Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர்
 

பேரறிவாளன்

பட மூலாதாரம், TWITTER

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். முன்னதாக இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு 2014ம் ஆண்டு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது.

ஆனால், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கில் முக்கிய வாதங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் அவர் (பேரறிவாளன்) ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், GETTY IMAGES

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்," என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர், மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்து, வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?

இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ''விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?,'' என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, ''30 ஆண்டுகள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்னடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.'' என்றனர்.

மேலும் 'குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், "அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு மே 11 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம், NOT SPECIFIED

அப்போது, 'விடுதலை குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநர் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளார். இது குறித்து என்ன சொல்கிறீர்கள்? அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஆளுநர் தொடர்புடைய வழக்கில் நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள்?' என்பன உள்ளிட்ட கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நட்ராஜ், 'மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில் கருணை அல்லது நிவாரணம் அளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநரின் முடிவு சரியானதுதான்.' என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி கூறுகையில், "மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது.' என்றார்.

மேலும், 'இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வருகிறது. கொலை வழக்கின் கீழ் முடிவு செய்ய மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்குத்தான் முக்கியத்துவம் முன்னுரிமை.' என்று மத்திய அரசு வழக்குரைஞர் கூறினார்.

இதை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மறுத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றால், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்கிற வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது.' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
https://www.bbc.com/tamil/india-61489134

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில்… அக்கறை எடுத்து,
பேரறிவாளனை விடுதலை செய்தமை, ஒரு முன்னோடியான தீர்ப்பு.

அதே போல்… மற்றைய ஆறு பேரின் விடுதலையையும் விரைவில் எதிர் பார்க்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமகிழ்ச்சி!❤️👏

  • கருத்துக்கள உறவுகள்

மே 18  நினைவேந்தல் நாளில் விடுதலை ...
விடுதலை வேறு  செய்திகள் எதனையாவது சுமந்து வருகிறதா ...

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஆரம்பம் + முன்னுதாரணம்.......மனம் நிம்மதியாகி இருக்கின்றது.......நீதிபதிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

பெருமகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளனை குறியீடாக வைத்து, கிந்தியா தமிழரை பழிவாங்கியது, அது தொடர்கிறது.

இதை தமிழ்நாட்டில் வெளிப்படையாக சொல்வதற்கு ஒருத்தருக்கும் திராணி இல்லை.       

  • கருத்துக்கள உறவுகள்
பறை இசைத்து கொண்டாடிய பேரறிவாளன்

 

 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

தேசியகட்சிகள் என்றாலே ஒரு தினுசுதான்..

IMG-20220518-142952.jpg

வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் நாளை அறபோராட்டம்..

IMG-20220518-143808.jpg

ஐயா அழகிரி நீங்க வாயில் தான் கட்டி போராட்டம் நடத்தனுமா.? 😊

 டிஸ்கி

அடுத்து கட்சியில் சேர அழைப்பினம் .. தமிழ்நாட்டு / கிந்திய அரசியல் களேபரங்களுக்குள் சிக்காது உலக தமிழர் ஆதரவுடன் ஏதாவது ஒரு நாட்டில் அமைதியாக எஞ்சிய காலத்தை கழிப்பது சிறப்பு .👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சி.

தொடர்புபட்டோருக்கு நன்றி, நன்றி, நன்றி. 

🙏

  • கருத்துக்கள உறவுகள்

ம்கிழ்வான செய்தி. இதே போல்  ஏனையவர்களும் விடுதலை பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பேரறிவாளன்... இனி, தனது பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.
காங்கிரஸ் அல்லக்கைகள், அல்லது வேறு எவராவது...... 
அவருக்கு, தீங்கு விளைவிக்க முயலலாம்.
மனதில் பட்டதை  கூறினேன், தவறாக எடுக்காதீர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி.
இவர் அப்பாவி அனியாயமாக தன் இளமைகால‌த்தை சிறையில் கழித்தவர். 
புலிகளின் திட்டத்தில் இவர் அனியாயமாக மாட்டுப்படவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசம். இதே போல் ஏனையவர்களும் விடுதலை பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது - பேரறிவாளன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

90களில் ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், இதர தமிழ் சஞ்சிகைகளில் எமக்கு அறிமுகமாகிய பேரறிவாளனின் வாழ்க்கையில் இவ்வளவு நீண்ட காலத்தின் பின் ஒளி தோன்றுவது தர்மத்தையும், அன்பையும் போதிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நீதி நிர்வாகம் இன்னும் முழுமையாக செத்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை?

