Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் என் கொன்சேவேற்றியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்தப் பூங்கன்றுகளில விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சது தானே. வீட்டோட சேர்த்து பூக்கண்டுகளுக்கு ஒரு  கொன்சேவேற்றி கட்டவேணும் எண்ட என் நீண்டநாள் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறினது. குளிர் தொடங்கினாலும் அதுக்குள்ளே வச்ச கண்டுகள் எல்லாம் இப்பவும் பூத்துக் குலுங்குறதை காலையில் எழுந்து போய்ப் பார்த்து சந்தோசப்பட்டுகொண்டு இருந்த எனக்கு வெள்ளிக்கிழமை வந்த கவுன்சில் கடிதம் இடியை இறக்கிச்சுது.

என்ன பிரச்சனை எண்டா, இங்க மேலதிகமாக கட்டடம் கட்ட வேணும் எண்டால் கவுன்சிலில அனுமதி எடுத்து பிளானிங் பெமிசன் எடுத்து வரைபடம் வரஞ்சு கொடுத்து அதுக்குப் பிறகுதான் கட்டலாம். எங்கடைஆட்கள் பற்றித் தெரியும் தானே. £450-500 எடுக்கிறவை ப்ளான் கீற. கட்டினபிறகும் கவுன்சிலில இருந்து ஒரு பொறியியலாளர் வந்து எல்லாம் சரி என்று கூறி ஒரு கடிதம் தருவார். அதன்பின் தான் நின்மதி. இது முன்பு. 

இப்ப புதிய சட்டம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அது  2019 வரை இந்த அனுமதிகள் ஒன்றும் தேவை இல்லை. ஆனால் கவுன்சிலில் £80 மட்டும் செலுத்தி வரைபடமும் கொடுக்க வேண்டும். அத்தோடு சரி. நான் போனபோது ஒரு நல்ல ஒருவர் இருந்ததனால் உன்னால் முடிந்தால் நீயே கீறிக்கொண்டு வரலாம் எண்டு சொன்னதில £500 மிச்சம் எண்டு நானே படம் கீறிக்கொடுத்துவிட்டு வேலை தொடங்கியாச்சு. 

ஒரு ஐந்து நிறுவனங்களைக் கூப்பிட்டுக் காட்டி மலிவான விலை சொன்ன ஒருவரைத் தெரிவு செய்தாச்சு.

முதல்ல நான் கவுன்சிளுக்குக் கீறிக் குடுத்தது  கீழே உள்ள படத்தில உள்ளது போல.  

Image result for lean to conservatories

நான் தெரிவு செய்த ஆள் கொஞ்சப் படங்களைக் கொண்டுவந்து காட்டினார். அதில் விக்டோரியன் ஸ்டைல் கூரை எண்டு உயரமாய் அழகாய் இருக்க நானும் ஆசையாப் பாத்தன் அதை. அக்கா இது ஒரு £1000 தான் கூட என்று அவரும் ஆசைகாட்ட அப்படியே செய் எண்டு விட்டாச்சு. அப்பவும் என் கணவர் "ஒரு பிளானைக் குடுத்துப்போட்டு இன்னொரு பிளானிலை கட்டாதை. பிறகு வீண் பிரச்சனை" எண்டார் தான். ஆசை ஆரைத்தான் விட்டுது. கீழே உள்ளதுபோலக் கூரையுடன் கட்டி முடிச்சாச்சு.

Image result for conservatories for bungalows

இண்டைக்குக் கவுன்சில்காறன் வந்து பாத்திட்டு 30 cm உயர்ந்துபோச்சு. நான் போய் நீ குடுத்த பிளானைப் பார்த்துவிட்டு உனக்குக் கடிதம் போடுறன் எண்டான். பின் வீடுகளிலை எல்லாம் என் வீட்டதிலும் பெரிதாகக் கட்டியிருக்கே என்று சொன்னேன். அவர்கள் கட்டினால் நீயும் கட்டுவாயா என்று கோபமாகக் கூறிவிட்டுப் போய்விட்டான். என்னத்தை எழுதப்போறானோ எண்ட பயம் ஒருபக்கம், என்ர மனிசன் இனி ஒவ்வொருநாளும் உதுபற்றிக் கதைச்சு வெறுப்பேத்தப் போறார் எண்டதை நினைக்கத்தான் என்ன செய்யிறது எண்டு ஒண்டுமா விளங்கேல்ல.

