Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீள் வடிவமைப்புடன் யாழ் இணையம்

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம்.

முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால் நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் செய்தித் தொகுப்பைப் பெறலாம். அத்துடன் தேவைப்படும் போது நீங்கள் மின்னஞ்சல் பெறுவதில் இருந்து விலகியும் கொள்ள முடியும்.

அத்துடன் யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை முக்கியத்துவப்படுத்துவதற்காகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்துக்களம், சமையல், முற்றம் ஆகிய பிரதான பகுதிகளில் ஆக்கியவர் / பகுதி / திகதி வாரியாக ஆக்கங்கள் இணைக்கப்படும். கருத்துக் களத்தில் பதியப்பட்ட பழைய சுய ஆக்கங்கள் படிப்படியாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இணைக்கப்படும்.

ஏற்கனவே இருந்த நாட்காட்டிப் பகுதி சிறிது மேம்படுத்தப்பட்டுள்ளது. நாட்காட்டிப் பகுதியில் தற்போது இருக்கும் தரவுகளுடன் மேலதிகமான நடந்த முக்கிய நிகழ்வுகள் / நடக்கப்போகும் நிகழ்வுகள் ஆகியவை சேர்க்கப்படும்.

வர்த்தக விளம்பரங்கள் செய்ய விரும்புபவர்கள் 'விளம்பரங்கள் செய்வதற்கு' என்ற இணைப்பில் தமது விண்ணப்பத்தைப் பதியலாம். கீழுள்ள இணைப்பு மூலம் கருத்துக்களம் பற்றி அல்லது வேறு விடயங்கள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.

ஏனைய தகவல்களுக்கு

யாழ் களம் மேலும் நீண்ட காலம் தனது சேவையைத் தொடர இன்றுபோல் என்றும் உங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

நன்றி.

- யாழ் நிர்வாகம் -

மிகவும் வித்தியாசமாக நன்றாக உள்ளது.

இப்பொழுது தான் பார்த்தேன் . மிகவும் நுணுக்கமாக வடிவமைத்து இருக்கின்றீர்கள் இணையவன் , நிழலி . மேலும் தொடர்ந்து யாழ் வெற்றிக்கொடி நாட்ட மனதார வாழ்த்துகின்றேன் .

நேசமுடன் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் புதிதாகவும் ஆரம்பத்தில் புரியாமலும் இருக்கு, ஆனால் போகப்போகச் சரிவந்திடும். அனால் ஒண்டு முகப்பு பாக்க ரெம்ப என்ன, ரெம்ப ரெம்ப ந்ல்லாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு... :D வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இந்த மாற்றங்கள் எல்லோராலும் வரவேற்கப்படும்.

முகப்பின் வடிவமைப்பு அசத்தலாக உள்ளது.

வடிவங்கள் மாறவேண்டும்.

வண்ணங்கள் தீட்டவேண்டும்

எங்கள் இலட்சியம் மட்டும் மாறக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் மிகவும் நன்றாக வடிவமைக்கபட்டு இருக்கிறது எங்கட யாழ்.நான் இப்போ ஒரு 1மணிநேரம் இதற்குள் இருக் இல்லை அந்த நேரத்திற்குள் மாற்றம் வந்து இருக்கு ரொம்ப,ரொம்ப சந்தோசம்..என்னுடைய முக்கால் வாசிப் பொழுதை யாழோடும்,முகநூலோடும் தான் களிப்பது வளக்கம். அந்த வகையில் யாழின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்டு மிகுந்த சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருத்தியாக என்றும் இருப்பேன்.யாழ் என்றும் நாணல் தான்.மாற்றங்கள் என்னும் போது முகப்பில் தெரியக் கூடியதாக இருக்கும் தடை பற்றிய சில வற்றை நீக்கி விடலாம் என்று நினைக்கிறன்..கண்டிப்பாக விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேணும்..மிகுதி சொல்ல அப்புறம் வாறன்...:)மாற்றத்தைக் கொண்டு வந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்.

யாழ் நங்கையின் பூத்துக்குலுங்கும் புது பொலிவு நன்றாக இருக்கிறது. பருவத்தோடு வளர்ந்து பார்வையிலேயே வசிகரிக்கும் எழில்.

