Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையம் - 25 ஆவது அகவை - வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

 

 animiertes-geburtstag-bild-0213.gif

இன்று 25´வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழ். இணையத்துக்கு
மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழிய பல்லாண்டு. animiertes-geburtstag-bild-0218.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Happy Birthday GIFs | Tenor

அன்பான யாழ் இணையமே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாய் தமிழன்னைபோல் காலம் கடந்தும் வாழி ......!  💐

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு யாழ் இணைய நிர்வாகத்தினரினதும், உறுப்பினர்களினதும் நன்றிகள் என்றென்றும் இருக்கும்."

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்


 "நாமார்க்கும் குடியல்லோம்"

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துகள்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.களத்தின் 16´வது ஆண்டு நிறைவின் போது.. 
யாழ்.கள உறவுகளான...  
@வல்வை சகாறா கனடா, @தமிழ்சூரியன் (சேகர்) ஒல்லாந்து, @Inuvaijur Mayuran சுவிற்சலாந்து, நாதன் ஒல்லாந்து ஆகியோரின்  கூட்டு  முயற்சியின் பயனாக உருவான பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கடந்த 18 வருடங்களாக யாழுடன் நானும் பயணித்ததை நினைக்க சந்தோசமாகவும் பிரமிப்பாகவும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்+

யாழுக்கு வணக்கமுங்கோ

Yarl.JPG

-wiki

 

 

யாழ் கருத்துக்கதளத்திடம் உள்ள காணொளிகளைத் தந்தால் அவற்றை வெளியிட்டு அதிலுள்ள தகவல்களை இளைய தலைமுறைகளை அறியச்செய்யலாம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்து ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.
 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

 அகவை  இருபத்தைந்து காணும் என் இனிய ஆலமரமாம் யாழ்களமே  வாழ்க நீடூழி . எத்தனையோ தடங்கல்கள் சோதனைகள் பிரச்சினைகள் வந்த போதும்  கட்டிக்க காத்த நிர்வாகிக்கும்  மட்டுறுத்தினருக்கும்  சக யாழ் உறவுகளுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் முதலில் கண்ட தமிழ் உரையாடும்  பொழுது போக்குத் தளம். எததனையோ  பறவைகளாக  வந்தவர்களும் இடையில்பறந்தவர்களும் கருத்து மோதலும்  சண்டை சமா தானங்களும் கண்ட களம்.  இன்னும் காலூன்றி நிற்கும் உறவுகளுக்கும்  வாழ்த்துக்கள். புதிய உறவுகள் வருவது தற்போது குறைவு. வந்தாலும் தரித்து நிற்பதில்லை .சிலரின் வேடிக்கைகளும்  சிரிப்புக் கருத்துக்களும்  உயிரோடடமாய் வைத்திருக்கின்றன. ஆனாலும் சில அலடடல்களுக்கும் குறைவில்லை. எந்த புயலடித்தாலும் சந்ததி சந்தியாக யாழ் களம் வாழ வேண்டும். நானும் பதினைந்து வருடங்களாக இணைந்து இருப்பதில் பெருமை படுகிறேன்  . வாழ்க தமிழ். வாழ்க யாழிணையம்  . 

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ்.களத்தின் 16´வது ஆண்டு நிறைவின் போது.. 
யாழ்.கள உறவுகளான...  
@வல்வை சகாறா கனடா, @தமிழ்சூரியன் (சேகர்) ஒல்லாந்து, @Inuvaijur Mayuran சுவிற்சலாந்து, நாதன் ஒல்லாந்து ஆகியோரின்  கூட்டு  முயற்சியின் பயனாக உருவான பாடல்.

நல்ல பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

30-C09491-BDE2-4-CD4-8-B78-9-C28-EF58-D4

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். யாழை நிர்வாகிக்கும் நிர்வாகிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்தின் இருபத்தைந்தாவது அகவை தினம் யாழை தினமும் ஆராதிக்கும் உறவுகளுக்கும் யாழுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழகளத்திற்கு மகிழ்ச்சிகரமான 25 ஆவது ஆண்டுகள் நிறைவு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


நானும் இந்த இணையத்துடன் சேர்ந்து பயணித்தவன் என்ற வகையில் பெருமிதம் அடைகின்றேன். பல பற்பல சிரமங்களின் மத்தியிலும் இந்த களத்தை நடத்தி வந்த மோகனுக்கு பல்லாயிரம் கோடி நன்றிகள். யாருமே சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ளீர்கள். அதாவது  இன்றைய இணைய உலகில் தமிழ் படிக்க,எழுத என ஒரு மேடையை அமைத்து கொடுத்த ஆசான் நீங்கள் மட்டுமே.அதற்கு என்னைப்போன்றோர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அதிலும் போர்க்காலங்கள் முதல் அனைத்து கருத்துக்களையும் உள்ளவாங்கி நீதி நேர்மை  என நடு நிலமை காத்த பெரியவான் நீங்கள் என நான் நினைக்கின்றேன். நான் உங்களை மட்டும் வாழ்த்தி பாராட்டுவதற்கான முக்கிய காரணம் 25 வருடம் உடல்,உளரீதியாகவும் நிதி ரீதியாகவும் சுமைதாங்கி போல் இருந்துள்ளீர்கள்.