ஆராவது இதுபற்றித் தெரிந்தால் நான் தப்பிப் பிழைக்க வழி சொல்லுங்கோ உறவுகளே.

ஒரே ஒரு வழிதான் இருக்கு...:grin:

கட்டினதை இடித்து போட்டு நிம்மதியாய் இருங்கோ.. மனுசனும் கத்தமாட்டார்.. :grin: கவுன்சில்காரனும் ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  சீவன்ர  சொல்லுக்கும்  ஒருக்கா  காது  குடுங்களேன் :(

  • கருத்துக்கள உறவுகள்

CTRL + ALT + DEL ---> Restart 

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் வரும் வரை பொறுத்திருங்கள். 

ஆக உயரம்தானே பிரச்சனை? முப்பது சென்றி மீற்றர் எண்டால் ஒரு அடிதானே. ஒரு அடி ஆழத்துக்கு ஒரு குழி கிண்டி அந்த குழிக்குள் உதை இறக்க முடியாதோ? கதவை திறக்கும் இடத்தில் ஒரு பெட்டியாய் முன்னால் வெட்டினால் குழிக்குள் வைக்கும்போது திறக்க கூடியதாய் இருக்கும். :1_grinning: :24_stuck_out_tongue:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

ஒரே ஒரு வழிதான் இருக்கு...:grin:

கட்டினதை இடித்து போட்டு நிம்மதியாய் இருங்கோ.. மனுசனும் கத்தமாட்டார்.. :grin: கவுன்சில்காரனும் ஒன்றும் செய்ய முடியாது.

நல்லாய் இருப்பியள்  :unsure:

7 hours ago, நந்தன் said:

அந்த  சீவன்ர  சொல்லுக்கும்  ஒருக்கா  காது  குடுங்களேன் :(

:100_pray:

3 hours ago, MEERA said:

கடிதம் வரும் வரை பொறுத்திருங்கள். 

வேற வழி????/

3 hours ago, கரும்பு said:

ஆக உயரம்தானே பிரச்சனை? முப்பது சென்றி மீற்றர் எண்டால் ஒரு அடிதானே. ஒரு அடி ஆழத்துக்கு ஒரு குழி கிண்டி அந்த குழிக்குள் உதை இறக்க முடியாதோ? கதவை திறக்கும் இடத்தில் ஒரு பெட்டியாய் முன்னால் வெட்டினால் குழிக்குள் வைக்கும்போது திறக்க கூடியதாய் இருக்கும். :1_grinning: :24_stuck_out_tongue:

அட இந்த யோசின எனக்கு வராமல் போச்ச்ச்ச்சேசேசேசே 

3 hours ago, Sasi_varnam said:

CTRL + ALT + DEL ---> Restart 

ம்க்கும்

4 hours ago, கரும்பு said:

ஆக உயரம்தானே பிரச்சனை? முப்பது சென்றி மீற்றர் எண்டால் ஒரு அடிதானே. ஒரு அடி ஆழத்துக்கு ஒரு குழி கிண்டி அந்த குழிக்குள் உதை இறக்க முடியாதோ? கதவை திறக்கும் இடத்தில் ஒரு பெட்டியாய் முன்னால் வெட்டினால் குழிக்குள் வைக்கும்போது திறக்க கூடியதாய் இருக்கும். :1_grinning: :24_stuck_out_tongue:

இதைவிட இலகுவான வழி, சுற்றிவர 30 சென்ரிமீற்றர் உயரத்துக்கு நல்ல பசளை மண்ணால் நிரப்பி விட்டால் எல்லாம் சரியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூரையைக் கொஞ்சம் மட்டமாக்கி விடுங்கோ, சுமே!

விக்டோரியா வந்து பாக்கவா போறா?

