Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணம்தான் இந்த காலம் முக்கியமா அன்புக்கு முக்கியத்துவம் இல்லையா?

Featured Replies

எனக்கு தெரிந்தவர்கள் ஒரு அம்மாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான்... வேறு பிள்ளைகள் இல்லை..... அந்த அம்மாவின் கணவரும் இறந்து விட்டார் சில வருடங்களுக்கு முதல்.... எல்லோரும் ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் கண்டிப்பாக நினைப்பார்கள் ... ஆண்கள் கல்யாணம் பண்ணி மனைவிக்கு பின்னால் போனாலும் பெண் குழந்தை தன்னை வைத்து காப்பாற்றும் என்றுதான் நினைப்பார்கள்...அந்த அம்மாவும் கற்பனையோடும் மகள் தன்னுடன் கடசிவரை இருப்பாள் என்றுதான் நினைத்து இருப்பார்... மகளை படிக்கவைத்து லண்டனில் கல்யாணம் பண்ணி அனுப்பி வைத்தார் அவர் கணவர் போன பின்பும்...

மகளும் இங்கே வந்து நல்ல வசியாகதான் வாழ்கிறார்.. அவருக்கு பிள்ளைகளும் பிறந்தது... பிள்ளைகள் பிறந்தபோது அவங்கள் அம்மா தேவைப்பட்டார்... அதனால் இலங்கையில் இருந்து இங்கே எடுத்துவிட்டார்.... அவாவின் வசதிகளும் பெருகியது லண்டனில் பெயர் சொல்லும் அளவுக்கு... பிள்ளைகளும் வளர்ந்தார்கள் கல்யாணம் பண்ணும் வயதை அவாவின் பிள்ளைகள் எட்டிவிட்டார்கள்... ஆனால் இங்கே பேரப்பிள்ளைகளை பார்க்கவென்று வந்து இறங்கிய அம்மாவுக்கு வயது போனது கண்ணும் தெரியாமல் வந்து விட்டது... எனி பிரயோசனம் படமாட்டார் என்று அறிந்த மகள் தன் தேவை முடிந்தது தாயை நர்சிங்கோமில் சேர்ந்து விட்டார்.... ஒரு நாள் கூட ஏன் என்று பார்த்ததுமில்லை.... பேரபிள்ளைகளும் எட்டிப்பார்த்துமில்லை...

பாவம் அந்த அம்மா ஆங்கிலமும் தெரியாது தண்ணி என்று கேட்பதுக்கு கூட அந்த அம்மாவால் கேட்க முடியாது... இரண்டு வாரம் முதல்தான் அந்த அம்மா இறந்தார்... இறந்த பின்பு ஊருக்காக சடங்கு செய்தார்கள்... உயிருடனும் இருக்கும்போது ஒரு பெத்த தாயை பார்க்க முடியாதவர்கள் எல்லாம் என்னவென்று சொல்லுவது?

ஏன் யாரும் நினைப்பதில்லை நமக்கு ஒரு நாள் வயது ஆகும் இன்று இவர்கள் தன் தாய்க்கு பண்ணுவதுதானே நாளை இவர்கள் பிள்ளைகள் தங்களுக்கு பண்ணும் என்பதைக்கூட மறந்து விடுவார்கள்... காசு பணம் என்பது எவ்வளவு நாள் நம்முடன் வரும்.... வெளியால நாங்கள் கெளரவமான குடும்பம் என்று சொல்லுபவர்கள் தன் தாயை கூட பார்க்காதவர்களை என்ன லிஸ்ற்றில் சேர்ப்பது... அந்த அம்மாவின் மகள்தான் அப்படி என்று பார்த்தால் வீட்டுக்கு வந்த மருமகனும் அவா மாதிரியே இருந்தது பெரிய கவலைக்குரிய விடயம்....... மருமகன் என்பது ஒரு மகன் மாதிரி இல்லையா? எவ்வளவு கேவலமான இனம் நம் இனம்? நம் இனத்தில்தான் எல்லா ஊத்தைகளும் இருக்கின்றது ஆனால் வெளியால நல்லவே நாம் நடிக்கிறோம் ....

