Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப் பெருந்தலைவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும்.. புகழஞ்சலியும். 

SP Balasubrahmanyam: Legendary Indian singer dies

SP Balasubrahmanyam

Renowned Indian singer SP Balasubrahmanyam, a Guinness world record holder for his more than 40,000 songs over 50 years, has died aged 74.
 
  • Replies 74
  • Views 6.7k
  • Created
  • Last Reply

கண்ணீர் அஞ்சலிகள்!!! :(

உங்களை போன்ற பாடகர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு. நீங்கள் பாடிய அத்தனை பாடல்களும் முத்துக்கள். நீங்கள் எமக்காக விட்டுசென்ற பாடல்கள் காலத்தால் அழியாமல் என்றும் எம்முடன் இருக்கும். 

உங்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

அற்புத கலைஞர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இதய அஞ்சலிகள். அவரின் பாடல்கள்  என்றென்றும் அழியாதவை.  Good bye sir.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

SPB. அவர்களின் இறுதி சடங்கின் முன் ரிஹானாவின் கண்ணீருடன் ஒரு பாடல்

 

😢😓

  • கருத்துக்கள உறவுகள்

https://www.ripbook.com/32602035/notice/111623?ref=ls_d_obituary

இந்தியா நெல்லூரைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட  எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும், எஸ்.பி.சரண், பல்லவி ஆகியோரின் அன்புத் தந்தையும், எஸ்.பி.சைலஜா, ஜகதேஷ் பாபு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

 

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி முதல் பரிசு பெற்றார்.

 

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.

 

இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

 

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.

 

எஸ்.பி.பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும்(ஒரே நாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும்(6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

 

தனது காந்த குரலால் மக்களின் மனங்களை வென்ற எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உலகெங்கும் தமிழை தனது குரல் வளத்தால் வளர்த்தவருக்கு எனது நன்றிகள். 

நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்புக்கள்  தமிழை வளர்க்கும். 

ஆழ்ந்த அனுதாபங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

நிகரில்லாத பாட்டுத் தலைவனுக்கு  என்  கண்ணீரஞ்சலிகள் .உங்கள் பாடல்கள் வாழும வரை உங்கள் புகழ் வாழும்.தமிழ் கூறும் நல்லுலகுக்கும் இசையை ரசிப்பவர்களுக்கும்  பேரிழப்பு  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

கடைசி புகைப்படம்.-💔 

Bild

எமக்காக பாடிக்கொண்டிருந்த நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும். நீங்கள்  சென்றாலும் உங்கள் பாடல்கள் என்றும் எம்மோடு வாழும். சென்று வாருங்கள். 

மக்கள் திலகத்திற்காக எஸ்பி பாலாவின் முதற்பாடல். 

 

 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கடைசி புகைப்படம்.-💔 

Bild

வாய் நிறைய... புன் சிரிப்புடன், வாழ்ந்த மனிதனை...
கொரோனா என்னும் கொடிய நோய், இப்படி மரணிக்க வைத்து விட்டதை,
நினைக்க.. வேதனையாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

போய் வாருங்கள் எம் புல்லாங்குழலே 
இசையும் தமிழும் உள்ளவரை 
இந்த உலகு உம்மை 
நினைவு கொள்ளும் 🙏
 

