Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்

Featured Replies

தொடரட்டும் யாழின் பணி.மிக மகிழ்சியாக இருக்கின்றது.

ஏதோ எனக்கு தெரிந்தது. ராஜபக்சாவாக இருக்கலாம் ,கருணாநிதியாகவும் இருக்கலாம் அவர்களை நாயே பேயே என எழுதி தான் நாம் சந்தோசம் அடைய வேண்டும் என்பதில்லை . சொல் பிரயோகங்களை கவனத்தில் எடுத்தல் நன்று .

  • Replies 163
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான விடையம்.புதிய மாற்றங்களை எதிர்பார்க்கிறேன். எவ்வாறான உதவிகள் யாழை மேலும் மேம்படுத்த உதவும் என கூறினால் வசதியாக இருக்கும்.மேலும் நிழலி, இணையவன்,வலைஞன் குழு திறம்பட இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. மோகன் அண்ணாவை நாங்கள் விடுவதாக இல்லை. :D

எல்லோருக்கும் நன்றிகள்.

அகுத சொன்னவற்றையும் கருத்தில் எடுப்பது நல்லது. மட்டிறுத்தினர் ஆசியர்கள் அல்ல என்பதால், தங்கள் ஆக்கங்களையும், பொது விவாதக் கருத்துக்களையும் தவிர்ப்பது பாரபட்டமில்லாத்தனமையும் கொண்டுவரும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறகென்ன பேந்தென்ன கலக்கி போட்டியல்!!!!!!

மோகன் அண்ணாவுக்கு என்ன கடினமோ தெரியவில்லை, உங்கள் உழைப்பு வீண்போகவில்லை இனியும் போகாது என நம்புவோம்...

புதிய நிர்வாகதிர்ற்கு வாழ்த்துக்கள்..

ஒரு வேண்டுகோள், ஒரு புதிய பகுதியாக ஆங்கில பகுதி ஒன்றை சேர்த்தால் என்ன? என் பிரிய பத்தினி போன்றவர்களும் அப்பப்ப எட்டி பார்க்க முடியும்..

புதிய நிர்வாகக் குழுவிற்கும் , மோகன் அண்ணைக்கும் எனது வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் . யாழிற்கான எனது பங்களிப்பு எப்பொழுதுமே உண்டு :):):) .

Edited by கோமகன்

நல்ல முயற்சி நிழலி ..தொடருங்கள் உங்கள் பணியை வெற்றி பாதையில்............

உங்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்

Edited by nige

மிக்க நன்றி நிழலி, நிச்சயமாக நான் தொடர்ந்து ஏன் ஒத்துழைப்பை வழங்குவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.உங்கள் புதிய நிர்வாக மாற்றமும்,செயற்பாடுகளும், வெற்றிநடை போடவும். வெகு சிறப்பாகவும் அமையவும் வாழ்த்துகிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

2005 வரை மட்டுறுத்தினராக இருந்த 10 தலை இராவணனை மீண்டும் தேடிப்பிடித்து மட்டுறுத்தினராக்கினால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

______

யாழ் தொடர்ந்து இயங்கும் என்ற செய்திக்கு நன்றி, வாழ்த்துக்கள்! ....

சிவப்பு கலரினால் அடையாளப்படுத்திய அந்த(உதாரனம்) வசனம் தேவையா???

தேவையில்லைத் தான் வல்வை!

ஆனாலும் தலைவர் பிரபாகரன், தனக்குப் பின் என,ஒரு தொடர் தலைமைக்கு வழி சமைத்திருந்தால், இவ்வளவு சீரழிவை எமது முன்னாள் போராளிகள்,சந்தித்திருகக

வேண்டி வந்திருக்காது. எங்கள் பணமே அவர்களுக்கு 'புனர் வாழ்வு' அளிக்கப் போதுமானதாக இருந்திருக்கும்!

