Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். ஈச்சமோட்டை மறவன்குள புனரமைப்பு பணிகள் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனின் தலைமையில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

யாழ். ஈச்சமோட்டை மறவர்குள  புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை  யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

IMG-20211208-WA0031.jpg

காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

IMG-20211208-WA0027.jpg

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20211208-WA0029.jpgIMG-20211208-WA0035.jpgIMG-20211208-WA0034.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பல குளங்களை ஒரே வேளையில் புனரமைப்பது இயற்கை சம நிலையை பாதிக்குமா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகலாம். குறிப்பாக குளங்களை இணைக்கும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் தடையின்றி கடலைச் சென்றடைவதற்கு வழிவகை செய்யப்படவேண்டும்.

யாழ் பிரதேசத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் அவற்றின் சுற்று பிரதேசங்களில் இருந்து வழிந்தோடும் அசுத்தமான மழை நீர் சென்று தேங்கும் இடமாகவே பயன்படுத்த்தப்பட்டு வந்துள்ளன. மாரிகாலத்தில் மழை நீர் இக் குளங்களில் உள் வாங்கப்பட்டு சிறிது சிறிதாக வாய்க்கால் வழியாக ஓடி பல்வேறு குளங்களை தாண்டி இறுதியில் கடலை சென்றடைவது வழக்கம்.

மழை நீருடன் சுற்றுப்புறத்தில் உள்ள பல வீடுகளின் கழிவு நீரும் இந்த குளங்களை வந்தடைவதால் ஆரியகுளம் போன்ற நீர் நிலைகளில் தேங்கும் நீர் ஒருபோதும் சுத்தமானதாக இருந்ததில்லை. மாநகரசபை குளங்களை புனரமைத்து அவற்றை சுற்றுலா மையமாக பயன்பாட்டுக்கு விடும்போது அக் குளங்களில் அசுத்தமற்ற நீர் பேணப்படுவது அவசியம்.

அத்துடன் பொழுதுபோக்கு,  காற்றுவாங்குதல், நீர்விளையாட்டு என்பவற்றுக்காக இங்கு மக்கள் கூடும்போது அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு விபத்து நேரத்தில் ஆபத்தில் இருந்து காக்கும் மிதவை, கயிறு, தோணி, அவசர அறிவிப்பு சாதனம் போன்ற தற்காப்பு உபகரணங்களை குளங்களை சுற்றி ஆங்காங்கே சேமித்து வைப்பதும் நகர சபையின் கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அழுக்காக பிளாஸ்த்திக்கு போத்தலும் கழிவுகளும் நிரம்பி இருக்கும் குளங்கள் , நீர்நிலைகள் இப்படியாவது துப்பரவாக்கப்படவேண்டும் இதில் கண்டி டான்ஸ் ஆடினாலும் ஓகே கபடி ஆடினாலும் ஓகே மணிக்கு ஒரு கைதட்டல் 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளிப் பெண்கள் நீராடுவதற்காக நீச்சல் தடாகமாக மாற்றினால் என்னும் சிறப்பாக இருக்கும்.😜 மணிக்கு குளக்கோட்டன்- II என்று பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் .

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vanangaamudi said:

மழை நீருடன் சுற்றுப்புறத்தில் உள்ள பல வீடுகளின் கழிவு நீரும் இந்த குளங்களை வந்தடைவதால் ஆரியகுளம் போன்ற நீர் நிலைகளில் தேங்கும் நீர் ஒருபோதும் சுத்தமானதாக இருந்ததில்லை. மாநகரசபை குளங்களை புனரமைத்து அவற்றை சுற்றுலா மையமாக பயன்பாட்டுக்கு விடும்போது அக் குளங்களில் அசுத்தமற்ற நீர் பேணப்படுவது அவசியம்.