நீங்கள் கவுன்சிலுக்குக் கொடுத்த ஒரிஜினல் பிளான் மாதிரியும் இருக்கும்!

கோடு...கீடு...எண்டு ஏறி..இறங்க வேண்டி வந்தால்...ஒரிஜினல் பிளானிலை...ஒரு கொஞ்சம் மாற்றம் செய்தனான் எண்டு சொல்லித் தப்பலாம் எண்டு நினைக்கிறேன்!

உங்களுக்கு இந்த ஐடியா...தந்தவரைக் கூப்பிட்டுக் கட்டி வைச்சுக் கண்ணுக்குள்ளை மிளகாய்த் தூள் போட்டு விடுங்கோ! இனிமேல் இந்த அட்வைஸ் பண்ணுற வேலை அவர் செய்யக்கூடாது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடில்

நாலு கட்டையை நட்டுப்போட்டு ஒரு குடிலை வைச்சுவிட்டால் பிரச்சனை முடிஞ்சுது...

அடிமட்டம் வைச்சு அளக்கிற நாட்டிலை இருந்து கொண்டு புண்ணியானம் பண்ணோணுமெண்டால் அவங்கடை சொல்லை சட்ட திட்டங்களை மதிக்கத்தானே வேணும்......:cool:

அது சரி எவ்வளவு முடிஞ்சுது? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இதைவிட இலகுவான வழி, சுற்றிவர 30 சென்ரிமீற்றர் உயரத்துக்கு நல்ல பசளை மண்ணால் நிரப்பி விட்டால் எல்லாம் சரியாகும்.

அதுவும் சரிவராது. ஏனென்டால் முன் கதவுகள் ஆறும் சமரில் முழுதாகத் திறப்பதுபோன்ற baifolding door. அதை எப்பிடித் திறக்கிரது???

2 hours ago, புங்கையூரன் said:

கூரையைக் கொஞ்சம் மட்டமாக்கி விடுங்கோ, சுமே!

விக்டோரியா வந்து பாக்கவா போறா?

நீங்கள் கவுன்சிலுக்குக் கொடுத்த ஒரிஜினல் பிளான் மாதிரியும் இருக்கும்!

கோடு...கீடு...எண்டு ஏறி..இறங்க வேண்டி வந்தால்...ஒரிஜினல் பிளானிலை...ஒரு கொஞ்சம் மாற்றம் செய்தனான் எண்டு சொல்லித் தப்பலாம் எண்டு நினைக்கிறேன்!

உங்களுக்கு இந்த ஐடியா...தந்தவரைக் கூப்பிட்டுக் கட்டி வைச்சுக் கண்ணுக்குள்ளை மிளகாய்த் தூள் போட்டு விடுங்கோ! இனிமேல் இந்த அட்வைஸ் பண்ணுற வேலை அவர் செய்யக்கூடாது!

கூரை முழுதும் களட்டித் திருப்பப் போட மூவாயிரம் நட்டம்.

ஆனால் ஐடியாத் தந்தவருக்கு நீங்கள் சொன்ன மாதிரித்தான் செய்யவேணும்.tw_blush:

16 minutes ago, குமாரசாமி said:

குடில்

நாலு கட்டையை நட்டுப்போட்டு ஒரு குடிலை வைச்சுவிட்டால் பிரச்சனை முடிஞ்சுது...

அடிமட்டம் வைச்சு அளக்கிற நாட்டிலை இருந்து கொண்டு புண்ணியானம் பண்ணோணுமெண்டால் அவங்கடை சொல்லை சட்ட திட்டங்களை மதிக்கத்தானே வேணும்......:cool:

அது சரி எவ்வளவு முடிஞ்சுது? :grin:

பதினஞ்சு tw_anguished:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பதினஞ்சு tw_anguished:

கிளிஞ்சுது போ...:cool:

