாகவே நான் குடித்து எஞ்சி இருந்த தண்ணீரை அவர் முகத்தில் வீசினேன். நிதானம் தவறி இருந்தால், நாற்காலியை அல்லவா தூக்கி வீசி இருப்பேன்?
 
மேலும் இப்படி முட்டாள் கருத்தாளர்களின் முகங்களை நோக்கி தண்ணீரை வீசி எறிவது உலகம் முழுக்க நிகழ்ந்துள்ளது. வரலாற்று பக்கங்களை புரட்டி தேடுங்கள். ஏனெனில் சிலருக்கு சில “பாஷைகள்” தான் புரியும் என உலகம் எனக்கு சொல்லி தந்திருக்கின்றது.    
 
இன்னொரு புறம், தமிழ் அகராதியை எடுத்து, அந்த இழிச்சொல்லுக்கு விளக்கம் கூறி, அது “இழிச்சொல்” அல்ல என் நிறுவ முனைவது, அப்புறம் “அவர் மனோவை பாராட்டினார்”, “மலையக மக்களை பற்றி நல்லபடியாதான் பேசினார்”, “அவர் உள்ளத்தில் இருந்து பேசவில்லை”, “தொண்டையில் இருந்தே பேசினார்” என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது எல்லாம் என்னிடம் வீண். என்னிடம் இவற்றை கூறி விளையாட வேண்டாம். 
 
துஷ்ட கருத்துகளை கூறும் துஷ்டனை கண்டால், நான் தூர விலகி போக மாட்டேன். என் கோபத்தை காட்டுவேன். அது நிதானமான கோபம். இந்த கோபம், எனது நிழலைப்போல் என்னுடன் எப்போதும் வாழ்கிறது.  
 
ஒருவேளை நான் கோபப்படாமல், இந்த சொல்லை கேட்டும், சாந்தமாக பதில் கூறி வந்திருந்தால், யோசித்து பாருங்கள், இன்று உலகம் என் மீது கோபப்பட்டிருக்கும். என் வீடு என் மீது உமிழ்ந்திருக்கும். என் நிழல் என்னை கேவலமாக கணித்திருக்கும்.    
 
ஒன்றை மிகத்தெளிவாக கூறிவைத்திட விரும்புகிறேன். எந்தவொரு இனத்தையும், சமூகத்தையும் விளிக்க, அந்த இனம், சமூகம், ‘இழிச்சொல்” என கருதும், சொல்லை எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது. அதேபோல் மலைநாட்டில் உழைக்கும் பாட்டாளிகள் குறித்து, அந்த இழிசொல்லை இனி எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது. 
 
பயன்படுத்தினால், இந்த மனோ கணேசன் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான இன்றைய மலையக இளையோர் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் பொங்கி எழுவார்கள். இது இந்த அதாவுல்லாவுக்கு மட்டுமல்ல, இவரை போன்ற அனைவருக்கும் நான் தரும் செய்தி. நாம் தரும் செய்தி.
 
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மனோ கனேசன், பல் பிடுங்கிய நிலையில் உங்கள் ஆதங்கத்தை அத்தாவுள்ளாவிடம் காட்ட வேண்டாம்.

IMG_ORG_1574645674094.jpeg

 

அன்புள்ள மனோ கனேசன்!
நேற்று  நடந்த சக்தி டீவி நிகழ்ச்சியில் 

கௌரவ அத்தாவுள்ளா மீது தண்ணீர் வீசினீர்கள்!இந்த சம்பவம் சில துரோகத்தால் வஞ்சனை செய்யப்பட்ட முஸ்லீம் காடையர்களால் வரவேற்கப்படுகிறது. 
 
 
ஆனாலும் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதியான உங்களிடம் இந்த குணத்தை நான் எதிர்பார்த்ததுதான்.
 
 
 
2000ம் ஆண்டு  கொழும்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான அமைப்பை உருவாக்கிய முதல் உங்களை நன்கு அறிந்தவன்.தலைநகரில் தமிழ் மக்கள் வெள்ளை வேன் கடத்தலுக்கு எதிராக போராடி அமெரிக்க விருதும் உங்களுக்கு கிடைத்தது.
 
