Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

மோகன் அண்ணாவுக்கு அமைதி கிடைக்கணும்

அதைப்புரிந்து எம்மவர் களத்தில் எழுதணும்

இணையவனுக்கு சொந்த வீடு கிடைக்கணும்

நிழலிக்கு இயலினி புதுவீட்டோடு

அவருக்கான தொழில் கிடைக்கணும்

ஜீவாத்தம்பி

கோப்பை கரண்டியுடனான போர் நிறுத்தி

நெஞ்சில் பேனை மாட்டணும்

சேரன் தம்பிக்கு திருமணம் நடக்கணும்

மகளாகவோ மருமகளாகவோ அவரின் அம்மா வரணும்

யாயினி பிள்ளை எம்முன்னே ஓடித்திரியணும்

நிலாமதியக்கா

வகுப்பில் மீண்டும் வலம் வரணும்

குமாரசாமியார்

கள்ளுக்குடி மறக்கணும்

எம்மை அகதியென்றால் அனாதையென்றால் சாட்டை தூக்கணும்

இசைக்கு முதல் ஓட்டையுடன் தொடர்ந்து போட வசதி கிடைக்கணும்

சிறித்தம்பி கைத்தொலைபேசி வாங்கணும்

அதிலிருந்தும் படங்களை எமக்கு அருளணும்

ரதித்தங்கைக்கு நல்ல வரண் கிடைக்கணும்

அதற்கான கண்டிசன்களை அவர் கொஞ்சம் குறைக்கணும்

சுஜி இந்த வருடம் உலகம் சுற்றணும்

அதற்கான எல்லாம் அவருக்கு கிடைக்கணும்

நெடுக்குத்தம்பி படிப்பில் தன் இலக்கை அடையணும்

அதன் பிறகாவது பெண்ணை பெண்ணாய் பார்க்கணும்

புரட்சிக்கு பிடித்த பெண் கிடைக்கணும்

அதன் பிறகாவது சினிமாவை துறக்கணும்

தூயவன் தம்பி இன்னும் அதிகம் எழுதணும்

அவருக்கு நான் தொடர்ந்து ஒத்தூதணும்

ராஜவன்னியன் பிரான்ஸ் வரணும்

அவருடன் சேர்ந்து ஊர் சுத்தணும்

வடிவேலுக்கு அவரது மனைவி அழகாகத்தெரியணும்

திண்ணையில் வந்து தேடுவதை நிறுத்தணும்

யாழ் நிலவனுக்கு தொலைத்தவை கிடைக்கணும்

ஆராமுதனுக்கு வேலை கிடைக்கணும்

குட்டிக்கு எது இல்லையோ அது கிடைக்கணும்

நுணாவிலான் தனித்தொழில்தொடங்கணும்

அதில் அவர் மிளரணும்

கறுப்பிக்கு மனம் போல் எல்லாம் அமையணும்

ஆணா பெண்ணா அல்லது இரண்டுமா என்பதை சொல்லணும்

வீணாவுக்கு ஏழரைச்சனி தலைப்பாகையோடு போகணும்

வல்லை அக்கா வீட்டில் சமையல் குறைத்து

கவிதை படைக்கணும் எம்மை ஒன்றாய்க்கட்டிப்போடணும்

சஜீவன் தம்பி தன் சுயமுயற்சியில் இறங்கணும் வெல்லணும்

தயா அண்ணா தம்பியைக்காணவேணும்

அவருடன் என்றும் இருக்கணும்

ஆதிவாசி ஒரு இடத்தில் இருக்கணும்

எம் மூதாதையருக்கான மரியாதையைப்பெறணும்

ஈசன் சொந்த தொழில் தொடங்கணும்

அதில் வெற்றியும் அடையணும்

சுவி அண்ணா சுகமாக இருக்கணும்

அவர் மனம்போல் இந்த வருடம் இருக்கணும்

வினித்துக்கு அடுத்ததும்உடன் கிடைக்கணும்

அவரது வீட்டிலேயே அது நடக்கணும்

அகோதாவுக்கு இன்னும் வலிமை பெருகணும்

அவரது உழைப்பை தமிழினம் பெறணும்

உமைக்கும் விடியலுக்கும் இதுவே பொருந்தணும்

இறைவன் வந்து எம்முடன் இருக்கணும்

காரணிகனின் கனவுகள் பலிக்கணும்

