Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேசம் போடாத வெண்பஞ்சுமுடி பேசும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

old_couple_in_love.jpg

ஓ... காலனே,

இந்த வேசம் போடாத

வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல

அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன்

அதுவரைக்கும்....

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அருகாமையும் துணையும் இளமை/ நடுத்தரக்காலங்களில் தேவைப்படுவதை விட வயது போன பின் தான் அதிகமாக தேவைப்படும்.

எம் சமூகத்தில் இள வயதில் ஒற்றுமையாக (அல்லது ஒற்றுமையாக வாழ்வது போன்றோ) வாழ்ந்து விட்டு பின் வயது போக போக சண்டை பிடித்துக் கொண்டு அதிகமான பிளவுகளை தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட வயோதிப தம்பதிகளைத்தான் அதிகம் கண்டுள்ளேன். இதற்கு மாறாக வெளிநாட்டினர் (மேற்கு நாட்டவர்) இள வயதுகளில் முரண்பட்டுக் கொண்டாலும், வயோதிப வயதுகளில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பதையும் அவதானித்துள்ளேன். கனடாவில் வயோதிபத் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு செல்லுவதை பார்ப்பதே ஒரு கவிதை வாசிப்பது போன்ற உணர்வைத் தரும்

நல்ல சின்ன கவிதை சாகறா.... ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகாறா, நிஐமும் அதுதான், துடிப்பு இருக்கும் வரை வேஷம், அடங்கியவுடன் பாசத்திற்கு ஒரு ஏக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

அது வரைக்கும் காலனே ..............சற்று பொறுத்திரு

படம் பல கதை பேசுகிறது .பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய காலனுக்கே, ஓலை அனுப்பியவன் அந்தப் புதுவை ஒருத்தன் தான்!

அடுத்ததாக இந்தச் சோடி!

ஆழமான, ஆனால் வலியுடன் கூடிய உண்மைகள் புதைந்து கிடக்கின்றன உங்கள் கவிதையில்!

நன்றிகள், சகோதரி>>>>>

.

பெண் தானே..

ஏதோ.. இளக்காரமான ஒன்று..

அறியாமையின் உறைவிடம்..

சீவிச் சிங்காரமாய் நின்றாள்..

பார்வை கணத்திற்கு மேல்,

அவள் மேல் தங்கவில்லை..

வெம்மையில் நின்று,

விருந்துகள் செய்தாள்..

அருகே வந்து எப்படி என்றாள்..

வார்த்தை காதில் விழவேயில்லை..

குழந்தை அழுதால்,

அது உன் வேலை..

கொஞ்சி முத்தமிடுவதே

என் வேலை...

ஆண்டுகள் ஓடின..

ஆனால் அந்த ஆத்மா ஓயவில்லை..

இயந்திரமாய்...

அன்று தொட்டு..

காட்சியை இயக்கியவன்,

மாற்றம் விரும்பினான்.

சடத்திற்கும் ஓர்,

படத்தைக் காட்டினான்..

நரைத்த பழங்கள் இரண்டு,

அன்பு பேசுவதை..

வாழ்க்கைப் பயணத்தில்,

தனிமையின் வெறுமையை..

துணையின் இதத்தை..

பாரடா என்றான்,

காட்சிகளின் நாயகன்.

குளம் நிரம்பியது..

கண்கள் துரிசாகின..

அன்று அம்மியில் வைத்து,

முழந்தாழிட்டு,

மெட்டி போட்டேன்..

இன்று அதே முழந்தாழ்..

அவள் பாதம் அம்மியில் இல்லை.

கைகளில்..

கண்ணீரால் கழுவினான்.

என் மூச்சு என் நினைவில்

மறையும் நாள்,

என் கண்ணில் நீ தெரிய வேண்டும்.

இருப்பாயா ?

நீ பெண்ணல்ல...

பொன்.

நல்ல சின்ன கவிதை

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தம் ஆயிரம் பொதிந்த, அழகிய குட்டிக் கவிதை.

இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் காதல் அழகு எனச் சொல்லும் தங்கள் கவிதை அழகோ அழகு.

பாராட்டுக்கள்...

ஓ... காலனே,

இந்த வேசம் போடாத

வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல

அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன்

அதுவரைக்கும்....

காட்சியும் கவிதையும் அழகு

154650_1714590261616_5949861_n.jpg

காதல் என்பது...!

