Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவத்தினரின் அடாவடி! இராணுவத்தினரின் தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்த கூட்டத்தை சேர்ந்தவர் போலிருக்கு . :lol:

 

ஒரு வேளை முழு இலங்கையையும் பிடிக்கிற ஆளாய் இருக்குமோ?? :lol:  :lol: 

  • Replies 65
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவராக இருக்கலாம்.

யாழ்ப்பாண தமிழரில் பலர் புகையிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவர்கள்.

டச்சு காரன் இவர்களை மலபார் மக்கள் என்று தான் எழுதி வைத்தான். தமிழன் என்று எழுதவில்லை. முன்னர் போர் வீரர்களாக பாண்டிய, சோழ அரசுகளுடன் வந்தார்கள் தமிழர்கள். வணிகர்களாக மீன்பிடிப்பவர்களாக வந்தார்கள்.

  • சிங்களம் இலங்கையில் தான் தோன்றியது என்பதை எந்த ஆய்வாளரும் மறுக்கவில்லை.
  • தமிழ் இலங்கை தீவில் தான் தோன்றியது என்று ஐயம் திரிபட நிறுவ முடியுமா?
  • சிங்களவருக்கு உள்ள ஒரே நாடு இலங்கை. அவர்களுக்கு வேறு நாடு இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்?

 

 

 

“சிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)”மே 18இன் தொடக்கம் (YOUTUBE)

 

 

May 18, 2014
 
 

1398512789tamil_eelam_map.png?resize=212இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம், நாகதீபம், தாமதீபம், ஸ்ரீலங்கா என்றும், கிரேக்கர்கள் சின்மோண்டு சேலான், தப்ரபேன் என்றும், அரேபியர்களால் செரெண்டிப் என்றும், ஆங்கிலேயர்களால் சிலோன் என்றும் அழைக்கப்பட்டது. 1947க்கு பின் இலங்கை என அழைக்கப்படும் தீவின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது. ராவணன் வாழ்ந்தான், சீதையை கடத்தினான், ராமன் பாலம் அமைத்தான் எனக்கூறப்பட்டாலும் கி.மு.6ம் நூற்றாண்டிலிருந்து தான் அந்நாட்டின் வரலாறு ஓரளவு சிங்களர்களால் உருவாக்கப்பட்ட மகாவம்சம் என்ற நூல் மூலம் கிடைக்கிறது.

இலங்கையின் பூர்வகுடிகளாக இயக்கர், நாகர், வெத்தா (வேடன், காட்டுவாசிகள்) வாழ்ந்து வந்துள்ளனர். இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வணிக நோக்குடன் பலர் சிலோன் போய்வந்துள்ளனர். கி.மு.5ஆம் நூற்றாண்டில் தமிழ் வணிகர்கள் இலங்கையின் மாந்தோட்ட துறைமுகத்திற்கு போனவர்கள் பின் குடும்பத்துடன் நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள். அதே காலகட்டத்தில் வட இந்தியாவிலுள்ள கலிங்க நாட்டை சேர்ந்த 18 வயதே ஆன விஜயன் என்ற இளவரசனின் தவறான நடத்தையால் கடுமையான கோபம்கொண்ட மன்னன் விஜயனை நாடு கடத்தியுள்ளான். கப்பலில் 700  பேரோடு பயணம் செய்தபோது கடல் கொந்தளிப்பால் கப்பல் இலங்கையின் தம்பலகாமத்தில் தரை தட்டியுள்ளது. கப்பலில் இருந்து இறங்கியவர்கள் அங்கேயே குடிசை போட்டு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தலைவனாகவும் விஜயனே இருந்துள்ளான். விஜயன் தனக்கு மனைவி வேண்டும் என இலங்கையில் வாழ்ந்த ஆதிவாசியான இயக்கர் தலைவி குவேனியை மணந்துக்கொண்டுள்ளன். இவர்கள் இல்லற வாழ்வில் குவேனி 2 குழந்தைக்கு தாயாகியுள்ளாள்.

சிறு சிறு கூட்டங்களோடு சண்டை போட்டு நான் தான் பெரிய ஆள். இனி நான் தான் உங்களது தலைவன். இப்பகுதிக்கு நான் தான் ராஜா என பிரகடணப்படுத்திக்கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளான் விஜயன். காலப்போக்கில் இலங்கை மன்னனாக விஜயன் முடிசூடிக்கொள்ள முயன்றபோது பட்டத்துக்கு ராணி தேவைப்படுகிறாள். ராணியாக போகிறவள் அரச குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என நினைத்த விஜயன் ஆதிவாசி குவேனியை துரத்திவிட்டு பாண்டிய நாட்டு ராஜகுமாரியை மணக்கிறான். மன்னனான விஜயன் தான் இலங்கை வரலாற்றில் முதல் அரசன். இலங்கையின் பூர்வ குடிகளான ஆதிவாசிகளுக்கும் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் கூட்டு சேர்ந்ததின் விளைவாக உருவானது தான் சிங்களர் இனமே. முதல் அரசனான விஜயன் காலத்தில் சைவ கடவுள் தான் இலங்கையை ஆக்ரமித்திருந்தது. விஜயன் கி.மு.513 முதல் 504 வரை ஆண்டபோதும் அதற்கு பின்னும் சேர, சோழ, பாண்டிய படைகள் இலங்கையில் புகுந்து அரசாண்டது.

கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌவுத்தம் இலங்கை தீவுக்குள் மகிந்தா தேரரா என்ற அரசன் மூலம் நுழைகிறது. மன்னன் பின்பற்றும் மதம் என்பதால் அரச அதிகார வர்க்கத்தால் நாட்டு மக்களிடம் பௌத்தம் தீவிரமாக பரப்பப்படுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் நேபாளத்திலுள்ள லூம்பினி என்னுமிடத்தில் அரசவம்சத்தில் பிறந்து அரசனாக வாழ்ந்த கவுதம சித்தார்தர் (கி.மு.566-கி.மு.486) தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பின் வாழ்க்கையை வெறுத்து தனது 29வது வயதில் சந்நியாசி ஆனார். அரதகலமா, குத்ரகா என்பவர்களை குருவாக ஏற்று 35வது வயதில் இந்தியாவின் பீகார் மாநிலம் காயை என்னுமிடத்திலுள்ள போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். அவரின் வாழ்நாள் முழுவதும் இந்தியாவை வலம் வந்து கடவுளுக்கு உருவம் இல்லை என கூறினார். அவர் காணும் மனிதர்களிடம் எல்லாம் அஹிம்சையை போதித்தார். மக்களிடம்,நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடி,தியானம் என 8 நெறிமுறைகளை போதித்தார். புத்தர் சந்நியாசியான பின் 3 முறை இலங்கை சென்று வந்தார் என கூறப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு உருவம்மில்லை என போதித்தவரை அவர் இறந்தது போன பின் அவரையே கடவுளாக்கி அவரது உருவத்தை வணங்குகிறார்கள் அவரை பின் பற்றுபவர்கள்.

கி.மு 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் கலிங்க போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தன் ரதத்தில் ஏறி போர்களத்தை சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார். அவர் சென்ற பாதை முழுவதும் இரண்டு புறத்திலும் லட்சகணக்கான போர் வீரர்கள் இறந்து போயிருந்தார்கள். இதை கண்டு மனம்வெறுத்து போன அசோகர் இனி போர் வேண்டாம் என முடிவு செய்து ஆன்மீகத்தின் மீது நாட்டம் செலுத்தினார். புத்தரின் கொள்கைகளை போதனைகளை அறிந்தவர் பௌத்தத்துக்கு மாறினார். புத்தரின் கொள்கைகள் மீது தீவிர காதல் கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் பௌத்த மதத்திற்க்கு வரவைத்தார். தன் மகன் மகேந்திரன், மகள் சங்கமித்ரையை பௌத்த மதத்தை பரப்பச்சொல்லி இலங்கைக்கு அனுப்பினார். மகேந்திரன் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று பௌத்த மதத்தை பரப்பினார். அநுராதபுரத்தை அடுத்த மிசாகா என்ற மலை மேல் தங்கி பௌத்த கருத்துக்களை பரப்பிவந்தார். அப்போது அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த தேவனம்பிட்சா (கி.மு 247-கி.மு207) என்ற மன்னன் தனது படையினரோடு மிசாகா மலைக்கு வந்து மகேந்திரனை சந்தித்தார். மன்னன் உட்பட படை வீரர்களுக்கு பௌத்த கருத்துக்களை எடுத்துச்சொன்னார் மகேந்திரன். கருத்துக்களை கேட்ட மன்னன் தனது படை வீரர்கள் உட்பட 40 ஆயிரம் பேரோடு பௌத்த மதத்திற்க்கு மாறினர். பின் படிப்படியாக இலங்கை தீவில் பௌத்தம் வளர்ச்சி வேகமானது.

பௌத்தம் இலங்கையில் பரவுவதற்க்கு முன் சிங்களர்கள் முருகன், சிவன், பார்வதி போன்ற கடவுள்களை வணங்கி வந்தனர். பௌத்தம் நுழைந்த பின் மற்ற கடவுள்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு புத்தர் முன்னிலைக்கு வந்தார். தற்போது சிங்கள மக்களின் பெரும்பான்மை மதம் பௌத்தம், சிங்கள மக்களில் கொஞ்சம் பேர் முருகனை வணங்குகின்றனர். ஏழ்மையானவர்கள் சிலர் கிருஸ்த்துவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். ஆட்சியாளர்கள் யாராகயிருந்தாலும் பௌத்தத்தை மதிக்கவில்லை என்றால் பிரச்சனைதான். அதனால் தான் அங்கு ஆட்சி பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பௌத்த மதத்துக்கு மாறிவிடுகின்றனர்.

Ceylonesefishermen.jpg

கி.மு.2ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பலர் அத்தீவை ஆண்டாலும் கி.மு.205 முதல் கி.மு.161 வரை இலங்கை முழுவதையும் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ்மன்னன் எல்லாளன் நீதியான, சிறப்பான ஆட்சி அமைத்துள்ளான். எல்லாளன் இந்துவாக இருந்தாலும் பெரும்பான்மை மதமான பௌத்தத்தை மதித்து ஆட்சி செய்துள்ளான். கி.மு.161ல் வயது முதிர்ந்த எல்லாளன் நடக்கமுடியாமல் இருந்தபோது சிங்கள இளவரசனான துட்டகாபினி படை திரட்டி வந்து எல்லாளனை தோற்கடித்து சிம்மாசனம் ஏறினான்.

இதே காலகட்டத்தில் தீராத நோயை தீர்ப்பதற்காக தமிழகத்திலிருந்து இலங்கையின் வடபகுதிக்கு மாருதப்பிரவை என்ற இளவரசி வந்து தங்கி சிகிச்சை எடுத்தபோது அந்த பகுதியின் குறுநில மன்னனாக இருந்த உக்கிரசிங்கசேனன் மீது காதல் வயப்பட்டு அவனை மணம் புரிந்துக்கொண்டுள்ளாள். அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்ட உக்கிரசிங்கசேனன்க்கு ஆண் வாரிசு பிறந்தது அவனுக்கு இந்தியாவின் மதுராபுரியில் இருந்து பெண்ணெடுத்த போது மணப்பெண்ணுடன் நிரந்தரமாக தங்க அங்கிருந்து 60 வன்னியர்கள் உடன் வந்துள்ளார்கள்.

கால ஒட்டத்தில் அடங்காப்பறிலே வாழ்ந்த பூர்வ குடிகளான ஆதிவாசிகலால் மன்னருக்கு பல தொல்லைகள் வர அவர்களை அடக்க மதுராபுரியில் இருந்த வாட்டாசாட்டமான போர் பயிற்சி பெற்ற 24 வீரர்கள் அடங்காப்பற்றுக்கு வந்தனர். வந்தவர்கள் ஆதிவாசிகளை அடக்கினர் பின் வருங்காலத்தில் பிரச்சனை வந்தால் சமாளிப்பதற்க்காக அவர்களை தன்னுடனே குடியமாத்தியுள்ளான் மன்னன்.

கி.மு.200 முதல் கி.பி.1000 வரை இலங்கையின் தலைநகராக அனுராதபுரம் இருந்தபோது உள்நாட்டிலேயே பல மன்னர்கள் தங்களுக்குள் போர் புரிந்துக்கொண்டு வெற்றி பெறுவோர் ஆட்சி செய்வது. தோற்ற மன்னன் படை திரட்டி மீண்டும் போர் புரிந்து ஆட்சியை பிடிப்பது என இருந்துள்ளனர். இந்தியாவின் சேரர், சோழர், பாண்டியர்கள், வட இந்திய மன்னர்களும் இலங்கை தீவு மீது படையெடுத்து வெற்றி பெற்றபின் போர் வெற்றிக்கு காரணமான தளபதியை மன்னராக்கி அங்கிருந்து வரி வாங்கி வந்துள்ளனர்.

1000 ஆண்டுகளுக்கு முன் அனுராதபுரம் தலைநகராக இருக்கும்போது வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது தங்களுடன் பர்தா போட்ட பெண்களை அழைத்து வராததால் கவுன் போட்ட தமிழ், சிங்கள பெண்களை மணந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அதிகமாக சிங்கள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டனர். இந்த கூட்டு மூலம் உருவான இலங்கை முஸ்லிம் இனத்தை இலங்கையில் சோனகர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தற்போதைய முக்கிய தொழில விவசாயம், 93% பேர்க்கு தாய்மொழி தமிழ், வாழ்வு பகுதி கிழக்கிலங்கை. தென் தமிழக முஸ்லிம்கள் சிலோன் போனபோது அவர்களும் கிழக்கிலங்கையில்தான் குடியேறினார்கள் அவர்களும் சோனகர் என்றே அழைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே 22 கடல் மைல் தான் என்பதால் அடிக்கடி இலங்கை மீது 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரனும், 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மன்னன் படையெடுத்து வென்றபோது நூற்றுக்கணக்கான தமிழர்கள் தீவில் குடியேறினர். தமிழகத்திலிருந்து பலர் குடியேற ஆரம்பித்தார்கள். இதனால் வடபகுதியான யாழ்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, அனுராதபுரம் வரை தமிழர்கள் பரவியதால் சிங்களர் கிழக்கை நோக்கி அவர்களாகவே நகர ஆரம்பித்தார்கள்.