கந்தப்புக்கு கஸ்டகாலம் நீங்கணும்

ரகு ஐயாவின் இலட்சியம் ஈடேறணும்

புலிச்சொல் எமது தலைவரைக்காணவேணும்

நொச்சிக்கு இன்னும் நேரம் கிடைக்கணும்

மருதங்கேணிக்கும் இதுவே வேண்டுதல்

கிளியவன் தம்பி தொடர்ந்து வளரணும்

நெல்லையன் எப்போதும் எல்லோரையும்

தட்டிவிடாமல்தடவி அணைக்கணும்

கிருபன் புத்தியால்வெற்றி பெறணும்

யாழ் கவி இன்னும் கவிதை தரணும்

அபிராம் தொடர்ந்து கதைகள் எழுதணும்

தமிழிச்சிக்கு மன அமைதி கிடைக்கணும்

புலவருக்கு கோபம் அடங்கணும்

சித்தரும் எம்மை சுளியர் என சபிக்கணும்

பையன்26

இனி பையன் 27 ஆகணும்

ஆசான் இனி தடி எடுக்கணும்

சுனாமித்தம்பி மற்றும் சூரியாவும் சுகமாய் இருக்கணும்

ஆண்டவன் வந்து அருள் பொழியணும்

ஆறுமுகநாவலர் காட்சி தரணும்

ந. சுபேஸின் ஏக்கங்கள் பலிக்கணும்

Hari த்தம்பி தொடர்ந்து எழுதணும்

அர்ஜீன் அவர்கள் பழையதை மறக்கணும்

இன்னுமொருவனுடனும் கரும்புடனும்

சுகனுடனும் நவமுடனும் நிர்மலனுடனும் டாமுடனும்

இன்னும் வாதிடணும்

அதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைக்கணும்

சாத்திரி சாந்தி தொடர்ந்து எம்மக்களுக்கு உரம் கொடுக்கணும்

அதற்கு நாம் கரம் கொடுக்கணும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

ஆஹா அசத்தல். அற்புதம்.

வாழ்த்துகள்.

விசுகு சார் நீங்களும் வாழ்க்கையில் சகலதும் பெற்று பதினாறும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கு பிடித்த பெண் கிடைக்கணும்

அதன் பிறகாவது சினிமாவை துறக்கணும் ...

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_11/Sammi%20Potta%20Muduchu/Ponneduthu.mp3&OBT_fname=Ponneduthu.mp3

தோழர் விசுகு அவர்களின் நல்ல மனதுக்கு நன்றிகள் பல கோடிகள்... :wub:

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

thinking_monkey.jpg

இப்பிடி இருந்தால் எவன் மூதாதை எண்டு மதிப்பான்?

மூ....வியைப்பார் எண்டு அவனவனுக்கு வாற கோபத்திற்கு ஆதிக்கு மேல ஏறி நாலு மிதி மிதிக்க மாட்டாங்கள்......

போன கிழமைதான் பிரான்ஸ் வந்துவிட்டு திரும்பி வந்தேன்... இந்த வருடம் திரும்பவும் ஊரைச்சுற்ற கிளம்பினால் வீட்டில் அடிதான் கிடைக்கும் :D ..... நன்றி விசுகு அண்ணா உங்கள் வாழ்த்துக்கு.....

விசுகுவின் கனவுகள் நிறைவேறி அவர் வேண்டும் அடுத்த தொழிலும் செழிப்புற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா! கலக்கிட்டிங்க போங்க! பிரமாதம் பிரமாதம்!

//குமாரசாமியார்

கள்ளுக்குடி மறக்கணும்// :D கீகீ.....

உங்களுக்கும் எல்லாம் இனிமையாக எனது வாழ்த்துக்கள்!