வெள்ளை இனத்தவர்கள் கூட பருவ வயதில் எவ்வளவு ஆட்டம் போட்டாலும் வயது போன பின்பு அன்புக்குத்தான் ஏங்கிறார்கள்...

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

பணம் அல்ல.. பிள்ளைகளுக்கு மனிதத்தை விட... சுயநலத்தை ஊட்டி வளர்ப்பது தமிழர்களின் பிறவிக் குணம். அதற்கு அந்த அம்மாவே பலியாகி விட்டிருக்கிறார். :(

மனதைக் குடையிற விசையம் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்த சுஜிக்கு மனந்திறந்த பாராட்டுக்கள் . ஏனெனில் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் புரையோடிவிட்டு இருந்த இந்தக் கேடுகெட்ட வியாதியை பலரும் விவாதிக்க தயங்குவார்கள் . ஏனெனில் எல்லோரது வீட்டிலும் நடக்கின்ற உள்குத்து அவர்களைப் பேசவிடாது தடுத்துவிடும் . இந்த பதிவில் மனந்திறந்து விவாதிப்பதையே கோமகனாகிய நான் விரும்புகின்றேன் . அந்தத் தாய் உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியவர் . அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன் :( :( :( .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தாயின் மனம் எவ்வளவு ஏங்கிப் போயிருக்கும் சுஜி!

பணம் வரும்போது, பல சாக்குகளைச் சொல்லிப் பலர் மனிதத்துவத்தை இழந்து விடுகின்றார்கள்!

எவ்வளவு பணம் இருந்தும், இளவரசி டயானா ஏங்கியது, ஒரு அன்புள்ளத்துக்காகவே!

புலம்பெயர் முதலாம் தலைமுறை தமிழர் சமூகம் - ஒரு 'சான்ட்விச்' தலைமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில் பெரும்பாலன தற்காலத்து பிள்ளைகள் வயது வந்தவர்களை வீடு பராமரிப்பதற்கு,பேரப்பிள்ளைகள் பராமரிப்பதற்கு மற்றும் பணம் காய்க்கும் மரங்களாகவோ தான் நினைத்து பெற்ற தாய்,தகப்பனை நடத்துகிறார்கள்.நான் இருக்கும் தேசத்திலும் இதே நிலை தான்..பெற்றோர் விரும்பியோ,விரும்பாமலோ அவர்கள் இடத்தை காலி பண்ணினால் போதும் என்பது போல் கொண்டு போய் காப்பகங்களில் விட்டுவிட்டு திரிகிறார்கள்.இப்படி நிறையவே கவலைக்கு உரிய விடையங்கள் நடக்கிறது.எல்லாவற்றையும் எழுதவும் முடியாத துர்;ப்பாக்கிய நிலை.தயவு செய்து இனிமேலாவது பெற்றோரை வெளிநாடுகளுக்கு அளைக்கும் விருப்பம் உடையவர்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து விட்டு செய்யுங்கள்.:(

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில் பெரும்பாலன தற்காலத்து பிள்ளைகள் வயது வந்தவர்களை வீடு பராமரிப்பதற்கு,பேரப்பிள்ளைகள் பராமரிப்பதற்கு மற்றும் பணம் காய்க்கும் மரங்களாகவோ தான் நினைத்து பெற்ற தாய்,தகப்பனை நடத்துகிறார்கள்.நான் இருக்கும் தேசத்திலும் இதே நிலை தான்..பெற்றோர் விரும்பியோ,விரும்பாமலோ அவர்கள் இடத்தை காலி பண்ணினால் போதும் என்பது போல் கொண்டு போய் காப்பகங்களில் விட்டுவிட்டு திரிகிறார்கள்.இப்படி நிறையவே கவலைக்கு உரிய விடையங்கள் நடக்கிறது.எல்லாவற்றையும் எழுதவும் முடியாத துர்;ப்பாக்கிய நிலை.தயவு செய்து இனிமேலாவது பெற்றோரை வெளிநாடுகளுக்கு அழைக்கும் விருப்பம் உடையவர்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து விட்டு செய்யுங்கள். :(

அதெப்படி... ஊரில விட்டு வைச்சா.. அரசாங்கக் காசு எடுப்பது எப்படி..???!

