Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்!

October 12, 2020
56C174E3-2670-403B-BECB-53795393A393-114

எனது சிறைவாசத்திற்கு ஐந்து வருடங்கள். நல்லாட்சி தந்த பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

8911C143-B76E-4C1F-9BA7-B4E0EEF3BE4F-200
முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் மேற்கண்டவாறு தனது உள்ளக்குமுறலை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

11.10.2020ம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு ஐந்து வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம்.

அத்தோடு எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தை உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில், சிறைக்கு நயவஞ்சகமாக அனுப்பப்பட்டேன். இருந்தாலும், என் மேல் நம்பிக்கை வைத்து, அனைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து, வட கிழக்கில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய 54198 விருப்பு வாக்குகளை அளித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
https://www.meenagam.com/?p=15571

  • கருத்துக்கள உறவுகள்

201712131207570931_children-thumb-suckin

அதென்னமோ போங்கப்பா ..

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையான் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

IMG_8163-696x392.jpg
 25 Views

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்திற்கு சந்திகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டத்தரணிகள் வராத காரணத்தினால் வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

IMG_8160.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி  மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணையில் தடுத்துவைக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/ஜோசப்-பரராஜசிங்கம்-படுகொ/

அப்பாவிகளை சிறையிலடைப்பது இங்கு தொடர்கதையாகவே இருக்கிறது. பாவம் பிள்ளையான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Robinson cruso said:

அப்பாவிகளை சிறையிலடைப்பது இங்கு தொடர்கதையாகவே இருக்கிறது. பாவம் பிள்ளையான்.

உங்களுக்கு கொலைகாரரை தெரியும் போலுள்ளது.  எங்களுடன் பகிரலாம். சட்டம் ஒரு இருட்டறை என சொல்ல வருகிறீர்கள் என நினக்கிறேன்.

2 minutes ago, nunavilan said:

உங்களுக்கு கொலைகாரரை தெரியும் போலுள்ளது.  எங்களுடன் பகிரலாம். சட்டம் ஒரு இருட்டறை என சொல்ல வருகிறீர்கள் என நினக்கிறேன்.

இதெல்லாம் ஊரறிந்த ரகசியம். எனவே எல்லோருக்கும் எல்லாம் தெரியும். ஆமாம், சடடம் ஒரு இருட்டறைதான்.

இன்னுமொரு தியாகி இனிய பாரதி அவர்கள் இப்ப எங்கு (எந்த சிறையில்) இருக்கின்றார்?
 
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பிள்ளை

அது இன்னும் கை  விரல்  சூப்புவதையே மறக்கல...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இன்னுமொரு தியாகி இனிய பாரதி அவர்கள் இப்ப எங்கு (எந்த சிறையில்) இருக்கின்றார்?
 
3 hours ago, விசுகு said:

பாவம் பிள்ளை

அது இன்னும் கை  விரல்  சூப்புவதையே மறக்கல...

வந்தாறுமூலையில் எனது உறவினர்கள் இருக்கிறார்கள் 
அவர்கள் மட்டுமே எனக்கு கிழக்கில் உறவினர்கள் என்று இருப்பது 
அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து புலிகளின் ஆதரவாளர்கள் 
அவர்கள் இளைய மகன் புலிக்கு போக போகிறார் என்று பயந்து 
எ ல் டெஸ்ட் முடிய மருதங்கேணியில் கொண்டு வந்து விட்டார்கள் 
அப்போது நல்ல நண்பர்களாக பழகிவந்தோம் இங்கு அப்போது ஹிந்திய 
இராணுவத்துடன் சண்டை தொடங்கியதால் புலிகள் தலைமறைவாகி இருந்தனர் 
ஆதாலால் எல்லோருக்கும் இந்திய இராணுவம் பிடிக்கும் என்ற அச்சம் தவிர்த்து மகிழிச்சி 
இனி இவர் புலிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை ஆகவே புலிகளுடன் சேர மாட்டார் என்று 
ஆனால் ஒரு நாள் மாலை அவர் காணாமல் போயிருந்தார் மறுநாள் நன் புலிகளின் 
மறைவு இடத்துக்கு சென்று கேட்டேன் அவர்கள் ஆம் அவர் வந்ததில் இருந்து எமக்கு 
வேலை செய்துகொண்டுதான் இருந்தவர் இப்போது பயிற்சிக்காக சென்றுவிட்டார் என்று.

