Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்;

என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] :lol:

என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும்.

அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன்.

அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்[அதற்காக நான் சொன்னதெல்லாம் சரி என ஆமாம் சாமி போடக் கூடாது]

சுயமாக முடிவு எடுக்க கூடியவராக இருக்க வேண்டும்[என்னையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்]

சோம்பல் அற்ற உழைப்பாளியாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு கடவுள் பக்தி அதிகம்...என்னோடு கோயிலுக்கு கட்டாயம் வர வேண்டும்.

இது எனது ஆசை எனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என...உங்களுடைய கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என நினைத்தீர்கள்...உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருந்தார்களா...எங்கே எதிர்பார்ப்புகளை நீங்களும் எழுதுங்கள் பார்க்கலாம்.

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

மனைவி நிச்சயம் படித்திருக்க வேண்டும்.

கணவனின் உதவியை எதிர்பார்க்காது அலுவலக வேலைகலை தனியே செய்யத் தெரிய வேண்டும்.

பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதிக அலங்காரம் கூடாது.

நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் அன்பான்வனாய் இருக்க வேண்டும்..........ஆனால் இடையிடை கோபம் ( கொதி.... சத்தம்)எட்டிபார்கிறது.

அது மனித இயல்பு தானே.

.

நல்ல அழகாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது தான் நாம் உனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றார்கள்.படத்தைப் பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. அவர்கள் காட்டிய முதலும் கடைசியுமான படம்.

இன்று...

அழகு மாத்திரம் போதாது என்று உணர்கிறேன். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. குறிப்பாக பிள்ளைகள் பிறந்ததும் வாழ்க்கைச் சக்கரம் மிகவும் விரைவாகச் சுழலத் தொடங்கும். இக்கட்டத்தில் ஆண் தன் தோள் மீதுள்ள சுமையின் ஒரு பங்கையாவது பெண் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

நன்பர்களின் மனைவிமார்களில் சிலர் அழகாகவும் நல்ல‌ திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது நாம் பின்தங்கி விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

எல்லாம் சரிவர அமையாது என்று சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான். வேற வழி ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான எதிர்பார்ப்புக்களுடன் ஆழமான கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளிப்பதை விட கிடைத்த வாழ்க்கையை மெருகூட்டி சில விட்டுக் கொடுப்புக்களுடன் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் எல்லோர் வாழ்க்கையும் இனிக்கும்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் நல்லவன் கெட்டவனாகலாம்.

உழைப்பாளி ஊதாரியாகலாம்.

படித்தவன் அறிவிழந்து கொலைகாரனாகலாம்

அந்த நேரத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் மீண்டும் வாழ்க்கை இனிக்கும்

நினப்பதெல்லாம் நடந்து விட்டால்..........

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

மெத்தப் படித்தவராக இருக்க கூடாது என எழுதினானே தவிர ஒன்றுமே படிக்காதவராய் இருக்க கூடாது என எழுதவில்லை.

கருத்துகளை எழுதியவர்களுக்கு நன்றி...குறிப்பாக ஈசனுக்கு நன்றி...தனது வாழ்க்கையை துணிந்து எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

... என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்...

ரதி தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் என்ன எலுமிச்சைப் பழ சைசிலையா இருகிறீங்கள், உங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதற்கு?? :D :D :D:blink::lol: இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிய இல்லையா???

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

ஐஸ்வர்யா ராய் மாதிரி கண் இருக்கவேண்டுமென்று விரும்பியிருக்கலாம். தப்பில்லைத்தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

கெமிஸ்ட்ரியின் அடிப்படையில் (இருபக்கமும்) கல்யாணம் கட்டினால்தான் சரிவர வாய்ப்பு அதிகம். அது வேணும் இதுவேணும் எண்டு கணக்குப் பார்த்துக் கட்டினால் களபுளதான்..! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நான் முந்தி நல்ல நிறமான பொம்பிளை வேணும் எண்டு சொல்லும் போது அம்மா சொல்லுவா "அழகெல்லாம் சதை ஆழம்" எண்டு. அது எவ்வளவு உண்மை எண்டுறது, இப்ப எனக்கு புரியுது. நீ யாரை விரும்புகிறாய் எண்டுறதை விட உன்னை விரும்புகிறவனை/வளை கட்டினால் வாழ்க்கை இனிக்கும் எண்டுறது என்னுடைய கருத்து :blink: . அதுக்காக சும்மா எல்லாரையும் கட்ட ஏலாது, மற்றது சிலருக்கு இது பொருந்தாது. ன்ன வாழ்க்கையிலேயே ஒரே ஒரு பெண்ணையே விரும்பினேன், இன்று அவளையே கட்டும் நிலைக்கும் வந்துள்ளேன். இடையில் எத்தனையோ சண்டைகள் கோபங்கள் வந்திருக்கும் ஆனாலும் நான் மிக மிக பொறுமையாக இருந்துள்ளேன். (கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் :D , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! அந்த பிரமனே வந்து உங்களிடம் நீங்கள் விரும்பியபடி ஒரு ஆளை அழகு, குணத்துடன் படைத்து கட்டிக்கொள் என்று சொன்னாலும் அதுவும் சில நாளில் அலுத்துப் போகும். ஏனெனில் மனமானது அப்படிப் பட்டது. அதை விட இயல்பாக ஒருத்தரை மணந்து ஒருத்தருக் கொருத்தர் சில பல விடயங்களை விட்டுக்கொடுத்து அனுசரித்து அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பின்றி வாழ்த்தால் அது ஆயுள் வரை நீடிக்கும்!