வயதானவர்களை.. புலம்பெயர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும்.. சொந்த நாட்டை விட்டு ஓடி போரைச் சாட்டி.. வந்து சுகபோக வாழ்க்கை வாழும் தமிழர்கள்.. இங்கு கூப்பிட முக்கிய காரணங்கள் இவை.

1. பிள்ளைகளை பராமரிக்க.. சம்பளம் பெறாத.. ஒரு நம்பிக்கையான ஆள் அவசியம் என்பதால்.

2. தங்களின் அன்றாடக் கடமைகளில் ஊதியம் இன்றி ஒத்துழைக்க.

3. வயதானவர்களுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும்... பென்சன்.. வீட்டுவசதிக் கடன்.. உட்பட சலுகைகளை அனுபவிக்க.

4. அடுத்தவர்களுக்கு சொல்லிப் பெருமை பேச...!

இந்தத் தேவைகள் முடிந்ததும்.. அவர்களை சேர்க்கும் இடம்... முதியோர் பராமரிப்பு இல்லங்கள். அதற்கும்.. வெளிநாடுகளில் சுலபமான வழி இருக்குது.

வெளிநாட்டு அரசுகள்.. பொன்சர் செய்து அழைக்கும்.. பெற்றோரை.. அந்தப் பொன்சர் மட்டுமே கடைசி வரை பராமரிக்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் அன்றி.. எம்மவர்கள் அவ்வளவு இலகுவாக அரசுகளை.. பெற்றோர்களை ஏய்ப்பதில் இருந்து தடுப்பது கடினம். ஓசி என்றால் தமிழன் பொலிடோலும் (பூச்சி கொல்லி) குடிப்பான் என்று பெரியவங்க சொல்வது.. வெளிநாடு வாழ் போர் சாட்டி சுகபோக வாழ்க்கை வாழ் தமிழர்களுக்கு நல்லாப் பொருந்தும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அவசர உலகில் நர்சிங்கோம் என்பது கேவலமல்ல.ஆனால் ஆகக்குறைந்தது நாளுக்கு ஒரு தடவையேனும் மகள் பெற்றதாயை பார்த்து சுகம் விசாரிக்காதது?????எல்லாம் ஐரோப்பியமோகங்கள்.......சோத்து அன்ரிகள் எவ்வளவோ திறம்...... :wub:

நல்லதொரு விடயத்தை இங்கே இணைத்தமைக்கு நன்றி சுஜி.

அனாதையாக இறைவனடி எய்திய தாய்க்கு என் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில் SoliAn இணைத்த வில்லுப்பாட்டின் கருவும் இதை வைத்துதான், இது ஒரு சில இடங்களில் நடந்திருக்கலாம் (ஊரில் எப்படியோ அப்படியே புலத்திலும்), பெரும்பான்மையான தமிழர்களுக்கு தாய் & மாமி இருவரிலும் கடவுளுக்கும் மேலான் அன்பு & மதிப்பு இன்று வரை இருக்கு, இனி மேலும் இருக்கும், அது எமது இரத்தத்துடன் ஊறியது

அனாதையாக இறைவனடி எய்திய தாய்க்கு என் அஞ்சலிகள்.

Edited by உடையார்

வயதானவர்களை.. புலம்பெயர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும்.. சொந்த நாட்டை விட்டு ஓடி போரைச் சாட்டி.. வந்து சுகபோக வாழ்க்கை வாழும் தமிழர்கள்.. இங்கு கூப்பிட முக்கிய காரணங்கள் இவை.

1. பிள்ளைகளை பராமரிக்க.. சம்பளம் பெறாத.. ஒரு நம்பிக்கையான ஆள் அவசியம் என்பதால்.

2. தங்களின் அன்றாடக் கடமைகளில் ஊதியம் இன்றி ஒத்துழைக்க.

3. வயதானவர்களுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும்... பென்சன்.. வீட்டுவசதிக் கடன்.. உட்பட சலுகைகளை அனுபவிக்க.

4. அடுத்தவர்களுக்கு சொல்லிப் பெருமை பேச...!

இந்தத் தேவைகள் முடிந்ததும்.. அவர்களை சேர்க்கும் இடம்... முதியோர் பராமரிப்பு இல்லங்கள். அதற்கும்.. வெளிநாடுகளில் சுலபமான வழி இருக்குது.