பின்பு 90 களில் அரசியல்துறை கரிகாலனின் மெய்ப்பாதுக்காப்பாளராக இருந்தார் 
அப்போது ஒருமுறை யாழ் வந்துஇருந்தார் இவரை புலிகளின் நாவலடி வீதியில் இருந்த 
புலிகளின் தலைமை முகாமில் சந்தித்தது இருந்தேன் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது 
பல தாக்குதல்களை தலைமைதாங்கி செய்து இருந்தார் அதனால் கருணாவால் முக்கிய தளபதியாக்க பட்டு 
எல்லோராலும் அறியப்பட்டு இருந்தார் பின்பு இவர்களின் குழு ஒன்று இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு 
இவர் அவர்களை மீட்க சென்று சண்டை பிடித்து அதில் இறந்துபோனார் 

பின்பு கருணா துரோகியாகிய பின் 2007இல் இனியபாரதி இவர்கள் வீட்டுக்கு 
மோட்டார் சைக்கிளில் வந்து இவரது அண்ணாரை வாசலில் வைத்து சுட்டார் 
அவர்தான் மொத்த குடும்பத்தையும் பார்த்து வந்தவர் மிகவும் வறுமையில் இருந்தார்கள் 
அவருக்கு இவர்களை  நன்கு தெரியும் அவர்கள் வீட்டுக்கு கருணா கூட வந்து போயிருக்கிறார் 
பல போராளிகள் வந்து சாப்பிடுவது வழமையான ஒன்று அப்படி இனியபாரதி பலமுறை வந்து 
சாப்பிட்டு போயிருக்கிறார் ... இனியபாரதி இவர்களின் நண்பர்போல பக்கத்துவீட்டு அண்ணர் ஒருவர் 
இவர்கள் மூலம் இனியபாரதியை அறிமுமாக்கி கொண்டவர் ... அவர் இனியபாரதி சுடாதே சுடாதே 
என்று ஓடிவந்து கொண்டிருக்கும்போது அவரையும் சுட்டுவிட்டு சென்றார் 

இன்றுவரை யாருக்கும் தெரியாது ஏன் வந்து சுட்டுவிட்டு போனார் என்று 
இரண்டு உயிர்களை அநியாயமாக பலியெடுத்து போனார் எனக்கு தெரிய 
இன்னமும் எத்தனை கதைகள் முன்னாள் போராளிகள் வீட்டுக்களில் மட்டுவில் 
இருக்கும் என்பது அவர்கள் சொன்னால்தான் தெரியும். 

எந்த கொலைகாரன் தன்னை ஒத்துக்கொண்டுள்ளான் , வாக்கு போட்ட மக்களை சொல்லவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

கருணாவின் பிளவின் மட்டக்களப்பு கருணா ஒபீஸ் 
சிசிலியா பாடசாலைக்கு பின்புறம் இருந்தது  அந்த கட்டிடத்துடன்  ஒட்டியிருந்த  பாடசாலை கட்டிடத்தில் தான் என்னுடைய தங்கை (சித்தியின் மகள்) உ.த படித்துக்கொண்டிருத்தவர்  , அங்கு கேட்க்கும் சத்தங்களை ஒவ்வொரு நாளும் என்னுடைய சித்தியிடம் சொல்லி அழுவார்  , இயற்கையாகவே மென்மையான இதயம் கொண்டவர் , ஆண்களும் பெண்களும் வலி தாங்காமல் உச்சஸ்தாயியில் கீறிட்டு கத்தும் அவலக்குரல்கள் தாங்காமல் இறுதியாக சிசிலியா பாடசாலை அந்த கருணா ஆபீஸ் காலியாகும்வரை எந்த வகுப்பையும் அந்த கட்டிடத்தில் அனுமதிக்கவில்லை   ,
இனிய பாரதி அடுத்த கட்டப்பஞ்சாயத்து  கேடி , பெண்கள் விவகாரத்தில்  சொல்லவேதேவையில்லை 
ஒரு ஜுனியர் ஹிட்லர் எதிரே நிற்பவரின் தகுதி தராதரம் பார்க்காது மிதி விழும் 