இதுவே காலப்போக்கில் இலங்கை 3 பிரிவாக பிரிந்தது. தமிழரை அதிகமாக கொண்ட வடப்பகுதியான யாழ்ப்பாண ராஜ்ஜித்தை நல்லூரை தலைநகராக கொண்டும், தென்னிலங்கையை கோட்டை ராஜ்ஜியமென்றும் (இங்கு சிங்களர் அதிகம்),தமிழர்-சிங்களர் என சரிசமமாக வாழ்ந்த மத்தியபகுதியை கண்டி ராஜ்ஜியம்மென 3 பிரிவாக பிரித்தது. இந்த மூன்று ராஜ்ஜிய மன்னர்களும் தமிழகத்தின் சேரர்-சோழர்-பாண்டியர் போல சில பிரச்சனைக்காக போர் புரிந்துக்கொண்டனர்.

Ceylonese+Group+by+a+Tree+-+Ceylon+%2528

இந்தியாவை போல, குறிப்பாக தமிழகத்தை போல இலங்கையின் பெண் சமூகம் கிடையாது. தமிழரோ, சிங்களரோ,சோனகரோ எந்த சமூகமாக இருந்தாலும் பெண்கள் தான் குடும்ப தலைவர். ஆண்கள் அவர்களின் பாதுகாவலரே. அதோடு திருமணம் ஆனதும் பெண் வீட்டோடு போய் மாப்பிள்ளை நிரந்தரமாக தங்கிவிடுவார். கல்யாணத்துக்கு பின் அதுதான் அவரின் வீடு. (பொறந்த வீட்டுக்கு போன சட்டுபுட்டுன்னு மனைவி வீட்டுக்கு வந்துடுனுமாம்). சோனகர் இன ஆண்கள் பெண்ணுக்கு வரதட்சணை தந்து திருமணம் செய்துக்கொண்டு மனைவியுடன் போய்விடுவர். சிங்கள பெண்கள் இன்னும் ஒரு படிமேலே. சிங்கள பெண்கள் பல ஆண்களை மணந்துகொள்ளும் வழக்கம் உண்டு. கீழ்மட்ட ஏழை சிங்கள தரப்பில் அப்பழக்கம் குறைந்து வருகிறது.

கி.பி.1242ல் உருவான யாழ்ப்பான ராஜ்ஜியத்தை கி.பி.1450ல் ஆண்ட கனகசூரிய சிங்கையாரை, அதே ஆண்டில் உருவான தென்னிலங்கையின் கோட்டா ராஜ்ஜியத்தின் மன்னன் செண்பகப்பெருமாளின் தளபதி சப்புமால்குமாராய 1450ல் படையெடுத்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக்கொண்டார். தப்பியோடிய யாழ்ப்பாண மன்னன் 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து உதவிபெற்று படையெடுத்து 1467ல் இழந்த நாட்டை மீட்டான்.

கி.பி.1505ல் டொன் லொரேன்கோ டி அல்மேதா என்ற தளபதியின் தலைமையிலான போர்த்துகீசிய குழு புதிய நாடுகளை வணிக நோக்கத்தில் தேடிபோன போது புயலில் சிக்கிய கப்பல் கொழும்பு துறைமுக கறையில் ஒதுங்கியுள்ளது. அந்த  பகுதி கோட்டோ மன்னின் கீழ் இருந்தது. வணிகம் செய்ய கோட்டோ மன்னனிடம் அனுமதி பெற்றனர். அனுமதி பெற்ற போர்த்துகீசய குழு தென்னிலங்கையில் வாணிபத்தோடு மதப்பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தியது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ராச்சியத்துக்குள் புகுந்தும் மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். தென்னிந்தியாவில் மதப்பிரச்சார குருவாகயிருந்த பிரான்சிஸ்சேவியர் ஒரு பாதிரியரை யாழ்ப்பாணத்துக்கு ஸ்பெஷலாக அனுப்பிவைத்தார். அந்த பாதிரியரும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட மன்னாரில் எதிர்பார்த்ததை விட அதிகமான தமிழர்களை கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்துவிட்டார். இதை கேள்விப்பட்ட யாழ்ப்பாண ராஜ்ஜிய மன்னன் சங்கிலி 1544ல் மன்னார்க்கு வந்து மதம்மாறிய சுமார் 600 பேருக்கு மரண தண்டனை விதித்தான்.

இதை கண்டு அதிர்ந்த போர்த்துகீசிய பாதிரிமார்கள் தங்களது தலைமை அமைந்த கோவா கவர்னர்க்கு தகவல் சொல்லி சங்கிலியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனர். கோவா கவர்னரும் சங்கிலியனிடம் பேச்சுவார்த்தை நடத்த தன் தளபதியை ஒருவரை அனுப்பி வைத்தார். பேச்சுவார்த்தைக்கு வந்த தளபதி சங்கிலியன் தந்த சன்மானத்தை பெற்றுக்கொண்டு போய்விட்டான். இதில் அதிருப்தியான கோவா கவர்னர் சங்கிலியன் படைகள் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். 1561ல் கொன்ஸ்டன்டீனோ-டி-பிரகன்ஸ என்ற தளபதி யாழ்பணத்தின் மீது படையெடுக்க சங்கிலியன் –போர்த்துகீசியர்கள் இடையே சண்டை நடந்தது. போரின் இறுதியில் யாழ்ப்பாண தலைநகர் நல்லூரை போர்த்துகீசியர்கள் கைப்பற்றினர். தப்பிய சங்கிலி தந்திரம் மூலம் மீண்டும் மன்னனாக முயல போர்த்துகீசியர் சங்கிலிய நம்பவைத்து கொன்றனர். சில கடுமையான நிபந்தனைகளை போட்டு யாழ்ப்பாண மன்னனாக புவிராஜபண்டாரம் என்பவனை அமர்த்தினர்.

c.1890%2527s+PHOTO+INDIA+CEYLON+MEN+IN+Rஇதன்பின் கோட்டோ ராஜ்ஜியத்தின் மீது பார்வை செலுத்திய போர்த்துகீசியர் ராஜ்ஜிய அரசியலின் புகுந்தவர்கள் 1580ல் கோட்டோ மன்னனுக்கு அடுத்து அரசால வாரிசு இல்லாததால் பணத்தை தந்து கோட்டோ ராஜ்ஜியத்தை போர்த்துகீசிய அரசர் பேரில் உயில் எழுதி வாங்கிக்கொண்டு நிழல் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். 1597 கோட்டோ மன்னன் இறந்ததும் தென்னிலங்கை போர்த்துகீசயர் வசமானது நிர்வாகமும் செய்ய ஆரம்பித்தார்கள். அதேபோல் 1590ல் யாழ்பாண மன்னரான புவிராஜ் பண்டாரம் போர்த்துகீசியர்களின் பேச்சை மீறீ செயல்பட்டார். 1591ல் புவிராஜ் பண்டாரத்தை அந்தரோ என்ற தளபதி படையெடுத்து வென்றான். புவிராஜ் பண்டாரத்தை வென்று 1620 வரை பேருக்கு சிலரை மன்னனாக வைத்திருந்தனர். அதன்பின் 1620 முதல் யாழ்ப்பாணத்தை நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் போர்த்துகீசியர். அப்படியும் மத்திய பகுதியை சேர்ந்த கண்டி ராஜ்ஜியம் போர்த்துகீசியர் கண்ணில் படவேயில்லை (அ) கண்டுக்கொள்ளவில்லை.

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நெதர்லாந்தில் அதிகமாக வாழும் ஒல்லாந்து இனத்தவர்கள் 1630களில் வாணிபம் செய்ய புதிய நாடுகளை தேடி கப்பல் பயணத்தின்போது வழியில் எதிர்ப்பட்ட தீவை கண்டு ஒய்வு எடுத்துவிட்டு செல்லலாம் என இலங்கை பக்கம் ஒதுங்கினார்கள். இலங்கையில் கிடைத்த வைரத்தை கண்டு அங்கேயே வியாபாரம் செய்ய முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். நூம் மட்டும் சுரண்டினால் போதாது ஓல்லாந்தர்களும் சுரண்டிக்கொள்ளட்டும் என வியாபாரம் செய்ய அனுமதி தந்தனர். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல என கிராமத்தில் சொல்வார்கள். அதைப்போல போர்த்துக்கீசியர்களிடம் வியாபாரம் செய்ய அனுமதி வாங்கியவர்கள் பின் பேசிப்பேசியே போர்த்துக்கீசியர் வசம்மிருந்த இலங்கை 1638ல் ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கை ஒல்லாந்தர் வசமானது. 1638 முதல் 1796 வரை என 156 ஆண்டுகள் தனியாக ஆண்டனர். இவர்கள் காலத்திலும் கண்டி ராஜ்ஜியம் மட்டும் தனி ராஜ்ஜியமாக அடிபணியாமல் இருந்தது.

கொள்ளைக்கும் சுரண்டல்க்கும் பேர்போன ஆங்கிலேயர்கள் 1796ல் இந்திய பெருங்கடல் வழியாக கப்பலில் கொச்சிக்கு சென்றுக்கொண்டு இருந்தனர். வழியில் ஒல்லாந்து கவர்னரிடம் திரிகோணமலையில் தங்க அனுமதி கேட்டனர்,முதல்ல தங்கறன்னுவான், அப்புறம் வியாபாரம் பண்ணனூம்பான், அப்பறம் எல்லாத்தையும் புடுங்குவான். நாம போர்த்துக்கீசியர்க்கு செய்ததுபோல ஆங்கிலேயர்க்கு இடம் தந்தோம். நாம போர்த்துக்கீசியர்க்கு செய்தத இவன் நமக்கு பண்ணிடுவான் என யோசித்து தரமுடியாது என ஒல்லாந்து ஆளுநர் கூறிவிட்டார்.

என்னை கண்டு பயம்மில்லையா, நான் கேட்டே இடம் தர மறுக்கிறாயா என கோபமாகி இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்கள் மீது 1801ல் போர் தொடுத்து ஒல்லாந்தர்களை அடித்து துரத்தி விட்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். தனி ராஜ்ஜியம் செய்துக்கொண்டிருந்த கண்டி ராஜ்ஜியத்தை அடிமைப்படுத்த முயன்றனர். கண்டி ராஜ்ய மன்னர் முரண்டு செய்தார். இதனால் ஆங்கிலேயர் கோபம் அடைந்தனர். எங்கள் அதிகாரத்துக்கு கீழ் வா கண்டி மன்னரிடம் பேசினர். கண்டி மன்னார் மசியவில்லை.

1637ல் கண்டி ராஜ்ஜியம் ஆரம்பமானது. போர்த்துகீசியர், ஒல்லந்தர் காலங்களிலும் சுதந்திர ராஜ்ஜியமாக இருந்தது. கண்டி வீரர்கள் போர் புரிவதில் வல்லவர்கள். 1707ல் பதவியேற்ற வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்கர் வம்ச பெண்ணை மணந்திருந்தவனுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் தமிழ் சமூகத்திலிருந்த “மருமகட்பிள்ளை” என்ற வழக்கப்படி மனைவியின் சகோதரன் ஸ்ரீவிஜயராஜசிங்கனை மதுரையிலிருந்து வரவைத்து 1739ல் அரசனாக்கினான். அதன்பின் கண்டி ராஜ்ஜியமென்பது கண்டி நாயக்கர் ராஜ்ஜியமானது. 1803ல் பதவியாசை கொண்ட கண்டி முதலமைச்சர் பிலிமத்தலா ஆங்கியேலருடன் போரிடுமாறு மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்னை (கண்ணுசாமி) தூண்டிவிட போர் ஆரம்பமானது. தோல்வி வருகுது என்றென்னி மன்னன் தப்பியோட தளபதிகள் வீரத்துடன் போரிட்டு நாட்டை காத்தனர். மீண்டும் வந்து பதவியேற்றான் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன். அடுத்தடுத்து முதலமைச்சர் பிலிமத்தலா மன்னனுக்கு துரோகம் செய்ய அரசனால் கொல்லப்படுகிறான்.

நம்வூரில் அரசியல் தலைவர்கள் பதவியில் இருக்கும் தங்களது மாவட்ட “தலைவர்கள்“கள் இறந்து போனால் அவரின் பிள்ளைக்கு பதவி தருவதை போல. மன்னர் பிலிமத்தா மருமகன் எகலப்பொலைக்கு மாமனார் வகித்த முதலமைச்சர் பதவியை தந்தார். இவனும் மாமனாரைப்போல துரோகியாக செயல்பட்டான். இவனது தூண்டுதலால் விக்கிரம ராஜசிங்கன் ஆங்கிலேயர் இடையே 1815 பிப்ரவரி 10ல் மீண்டும் ஏற்பட்ட போரில் கண்டி நாயக்க மன்னன் தோற்று போனார். கண்டி ராஜ்ஜியத்தை பிடித்த ஆங்கிலேயர் மார்ச் 2ல் மன்னனோடு ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொண்டு மன்னனாகயிருந்த ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன், அவரது இரண்டு மனைவிகள் உறவினர்கள், உதவிக்கு சிலரை தமிழகத்துக்கு நாடு கடத்தினர். தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர். இலங்கையின் கடைசி ராஜ்ஜியம்மான கண்டி நாயக்கர் ராஜ்ஜியமும் ஆங்கிலேயர் வசமானது. 1832 ஜனவரி 30 தனது 52வது வயதில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இறந்தார். அவரை பாலாற்றங்கரையில் புதைத்தனர். மனைவிகள், பிள்ளைகள் கல்லறையும் அருகருகேவுள்ளது. மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. தற்போதும் அவரின் வாரிசுகள் வேலூரில் உள்ளார்கள்

1825ல் இருந்து இலங்கையின் குடுமி முழுவதும் ஆங்கியேலர் வசமானது நிர்வாகம் பண்ண ஆங்கிலேயன் திட்டமிட்டே மதம், மொழி ரீதியாக மக்களை பிரித்தார்கள். அந்த பிரிப்பு தான் இன்றுவரை தொடரும் இனகலவரத்துக்கு காரணம்.

