Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

f338e-sir.jpg?w=600

இளையராஜா மற்றும் மூன்றாம்பிறை தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனுடன் நான்.. (1981)

பாலு மகேந்திரா தொடர்கிறார்…(இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -2)

moodupani2.jpg

–நன்றி 

http://ilayaraja.forumms.net/

எனது மூடுபனி படத்திலிருந்துதான் நான் இளையராஜாவுடன் பணியாற்றத் தொடங்கினேன் என்று சொல்லியிருந்தேன். மூடுபனி எனக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். என்றும் சொல்லியிருந்தேன். மூடுபனி ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

moodup10.jpg

–நன்றி 

http://ilayaraja.forumms.net/

எனது மானசீக ஆசான்களில் ஒருவரான ஆல்ஃபிரெட் ஹிச்காக் என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாகத் தமிழில் நான் எடுத்த சஸ்பென்ஸ் திரில்லர். எனது ஷோபாவும் அழியாத கோலங்களில் நான் அறிமுகப்படுத்திய பிரதாப் போத்தனும் சேர்ந்து அற்புதமாக நடித்திருந்த படம்.

-

எனது இயக்கத்தில் வந்த முதற் படமான கோகிலாவில் மோகன் என்ற வங்கி ஊழியரை நான் நடிகராக அறிமுகப்படுத்தியிருந்தேன். கன்னடிகரான அவரை எனது மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்தேன். பிற்காலத்தில் தமிழ்த் திரை வானில் அவர் ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழ்ந்தது சந்தோஷம்.

மூடுபனி படத்திற்கு முன்பும் அதன் பின்புமாக யேசுதாஸ் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார். இருப்பினும்,தனக்கு மிகவும் பிடித்த சினிமாப் பாடல் என்று இன்றுவரை அவர் சொல்லிக்கொண்டிருப்பது மூடுபனி படத்தில் வந்த ‘ என் இனிய பொன் நிலாவே ‘ பாடல் தான்.

kokila.jpgAthu%20Oru%20Kanaa%20Kaalam3.jpeg

71 முதல் 76 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளனாக மட்டும் பணியாற்றிவிட்டு 76-ல் நான் திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுகிறேன். நான் இயக்கிய முதல் படம் கோகிலா. கன்னடப் படம். நான் இயக்கும் படங்களின் திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றையும் நானே செய்வது வழக்கம்.

310381_136473416448874_273742010_n.jpg

எனது முதற்படமான கோகிலாவிலிருந்து கடைசியாக வெளிவந்த அது ஒரு கனாக்காலம் வரை அப்படித்தான். நான் இயக்கும் படங்களுக்கான இசை, குறிப்பாக பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்கவேண்டும் என்பவற்றில் நான் வெகு உன்னிப்பாக இருப்பேன். இவற்றையெல்லாம் அந்தந்தப் படங்களுக்கான திரைக்கதைகளை எழுதும்போதே நான் தீர்மானித்துக் கொள்வேன்.

Balu%20Mahendra1.jpegAthu%20Oru%20Kanaa%20Kaalam2.jpeg

படத்தொகுப்பு முற்றிலுமாக முடிந்து, அடுத்த கட்டமான இசைச் சேர்க்கைக்குத் தயாரானதும், அந்தப் படத்திற்கான இசை பற்றிய எனது எண்ணங்களை எனது இசையமைப்பாளருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவேன். எனது படங்களில் பிரக்ஞைப்பூர்வமாக நான் வைக்கும் மௌனங்களை, உணர்வு பொதிந்த, அர்த்தமுள்ள அந்த மௌனங்களை இசைகொண்டு கலைக்க வேண்டாம் என்றும் என் இசையமைப்பாளரிடம் நான் கேட்டுக் கொள்வேன்.

நான் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கும் இசை அமைத்த இந்தியத் திரையிசையின் மாமேதைகளில் ஒருவரான சலீல் சௌத்ரி அவர்களிடமும் அந்தப் படங்களுக்கான இசை பற்றிய எனது எண்ணங்களைத் தெரியப்படுத்தியே அவற்றிற்கான இசையைப் பெற்றுக்கொண்டேன்.

மூடுபனி படத்தின் இசைச் சேர்க்கைக்கு முன், அதற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எண்ணங்களை இளையராஜாவுக்கு மிக நுணுக்கமாகத் தெரியப்படுத்தியிருந்தேன்.

