Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

தொடர்ந்தும் இலங்கைக்கு தன்னை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், பல போராட்டங்களின் பின் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி  உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானார்.

பல போராட்டங்களின் பின் சாந்தன் இன்று இலங்கை திரும்ப இருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://samugammedia.com/rajiv-gandhi-assassination-case-convict-santhan-passes-away-1709085738

1709085738-thumb_large_shanthan.jpg

  • Sad 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரங்கல்கள்!

நாசமாபோக இந்தியா!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உயிரிழந்தார்

சாந்தன்

பட மூலாதாரம்,HANDOUT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் சிகிச்சைபெற்றுவந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர் சாந்தன் என்ற சுதேந்திரராஜா. இவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரையும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பதால் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

தங்களுக்கு தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி, தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென நால்வரும் கோரிவந்தனர்.

32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனுக்கு பல உடல்நல பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அவருக்கு இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.

 

எப்படி உயிரிழந்தார் சாந்தன்?

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,” என்றார்.

"அவருக்கு Cryptogenic cirrhosis பிரச்சனை ஏற்பட்டிருந்ததால் அந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை அறிய முயற்சித்துவந்தோம்.

"கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுயநினைவு இழப்பதும் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று இரவு (பிப்ரவரி 27) பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

"அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்," என்று கூறினார்.

சாந்தன் தனக்கு தற்காலிக பயண ஆவணங்களைக் கோரிவந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழக்கிழமை, அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று வெளிநாட்டவருக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் இருந்து பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் தீவிரமடைந்தன.

உடல்நலம் சரியானதும் அவர் இலங்கைக்கே திரும்பிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, உயிரிழந்திருக்கிறார்.

சாந்தன் குடும்பத்தினர்

பட மூலாதாரம்,MINISTRY OF FISHERY

படக்குறிப்பு,

இலங்கையில் உள்ள சாந்தன் குடும்பத்தினர் சமீபத்தில், இலங்கை அமைச்சரை சந்தித்து சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

 

குற்றச்சாட்டு குறித்து சாந்தன் கூறிவந்தது என்ன?

சாந்தன்

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிவராசனின் உதவியாளராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் சாந்தன் என்ற சுதேந்திரராஜா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். கடந்த 1990-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கையிலிருந்து இந்தியா வந்த சாந்தன், கோடம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இஞ்சினீயரிங் டெக்னாலஜியில் படித்தார்.

இந்த காலகட்டத்தில் சிவராசனுக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். போராளிக் குழுவினரை உளவு பார்த்ததாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கூறின. பத்மநாபாவின் படுகொலைக்குப் பிறகு, இலங்கைக்குத் திரும்பிச் சென்ற சாந்தன், மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிவந்து ராஜீவ் காந்தியின் கொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், அடையாள மாறுபாட்டின் காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக சாந்தன் தொடர்ந்து கூறிவந்தார்.

சாந்தன் விடுதலையான பிறகு, அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் மகேஸ்வரி தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார். இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனும் கோரிக்கை வைத்திருந்தார்.

சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 30-ஆம் தேதியன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, சாந்தனை இலங்கைக்கு வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

சாந்தனின் குடும்பத்தினர் யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் வசித்துவருகின்றனர். சாந்தனின் உடலை 'எம்பாமிங்' செய்து இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். இன்று இரவு அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cgx5q0v8e91o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி

இந்தியாவின் - தமிழ்நாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதன்படி, அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதலாம் இணைப்பு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

32 வருடங்களாக காத்திருந்த நிலை

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

சாந்தன் ஈழத்தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

பல முயற்சிகளின் கீழ் இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

கடந்த ஜனவரி 24ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சாந்தனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 சிபிஐயின் கூற்று

சிபிஐயின் கூற்றுப்படி, “சாந்தன் சிவராசனுடன் ஏப்ரல் 1991 இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

சிவராசனுடன் நெருக்கமாக இருந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் என்று குற்றப்பத்திரிக்கை அவரை விபரித்தது.

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

மேலும், பெப்ரவரி 1988 இல், சிவராசன், சாந்தனை மெட்ராஸில் (சென்னையில்) தொடருமாறு பரிந்துரைத்தார்.

அத்தோடு,  பெப்ரவரி 1990 இல், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜியில் அனுமதி பெற்றார்.

அங்கு அவரது செலவுகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர். ராஜீவ் கொலைச் சதியில் சிவராசனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக சாந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டது.” என்றுள்ளது.