இங்கே என்ன இதற்கு அடிப்படை காரணம் என்ற கேள்வி ஆராயப்படல் வேண்டும்.

- அடுத்தவர் / உறவினர் நெருக்குவாரம் - peer pressure ( வீடு வேண்டவில்லையா? விடுமுறைபோகவில்லையா?...)

- மேற்குலக வாழ்வுமுறை ( வருவாய்க்கு மீறிய செலவுமுறைகள்; பண்டிகைகள் கொண்டாடங்கள் ;..)

எதையும் நிதானமாக குடும்பத்துக்குள் (take a deep breath at every step) ஒரு திறந்த உரையாடலுடன் முடிவுகளை எடுத்தால் நிம்மதியாக மனநிறைவுடன் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நல்ல ஒரு கதை சொல்வார்கள்

வயதான ஒரு தந்தைக்கு ஒரு நெழிந்த கோப்பையில் மகன் எந்த நாளும் சாப்பாடு கொடுப்பாராம்.இதை அவரது மகன் பார்த்துக் கொண்டேயிருப்பானாம்.ஒரு நாள் அந்த வயதானவர் இறந்துவிட்டார்.கிரிகைகள் எல்லாம் முடிந்து பின்னர் ஒரு நாள் தகப்பனுக்கு சாப்பாடு கொடுத்த கோப்பையை அவரது மகன் கவனமாக எடுத்து வைத்திருப்பதைப் பார்த்து அப்பப்பா தான் இறந்துவிட்டாரே இந்த கோப்பை இனி தேவையில்லை கொண்டுபோய் எறிந்துவிடு என்று சொன்னாராம்.

அதற்கு மகன் என்ன சொன்னான் தெரியுமா அப்பப்பா மாதிரி வயது வர நீங்கள் கொடுத்த மாதிரி நானும் உங்களுக்கு சாப்பாடு தர கோப்பை தேடித்திரிய வேண்டியதில்லை என்று சொன்னானாம்

  • கருத்துக்கள உறவுகள்

மூதாட்டிக்கு அஞ்சலிகள்.

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்".

இப்படியான சம்பவங்கள் புலத்தில் சாதாரணம்.

பிள்ளைகளைப் பராமரிக்க, பெற்றோரை வரவழைத்தால் குடும்பத்தில் இருவரும் உழைக்கலாம். பிள்ளை பராமரிப்புச் செலவு மிச்சம். கவனமான, பாசமான குழந்தை வளர்ப்பு.

குறிப்பிட்ட காலத்தின் பின் பெற்றோர்களுக்கும் அரச உதவிப் பணம் எடுக்கலாம். பின் பெற்றோர்களின் பெயரில் கவுன்சில் வீடு எடுத்து , அதை வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம்.

அந்த நேரத்தில் பெற்றோர்கள் ஊருக்கு போக விரும்பினாலும் அனுப்ப மாட்டார்கள்.

எல்லாம் பணம். பணம். பணம்...........

வயதான காலத்தில் அவர்களை வைத்துப் பாராமரிப்பதற்கு பணம் செலவழிக்க வேண்டும். வீண் தொந்தரவு. முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

உயிரோடு இருக்கும் பொழுது பெற்றோரை கவனிக்காவிட்டாலும் செத்த பிறகு, 31 ம நாள் ஊரெல்லாம் கூட்டி வெகு விமர்சையாக செய்வார்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மாற்றுக்கருத்து உண்டு எனக்கு தப்பிலி

இந்த திரியின்படி பார்த்தால் அது தப்பே. அதில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால் கூட்டுக்குடும்பப்பொறுப்புகளுடன் வளர்ந்தவர்கள் நாம். அந்தவகையில் இருபகுதியினருக்கும் அந்த பொறுப்பு உண்டு. எனவே மேலத்தேய நாடுகளில் இருவரும் வேலை செய்யவேண்டியிருப்பதால் வீட்டில் முன்னர் வயதானவர்கள் செய்ததுபோல் வீட்டைப்பார்ப்பது தப்பாக எனக்குப்படவில்லை. ஆனால் அது அன்பால் இணைந்த ஒரு பந்தத்தால் இருக்கவேண்டுமே தவிர நிர்ப்பந்தத்தால் இருக்கக்கூடாது.