  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

உச்சநீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய நகர்வுகளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி சிபிஐயால் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

கடந்த 1998ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மேல் முறையீட்டில், கடந்த 1999ம் ஆண்டு சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

2000 ஏப்ரல் 26 தேதி நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின் கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, அமைச்சரவை முடிவின்படி ஏழு பேரையும் விடுதலை செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு 2014ம் ஆண்டு அறிவித்தது,

இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், கடந்த 31 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பேரறிவாளன் பிணையில் விடுதலையானார்.

வழக்கில் முக்கிய வாதங்கள்

தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் அவர் (பேரறிவாளன்) ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்," என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர், மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்து, வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

சட்டத்திற்கு மேல் யாருமில்லை

இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ''விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?,'' என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, ''30 வருடங்கள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்நடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால்,நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.'' என்றனர்.

மேலும் 'குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், "அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை மீண்டும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த 11ம் தேதி இறுதி விசாரணை

இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு கடந்த 11ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது.

அப்போது, 'விடுதலை குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநர் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளார். இது குறித்து என்ன சொல்கிறீர்கள்? அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஆளுநர் தொடர்புடைய வழக்கில் நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள் ?' என்பன உள்ளிட்ட கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நட்ராஜ், 'மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில் கருணை அல்லது நிவாரணம் அளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநரின் முடிவு சரியானதுதான்.' என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி கூறுகையில், "மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது.' என்றார்.

மேலும், 'இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வருகிறது. கொலை வழக்கின் கீழ் முடிவு செய்ய மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்குத்தான் முக்கியத்துவம் முன்னுரிமை.' என்று மத்திய அரசு வழக்குரைஞர் கூறினார்.

இதை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மறுத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றால், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்கிற வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது.' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பின் விபரம்

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு இன்று (மே 18ம் தேதி) தீர்ப்பு அளித்துள்ளது. இதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 142வது ஷரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் விடுதலை செய்ய வேண்டியதற்கான ஆணித்தரமான வாதங்களை தொடர்ந்து முன் வைத்தோம். ஆகையால், பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்கிற நம்பிக்கை இருந்ததாக பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர் சே.பிரபு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வாதம் ஏற்கப்படவில்லை

 

வழக்குரைஞர் சே.பிரபு

 

படக்குறிப்பு,

வழக்குரைஞர் சே.பிரபு

இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் சே.பிரபு கூறுகையில், " இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் 142வது ஷரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்காமல், கிடப்பில் போட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது, இரண்டரை ஆண்டுகள் காலதாமப்படுத்தியுள்ளது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரித்த வழக்கில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்கிற மத்திய அரசின் வாதத்தையும் ஏற்கவில்லை.

142வது ஷரத்து சொல்வது என்ன?

இது மட்டுமின்றி 31 ஆண்டுகள் சிறைவாசம், சிறையில் அவருடைய நன்னடத்தை, பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றையும் கவனத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 142ன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே காலதாமதப்படுத்திய ஆளுநருக்கும் இதை மீண்டும் அனுப்புவதை விட உச்சநீதிமன்றமே இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

நீதிமன்றம், அரசியல் உள்ளிட்ட எந்த வகையிலும் மனுதாரருக்கு நீதிபரிபாலனம் தடைபடக் கூடாது. ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் நம்பியதால், இந்த பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதாக இந்த பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்கும். இதற்கு முன்னுதாரணங்களும் இருக்கின்றன.'' என்றார்.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய அம்சங்களையும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, 'மாநில அமைச்சரவையின் முடிவை ஆளுநர் நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. முடிவு எடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிருக்க தேவையில்லை. இதனால், தேவையற்ற கால தாமதம் செய்துள்ளார்.

விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.' என்றார்.