அத்துடன் பொழுதுபோக்கு,  காற்றுவாங்குதல், நீர்விளையாட்டு என்பவற்றுக்காக இங்கு மக்கள் கூடும்போது அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு விபத்து நேரத்தில் ஆபத்தில் இருந்து காக்கும் மிதவை, கயிறு, தோணி, அவசர அறிவிப்பு சாதனம் போன்ற தற்காப்பு உபகரணங்களை குளங்களை சுற்றி ஆங்காங்கே சேமித்து வைப்பதும் நகர சபையின் கடமையாகும்

நிதி அனுசரணையாளருக்கும் திட்டங்களை முன்னெடுக்கும் யாழ்.மாநகர முதல்வருக்கும், அவரது குழாமினருக்கும் பாராட்டுகள்.அதிகாரங்களை எப்படிப் பயன்படுத்த முடியுமோ அப்படிப் பயன்படுத்தி நல்ல திட்டங்களைச் சாத்தியமாக்குதலே நல்ல தலைமைக்கான இலக்கணம். திரு.மணிவண்ணன் போன்ற பலர் உருவாகவேண்டும். 

வணங்காமுடியவர்கள் சுட்டிய விடயங்களும் தவிர்க்க முடியாதவை.

2 hours ago, zuma said:

சுண்டுக்குளிப் பெண்கள் நீராடுவதற்காக நீச்சல் தடாகமாக மாற்றினால் என்னும் சிறப்பாக இருக்கும்.😜 மணிக்கு குளக்கோட்டன்- II என்று பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் .

நான் இதை வழிமொழிகின்றேன் 

3 hours ago, zuma said:

சுண்டுக்குளிப் பெண்கள் நீராடுவதற்காக நீச்சல் தடாகமாக மாற்றினால் என்னும் சிறப்பாக இருக்கும்.😜 மணிக்கு குளக்கோட்டன்- II என்று பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் .

32 minutes ago, நிழலி said:

நான் இதை வழிமொழிகின்றேன் 

அந்த நீச்சல் போட்டியின் நடுவராக நிழலி  செயற்பட நான் முன் மொழிகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

நான் இதை வழிமொழிகின்றேன் 

இதைச் செய்வதானால், புல்லுக் குளத்தை வேம்படி மகளிருக்குத் தர வேண்டும்! இல்லையேல் இந்தத் திட்டத்திற்கு நான் எதிர்ப்புத் தெரிவிப்பேன்!😎

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் அழகான ஏரிகள் குளங்கள், விரிந்த அதிவேக சாலைகள்  பிரமாண்ட அங்காடிகள் போன்றவற்றை கடந்து செல்லும்போதெல்லாம், எமது தாயகமும் இப்படி வளர்ச்சி பெறவேண்டுமென்று இனம் புரியாத ஒரு ஆசை அடிக்கடி உருவாவதுண்டு, 

இனிமேல் அந்த மண்ணில் சென்று வாழ போவதில்லை என்ற ஒரு நிலை இருந்தாலும் என் பிறந்த மண் என்பது எப்போதும் மனசில் வலியாய் இருந்துகொண்டே இருக்கும்.

சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் சுயநலத்தாலும் ஓடி வந்துவிட்டோம், இன்றுவரை அந்த மண்ணோடு வாழ்ந்து தம்மால் முடிந்த அளவிற்கு அதை அழகூட்ட  பார்ப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்  உங்கள் பணி மகத்தானது, வாழ்த்துக்கள் என்று எம் வாயால் சொல்ல முடியவில்லை நன்றிகள் வேண்டுமென்றால் நிறைய சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐 இவர் கஷ்டப்பட்டு சீர் செய்து வைப்பார்.. அவயள் திருஷ்டிக்கு புத்தர் சிலையை கொண்டு வந்து வைப்பினம்.. புராண கதையை அவிழ்த்து விடுவினம் ..😢

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மண் உவர்ப்பாகி வரும் நிலை அதிகரித்துள்ள நிலையில் நன்னீர் நீர்பிடிப்புள்ள குளங்கள்.. ஏரிகள்.. குட்டைகளை புனரமைப்பதும்.. புதிய நீரேந்து நிலைகளை அமைப்பதும்.. மேலதிக நீர் சரியாக வழிந்தோடத்தக்க வடிகால்களை அமைத்துக் கொள்வதும் சிறப்பே.