74cee-574819_410055969038505_11284295542

எனது மூன்றாவது படமான மூடுபனி இளையராஜாவுக்கு நூறாவது படம். மூடுபனிக்கு முன் 99 படங்களுக்கு இசையமைத்து வெற்றியின் உச்சத்தில் அவர் இருந்த காலம் அது. இசைஞானியுடன் பணியாற்றத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள் ராஜா என்னிடம் கேட்டார்.

” ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது? “

என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்.

”  Raja. let me answer your question this way ” என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தேன்.

ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதாவது ‘நதிமூலம்’ என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…

ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள,அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.

இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.

இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள நிலப்படுகை தானே – நிலத்தின் அமைப்பு தானே தீர்மானிக்கிறது !

நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.

இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம் தான் – அந்தப் படத்தின் திரைக்கதை தான் script-தான் தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும், நடிப்பையும், படத்தொகுப்பையும், உடைகளையும் மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதை தான்! அதன் script-தான்.

கேட்டுக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் அதன் திரைக்கதையே மிக முக்கியமான அம்சம். அதன் தேவையை ஒட்டியே எல்லாம் இருக்க வேண்டும். திரைக்கதையின் தேவைக்கு அப்பாற்பட்டு, தன்னிச்சையாகச் செயல்படும் இசையோ, ஒளிப்பதிவோ, ஒலி அமைப்போ, நடிப்போ, அல்லது வேறு எதுவோ தனக்குத் தானே கவன ஈர்ப்பைக் கோரி நிற்குமே தவிர, சம்பந்தப்பட்ட படத்தோடு ஒட்டாது.

அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் ராஜாவை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. முழுவதுமாகப் புரிந்துகொண்டார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்து வருகிறது.

எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லை. That is my Raja..!

  • Replies 68
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..
 உன்னதக் கலைஞ்சர், இவரின் படைப்புகள் பல தசாப்தங்களுக்கு பேசப்படும். எங்களுக்காக குரல் கொடுத்தவர்... எங்களில் ஒருவர்.
 

ஈழத்தமிழர்களுக்கு பெருமைசேர்த்த உன்னத கலைஞன் பாலு மகேந்திரா
மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லொதொரு கலைஞன்.அன்னாருக்கு அஞ்சலிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
தலைமுறை பார்த்த
மூன்றாம்பிறையானது
நட்சத்திரமாய் 
உதிர்ந்துவிட்டது..
 
*
கி.சார்லஸ்
 

ஆழ்ந்த இரங்கல்கள்..! :( 

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த அனுதாபங்கள்.!

 

ஆழ்ந்த அனுதாபங்கள்

பாலுமகேந்திரா மறைவு : 

திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி 

balu%20mahendra%20dye%201.jpg

balu%20mahendra%20dye.jpg

 

 

 

தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பொது மக்களும், திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்னம்,பாலா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, அமீர், சேரன், பி.வாசு, வசந்த், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.சி.சக்தி, ராம், விக்ரமன், வி.சேகர், வசந்த், தங்கர்பச்சான், கேயார்,  சுரேஷ்கிருஷ்ணா, பாண்டிராஜ், சிம்புதேவன், சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர்கள் கமல், விவேக், பார்த்திபன், பாண்டியராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், ரமேஷ்கண்ணா, ஸ்ரீகாந்த், விக்னேஷ், மனோபாலா, வையாபுரி,  ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர்கள் கணேஷ்(சங்கர்), எஸ்.ஏ.ராஜ்குமார், கவிஞர்கள் வைரமுத்து, பழனிபாரதி, சினேகன், உள்ளிட்டோர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், நீங்கள் கேட்டவை படங்களில் நடித்த நடிகை அர்ச்சனா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கேயே இருக்கிறார். 