0012.jpg?resize=640%2C4801808 முதல் இலங்கை மக்களுக்கு டாட்டா காட்டிவிட்டு கப்பல் எறிய 1948 வரையென 133 ஆண்டுகள் இலங்கையை ஆண்டக்ஏ ஆங்கிலேயர். அவர்களின் ஆட்சி காலத்தில் தான் சட்டபூர்வமான பல துறைகளை உருவாக்கி அலுவலர்களை நியமித்து நிர்வாகம் செய்யும் முறையை கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் மகாராணியால் அமைக்கப்பட்ட கோல்புறாக் காமெரன்னின் குழு அறிக்கைப்படி 15 பேரை கொண்ட சட்ட நிரூபன சபையும், 6 பேரைக் கொண்ட சட்ட நிர்வாக சபையும் அமைத்தனர். அதில் உத்தியோகப்பற்ற உறுப்பினர்களாக சபையில் ஐரோப்பியர் 3 பேர், சிங்களர்-1, தமிழர்-1, பறங்கியர்-1 நியமிக்கப்படுவார்கள் என்றவர்கள் ம்ண்த் அமல்படுத்தவும் செய்தார்கள்.

இந்த உத்தியோகப்பற்ற சபை உறுப்பினர் பதவியை மக்கள் மத்தியில் பிரபலமாகவும், படித்தவர்களாகவும் பாரம்பரியமிக்க செல்வாக்கான அதிலும் குறிப்பாக தங்களுக்கு சாதகமாக யார் இருப்பார்கள் என்பதை பார்த்தே நியமித்தார்கள் ஆங்கிலேயர். தமிழர்களுக்கான பிரதிநிதியாக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குமாரசாமி முதலியார். ஆங்கிலேயர் சொல்வதை கேட்டு சரிங்க அய்யா என எப்போதும் கூறியதால் பலப்பல சலுகைகள் குமாரசாமி குடும்பத்துக்கு கிடைத்தது. தங்கசங்கிலி, பதக்கம் ஆகியவை தந்து தொடர்ந்து ஆமாம் சாமி போட வைத்தது பிரிட்டிஷ் அரசு.

அதே கோல்புறாக் காமெரன் பரிந்துரைப்படி இலங்கையில் 1868ல் முதலில் காவல் துறையையும், 1870ல் பொதுத்துறை, 1887ல் நீர்பாசன துறையையும், 1889ல் வன பாதுகாப்பு துறையும், 1890ல் குடியமர்த்தல் துறையையும் உருவாக்கினர். நிர்வாக பணிச்செய்ய பணியாளர்களை தேர்வு செய்தபோது ஆங்கிலேய மூளைகள் இனப்பிரிப்பையும் செய்தது. ஆங்கிலம் கற்று ஆங்கிலேயருடனிருந்த தமிழர்களை 2 ஆம் தரமாக நினைத்ததோடு தங்களை எதிர்த்தே பழக்கப்பட்ட சிங்களர்களுக்கு அரசு பணியில் அதிகமிடம் தந்தனர். 1868ல் 1710 அரசு பணியில் 794 சிங்களவர்கள் இருந்தனர். ஏறக்குறைய அதேயளவு தமிழர்களும், முஸ்லீம்களும் போட்டிபோட்டு பணிக்கு வந்தனர். பிற்காலங்களில் சிங்களவரை விட அரசு பணிகளில் தமிழர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழர் பிரதிநிதியாகயிருந்த குமாரசாமி முதலியார் குடும்ப வழியான பொன்னம்பலம் ராமநாதன் சட்ட நிரூபன சபைக்கு 1879 ஆண்டு தமிழர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1910ல் சபை நியமன உறுப்பினர் என்பது கலாவதியாகி 1911ல் முதல் சட்டசபை தேர்தல் இலங்கையில் நடந்தது. தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக சட்டசபை சென்ற ராமநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு பிரபு பட்டம் தந்து தொடர்ந்து ஆதரவாளராக வைத்துக்கொண்டது. ராமநாதனும் ஆங்கிலேயர் மனம் நோகாமல் நடந்துக்கொண்டார்.

ராமநாதனின் சகோதரர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆங்கிலேயருக்கு எதிராக அடிக்கடி அணல் கக்க ஆரம்பித்தார். 1913 ல் அருணாச்சலம் அரசு பதிவாளராகயிருந்து ரிட்டயர் ஆனதும் 1915 ஐனவரி 29ந்தேதி “சமூக சேவை சங்கம்” ஆரம்பித்து அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றியவர், ஆங்கிலேய ஏகாதியபத்தத்தை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். ஆங்கிலேய அரசை தமிழர் ஒருவர் எதிர்ப்பதை கண்டு மகிழ்ந்தனர்.  சிங்களத்தின் கரவா பிரிவு மக்களால் 1888ல் உருவாக்கப்பட்டு செல்வாக்குடன் இருந்த “இலங்கை தேசிய சங்கநிர்வாகிகள். பொன்னம்பலம் அருணாச்சலத்தை தங்களது சங்க வருடாந்திர மாநாட்டில் பேச வைக்கலாம் என முடிவு செய்தனர். தேசிய சங்க நிறுவனர் + பொது செயலாளர் டி.ஆர்.விஜயவர்த்தனா, அருணாச்சலத்தை சந்தித்து பேச அழைத்தார். அவரும் சரியென்றார்.

1917 ஏப்ரல் 2ல் நடந்த இலங்கை தேசிய சங்கத்தில் எங்கள் அரசியல் தேவைகள் என்ற தலைப்பில் பேசினார். அதில், “நாட்டை நிர்வாகம் செய்யும் நிர்வாக அதிகாரிகளின் ஆட்சியால் நாங்கள் அதிகாரிகம் இல்லாமல், அவர்களை எதிர்க்கும் திறமை குறைந்தவர்களாய் இருக்கிறோம். எங்கள் மக்களும், நாங்களும் எங்களுக்கு எதுவேண்டும் என கேட்க நினைத்தாளும் அதற்கு தடையாக நிர்வாக அதிகாரிகள் உள்ளார்கள் என கண்டித்ததோடு சுயாட்சி உரிமை வேண்டும் எனப்பேச தேசிய சங்கமோ ஏக வரவேற்பு தந்தது இலங்கை மக்களிடையே ஏக வரவேற்பும் பெற்றது.

சுயராட்ஜியம் வேண்டும் என கேட்டு 1917 மே மாதம் வழக்கறிஞர்கள் ஒண்றிணைந்து இலங்கை சீர்த்திருத்த கழகம் ஆரம்பித்து போராடினர். இதே காலகட்டத்தில் நாட்டில் தேசிய சங்கம், சீர்த்திருத்த சங்கம், இளைஞர் கழகம், சிலாபச் சங்கம், யாழ்பாண சங்கம், முஸ்லீம் சங்கம், பறங்கியர் சங்கம் பிரபலமானவைகள் மக்களிடையே செல்வாக்காவும் இருந்தன. மக்கள் பிரச்சனைகள், அரசியல் உரிமை வேண்டி தனித்தனியாக போராடவும் செய்தன.

இவைகளை ஒண்றினைத்து பெரிய இயக்கமாக உருவாக்கி கோரிக்கை வைக்கலாம், போராடலாம் என எண்ணிய அருணாச்சலம் எல்லா சங்கங்களிடமும் போய் பேச ஆரம்பித்தார். ஆரம்பித்ததிலேயே முஸ்லீம் சங்கம் முடியாது என்றது. காரணம், அப்போது சிங்களர்-முஸ்லீம் இடையே கலவரம் வந்தது. அதில் சிங்களவர்களுக்கு சாதகமாக தமிழர் பிரதிநிதியாகயிருந்த ராமநாதன் செயல்பட்டதால் உங்களோடு இணையமாட்டோம் எனச் சொல்லிவிட்டது. பறங்கியர் சங்கம் உங்களால எதுவும் முடியாது போய்யா நாங்க வரல எனச் சொல்லிவிட்டனர்.

மற்ற 5 சங்கங்களில் இலங்கை தேசிய சங்கமும், யாழ்பாண சங்கமும் இணையலாம் ஆனா நாங்க சொல்றத தான் எல்லாரும் கேட்கனும் என்றார்கள் தனித்தனியாக. காரணம், தேசிய சங்கம் பிரதேச வாரியாக பிரிநிதித்துவம் வேண்டும் என கேட்கிறது. யாழ்ப்பாண சங்கமோ, பிரதேச வாரியாமெல்லாம் வேணாம் இனவாரியாக மட்டுமே பிரதிநித்துவம் வேண்டும் என கேட்பதால் முரண்பட்டு நின்றன. 2 அமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேசிப்பேசியே கூட்டத்துக்கு அழைத்து வந்தார் அருணாச்சலம். 1917 டிசம்பர் 15 கொழும்பில் 5 சங்க பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்களென 144 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில்

  1. இனரீதியான பிரதிநித்துவம் இருக்கும்.

     

  2. உத்தியோகப்பற்ற உறுப்பினர் சபையில் சிங்களர் தமிழர் இடையே சம பலம் இருக்க வேண்டும். என தமிழர்கள் கேட்டதற்கு கூட்டத்திலிருந்த சிங்கள தலைவர்கள் அறை-குறை மனதுடன் தலையாட்டினர். ஆனால் தேசிய சங்க தலைவர்களான ஜேம்ஸ்பிரிஸ், சமவிக்கிரம், எல்.ஆர்.சேனநாயக்கா எதிர்த்தனர். அப்படி எதிர்க்க மற்றொரு காரணமும்மிருந்தது. இனரீதியாக எடுத்துக்கொண்டதால் தமிழர்கள் தம்மோடு சம பலத்துடன் இருப்பார்கள் அது கூடவேகூடாது என எண்ணியதாலே எதிர்த்தனர். பேசிப்பேசியே இறுதியில் வடமாகாணத்தில்-3, கிழக்கு மாகாணத்தில்-2,மேல் மாகாணத்தில்-1 பிரதிநிதிகள் இருப்பார்கள் என ஒப்பந்தம் செய்துக்கொண்டார்கள்.

1919 டிசம்பர் 11ல் கொழும்பு – டவுன் ஹாலில், 5 அமைப்புகள் இணைந்த இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றுவித்தனர். இதன் தலைவராக பொன்.அருணாச்சலமே நியமிக்கப்பட்டார். ஒரு தமிழன் கீழ நாமளா என எண்ணிய சிங்கள தலைவர்கள் அருணாச்சலத்தின் பேச்சை மதிக்காமல் செயல்பட்டதோடு தமிழர்களுடன் போட்டிக்கொண்ட ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தனர். இதனால் 1922ல் தலைவர் பதவியை தூக்கி எறிந்த அருணாச்சலம். தேசிய காங்கிரஸிருந்து வெளியேறி தமிழர் சீர்திருத்த கழகத்தை உருவாக்கினார். அதே ஆண்டு இந்தியா வந்திருந்தவர் இந்தியாவிலேயே காலமானதால் இலங்கையில் ஆங்கிலேய எதிர்ப்புக்கு ஆளில்லாமல் வெற்றிடம் ஏற்பட்டது.

அந்த வெற்றிடத்தை நிரப்ப யாழ்ப்பாணம் வடமராட்சியையடுத்து சில கி.மீ. தொலைவிலுள்ள அல்வாய் கிராமத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இயற்கை அறிவியல், சட்டம் படித்து தனது வாத திறமையால் பக்கத்து நாடுகளிலும் போய் வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழர்களுக்காக போராடவந்தார். 1931 இலங்கைக்கான முதலாவது எம்.பி.தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவு தொகுதிகளில் நின்றபோது தோற்றவர். 1934 பருத்திதுறையில் நடந்த இடைத்தேர்தலில் வென்றார். 1936ல் 2வது முறையாக நடந்த பொது தேர்தலில் வென்று தமிழர்களுக்காக மட்டுமே பேசினார்.

இலங்கையில் தமிழன் பதவிகள் மூலம் அரசாளுகிறான். பெரும்பான்மை சமூகமான நம்மை தமிழன் அதட்டுகிறான்னென்று 1937ல் சிங்கள மகா சபையை தொடங்கிய ந.ர.த.ப. பண்டாரநாயக்கா தமிழர்களுக்கு எதிராக அணல் கக்க தொடங்கினார்.  1939ல் அரசவை தலைவராகயிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அவை தலைவரான ப.ந.சேனநாயக்காவிடம்,

  1. இந்தியா வம்சாவழியினரை நாடு கடத்த வேண்டும்.

     

  2. அரசாங்க பணியிலுள்ள தமிழனை அடித்து துரத்த வேண்டும். என கோரிக்கை வைத்தார். புன் முறுவலோடு செய்யலாம் என சேனநாயக்காவும் சொல்ல தமிழர்களிடம், மலையக மக்களிடமும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அரசவை தலைவரிடமும், ஆங்கிலேய அதிகாரிகளிடம் பேசினர் தமிழர் தலைவர்கள். தமிழர்களுக்கான சாதகமான பதில் இல்லை என்றதும், இலங்கையின் இந்திய மக்கள் பிரதிநிதிகளாக வைத்தியநாதனும், பெரய்ராவும் காந்தியிடம் தங்களுக்கான ஆபத்தை கூறி நீங்கவரனும் எங்களுக்காக போராடனும் என கோரிக்கை வைத்தனர்.