கவுன்சில்காரனையோடையாவது மற்றவன் வீட்டை உதாரணம் காட்டி கதைக்காமல் பிளீஸ் பண்ணி கதைச்சு மேவி போயிருக்கலாம்...அவனிட்டையும் சண்டித்தனம் கதைச்சிருக்கிறியள்...
அது ஏனெண்டு தெரியேல்லை....
லண்டன் பீப்புளுக்கு கொன்சேவேற்றி இல்லாட்டி கோமணம் இல்லாத பீலிங்கோடைதான் திரிவினம்....வை....வை...tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி எல்லாம் திருப்பி கட்டியாச்சுதா இல்லையென்றால் சொல்லுங்கோ சம்  ஐடியாஸ்  இன் மை  காண்ட் .....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வேற வீடு மாற ஏலாதே ,உந்த வீட்டை நல்ல விலைக்கு விற்றுப்போட்டு ,விரும்பின் வீட்டையும் ,கொன்சேவேற்றியையும் கட்டலாம்........tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

கூரைக்கு மேல இருக்கிற சின்ன சின்ன கோபுரங்களை எடுத்துவிட்டால் பார்க்க கொஞ்சம் உயரம் குறைவாய் தெரியும்.:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

சகோதரி எல்லாம் திருப்பி கட்டியாச்சுதா இல்லையென்றால் சொல்லுங்கோ சம்  ஐடியாஸ்  இன் மை  காண்ட் .....! tw_blush:

என்ன என்ன??? டெல் மீ அண்ணா ???

2 hours ago, Eppothum Thamizhan said:

கூரைக்கு மேல இருக்கிற சின்ன சின்ன கோபுரங்களை எடுத்துவிட்டால் பார்க்க கொஞ்சம் உயரம் குறைவாய் தெரியும்.:rolleyes:

இதுதான் எல்லாத்திலும் சிறந்த ஐடியா. ஆனால் மழைக்கு பூக்கண்டுகள் நனைஞ்சு போகுமே.tw_blush:

8 hours ago, putthan said:

வேற வீடு மாற ஏலாதே ,உந்த வீட்டை நல்ல விலைக்கு விற்றுப்போட்டு ,விரும்பின் வீட்டையும் ,கொன்சேவேற்றியையும் கட்டலாம்........tw_tounge_wink:

ஐயோ புத்தன் சிரிச்சு முடியேல்ல :11_blush::11_blush::11_blush:

18 hours ago, குமாரசாமி said:

கிளிஞ்சுது போ...:cool:

கவுன்சில்காரனையோடையாவது மற்றவன் வீட்டை உதாரணம் காட்டி கதைக்காமல் பிளீஸ் பண்ணி கதைச்சு மேவி போயிருக்கலாம்...அவனிட்டையும் சண்டித்தனம் கதைச்சிருக்கிறியள்...
அது ஏனெண்டு தெரியேல்லை....
லண்டன் பீப்புளுக்கு கொன்சேவேற்றி இல்லாட்டி கோமணம் இல்லாத பீலிங்கோடைதான் திரிவினம்....வை....வை...tw_angry:

சனி முன்னால நிக்கேக்க வாய் தன்னால கதைக்குது. நான் என்ன குமாரசாமி செய்ய ???

  • கருத்துக்கள உறவுகள்

பெமிசன்.. தந்து கொன்சேவேற்றிவ் கட்ட. கோபுரம் வைச்சுக் கோவில் கட்ட இல்லைல்ல. ஆகவே கோபுரத்தையும் அகற்றி.. கூரையையும் ஒரு அடியால.. குறைக்கிற வழியப் பார்க்கிறது நல்லம்.

அத்தாரின்ர சொல்லக் கேட்டிருந்தா.. இந்த நிலைமை வந்திருக்குமா. பெண் புத்தி பின் புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிச்சுக்கிட்டே இருக்காங்க... பட்டும் பட்டும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் IBC ரேடியோவில ஒரு விளம்பரம் போகும்.

சுந்தரம் சிறி  என்ற ஒருவர்... சிறப்பான ஊர்ப் பேச்சுத்தமிழில் பேசுவார்.

விளம்பரம் மிகவும் புகழ் மிக்கதாக இருந்தது.

மனைவி: இடியுங்கோப்பா... இங்காலிப் பக்கத்தாலயும் இடியுங்கோப்பாப்பா...