Edited by ந.சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கதை என்ற போர்வையில்

எதாவது கிறுக்க வேணும்.........கி..கீ...கீ :D

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் தனித்தொழில்தொடங்கணும்

அதில் அவர் மிளரணும்

goodpost.gif

அதே போல நீங்கள் தேடும் புது தொழிலும் கிடைத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஆஹா அசத்தல். அற்புதம்.

விசுகு நீங்களும் வாழ்க்கையில் சகலதும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

நன்றி விசுகு அண்ணா உங்களுக்கும் சகல வளம்களும் கிடைச்சு சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் வீட்டுக் கவியாய் மாறின விசுவிற்கு பாராட்டுக்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

-----

சிறித்தம்பி கைத்தொலைபேசி வாங்கணும்

அதிலிருந்தும் படங்களை எமக்கு அருளணும்

------

phone_20.gif phone_24.gif phone_22.gif

இந்த, ஜென்மத்துக்கு கைத்தொலை பேசி பாவிப்பதில்லை என்ற முடிவுடன் இருக்கின்றேன். :rolleyes:

உங்கள் கனவு பலிக்குமா? என்பது சந்தேகம்.

உங்கள் வாழ்த்துக்கும், அழகான கவிதைக்கும் நன்றி. :)

.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா தொழில் சிறக்கணும். லா சப்பல் வரும்போது சந்திக்க நேரம் ஒதுக்கணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த ஆண்டு வியாபாரம் பெருகி லாசப்பலை முழுதாய் வாங்கி இப்பிடி ஒரு கொட்டேல் கட்டவேணும் அங்கை நானும் குமாரசாமியரும் வந்து றூம் போட்டுமேலை ஆதிவாசி யோசிக்கிற மாதிரியே யோசிக்கவேணும்.

100520012407.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி அண்ணா என்னை பெண் என ஏற்றுக் கொண்டீர்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்கள் நல்லாசிக்கு மிக்க நன்றி.உங்கள் முயற்சிகளும் வெறிறி பெற வாழத்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு!உங்கள் புதுமையான வாழ்த்தும் கனவும் பிரமாதம்.

குமாரசாமியார்

கள்ளுக்குடி மறக்கணும்

ஈரல்கருகும் வரைக்கும் உதை விடமாட்டன்.

தமிழிச்சிக்கு மன அமைதி கிடைக்கணும்

உங்கள் வேண்டுதலுக்கு மிகவும் நன்றி விசுகு.

வருடப்பிறப்பன்றே காலில் அடி. விரல் வீங்கி இன்றுவரை குறையவில்லை. :(:(:(

Edited by தமிழச்சி

.

மிக்க நன்றி விசுகு. உங்கள் தொழில் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

இவ்வருடம் உங்களுக்கு நன்றாக அமையவும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வேண்டுதலுக்கு மிகவும் நன்றி விசுகு.

வருடப்பிறப்பன்றே காலில் அடி. விரல் வீங்கி இன்றுவரை குறையவில்லை. :(:(:(

தமிழிச்சிக்கு கால்கட்டு போடுவதற்காக யாரோ செய்ய சதி என நினைக்கிறன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலரை விட்டுவிட்டேன்

அவர்களுக்காக.....