காந்தியோ இந்தியாவை விட்டு ஆங்கிலேயனை துரத்தனும் என தீவிர போராட்டத்தில் இருந்ததால் தனது பிரதிநிதியாக நேருவை இலங்கை அனுப்பிவைத்தார். இலங்கை வந்த நேரு இந்தியர் சார்பாக ப.ந.சேனநாயக்காவை சந்தித்து பேசியபோது சேனநாயக்காவின் பேச்சு, செயல் எல்லாம் சிங்கள மக்களுக்கு சாதகமாகவே இருந்ததை உணர்ந்த நேரு தொங்கிய முகத்தோடு வெளியே வந்தவர் நம் மக்களுக்காக தனியாக ஒரு அமைப்பு வேண்டும் எல்லாரும் ஒண்றிணையனும் என அறிவித்தவர் இலங்கையின் இந்தியர்களிடையே மிக பிரதானமான, இந்திய இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கை இந்திய மத்திய சபை உறுப்பினர்களை ஒண்றிணைத்து 25 ஜீலை 1939ல் இலங்கை இந்திய காங்கிரஸ் தொடங்கினார். ஒன்றிணைந்த இலங்கை இந்தியர்களின் போராட்டம் ஆரம்பமானது. அதேபோல் தொழிலாளர்களுக்கான மலையக பகுதியில் இடதுசாரிகளும் குரல் எழுப்பினர். லங்கா சமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய சோஷலிசக் கட்சியும் குரல் எழுப்பிக்கொண்டிருந்த நிலையில் 1943ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.

Amirthalingam.gif?resize=300%2C394 அதே காலகட்டத்தில் காலணி நாடுகளுக்கு சுதந்திரம் தரப்போகிறோம் என பிரிட்டிஷ் அரசு அறிவித்தபோது இலங்கையில் பல அரசியல் கட்சிகள் உருவாயின. 1944ல் சுதந்திரம் தருவது பற்றி பரிசீலிக்க வந்த சோல்பாரி குழுவிடம் சிங்களர்களுக்கு 50%மும், தமிழர்கள், சோனர்கள், பறங்கயிர்க்கு 50% ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார் தமிழ்ர்கள் சார்பாக பேசிய ஜீ.ஜீ.பி.

 

2605b77b-bc16-457c-ba6d-b2eae657ac1e1.jpபிரிட்டிஷ் குழுவே சிங்களர்க்கு 75% மற்றவர்களுக்கு 25% உரிமையென்றது. இதையறிந்த ஜீ.ஜீ.பி 1944 ஆகஸ்ட் 29ந்தேதி தமிழர்களுக்காக இலங்கை தமிழ் காங்கிரஸ் உருவாக்கி குரல் கொடுத்தார். தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக கோரிக்கை எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் ஆங்கிலேயர் தன் எண்ணப்படி இட ஒதுக்கீடு தந்தவர்கள்.

சுதந்திரத்துக்கு போராடாத சிங்கள-தமிழர்-சோனகர்களிடம் 1948 பிப்ரவரி 4ந்தேதி நாங்க போறோம் உங்க நாட்டை நீங்களே பாத்துக்குங்க எனச்சொல்லியபடி டாட்டா காட்டி விட்டு கப்பல் ஏறிபோய்விட்டனர் பிரிட்டிஷார்.

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராக சிங்கள நலனில் மட்டுமே அக்கறை செலுத்திய, ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சேனநாயக்கா இருந்தார். இவர் தான் இலங்கையின் தேசபிதா என அழைக்கப்படுகிறார்.

சுதந்திரத்துக்கு முன் வரை இலங்கையின் அனைத்து சமூக மக்களுக்காக சில கட்சிகள் மட்டுமே இருந்தன. 1950க்கு பிறகு சிங்களர். தமிழர், சோனகர், மலையக மக்களுக்காகயென்று பல கட்சிகள் உருவாயின. எல்லாமே த்ந்ல்ர்ச் ஸ்டைலில் ஒரு கட்சியிலிருந்து உடைந்து-பிரிந்து, புதுசாக என உருவானது. இலங்கையிலும் நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்தா

அடுத்து தொடரும் பகுதி ,2

மலையக மக்களின் வாழ்வும் துயரமும்.( சிலோன் முதல் ஈழம் வரை )பாகம் 2

1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும், தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய மக்களை இனரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியை சரியாக செய்தார்கள். தங்களது கிருஸ்த்துவ மதத்தை இலங்கையில் விதையாக தூவ ஆரம்பித்தார்கள். பௌத்த மதத்தை ஏற்ற சிங்களர்கள் கிருஸ்த்துவத்தை ஏற்க மறுத்தனர். இனால் தமிழர்களோ யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, மலைநாடு பகுதிகளில் இருந்த மக்கள் வர்ணாசிரம கொடுமை, வறுமையால் ஓடிப்போய் சேர்ந்தார்கள். கிருஸ்த்துவ மதத்துக்கு வந்தால் கல்வி,வேலையில் முன்னுரிமை என பாதிரியார்கள் கூறியது மற்றொரு காரணம். பிசாசு வாழறயிடம் எனச்சொல்லி கோயில்களையும் இடிக்க ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆரசு.

530370_10151296459683482_1405162955_n_zp

ஆங்கிலேய மிஷினரிகளில் கல்வி கற்ற தமிழர்களின் பிள்;ளைகள், பிரிட்டிஷார் பேசிய ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாகவும், அரசு பணி செய்யவும் செய்தனர். இது சிங்கள மக்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியது. இதனால் ஆங்கிலேயரை அதிகமாக எதிர்த்தனர் சிங்கள மக்கள். அப்படியும் ஆங்கிலேயர்க்கு சிங்கள மக்கள் மீது தான் ஆதிக ஈடுபாடே. காரணம் தீவில் அதிகளவில் வாழ்வோர் சிங்கள மக்கள் தான் என்பதாலும் பிற்காலங்கள் வியாபாரத்தில் பிரச்சனை வந்தால் சிங்கள மக்கள் துணை வேண்டும் என்பதாலே எதிர்த்தவர்களை நண்பர்களாக கையாண்டனர்.

இலங்கையை வாணிப நோக்கில் ஆராய்ந்த ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் புகையிலை, நெல்பயிரும், குடநாட்டில் யாழ்ப்பாண சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு-தெற்கு, தென் தமிழக பகுதிகளின் வரவேற்பு அதிகம் என்பதை அறிந்தனர். அதனல் அவைகளை ஏற்றுமதி செய்தனர். போதிய வருமானம் வராததால் இலங்கை மலை பகுதிகளில் குறிப்பாக குடநாட்டில் காபி பயிரிடலாம் என எண்ணிய ஆங்கிலேயே கம்பெனி பயிர் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தொழிலாளிகளை அடிமைகளாக கொண்டு வர முடிவு செய்தனர்.

1820ல் இந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் தமிழக பகுதிகளில் மக்கள் பசியால் இறப்பதை கண்டு ஆங்கிலேய கம்பெனி அதிக கூலி, குறைந்த வேலையென மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஜில்லாக்களிலிருந்த மக்களிடம் பிரச்சாரம் பண்ணி ஏழை மக்களை இலங்கைக்கு கொண்டு போயினர். 1824ல் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 16 குடும்பங்கள் மலையத்தில் தங்க வைத்தது பிரிட்டிஷ் அரசு. எதிர்பார்ப்போடு தமிழகத்திலிருந்து கிளம்பிய மக்களை “நடராஜா சர்வீஸ்” மூலம் தனுஷ்கோடி அழைத்து வந்து அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாரில் இறக்கினர். அங்கிருந்து கண்டி பகுதியில் உள்ள மலைபிரதேசங்களுக்கு மீண்டும் நடராஜா சர்வீஸ். 150 மைல் நடந்து போனதில் போகும் வழியிலேயே பசி,காட்டுவிலங்கு, நோய் ஆகியவற்றால் தாக்கப்பட்டு சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். அதில் தப்பி குடியேற்றப்பட்டவர்கள் தான் மலையக தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பூர்வீக தமிழர்களிடம்மிருந்து பிரித்து காட்டவே அந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள். அழைக்கப்படுகிறார்கள்.

மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்.

plate-co-1900-teas.jpg?resize=748%2C5991867ல் ஜேம்ஸ் ரெய்லர் என்ற ஆங்கிலேயர் இலங்கையில் தேயிலை பயிரை அறிமுகப்படுத்தினார். இது நல்ல வரவேற்ப்பு பெற்றதால் தேயிலை பயிர் செய்ய தமிழகம், கேரளா பகுதிகளில் இருந்து இந்து,முஸ்லீம் இன தமிழர்களை மீண்டும் மலையகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மீண்டும் துயரம் தமிழகத்தில் வறுமையால் வாடிய 120 பேரோடு ஆதிலட்சுமி என்ற கப்பல் இலங்கை நோக்கி பயணமாகும்போது கப்பல் கடலில் மூழ்கி 120 பேரும் இறந்தனர். அதேபோல் 1867ல் தலைமன்னார் டூ கண்டி டூ மலைநாட்டுக்கு அனுராதபுரம், தம்பளை, கண்டி என ஓரு வழியும், ஆரிப்பு,புத்தாளம், கண்டி என மற்றொரு வழியும் ஊண்டு. இரண்டுமே காட்டு வழி. 1867ல் 639 பேர் கொண்ட தமிழக பிழைப்பு குழு முதல் பயணவழியில் மலையகம் புறப்பட்டது. 150 மைல் கடந்ததில் கடைசியாக மலையகத்துக்கு 186 பேர் மட்டுமே போய் சேர்ந்தனர். 453 போர் வழியில் இறந்தனர். இப்படி ஏராளமான செய்திகள் உண்டு மலையக மக்களிடையே. 1877ல் மட்டும் 1,45,000 பேர் மலையகத்தில் இறந்துள்ளனர். கடல் பயணத்தில், காட்டில், நோயால் இறப்பது கணக்கில்லை

அதோடு மலையக மக்கள் நாட்டை விட்டு மக்களை விட்டு, உறவுக்காரனை விட்டு வயித்து பாட்டுக்காக பிழைப்பு தேடி வந்து பிரிட்டிஷ் முதலாளிகள் அமைத்து தந்த லயர்களில் 3 இண் 1 பெண், 5 இண்கள் 2 பெண்கள் என தங்க வைக்கப்பட்டனர்,மக்களை மேற்பார்வை செய்யும் கங்காணிகள் (கண்காணிப்பாளர்), தோட்ட துரைகள் பெண்களின் கற்ப்பை களவாடவும்,சூறையாடவும் செய்தனர். எதிர்த்த ஆண்களை ஊயிரோடு எரித்தனர் – உயிரோடு புதைக்கப்பட்டனர். இந்த கங்காணிகள் தமிழகத்தில் வரிவசூலும், ஆங்கிலேயரின் எடுபிடிகளாகவும் இருந்தவர்கள். இலங்கைக்கு மலையக தமிழர்களை கண்காணிக்க வந்து கற்பை சூறையாடினார்கள். அதிகமான கூலி, குறைந்த வேலை என அழைத்து வந்து பெண்களை மிரட்டி, அடித்து தங்களது இச்சையை தீர்த்துக்கொள்வது பற்றியோ, எதிர்ப்பவர்களின் உயிரை எடுப்பது பற்றி தொழில் செய்யும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கவலைப்படவில்லை.

அந்த நிலையில் தான் மலையக இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து வர தமிழகத்தின் தஞ்சை பகுதியிலிருந்து காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்பட்டார் நடேசய்யர்.  துணி வியாபாரியாக மலையக தோட்டங்களுக்குள் புகுந்து அவர்களின் நிலையை கண்டு தனது இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியவர் 1929ல் தேசபக்தன் என்ற இதழையும் அவர்களுக்காக நடத்தினர்.

1893ல் தஞ்சையில் பிறந்தவர் நடேசய்யர். பெரியார் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர். திரு.வி.கவின் தெழிற்சங்க பத்திரிக்கையில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது  கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் 1915 ஆம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கொழும்பு வந்தார். விழா முடிந்ததும் ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் இருந்து வேலைக்காக கொண்டு வந்த தனது மக்களை காண மலையகம் போக எண்ணினார். ஆனால் தோட்ட துரைமார்களாக இருந்த ஆங்கிலேயர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றார்கள் கொழும்பு தமிழர்கள். மீறி போனால் கிரிமினல் குற்றம் ஆகிவிடும் என எச்சரித்ததால் துணி வியாபாரி வேடம் அணிந்து மலையகம் போனார். ஆங்கு தோட்ட துரைமார்கள், காங்காணிகளால் தன் மக்கள்க்கு நடக்கும் கொடுமைகளை கண்டு கேட்டு கலங்கி போனார். தமிழகம் திரும்பியதும் தான் பார்த்ததை, கேட்டதை அறிக்கையாக்கி தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிடம் தந்தார். அந்த அறிக்கை அப்படியே கிடந்ததால் பொறுத்து பார்த்தவர் இனி என் வாழ்க்கை அம்மக்களோடு தான் என முடிவு செய்து விட்டு 1920ல் கொழும்பு வந்தார்.

63.jpg?resize=550%2C382இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களான டாக்டர் ஈ.வி.ரட்சனம், எம்.ஏ.அருளானந்தம் ஆகியோரை வெளியீட்டாளராக கொண்டு தேசநேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தார். அப்போது இலங்கையில் தொழிலாளர்களுக்காக முறையான அமைப்புயென்று எதுவும்மில்லை. தொழிலாளர்களுக்காக போராடிக்கொண்டிருந்த பதிவு பெறாத தொழிற்சங்க தலைவரான ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து 1921 ல் பல போராட்டங்களை நடத்தினார். இவரின்;போராட்ட வீரியத்தையும் ஆங்கிலேய எதிர்ப்பையும் கண்ட தொழிலாளர்கள் குணசிங்காவை விட இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தொழிலாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரும், ஆதரவும் இருந்தது. இந்த ஆதரவு இலங்கை தொழிலாளர் யூனியன் சங்க துணை தலைவராக அவரை உயர்த்தியது.