சுந்தரம்: என்ன.. பின்னால எஸ்ட்டென்ஷன் போடுறியல் போலாக்கிடக்குது. கவுன்சில் பேமிஸின் வாங்கிப் போட்டியளே?

கணவன்: எண்ட வீட்டை இடிச்சுக் கட்ட... யார் எனக்குப் பெர்மிஷன் தரவேணும்?

சுந்தரம்: உந்த விசர் கதையளை விட்டுட்டு, ஒழுங்கா பிளானை கொடுத்து பெர்மிஷனை எடுத்துக் கட்டுங்களன்.பைன் கட்டி மாளாது... இடிக்கவும் சொல்லுவாங்கள்.....

நிற்க

உங்கள் அமைப்பு...  கல்... மண்ணினால் கடடப்படும் எஸ்ட்டென்ஷன இல்லை. இது கான்செவேடோரி. இரண்டுக்கும் வேறு வகை விதிகள்... அநேகமாக பிரச்னைக்கு உள்ளாகாது.

வித்தியாசம் குறித்து, தெளிவாக இருங்கள். பிரித்தானியாவில் உள்ள எந்த ஒரு அரச அதிகாரிகளில், இந்த பிளானிங் அலுவலர்கள் தான் மிகவும் பந்தா பண்ணும் சக்தி மிக்க அதிகாரிகள் என்கிறார்கள்.

இவர்கள், புதிய... அனுமதி இல்லாமல் கட்டிக் கொள்ளலாம் என்ற மத்திய அரச விதியால் கடுப்பில் உள்ளனர். பத்தாதட்க்கு நீங்கள் வேறு ஏதோ சொல்லி கடுப்பு ஏத்தி விட்டியல் போல கிடக்குது.

முதலில், அவர் குண்டக்க, மண்டக்க கடிதம் போடடாலும் அப்பீல் பண்ண முடியும்.

இரண்டாவது... இதை அமைத்து தந்தவர்களிடம் பேசுங்கள்.

மூன்றாவது... B & Q, Wickes போன்ற பெரிய நிறுவனக்களிடம் போய்... உன்னிடம் வாங்கி... நானும்... ஆத்துக்காரரும் சேர்ந்து அமைத்த  இந்த கன்செர்வேட்டரி இப்படி ஒரு பிரச்சனையில் நிக்குது... என்ன செய்வது என்று கேளுங்கள்.... (வாங்கின ரெசிப்ட்டா.... அது பிரச்சனை இல்லை... பிறகு கொண்டு வாறன்... இப்ப வழியை சொல்லு எண்டு போடுங்கள்).

அவர்கள் வழி சொல்லக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப போட்ட  கொட்டிலுக்கும்  ஒரு பிளானை கீறிக் கொண்டு, பாஸ் பண்ணிய பழைய பிளானையும் எடுத்துக் கொண்டு இதற்குரிய அதிகாரியிடம் நேரம் வாங்கி நேரில் போய் நீங்கள் வெளியே நின்றுகொண்டு அத்தானை அனுப்பி கதையுங்கள் ,அவர்கள் சுலபமாய் ரப்பர் முத்திரை குத்தி கையெழுத்து போட்டுத் தருவினம்...! 

சில நேரம் அத்தான் மூஞ்சியை தொங்க வீட்டுக் கொண்டு வந்தால் நீங்கள் நேரே போய் "உந்த பிக்பென் டவர் எல்லாம் இடிச்சுக் கட்டப்  போறிங்கள் எனக்கு சொன்னனீங்களோ" என்று கேட்டுட்டு வாங்கோ ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

 நீங்கள் நேரே போய் "உந்த பிக்பென் டவர் எல்லாம் இடிச்சுக் கட்டப்  போறிங்கள் எனக்கு சொன்னனீங்களோ" என்று கேட்டுட்டு வாங்கோ ....!  tw_blush:

அது இடிச்சுக் கட்டேல்ல.. பூசிப் போட்டு பெயின்ட் அடிக்கப் போறம். அதைத் தானே செய்துகிட்டு இருக்கம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பதினைஞ்சு மடிக்குள, பறிக்குள இருந்தது எண்டு பியர் கள்ளனுக்குத் தெரியேல்ல போல கிடக்குதே.