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :D

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :blink::D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

Edited by nedukkalapoovan

வாத்தியார், இசைக்கலைஞன், சுவி ஆகியோரின் கருத்துக்கள் நிதர்சனமானவை. அப்படி அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுங்கள். ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்துகொண்டு நடப்பதே நல்லது. தொடக்கத்திலேயே நிறைய 'பில்ட் அப்' கொடுத்தால், அதை தொடர்வது கஷ்டமாகிவிடும். திருமணம் என்பது வாழ்க்கைத்துணை ஒன்றை தேடிக்கொள்வதாகும்.

உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

எங்கிருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பது எனது சுபாவம்

அது எல்லை மீறினால் நிறுத்திவிடுவேன்

நன்றி சகோதரி

நேரம் இருக்கும்போது...

தங்களது கேள்விக்கு பதில் எழுதுகின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவங்கள் சிலவேளை தங்களுக்கு உதவக்கூடும்

சிறு வயதிலிருந்தே

நடக்கக்கூடியவையையே நினைப்பது எனது பழக்கம்

போட்டியான எந்த பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்

போட்டியில் அது எனக்கு கிடைப்பது கூட எனக்கு ஒவ்வாதது

ஏனெனில் அதுவும்யார் யாரிடமிருந்து எல்லாம்தப்பி வந்திருக்கிறது

இனியும் இது போன்ற போட்டி வரும்

அதிலிருந்தும் நான் ஜெயிக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும்

உண்மையில் இதை நாம்உணரவேண்டும்

அத்துடன் எமது பெருமைகளையும் திறமைகளையும்அறிந்திருப்பதற்கு அப்பால்

எமது இயலாமைகளையும் குறைகளையும் நாம் அறிந்திருக்கவேண்டும்

சிலர் என்னிடம் சொல்வார்கள்

சுண்டினால் சிவக்கும் பெண் வேண்டும் என்று

நான் அவர்களுக்கு சொல்வேன்

உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இதைச்சொல் என்று.

உனக்கிருக்கும் ஆசைகளைப்போல்தான் எமக்கு வருபவருக்கும்இருக்கும் என்பதை மறப்பவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழமுடியாது. அவர்கள் அந்தக்காலத்தில் போல

தமக்கு வருபவர்களை வீட்டில் பூட்டி வைக்கும்மனப்பக்குவத்துடனேயே வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல்களில் மூழ்கி இரண்டும் கெட்டானாகி எல்லாவற்றையும் தொலைத்துவிடுகின்றனர்.

எனது பருவ வயதில் நான் சில விடயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

யாரைக்கட்டவேண்டும்

அதனால் எனக்கு ஏற்படும் சாதக பாதக பலன்களை துல்லியமாகவும் ஆற அமரவும் எடைபோடும் நேரமும் காலமும் என்னிடமிருந்தது

அதேநேரம்

எனது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணம் என்பது

எனது வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டாக இருக்கவேண்டுமே தவிர

இறங்குமுகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

அழகான பெண்களை நான் ரசித்தேன் அவர்களுடன் நட்பாக பழகினேன்

காதல் என்று அவர்கள் சொல்லுமுன் விலகிவிடுவேன்

அதனால் அவர்களில் பலர் இன்றும் எனக்கு மிகவும்கண்ணியமாக பழகும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பாடசாலையில் முதலாவதாக இருந்ததனாலும்

இருக்கும் இடத்தை சந்தோசமாக வைத்திருந்ததனாலும்

கொழும்பில் படித்துக்கொண்டு விடுமுறைக்கு ஊருக்கு வருவதனாலும் எல்லோருக்கும் என்னைப்பிடித்திருந்தது

ஆனால் இது சிறு வயதில்வரும் ஒரு ஈர்ப்பு

இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

இவ்வளவையும் தாண்டி

தூர இருந்து என்னை விரும்பிய பெண்ணை நான் கட்டிக்கொண்டுள்ளேன்

அதனால் தான் ராஜா போல் இருக்கின்றேன் வீட்டில்.