29 minutes ago, பிரபாதாசன் said:

எந்த கொலைகாரன் தன்னை ஒத்துக்கொண்டுள்ளான் , வாக்கு போட்ட மக்களை சொல்லவேண்டும்

ஆனால் இப்படியான கொடூரர்களையும் ,மனித குல எதிரிகளை நம்பினால் தான்  ஏதாவது தேறும் என்ற நிலைக்கு கிழக்கு  மக்களை கொண்டுவந்த ஏக பெருமை கூத்தமைப்பு தேசிக்காய்களையே சாரும் 
ஆகவே மக்களை நோவதை விடுத்து தேசிக்காய்களை நோவுங்கள்  

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அங்கு கேட்க்கும் சத்தங்களை ஒவ்வொரு நாளும் என்னுடைய சித்தியிடம் சொல்லி அழுவார்  

அக்னி,

பிள்ளையான் தலைமையின் கீழ் இவரும் இவருடைய சகாக்களும் தான் தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்களை கடத்தி படுகொலை செய்ததாக பின்னாளில் டி  பி எஸ் என்பவரே ,முழுவிபரத்துடன் கொட்டித்தீர்த்தார். பிரமினி என்ற பெண் தொண்டரை கட்பளித்து இவர் கொலைசெய்தார் என்ற விபரம் அதில் உள்ளது. எனவே நீங்கள் சொல்வது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. நீங்கள் கொல்லவில்லை.. நீங்கள் வைத்திருந்த ஆயுதம் கொன்றது. அந்த ஆயுதத்தை தந்தவர்கள் கொன்றார்கள். அந்த ஆயுதத்தை இயக்க தூண்டியவர்கள் கொன்றார்கள். அந்த ஆயுதத்தை அப்படி அங்கு இயக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள்... செயற்படுத்தியவர்கள் எல்லாமே சேர்ந்து தான் கொன்றார்கள்.

அப்படி என்றால்.. உங்களை.. உங்கள் ஆயுதத்தை அப்படி இயக்க தூண்டியவர்கள்.. திட்டமிட்டவர்கள் யார் என்பதைச் சொல்லலாமே.

சொன்னால்.. எம் பி பதவி மட்டுமல்ல.. உங்கள் உயிரும் பறிபோகலாம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

89/90ம் ஆண்டு பார் வீதியில் அமைந்துள்ள புலிகளது முகாமில் இரவு 12 மணிக்கு பிறகு அலறல் சத்தம் கேக்கும் ...ஆமி மட்டுவை கைப்பற்றி வந்தவுடன் அந்த முகாமில் குறிப்பிட்ட இரு அறைகள் [சித்திரவதைக்கு கூடம்] அருகில் இருந்த மக்களை கூப்பிட்டு காட்டினார்கள். கொடூரம் 
இனியபாரதி செய்தால் என்ன ? பிள்ளையான் செய்தால் என்ன? அடிப்படை எங்கிருந்து வந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டு அம்மான் கிழக்கு பகுதியில் உளவு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததில் தவறில்லை என்பது நிரூபணமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

89/90ம் ஆண்டு பார் வீதியில் அமைந்துள்ள புலிகளது முகாமில் இரவு 12 மணிக்கு பிறகு அலறல் சத்தம் கேக்கும் ...ஆமி மட்டுவை கைப்பற்றி வந்தவுடன் அந்த முகாமில் குறிப்பிட்ட இரு அறைகள் [சித்திரவதைக்கு கூடம்] அருகில் இருந்த மக்களை கூப்பிட்டு காட்டினார்கள். கொடூரம் 
இனியபாரதி செய்தால் என்ன ? பிள்ளையான் செய்தால் என்ன? அடிப்படை எங்கிருந்து வந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை 

சரியாக இரவு 12 மணிக்கா அல்லது 11.59 ற்கா? தெளிவாகக் கூறுங்கள். 😏

பிழைகளை ஒத்துக்கொள்ள ( அது யாராக இருந்தாலும்) நேர்மை வேண்டும். நேர்மையைவிட நெஞ்சுரம் மிக மிக  அதிகமாகத் தேவை. 👍