நன்றி 🙏🏼

இன்றைய நிர்வாகத்தின் கவனத்திற்கு!

யாழ்களம் ஆரம்பித்த காலம் தொடக்கம் பல்வேறு சர்ச்சைகளையும்,வேண்டத்தகாத விவாதங்களையும் தாண்டியே வெள்ளி விழா கொண்டாடுகின்றது. அதிலும் ஈழ போர்க்காலங்களில் விடுதலைக்கு எதிரான கருத்துக்களும் மாவீரர்களுக்கு எதிரான கருத்துக்களும் கொச்சைப்படுத்திய கருத்துக்களும் எண்ணில் அடங்காதவை. அவை அனைத்தையும் எதிர்த்து கருத்து போர் நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதனால் பல உறவுகளின் தன்னிச்சையான விலகலும் கட்டுப்படுத்தல் மூலம் விலகியதும் சம்பவங்களாகவே இன்றும் இருக்கின்றது.விலகியவர்கள் கூட  ஒரு துளியேனும் யாழ்களத்தை விமர்ச்சித்தது கிடையாது.அவர்கள் யாழ்களம் மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் மெச்ச வைக்கின்றது.

வெள்ளி விழா காணும் யாழ்களத்தை பற்றி சொல்ல பல்லாயிரம் விடயங்கள் இருந்தும் யாழ்கள நிர்வாகத்தின் வெள்ளிவிழா அறிக்கையில் உக்ரேன் விவாதத்தை முன்னிலைப்படுத்தி "ஓரிருவர்" என விளித்து கூறி நம்பகத்தன்மையற்ற தகவல்களை பரப்புவதாகவும் அதை நீங்கள் முறியடித்தது போல் வெற்றிவாகை சூடுவதைப்போலவும் அறிக்கை விடுத்துள்ளீர்கள். ஆனால் இந்த உக்ரேன் செய்தியில் வரும் விவாதங்களுக்கு யார் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இன்றைய நிர்வாகம் கவனிக்க தவறியதையிட்டு மிக மனவருத்தமடைகின்றேன். இருப்பினும் 25 வருட யாழ்கள வரலாற்றில்  ஈழப்போர் கருத்துக்களில் ஆறா வடுக்கள் இருக்கும் போது உக்ரேன் வடுக்கள் உயரமாக தெரிவதன் காரணம் யாமறியேன் பராபரமே.

முதற்கண் இத்திரியிலிருந்து ஓய்வெடுக்கின்றேன்.🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்

advertisement_alt

இணையவலை உலகில் தமிழில் உரையாடல் வெளிக்கான கருத்தாடல்களைச் செய்வதற்கான களமாகவும், கருத்துமோதல்களையும் தெளிவுகளையும் ஏற்படுத்தும் களமாகவும், சிந்திக்க, சிரிக்க, படிக்க, எழுத, படைக்க எனப் பல்வகைமைகளிலும் ஒட்டி உறவாடிச் செல்லும் உறவாகப் பயணிக்கும் உனக்கு அகவை 25.

                 உறவுகள் வருவதும் போவதுமானபோதும் நீ மட்டும் நிமிர்வோடும் தெளிவோடும் தமிழுக்கு ஆற்றிவரும் பணி ஒப்பிடமுடியாதது. உனது பணி இன்னும் பல்லாண்டு தொடர வாழ்த்துகின்றேன். வாழிய வாழிய வாழியவே!