இதில் மாற்றுக்கருத்து உண்டு எனக்கு தப்பிலி

இந்த திரியின்படி பார்த்தால் அது தப்பே. அதில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால் கூட்டுக்குடும்பப்பொறுப்புகளுடன் வளர்ந்தவர்கள் நாம். அந்தவகையில் இருபகுதியினருக்கும் அந்த பொறுப்பு உண்டு. எனவே மேலத்தேய நாடுகளில் இருவரும் வேலை செய்யவேண்டியிருப்பதால் வீட்டில் முன்னர் வயதானவர்கள் செய்ததுபோல் வீட்டைப்பார்ப்பது தப்பாக எனக்குப்படவில்லை. ஆனால் அது அன்பால் இணைந்த ஒரு பந்தத்தால் இருக்கவேண்டுமே தவிர நிர்ப்பந்தத்தால் இருக்கக்கூடாது.

கூட்டுக் குடும்பம்தான் ஆரோக்கியமானது என்பதுதான் எனது கருத்தும். கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்த ஆண்கிலேயர்களுடனும் பழகி இருக்கிறேன். அப்படியே வித்தியாசம் தெரியும்.

இங்க உள்ள பல தமிழர்கள் பெற்றோரைப் பாவிக்கும் மட்டும் பாவித்து விட்டு அவர்கள் பலவீனமானதும் ஒதுக்கி விடுகிறார்கள். முதியோர் இல்லத்தில் விட்டபின் அவர்களைப் போய்ப் பார்ப்பது கூட இல்லை. சுஜி எழுதிய மாதிரி இங்கு பலர் உள்ளார்கள்.

தனிப்பட்ட ரீதியில் முதுமை மட்டும் உயிருடன் இருந்தால், மற்றவர்களுக்கு சிரமம் கொடாமல் முதியோர் இல்லத்தில் வாழ்வதையே விரும்புவேன். மேற்கு நாடுகளில் நிலைமை அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்கள் புலம் பெயர் மண்ணில் பிள்ளைகளுக்கு உதவி ஒத்தாசையாக வீட்டைப் பார்ப்பதும் தப்பில்லை,பேரப்பிள்ளை களை பராமரிப்பதும் பிழை என்று சொல்ல இல்லை..தங்கள் சுமைகள் கொஞ்சம் குறைந்ததும் பிள்ளைகள் பெற்றோரை கொண்டு போய் அவர்களின் சுய விருப்பின்றி காப்பகங்களில் தள்ளி விட்டுப் போட்டு தங்கட பாட்டுக்கு திரிகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்...இந்த அப்பாவிப் பெற்றோரை கொண்டு போய் இவ்வாறன இடங்களில் விடுவதற்கு முன்பு பிள்ளைகள் சற்று யோசிக்கிறார்களா....இல்லை பெற்றோரிடம் கேட்கிறார்களா...இப்படி ஒரு இடத்தமில் உங்களை விட எண்ணுகிறோம் உங்கள் விருப்பம் என்ன???கேட்க மாட்டார்..வீட்டில் அனுபவிப்பதை விட எத்தனையோ மடங்கு கூடுதல் சிரமங்களைத் தான் காப்பகங்களில் வயதானாவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை..

எல்லா பெற்றோருக்கும் ஆங்கிலம் பேச வருமா.....? இல்லை பிரெஞ் பேச முடியுமா? அல்லது மற்றும் வெளிநாட்டு மொழிகள் பேசக் கூடியவர்களாகவா இருப்பார்கள். முதலில் மொழிப் பிரச்சனை என்ற ஒன்றையே சமாளிக்க முடியாது எத்தனை பெற்றோர் அன்றாடம் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள்...எல்லாரும் தங்களுக்கு பசிக்கிறது சாப்பாடு தாருங்கள்,தண்ணி குடிக்க தாருங்கள் என்று எல்லாம் கேட்க கூடியவர்களாகவா இருப்பார்கள்..சற்று சிந்தித்து பாருங்கள் உங்கள் தேவைகள் முடிந்ததும் அவர்களை வீட்டை விட்டு களட்டி விட்டால் போதும் என்று நினைக்க கூடாது..பராமரிப்பு நிலையங்களில் பணி புரியும் அனைவரும் கடமையை சரியாத் தான் செய்கிறார்கள் என்று நினைக்க கூடாது.