  • கருத்துக்கள உறவுகள்

பாடுநிலாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
 
இந்திய அரசின் - பத்மஸ்ரீ (2001)
பத்மபூஷண் (2011)
00000000
1979.
'சங்கராபரணம்' தெலுகு படத்தில் பாடிய
'ஓம்கார நாதானு சந்த்தான மௌகானமே'
பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான
தேசிய விருது.
1981.
'ஏக் துஜே கேலியே' ஹிந்திப் படத்தில் பாடிய
'தேரே மேரே பீச் மே கைஸா ஹையே பந்தன் '
பாடியதற்காக ரெண்டாவது தேசிய விருது.
1983.
'சாகர சங்கமம்' தெலுகு படத்தில் பாடிய
'வேதம் அணு அணுவுன நாதம்'
பாடலுக்காக மூன்றாவது தேசிய விருது.
1988.
'ருத்ரவீணா' தெலுகு திரைப்படத்துக்காக
'செப்பாலனி உந்தி குந்த்து விப்பாலனி உந்தி'
பாடலுக்காக நான்காவது தேசிய விருது.
1995.
'கானயோகி பஞ்சாட்சர காவை 'கன்னட படப்பாடல் 'உமண்டு குமண்டு கன கர்ஜே பதுரா' வுக்காக
ஐந்தாவது தேசிய விருது.
1996.
'மின்சாரக் கனவு' தமிழ்த் திரைப்படத்தின்
'தங்கத்தாமரை மலரே வா அருகே' வுக்காக
ஆறாவது தேசிய விருது.
00000000
1983.
வாழ்நாள் சாதனைகளுக்கான முதல் தென்னக
பிலிம்பேர் விருது.
1986.
தென்னிந்திய மொழிகளின் பின்னணிப் பாடகருக்கான வியத்தகு சாதனைக்காக பிலிம்பேர் விருது.
1989.
'மைனே பியார் கியா' ஹிந்தித் திரைப்படப் பாடல்
'தில் தீவானா'வுக்காக பிலிம்பேர் விருது.
1995.
'சுபசங்கல்பம்' தெலுகு படத்துக்கான பிலிம்பேர் விருது.
2006.
'ஸ்ரீ ராமதாஸ்' தெலுகு படப்பாடல்
'அடிகடிகோ பத்ரகிரி'க்காக பிலிம்பேர் விருது.
2007.
'மொழி' தமிழ் படத்துக்காக
'கண்ணால் பேசும் பெண்ணே' பாடலுக்கு பிலிம்பேர்.
2010.
'ஆப்த ரக்ஷகா' கன்னடப் படத்துக்காக
'கரனே கர கரனே' பாடலுக்கான பிலிம்பேர் விருது.
00000000
2017.
வாழ்நாள் சாதனையாளருக்கான
'ஸைமா' SIIMAA விருது.
00000000
ஆந்திர அரசின் 'நந்தி' விருதுகள் - 23 முறை.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் - 4 முறை.
கன்னட திரைப்பட விருதுகள் - 3 முறை.
00000000
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெற்ற
மற்ற விருதுகள்....
...................
 