ஏனெனில் எனது அபிலாசைகளே முக்கியம் அவளுக்கு.

அதுவும்அவளைப்பார்த்தல்ல

அவளது அம்மாவின் வளர்ப்பை பார்த்து.

இன்று எனது மாமியாரும் இங்குதான் இருக்கின்றா

அவாவுக்கு நேரவே நான் சொல்வேன்

தாயைப்பார்த்துத்தான் நான் பெண் எடுத்தேன் என.

அதுதானே உண்மை.

அவாவும் சொல்வார்

தன்னையும் எனது மாமனார்(முன்னைநாள்அதிபர்) வேலியால் எட்டிப்பார்த்து

தான்(பருத்தித்துறையில்);வீட்டில் மாவிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தபின்தான் கட்ட சம்மதித்தாராம் என்று.

எனவே நீங்கள் எப்படி இருக்கின்றீர்களே

அதற்கு ஏற்ப ஆளைத்தேடுங்கள்

அதையே மற்றவரும்தேடினால் இருவருக்கும் பொருத்தம் ஏற்படும்

இதில் இருவரில் எவரது தராதரத்துக்கான தேடல் பிழைக்குமாயின்...

இருவரது வாழ்க்கையும் அழிவைச்சந்திக்கும்.

Edited by விசுகு

நான் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து கட்டித் தரும் படி அம்மாவிடம் சொன்ன போது, "எதற்கும் உன் மூஞ்சியை ஒருக்கா கண்ணாடியில் பார்த்துவிட்டு சொல்லு" என்றா..... அதற்கு பிறகு "நீங்கள் யாரைக் காட்டினாலும் சரி" என்று சரணடைந்து விட்டேன். ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை என்ற கணக்கில் மனைவி வாய்த்தார்.. கிடைத்ததை வைத்து பெரு வாழ்வு வாழ்வது தான் சரி என்றுவிட்டு நானும் இருக்கின்றன்

அன்பு காட்டுவதற்கும், மனம் ஒத்துப் போவாதட்கும் "இன்ன இன்ன தகுதிகள்" இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை... ஒருவர் மீது மற்றவர் மதிப்பு வைத்தாலே மிச்சம் எல்லாம் சரி வந்து விடும். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவில் தான் மிச்சம் மீதி எல்லாம் தங்கி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு ...வயசுல பெரியவா எல்லாம் சிறியவாவுக்கு அட்வைசுகளை அள்ளி வீசுங்கோ... :)

காதலிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்திச்சிது. நான் விரும்பியவர் வாழ்க்கைத்துணையாக வரமுடியாமல் போனபட்சத்தில் எதிர்பார்ப்புக்கள் எதுவும் எனக்கு இல்லை. திருமணம் செய்கின்ற நோக்கமும் எனக்கு இல்லை. தனியாளாக எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டு செல்கின்றேன். ஒருவேளை கஸ்டகாலத்திற்கு திருமணம் செய்தாலும் எனது ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள், தனித்தன்மையுடன் ஒத்துப் போகக்கூடிய வில்லங்கம் இல்லாத ஒன்று சோடியாய் கிடைச்சால் போதும் என்பதுவே எனது நிலைப்பாடு.

+++

நிழலி, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று சொல்லத்தேவையில்லை. உங்கள் குடும்பம் அழகானது, உங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை, மக்கள், அழகிய வாழ்க்கை கிடைத்து உள்ளது, நீங்கள் பெருவாழ்வை வாழ்ந்து தள்ளிவிட வேண்டியதுதான் மிச்சம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டுவதற்கு அழகு தேவையில்லை என இங்கு கருத்து எழுதிய பலர் எழுதியிருந்தார்கள்...என்னுடைய கேள்வி என்னவென்டால் இங்கு கருத்தெழுதிய பலரும் பல் வேறுப்பட்ட தகுதியுடன் இருக்கிறீர்கள்...ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கேற்ப மணமகள் இருக்க வேண்டும் என[அதாவது அழகாக]தானே நினைப்பார்கள்...வெளியில் கூட்டி செல்லும் போது இது என்னுடைய மனைவி என அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா...இது என்னுடைய சந்தேகம் தயவு செய்து அழகு தேவையில்லை என சொன்னவர்கள் இதற்கு பதிலளிக்கவும்.