 

இயக்குநர் பாரதிராஜா, துக்கம் தாளாமல் கதறி அழுதார்.  அவரை மகேந்திரன்,  சேரன், ராம், ஜி. ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் தேற்றினர்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

நன்றி: நக்கீரன்

பாலுமகேந்திரா மறைவு : 

பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி 

தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா( வயது 75 ), இன்று மூச்சுத்திணறலால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. பொது மக்களும், திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஆசிரியர் நக்கீரன்கோபால், பத்திரிகையாளர் மாலன், காங்கிரஸ் பிரமுகர் வசந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாலுமகேந்திரா உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

இயக்குநர்கள் பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்னம்,பாலா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே. செல்வமணி, அமீர், சேரன், பி.வாசு, வசந்த், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.சி.சக்தி, ராம், விக்ரமன், வி.சேகர், வசந்த், தங்கர்பச்சான், கேயார், சுரேஷ்கிருஷ்ணா, பாண்டிராஜ், சிம்புதேவன், சசிகுமார், சமுத் திரக்கனி, நடிகர்கள் கமல்,சத்யராஜ், விஜய், சூர்யா,தனுஷ், விவேக், பார்த்திபன், பாண்டியராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், ரமேஷ் கண்ணா, ஸ்ரீகாந்த், சூரி, விக்னேஷ், மனோபாலா, வையாபுரி, ஒளி ப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசைய மைப்பாளர்கள் இளையராஜா, கணேஷ்(சங்கர்), எஸ்.ஏ. ராஜ்குமார், கவிஞர்கள் வைரமுத்து, பழனி பாரதி, சினேகன், மதன்கார்க்கி, உள்ளிட்டோர் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், நீங்கள் கேட்டவை படங்களில் நடித்த நடிகை அர்ச்சனா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கேயே இருக்கிறார். நடிகை ஈஸ்வரிராவும் அங்கேயே இருந்து காரியங்களை கவனிக்கிறார். நடிகைகள் குஷ்பு, சோனா, பசிசத்யா உள்ளிட் டோரும் அஞ்சலி செலுத்தினர்.

 

nakkeerangopal%20balumahendra.jpg

 

ilayaraja%20balau.jpg

 

 

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

நன்றி: நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

உலக தரத்தில்

ஈழத்தமிழர்களுக்கு பெருமைசேர்த்த

பலருக்கும்  

பலதுறைகளில் வழி  காட்டிய உன்னத கலைஞன் பாலு மகேந்திரா

மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

https://www.youtube.com/watch?v=OqawwIyaelQ

 

https://www.youtube.com/watch?v=dMViPDwf25s

 

https://www.youtube.com/watch?v=w8h5eUoe7f4

 

https://www.youtube.com/watch?v=FqG5RuJ2plw

 

https://www.youtube.com/watch?v=yWSj9HoG_a0

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

7hpx.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மறைவு மனதை வாட்டிக்கொண்டு இருக்கிறது. என்னை அறியாமல், நேரம் போனதே தெரியாமல் அவரின் பேட்டிகள், அவரின் படங்களின் சில பகுதிகளை youtube இல் - தட்டிக்கொண்டு இருக்கிறேன். சிறுவயதில் என்னை பாதித்த ஒரு படம் மூன்றாம் பிறை!! கமலும் ஸ்ரீதேவியும் ஒன்றாக சேரவில்லயே, கமல் கடைசியில் என்ன ஆனார்... என நினைத்து பல இரவுகள் ஏக்கத்துடன், பெருமூச்சுடன் தூங்கச்சென்றுள்ளேன்.   

இதோ ஒரு காட்சி …

கமல் சமையல் செய்துக்கொண்டு இருப்பார், ஸ்ரீதேவி கமலிடம் சுப்ரமணிக்கு (நாய் குட்டி) பொட்டு வைக்க ink bottle கேட்பார். ஸ்ரீதேவி தானாகவே ink bottle எடுக்க try பண்ணி, எல்லாத்தையும் போட்டு உடைப்பார்.

கமல் கடுப்பாகி திட்டி தீர்த்து விடுவார். சமயலும் சரிவராமல் தீய்ந்து போய் விட, கமல் திட்டோ திட்டு என்று திட்டி விட்டு, கடைக்கு சாப்பாடு வாங்க போய் விடுவார்கமல் வீட்டுக்கு வரும் நேரம் ஸ்ரீதேவி அங்கே இருக்க மாட்டார். அவரும் கோவத்தில் எங்கோ போய் இருப்பார். கமல் வீட்டை விட்டு வெளியே வந்து ஸ்ரீதேவியை தேடி தெருவில் நடப்பார்லேசான மழை தூறல் ... காடு, மேடு,எல்லா இடமும் தேடுவார். ஒளிப்பதிவு, படப்பிடிப்பு, location... இன்னும் ஒரு உலகத்திட்கு அழைத்து செல்லும்...அப்போது இசைஞானி அவர்களின் background score (BGM) காட்சிக்கு ஏட்ப, மனதை மிகவும் உருக்க வைக்கும் வயலின் வர்ணஜாலமாய் ஒலிக்கும் (1.02.00 -1.04.02). கமல் நடந்து வரும் போது எதேத்சையாய் ஒரு தெருப் பிள்ளையார் சிலையை பார்த்து கண் கலங்கி, மண்டியிட்டு தீபம் ஏற்றுவார் .. background music எதுவுமே இல்லாத ஒரு நிஷப்தம் .. total silence. கமல் தன் கண்களால் பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார் (ஏக்கம், சோகம், ஆற்றாமை,..) திரும்பவும் கமல் எழுந்து நடக்க