இப்படி மாட்டுப்படுவியள் என்று தெரிஞ்சிருந்தா, அவன் கொண்டோடிப் போய் சந்தோசமாக இருந்திருப்பானே. tw_cry:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2016 at 3:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

edwardiandoublehip_fh1.jpg

24vpedk.jpg

யம்மே, மேரியம்மே..! vil-donne5.gif

எதுக்கும் பாதுகாப்பாய் இருக்கட்டுமென மொத்த உயரத்தில் 40 செ.மீ வெட்டியாச்சுது.. இப்போ படத்தை அந்த படத்தை பாருங்கோ..!

இப்படத்தை அப்படியே பிரதியெடுத்து, அந்த அதிகாரியிடம் கொடுங்கோ...(ஆனால் மறக்காமல் பிரதி படத்தின் அடியில் சில டாலர் நோட்டுகளையும் மறைத்துக் கொடுங்கோ..) பிராப்ளம் சால்வ்டு..! o-k.gif

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?
 
  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2016 at 1:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்கள் கட்டினால் நீயும் கட்டுவாயா என்று கோபமாகக் கூறிவிட்டுப் போய்விட்டான். என்னத்தை எழுதப்போறானோ எண்ட பயம் ஒருபக்கம், என்ர மனிசன் இனி ஒவ்வொருநாளும் உதுபற்றிக் கதைச்சு வெறுப்பேத்தப் போறார் எண்டதை நினைக்கத்தான் என்ன செய்யிறது எண்டு ஒண்டுமா விளங்கேல்ல.

ஆராவது இதுபற்றித் தெரிந்தால் நான் தப்பிப் பிழைக்க வழி சொல்லுங்கோ உறவுகளே.

அங்க  இங்க தட்டுவதைவிட

வழமைக்கு அதிகமாக கொஞ்சம் அவரை தட்டுங்க..

பிரச்சினை முடிஞ்சுது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2016 at 9:50 PM, nedukkalapoovan said:

பெமிசன்.. தந்து கொன்சேவேற்றிவ் கட்ட. கோபுரம் வைச்சுக் கோவில் கட்ட இல்லைல்ல. ஆகவே கோபுரத்தையும் அகற்றி.. கூரையையும் ஒரு அடியால.. குறைக்கிற வழியப் பார்க்கிறது நல்லம்.

அத்தாரின்ர சொல்லக் கேட்டிருந்தா.. இந்த நிலைமை வந்திருக்குமா. பெண் புத்தி பின் புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிச்சுக்கிட்டே இருக்காங்க... பட்டும் பட்டும். tw_blush:

என்னடா இன்னும் காணேலை எண்டு நினைச்சன்.tw_blush:

13 hours ago, Nathamuni said:

முன்னம் IBC ரேடியோவில ஒரு விளம்பரம் போகும்.

சுந்தரம் சிறி  என்ற ஒருவர்... சிறப்பான ஊர்ப் பேச்சுத்தமிழில் பேசுவார்.

விளம்பரம் மிகவும் புகழ் மிக்கதாக இருந்தது.

மனைவி: இடியுங்கோப்பா... இங்காலிப் பக்கத்தாலயும் இடியுங்கோப்பாப்பா...

சுந்தரம்: என்ன.. பின்னால எஸ்ட்டென்ஷன் போடுறியல் போலாக்கிடக்குது. கவுன்சில் பேமிஸின் வாங்கிப் போட்டியளே?

கணவன்: எண்ட வீட்டை இடிச்சுக் கட்ட... யார் எனக்குப் பெர்மிஷன் தரவேணும்?

சுந்தரம்: உந்த விசர் கதையளை விட்டுட்டு, ஒழுங்கா பிளானை கொடுத்து பெர்மிஷனை எடுத்துக் கட்டுங்களன்.பைன் கட்டி மாளாது... இடிக்கவும் சொல்லுவாங்கள்.....

நிற்க

உங்கள் அமைப்பு...  கல்... மண்ணினால் கடடப்படும் எஸ்ட்டென்ஷன இல்லை. இது கான்செவேடோரி. இரண்டுக்கும் வேறு வகை விதிகள்... அநேகமாக பிரச்னைக்கு உள்ளாகாது.