இன்றைய இளைய பெற்றோரைப் போல் தான் வயதானவார்களும் தங்கள் காலத்தில் ஊரில் எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் தானே பிள்ளைகளை பெற்று வளர்த்திருப்பார்கள் ...அதுவும் ஊரில் பெரும்பாலனா பெற்றறோர் ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை என்று பெற்று இருக்க மாட்டார்கள்.அவர்களும் அந்த நாட்டில் வளர்த்து ஆளாக்கித் தானே விட்டு இருக்கிறார்கள்..அது என்ன மேலைத் தேய நாட்டுக்கு வந்ததும் பெற்றவர்களே,கூடப் பிறந்தவர்களே மற்றவர்களுக்கு சுமையாகத் தெரிகிறார்கள்.....?

சுயமாக தங்களின் கடமைகளையே செய்ய முடியாதவர்களாக இருந்தால் இவ்வாறன இடங்களிலை கொண்டு போய் விடுவதில் தப்பில்லை.ஆனால் நடமாடிக் கொண்டு தங்கள் பாட்டுக்கு கடமைகளை செய்து கொண்டு திரிகிறவர்களை எங்காவது கொண்டு போய் விட்டுப் போட்டு.அவர்கள் இல்லாமல் போன பின்பு பிரேத பெட்டியில் கொண்டு போய் தலையை அடிச்சு உடைச்சு வாறவைக்கு சோ காட்டுவதில் பிரியோசனம் இல்லை..அல்லது பலரையும் கூட்டி அய்யாவுக்கு,அம்மாவுக்கு 31 செய்யிறம் வாருங்கள் என்று விட்டு ஒலி வாங்கி முன் நின்று கொண்டு புழுகுவதில் எந்த விதப் பிரியோசனமும் இல்லை..

ஒரு வயதான பெற்றோரின் அதிகபட்ச ஆசை என்பது "தாம் சாகும்வரை தம் பிள்ளைகள் பக்கத்தில் இருந்து பேரப்பிள்ளைகளைப் பார்த்து விளையாடி மகிழ்ந்து சந்தோசமாக தம் கடைசி நாட்களை கழிக்க வேண்டும்" என்பதுதான். அந்த தள்ளாடும் வயதில் அவர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் அப்படிப்பட்டதாகவே இருக்கும். அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கித் தவிக்கும் வயது அது. அப்படி அன்புக்கு ஏங்கும் அவர்களை.... தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கி, அன்பால் அரவணைத்து இறுதிவரை வாழ்த்தும் அந்த பெற்றவர்களை... இப்படிக் காப்பகங்களில் அநாதரவாய் விட்டுவர எப்படித்தான் மனம் வருகுதோ...???!!! :(

இவர்களையெல்லாம் என்னவென்று சொல்வது.......??? மனிதத் தன்மை இல்லாத மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ மேல்!

  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் வாழ்க்கையில் முக்கியமா என்டால் ஆம் என்பது தான் என் பதில் ஆனால் அதற்காக என்ட பெற்றோரை இப்படி கூப்பிட்டு விட்டு அநாதையாக சாக விட மாட்டேன்...பெற்றோரை வைத்து பராமரிக்க முடியாதவர்கள் அவர்களை அவர்களை ஊரிலேயே இருக்க விட‌லாம்...அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் வடிவாய் சமைத்து,சாப்பிட்டு,நிம்மதியாய் சாவார்கள்...தங்கட‌ சுய நலனுக்காய் இங்கே கூப்பிட்டு விட்டு அவர்களிட‌ம் வேலை வாங்குவார்கள்...அவர்களுக்கு பொழுதும் போகாது,குளிருக்குள் வெளியால வெளிக்கிட‌வும் முடியாது,வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைக்க வேண்டியது தான்...பிள்ளைகளை நம்பி புலம் பெயர் நாட்டிற்கு வரும் பெற்றோரை என்ன சொல்வது :unsure:

போன வார ஆனந்தவிகடனில் ராஜுமுருகன் எழுதிய கட்டுரை படிக்கவும் .பணம் தான் இன்று எல்லாம் .