                            இதனைப் பல சிரமங்களுக்கு மத்தியில் நகர்த்திவந்த மோகன் அவர்களதும் மற்றும் அனைத்து நிர்வாகத்தினரதும் கரங்களை நன்றியோடு பற்றிக்கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் பணி. 
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்" என்ற வள்ளுவப்பெருந்தகையின் ஈரடிகள் யாழுக்குச் சமர்ப்பணம்.
அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

2️⃣5️⃣  அகவை வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்! 🎂💐🎈🎈🎉🎊 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்ல நாளில் இங்கிருந்து அற்ப காரணம்களுக்கு பிரிந்து போனவர்களை மீண்டும் உள் கொண்டுவருவதால் மிக நல்லது யார் பூனைக்கு மணி கட்டுவது @தமிழ் சிறி இதில் திறமையானவர் நம்மை இன்னும் யாழுடன் இணைத்து வைத்து இருப்பவர் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்துக்கு இனிய 25 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழரின் பெருமை சேர்க்க  அறிவியல், வணிகம், இலக்கியம் போன்ற இன்னாரென்ன துறைகளில் மக்களின் அறிவை பெருக்க யாழ் இணையம் செய்த சேவைகளை நினைவில் கொள்வோம். 

நன்றி யாழ் இணைய நிர்வாகத்தினரே. தங்கள் பணி சிறப்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.களத்தின் 25’வது அகவையை முன்னிட்டு, @Paanch அண்ணை அவர்கள்
தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்…
அதனை ஆரம்பித்த @மோகன் அண்ணாவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வெள்ளி விழா காணும் யாழ்களத்தை பற்றி சொல்ல பல்லாயிரம் விடயங்கள் இருந்தும் யாழ்கள நிர்வாகத்தின் வெள்ளிவிழா அறிக்கையில் உக்ரேன் விவாதத்தை முன்னிலைப்படுத்தி "ஓரிருவர்" என விளித்து கூறி நம்பகத்தன்மையற்ற தகவல்களை பரப்புவதாகவும் அதை நீங்கள் முறியடித்தது போல் வெற்றிவாகை சூடுவதைப்போலவும் அறிக்கை விடுத்துள்ளீர்கள். ஆனால் இந்த உக்ரேன் செய்தியில் வரும் விவாதங்களுக்கு யார் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இன்றைய நிர்வாகம் கவனிக்க தவறியதையிட்டு மிக மனவருத்தமடைகின்றேன். இருப்பினும் 25 வருட யாழ்கள வரலாற்றில்  ஈழப்போர் கருத்துக்களில் ஆறா வடுக்கள் இருக்கும் போது உக்ரேன் வடுக்கள் உயரமாக தெரிவதன் காரணம் யாமறியேன் பராபரமே.

 

இது ஒரு தவறான கட்டுடைப்பு! @Kapithan மகாராஜா RT இல் இருந்து பிரச்சாரங்களை ஓயாமல் செய்துகொண்டுதானே இருக்கின்றார்😂

 

நான் அந்த பதிவை ஆறுதலாக வாசித்துப் பார்த்தேன்.

கடந்த சில வருடங்களாக உலகம் கோவிட்-19, உக்கிரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம், பாரிய பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்குவாரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நெருக்கடி மிகுந்த உலகில், போலிச் செய்திகளும், சதிக்கோட்பாட்டை பரப்பும் தகவல்களும் பரவலாகவே பரவி சாதாரண மக்களை குழப்பத்திற்குள் உள்ளாக்குகின்றன. தவறான கருத்தியல்களைத் திணிக்கின்றன. யாழ் கருத்துக்களம் மூலமாகவும் நம்பகத்தன்மையற்ற தகவல்களை இடையிடையே ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ பரப்ப முயற்சிக்கின்றபோதிலும், அவை அவதானிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. யாழ் களம் தொடர்ந்தும் நம்பகத்தன்மையான செய்திகளையும், தகவல்களையும் பகிரும் இடமாகவே இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளது.”

 

மேலேயுள்ளதை கடந்த வருடம் பெப்ரவரியில் ஆரம்பித்த ரஷ்யாவின் உக்கிரேனின் ஆக்கிரமிப்போடு மட்டும் குறுக்கி, அதற்கு முன்னர் கொரோனா பற்றிய தவறான தகவல்களும், தடுப்பூசி பற்றிய பீதியூட்டும் தகவல்களும், ஏன் தடுப்பூசி போடவே கூடாது என்ற விளக்கங்களும் யாழில் வந்து நீக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம் மறந்துவிட்டதா?

 

எனக்குத் தெரிந்து யாழில் நிர்வாகம் அடிக்கடி பாவிப்பது:

ஆக்கபூர்வமான கருத்தாடல்

பண்பான கருத்தாடல்

சமூகப் பொறுப்பு

 

ஆனால் இப்போதும் வரும் கருத்துக்கள் சில மேலுள்ளவற்றை கிஞ்சித்தும் கருத்தில்கொள்வதில்லை. அரட்டையையும், அலம்பல்களையும்தான் அதிகம் காணமுடிகின்றது. சீரியஸான விடயங்களிலும் பக்குவம் இல்லாமல் அசட்டுத்தனமான கருத்துக்கள் வருகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிகோலாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.