செவ்வந்தியும் பிள்ளையும் ஒன்றாய்ப்படிக்கணும்

இளம்ஞாயிறு அவரது கவிநண்பரைக்காணணும்

அப்பொழுது என்னையும் கேட்கணும்

தேவன் வந்து எமக்காக சிலுவை சுமக்கணும்

நேசன்எம்முடன் நேசம்காட்டணும்

சிற்பி அண்ணா அடிக்கடி வரணும்

எம்மையும் செதுக்கணும்

முனவர்ஜீ தனிiமையை ஒழித்து சம்சாரியாகணும்

நாம் படும்பாட்டை அவரும் அனுபவிக்கணும்

தப்பிலித்தம்பிக்கு ஒரு கும்புடு

அவரை மறந்திருந்தும் அதை மனதில் வைக்காமல் இங்கு கருத்து எழுதியமைக்காக

ஜ.வி.சசி காரம் குறைக்கணும்

மட்டுநகர்போல் குளிர்ச்சியாய் எழுதணும்

முல்லைமைந்தன் அடிக்கடி வரணும்

நாட்டுக்கட்டை பெயரை மாத்தணும்

எழுதும்போதே ஏதோ செய்யுது

குலக்கோட்டன் எமக்காய் கொஞ்ச நேரம் ஒதுக்கணும்

வாத்தியார் வந்து வகுப்பு எடுக்கணும்

பொய்கை வந்து சண்டை பிடிக்கணும்

ஈழப்பிரியன் இன்னும் எழுதணும்

சுண்டல் வந்து கடலை போடணும்

அரவிந்தன் வந்து பரிசு தரணும்

எல்லாளன் வந்து வீரம் ஊட்டணும்

ஏராளன் இன்னும் எழுதணும் வளரணும்

நெருப்பு நீலமேகம் சிறிதாய் சூடு தணிக்கணும்

முத்தமிழ் வேந்தன் இன்னும் தன்பணியைத்தொடரணும்

சுடரொளித்தம்பி பகைவனை சுட்டெரிக்கணும்

சதீஸன் தம்பிக்கு பெற்றோர் பெண் அனுப்பணும்

கட்டிக்கிட்டு அவர் காதலிக்கணும்

திருமால் அவர்கள் கவிதை பாடணும்

நாடோடி கோப்பி மறக்கணும்

தீபா மீண்டும் மீண்டும் வரணும்

பார்த்தீபன் எமக்கும் தேர் ஓட்டணும்

வெடியன் இங்கும் வெடி வைக்கணும்

சுமங்களா ஒருவரையாவது வெளியில் எடுக்கணும்

பனங்காய் இனி சோனியாவின் படத்தை மாட்டணும்

பாவம் அவர் என நாம் ஒதுங்கணும்

ஈசி யொப் பெயரை தமிழில் வைக்கணும்

தேன்மொழி இங்கும் இனிக்கணும்

ர.ராஜா வந்து பாட்டுப்போடணும்

ராசம்மாக்கா திண்ணைக்கு வரணும்

வெல்கனோ வந்தால் இங்குவெடிக்காமல் போகணும்

அன்புச்செல்வனும் ராசராசனும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்

சானுதினேஸ் மீண்டும் வரணும்

ஜெகுமார் அறிவியல் தரணும்

ராமதேவன் எமக்காய் இன்னும் எழுதணும்

பருத்தியன் எம்முடன் இன்னும் பகிரணும்

ஈழமகள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்

செந்தில்5000 ஜந்து கோடியாக உயரணும்

சபேசுக்கு சோம்பல் போகணும்

அவரது வீட்டு குப்பை வெளியில் போகணும்

சபேசன் அண்ணா இன்னும் எழுதணும்

என்ன எழுதினாலும் அது என்னைக்குத்தணும்

மகிந்த ராஜபக்ச அழிந்து இல்லாமல் போகணும்

ஏ.கே.47 இங்கு காவல் காக்கணும்.......

(அதற்கு முன் இவ்வளவு பேரும் என்னை மன்னிக்கணும்

முதலில் எழுத நேரம் போதாமையால் விட்டுவிட்டற்கு..

இன்னும் எவரையும் விட்டிருந்தால்

மறதி என்றும் சொல்லலாம், வயது போய்விட்டது என்றும் சொல்லலாம்

மன்னிப்பீர்களாக..)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி எடுக்கிறேன் நன்றி விசுகு அண்ணா. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி அண்ணா என்னை பெண் என ஏற்றுக் கொண்டீர்கள் :rolleyes:

2011 புதுவருட வாழ்த்தும் கனவும்

ரதிக்கு நல்ல வரண் கிடைக்கணும்

அதற்கான கண்டிசன்களை அவர் கொஞ்சம் குறைக்கணும்

என்னைக்கொஞ்சம் மாத்தலாம் எனும் முயற்சியில் இந்த வருடத்தில் நான். :rolleyes:

அதனால் தங்களுக்கு பதில் எழுதவில்லை. எனது எழுத்தை மாத்தியுள்ளேன்.

தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.