 
 
நீங்கள் கொழும்பு மாநகரசபை ,மேல்மாகாணம் சபை என்று அரசியல் தொடங்கினார்கள்.வட கிழக்கு தமிழ் கட்சிகள் கொழும்பு தமிழர்களை புறக்கணிக்கிறது என்ற இனவாத,பிரதேசவாத கொள்கையுடன் உங்கள் பயணம் ஆரம்பமானது .
 
 
 
கட்சிக்குள் உங்கள் சகோதரனை உள்வாங்கி பலர் கட்சியைவிட்டு வெளியேறினர். உங்களுக்கு 2010 ல் ரணில் தேசியப் பட்டியல் தரவில்லை என்பதற்காக ரணிலுக்கு எதிராக நாடு பூராவும் கேவலமாக பேசினீர்கள்.
 
 
 
உங்கள் சகோதரர் பிரபா கணேசன் மஹிந்தவுடன் கட்சி மாறி பிரதி அமைச்சரானார்.நீங்கள் பதவியும் ,கட்சியிம் இல்லாமல் நடுரோட்டில். நின்றது நிறைவுள்ளதா?
 
 
 
இறுதியில் 2015ல் ரணிலுடன் மாற்று வழியில்லாமல் சரணடைந்தீர்கள்.ஐதேகட்சிக்குரிய தமிழ் வாக்குகள் கொழும்பில் உங்களுக்கு வழங்கி வெற்றி பெறவைத்தனர்.இதற்காக முன்னால் அமைச்சர் சுவாமிநாதனை போட்டியிடாமல் செய்து ரணில் உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கினார்.
 
 
 
அமைச்சராக நீங்கள் கொழும்பில் தமிழ் மக்களுக்கு சார்பான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .கொழும்பு தமிழ் மக்களிடம் பிரதேசவாத்த்தை உருவாக்கிய நீங்கள்,பதவி கிடைத்ததும் தமிழ்முற்போக்கு கூட்டமைப்பை உருவாக்கி மலைநாட்டு மக்களுக்கு பிரதிநிதியானீர்கள்.இதன் பலனை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பில் உங்கள் கட்சி பாரிய தொல்வியை கண்டது ஞாபகம் உள்ளதா?
 
 
 
அரசகரும மொழி மற்றும் நல்லிணக்கம் உங்களுக்கு வழங்கிய அமைச்சு.2015 ம் ஆண்டு முதல் இந்த அமைச்சின் நிதியில் 15% மட்டுமே வடகிழக்குக்கு ஒதுக்கினீர்கள்.இதில் முஸ்லீம பிரதேசங்களுக்கு 1% கூட வழங்கப்படவில்லை .உங்கள் அமைச்சால் நடாத்தப்பட்ட 10 கு அதிகமான நடமாடும் சேவைகள் முஸ்லீம்கள் அல்லது கிழக்கு தமிழ்மக்களது பிரதேசத்தில் தடாத்தப்படவில்லை .உங்கள் அமைச்சு மலைநாட்டுக்கு மட்டுமான அமைச்சு அல்ல்்என்பது த
 
 
 
சஜித் பிரமதாசவின் தோல்விக்கு காரணம் முஸ்லீம் தலைவர்கள் குறிப்பாக ரிசாட் என்று பழிபோட்டீர்கள். நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் கொழும்பு வட,கிழக்கு மற்றும் மத்திய பிரதேசத்தில் தோல்வி கண்டது வெட்கம் இல்லையா ?றிசாத் வடகிழக்கில் சஜித்துக்கு வரலாறு காணாத வாக்குகளை பெற்றுக் கொடுத்தார்.
 
 
 
அவிசாவளை பாடசாலையில் முஸ்லீம் ஆசிரியைகளின் அபாயா விடயத்தில் மூக்கை நுழைத்து முஸ்லீம் சமுகத்துக்கெதிராக விபரம் சொன்ன அதிக பிரசங்கி .உங்களுக்கு பதில் தரவேண்டிய சந்தர்ப்பம் இந்த சமூகத்திற்கு வந்துள்ளது .
 