மற்றவர்களின் விடுதலை எப்போது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 6 பேரின் நிலை குறித்து கேட்டதற்கு,

'மற்ற 6 பேரின் விடுதலையும் இந்த வழக்கின் தீர்ப்பிலேயே உள்ளது. விடுதலை குறித்து ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆகையால், அமைச்சரவை முடிவு சரி என்பதும், அதற்கு இப்போதும் அதிகாரம் உள்ளது என்றும் உறுதியாகியுள்ளது. ஆகையால், தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.' என்கிறார் வழக்குரைஞர் பிரபு.

https://www.bbc.com/tamil/india-61492626

பேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள்

பட மூலாதாரம்,TWITTER

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்ததன் மூலம் தம் தாய் அற்புதம்மாள் துணையோடு அவர் நடத்திய 31 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. 'எங்கள் பக்கம் இருந்த நியாயம்தான் எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது' என்கிறார் பேரறிவாளன். இந்த வழக்கின் பல்வேறு நிலைகளில் பேரறிவாளன் தரப்பின் நியாயத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நீதித்துறையும் காவல்துறையும் துணை நின்றதுதான் ஆச்சரியம்.

ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 91 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இதற்கடுத்த மூன்று நாள்களில் அதாவது ஜூன் 14 ஆம் தேதி நளினியும் அவரது கணவர் முருகன் என்கிற ஸ்ரீகரனும் செய்யப்பட்டனர். 'விசாரித்துவிட்டு காலையில் அனுப்பிவிடுகிறோம்' என காவல்துறை கூறியதால் அதனை நம்பி பேரறிவாளனை அனுப்பிவைத்த அற்புதம் அம்மாளுக்கு அடுத்துவந்த ஆண்டுகள் மிகக் கடுமையாகவே அமைந்தன. 'தனது மகன் நிரபராதி' என்பதை எடுத்துக் கூறுவதற்கான அனைத்து மேடைகளையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேல் மகனின் விடுதலை தொடர்பான சட்டப் போராட்டத்திலேயே நாள்களைக் கடத்தி வந்தார்.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கைதான 26 பேருக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 1999 ஆம் ஆண்டு மேல்முறையீடு செயயப்பட்டபோது சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதர 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

ராஜிவ் காந்தி

பட மூலாதாரம்,KEYSTONE/GETTY IMAGES

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டணையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த வழக்கில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசு, நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்தது. அதன்படி, நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மூவரின் தூக்கு தண்டைனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதேநேரம், தன்னை விடுவிக்கக் கோரி பல்வேறு காலகட்டங்களில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முறையிட்டார். அதற்கு உறுதுணையாக மூன்று சம்பவங்கள் அமைந்தன. அதைப் பற்றிப் பார்ப்போம்.

சம்பவம் :1

சிறைக்கு வந்த கடிதம்

ராஜீவை கொன்ற மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாகக் கூறி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு தமிழ்நாடு இளைஞர்கள் பலரும் உணர்வுரீதியாக தங்களது ஆதரவைக் காட்டி வந்தனர். அந்த வகையில் இலங்கையில் இருந்து வந்த சிவராசன் என்பவரோடு பேரறிவாளனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால், 'தான் வாங்கித் தந்த பேட்டரி எதற்காகப் பயன்படப் போகிறது என்ற உண்மையை பேரறிவாளன் அறிந்திருக்கவில்லை' என்கிறார்கள் அவரது வழக்குரைஞர்கள்.

இந்த வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரிகளும், ராஜீவ்காந்தியை கொல்வதற்காகத்தான் பேட்டரிகள் வாங்கப்பட்டதாகப் பதிவு செய்தனர். இதன் காரணமாகவே பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. இந்நிலையில், எட்டு வருடங்களுக்கு முன்னால் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தை எழுதியவர் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்த முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் ஐ.பி.எஸ். அந்தக் கடிதத்தில், உங்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் கூறியிருந்தார்.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

'எனக்கு வந்த கடிதத்துக்கு நன்றிக் கடிதம் எழுதுவதற்காக அமர்ந்தபோதுதான் இந்தக் கையொப்பம் பழக்கமானதாக இருக்கிறதே என யோசித்து உடனே எனது வழக்குரைஞர்களை அனுப்பினேன்' என இந்தியா டுடே ஏட்டுக்கு அளித்த பேட்டியில் பேரறிவாளன் பதிவு செய்துள்ளார். பேரறிவாளனுக்குக் கிடைத்த தண்டனையால் மிகவும் மன உறுத்தலில் இருந்த காரணத்தாலேயே சட்ட உதவிகளை செய்ய முன்வந்ததாக தியாகராஜன் குறிப்பிடுகிறார்.