பெற்றோர் பற்றி, இன்று எவ்வளோ ஆண்டுகளுக்கு பிறகு எனது பெற்றோர் தனிக்குடித்தனம் ,அவர்களாக கேட்டது .நாங்கள் வீடுகளில், படிகள் இல்லாத இடம் வேண்டும் என்று எண்பதுகளில் இது தேவையா ?

  • கருத்துக்கள உறவுகள்

பணம் வாழ்வில் ஒரு அங்கமே தவிர பணம் தான் வாழ்க்கை ஆகாது..தனியாக இருக்க விரும்புவதும்,விரும்பாமல் விடுவதும் ஒவ்வொரு பெற்றோருக்குள்ளும்,பிள்ளைக்கும் இடையில் ஏற்படக் கூடிய அன்பு,ஆதரவில் தான் தங்கி இருக்கிறது.கண்டிப்பாக சொல்வேன் பெற்றோர் தாங்களாக தனியாக இருக்கப்போகிறோம் என்று கேட்கிறார்கள் என்றால் அங்கே ஒரு படி இல்லை பல படிகள் அவர்களுக்கு உபத்திரவத்தை கொடுக்கின்றன என்றே தீர்மானிக்க வேண்டும்.எண்பதுகளில் இது தேவையா என்று கேட்கும் உங்களுக்கு இந்த எண்பது வராமலா போகப்போகிறது..??எண்பதுக்கு பிறகாவது தாங்கள் நின்மதியாக கிடக்க வேண்டும் என்று நினைத்து தனிக்குடித்தனம் போய் இருக்கலாம்.சற்று சிந்தித்து பேச வேண்டும்,எழுத வேண்டும்.

இன்று சற்று நேரத்திற்கு முன்பு வைத்திய பரிசோதனைக்காக சென்று விட்டு ஒரு பல பொருள் அங்காடிக்கு சென்று இருந்தேன்.நான் மட்டுமில்லை என் பெற்றோர் கூடத் தான்..செல்லும் போது எனது தாயார் சற்று களைப்பாக இருந்த காரணத்தினால் அங்கே ஒரு பகுதியில் வைக்கபட்டு இருக்கும் வென்ஜில் இருக்க வைத்து விட்டு நானும் பக்கத்தில் இருக்கும் போது எங்கள் நாட்டை சேர்ந்த ஒரு வயதுபோன அம்மாவும் இருந்தார்கள்.. அந்த அம்மா சற்று எங்களை நிமிமிர்ந்து பார்த்துட்டு எனது தாயாரோடு கதைக்க தொடங்கி இறுதியில் கொண்டு போய் முடித்த இடம் எது தெரியுமா......??? பிள்ளைகளோடு ஒரு போதும் பெற்றோர் தங்கி இருக்க கூடாது என்ற வார்த்தையே..ஒரு முதியவரின் ஏக்கத்தோடு கூடிய வார்த்தைப் பிரயோகத்தை என் காதால் சற்று முன்னரும் கேட்டு விட்டு தான் வந்து இந்த கருத்தை எழுதிறன்..நன்றி.:(

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற பிள்ளைகள் பார்க்க எண்ணினாலும் வந்த மரு மக்கள் (மருமகள்/மருமகன்) தங்கள் தேவை முடிய கழற்றி விடுவார்கள்.

அவசர உலகிலெல்லொரும் வேலை வேலை என்று ஓடுகிறார்கள் . எடுக்கும் பென்சனை நிலையத்துக்கு கொடுத்து விட்டு ... நிம்மதியாய் இருப்பதே மேல் ..கடமைக காக என் றாளும் கழுவி துடைத்து வைத்திருப்பார்கள். கூபிட்டுவிட்டு நீ பார் நான்பார் என்றுபோட்டி. .அல்லது பென்சனைவாங்கி கொண்டு கவனிப்பதில்லை. பேச தெரிந்தால் சிலர் சந்தோஷமாய் வாழ்கிறார்கள் ஜோடிகளாக .

அனுப்புநர் - ஒரு பெற்றோர்

பெறுனர் இன்னொரு பெற்றோர்

பொருள் உளறல்

அன்புள்ள மகனே நலமா ?