 
 
கல்முனை தமிழ்பிரதேச செயலக விடயத்தில் கல்முனைக்கு விஐயம் செய்து என்ன பேசினீர்கள்.ஹரீஸ் தடையாக இருந்தாலும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் செயலாளரை நியமித்து செயலகத்தை உருவாக்குவேன்.நாங்கள் கிழக்கில் உங்களைப் போன்ற இனவாதகளால் பாதிக்காமல் இருக்க ஒதுங்க வேண்டும்.
 
 
 
ஈஸ்டர் தாக்குதலின் பின் முஸ்லீம்களை எள்ளி நகையாடினீர்கள்.பள்ளிவாசல்கள் மற்றும் அளவு மார்க்க கல்லூரிகளை தடை செய்ய வேண்டும் என பகிரங்கமாக பேசினீர்கள்.
 
 
 
முஸ்லீம்கள் வந்தேறு குடிகள்,தமிழ் மக்கள் வரலாற்று இனம் என்று பல்இடங்களில் பேசினீர்கள்.இந்தியாவில் இருந்து நேற்று வந்த உங்களுக்கு எங்களை வந்தேறு குடிகள் என்று பேசுவதற்கு வாய்கூசவேண்டும்.
 
 
 
அரபு மொழியை நீக்க சொல்லி அந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்து நடை முறைப்படுத்தினீர்கள்.அறபு மொழிசார்பான சகல செயற்பாடுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறுத்தி ,இலங்கையில் முஸ்லீம் அடிப்படைவாதம் உருவாகி உள்ளதாக கற்பனை குதிரையை ஒடவிட்டீர்கள்.
 
 
 
இவ்வாறு முஸ்லீம் சமுகத்தின் அனைத்து விடயங்களின் மூக்கை நுழைத்து படு பாதள குழியில் தள்ளீர்கள்.உங்களுக்கு சரியான பதிலை /பாடத்தை கற்பிக்க உங்கள் ஆட்சியில் முஸ்லீம் தலமைகள் இருக்கவில்லை.  இந்தியா மற்றும் சர்வதேச கைகூலியான 
 
உங்கள் முகத் திரையை கிழித்த போது குணம் வெளி பிறவிக்குணம் வந்திருக்கிறது.
 
 
 
கிழக்கு முஸ்லீம்களுக்கான குரலால் கௌரவ அத்தாவுள்ளா உள்ளார்.கிழக்கை பிரித்து முஸ்லீம்களுன் இருப்பை உறுதிப்படுத்திய தலைவன்.
 
 
 
கடந்த தேர்தலில் வெளிநாட்டு சதிகளை மூலம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் .இருந்தும் 2015 முதல் எந்தப் பதவிகளையும் எடுக்காமல் மக்களுடன் இருக்குன்றார்.
 
 
 
கிழக்கு முஸ்லீம சமூகத்திற்காக  போராடும் அத்தாவுள்ளாவினால்  உங்களினர நெருக்கடிகளை சகிக்கவோ ,கைகட்டி சிரிக்கவோ முடியாது. நீங்கள். கடந்த 5 வருடங்களாக விதித்த முஸ்லீம்களுக்கு எதிரான விதையை இன்று அத்தாவுளலளா 2 மணிநேர நிகழ்ச்சி மூலம் தோல் உரித்துள்ளார்.
 
 
 
ஆகவே உங்கள் பழைய கடையை திறக்கலாம்.கொழும்பில்  வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யலாம்.உங்கள் இனவாதப் போக்கை கொழும்பிற்குள் வைத்துக்கொண்டு வாய்மூடுவதே சிறந்து .
 
 
 
இந்த சமூகத்தை மீள கட்டியெழுப்பும் பயணத்தில் நாங்கள் விழித்துக் கொண்டுள்ளோம்.ஆகவே அடுத்த 5 வருடத்திற்கான ஆட்சியில் கௌரவ அத்தாவுள்ளாவின் செயற்பாடுகளை இந்த சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது.
 