நன்றி நிழலி ,

என்னதான் நாங்கள் கவலை பட்டாலும் , வேண்டி கொண்டாலும் நிர்வாகமோ , நிர்வாகத்துக்கு நெருக்கமான தோழர்களால்தான் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும் . அந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி வரவேற்க தக்கது . எது எப்படி இருந்தாலும் மோகன் அண்ணாவின் சில உயரிய பண்புகளிற்காக மீண்டும் அவருடைய மேற்பார்வையிலே யாழ் இயங்கினால் , அது நாம் செய்த பாக்கியம் .

நன்றி மோகன் அண்ணா ,நிழலி, இணையவன், வலைஞன். அனைவர்க்கும் எனது நன்றிகள்.

யாழ் நிர்வாகத்திற்கு நன்றிகள்.

உதவியில்லாவிட்டலும் உபத்திரம் இல்லாமல் இருப்பது, என் கடமை.

யாழ்களம் ... தமிழ்த்தேசியத்துக்கு எதிரான நிலையோ? அல்லது முற்று முழுதாக இலங்கை.இந்திய அரசின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்துக்கு ஆதரவான நிலையையோ? அல்லது அவர்கள் சார் நா.க.த.அ இற்கு ஆதரவான நிலையையோ? எடுக்காமலும், புலத்தில் கடந்த வருடம் போல் மாவீரர் நாளை இரண்டாக உடைத்து குழப்ப இலங்கை/இந்திய அரசுக்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகாமலும்? ... தொடர்ந்தால் சந்தோசமே!

மற்றும் யாழில் குழுநிலை விவாதங்களுக்கு இடமளியாதீர்கள். ஓரிரு உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு விளக்கமோ/எதிர் கருத்தோ தெரிவிக்கையில் அவர் சார்ந்தவர்கள் வந்து தாக்குதல் தொடுப்பதை நிறுத்த வேண்டும், புதிதொரு தலைப்புகள் தொடங்கி நிலைமையை மோசமாக்குவதை தடுக்க வேண்டும். ... இது எமது போராட்டத்திலும் நடைபெற்றது ... கருணா சார் குழுவை தலைமை அனுமதித்து ... கனவுகள் கலைய காரணமாகியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!!!

என்னதான் புது விதிகள் வந்தாலும், அவைகளுக்கான/நடைமுறைப்படுத்துவதற்கான எல்லை எது! உதாரணமாக ஆபாச மாக எழுத கூடாது என்றால் ஆபாசம் என்றதற்கு எது எல்லை? அத்ற்கு மேல் முன்பு பன்னாடை போன்றவைகளே பிழையான சொல் என்று யாழில் தடை செய்யப்பட்டதும் இருக்கின்றது.

கருத்துக்கள் ... கேள்விகள்/சந்தேகங்கள்/அனுமானங்கள்/நிதர்சனங்களை ... அனுமதியுங்கள் ... பொது நிறுவனங்கள்/அமைப்புகளை நோக்கி எழுப்பப்படும் போது! அப்போது தான் தேடலும் இருக்கும், பிழைகளை திருத்த சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேல் எம்மால் எது சரி, எது பிழை என்று அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். ... அதை விடுத்து தயவு செய்து சர்வாதிகார நிலையினை எடுக்காதீர்கள்.

சில ஆலோசனைகள் ... நிதி தொடர்பாக ..

1. விளம்பரங்கள் என்பது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும்! உடனடியாக விளம்பரம் எடுப்பதிலும் சிரமம் இருக்கும், எதை எடுப்பது என்பதிலும் ஒரு சரியான வரைபு தேவை.

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

2. உறுப்பினர்களிடம் சந்தா அறவிடுவது. குழுக்களை நியமிக்கலாம், இவர்கள் இன்னென்ன மாதத்திற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என தீர்மாணிக்காலாம், அது நீண்ட கால யாழ்கள ஓட்டத்திற்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா 13 வருடம் கட்டி வளர்த்த யாழை... நல்ல முறையில் கொண்டு நடத்துவீர்கள், என்ற நம்பிக்கை உள்ளது.