குளங்கள் எப்போதும்.. ஒரு மண்ணின் வளத்தை தீர்மானிப்பனவாகின்றன.

யாழ் மாநகர முதல்வரின் இந்தப் பணிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

சின்ன வயதில்.. இந்தக் குளத்தில் எங்கள் மீந்தொட்டிக்கு ஐதரில்லா தாவிரங்கள் பொறுக்கிச் சென்றது இன்னும் பசுமையாக. இந்த நீர் நிலையின் புனரமைப்பின் போது அதன் இயற்கைச் சமநிலையை குழப்பாமல்.. ஐதரில்லா தாவரங்களை முற்றாக அழிக்காமல்.. அவற்றிற்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் பிற நீர் தாவரங்களுக்கும் வாழத்தக்க சூழலை அங்கேயே அமைத்துக் கொடுத்தால் சிறப்பு.

திட்டமிடல் படத்தில் அப்படித்தான் காட்டப்பட்டுள்ளது.. என்று நினைக்கிறேன். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, valavan said:

புலம்பெயர் தேசத்தை  போல் பல அபிவிருத்தி விடயங்களையும்,அரசியல் உரிமைகளையும்  நாம் பிறந்த மண்ணிலும் நிறைவேற்ற முடியும் என ஆதங்கப்பட்டால்......
அது இப்போது 200 வருடங்களுக்கு  பின் தள்ளப்பட்டு விட்டது என்கிறார்கள். அப்படியென்றால் சிறிலங்காவில் ஆட்சி செய்பவர்கள் அரக்கர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதாவது எழுதினால் பலருக்கு கண்ணுக்கு தெரிவதில்லை, இருந்தாலும் எப்போதும் சொல்வது தான் முதலில் கஸ்ரப்படும் ஒவ்வொரு மக்களதும் குறைகளை ஓரளவுக்காவது தீர்த்து வைக்கப்பட வேண்டும்..அதன் பின் கண்ணுக்கு ,மனதுக்கு, மங்கையர்களுக்கு என்று தடாகங்களையே கட்டி விடுங்கோ.நான் ஒண்ணும் பேச இல்லை.இது தான் என்ட விருப்பம்.👋✍️ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, யாயினி said:

நான் ஏதாவது எழுதினால் பலருக்கு கண்ணுக்கு தெரிவதில்லை, இருந்தாலும் எப்போதும் சொல்வது தான் முதலில் கஸ்ரப்படும் ஒவ்வொரு மக்களதும் குறைகளை ஓரளவுக்காவது தீர்த்து வைக்கப்பட வேண்டும்..அதன் பின் கண்ணுக்கு ,மனதுக்கு, மங்கையர்களுக்கு என்று தடாகங்களையே கட்டி விடுங்கோ.நான் ஒண்ணும் பேச இல்லை.இது தான் என்ட விருப்பம்.👋✍️ 

இல்லை பாருங்கோ....அவையள் சினிமா பாட்டு கேட்டு வளர்ந்த பிள்ளையள் கண்டியளோ....நாங்கள் தான் கண்டும் காணாமலும் கடந்து போகவேணும்...😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

யாழ் மண் உவர்ப்பாகி வரும் நிலை அதிகரித்துள்ள நிலையில் நன்னீர் நீர்பிடிப்புள்ள குளங்கள்.. ஏரிகள்.. குட்டைகளை புனரமைப்பதும்.. புதிய நீரேந்து நிலைகளை அமைப்பதும்.. மேலதிக நீர் சரியாக வழிந்தோடத்தக்க வடிகால்களை அமைத்துக் கொள்வதும் சிறப்பே.