சம்பவம்: 2

திசையை மாற்றிய வாக்குமூலம்

இதையே வீடியோ பதிவிலும் தெரிவித்த தியாகராஜன் ஐ.பி.எஸ், ' ஒன்பது வோல்ட் பேட்டரியை தான் வாங்கித் தந்ததாகப் பேரறிவாளன் தெரிவித்தார். ஆனால், அது எதற்காகப் பயன்படப் போகிறது என தனக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். எதற்காகப் பயன்படப் போகிறது எனத் தெரியாது என அவர் கூறிய பகுதியை மட்டும் நீக்கிவிட்டேன். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் இந்த வழக்கின் போக்கே மாறியிருக்கும்' என்றார்.

'' சிறையில் பேரறிவாளன் இருந்ததற்கு முக்கியக் காரணமே அந்த வாக்குமூலம்தான். அதனை தியாகராஜன் தவறாகப் பதிவு செய்ததால் சிறையில் பேரறிவாளன் இருந்தார். இதனை பிரமாணப் பத்திரமாகவே உச்ச நீதிமன்றத்தில் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதிலும், ' ராஜீவ்காந்தி கொல்லப்படப்போவது பற்றி பேரறிவாளனுக்குத் தெரியாது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது இந்த ஏழு பேர் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் கே.டி.தாமஸ், ஓய்வுபெற்ற பிறகு இந்தத் தீர்ப்பை விமர்சித்துப் பேசினார். இந்தத் தீர்ப்பை வழங்கும்போது தங்களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 'இது பிழையான தீர்ப்பு என்பதால் அதனைச் சரிசெய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு' எனவும் கே.டி.தாமஸ் சுட்டிக் காட்டினார். இதையெல்லாம் அப்போதைய ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தோம்'' என்கிறார் பேரறிவாளனின் வழக்குரைஞர் சிவக்குமார்.

அடுத்ததாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாகப் பேட்டி கொடுத்த ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனும், பல்வேறு சந்தேகங்களை தெரிவித்திருந்தார். குறிப்பாக, 'ராஜீவ்காந்தியை கொல்லப் பயன்படுத்திய பெல்ட் பாமை தயாரித்தது யார் எனத் தெரியவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாகத்தான் பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதேநேரம், தியாகராஜனின் கருத்துக்கு எதிராகவும் ரகோத்தமன் பேசியிருந்தார்.

கலங்கவைத்த மரணம்

இந்தச் சூழலில், பேரறிவாளனைக் கலங்கவைத்த சம்பவம் ஒன்றும் நடந்தது. அது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடி என்பவரின் மரணம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தூக்கிலிடுவதற்கான நேரமும் குறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்த செங்கொடி, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

'என்னுடைய உடல் மூன்று தமிழர்களின் உயிர்காக்கப் பயன்படும் என்பதால் செல்கிறேன்' என அவர் எழுதியிருந்த கடிதமும் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செங்கொடியின் மரணத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு, மூவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது. செங்கொடியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தனது ஜோலார்பேட்டை இல்லத்துக்கு அவரது பெயரை வைத்துள்ள பேரறிவாளன், செங்கொடிக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தவும் தவறுவதில்லை.

சம்பவம்: 3

எரவாடா சிறைக்கு ஆர்.டி.ஐ

இதன் தொடர்ச்சியாக, பேரறிவாளனுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய ஒன்றாக நடிகர் சஞ்சய் தத்தின் வழக்கு அமைந்தது. மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள எரவாடா சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டிருந்தார். அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த போதும், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு அவரை விடுதலை செய்தது. அதாவது, முன்கூட்டியே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

'எந்த விதியைப் பயன்படுத்தி சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்?' என்பதை அறியும் வகையில் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறை நிர்வாகத்துக்கு அவர் விண்ணப்பித்தார். 'இதற்குப் பதில் அளிக்க முடியாது' என சிறை நிர்வாகம் தெரிவித்தால் மாநில தகவல் ஆணையத்தின் மீதும் குற்றம்சுமத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 'சி.பி.ஐ அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்கூட்டியே சஞ்சய் தத் விடுதலை செய்யபட்டது தொடர்பான தகவல் கிடைத்தால் தனது சட்டரீதியான போராட்டத்துக்கு அது பயன்படும்' எனவும் பேரறிவாளன் நினைத்தார்.