1921ல் பிஜி தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டாக்டர்.மணிலால் இலங்கை வந்தார். தீவிர கம்யூனிஸ்ட்டான அவருடன் சேர்ந்து நடேசய்யர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தினார். நடத்திய போராட்டங்கள் எல்லாம் தீவிரமாக இருந்ததால் மணிலாலை கண்டு பயந்த பிரிட்டிஷார் லாலை நாடு கடத்தினர். போராட்டவாதிகளான ஏ.ஈ.குணசிங்காவுக்கும் நடேசய்யருக்கும் மோதல் அதிகமானது. குணசிங்கா இந்திய தொழிலாளர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார் நடேசய்யர். இந்த முரண்பாட்டால் இணைந்திருந்த இருவரும் பிரிந்தனர். பிரிந்து போன நடேசய்யர் 1931 சனவரி 13 ல் இலங்கை இந்தியர் சம்மேளனம் என்ற தொழிற்சங்க அமைப்பை தொடங்கினார். அதன் பின் நிறைய அமைப்புகள் தொழிலாளர்களுக்காக என்று தோன்றியது. ஆனால் சட்டப்படி தோன்றிய முதல் அமைப்பு நடேசய்யர் துவங்கிய அமைப்பு தான்.

1936ல் நடந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தார். ஏற்கனவே 1929 ல் நடந்த தேர்தலில் தோற்றவர். பின் 1936ல் நடந்த பொது தேர்தலில் தொழிலாளர்களை நம்பி களம்மிறங்கினார் வெற்றி பெற்றார். தொழிலாளர்களுக்காக சம்பள உயர்வு வேண்டியும், மருத்துவ வசதி வேண்டியும், உரிமைகள் வேண்டியம் போராட்டம் நடத்தி பெற்றும் தந்தார். அதனால் 6 ஆண்டுகள் சட்ட நிருபன சபையில் உறுப்பினராகவும், 16 ஆண்டுகள் சட்டசபையிலும் உறுப்பினராகயிருந்தார். இலங்கையில் வயது வந்தவர்கள்க்கு வாக்குரிமை உண்டு என ஆங்கிலேய அரசு சொன்னபோது இலங்கையில் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்கள்களுக்கு சந்தோஷம் நமக்கென்று ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம். அவர் மூலம் நமக்கு ஒரளவு சந்தோஷமான வாழ்க்கையும், பசங்களுக்கு படிப்பும் கிடைத்தால் போதும் என எண்ணினார்கள். அதன்படி 7 இந்திய வம்சாவழி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அது சிங்கள வெறியர்களான ஏ.ஈ.குணசிங்கா, டி.எஸ்.சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்துக்கு சலுகைகளை அப்போதே வாரி வழங்கினார்கள். அதேபோல் மலையக மக்களிடையே இடதுசாரிகள் கோலோச்சினர். 1947ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையக பகுதியில் 20 தொகுதியில் இடதுசாரிகள் வெற்றி பெறும் அளவுக்கு இடதுசாரிகளை மக்கள் நம்பினர்.

அதுதான் சிங்கள அரசியல்வாதிகளை குறிப்பாக தொழிலாளர்களுக்காக போராடுகிறோம் என்ற குணசிங்க,சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. இவர்கள் வளர்ந்தால் உரிமைகளை தந்தால் ஆட்சி அதிகாரத்தில் ஏறி நம்மை கேள்வி கேட்பார்கள் என எண்ணினர். அதன் விளைவு அபாயகரமானதாக இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்ஆட்சியமைத்த சிங்கள மூலைகளில் அரசியல் கணக்கும் ஓட்டு கணக்கும் போட்டதின் விளைவு, 1948 முதலே தோட்ட தொழிலாளர்களுக்கு தொல்லை ஆரம்பமானது.

1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ந்தேதி பாராளமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் வம்சாவழி சட்டம், பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழி சட்டம் என்பது சிங்களம் பேசுபவர்கள், இலங்கை தமிழர்களுக்கு வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர், சோனகர் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டதொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15 க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அதற்க்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மனு செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்ற நிலை.

55.jpg?resize=550%2C378இது மறைமுகமாக பல லட்சம் தோட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கள அரசியல்வாதிகள் கையாண்ட நரி திட்டம். அதற்க்கு அரசியல் காரணமும் உண்டு. பொது தேர்தல்களில் தோட்ட பகுதிகளில் சிங்கள அரசியல்வாதிகளால் அதிகம் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களே வென்றார்கள். இது வருங்காலங்களில் பிரச்சனையாகிவிடும் என்பதாலே தான். சட்டதின் மூலம் மலையக மக்களை துரத்த முடிவு செய்தார்கள். இந்த சட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதோடு 1949ல் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாடாளமன்ற சீர்த்திருத்த சட்டத்தின் படி தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் சுமார் 9 லட்சம் தமிழ் மக்கள் நாடற்ற நிலைக்கு ஆளானார்கள். பிரச்சனை பெருசானது.

தோட்டதொழிலாளர்கள் தானே என அப்போதைய இலங்கை தமிழ் அரசியல்தலைவர்கள் இதில் தலையிடாமல் விட்டு விட்டனர். இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் 1964 அக்டோபர் 30 ந்தேதி இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கை அதிபர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இடையே சாஸ்திரி-ஸ்ரீமா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் அரசின் கணக்கெடுப்பின் படி இங்குள்ள 9 லட்த்து 75 ஆயிரம் தோட்டதொழிலாளர்களில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வது என்றும், 3லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தருவது என்றும் முடிவானது. மீதி நிற்க்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்க்கு மற்றொரு ஒப்பந்தம் இருநாடுகளும் போட வேண்டும் என்றது. இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்;குள் நிறைவேற்றப்படவேண்டும் என்றது.

ஓப்பந்தம் நிறைவேற காலதாமதமானது. இதனால் சிங்களர்கள் மலையக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தொடங்கினர். பிறந்த மண்ணை விட்டு வந்து இரண்டு நூற்றாண்டாக தங்களது வியர்வையை நீராக்கி, மானத்தை அடகு வைத்து காணிகளின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தினை கலவரங்களின் போது மலையக மக்கள் குடியிருந்த லாயம் எனப்படும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர் உழைக்க தெம்பில்லாத சிங்களர்கள். தடுத்த தோட்ட தொழிலாளர்களை லாயங்களோடு வைத்து எரித்தனர். உரிமைக்காக போராடிய தோட்ட தொழிலாளர்கள் யார் என்பதை தோட்ட துரைமார்கள் காட்டி தந்தனர் அவர்களையும் குறிவைத்து கொன்றது சிங்கள படை. பதுளை, மொனராகலை,களத்துறை, கேகாலை, இரத்தினாபுரி, மத்தாளை பகுதிகளில்யிருந்த தோட்ட தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் வெறுத்துபோன பெரும்பாலான மக்கள் உலகின் வேறு நாடுகளான பிரான்ஸ், கனடா, ஆஸ்திரியா, போன்ற நாடுகளில் போய் அகதிகளாக குடியேறினார்கள். அதே காலகட்டத்தில் திரும்பவும் தாயகத்துக்கே திரும்பியவர்களையும் அகதிகள் என்ற அடைமொழியல் சேர்த்துவிட்டது இந்திய அரசு.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் 1974 ல் இலங்கையின் அதிபர் ஸ்ரீமாவுக்கும் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்க்கும் இடையே தோட்ட தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய குடியுரிமை வேண்டி 5 லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இலங்கை குடியுரிமை வேண்டி 4 லட்த்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்தியா, குடியுரிமை வழங்க காலதாமதம் செய்தது. 1982 ல் 86 ஆயிரம் விண்ணப்பங்களை நிராகரித்தது,குடியுரிமை வழங்கப்பட்ட 90 ஆயிரம் பேர் இன்னும் இலங்கையில் உள்ளனர். அதனால் இனி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது,ஓப்பந்தம் செல்லாது என அறிவித்தது இந்தியா.

இன கலவரம். ( சிலோன் முதல் ஈழம் வரை.)

GENOCIDE%2520.jpg

இலங்கையில் வசதியோடும், ஆங்கிலேயர்களோடு அனுசரையாக இருந்து கடல் வாணிபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது 1915ஆம் ஆண்டு கண்டி பகுதியில் வன்மை கொண்ட பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டமிட்டே தாக்குதலை தொடங்கினர். முஸ்லீம்களின் வீடுகைளயும், கடைகளையும் தேடித்தேடி அழிக்க தொடங்கினர். இது வேகவேகமாக ‘தீவு’ முழுவதும் பரவியது முஸ்லீம்மக்கள் நசுக்கப்பட்டதை தமிழர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்ட பிரிட்டிஷ் கவர்மெண்ட் சிங்கள தலைவர்களான ப.ந.சேனநாயக்கா,ஊ.த.சேனநாயக்கா உட்பட ஆயிரக்கணக்கான சிங்களர்களை தூக்கி கொண்டும் போய் வெளியே வர முடியாதபடி சிறையில் வைத்தனர். இலங்கையில் போராட்டங்கள் தீவிரமானது சிங்கள தலைவர்களை அரசு விடமாட்டேன் என்றதால் இலங்கையின் பிரபலமான வழக்கறிஞரும் படித்த அவையின் தமிழர்கள் பிரதிநிதியுமான பொன்னம்பலம் ராமநாதனை அணுகிய சிங்கள பிரமுகர்கள் தலைவர்களை காப்பாற்ற வேண்டும் என முறையிட்டனர். கப்பல் மூலம் லண்டனுக்கு பயணமானவர் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்து பேசி வாதாடி வெற்றியோடு திரும்பினார். சிங்கள தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்காக இலங்கை திரும்பும் ராமநாதனுக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தனர். கொழும்பு வந்து இறங்கும் பொன்னம்பல ராமநாதனை 11 குதிரை பூட்டிய வண்டியில் ஊர்வலம் கொண்டுபோக முடிவுசெய்தனர்.

கப்பலிலிருந்து இறங்கிய ராமநாதனை அலேக்காக தூக்கிய சிங்கள இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சரட்டு வண்டிக்கு தூக்கிகொண்டு போனவர்கள் சந்தோஷத்தில் குதிரைகளை வண்டியிலிருந்து கழட்டி துரத்தியவர்கள் தாங்களே ராமநாதனை உக்காரவைத்த வண்டியை இழுத்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். இதை கண்ட முஸ்லீம் மக்கள் வெதும்ப ஆரம்பித்தார்கள். தேர்ல சிம்மாசனம் தந்தவங்க நாளைக்கே உங்கள அந்த சக்கரத்துல வச்சி நசுக்குவாங்க அன்னைக்கு தெரியும் அவங்களோட கொடூரம் என நினைத்திருப்பார்கள். காரணம், சிங்களவர்-முஸ்லீம் கலவரத்தால் முஸ்லீம்களின் வாழ்க்கையை மாறிவிட்டது. வியாபாரத்தில் வெற்றி கொடி கட்டிய முஸ்லீம்கள் கலவரத்தால் வியாபாரம், கடல் வாணிபத்தில் நொடிந்துப்போய் விவசாய வேலைக்கு போயினர்.

1936ல் சிங்கள தலைவர்கள் பார்வை இலங்கைக்கு வேலைக்காக வந்த இந்திய மலையக மக்கள் மேல் திரும்பியது. எங்க மக்களோட வேலைய புடுங்கிட்டாங்க அவங்கள திரும்பவும் இந்தியாவுக்கே துரத்தனும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷாரிடம் எழுப்பி போராட ஆரம்பித்தார்கள். 1940ல் அரசு பணிகளில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. அவர்களை பணியிலிருந்து துரத்த வேண்டும் என போராட ஆரம்பிக்க சிங்களவர்களின் எண்ணம் அக்கால கட்டங்களில் தான் தமிழர்களுக்கு புரிய ஆரம்பித்தது.

சுதந்திரத்துக்கு பின் பதவியில் அமர்ந்திருந்த பிரதமர் சேனநாயக்கா. 1948ல் பிரஜாவுரிமை சட்டத்தை கொண்டு வந்தார் தொடர்ந்து 49ல் துணைக்கு இரண்டு சட்டங்களை இயற்றினார். அதன் மூலம் சிங்கள பெயரை உடையவர்கள் மட்டுமே இலங்கை பிரைஜை. தமிழ்-முஸ்லீம் பெயருடைய லட்சகணக்கான மலையக மக்களிடம் நீங்க இலங்கை பிரஜையில்லையென்றது சட்டம்.

இதற்கு அமைச்சரவையில் தொழில்-தொழில் ஆராய்ச்சி துறை அமைச்சராகயிருந்த தமிழர் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார். இது தமிழர் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் மலையக மக்கள் சார்பாக பேசிய தமிழர் காங்கிரûஸ சேர்ந்த செல்வநாயகம், “மலையக மக்களுக்கு எதிராக கிளம்பியவர்கள். நாளை எங்களுக்கு எதிராக திரும்பமாட்டீர்கள் என்று என்ன உத்தரவாதம் என்றவர் அச்சட்டங்களை எதிர்த்து வாக்களித்தனர்.

தமிழர் காங்கிரஸில் கருத்து வேறுபாடு அதிகமாகி கட்சியின் முக்கிய தலைவர்களான செல்வநாயகம், வன்னிய சிங்கம்,நாகநாதன் போன்றோர் கட்சியிலிருந்து வெளியேறி 1949 டிசம்பர் 18ந்தேதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி “தமிழரசு கட்சியை” ஆரம்பித்தவர்கள்.

  1. சிங்கள மொழியோடு தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வேண்டும்.

     

  2. இந்திய மக்களுக்கு எதிரான சட்டத்தை நீக்கனும்.

  3. பாரம்பரியமான தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை நிறுத்தல் வேண்டும்.

  4. ஜனநாயகமான அரசியல் வேண்டும் என்றது.

தமிழரசு கட்சியின் தலைவராக செல்வநாயகம் இருந்தார். தமிழர்களின் விடிவெள்ளியாக கருதப்படும் செல்வநாயத்தை தந்தைசெல்வா என்றே தமிழர்கள் அழைக்கின்றனர். மலேசியாவில் பிறந்தவர் யாழ்ப்பாணத்தில் படித்தவர் கிருஸ்த்துவரான இவருக்கு தமிழர் பண்பாடுகள் மீது தீவிர ஆர்வம். ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார் பின் கொழும்பு போய் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர். வழக்கறிஞராக பணியை தொடங்கினார். சிவில் வழக்குகளில் பிரபலமானவர். தமிழ் காங்கிரஸில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் கருத்து வேறுபாட்டால் தமிழரசு ஆட்சியை தொடங்கினார். செல்வாவின் புகழும், கட்சியும் வளர வளர 70கள் வரை வெற்றியை மட்டுமே ருசித்த ஜீ.ஜீ.பி. அதன் பின் அவரின் ஒளி தமிழர்களிடம் மங்க தொடங்கியது.