என்னைவிட அவன்தான் பெரிய கள்ளன் என்று கூறுவது இழிநிலையின் உச்சம். ☹️

உங்களின் கருத்திற்கு துல்பனின் Like வேறு 😏

வட மாகாணத்தை விட்டு வெளியேற பாஸ் Pass கொடுக்காதபடியால் புலிகளை எதிரியாகக் கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன். 😂

துல்பன் நீங்கள் எப்படி 😂

16 hours ago, puthalvan said:

அக்னி,

பிள்ளையான் தலைமையின் கீழ் இவரும் இவருடைய சகாக்களும் தான் தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்களை கடத்தி படுகொலை செய்ததாக பின்னாளில் டி  பி எஸ் என்பவரே ,முழுவிபரத்துடன் கொட்டித்தீர்த்தார். பிரமினி என்ற பெண் தொண்டரை கட்பளித்து இவர் கொலைசெய்தார் என்ற விபரம் அதில் உள்ளது. எனவே நீங்கள் சொல்வது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை 

பிரேமினி த.பு. கழகத்தின் கணக்காளராக இருந்தவர். எனது நண்பனின் மைத்துனர். 😢

பாலியல் வல்லுறவையும் புலிகளே கற்றுக் கொடுத்தார்கள் என்று இரதி அக்கா  கூறாதவரைக்கும் மகிழ்ச்சிதான். 😤

நந்தவனத்திலோராண்டி.. அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி..

கொண்டு வந்தான் ஒரு தோண்டி..

அதை மெத்த..

கூத்தாடி கூத்தாடிப்...

போட்டுடைத்தாண்டி.. 

😭😭😭

Edited by Kapithan

3 hours ago, Kapithan said:

பிரேமினி த.பு. கழகத்தின் கணக்காளராக இருந்தவர். எனது நண்பனின் மைத்துனர். 😢

ஐயோ அப்படியா..அதில் இறந்த கணேஷலிங்கம் எங்களுக்கு தெரிந்தவர். இவர்கள் வந்த வாகனத்துக்கு முதல் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் என்னுடன் கூடவே தொண்டர்களாக புலம்பெயர்நாடுகளில் வேலை செய்தவர்கள்.  கணேஷலிங்கம் மற்றும் பிரேமினி, தோஷினி கடத்தப்பட்டு சொட்பநேரத்தில் எனக்கு அலைபேசி எடுத்து சொன்னவர் என்னுடன் கூட்டாக புனர்வாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் ஒரு இளையோர் அதுவும் பெண், பிரேமினி, தோஷிணியோடு அங்கு சென்றபோது வேலைசெய்தவர்கள் . அவர் அலைபேசி எடுக்கும்போது நான் ஆழ்த்த உறக்கத்தில் இருந்தேன். அலைபேசி எடுத்தவரும் கலவரமாக ஆனால் மென் குரலில் தங்களுடன் வந்த வாகனத்தை கடத்திவிடார்கள் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இலங்கை புலனாய்வு அலைபேசியை ஒட்டுகேக்கக்கூடும் என்ற பயத்தில் தான் அவர்கள் இணைப்பை துண்டித்திருந்தார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

நான் தூக்கத்தில் இருந்து இன்னும் மீளாதநிலையில் இவரும்  கடத்தல்காரர் வசம் மாட்டிக்கொண்டுவிட்டாரா என்று அதிர்ந்துபோனேன். உடனடியாக பலமுறை முயற்றிசெய்து ஒருவாறு மீண்டும் தொடர்பை சிலநிமிடங்களில் எட்படுத்தி விபரங்களை அறிந்து இவர்களை  கொழும்பு அலுவலகத்துடன் இணைந்து பாதுகாப்பான இடத்தில அன்றிரவு தங்கவைத்துவிட்டு உடனடியாக இராஜதந்திர வடாரங்களுக்கு தெரியப்படுத்தினோம். பொலநறுவை/வேலிகந்த பகுதிகளில் அன்று கருணா/பிள்ளையான்/புலனாய்வு ஆதிக்க பகுதியென்பதால் இராஜதந்திர வடாரங்களும் அரச தரப்புடன் தொடர்புகொண்டார்கள். நாங்களும் பல்வேறு சர்வேதேச அமைப்புகள் ஊடாக தொடப்புகளை எட்படுத்தி அழுத்தம் கொடுத்தோம். 3 பேரை மட்டும் மீட்க முடிந்தது. அந்த நாட்களை நினைத்தால் ..😭