எது எப்படியிருப்பினும், 31 ஆண்டுகாலமாக நடந்து வந்த சட்டப் போராட்டத்தின் முடிவில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அவரது விடுதலைக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தனது விடுதலை தொடர்பாக ஜோலார்பேட்டையில் பேட்டியளித்த பேரறிவாளன், 'எனது குடும்ப உறவுகளின் பாசம்தான் என்னை இந்தளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. செங்கொடியின் தியாகம், ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம், நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் ஆகியோரால்தான் நான் இங்கு நிற்கிறேன்' எனக் குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு,

பேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்

https://www.bbc.com/tamil/india-61494464

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலைக்கு பின் வீட்டில் கொண்டாட்டம்: "இனிதான் கொஞ்சம் காற்றை நான் சுவாசிக்க வேண்டும்"

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பேரறிவாளன் - அற்புதம் அம்மாள்

பட மூலாதாரம்,TWITTER

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டில் நெகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சூழ்ந்து கொண்டது. பறையடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். குடும்பத்தினர் இனிப்பை பறிமாறி மகிழ்ச்சியில் கலந்தனர்.

பேரறிவாளன் விடுதலைக்காக ஓயாத போராட்டம் நடத்திய அவரது தாய் அற்புதம் அம்மாள், தந்தை குயில்தாசன் உள்ளிட்ட குடும்பத்தினர் இந்த தீர்ப்பால் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தமது தாய் குறித்து பேசிய பேரறிவாளன் அவர், மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என்று தெரிவித்தார்.

ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி 1917ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சிக்கு முன்பாக அந்நாட்டில் தொழிலாளர்கள் வாழ்க்கை எவ்வளவு துயரம் நிறைந்ததாக இருந்தது என்பதையும், அவர்கள் மத்தியில் போராட்டம் எப்படி வேர்கொண்டது என்பதையும் விவரிக்கும் விதமாக எழுதிய நாவல் 'தாய்'.

அந்த நாவலின் முக்கியப் பாத்திரமான பாவெல் விலாசவ் ஒரு தொழிலாளி. தொழிலாளர் போராட்டத்தை அவன் முன்னெடுத்தபோது அவனது தாய் பெலகேயா நீலவ்னா அவனுக்கு எப்படி உதவியாக அயராது வேலை செய்தார் என்பதை மையமாக வைத்து அந்த நாவல் எழுதப்பட்டது. 'மார்க்சிம் கார்க்கியின் தாய்' என்று குறிப்பிட்ட பேரறிவாளன் தம் தாய் அற்புதம் அம்மாளை பெலகேயா பாத்திரத்தோடு ஒப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு வெளியான நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். பேரறிவாளனின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

"மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி"

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தந்தை, "மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார். பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எல்லாம் அம்மாவுக்குத்தான் (பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்) தெரியும்" என பதிலளித்தார்.

பின்னர், பேரறிவாளனும் அவருடைய தாயார் அற்புதம் அம்மாளும் வீட்டிலிருந்து வெளியில் வந்து ஊடகங்களை சந்தித்தனர். முன்னதாக, தன் விடுதலையை வலியுறுத்தி தற்கொலை செய்த செங்கொடி, நீதிபதி கிருஷ்ணய்யர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேரறிவாளன் தன் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் தந்தை குயில்தாசனுக்கு இனிப்புகளை வழங்கினார்.

"நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை"

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம் அம்மாள், "என்ன சொல்றது, என்ன பேசுறது என்கிற தடுமாற்றத்தால் கடந்த சில தினங்களாக ஊடகங்களை சந்திக்க முடியவில்லை. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 32 ஆண்டுகால போராட்டம் இது. பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார்.

 

அற்புதம் அம்மாள்

பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP/GETTY IMAGE

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. என் மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த முகம் தெரியாத நபர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி. நன்றி சொல்வதை தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை" என்றார்.

"மக்சிம் கார்க்கியின் 'தாய்' போன்றவர் என் அம்மா"

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், "'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்" என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும், நல்லவர்கள் வீழ்த்தப்படுவதையும் இந்த உலகம் நினைத்து பார்க்கும் என்பது இந்த குறளின் பொருள். 'செவ்வியான் கேடு' தான் என் சிறை வாழ்க்கை.