குளங்கள் எப்போதும்.. ஒரு மண்ணின் வளத்தை தீர்மானிப்பனவாகின்றன.

யாழ் மாநகர முதல்வரின் இந்தப் பணிகள் வரவேற்கப்பட வேண்டியவை.

சின்ன வயதில்.. இந்தக் குளத்தில் எங்கள் மீந்தொட்டிக்கு ஐதரில்லா தாவிரங்கள் பொறுக்கிச் சென்றது இன்னும் பசுமையாக. இந்த நீர் நிலையின் புனரமைப்பின் போது அதன் இயற்கைச் சமநிலையை குழப்பாமல்.. ஐதரில்லா தாவரங்களை முற்றாக அழிக்காமல்.. அவற்றிற்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் பிற நீர் தாவரங்களுக்கும் வாழத்தக்க சூழலை அங்கேயே அமைத்துக் கொடுத்தால் சிறப்பு.

திட்டமிடல் படத்தில் அப்படித்தான் காட்டப்பட்டுள்ளது.. என்று நினைக்கிறேன். 

நீங்கள் கூறுவது ஏற்கத்தக்கதே.

ஆனாலும், குளங்களில் நிரம்பியுள்ள நீர் கடலுக்குள் வழிந்தோடி, இன்னும் ஓரிரு மாதங்களில், பங்குனி வைகாசிகளில் யாழ் நகரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.

கடலுடன் தொடர்புடைய வாய்க்கால்களிற்கு கதவினைப் பொருத்தி, தண்ணீர் வீணாவதைத் தடுக்க ஆவன செய்வதே தற்போதைய அதி முக்கிய  தேவை.

முதல்வர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

அந்த நீச்சல் போட்டியின் நடுவராக நிழலி  செயற்பட நான் முன் மொழிகிறேன். 

கனடாவில் இருந்து செயற்பட வாய்ப்பில்லை😋😋

4 hours ago, யாயினி said:

நான் ஏதாவது எழுதினால் பலருக்கு கண்ணுக்கு தெரிவதில்லை, இருந்தாலும் எப்போதும் சொல்வது தான் முதலில் கஸ்ரப்படும் ஒவ்வொரு மக்களதும் குறைகளை ஓரளவுக்காவது தீர்த்து வைக்கப்பட வேண்டும்..அதன் பின் கண்ணுக்கு ,மனதுக்கு, மங்கையர்களுக்கு என்று தடாகங்களையே கட்டி விடுங்கோ.நான் ஒண்ணும் பேச இல்லை.இது தான் என்ட விருப்பம்.👋✍️ 

அப்படி நினையாதீங்கோ உங்க கருத்தை அலசி ஆராய்கிறோம்😁😁

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இதைச் செய்வதானால், புல்லுக் குளத்தை வேம்படி மகளிருக்குத் தர வேண்டும்! இல்லையேல் இந்தத் திட்டத்திற்கு நான் எதிர்ப்புத் தெரிவிப்பேன்!😎

புல்லுக்குளத்துக்கு, வேம்படி மகளீர் நீராட செல்வதற்கு நடைமுறை சிக்கல்கள், பாதுகாப்பு கரணங்கள் இருப்பதினால்(ரோட்டைக்  கடக்க வேண்டும், குளத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா காவல் நிலையம் இருப்பது ). ரிம்மர் மண்டபத்துக்கு அருகில் நீச்சல் தடாகம்( Swimming Pool) அமைக்கப்படல் வேண்டும் என்றும், அதற்க்கு நிதி சேர்ப்பற்க்கு Justin தலைமை தாங்க வேண்டும் எனவும் நான் முன் மொழிகின்றேன்.😋

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள்..💐 இவர் கஷ்டப்பட்டு சீர் செய்து வைப்பார்.. அவயள் திருஷ்டிக்கு புத்தர் சிலையை கொண்டு வந்து வைப்பினம்.. புராண கதையை அவிழ்த்து விடுவினம் ..😢

கேட்பாரின்றி விட்டால் தான் அரச செலவில் புத்தர் வந்து குடியேறிவிடுவார் அதற்க்கு எமது வடக்கின் வசந்தங்களும், கிழக்கின் விடிவெள்ளிகளும் துணை போவார்கள். அதனை தூர்வார்ந்து வேலியடைத்து எமது முதிசம் என உறுதி செய்து கொள்ளவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது ஏற்கத்தக்கதே.