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

சரியாக இரவு 12 மணிக்கா அல்லது 11.59 ற்கா? தெளிவாகக் கூறுங்கள். 😏

பிழைகளை ஒத்துக்கொள்ள ( அது யாராக இருந்தாலும்) நேர்மை வேண்டும். நேர்மையைவிட நெஞ்சுரம் மிக மிக  அதிகமாகத் தேவை. 👍

என்னைவிட அவன்தான் பெரிய கள்ளன் என்று கூறுவது இழிநிலையின் உச்சம். ☹️

உங்களின் கருத்திற்கு துல்பனின் Like வேறு 😏

வட மாகாணத்தை விட்டு வெளியேற பாஸ் Pass கொடுக்காதபடியால் புலிகளை எதிரியாகக் கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன். 😂

துல்பன் நீங்கள் எப்படி 😂

பிரேமினி த.பு. கழகத்தின் கணக்காளராக இருந்தவர். எனது நண்பனின் மைத்துனர். 😢

பாலியல் வல்லுறவையும் புலிகளே கற்றுக் கொடுத்தார்கள் என்று இரதி அக்கா  கூறாதவரைக்கும் மகிழ்ச்சிதான். 😤

நந்தவனத்திலோராண்டி.. அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி..

கொண்டு வந்தான் ஒரு தோண்டி..

அதை மெத்த..

கூத்தாடி கூத்தாடிப்...

போட்டுடைத்தாண்டி.. 

😭😭😭

நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .

நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

இரதி கப்பித்தான் மாதிரி வாதிட முடியாவிடின் வாதிடாமலிருக்கலாம் அதைவிட்டுவிட்டு வால் நூல் என்றெல்லாம் கதைப்பது கருத்துப்பஞ்சத்தை காட்டுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

1) நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் .

2) உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...

3) மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...

4) இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு

5) ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .

நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

1) பிழைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராயுள்ள நீங்கள் எதற்கு மேலே கொலைகளை நியாயப்படுத்துகிறீர்கள். ஆகக் குறைந்தது பதிலளிக்காமலாவது இருந்திருக்கலாம்

2) என்னை வால் என்று நினைவூட்டியதற்கு நன்றி. இதுவரை நான் தலையோ என்று சந்தேகம் எனக்குள் இருந்து வந்தது. 

ஆனாலும் ..

எலிக்கு தலையாய் இருப்பதைவிட புலிக்கு வாலாயிருப்பது பெருமை என எண்ணுகிறேன். (நீங்கள் எப்படி 😀)

3) முரளீதரனும் அவர் ஆட்களும் செய்த படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் சிறிய பிழைகளா உங்களுக்கு ? அதுவும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள், போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் என்பதற்காக ☹️

4) என்ன.. நீங்கள் சுற்றுவது கொஞ்சம் பெரிய சட்டி. நான் சுற்றுவது கொஞ்சம் சிறிய சட்டி. அவ்வளவும்தான் வித்தியாசம். உலகத்தைக் கட்டியாண்டவர்களின் தேசத்திலிருப்பதால் உங்களுக்கு உலகம் தெரியும் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். 😀

5) அப்படியென்றால் என்ன செய்யலாம். கொட்டாபயவின் காலடியில் போய் விழலாம் என்கிறீர்களா ? எனக்கு முள்ளந்தண்டு வளைந்து கொடுக்காது அக்கா. எதுக்கும் எப்படி காலில் விழுவது என்று முரளீதரனிடம் கேட்டுச் சொல்லுங்கள். முயன்று பார்க்கிறேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உங்களின் கருத்திற்கு துல்பனின் Like வேறு

யாழ் இணைய உறுப்பிர் ஒருவருக்கு தான் விரும்பிய கருத்துக்கு லைக் போட கூட உரிமை இல்லையா ?மற்றவர்கள் மீது ஏதோச்சதிகாரம் செய்யும் சிந்தனையை எங்கிருந்து பெற்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