தமிழ்நாடு மக்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். என் விடுதலையின் மூலக்காரணம் என் அம்மா. என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம் தான் இதற்கு காரணம்.

ஆரம்ப காலங்களில் நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் அம்மா சந்தித்துள்ளார். நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடியுள்ளார். இதற்கு காரணம் எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம். அதுதான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.

மக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். சிறுவயதிலும் சிறைபட்ட போதும், தூக்கு தண்டனை வழங்கியபோதும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது ஒவ்வொரு உணர்வை தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனுடன் என் அம்மாவை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். இதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஏனெனில், எங்களுக்குள்ளான இயல்பான உணர்வு போய்விடக் கூடாது என நினைத்தேன். இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

 

அற்புதம் அம்மாள் - குயில்தாசன்

பட மூலாதாரம்,@ARPUTHAMAMMAL

அம்மா மட்டுமல்லாமல், அப்பா, என் இரு சகோதரிகள், அவர்களுடைய கணவர்களும் காட்டிய அன்பும், பாசமும் தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இவ்வழக்கில் வீழ்ச்சியை சந்திக்கும் போதெல்லாம் நான் என் அம்மாவை காண்பதற்கு அஞ்சுவேன்.

அம்மாவும், என் தந்தையும் உயிருடன் இருக்கும்போதே நான் விடுதலை செய்யப்பட வேண்டும், நியாயம் வெல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லோரும் அவரவர்கள் சக்திக்குமீறி இதற்காக உழைத்துள்ளனர். நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி செலுத்த வேண்டும்.

"செங்கொடியின் தியாகம் அளப்பரியது"

இந்த வழக்கில் தலைவர்கள், மக்களின் ஆதரவை உருவாக்கியது செங்கொடியின் தியாகம்.

என் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டேன் என 2013-இல் வாக்குமூலமாக அளித்தவர் சிபிஐ அதிகாரி தியாகராஜன். இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் ஆகியோரின் குரல்களும் வலுப்படுத்தின. மூத்த நீதிபதியாக இருந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தவர் கிருஷ்ணய்யர். அதுவும் என் விடுதலைக்குக் காரணம். எனக்காக அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் மண்டியிட்டு கேட்டுக்கொள்வதாக கூறியிருந்தார்.

 

பேரறிவாளன் குடும்பம்

பட மூலாதாரம்,@ARPUTHAMAMMAL

நான் நினைத்துக்கூட பார்க்க முடியாத மூத்த வழக்கறிஞர்கள் இதற்காக போராடினர்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளாக எவ்வித கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் எனக்காக வாதாடினார்.

அதுபோலவே தமிழ்நாடு அரசு தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதியை வைத்து வாதாடினார்கள்.

"இனிதான் காற்றை சுவாசிக்க வேண்டும்"

ஊடகங்கள் இல்லையென்றால் இந்த உண்மை வெளிவந்திருக்காது. காவல்துறையை சேர்ந்தவர்களும் என் மீது அன்பு பாராட்டினார்கள்.

31 ஆண்டுகளாக இந்த சட்டப் போராட்டம் தான் மனதில் இருந்தது. இனிதான் நான் காற்றை சுவாசிக்க வேண்டும், கொஞ்சம் மூச்சுவிட வேண்டும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.

எதிர்காலம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, குடும்பத்தினரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.

மரண தண்டனை வேண்டாம் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன், அதனை கருணை அடிப்படையில் சொல்லவில்லை, நீதிபதிகளே கூறியுள்ளனர்.

தீர்ப்பை நான் இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு தீர்ப்பு குறித்து கருத்து சொல்கிறேன். 31 ஆண்டுகால அனுபவமும் ஒரு பாடம் தான்" என தெரிவித்தார்.

விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-61490006

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இன்று தமிழ் இனஅழிப்பு நாளில் பேரறிவாளன் விடுதலையாகியது மிகவும் சந்தோசமாக உள்ளது.

அவரது விடுதலைக்காக பாடுபட்ட குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலை: ஒரு நீண்ட போராட்டத்தின் கதை

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பேரறிவாளன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கு பேட்டரி வாங்கித்தந்ததாகக் கூறப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் (முன்பு வேலூர் மாவட்டம்) ஜோலார்பேட்டையில் 1971 ஜூலை 30ஆம் தேதி அற்புதம் அம்மாளுக்கும் குயில்தாசனுக்கும் (ஞானசேகரன்) பிறந்தார் பேரறிவாளன்.