நிர்வாகத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

மிக மிக அழகாக இருக்கிறது. யாழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள். முகப்பின் அழகு மக்களை கவரும் விதத்தில் உள்ளது. இனி யாழுக்கு மக்கள் வருவதும் அதிகரிக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது ,

வாழ்த்துக்கள் ! :)

யாழ்களத்தின் முகப்பு மிக அழகாக உள்ளது. வடிவமைத்தவர்களுக்கும் கள நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள். மேன்மேலும் புதுப்பொலிவுடன், புதிய பல ஆக்கங்களை தரும் ஒரு களமாக யாழ் திகழும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

யாழ் முகப்பு சூப்பரா இருக்கு. :) :) :)

Edited by காதல்

[size=5]மாற்றங்கள்... வாழ்வின் நியதிகள். நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். [/size]

அழகாகவும் புதிராகவும் இருக்கிறது.

பழகப் பழக முடிச்சுக்கள் அவிழும்

வணக்கம்,

தமக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரங்களை யாழுக்கென அர்ப்பணித்து யாழின் புதிய பொலிவுக்கும் வடிவமைப்புக்கும் அயராமல் இயங்கியவர்கள் இணையவனும், மோகன் அண்ணாவும் தான். புலம் பெயர் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு வினாடியும் பொருளாதார வளத்தை மேம்படுத்த செலவழிக்க வேண்டிய தேவையைக் கொண்ட எம் வாழ்வு முறையில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருவரும் செய்த பங்களிப்பு மிகவும் நன்றியுடன் நினைவில் வைக்க வேண்டிய ஒன்று.

இவர்களின் அர்ப்பணிப்பு தன் உச்ச பலனை அடைய உங்களின் அன்பும், ஆதரவும், உதவியும் எமக்கு தேவை. கள உறவுகள் அனைவரும் உங்களால் ஆன வழியில் யாழை பலருக்கு அறிமுகப்படுத்துவதிலும், விளம்பரங்களை வாங்கி அல்லது தந்து உதவுவதிலும் யாழின் எதிர்கால வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை வழங்க முடியும். யாழின் எதிர்கால வளர்சிக்கும், வாழ்வுக்கும் பொருளாதார வசதி என்பதும் மிகவும் முக்கியமான தேவை. இன்று வரைக்கும் பொருளாதார விடயத்தில் மிகவும் பின் தங்கியே யாழ் இணையம் இருக்கின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க விளம்பரங்கள் எமக்கு பெரும் உதவி செய்யும். விளம்பரங்களை வழங்க முன்வருபவர்கள், யாழின் பிரபல்யம் எந்தளவுக்கு இருக்கு என்பதை கண்டிப்பாக ஆராய்வர். எனவே யாழை பிரபல்யப்படுத்துவது உங்களின் கைகளிலும் இருக்கின்றது. யாழுக்குரிய முகநூல் பக்கத்தில் (http://www.facebook.com/yarlcom?ref=mf) உங்களையும் இணைத்து உங்கள் உறவுகள், நண்பர்களையும் இணைத்து கொள்வது போன்ற விடயங்களை இன்றே நீங்கள் தொடங்கலாம். விரைவில் டுவிட்டரிலும் அதிக கவனம் செலுத்த இருக்கின்றோம். அதே போன்று Google + இலும் கவனம் செலுத்து இருக்கின்றோம். இவை அனைத்துக்கும் உங்களின் பங்களிப்புதான் மிகத் தேவையான ஒன்று. யாழ் கருத்துக்களத்தில் சிறந்த விடயங்களை இணைப்பது, விவாதிப்பது, நாகரீகமாக உரையாடுவது போன்ற விடயங்களும் மிகவும் முக்கியமானவை.

என்றும் போல் யாழ் இணையம் உங்களின் உற்ற உறவாக இருக்க உங்களின் பங்களிப்பையும், அன்பையும், ஆதரவையும் நாடுகின்றோம்

நன்றி

யாழ்களத்தின் முகப்பு பார்ப்பதற்கு மிகவும்அழகாக இருக்கிறது இதற்காக உழைத்த மோகன் அண்ணா இணையவன் ஆகியோருக்கு யாழ்கள சார்பில் எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பு நன்றாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

அதற்கு பாடுபட்ட இணையவனுக்கு நன்றிகள்.

விளம்பரம் என்னும் போது... தனியே வியாபார நிலையங்களின் விளம்பரம் மட்டும் தான் பிரசுரிக்கப்படுமா?