1950களில் பிரதமராகயிருந்த சேனநாயக்கா அரசியலில் தனது வரிசாக அவரின் மகன் டட்லி சேனநாயக்காவை உருவாக்குகிறார் என கட்சியில் பிரச்சனை ஏற்பட்டு ஜ.தே.கட்சியிலிருந்து விலகிய ந.ர.த.ப.பண்டாரநாயக்கா 1951ல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தார். சிங்கள மக்களை கவர தன் கட்சியின் கொள்கையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களம் மட்டுமே அரசாங்க மொழி என் அறிவித்தார். இது சிங்கள மக்களிடம் ஏக-போக வரவேற்பு பெற்றது.

1952ல் சேனநாயக்கா குதிரை சவாரியின்போது கீழே விழுந்து காயமடைந்ததால் காலமானார். இவரின் மகன் டட்லி சேனநாயக்கா இலங்கை பிரதமர் சீட் டில் உட்கார்ந்தார். தேர்தல் நெருக்கத்தில் இவரும் சுதந்திர கட்சி கொள்கை ந்டஒ ழ்ல்வ்;ச்ள் ந்ச்;ச்ள்; ண்ற்த்;த்ல்மங்;த் ஙண்ழ்ண்ஹ பார்த்து சிங்களம் அரச மொழியாக்கப்படும் என்றார். ஜ.தே.க. சார்பில்1956ஆம் ஆண்டு சுதந்திர கட்சி வேறு சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி தேர்தலை சந்தித்தனர். மாபெரும் வெற்றி. கட்சியின்கொள்கை, சிங்கள மொழி மட்டுமே என்ற பிரச்சாரத்திற்க்கு கிடைத்த வெற்றி என்பதால் அதனை செயல்படுத்த எண்ணி பாராளமன்றத்தில சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற மசோதாவினை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டார். இதனை கண்டித்து வாக்கெடுப்பு நாளன்று செல்வநாயகம் கொழும்பு காலைமுக திடலில் சத்தியாகிரகம் போôட்டத்தை தொடங்கினார். சிங்களர்கள் பகுதியான கொழும்பில் அவர்களின் மொழியை எதிர்த்தும்,கண்டித்தும் கோஷம் போரட்டதால் எங்க ஏரியாக்குள்ள வந்து எங்க மொழியை எதிர்த்து போராட்டம் செய்கிறிர்களா என கல்லெடுத்து வீசி வன்முறையை தொடங்கி வைத்தார்கள் சிங்களர்கள். கொழும்பில் கலவரம் ஆரம்பமானது அது கிழக்கு மாகாணம் வரை பரவியது.

எத்தனை உயிர் போனாலும் பரவாயில்லை உங்களின் இந்த மசோத வெற்றி பெற ஒத்தொழைக்க மாட்டோம் என அறிவித்தார் தந்தை சொல்வா. தொடர்ந்து மற்றொரு போராட்டத்தை அறிவிக்க பிரதமர் பண்டாரநாயக்கா செல்வாவிடம் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்.

BuddhistProcession+Ceylon.jpg

1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா-செல்வா ஒப்பந்தப்படி கிழக்கு வடக்கில் பிரதேச சபைகள் அமைத்து 10 துறைகள் உருவாக்கவும் கிழக்கில் வடக்கில் தமிழ் ஆட்சி மொழியாக்கவும் சம்மதித்தால் மலையக மக்களின் குடியுரிமை விவகாரத்துக்கான போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். ஆனால் அவர்களுக்கு படிப்படியாக குடியுரிமை தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. அன்படி 1957 ஜீலை 26 பாராளுமன்றத்தில் சமர்பித்தார். தமிழ் ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை முன்மொழிந்தார் செல்வா. அந்த சட்டத்திற்க்கு சிங்கள பாராளமன்ற ஆளும்கட்சி உறுப்பினர்களும், எதிர்கட்சியான ஐ.தே.க.வும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1957 அக்டோபர் 4 தேதி கண்டி தலதா மாளிகை வரை ஊர்வலம் நடத்தினர் சிங்களர்கள். தொடர்ந்து டிசம்பர் மாதம் ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக வாகனங்களில் சீறி என்கிற சிங்கள எழுத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றியவர்கள் 1 ஜனவரி 1958ல் நாடு முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்றது அரசு. இதற்கு தமிழரசு கட்சி வடக்கு-கிழக்கு பகுதியில் தமிழ் மொழி பயன்படுத்த வேண்டும் என கேட்டு போராடியது. கோரிக்கை சரிதான் என்பதை உணர்ந்த பிரதமர், கோரிக்கையை ஏற்று சரியென அறிப்பு செய்தார். சட்டமாக்கப்பட்டது. இதை சிங்களர்கள் எதிர்த்தோடு 1958 ஏப்ரல்9ந்தேதி சுகாதார அமைச்சரான விமலா விஜயவர்த்தனா தலைமையில் பிக்குகள் பிரதமர் பண்டாரநாயக்கா மாளிகைக்கு சென்று ஒப்பந்தத்தை கிழித்து எறி எனக்கேட்டு உக்காந்து விட்டனர். இதனால் ஒப்பந்த கைவிடுவதாக எழுதிதந்தார் பண்டாரநாயக்கா.

ஒப்பந்தம் கிழிப்பு இரண்டு தரப்பிலும் கொதிப்பை உருவாக்கிவிட்டது. சிங்களவர் தமிழ் எழுத்தையும், தமிழர் சிங்கள எழுத்தையும் பேருந்துகளில், கடைகளில் அழித்தனர். தாங்கள் வலிமையாக உள்ள பகுதிகளில் தங்களது தாய்மொழியான தமிழில்  பெயர்களை எழுத ஆரம்பித்தனர். இந்த நிலையில் 1958 மே மாதம்  தமிழரசு கட்சி வருடாந்தர மாநாட்டை வவுனியாவில் நடத்தியது. மாநாட்டில் பிரதமருடனான உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும் எனக்கேட்டு சத்தியாக்கிரகம் இருக்கபோகிறோம் என முடிவு செய்து அறிவித்தனர். மாநாடு முடிந்து தமிழரசு கட்சியினர் வவுனியாவிலிருந்து ரயில் மூலம் மட்டகளப்பிற்கு திரும்பபிவந்துக்கொண்டு இருந்தனர். வழியில் பொலனாறுவில் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக்கொண்டுயிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர், கத்தி குத்தும் நடந்தது.

தொடர்ந்தார்போல் மே 25 அன்று பஸ் ஒன்றையையும் சிங்களர்கள் கவிழ்த்தார்கள் மிகப்பெரிய தாக்குதல் ஆரம்பமாகின. இதை பிரதமர் கண்டுக்கொள்ளவில்லை 500 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 15 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாயினர். தமிழர்களின் வீடுகள், கடைகள் நொருக்கப்பட்டதை சிங்கள காவல்துறை பார்வையாளராக இருந்து கை கட்டி அமைதியாக வேடிக்கை பார்த்தது. பிரதமர் உத்தரவுப்படி 10 தமிழரசு கட்சி எம்.பி.களோடு 150 தமிழர்கள் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

ஏகப்பட்ட சேதாரம், கோடி கணக்கில் தமிழர்களின் சொத்து அழிவு, விலை மதிப்பில்லா உயிர்கள் பலியானது. தமிழர்கள் பகுதியிலும் இது எப்படி சாத்தியமானது என எண்ணலாம். 1930களில் சிங்கள தலைவரான டி.எஸ் சேனநாயகா நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்ற இலவச வீடு, 5 ஏக்கர் நிலம், பயிர் செய்ய விதை, மருந்து,மாடு, மண்வெட்டி என இலவசமாக அரசு செலவிலேயே தந்து தமிழர் பகுதிகளில் குடிபுக வைத்தார். சுதந்திரத்திற்கு பின் குடியேற்றம் அதிகமானது. இதனால் தமிழர்களின் இடங்கள் பறிபோனதோடு இன ரீதியாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டது.

1951ல் மட்டகளப்பில் தமிழர்கள் 1,30,831,  சிங்களர் 31,174பேர் மட்டுமே இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் அதாவது 1971ல் தமிழர்கள் 2,46,582 சிங்களர் 94,150 பேராக மாறினர். திருகோணமலையில் தமிழர்கள் 37,517 பேரும்,சிங்களர் 15,206 பேர் இருந்தனர். 1971ல் தமிழர்கள் 73,255 பேரும், சிங்களர் 55,308 பேராக மாறினர்.  தமிழர்கள் கூட்டல் கணக்கில் போனால் சிங்களர்கள் பெருக்கல் கணக்கில் உயர்ந்தனர். இதனால் அரசியலில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு கூடுதல் எம்.பி. பதவி கிடைத்ததோடு தமிழர்களை அடித்து உதைக்கவும் தமிழர் பகுதகளல் குடியேற்றப்பட்ட சிங்களர்கள் பயன்பட்டனர். இதனாலயே கலவரம் அடங்காமல் போனது.

20080615003.jpg?resize=445%2C296அதே வேலையில் பண்டாரநாயக்காவை பிரதமர் பதவியில் அமர்த்திய மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டணியில் சண்டைகள் அதிகமானது. இடது சாரியான பிலிப் குணவர்தனாவை கூட்டணியை விட்டு நீக்க சொன்னார்கள் வலதுசாரிகள். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குணவர்த்தனாவை கட்சியை விட்டு நீக்கினார் பண்டாரநாயக்கா. அடுத்ததாக தமிழர்களையும் கொல் என்றனர். இதில் முரண்பாடு வர கடுப்பான வலதுசாரிகள் பிக்குகள் முன்னணி செயலர் களனி விகாரை அதிபதி புத்திரகித்திரதேரா கொலை சதித்திட்டம் தீட்டி தந்து ஆசிர்வதித்து அனுப்பினார். 1959 செப்டம்பர் 25ல் அரசாங்க இல்லத்திலேயே வைத்து வளர்த்து விட்ட மத கடாவே பண்டாரநாயக்காவை சுட்டு கொண்றது. இதனால் பாராளமன்றம் கலைகப்பட்டடு தேர்தல் அறிவிப்பு செய்ப்பட்டது.

1960 ஜீலையில் நடந்த தேர்தலில் சுட்டு கொல்லப்பட்ட பண்டார நாயக்காவின் சுதந்திர கட்சி சார்பில் அவரின் மனைவி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க வெற்றி பெற்று பிரதமர் பதவியேற்றார். உலகின் முதல் பெண் பிரதமர். பிரதமராக ஸ்ரீமாவோ இருந்தாலும் நாட்டின் நிர்வாகம், செயல்பாடுகள், நடவடிக்கைகள் பிக்குகள் சொல்படி நடந்தது. நாடு முழுமைக்கும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என ஸ்ரீமாவை அறிவிக்க செய்தனர். போராட்டங்கள் ஆரம்பமாகின. இதை எதிர்த்த தமிழரசு கட்சி சத்வீக நேரடி இயக்கத்தை ஆரம்பித்தது. அரசு அலுவலககங்களை முற்றுகையிட்டு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்க முடிவு செய்தனர். அதன்படி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இரண்டு மாதம் நிர்வாகமே நடக்கவில்லை. ராணுவத்தை களத்தில் இறக்கினர் ஸ்ரீமாவே. அடி-உதை தந்து போராட்டத்தை அடக்கியது ராணுவம். 1964ல் ஸ்ரீ மாவோ வின் அரசு கலைக்கப்பட்டதால் 1965 தேர்தல் அறிவிக்கப்பட்டதும். இந்தியாவில் பிராந்திய கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ், பி.ஜே.பி அலைவதும், ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதைப் போல சுதந்திர கட்சி தலைவர்கள் தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் திருச்செல்வம் மூலம் தமிழ்மொழி வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அரசு மொழியாக்கப்படும். வடக்கிழக்கில் மாவட்ட சபை அமைக்கப்படும், குடியேற்ற திட்டம் மூலம் நிலம் இல்லாதவர் முன்னுரிமை தரப்படும் என வாக்குறுதி தந்து ரகசிய ஒப்பந்தம் போட டட்லி – செல்வா இடையே தேர்தல் உடன்பானது.

145 தொகுதியில் ஐ.தே.க – 66, சுதந்திர கட்சி – 41, தமிழரசி கட்சி 14, வங்க சமசமாய கட்சி 10, கம்யூனிஸ்ட் கட்சி – 4, தமிழ் காங்கிரஸ் – 3ல், வென்றது தனி மெஜாரட்டி கிடைக்காததால் சுதந்திரா கட்சி கூட்டணி அரசு அமைத்து அதில் தமிழரசும், தமிழ் காங்கிரஸ்சும் அங்கம் வகித்தன. தமிழரசு கட்சிக்கு அமைச்சர் பதவியும், கூட்டணி அமைய காரணமான திருச்செல்வத் மேலவை உறுப்பினர் பதவி மூலம் உள்ளாட்சி அமைச்சரானார். தமிழரசு கட்சி கொள்கையிலிருந்து விலகி விட்டதாகவும், செல்வாவுக்கு வயதாகிவிட்டதால் அமிர்தலிங்கம் வழிநடத்துகிறார் என்ற பேச்சு களம்பியது தமிழர்களிடையே அதோடு அமிர்தலிங்கம் தலைமை பொறுப்புக்கு வர நினைக்கிறார் தவறான வழியில் செயல்படுகிறார். எனக் சொல்லி நவரத்தினம் என்பவர் பிரிந்து தமிழர் சுயாட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

டட்லி – செல்வா செய்து கொண்ட உடன்படிக்கையின்படி 1966ல் தமிழ் மொழி தொடர்பாண சட்டம் பாராளமன்றத்தில் கொண்டு வந்தபோது சிங்கள கட்சிகள் எதிர்த்தன. அவர்களை சிங்கள போலிஸார் துப்பாக்கி சூடுமூலம் அடக்கினர். அதோடு 1968ல் மாவட்ட சபை அமைப்பதற்கான மசோதாவை டட்லி கொண்டு வராததால் அதிருப்தி அடைந்த தமிழரசு கட்சி பிரதமர் டட்லிக்கு நெருக்கடி தர கடைசியில் அவரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சிங்கள உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பால் மசோதா தோல்வியடைந்து. அதிருப்தியடைந்த தமிழரசு கட்சி 1969ல் கூட்டணியிலிருந்து விலகியதால் 1970ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 1970 மே மாதம் தேர்தல் நாளாக குறிக்கப்பட்டது. 1970க்கு பின் இலங்கையின் நிலை படிப்படியாக மாற ஆரம்பித்தது.