பள்ளிக்கூடத்தில் பேரறிவாளன் சிறப்பாகவே படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளிக்கூடத்திலேயே இரண்டாவது அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவராக இருந்தார் பேரறிவாளன். பத்தாம் வகுப்பை முடித்த பிறகு, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் படிப்பில் பட்டயப் படிப்பில் (DECE) சேர்ந்த பேரறிவாளன், அதனை முடித்தார். இயல்பிலேயே பெரியாரிய சார்பை பெற்றிருந்த அவர், பட்டயப் படிப்பை முடித்த பிறகு, சென்னை பெரியார் திடலில் உள்ள விடுதலை நாளிதழ் அலுவலகத்தின் கணினிப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்தான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரியால் 1991 மே 21ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு கொலைசெய்யப்பட்டார்.

இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்தபோது, 1991 ஜூன் 11ஆம் தேதி இரவு பத்தரை மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். ராஜீவ்காந்தி கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை இயக்குவதற்கான 9 வால்ட் திறமுள்ள இரண்டு கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கித் தந்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

அந்தத் தருணத்தில் பேரறிவாளனுக்கு வயது 19. கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 'மல்லிகை' என்ற கட்டடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மல்லிகையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன், அங்கு கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக தனது "தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்" நூலில் குறிப்பிடுகிறார். இங்கு நடந்த சித்ரவதை தாங்காமலேயே, விசாரணை அதிகாரிகள் அளித்த காகிதங்களில் தான் கையெழுத்திட்டதாகவும் கூறுகிறார் பேரறிவாளன்.

பல ஆண்டுகள் நடந்த விசாரணையின் முடிவில், 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டிருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தண்டிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அதில், 1999 மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.

 

பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள்

பட மூலாதாரம்,TWITTER

 

படக்குறிப்பு,

பேரறிவாளன் மற்றும் அவரின் தாய் அற்புதம்மாள்

இது பேரறிவாளனுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால், பலரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதே ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தூக்குக் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

அப்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியது.

2000வது ஆண்டு ஏப்ரலில் இந்த விவகாரம் குறித்து மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்கள் மீது எந்த முடிவையும் எடுக்கவில்லை.

ஆனால், குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் வந்த பிறகு, இந்த கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. முடிவில், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார்.

இருந்தபோதும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக கூறியது.

இதற்கு அடுத்த நாளே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள அனைவரும் விடுவிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

ஆனால், தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெற்ற மத்திய அரசு, சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்தது. ஆனால், 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் ஏதும் தெரிவிக்காததால், இவர்கள் விடுவிக்கப்படவில்லை.

2021ல் தி.மு.க. அரசு பதவியேற்றதும் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதற்கிடையில், தன்னுடைய விடுதலை தாமதமாவதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பேரறிவாளன். அந்த வழக்கில்தான் தற்போது அவரை விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்த காலகட்டத்தில் கணினியில் ஆறு மாதப் படிப்பு, ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு, இரு சக்கர ஊர்தி, வானொலி - தொலைக்காட்சி தொழில்நுட்பம், பிசிஏ போன்ற படிப்புகளை முடித்திருக்கிறார் பேரறிவாளன். சிறையில் இருந்த காலகட்டத்தில், நன்னடத்தையோடு நடந்துகொள்ளவும் செய்தார்.

பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்ற சி.பி.ஐயின் முன்னாள் அதிகாரி தியாகராஜன், ஓய்வுபெற்ற பின்னர் ஒரு ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில், அவரது வாக்கு மூலம் தவறாகப் பதிவுசெய்யப்பட்டது என்று கூறினார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுவிக்க தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், சட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாகப் போராடினார் பேரறிவாளன். இந்தப் போராட்டத்தின் பெரும்பகுதி, அவருடைய தாயார் அற்புதம்மாளால் நடத்தப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-61494459

  • கருத்துக்கள உறவுகள்

 பேரறிவாளனுடைய தாயார் மிகவும் மனத் தைரியத்தோடும்   துணிச்சலோடும் விடாமுயற்சியோடும்  பாடுபடடார். ஒரு தாயுள்ளம் அல்லவா  மற்றும் இவரின் விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறுவதோடு   ஏனைய ஆறு பேருக்கும்  விடுதலை கிடைக்க வேண்டும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.