காதல் ஊட்டிய உணர்வுகள்

என்றுமே மாறுவதில்லை!

காதலுக்கு... நேசிப்பதனைத் தவிர

வேறெதுவும் தெரியாது!

(எனது முகப்புத்தகத்திலிருந்து ...)

தங்களின் வரிகளில் அத்தனை அழகு!

பாராட்டுக்கள் படத்துக்கும் வரிகளுக்கும்!

நன்றிகள் தொடர்வதற்கு. :)

முதலாவது பச்சை என்னுடையது அக்கா!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

old_couple_in_love.jpg

ஓ... காலனே,

இந்த வேசம் போடாத

வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல

அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன்

அதுவரைக்கும்....

உன் காலக் கயிறின்

முடிச்சுக்களைத்தளர்த்தி விட்டு

எம் பாசக்கயிற்றில் படரும் அன்பை

ரசிக்கவிடு...

:D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை ஸஹாரா அக்கா.. வெண்முடி தலையில் கண்டதால் வந்த கவிதையா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை ஸஹாரா அக்கா.. வெண்முடி தலையில் கண்டதால் வந்த கவிதையா? :icon_mrgreen:

கிருபன் அண்ணா..! ஆனாலும் உங்களுக்குத் தைரியம் அதிகம்... :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

Hi shakara super :)

நாலு வரி என்றாலும் நச் என்றிருந்தது .

எம்மவரும் எக்காலத்திலும் அன்பை பகிர்வதில் ஆளுக்கு ஆள் சளைதவர்களல்ல ஆனால் வெளிப்படடையாக காட்டிக்கொள்ள ஒரு தயக்கம்.(கலாச்சாரம் ).

மான் தண்ணீர் குடித்த கதைப்போல் ஆளுக்கு ஆள் விட்டுகொடுப்பதில் சந்தோசமடைவார்கள்.

அர்த்தம் ஆயிரம் பொதிந்த, அழகிய கவிதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொதுமைப்பட எல்லோருக்கும் நன்றி உரைத்துச் செல்கிறேன். இந்தக்கவிதையின் உள்ளடக்கம் பற்றி எல்லோருடனும் நிறையவே பேச விடயங்கள் இருக்கின்றன. உங்கள் எல்லோருடைய பதிவுகளுக்கும் தனித்தனியே பதிலளிக்க நேரமில்லாத காரணத்தால் மீண்டும் வந்து பதிவிடுகின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை ஸஹாரா அக்கா.. வெண்முடி தலையில் கண்டதால் வந்த கவிதையா? :icon_mrgreen:

கிருபன் திண்ணையில் பேசும்போது இப்படி கிண்டலாக எழுதுவதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது மற்றைய இடங்களில் அதாவது கருத்துக்களத்தில் நீங்கள் இப்படி விளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை...

என்னுடைய பெயரை தமிழ் எழுத்துக்களில் வல்வை சகாறா என்று ஒழுங்காகத்தான் நான் பதிவிடுகின்றேன்.... கிருபன் நான் உங்கள் கூற்றை( கிண்டலுக்காக) ஏற்றுக் கொண்டால் இந்தக்களத்தில் எல்லோரும் அந்த ஏற்பை தங்களுக்கு உரியதாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள் ஆகவே நீங்கள் கிண்டல் அடிப்பதை அதாவது என்னுடைய பெயரில் வரும் எழுத்துக்களை வடமொழி எழுத்தில் எழுதுவதை இந்தச் சந்தர்ப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அருகாமையும் துணையும் இளமை/ நடுத்தரக்காலங்களில் தேவைப்படுவதை விட வயது போன பின் தான் அதிகமாக தேவைப்படும்.

எம் சமூகத்தில் இள வயதில் ஒற்றுமையாக (அல்லது ஒற்றுமையாக வாழ்வது போன்றோ) வாழ்ந்து விட்டு பின் வயது போக போக சண்டை பிடித்துக் கொண்டு அதிகமான பிளவுகளை தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட வயோதிப தம்பதிகளைத்தான் அதிகம் கண்டுள்ளேன். இதற்கு மாறாக வெளிநாட்டினர் (மேற்கு நாட்டவர்) இள வயதுகளில் முரண்பட்டுக் கொண்டாலும், வயோதிப வயதுகளில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பதையும் அவதானித்துள்ளேன். கனடாவில் வயோதிபத் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு செல்லுவதை பார்ப்பதே ஒரு கவிதை வாசிப்பது போன்ற உணர்வைத் தரும்