சாந்தனின் உடல்

மேலும் சாந்தனின் வழக்கு தொடர்பில் முன்னனிலையான தமிழ்நாட்டு வழக்கறிஞர் புகழேந்தி கருத்து தெரிவிக்கையில்,

சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி | Santhan Death In Tamil Nadu Hospital

'' சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்று அல்லது நாளை அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படும்" என கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/santhan-death-in-tamil-nadu-hospital-1709084380

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு கொலை; சட்டப்படி இடம்பெற்ற கொலை; சாந்தனின் மரணம் குறித்து சீமான்

28 FEB, 2024 | 01:50 PM
image

இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் என சாந்தனின் மரணம் குறித்து  நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

சாந்தனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

shanthan_body1.jpg

சிறப்பு முகாம் என்றால் அது சிறப்பு முகாம் ஆகிவிடுமா அது ஒரு வதைமுகாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

அதில் போய் சாந்தனை அடைத்துவைத்திருந்தார்கள் இரத்த உறவுகள் தவிர வேறு யாரும் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மனுக்கொடுத்து பார்க்கமுடியாது  நான் கூட மனுகொடுத்து போய்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

shanthan_body2.jpg

நீங்கள் இங்குவைத்து விடுதலை செய்யவில்லை என்றால் பொதுச்சிறையிலாவது அடைத்துவையுங்கள் என கேட்டோம்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி போன்றவர்கள் வெளியே உள்ளனர். அவர்களால் இந்த நாட்டில் சட்டமொழுங்கு பாதிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள சீமான் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் அவர்கள் தாய்தந்தையிடம் கேட்கவேண்டும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என அவ்வாறான வாழ்க்கை வாழ்கின்றார்கள் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

ரொபேர்ட் பயாசை இரண்டு மாதங்கள் சிறைவிடுவிப்பில் விடுவித்தீர்கள் சமூகத்திற்கு சட்டமொழுங்கிற்கு கேடுவிளைவிக்கும் விதத்தில் அவர் நடந்துகொண்டாரா என கேள்வி எழுப்பியுள்ள சீமான் பேரறிவாளனிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்புதான் அனைவருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர் அப்படி எனும் போது அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்வதற்கு நீங்கள் அனுமதித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தனுடைய கடைசி விருப்பம் கடைசியாக தாயை பார்த்து ஒருவாய் சோற்றை அவர் கையால் சாப்பிடவேண்டும் என்பதுதான், அதைக்கூட நிறைவேற்றிவைக்கமுடியவில்லை  எனவும் குறிப்பிட்டுள்ள சீமான் இது ஒரு சட்டக்கொலை அவ்வளவுதான் நியாயமாக இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/177501

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள் .......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறப்பதற்கு முன் தனது சகோதரனிடம் சாந்தன் கூறிய கண் கலங்க வைக்கும் வார்த்தைகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் தனது சகோதரனை சந்தித்த காணொளியொன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இறப்பதற்கு முன் வைத்தியசாலையில் இருந்த போது தனது சகோதரனை ஆரத்தழுவி ஏக்கத்துடன் பார்க்கும் அந்த காணொளி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் உயிரிழந்துள்ளார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்தவாரம் அவரது சகோதரர் அவரை வைத்தியசாலையில் பார்க்கச் சென்றபோது தனது சகோதரனின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னை விட்டு எங்கேயும் போகாதே” என கூறியுள்ளார். 

24-65def3e704431.webp

24-65def3e790b0f.webp

24-65def3e80f19c.webp

24-65def3e880ff5.webp

https://tamilwin.com/article/santhan-former-convict-rajiv-gandhi-assassination-1709109855

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆழ்ந்த அஞ்சலிகள் அய்யா.🙏

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்

Posted

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

வெறும் ஒரு மணிநேர விமானப் பயணத்தில் அவனால் 
அவனின் அம்மாவின் கரம் பற்றியிருக்கமுடியும்..
அம்மாவின் வாசத்திற்காய், அம்மாவின் அரவணைப்பிற்காய் 
ஏங்கிய அந்த மனிதன் இன்று தன் மூச்சை நிறுத்திவிட்டான்..
விடுதலை என அறிவிக்கப்பட்டு, 16 மாதங்கள் கடந்த பின்னர் கூட 
தன் அன்புத் தாயுடன் அவனை சேரவிட மறுத்த 
இந்திய அதிகார திமிரை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.

சாந்தன்..
இனியொருபோதும் திரும்பவரப்போவதில்லை.
அவனின் நினைவுகளுடன் மட்டுமே தன் எஞ்சிய காலத்தை 
கழிக்கப் போகின்றார் சாந்தனின் அம்மா..

வக்கற்ற இந்த தமிழினத்தை மன்னித்துவிடுங்கள் அம்மா..
கண்ணீர் வணக்கம் சாந்தன்..😭😭😭

Nadarajah Anparasan

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  ஒம் சாந்தி 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

இது ஒரு கொலை; சட்டப்படி இடம்பெற்ற கொலை; சாந்தனின் மரணம் குறித்து சீமான்

இதைத் தான் நானும் எண்ணினேன்.

துயரவீட்டில் அரசியல் ஏன் என்று கடந்து விட்டேன்.

தம்பி சாந்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள் ...கோபம்தான் வருகிறது கால இழுத்தடிப்பினால் என்னத்தை கண்டார்கள். ஏழைத் தாயினதும்  தமிழ் மக்களின் சாப மும் அந்த மண்ணின் மீது இருக்கும். 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.