1970 தேர்தல் மூலம் ஜக்கிய முன்னணி கூட்டணி மூலம் இரண்டாவது முறையாக பிரதமரான ஸ்ரீ மாவேவிடம் போன புத்த பிக்குகள் தமிழர்களின் பிள்ளைங்க மருத்துவம், விஞ்ஞானம், கணக்குள நம்ம புள்ளைங்கள விட நல்ல படிக்கறானுங்க. அராசங்க தேர்வுல அதிகமா ஜெயிக்கறானுங்க அத தடுக்கனும் என வலியுறுத்தினர் புத்த பிக்குகள் பேச்சை கேட்க வேண்டிய கட்டாயத்திலிருந்த ஸ்ரீ மாவே சிங்களர் – தமிழர்களுக்கு தனித் தனி நுழைவு தேர்வு என சட்டம் போட்டார். தமிழர் மாணவர்கள் கவலையுற்றனர் காரணம் சிங்கள மாணவ மாணவிகள் தேர்வு பெற்றனர். நன்றாக படித்தே தமிழர் மாணவர்கள் நுழைவு தேர்வில் தோற்க மிரண்டு போயினர்.

20090630_11.jpg

1970ல் நவம்பர் 4 யாழ்பாணத்தில் அரசுக்கு எதிராக ஊர்வலத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதே நேரம் ஸ்ரீமாவே துரோகம் செய்கிறார் எனச்சொல்லி, அரசை எதிர்த்து சிங்கள இளைஞர்களை கொண்டு 1964ல் சீன சார்புடைய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ரோசண விஜயவீரா 1965 மே 14ல் மக்கள் விடுதலை முன்னணி(JVP- Janatha Vimukthi Peramuna) போராட்டங்கள் மூலம் அரசு சிங்கள இளைஞர்களை ஏமாற்றுகிறது என போராடிது. சீனர்களிடமிருந்து ஆயுதங்களை பெற்று சண்டைக்க தயாரானது. இலங்கை அரசுக்கு தெரியவந்து ஜே.வி.பி தலைவரை கைது செய்தது. அப்படியும் 1971 ஏப்ரல் 5ல் நாட்டின் பல பகுதியிலும் ஆயுத சண்டை ஆரம்பமானது. தெற்கின் பல பகுதிகளை ஜேவிபி கைப்பற்ற உலகநாடுகளிடம் இலங்கை உதவி கேட்டதால் உதவிக்கு ஓடிய இந்தியா, சீனா கலவரத்தை அடக்கியது. ஆயிரக்கணக்கான ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜேவிபியும் தடைசெய்யப்பட்டது.

சிங்கள இளைஞர்களை அடக்கினாலும் தமிழ் மாணவர்களை மட்டும் அடக்க முடியாமல் திணறியது அரசு. தமிழ் மாணவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளிடம் உதவி கேட்ட நேரத்தில் 1972ல் ஸ்ரீ லங்காவில் புதிய ஒற்றையாட்சி என்ற சட்டத்தை ஸ்ரீமாவே அரசு இயற்றியது. இதனால் இலங்கையிலிருந்த தமிழ் சமூகமே பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழரசு கட்சி,தமிழர் காங்கிரஸ் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களான செல்வா, ஜீ.ஜீ.பி. தொண்டமான் ஆகியோர் இணைந்து கூட்டு தலைமையில் தமிழர் கூட்டணி கூட்டமைப்பை உருவாக்கி புதிய ஒற்றையாட்சி சட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்ததால் மாணவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கிவிட்டார்கள். மாணவர்களே போராட களத்தில் தனியாக நின்றனர்…

http://www.tamilsvoice.com/archives/10704

 

பிற்குறிப்பு: நீங்கள் தமிழர் என்றதை யாழ் களத்தில் நிறுவ முடியுமா?

நீங்கள் நம்புவதும் நம்பாததும் பற்றி எவருக்கு அக்கறை?

யாருக்கு அதனால் பயன்? எவருக்கும் பயன் எதுவும் இல்லை.

" நாங்கள் இராணுவ முகாம் வேலி பாய்வோம்.அது எங்கள் சுதந்திரம்." என்று நினைக்கும் முட்டாள்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள். சர்வதேச நாடுகள் அதனை அறிந்தே இந்த மக்களை கைவிட்டு விட்டன.

இந்தியாவும் இதனை நன்கு புரிந்தே தனது தேவைக்காக இந்த முட்டாள் மக்களை கழிவு மக்களாக தற்கொலை யுத்தத்தில் வகை தொகை இன்றி அழித்து முடித்தது. இன்னமும் அழிகிறேன் என்று நிற்கும் இந்த மக்களை கடவுளே இன்னும் ஒரு அவதாரம் எடுத்து வந்தாலும் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை.

இல்லாவிட்டால் இந்த அழிவுக்கு பிறகும் ஒரு பந்துக்காக இராணுவ முகாமில் வேலி பாயுமா இந்த முட்டாள் கூட்டம்?

அப்படி இராணுவ முகாம் வேலி பாய்வதை வரவேற்கும் இந்த யாழ் கள ஆதரவாளர்களே இந்த இனம் அழிய மட்டும் தகுதியான இனம் என்பதற்கு சான்று.

ரொம்பத்தான் அர்ச்சனை பண்ணீறீங்க சாமி . நீங்க நல்லா இருக்கணும் சாமி. ரொம்ப களைச்சு போயிற்றீங்க. இப்ப போய் கொஞ்சம் தண்ணி குடியுங்க.
  • கருத்துக்கள உறவுகள்

சுன்டெலிக்கு சீவன் போகுதாம் குழந்தைப்பிள்ளைக்கு விளையாட்டாம் கதை தான் இங்கை நடக்குது.மைத்திரி வந்தால் நல்லது என்ட ஆட்களின் மூஞ்சையில் கரி பூச யாராவது பலியாக வேணும் அல்லது தமிழருக்கு எதிராக வன்முறை நடக்க வேணும் என்டு காத்துக்கிடக்கிற மாதிரி இருக்குது.உருப்பட்ட மாதித்தான்.யாார் சொல்லியும் மக்கள் வாக்குப் போடவில்லை.தாங்களாகவே முடிவு எடுத்தார்கள்.இதுக்குள்ள நீரோட்டம் பாக்கிற மாதிரி வந்து மூக்கை நுளைத்த கூட்டடைமைப்புக்குகாக மக்களை திட்டக்கூடாது.இங்கை உள்ள மைத்திரி வந்தால் நல்லம் என்டு சொன்னவர்களை எதிர்க்கிறோம் என்டு வோட்டு போட்ட மக்களைத்தான் திட்டுகிறீகள். :rolleyes:

முதலில் இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும். பதிவு போன்ற மூன்றாம் தர இணைய தளத்தில் வந்த செய்தியை வைத்துக்கொண்டு நாங்கள் புடுங்குப்பட தேவை இல்லை. இது உண்மையிலேயே நடந்திருந்தால் இதற்கு நிரந்தர தீர்வு காண கூட்டமைப்பு முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக ராணுவ பிரசன்ன குறைப்பு எந்த நிபந்தனையுமின்றி நிறைவேற்ற மைத்திரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். 

 

நீங்கள் தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவராக இருக்கலாம்.
யாழ்ப்பாண தமிழரில் பலர் புகையிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவர்கள்.
டச்சு காரன் இவர்களை மலபார் மக்கள் என்று தான் எழுதி வைத்தான். தமிழன் என்று எழுதவில்லை. முன்னர் போர் வீரர்களாக பாண்டிய, சோழ அரசுகளுடன் வந்தார்கள் தமிழர்கள். வணிகர்களாக மீன்பிடிப்பவர்களாக வந்தார்கள்.

  • சிங்களம் இலங்கையில் தான் தோன்றியது என்பதை எந்த ஆய்வாளரும் மறுக்கவில்லை.
  • தமிழ் இலங்கை தீவில் தான் தோன்றியது என்று ஐயம் திரிபட நிறுவ முடியுமா?
  • சிங்களவருக்கு உள்ள ஒரே நாடு இலங்கை. அவர்களுக்கு வேறு நாடு இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்?

 

 

ஜூட், நீங்கள் உண்மையாக எழுதுகிறீர்களா இல்லை sarcastic ஆக எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. புலிகள் விட்ட தவறுகள் சுட்டிக்காட்டப்படலாம். படவேண்டும். அதற்காக பொது பல சேனா ரேஞ்சில இருக்கும் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தீவில் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. சோழ பாண்டிய காலத்திற்கு முன்னரே தமிழரின் வரலாறு இலங்கை தீவில் உள்ளது. அதுக்கு டச்சுகாரன கூப்பிட தேவையில்லை எமது ஐம்பெரும் காப்பியங்களிலேயே ஆதாரங்கள் உள்ளது. சிங்களவர்களுக்கு மட்டும் இல்லை ஈழ தமிழருக்கும் இலங்கையை விட்டால் வேறு நாடு இல்லை. 

நன்றி தெனாலி .

எமது அரசியலில் தவறுகள் இருக்கலாம் அதற்காக இலங்கையே தமிழர்களது இல்லை என்று எவரும் எழுதமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

சுன்டெலிக்கு சீவன் போகுதாம் குழந்தைப்பிள்ளைக்கு விளையாட்டாம் கதை தான் இங்கை நடக்குது.மைத்திரி வந்தால் நல்லது என்ட ஆட்களின் மூஞ்சையில் கரி பூச யாராவது பலியாக வேணும் அல்லது தமிழருக்கு எதிராக வன்முறை நடக்க வேணும் என்டு காத்துக்கிடக்கிற மாதிரி இருக்குது.உருப்பட்ட மாதித்தான்.யாார் சொல்லியும் மக்கள் வாக்குப் போடவில்லை.தாங்களாகவே முடிவு எடுத்தார்கள்.இதுக்குள்ள நீரோட்டம் பாக்கிற மாதிரி வந்து மூக்கை நுளைத்த கூட்டடைமைப்புக்குகாக மக்களை திட்டக்கூடாது.இங்கை உள்ள மைத்திரி வந்தால் நல்லம் என்டு சொன்னவர்களை எதிர்க்கிறோம் என்டு வோட்டு போட்ட மக்களைத்தான் திட்டுகிறீகள். :rolleyes:

முதலில் இந்த செய்தி விரிவாக இல்லை.

யாரும் ஒருவர் இராணுவ வேலியை கடந்து உள்ளே போயிருப்பார் என்பதை நம்ப முடியாது இருக்கிறது.

இரணுவ வேலி அருகே போயிருக்கலாம்...

 

திரும்ப தமது மொடோர்பைக்கை எடுக்க சென்றவர்களை தாக்கியது?

அப்பட்டமான இராணுவ அடாவடித்தனம். (இதில் எவளவு உண்மை இருக்கும் என்றும் தெரியவில்லை)

 

மைத்திரியின் ஆட்சி வந்துவிட்டது என்று பூதாரம் காட்ட போனவர்கள்தான் இவர்களாக இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது.

உங்களின் கருத்தின் அர்த்தம் புரியவும் ஏற்றுக்கொள்ளவும் கூடியது.

ஆனால்....

ஆள் கூட்டமைப்பை மைத்திரியை சார்ந்தவராக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேயிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவராக இருக்கலாம்.

யாழ்ப்பாண தமிழரில் பலர் புகையிலை தோட்டத்துக்கு வேலை செய்ய வந்தவர்கள்.

டச்சு காரன் இவர்களை மலபார் மக்கள் என்று தான் எழுதி வைத்தான். தமிழன் என்று எழுதவில்லை. முன்னர் போர் வீரர்களாக பாண்டிய, சோழ அரசுகளுடன் வந்தார்கள் தமிழர்கள். வணிகர்களாக மீன்பிடிப்பவர்களாக வந்தார்கள்.

  • சிங்களம் இலங்கையில் தான் தோன்றியது என்பதை எந்த ஆய்வாளரும் மறுக்கவில்லை.
  • தமிழ் இலங்கை தீவில் தான் தோன்றியது என்று ஐயம் திரிபட நிறுவ முடியுமா?
  • சிங்களவருக்கு உள்ள ஒரே நாடு இலங்கை. அவர்களுக்கு வேறு நாடு இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்?

 

பழைய டச்சுகாரனின் எழுத்தில் ஏதும் பிழைகள் இருக்கலாம்...

புதுசா திருத்தி தலதா மாளிகையினால் எழுதிவிட்ட மகாவம்சத்தை வாசித்து தமிழர்களின் உரிமைகளை பங்கிடுவதே சால சிறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெனாலி, அர்ஜுன்.

 

 

நானும் நேற்று ஜூட்டின் பதிவைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். என்ன இந்த மனிதர், இலங்கையைச் சிங்களத் தீவு என்றும், நாம் அதை ஆக்கிரமிக்க வந்தவர்கள் என்றும் சொல்கிறாரே என்று கவலைப் பட்டேன். இவ்வளவு காலமும் நாம் எமது இருப்பிற்காக நடத்திய போராட்டம் இவர் பார்வையில் சிங்களவரின் நாட்டை ஆக்கிரமிக்கத்தான் என்று தெரிந்தது வேதனை.