நல்ல சின்ன கவிதை சாகறா.... ஒரு பச்சை

உண்மைதான் நிழலி

நான் இங்கு மிகவும் இரசிப்பது எது என்று கேட்டால் முதியவர்களில் தம்பதியாக இன்றுவரை இருக்கும் சோடிகளை என்றுதான் சொல்லவேண்டும். வாழ்க்கையில் ஆடி ஓய்ந்து அடங்கும் நேரத்தில் ஏற்படும் தேடல் இருக்கிறதே….அந்த நிலையில்தான் ஆண் என்ற திமிரும் பெண் என்ற பிம்பமும் தேய்வுற்று அரவணைக்கவும் அளவளாவவும் கூட இருக்க ஓர் உயிர் வேண்டும் என்ற ஏக்கமும் தோன்றும். பிம்ப வெளிகள் கடந்து போன மனித்த்தின் ஆதரவுக்கும் அரவணைப்புக்குமான தேடல் முழுமையான நிறைவெய்துவது இந்தக்காலத்திலாகத்தான் இருக்கும் என்று முதிய தம்பதிகளைக் காணும்போது மனதிற்குள் தோன்றும்

ஏனோ எம்முடைய சமூகத்தை எடுத்தால் அவர்களுடைய முதுமைப்பருவத்தில் முற்றிலும் வேறுவிதமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இங்கு எத்தனையே முதிய தம்பதிகளை பார்க்கின்றேன்… துணைவன் ஒருபிள்ளையுடன் துணைவி ஒரு பிள்ளையுடன் ஏன் என்று கேட்டால் இருவரும் ஒற்றுமையாக இருப்பதில்லை என்றும் ஆணும் சரி பெண்ணும் சரி தங்கள் துணைகளை மட்டந்தட்டி பேசுகிற தன்மை அதிகமாக எமது சமூகத்தில் இருப்பதாகத் தென்படுகிறது. குடும்பத் தலைவர் என்னும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஆண் தனது துணைவிடம் புறுபுறுப்பதும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விருப்பமில்லாமல் துணைவியைக் காய்வதும் நம்முடைய சமூகத்திற்குள் ஊறிக்கிடக்கும் பழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. துணைவியோ பிள்ளைகளின் விருப்பிற்குக் கீழ்படிந்து துணைவரின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் முதுமையில் ஆதரவற்ற தனித்தநிலைக்கு துணைவரையும் அதன் நிமித்தம் தன்னையும் உட்படுத்தி முதுமைக்காலத்தில் நிறைய மனச்சுமைகளை சுமந்து மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள். ஏனோ அவர்களால் அந்தக்கூட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவர்களுக்கு வெளியே வர முடியவில்லையா அல்லது வரத் தெரியவில்லையா என்றுதான் புரியவில்லை.

நல்ல கவிதை சகாறா, நிஐமும் அதுதான், துடிப்பு இருக்கும் வரை வேஷம், அடங்கியவுடன் பாசத்திற்கு ஒரு ஏக்கம்

உடையார் துடிப்பு அடங்கியவுடன் எல்லாம் அடங்கிவிடும் அப்போதுதான் துணையின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் புலனாகும்.

அது வரைக்கும் காலனே ..............சற்று பொறுத்திரு

படம் பல கதை பேசுகிறது .பாராட்டுக்கள்

நன்றி நிலாக்கா தொக்கி நின்ற கவிதையை முடித்து வைத்தமைக்கு.

எனக்குத் தெரிய காலனுக்கே, ஓலை அனுப்பியவன் அந்தப் புதுவை ஒருத்தன் தான்!

அடுத்ததாக இந்தச் சோடி!

ஆழமான, ஆனால் வலியுடன் கூடிய உண்மைகள் புதைந்து கிடக்கின்றன உங்கள் கவிதையில்!

நன்றிகள், சகோதரி>>>>>

புங்கையூரான் நீங்கள் என்ன மனதை வாசிக்கத் தெரிந்தவரா?

நன்றி புங்கையூரான்

.

பெண் தானே..

ஏதோ.. இளக்காரமான ஒன்று..

அறியாமையின் உறைவிடம்..

சீவிச் சிங்காரமாய் நின்றாள்..

பார்வை கணத்திற்கு மேல்,

அவள் மேல் தங்கவில்லை..

வெம்மையில் நின்று,

விருந்துகள் செய்தாள்..

அருகே வந்து எப்படி என்றாள்..