வித்தியாசம் குறித்து, தெளிவாக இருங்கள். பிரித்தானியாவில் உள்ள எந்த ஒரு அரச அதிகாரிகளில், இந்த பிளானிங் அலுவலர்கள் தான் மிகவும் பந்தா பண்ணும் சக்தி மிக்க அதிகாரிகள் என்கிறார்கள்.

இவர்கள், புதிய... அனுமதி இல்லாமல் கட்டிக் கொள்ளலாம் என்ற மத்திய அரச விதியால் கடுப்பில் உள்ளனர். பத்தாதட்க்கு நீங்கள் வேறு ஏதோ சொல்லி கடுப்பு ஏத்தி விட்டியல் போல கிடக்குது.

முதலில், அவர் குண்டக்க, மண்டக்க கடிதம் போடடாலும் அப்பீல் பண்ண முடியும்.

இரண்டாவது... இதை அமைத்து தந்தவர்களிடம் பேசுங்கள்.

மூன்றாவது... B & Q, Wickes போன்ற பெரிய நிறுவனக்களிடம் போய்... உன்னிடம் வாங்கி... நானும்... ஆத்துக்காரரும் சேர்ந்து அமைத்த  இந்த கன்செர்வேட்டரி இப்படி ஒரு பிரச்சனையில் நிக்குது... என்ன செய்வது என்று கேளுங்கள்.... (வாங்கின ரெசிப்ட்டா.... அது பிரச்சனை இல்லை... பிறகு கொண்டு வாறன்... இப்ப வழியை சொல்லு எண்டு போடுங்கள்).

அவர்கள் வழி சொல்லக் கூடும்.

நன்றி நாதமுனி. கடிதம் என்ன பதிலோட வருது எண்டு பாத்திட்டுத்தான் இனி மிச்ச வேலை.

8 hours ago, Nathamuni said:

பதினைஞ்சு மடிக்குள, பறிக்குள இருந்தது எண்டு பியர் கள்ளனுக்குத் தெரியேல்ல போல கிடக்குதே.

இப்படி மாட்டுப்படுவியள் என்று தெரிஞ்சிருந்தா, அவன் கொண்டோடிப் போய் சந்தோசமாக இருந்திருப்பானே. tw_cry:

ஆகப் பதினச்சுக்கே உந்தக் கதை சொல்லுறியள்.  உங்க சனம் பத்துப் பன்னிரண்டு வீடு எண்டு வச்சிருக்கு.

5 hours ago, ராசவன்னியன் said:

24vpedk.jpg

யம்மே, மேரியம்மே..! vil-donne5.gif

எதுக்கும் பாதுகாப்பாய் இருக்கட்டுமென மொத்த உயரத்தில் 40 செ.மீ வெட்டியாச்சுது.. இப்போ படத்தை அந்த படத்தை பாருங்கோ..!

இப்படத்தை அப்படியே பிரதியெடுத்து, அந்த அதிகாரியிடம் கொடுங்கோ...(ஆனால் மறக்காமல் பிரதி படத்தின் அடியில் சில டாலர் நோட்டுகளையும் மறைத்துக் கொடுங்கோ..) பிராப்ளம் சால்வ்டு..! o-k.gif

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?
 
அண்ணா அண்ணா எதுக்கும் டிக்கட் போட்டுத் தாரன். நீங்களே வந்து கவுன்சில் காரனோடை கதைச்சு இதை  ஒருக்கா முடிச்சுத் தாங்கோ.

5 hours ago, விசுகு said:

அங்க  இங்க தட்டுவதைவிட

வழமைக்கு அதிகமாக கொஞ்சம் அவரை தட்டுங்க..

பிரச்சினை முடிஞ்சுது.....

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாலைஞ்சு மண்மூடையை கட்டி கூரையில வச்சா இறங்காதா என்ன அக்க  எத்தனை கிணற்று குழாய இறக்கியிருக்கம்  இதுக்கு போயி:11_blush::11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.