 
 
ஆகவே பல் பிடுங்கிய நிலையில் உங்கள் ஆதங்கத்தை அத்தாவுள்ளாவிடம் காட்ட வேண்டாம்.இந்த சமூகத்தினர தற்போதைய எதிர்பார்க்கப்படும் குரல். சஜித்துடன் சேர்ந்து சகல முஸ்லீம தலமைகளும் நீங்களும் இனவாதம் பேசி சிங்கள மக்களை உசிப்பேத்துனீர்கள்.
 
அதன் விளைவு சஜித் துரதிஷ்டவசமாக தோல்வி கண்டார்.ஆனால் கிழக்கில் எமது சமூகத்திற்கு தற்போதைய அரசில் இருக்கின்ற குரல் கௌரவ அத்தாவுள்ளா.
 
 
 
ஆகவே உங்களது செயலை வன்மையாக கண்டிப்பதோடு,அதற்கான பதிலை விரைவில் இந்த சமூகம் வழங்கும் .
 
FAHMY MBM-UK
LLB(Hons),LLM,MPhil
Solicitor @ Asian Political Researcher 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம்  டக்ளஸ் இடையிலை நிண்டு விலக்கு பிடிச்சது இல்லாட்டி அதாவுல்லாவின்ரை கதை கந்தல் 😎

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, போல் said:

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேசையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.

ஈழத்தமிழர் அரசியல் நாகரீகத்தை ' கூட்டமைப்பின் தலைவர்களிடம்' இருந்து திரு. கணேசன் கற்றுக்கொள்ளவேண்டும். இப்படி எல்லாம் கோபப்படகூடாது 😅

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை இப்படி கற்பனை செய்து பார்ப்போமே..... 

மனோ கணேசன் தவறுதலாக அல்லது வேண்டுமென்றே முஸ்லிம்களை தொப்பி பிரட்டிகளென்றோ ஒரு வேறு ஒரு இகழ்வான வார்த்தை பிரயோகம் ஒன்றை இந்த நிகழ்வில் கூறியிருந்தால் தற்போது எண்ண நடைபெற்றிருக்கும் ?? 

இலங்கை பூராகவும் உள்ளது முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு இதற்க்கெதிராக போராடியிருக்கமாட்டார்களா.  மனோவின் கொடும்பாவியினை போட்டு எரித்து,  அடித்து உதைத்து பெரிய பிரச்சனையே உருவாக்கியிருக்க மாட்டார்களா ?? 

ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?? 

 

இங்கே இரண்டு விடயங்களை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். 

1, அதாவுல்லாவுக்கு இந்த துணிவை கொடுத்தது யார் ? 

நாம்தானே.  வேறு யாராக இருக்க முடியும். 

2,  மலையாகத் தமிழரை இன்றளவும் தோட்டக்காட்டான் என்று கூறும் நிலையில்வைத்திருப்பது யார்.  இது யாருடைய தவறு ? இதற்கு நாம் தான் (ஒட்டு மொத்த தமிழ் இனமாக ) வெட்கப்படவேண்டும் இல்லையா????? 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்  ? 

(விமர்சனம் செய்வோர் கவனிக்க : அதாவுல்லாவின் நடத்தையை நான் இங்கு சரி எனக் கூறவில்லை )

Edited by Maharajah
சொற்பிழை

4 minutes ago, Maharajah said:

1,  ஹிஸ்புல்லாவுக்கு இந்த துணிவை கொடுத்தது யார் ? 

நாம்தானே.  வேறு யாராக இருக்க முடியும். 

(விமர்சனம் செய்வோர் கவனிக்க : ஹிஸ்புல்லாவின் நடத்தையை நான் இங்கு சரி எனக் கூறவில்லை )

ஹிஸ்புல்லா அல்ல, அதாவுல்லா. 😀

  • கருத்துக்கள உறவுகள்

"யாகாவாராயினும் நாகாக்க--காக்கா".

எதுஎப்படியோ ஒருபடியாக வரும் பாராளுமன்றத்தேர்தலில்அத்த்தாஉல்லாட வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

பொதுவெளியில் பண்பாக உரையாற்றத்தெரியாத மனிதப்பிறவி.