அன்று உன் விரல் பிடித்து நடக்க செய்த அதே ஸ்பரிசத்தோடே

இன்று பேனா பிடித்து எழுதுகிறேன்

இந்த கடிதத்தை உன் மகனுக்கு தெரியாமல் படி

நீயும் பிற்காலத்தில் இப்பிடி எழுதாமலிருக்க

உன்னை சபிப்பதோ என் துயரங்களை சொல்லுவதோ

இந்த கடிதத்தின் நோக்கம் அல்ல

உன் தாய் என்று கூட பாரபட்சம் பார்க்காமல்

என் கடைசி ஆசையை தெரிவிப்பதே.....

நான் இறந்த பிறகு கொள்ளியை தலையில் வையாதே

வயிற்றில் வை ......

என் உடலிலே முதலில் எரிய போகும் உறுப்பு உன்னை சுமந்த

கருப்பையாக தான் இருக்க வேண்டும்

நீ பால் வார்க்க கொடுத்து வைக்காத வயிறு அஸ்தியாவது கொடுக்கட்டும்.....

இந்த கடிதம் எழுதுகின்ற போது கையில் தீக்காயம் ஏற்பட்டு விட்டது

ஒன்றுமில்லை ......

கடந்த ஐந்தாண்டுகளாய் கொதித்த கண்ணீர் துளி ஒன்று கையில் சிந்தி விட்டது

அதுவே காரணம் ....

மகனே பெத்த மனம் பித்து என்பதற்கு சான்றாய் என் கடைசி வரி

உன் வீட்டு உணவு தான் எனக்கு இல்லை என்று ஆகி விட்டது

ஒரு வேளை நீ இக்கடிதத்திற்கு பதில் போட்டால்

தபால் தலையை எச்சிலால் அல்ல ஒரே..ஒரு .. சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு ....

இப்படிக்கு ஒரு வயதான குழந்தை.....

*எங்கேயோ படித்தது...

  • கருத்துக்கள உறவுகள்

மாதா பிதா குரு தெய்வம்

  • கருத்துக்கள உறவுகள்

பணம் அல்ல.. பிள்ளைகளுக்கு மனிதத்தை விட... சுயநலத்தை ஊட்டி வளர்ப்பது தமிழர்களின் பிறவிக் குணம். அதற்கு அந்த அம்மாவே பலியாகி விட்டிருக்கிறார். :(

அனைத்து தமிழரும் வீட்டு சுவரில் எழுதி வைத்து ஒவ்வரு நாளும் வாசித்து சிந்திக்க வேண்டிய வரிகள்.

சுயநலம் என்பது தனக்கு தானே குழி தோண்டும் செயல். வாழ்கை முடியும் தருணத்தில் ஊர் கூடினால் தேர் இழுக்கலாம் என்பதன் பொருள் விளங்கி ஆவதற்கு ஏதும் இல்லை. வாழ்க்கை தொடங்கும் போது தெரிந்துகொண்டால் தேர் இல்லை மலையையே இழுக்கலாம்.

"நானும் ஒரு சுயலவதியே"

நீங்கள் யாரும் எழுதி அதை தெரிய வேண்டிய தேவை இப்போது இல்லை. எனது சமுதாயம் என்னை அப்படிதான் உருவாக்கியது. பாதுகாப்பு பாதுகாப்பு என்று காவி திரிந்து............... இப்போது சிங்கள காடைகளிடம் காறி பித்து ஏறிய தங்கையை பக்குவமாக கையளித்த ஒரு ஏமாளி.

அன்று நானும் தங்கையும் மற்றவருடன் கூடி போராட போயிருந்தால் ??? மரணம் மதிப்புடன் வந்திருக்கும் நாடும் வந்திருக்கும்.

இன்று ஊரெல்லாம் பேய்கள்தான் வந்திருக்கு.

அடிப்படை காரணம் சுயநலம்............... சுயநலம்............... சுயநலம்!

சும்மா பம்மாத்துக்கு சர்வதேசம்........ அரசியல்........... புலி........கரடி......... கிரனபிழை...... என்று ஆயிரம் கட்டுரை எழுதலாம். ஆனல் ஒற்றுமையாக கூடி நின்றவன் வீழ்தான் என்று ஒரு உதாரணம் எழுத முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை என்னுடையது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.