அல்லது சாமத்தியச் சடங்கு, திருமண அழைப்பிதழ், பிறந்தநாள் அழைப்பிதழ், காது குத்தல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மரண அறிவித்தல் போன்றவற்றையும் ஏற்றுக் கொள்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மாற்றம் காலத்தின் தேவை

முகப்பு இவ்வளவு நாளும் இருந்ததைக்காட்டிலும் வண்ணக்கோலங்களாய் மிளிர்கிறது. முகப்புப்பக்கம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.... இன்றுதான் முகப்பு மாற்றம் வந்திருக்கிறது தொழில் நுட்பம் எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்கவில்லை எப்படியும் ஒரு வாரம் இதற்குள் உழுது திரிந்துவிட்டுத்தான் மிகுதியை எழுதலாம். வாழ்த்துக்கள் கனடாவின் 145 ஆவது பிறந்ததினத்தில் யாழின் புதிய வடிவம் பிறப்பெடுத்திருக்கிறது எப்போதும் ஞாபகத்தில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் முகப்பு நல்லா இருக்கு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இணையவன் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகாக இருக்கிறது. யாழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம்.

முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால் நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் செய்தித் தொகுப்பைப் பெறலாம். அத்துடன் தேவைப்படும் போது நீங்கள் மின்னஞ்சல் பெறுவதில் இருந்து விலகியும் கொள்ள முடியும்.

அத்துடன் யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை முக்கியத்துவப்படுத்துவதற்காகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்துக்களம், சமையல், முற்றம் ஆகிய பிரதான பகுதிகளில் ஆக்கியவர் / பகுதி / திகதி வாரியாக ஆக்கங்கள் இணைக்கப்படும். கருத்துக் களத்தில் பதியப்பட்ட பழைய சுய ஆக்கங்கள் படிப்படியாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இணைக்கப்படும்.

ஏற்கனவே இருந்த நாட்காட்டிப் பகுதி சிறிது மேம்படுத்தப்பட்டுள்ளது. நாட்காட்டிப் பகுதியில் தற்போது இருக்கும் தரவுகளுடன் மேலதிகமான நடந்த முக்கிய நிகழ்வுகள் / நடக்கப்போகும் நிகழ்வுகள் ஆகியவை சேர்க்கப்படும்.

வர்த்தக விளம்பரங்கள் செய்ய விரும்புபவர்கள் 'விளம்பரங்கள் செய்வதற்கு' என்ற இணைப்பில் தமது விண்ணப்பத்தைப் பதியலாம். கீழுள்ள இணைப்பு மூலம் கருத்துக்களம் பற்றி அல்லது வேறு விடயங்கள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.

ஏனைய தகவல்களுக்கு

யாழ் களம் மேலும் நீண்ட காலம் தனது சேவையைத் தொடர இன்றுபோல் என்றும் உங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

நன்றி.

- யாழ் நிர்வாகம் -

வணக்கம் நண்பர்களே..

யாழ் குழுமத்தின் புதிய வடிவம் அருமையாக இருக்கிறது. தொடர்ந்தும் தனித்துவமான பாணியில் யாழ் தன் பணியை தொடர்ந்து இன்னும் அதிகளவான வாசகர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கட்டும்.

தொடரட்டும் யாழின் பணி!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும், தோற்றந்தரும், யாழ் நங்கை, தனது தனித்துவத்தையும், மிடுக்கையும் இழந்து விடாது, புதுப் பொலிவுடன் மிளிர்கிறாள்!

இந்தத் தோற்றத்தை, அவளுக்கு அளித்த, மோகன் அண்ணா, இணையவன், மற்றும் நிழலி, ஆகிய உறவுகளுக்கு, மனமார்ந்த நன்றிகள்!

இணையத் தளமொன்றின், முகப்பானது மிகவும் பெறுமதி வாய்ந்தது! ஊர்ப்புதினத்தில் அதிக பதிவுகள், பொதுவாக இடப்படுகின்றன! இவையும் புதிய பதிவுகளில், திரும்பவும் தோன்றுவதால், ஏறத்தாள ஒரே பதிவுகள், ஊர்ப்புதினம் பகுதியிலும், புதிய பதிவுகள் பகுதியிலும் தோன்றுகின்றன! அதாவது, ஒரே பதிவுகள், இரண்டிலும் தோன்றுகின்றன போல உள்ளது!

இதை நிர்வாகம், கவனித்தால் நல்லது!

யாழ் நங்கையின் அழகு, மேலும் மிருகு பெற வாழ்த்துக்கள்!

யாழ் அழகு.யாழிற்கென்றே தனித்துவமான ஒரு எழுத்துருவை தெரிவு செய்தால் நல்லாயிருக்கும்.

என்ன புங்கையூரன் ,யாழை பெண்ணாக்கிவிட்டீர்கள்? அளவுக்கதிகமாக முகப்பூச்சு செய்து நிற்கப்போகிறாள்.

[size=5]மிக அழகாக இருக்கிறது யாழ் இன்னும் உயரத்தினை தொட வாழ்த்துகள் [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.