நிழலியின் அம்மா மாதிரி எல்லா அம்மாக்களும் இருந்தால் எப்படி இருக்கும்...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தப்பிலி.

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :):D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் விரும்பினவர் கிடைக்காவிட்டால் அப் பெண்ணுக்கு உங்களோடு வாழ கொடுப்பினை இல்லை என நினைத்து விட்டு உங்களை விரும்பின பெண்ணாய் பார்த்து மணம் முடியுங்கள்...இப்போது உங்களால் தனிய வாழ இயலும் காலம் போகப்,போக தனிய வாழ்வது கஸ்டம் என நினைக்கிறேன்...இது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அழகு வேண்டாம் என்று யாரும் அடம் பிடிப்பதில்லை.ஆனால் கற்பனைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிஜத்துக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.தோலைப்பாத்து மாடு பிடித்தால் தொழிலுக்கு உதவாது என்டு தெரியும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.மற்றும் ஒருவரை விட மற்றவர் அழகாகவோ அல்லது வேறு திறைமைகள் இருந்தாலு அதுவும் பிரச்சனைதான்.தமது குறைகளை மறைக்க மற்றவர் மீது எதாவது குறைகளை தேடிக்கொண்டே இருப்பார்கள்.(எல்லோரும் இல்லை)ஆக ஒரே விருப்பு உள்ளவர்கள் என்றால் பிரச்சனைகள் குறைவு. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

அக்கா.. காட்டிற அன்பையே பரிசோதிக்கின்ற... சந்தேகின்ற பெண் ஜென்மங்களும் இந்த உலகில் இருக்கினம். அதுவும் இல்லாம அன்பு மட்டுமே போதும் என்ற நிலைக்கு அப்பால் அன்பை விட இன்னொன்று கவர்ச்சியாக அல்லது அவசியமாக தென்பட்டுவிட்டால் அன்பை உதறித்தள்ளிவிட்டு ஓடிவிடும் நிலையில் இருக்கின்றனர் பலர். இந்த நிலையில்.. ஒருவரை தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டி.. அவரும் அன்பு காட்டிற மாதிரி காட்டிட்டு.. சந்தர்ப்பம் சூழ்நிலை தனக்கு இன்னும் இன்னும் சாதகமா அமைய உன்னுடைய அன்பு போதும்.. நான் இன்னொருத்தர் கிட்ட காட்டிக்கிறன்.. அல்லது பெற்றுக்கிறேன்.. என்று கழரும் நிலைதான் இன்று உலகில் செல்வாக்குச் செய்து கொண்டிருக்கையில்.. இது விடயமாக ஒரு உறுதியான நம்பிக்கையோடு ஒருவர் மீது அன்பு செலுத்தவே அச்சப்படும் சூழல் தான் இருக்கிறது.

நாங்க காட்டிற அன்பு எங்களுக்கே திருப்பிக் கிடைக்குமோ என்ற உத்தரவாதம் கூட இல்லாத ஒரு சூழலில்.. எப்படி ஒருவரை எழுந்தமானமாக தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டிறது. எனக்கென்றால்.. இதெல்லாம் வேலைக்காகாத காரியங்களாகவே படுகின்றன. ஏதோ எங்கள் அன்பு எங்களோடே இருக்கட்டும்.. நாங்கள் எங்கள் வழியில் எமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துவிட்டுப் போகலாம்... என்ற நினைக்குத்தான் எம்மை இன்றைய உலகம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இது யார் தவறு.. எனதா. அல்லது எனது அன்பை இனங்காணத் தவறும் இந்த உலகா.. சொல்லுங்கோ அக்கா. சும்மா அன்பு அன்பு என்று காலத்தை நேரத்தை வீணடிச்சு ஒருவர் பின்னாடி அலைஞ்சுகிட்டு இருக்கிறதுல எனக்கு அவ்வளவு ஈடுபாடில்ல. அலைஞ்சு போட்டு அவரும்... சேர்ந்து கூத்தடிச்சிட்டு.. இறுதியில் ரா ரா.. பாய் பாய் எண்டுவினம்.. அதுக்குப் பிறகு தனிய இருந்து புலம்பிக் கொண்டிருந்து என்ன பயன். எதையும் வருமுன் காப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால்.. இந்த குறிப்பாக பெண்கள் இடத்தில் அன்பு காட்டிறதில் எழுந்தமானப் போக்கை விட நிதானப் போக்கு அதிகம் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன். மற்றும்படி எதிர்பார்ப்பில்லா அன்பை எவரிடமும் ஏன் இந்த இயற்கை மீது கூடக் காட்டலாம்.. என்பது எனது நிலைப்பாடு. அது மனிதத் தன்மை என்று நினைக்கிறேன். :(

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.