யாழ் இணைய உறுப்பிர் ஒருவருக்கு தான் விரும்பிய கருத்துக்கு லைக் போட கூட உரிமை இல்லையா ?மற்றவர்கள் மீது ஏதோச்சதிகாரம் செய்யும் சிந்தனையை எங்கிருந்து பெற்றீர்கள்

ஏனையா ....கற்பனைக்கு அளவு வேண்டாமா 😂

எதேச்சதிகாரம்.... 🤥

அவர் தாராளமாக Like போடலாம். அதனை மறுதலிக்க எனக்கு எந்தவித உரிமையும் இல்லைத்தான்.  ஆனால் எதற்கு Like போடுவது என்று விவஸ்தை வேண்டாமா 😏

அதிகமாக யோசிக்காதீர்கள். அப்படி யோசித்தால் என்ன எழுதுகிறோம் என்பதும் எழுதியதன் அர்த்தம் என்ன என்பதும் புரியாமல் போகும் அபாயம் இருக்கிறது. 

துல்பனே ஏன் என்று இன்னமும் கேட்கவில்லை. நீங்கள் ஏன் முந்துகிறீர்கள் 🤔

விதண்டாவாதத்திற்கு நீங்களும் Like போட்டீர்களோ 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகள், சித்திரவதைகள், மனித அவலங்களை யார் செய்தாலும், ஏற்படுத்தினாலும் அது இலங்கை அரசபடைகளாகட்டும், புலிகளாகட்டும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆகட்டும், இந்திய படைகளாகட்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளாகட்டும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது, ஒதுக்கப்படவேண்டியது. இல்லாதுவிடின் மனிதம் செத்துவிடும். 

சட்டங்களின் பிடியில் சிக்காமல் குற்றவாளிகள் தப்பக்கூடும். ஆனால் மனச்சாட்சி உள்ளவர்களை அவர்தம் ஆயுள்காலம் முழுதும் புற்றுநோயாக தாம் செய்த பாவங்கள் அரித்து அரித்து மனதை வாட்டி எடுக்கும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். வரலாறு புகட்டும் பாடம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சட்டங்களின் பிடியில் சிக்காமல் குற்றவாளிகள் தப்பக்கூடும். ஆனால் மனச்சாட்சி உள்ளவர்களை அவர்தம் ஆயுள்காலம் முழுதும் புற்றுநோயாக தாம் செய்த பாவங்கள் அரித்து அரித்து மனதை வாட்டி எடுக்கும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். வரலாறு புகட்டும் பாடம் இது.

இருக்கு நிறைய பரிகாரங்கள் இருக்கு, டக்ளஸ் அங்கிள் சிறிதர் தியேட்டரின் பின் பகுதியில் சித்திரவதைக் கூடம் வைச்சிருந்தவர் இப்ப அமைச்சரா இருக்கிறார். கருணாம்மான் அவரைச் சொல்லி வேலையில்ல லெப் கேணல் நியூட்டனை வாகனத்தில் அரை உயிருடன் கட்டி இழுத்தவர் இப்ப இலங்கையின் பணக்காரர்களில் ஒருவர். கவுரவ முன்னாள் பாஉ சுரேஸ் பல தமிழ் போராளிகள் அவர் தம் ஆதரவாளர்களின் தலைகளைக் கொய்து காட்சிக்கு வைத்தவர் இன்று விக்கி அய்யாவின் செல்லப்பிள்ளை. கவுரவ பிள்ளையான் முன்னாள் கிழக்கு முதல்வர் இந்நாள் பாஉ. அதவிட கவுரவ சுரேஸ் அவர்களின் முந்நாள் உதவியாளர் கட்டை ரவி என்பவர்(பெயர் சரியோ தெரியாது) கனடாவில் கிறிதவராகி பாவ மன்னிப்பு பெற்றாராம். இப்படிப் பலர் வினை விதைத்து திணை அறுத்திருக்கிறார்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .

நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

"நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . 

.இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்"  

தயவு செய்து அந்த முகாமை கூகிளில் டாக்  (Google Tag) பண்ணி இங்கே போடுவீர்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.