ஆனாலும், குளங்களில் நிரம்பியுள்ள நீர் கடலுக்குள் வழிந்தோடி, இன்னும் ஓரிரு மாதங்களில், பங்குனி வைகாசிகளில் யாழ் நகரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.

கடலுடன் தொடர்புடைய வாய்க்கால்களிற்கு கதவினைப் பொருத்தி, தண்ணீர் வீணாவதைத் தடுக்க ஆவன செய்வதே தற்போதைய அதி முக்கிய  தேவை.

முதல்வர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

🙏🏼

தண்ணீரைத் தடுக்க கதவுகள் அமைத்தாலும் வெள்ளத்தைக் கண்டதும் கதவை களவாக திறந்து போடுவினம்! பிறகு எப்பிடி தண்ணீரை சேமிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, valavan said:

புலத்தில் அழகான ஏரிகள் குளங்கள், விரிந்த அதிவேக சாலைகள்  பிரமாண்ட அங்காடிகள் போன்றவற்றை கடந்து செல்லும்போதெல்லாம், எமது தாயகமும் இப்படி வளர்ச்சி பெறவேண்டுமென்று இனம் புரியாத ஒரு ஆசை அடிக்கடி உருவாவதுண்டு, 

இனிமேல் அந்த மண்ணில் சென்று வாழ போவதில்லை என்ற ஒரு நிலை இருந்தாலும் என் பிறந்த மண் என்பது எப்போதும் மனசில் வலியாய் இருந்துகொண்டே இருக்கும்.

சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் சுயநலத்தாலும் ஓடி வந்துவிட்டோம், இன்றுவரை அந்த மண்ணோடு வாழ்ந்து தம்மால் முடிந்த அளவிற்கு அதை அழகூட்ட  பார்ப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்  உங்கள் பணி மகத்தானது, வாழ்த்துக்கள் என்று எம் வாயால் சொல்ல முடியவில்லை நன்றிகள் வேண்டுமென்றால் நிறைய சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.

இவரது கருத்தை நான் வழிமொழிகிறேன் .....எனது எண்ணமும் இதுதான்......! 

நன்றி வளவன் ......!   👍

19 hours ago, நிழலி said:

நான் இதை வழிமொழிகின்றேன் 

இவருக்கு கால்கட்டு கழன்று கொண்டு வருகின்றது.....மீண்டும் இறுக்கிக் காட்டுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

தண்ணீரைத் தடுக்க கதவுகள் அமைத்தாலும் வெள்ளத்தைக் கண்டதும் கதவை களவாக திறந்து போடுவினம்! பிறகு எப்பிடி தண்ணீரை சேமிக்கிறது?

அதுமட்டுமல்ல , ஒரு பித்தளை நட்டுக்காக(Nut) உடைக்கப்படும் கேவலமான செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. உதாரணமாக நாவற்குழி பாலத்திற்கு அருகில் செல்கின்ற வெள்ள நீர் தடுப்பணை மற்றும் கிழக்கு அரியாலையை நோக்கி செல்லும் உவர்நீர் தடுப்பணையில் உள்ள அனைத்து ஒழுக்காக்கிகளும் (Regulators) உடைக்கப்பட்டு திருடப்பட்டு உள்ளன. முக்கியத்துவம் கருதி மீண்டும் மீண்டும் புனரமைக்கபடினும் திருட்டுக்கள்  தொடர்ந்து நடைபெறுகின்றன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.