வார்த்தை காதில் விழவேயில்லை..

குழந்தை அழுதால்,

அது உன் வேலை..

கொஞ்சி முத்தமிடுவதே

என் வேலை...

ஆண்டுகள் ஓடின..

ஆனால் அந்த ஆத்மா ஓயவில்லை..

இயந்திரமாய்...

அன்று தொட்டு..

காட்சியை இயக்கியவன்,

மாற்றம் விரும்பினான்.

சடத்திற்கும் ஓர்,

படத்தைக் காட்டினான்..

நரைத்த பழங்கள் இரண்டு,

அன்பு பேசுவதை..

வாழ்க்கைப் பயணத்தில்,

தனிமையின் வெறுமையை..

துணையின் இதத்தை..

பாரடா என்றான்,

காட்சிகளின் நாயகன்.

குளம் நிரம்பியது..

கண்கள் துரிசாகின..

அன்று அம்மியில் வைத்து,

முழந்தாழிட்டு,

மெட்டி போட்டேன்..

இன்று அதே முழந்தாழ்..

அவள் பாதம் அம்மியில் இல்லை.

கைகளில்..

கண்ணீரால் கழுவினான்.

என் மூச்சு என் நினைவில்

மறையும் நாள்,

என் கண்ணில் நீ தெரிய வேண்டும்.

இருப்பாயா ?

நீ பெண்ணல்ல...

பொன்.

நல்ல கவிதை ஈசன்

துணையின் இருப்பைப்பற்றி துடிப்புள்ள காலம்வரை எவரும் சிந்திப்பதில்லை அதனால் துணையின் தேவையைக்கூட தங்கள் அட்டவணைப்படியே ஆக்கிவிடுவதுண்டு துடிப்பு அடங்கியபின்தான் துணையைப்பற்றி சிந்திக்கிறார்கள்…. அட்டவணைப்படுத்தப்பட்டே வாழப்பழக்கப்படுத்தப்பட்டதால் துணையால் அந்த அட்டவணையிலிருந்து மீண்டுவர முடிவதில்லை.. முடக்கநிலையிலேயே எல்லாம் முடிந்துவிடும்.

மற்றும் வீணா , தமிழ்சிறீ, கல்கி, கவிதை, சுகன், சுபேசன், சாத்து, அர்யூன், nige ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை எப்படி அழகோ.. அதே அழகும், ஆயிரம் அர்த்தங்களுடன் நீங்கள் இணைத்த படமும்..

ஆமா.. என்ன வர வர 3,4வரியிலை எழுதி என்னை மாதிரி ஆக்களை யோசிக்க விடுறியள்? கொஞ்சம் நீட்டி முழக்க வேண்டியது தானே? :lol::icon_idea:

14வது பச்சை எனது.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ந்து செல்ல முதியவர்களின் இயல்புகள்

குழந்தைகளின் இயல்புகளை ஒத்ததாக இருக்கும்.

அப்போது கள்ளமில்லாத குழந்தைகளாகவே

சிலர் மாறி விடுகின்றனர்.

அரவணைக்க ஆதரிக்க வேண்டியவர்கள்

கவிதைக்கு நன்றி வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அக்கா அதோட ஈசனின் கவிதையும் பிடித்திருக்கு. யதார்த்தமான வரிகள். மனிசி எவளவுதான் செய்தாலும் அவளை பாராட்டுவது குறைவு. ஆனால் அவள் இல்லாத போது வரும் வெற்றிடம்..... ஐயோ நினைக்கவே தலைய சுத்துது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ந்து செல்ல முதியவர்களின் இயல்புகள்

குழந்தைகளின் இயல்புகளை ஒத்ததாக இருக்கும்.

அப்போது கள்ளமில்லாத குழந்தைகளாகவே

சிலர் மாறி விடுகின்றனர்.

அரவணைக்க ஆதரிக்க வேண்டியவர்கள்

கவிதைக்கு நன்றி வல்வை சகாறா

நன்றி வாத்தியார்

தங்களை குழந்தையைப் போல மற்றவர்கள் தாங்கவேண்டும் என்று அவர்கள் மிகவும் எதிர்பார்ப்பதும் அத்தகைய நிலை கிடைக்காத இடத்தில் மனம் குமுறி வருந்துவதுமாக முதுமையின் வாழ்வு இருக்கும். இந்தப் பருவத்தில் தனிமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை பண்ணவே கலக்கமாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.