"GaanaVidushi" Title conferred by Ragaswara, at the concert "Celestial Hits" on 10 Feb 2019, at Kings Hall, Stoke-on-Trent, United Kingdom in recognition of Musical Excellence and Immense contribution to the field of Music for over 50 years. ||
Film Fans' Association Award (Madras)—oldest association in the country—received 20 times || "Sangeetha Ganga Award", for his contribution to Kannada Film Industry in 2001 ||"Lata Mangeshkar Award" in 1999 || "Sangeeta Ganga award" in 2001 || Delhi Telugu Academy's Rashtriya Vikas Shiromani Award (Lifetime) in 2002 ||
"Dr. Bezawada Gopala Reddy Award" in 2002 | "Lifetime Achievement Award" conferred during "TVS Victor Aalaapana Music Awards" function for the years 2001 and 2002 || "Swaralaya-Kairali-Yesudas" award in 2002 || "Rani Rao Balasaraswathi Award" in 2003 || "Arya Bhata Prasasthi" in 2003 || "Kalasri Award" in 2004 ||
"Best Playback Singer" from Maa TV, Cinemaa awards in 2004 ||
"Viswa Ganayogi" From Karnataka Chiefminister in 2005 ||
Raja Lakshmi Award from Sri Raja Lakshmi Foundation, Chennai in 2006 || "Best Playback Singer" from Vijay TV, Reliance Mobile Vijay Awards in 2006 || "Tansen Award" Sur Singar Sanjad (Bombay) for best classical rendition of a song from Tere Payal Mere Geeth composed by Naushad || "Best Playback Singer" from Santosham awards for the film Sri Ramadasu in 2006 || "Lifetime Achievement Award", presented by Santhosham awards in 2007 || "Basavashree Award" from Karnataka Government || "A.P. Cinegoers Association Award for Best Singer" for Sri Bhagavatham (serial on ETV) in 2007 || "Sangeetha Saagra" from Kanchi Kamakoti Peetham, Kanchipuram in 2008 || "Karnataka Rajyotsava Prasasthi" from the Government of Karnataka 2008 || "Lifetime Achievement Award" presented by Telugu Association of North America (TANA) in Chicago in 2009 || "P. Susheela trust National Award" 2009 ||
"Kopparapu Kavula Puraskaram"from Kopparapu Kala Peetam, Visakhapatnam 2009 || "Lifetime Achievement Award" by Raagalaya Music Awards Mumbai 2010 || Ghantasala Award in 2010
|| Great son of the soil award from Justice Rajesh Tandon,Chairperson Cyber appellate tribunal New Delhi at All India conference of intellectuals in Hyderabad 2010 || ANR Lifetime achievement award from Akkineni Nageswara Rao in 2010 ||
"Pride Of Indian Cinema" from Yuvakalavauhini, Hyderabad 2010 ||
"Best playback Singer" award from "Gemini Tv Ugadi awards" 2010 || Vamsee Film awards 2010 || "BIG Kannada Entertainment Awards" || "Santosham awards 2010" Best Playback Singer for the film "Mahatma"|| "Lifetime Achievement Award" - 2011 Lux Sandal CineMAA Awards 2011 || "Isai Thendral" - Title conferred to S P Balasubrahmanyam by Botswana Tamil Cultural Association ||
The Hyderabad Times Film Awards 2011 || "Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema" given by STAR Vijay in 2011.|| "Harivarasanam Award 2015" by kerala government ||
Tamizhan Award 2017 by Pudhiya Thalaimurai || 6th Dakshinamurthy Nadapuraskaram,2019,Kerala.
----------------------------------------------------------
படத்தில் -
மனைவி சாவித்ரி,
மகள் பல்லவி,
மகன் சரண்
உடன் -
ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 
 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா

2 hours ago, tulpen said:

எமக்காக பாடிக்கொண்டிருந்த நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும். நீங்கள்  சென்றாலும் உங்கள் பாடல்கள் என்றும் எம்மோடு வாழும். சென்று வாருங்கள். 

மக்கள் திலகத்திற்காக எஸ்பி பாலாவின் முதற்பாடல். 

 


இவர் பாடிய முதல் பாடல் இதுவல்ல துல்பன். நான் நினைகின்றேன் ஒன்றில் நிலவே என்னிடம் நெருங்கதே..அல்லது இயற்கையெனும் இதயக்கன்னி.. இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலா, 


பிறப்பால் நீ  தெலுங்கன்

உணர்வால் தீந்  தமிழன் 

 

தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை

உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை
 

எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ 

எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ 


யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ 

அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது 


போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே
 

தமிழா,
 

உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை 

ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை 

  • கருத்துக்கள உறவுகள்

இனி இல்லை எனும் போதுதான் இசையை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டிலும் அந்த நேசிப்பிற்குள் எப்படி ஈர்க்கப்பட்டோம் என்பது தெரிகிறது. உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது எப்படி என்று கற்க முயற்சித்திருக்கிறேன். மனதில் மிக ஆழமான சோகம் நிறைகிறது.  வார்த்தைகள் தவிக்கின்றன. ஒப்பில்லா மானுடனே. உன் தாலாட்டு கேட்டு உறங்கியவர்கள்  கோடி. எங்களால் மௌனத்தை மட்டுமே தாலாட்டாக தரமுடியும். உறங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இறந்தாலும் இசையாய் என்றும் வாழ்வார் 

அன்னாருக்கு அஞ்சலிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:
Screenshot-2020-09-25-14-41-31-363-com-a படத்தில் -
மனைவி சாவித்ரி,
மகள் பல்லவி,
மகன் சரண்
உடன் -
ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்

. . 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.