தமிழ் இனம் மீதான வெறுப்பு அத்தாவுல்லாவின் இரத்தத்தில் ஊறியது. அவர் இப்படி பேசியிருக்கா விட்டால் தான் அது அதிசயம்.

12 hours ago, போல் said:

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்களின் (இனவாதத்தை தோண்டி) ஆதரவை பெறும் நோக்கில் இவ்வாறு அரசியல்வாதி பேசியிருக்கலாம். ஆனாலும், மக்கள் தெளிவாக இருப்பார்கள்.

இந்நாள் அமைச்சர்களாக இருந்திருந்தால், இப்படி செய்திருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஹிஸ்புல்லா அல்ல, அதாவுல்லா. 😀

தவறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி லாரா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maharajah said:

மனோ கணேசன் தவறுதலாக அல்லது வேண்டுமென்றே முஸ்லிம்களை தொப்பி பிரட்டிகளென்றோ ஒரு வேறு ஒரு இகழ்வான வார்த்தை பிரயோகம் ஒன்றை இந்த நிகழ்வில் கூறியிருந்தால் தற்போது எண்ண நடைபெற்றிருக்கும் ?? 

யாழ்கள உறுப்பினர்களில் ஓரிருவர் இங்கே திரிகள் திறந்து அல்லோலகல்லோலப்பட்டிருப்பர். மனோகணேசனுக்கு கடிதம் எழுதுவர்.முடிந்தால் தந்தியும் அடிப்பர்.தங்கள் பழைய புராதன முஸ்லீம் சகோரத்துவ வரலாறுகளை ரீல் ரீலாக எடுத்து விடுவர் :cool:

3 hours ago, ampanai said:

ஈழத்தமிழர் அரசியல் நாகரீகத்தை ' கூட்டமைப்பின் தலைவர்களிடம்' இருந்து திரு. கணேசன் கற்றுக்கொள்ளவேண்டும். இப்படி எல்லாம் கோபப்படகூடாது 😅

சம்பந்தமானவரை நக்கலடிகிறதுதான்.....அதுக்காக உப்பிடியோ 😀

10 hours ago, குமாரசாமி said:

யாழ்கள உறுப்பினர்களில் ஓரிருவர் இங்கே திரிகள் திறந்து அல்லோலகல்லோலப்பட்டிருப்பர். மனோகணேசனுக்கு கடிதம் எழுதுவர்.முடிந்தால் தந்தியும் அடிப்பர்.தங்கள் பழைய புராதன முஸ்லீம் சகோரத்துவ வரலாறுகளை ரீல் ரீலாக எடுத்து விடுவர் :cool:

சம்பந்தமானவரை நக்கலடிகிறதுதான்.....அதுக்காக உப்பிடியோ 😀

பொயட் க்கு தானே இந்த ஊமைக்குத்து தாத்ஸ்...

  • தொடங்கியவர்

அதாவுல்லா அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் சுமந்திரன்

sumanthiran.jpg

அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நீரை வீசியிருந்தார்.

தோட்டத் தொழிலாளர் தொடர்பாக முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மனோ கணேசனுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன், “அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். எமது சொந்தங்களைக் கேவலமாக விளிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.

http://athavannews.com/அதாவுல்லா-அனைத்து-தமிழ்/

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

அதாவுல்லா   இப்பிடி  பேசுவார் என்று முன்பே  தெரிந்திருந்தால்....
மனோ கணேசனின் மேசையில்... பெரிய வாளியில், 
தண்ணீரை நிரப்பி வைத்திருந்திருக்கலாம். 

அதாவுல்லா சவூதி அரேபியால இருந்திருந்தா ஒட்ட வெட்டியிருப்பாங்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

தங்கள் பழைய புராதன முஸ்லீம் சகோரத்துவ வரலாறுகளை ரீல் ரீலாக எடுத்து விடுவர் :cool:

😂

2 hours ago, Rajesh said:

அதாவுல்லா சவூதி அரேபியால இருந்திருந்தா ஒட்ட வெட்டியிருப்பாங்கள்!

அதாவுல்லா எதிராக பேசியவர் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரையே அறுப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.