 

ஆனால், இரண்டாவது பதிவில் டச்சுக் காரனின் குறிப்போடு வந்ததிலிருந்து இவன் என்ன மனநிலையிலிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதன்பின் பேசிப் பயனில்லை என்று விட்டு விட்டேன்.

 

உங்கள் கருத்திற்கு நன்றி !

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெனாலி .

எமது அரசியலில் தவறுகள் இருக்கலாம் அதற்காக இலங்கையே தமிழர்களது இல்லை என்று எவரும் எழுதமுடியாது .

 

அது; There you go....:D

Edited by putthan

அடிமைகளாகவே வாழ்வேன் என விரும்புகிறவர்களை என்ன செய்ய முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெனாலி .

எமது அரசியலில் தவறுகள் இருக்கலாம் அதற்காக இலங்கையே தமிழர்களது இல்லை என்று எவரும் எழுதமுடியாது .

நன்றி  arjun.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தீவில் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. சோழ பாண்டிய காலத்திற்கு முன்னரே தமிழரின் வரலாறு இலங்கை தீவில் உள்ளது. அதுக்கு டச்சுகாரன கூப்பிட தேவையில்லை எமது ஐம்பெரும் காப்பியங்களிலேயே ஆதாரங்கள் உள்ளது.

தமிழர்கள் இலங்கையில் நீண்ட காலம் வாழ்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் இலங்கையில் தான் தமிழர்கள் தோன்றினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

அதே வேளை இலங்கையில் தான் சிங்களவர்கள் தோன்றினார்கள்.

சிங்களவர்களுக்கு மட்டும் இல்லை ஈழ தமிழருக்கும் இலங்கையை விட்டால் வேறு நாடு இல்லை.

அதனால் இலங்கை சிங்களவர்களின் நாடு இல்லை என்றாகாதே?

இந்திய உளவு நிறுவனத்தின் ஆயுதங்களும் பயிற்ச்சியும் பெற்று இந்திய ஆதிக்கத்துக்காக தமிழர்கள் சிங்களவர்களை அவர்களது நாட்டிலேயே அழிக்கவில்லையா?

 

எமது அரசியலில் தவறுகள் இருக்கலாம் அதற்காக இலங்கையே தமிழர்களது இல்லை என்று எவரும் எழுதமுடியாது .

சிங்களவர்களுக்கு இலங்கை தான் ஒரே நாடு என்பதன் அர்த்தம், இலங்கை, அங்கு வாழும் தமிழர்களின் நாடல்ல என்பதல்ல. தமிழ் கலாச்சாரமும் மொழியும் வாழவும் வளரவும் தமிழ் நாடு இருக்கிறது. சிங்களத்துக்கு இலங்கை இருக்கிறது. இலங்கையில் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதற்காக இலங்கைத் தமிழர் சிங்கள மொழியையும் கலாச்சாரத்தையும் இலங்கை வளர்த்தெடுப்பதற்கு தடையாக இருக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இலங்கையில் தோன்ற முன்னரே தமிழர் இலங்கையில் பலநூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்! கலிங்கத்து வந்தேறிகுடிகள் விசயன் குழுவினருக்கும் பாண்டிநாட்டு பெண்களுக்கும் பிறந்த இளவல்களே சிங்களவர் என்பது எங்கட காதிலை பூ வைக்கிற கதை. விசயனின் பேரன் ஒரு சிங்கமாம்! (இதே ஒரு பொய்க்கதை) சிங்களவர் என்போர் பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கிழக்கு இத்தியாவின் கலிங்கம் மற்றும் வங்கம் போன்ற இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களே இல்லை! (கதை உண்மையானால்) புத்தன் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் தமிழ் மன்னர்களே இருந்திருக்கிறார்கள்.

அது இருக்கட்டும் முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வ குடிகள் எண்டு குரானில் அல்லது ஹதீஸ்களில் சொல்லப்பட்டு இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் இலங்கை சிங்களவர்களின் நாடு இல்லை என்றாகாதே?

இந்திய உளவு நிறுவனத்தின் ஆயுதங்களும் பயிற்ச்சியும் பெற்று இந்திய ஆதிக்கத்துக்காக தமிழர்கள் சிங்களவர்களை அவர்களது நாட்டிலேயே அழிக்கவில்லையா?

 

 

நீங்கள் இவ்வளவு காலமும் தமிழ் இளைஞர்கள் பகிடிக்கு இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்தார்கள் என்றோ நினைத்தீர்கள்? ஒரு சில இயக்கங்களாவது இந்தியாவின் கபட நாடகத்தை அறிந்து இந்தியாவை விட்டு வெளியேறியது நீங்கள் அறியாததா??
 
இலங்கையில் தான்  சிங்களவர்கள் தோன்றினார்கள் என்பற்கான ஆதாரத்தை தரமுடியுமா?  சரித்திரத்தை திரித்த மகாவம்சத்தை கொண்டு வராதீர்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் உள்ள குழப்பங்களை படித்தால் தலை சுத்துகிறது.

 

வரலாற்றை படிக்கையில் அந்தக் காலத்திலும் சிங்களர், ஒற்றுமையாயிருந்து 'சிங்கனாய்' இருந்திருக்கிறான், தமிழன் தங்களுக்குள் புடுங்குபட்டு அடுததவன் ஏறி மிதிக்கும் சொங்கியாயிருந்திருக்கிறான், சில உணர்வுள்ள தமிழரைத் தவிர. :(

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்களத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
அவர்களின் எச்சங்களும் ... மிச்சங்களும் இங்கு இருக்கின்றது.
இப்படியான முன்னேறின நாடுகளுக்கு வந்தே திருந்தவில்லை ......... மொத்தமும் அங்கு இருந்திருந்தால்?
 
செத்தவன் செத்துபோக ....
 
எல்லா பழியையும் அவன் மீது போட்டு விளம்பரம் தேடுது ஒரு கூட்டம் என்றால்.
அதை திரித்து கதை எழுதி அதை புத்தகமாக விற்று வாழவே இன்னொரு தமிழன் இருக்கிறான்.  
 
 
சிங்களனின் தலை பகுதியை தமிழன் ஆண்டது மட்டுமல்ல...
சிகிரியா ஓவியம் என்று அதை சிங்களவனே இலங்கையின் வரலாறாக பதிந்து வைத்திருக்கிறான்.
இது காசியப்பன் காலத்து (கலர்) வர்ண ஓவியம் என்று எல்லா இடத்து சிங்கள மாணவர்களையும் அழைத்து சென்று காட்டுகிறான்.
 
நல்ல வேளையாக அது சுத்தமாக தமிழன் வால் ஆட்டமுடியாத சிங்கள இடமாக இருப்பதால் இப்போதும் உண்மை இருக்கிறது.
அதுவே  வவுனியா பக்கம் இருந்திருந்தால் தமிழன் காசியப்பனை   காசியாப்பலே ஆக்கி அவனை சிங்களவன் ஆக்கி இருப்பார்கள்.
தற்காலிக பதவிகள் பணம் சுகம் அனுபவிக்க.
 
தற்போதைய கூட்டணி தலைவர்கள் அதை திறம்பட செய்து வருகிறார்கள். 

தமிழர்கள் இலங்கையில் நீண்ட காலம் வாழ்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் இலங்கையில் தான் தமிழர்கள் தோன்றினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

அதே வேளை இலங்கையில் தான் சிங்களவர்கள் தோன்றினார்கள்.

அதனால் இலங்கை சிங்களவர்களின் நாடு இல்லை என்றாகாதே?

இந்திய உளவு நிறுவனத்தின் ஆயுதங்களும் பயிற்ச்சியும் பெற்று இந்திய ஆதிக்கத்துக்காக தமிழர்கள் சிங்களவர்களை அவர்களது நாட்டிலேயே அழிக்கவில்லையா?

 

சிங்களவர்களுக்கு இலங்கை தான் ஒரே நாடு என்பதன் அர்த்தம், இலங்கை, அங்கு வாழும் தமிழர்களின் நாடல்ல என்பதல்ல. தமிழ் கலாச்சாரமும் மொழியும் வாழவும் வளரவும் தமிழ் நாடு இருக்கிறது. சிங்களத்துக்கு இலங்கை இருக்கிறது. இலங்கையில் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதற்காக இலங்கைத் தமிழர் சிங்கள மொழியையும் கலாச்சாரத்தையும் இலங்கை வளர்த்தெடுப்பதற்கு தடையாக இருக்க கூடாது.

 

இதென்னடாப்பா இந்த ஆள் எல்லாத்தையும் உல்டாவா சொல்லுது. சிங்கள மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்க்க தமிழர் எப்ப அண்ணை தடையா இருந்தார்கள்? தனிச்சிங்கள சட்டம் தரப்படுத்தல் இப்படி எதையும் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா? இல்லை இப்ப வடக்கில பத்து அடிக்கு ஒரு புத்தர் முளைச்சிருக்கிற விடயமாவது தெரியுமா? விட்டா சும்மா இருந்த தமிழ் இளைஞர்கள் டைம் பாசுக்கு இந்தியா சென்று பயிற்சி பெற்று வந்து போதி மரத்திக்கு அடியில் தியானம் செய்து கொண்டிருந்த சிங்களவர்களை அழித்தார்கள் என்றும் சொல்லுவீங்கள் போல. 
 
உண்மையை சொல்லுங்க எங்களை வைச்சு காமடி கீமடி பண்ணிறீங்களா? 

இலங்கை வரலாற்றில் உள்ள குழப்பங்களை படித்தால் தலை சுத்துகிறது.

 

வரலாற்றை படிக்கையில் அந்தக் காலத்திலும் சிங்களர், ஒற்றுமையாயிருந்து 'சிங்கனாய்' இருந்திருக்கிறான், தமிழன் தங்களுக்குள் புடுங்குபட்டு அடுததவன் ஏறி மிதிக்கும் சொங்கியாயிருந்திருக்கிறான், சில உணர்வுள்ள தமிழரைத் தவிர. :(

 

எந்த ஒரு குழப்பமும் தேவை இல்லை ராஜவன்னியன் சார். உலகில எந்த ஒரு இனமும் ஒற்றுமையா இருந்ததா வரலாறு இல்லை. சிங்களவர்களுக்குள்ளெயும் புடுங்குபாடு இருந்தது இன்னமும் இருக்கு தமிழர்களிடமும் இருக்கு. அந்த காலத்திலும் சோழர்களுக்கு எதிரா பாண்டியர் சிங்கள அரசோட கூட்டுச்சேர்ந்த கதையெல்லாம் இருக்கு. 
புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் தான் வழக்கமாக இந்த ஒற்றுமை வேற்றுமை புராணம் படிப்பவர்கள். அவர்களுக்கு நாம் எல்லோரும் புலி பஜனை படிக்க வேண்டும். படிக்க மறுப்பவர்கள் இனத்தை அழிக்க வந்த துரோகிகள். 
  • கருத்துக்கள உறவுகள்
எந்த ஒரு குழப்பமும் தேவை இல்லை ராஜவன்னியன் சார். உலகில எந்த ஒரு இனமும் ஒற்றுமையா இருந்ததா வரலாறு இல்லை. சிங்களவர்களுக்குள்ளெயும் புடுங்குபாடு இருந்தது இன்னமும் இருக்கு தமிழர்களிடமும் இருக்கு. அந்த காலத்திலும் சோழர்களுக்கு எதிரா பாண்டியர் சிங்கள அரசோட கூட்டுச்சேர்ந்த கதையெல்லாம் இருக்கு. 
புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் தான் வழக்கமாக இந்த ஒற்றுமை வேற்றுமை புராணம் படிப்பவர்கள். அவர்களுக்கு நாம் எல்லோரும் புலி பஜனை படிக்க வேண்டும். படிக்க மறுப்பவர்கள் இனத்தை அழிக்க வந்த துரோகிகள்.

 

நீங்கள் சொன்ன தமிழர் வரலாறு சரிதான், ஆனால் அந்த சிங்களன், தமிழனுக்காக அவர்களுக்குள் பிரிந்து புடுங்குபடுகிறார்களா? காட்டிக்கொடுக்கிறார்களா? என்பதே கேள்வி..! தமிழனை அழிக்கையில், அவர்கள் தங்களின் வேறுபாடுகளை மறந்து கரம் சேர்த்து நம்மை அழிக்கிறார்களே? அந்த ஒற்றுமைக்கான 'இன்ஸ்டிங்ட்' ஏன் தமிழனிடம் இல்லை என்பதில் ஏமாற்றம்தான்.

 

'வாழு, வாழவிடு' சித்தாந்தம் புத்தர் பாணியில் அகிம்சை இல்லையா? :(

 

நன்றி.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் சிங்கள மொழியையும் கலாச்சாரத்தையும் இலங்கை வளர்த்தெடுப்பதற்கு தடையாக இருக்க கூடாது.

 

சிங்களவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காவிடின் அவர்களால் தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது கடினம்.....

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க எத்தனைபேர் மாரடிக்கினம். இதற்காக மாண்டவர்களும் இழுத்து வரப்படவேணும். காரணம் தமிழுக்காக மாண்டபடியால் .    இதுதான் ஐயா நியாயம்.   

  • கருத்துக்கள உறவுகள்
சிங்க‌ளவரோ தமிழரோ அல்ல, வேடர்களுக்கே இலங்கை சொந்தம்.
மேலும் யாழ்பாணிகளுக்கும், மளையாளிகளுக்கும் (மலபாரி) நெருங்கிய தொடர்பு உண்டு.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  தமிழனால் எந்தளவுக்கு குனியமுடியும்

இந்த திரி சாட்சி... :(  :(  :( 

சிங்க‌ளவரோ தமிழரோ அல்ல, வேடர்களுக்கே இலங்கை சொந்தம்.

மேலும் யாழ்பாணிகளுக்கும், மளையாளிகளுக்கும் (மலபாரி) நெருங்கிய தொடர்பு உண்டு.

கொழும்பன். பிள்ளையை பெற்று வளர்ப்பது தாய். பிறகு உரிமை கொண்டாடடுவது பின்பு வந்த மனைவிதானே.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.