இசை அவரை பின் தொடர... கண்ணீர் மட்டுமே என்னில் மிச்சம் .. 

உன்னத கலஞர்கள் பாலு மகேந்திரா, இசை ஞானி, கமல் சேர்ந்து அணு அணுவாய் செதுக்கிய கலை படைப்பு, இன்றும் கூட தொட முடியாத தூரத்தில் படமாக அல்ல பாடமாக இருக்கின்றது.

இப்போது பாலு மகேந்திரா கூறிய வரிகளை நினைத்துப்பார்க்கிறேன்..

 

"எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனதுஅர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லைThat is my Raja !!! எவ்வளவு உண்மை ...

https://www.youtube.com/watch?v=DZZlCfpa6ks

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

இவரை ஈன்ற மட்டு மண் மேலும் சிறப்படைகிறது

நேற்று ஒரு செவ்வியில் " 70 களில் சிங்கள தயாரிப்பளர்களை கெஞ்சினார் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தர சொல்லி. அவர்கள் பலரும் மறுத்தார்கள்". அவர்கள் பூட்டிய கதவு தென் இந்தியாவில் திறந்தது

  • கருத்துக்கள உறவுகள்
ஈழம் தந்த ஓப்பற்ற கலைஞர்களில் திரு பாலுமகேந்திராவும் ஒருவர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
 

நேற்று ஒரு செவ்வியில் " 70 களில் சிங்கள தயாரிப்பளர்களை கெஞ்சினார் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தர சொல்லி. அவர்கள் பலரும் மறுத்தார்கள்". அவர்கள் பூட்டிய கதவு தென் இந்தியாவில் திறந்தது

 

இது தவறாக இருக்கலாம். ஏனெனில் 70களில் சிங்கள படம் எடுத்த பலர் தமிழ் முதலாளிகள்.

பாலு மகேந்திரா முதல் ஒளிப்பதிவு செய்த படங்கள் எல்லாம் மலையாளம் தான் (இருபதுக்கு கிட்ட ) பின்னர் கன்னடம் அதன் பின்னர் தான் தமிழ் .

அவர் எடுத்த முதல் படமும் கன்னடம் .

மணிரத்தினத்தின் முதல் படத்திற்கு ஒளிப்பதிவு பாலு மகேந்திரா -பல்லவி அனு பல்லவி( கன்னடம் )

இலங்கையன் , தமிழன் என்று மலையாளிகள் பார்த்திருந்தால் பாலு மகேந்திரா வெளிச்சத்திற்கு வராமலே போயிருக்கலாம் .

 

Edited by arjun

ஆழ்ந்த இரங்கல்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் , ஆழ்ந்த இரங்கல்கள் ...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலு மகேந்திரா முதல் ஒளிப்பதிவு செய்த படங்கள் எல்லாம் மலையாளம் தான் (இருபதுக்கு கிட்ட ) பின்னர் கன்னடம் அதன் பின்னர் தான் தமிழ் .

அவர் எடுத்த முதல் படமும் கன்னடம் .

மணிரத்தினத்தின் முதல் படத்திற்கு ஒளிப்பதிவு பாலு மகேந்திரா -பல்லவி அனு பல்லவி( கன்னடம் )

இலங்கையன் , தமிழன் என்று மலையாளிகள் பார்த்திருந்தால் பாலு மகேந்திரா வெளிச்சத்திற்கு வராமலே போயிருக்கலாம் .

 

நாற்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த அரசியல் நிலைக்கும் இன்றைய அரசியல் நிலைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் அண்ணன் அல்லொலகல்லோலப்படுகின்றார்.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் மலையாளி என்ற இனமே இருக்கவில்லை . :icon_mrgreen: .

 

இங்கு சீமான் பேசுவது போலத்தான் எம்மவர் பலர்  நிலையும் இருக்கு . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.