யாழில் தனது கடைசிப் பதிவு என்று மோகன் அண்ணா குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அவர் ஒரு கருத்தாளராகவும், போசகராகவும்... தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Edited by தமிழ் சிறி

நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து சிறக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

கருத்துக்களம் என்றால் ஆயிரம்பிரச்சனைகள் வரும். ஏன் எனில் இங்கு கருத்துக்களுக்கு களம்.

கம்னீயூச ஆட்சி போல கருத்துக்களத்தைக் கொண்டு சென்றால், களத்தில் பிரச்சனைகள் இருக்காது ஆனால் கள உறுப்பினர்கள் தான் இருக்க மாட்டார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி . முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா 13 வருடம் கட்டி வளர்த்த யாழை... நல்ல முறையில் கொண்டு நடத்துவீர்கள், என்ற நம்பிக்கை உள்ளது.யாழில் தனது கடைசிப் பதிவு என்று மோகன் அண்ணா குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அவர் தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

யாழ் களத்துக்கு வராத சில நாட்களுக்குள் ஐயோ என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனியாவது நடப்பது நல்லதாக அமையட்டும்.

மோகன்னாவுக்கு நன்றி அத்துடன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

நானும் யாழ் களத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா ஒதுங்கிப் போவது வேதனையளிக்கின்றது. அவர் நிர்வாகத்தில் இருந்ததால், படைப்புக்கள் ஒன்றையும் அவர் தரவில்லை. தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தார். தன்னுடைய குண இயல்புகளை அடையாளம் செய்யாது இருந்தார். இதனால் தான் அனைவரினதும் வற்புறுத்தல்கள், இடையூறுகளில் இருந்தும், யாழ்களத்தைக் கொண்டு செல்ல முடிந்தது என நினைக்கின்றேன்.

இங்கே, ரதியின் விமர்சனத்தைப் படிக்க அது தான் தோன்றியது. ரதியிடம் யாராவது கேட்டார்களா? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எழுதச் சொல்லி? சக கள உறுப்பினராகட்டும், நிர்வாகமாகட்டும்... யாரையும் எடை போடுவது, அல்லது விமர்சிப்பது தனிநபர் தாக்குதலாக மாறாதா?

இங்கே எனிவரும் காலங்களில் தோன்றப் போகும் பிரச்சனை இது தான். யாழ்களத்தில் முன்பு மோகன் அண்ணாவுக்கு, தொலைபேசி எடுத்து எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் என கேள்விப்பட்டதுண்டு.

என்னுடைய பரிந்துரை என்னவெனில், எல்லாக் கருத்துக்களையும் மரியாதை கொடுத்து செயற்படுத்த வெளிக்கிட்டால் நிச்சயம் அதன் தடம் நேராக இருக்காது போகலாம். சரியானதை நடைமுறைப்படுத்துங்கள். எல்லா விடயங்களுக்கும் விளக்கம் கொடுக்காதீர்கள்.

நானாகட்டும்... யாராகட்டும்... இடம் கொடுத்தால் நிச்சயம் மடம் கட்டுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes:<_<

போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..

இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..

அடுத்த முறை??????..... :rolleyes::icon_idea:

எப்படியோ யாழ் வந்தது சந்தோசமே,புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்,

தொடர்ந்தும் என்னாலான உதவிகள்,ஆதரவுடன் யாழில் இணைந்திருப்போம். :)

சித்திரை முதலாம் தேதியா? ^_^ ஏமாற்ற மாட்டீங்களே?? :D

மோகன் அண்ணா தயவு செய்து யாழோடும் எம்மோடும் தொடர்ந்து இணைத்திருங்கள், மேலும் நிழலி, வலைஜன் அண்ணா, இணையவன் அண்ணா அனைவருக்கும் யாழை தொடர்ந்து நடத்த மனம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது செய்யாமல் போனாலும் இடறுகளாவது செய்யாமல் இருப்பேன்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

தங்கச்சிக்கு இனித்தான் அலுப்பு இருக்கு......வாயை வைச்சுக்கொண்டு சும்மா இருக்கிறதுதானே?வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.