Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பாராத சிகிச்சை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் எல்லோருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

எதிர்பாராத சிகிச்சை.
1997 கார்த்திகை 27இல் 41 வயதாக இருக்கும் போது மெலிதாக நெஞ்சுவலி என்று போய் அன்ஜியோபிளாஸ்ரி செய்து இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள்.

அதிலிருந்து சாப்பாடு உடற்பயிற்சி எல்லாவற்றிலுமே மிகவும் கவனமாக இருந்தேன்.நான் இருந்தேன் என்பதைவிட துணைவியார் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்.

இந்த நெஞ்சுவலிக்கு காரணம் புகைத்தல் தான் என்று டாக்ரர் சொன்னதும் பதின்ம வயதிலேயே பழகிக் கொண்ட புகைத்தலை அன்றிலிருந்தே இன்றுவரை தொட்டதில்லை.என்ன மனைவி மிகவும் அன்பாகவும் பக்குவமாகவும் கேட்டும் நிறுத்த முடியாததை டாக்ரர் சொல்லி நிறுத்தியதை எண்ண இப்போதும் மிகவும் கஸ்டமாகவே உள்ளது.

கடந்த மாசி கடைசியில் இருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 6-7 மாதங்களாக இருந்த போது கிழமையில் 4-5 நாட்களாவது 3-4 மைல்கள் நடப்பேன்.

நடக்கும் நேரங்களில் இடைஇடையே தொண்டையில் ஒரு மெலிதான நோவு அல்லது எரிதல் போன்ற ஏதொவொரு உணர்வு வருவதை உணர்ந்தேன்.நாளாந்தம் கவனித்த போது நடக்க தொடங்கி 8-10 நிமிடங்களில் அந்த உணர்வு வந்து வீடு போய் ஆறதல் எடுக்குமட்டும் இருந்தது. இதுவே வழமையாக இருந்தாலும் தொண்டையில் உள்ள நோவை பெரிதுபடுத்தவில்லை.

நியூயோர்க் வந்த பின்பும் பகலில் 8மணி போல் மகன் வீடு போவதும் மகனும் மனைவியும் வேலை செய்ய பேரப்பிள்ளைகள் இருவருடனும் இருந்து மதியம் இரவு சாப்பாடும் முடித்து இரவு 7 போல் வீடு வந்து 2-3 மைல் நடப்போம்.

ஒருநாள் இருதயவியல் டாக்ரர் அலுவலகத்திலிருந்து ஒரு வருடத்துக்கு மேலாக டாக்ரரைப் பார்க்கவில்லை உங்களுக்கு நேரமிருந்தால் டாக்ரரை பார்ப்பது நல்லது என்று தொலைபேசி அழைப்பு.என்ன செய்வது என்று வேண்டா வெறுப்பாக டாக்ரரைப் பார்க்க நேரம் ஒதுக்கினேன்.

டாக்ரரைப் பார்க்க வேண்டிய நாள் வந்ததும் எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் போய் பார்த்தேன்.

எல்லாம் கேட்டு விசாரித்த பின்பு வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்ட போது தான் தொண்டையில் ஏற்படும் வித்தியாசம் பற்றி ஞாபகம் வரவே அதைப் பற்றி சொன்னேன்.எல்லாவற்றையும் விபரமாக கேட்ட டாக்ரர் நெஞ்சு தோள்மூட்டு அல்லது வேறு எங்காவது வித்தியாசமாக இருக்கிறதா என்றார்.
அப்படி எதுவுமே இல்லை என்றதும் மிகவும் குழப்பமடைந்த டாக்ரர் சரி ஸ்ரென்த் வைத்து 23 வருடம் முடிந்து விட்தால் எதுக்கும் ஒரு தடவை டை அடித்து பார்ப்போம் என்றார்.

அதுக்கேற்ற மாதிரி ஆஸ்பத்திரி தெரிவு செய்து கொரோனா சோதனை செய்து நாளெடுக்க 5-6 நாள்கள் போய்விட்டன.

கடைசியில் மார்கழி 7ம் திகதி சிகிச்சை என்றும் 9 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருமாறு தொலைபேசியில் சொல்லி தேவையான விபரங்களும் எடுத்தார்கள்.
தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை கண்டது மகிழ்ச்சி
நீங்கள் எழுதிய விதம்  interesting

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாம் கேட்டு விசாரித்த பின்பு வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்ட போது தான் தொண்டையில் ஏற்படும் வித்தியாசம் பற்றி ஞாபகம் வரவே அதைப் பற்றி சொன்னேன்

இதெல்லாம் தற்செயலாக ஞாபகம் வந்து சொல்லும் விடயங்களா? சின்னப் பிரச்சினை என்றாலும் கேட்டுத் தெளிந்துகொள்ளவேண்டியவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் கண்டதில் சந்தோசம். 
அளவான உடற்பயிற்சியும் செய்கின்றீர்கள். உணவிலும் கட்டுப்பாடு. இதற்கு மேலும் நோய்கள் வருகின்றதென்றால் யாரை நொந்து கொள்வது?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை கண்டது மிகவும் சந்தோசம ஐயா.உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.🖐️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதில் மகிழ்ச்சி  அண்ணா. உடம்பில் கவனம் எடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, கவனமாக இருங்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதில் மகிழ்ச்சி  அண்ணா உடம்பில் கவனம் எடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி 

4 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருநாள் இருதயவியல் டாக்ரர் அலுவலகத்திலிருந்து ஒரு வருடத்துக்கு மேலாக டாக்ரரைப் பார்க்கவில்லை உங்களுக்கு நேரமிருந்தால் டாக்ரரை பார்ப்பது நல்லது என்று தொலைபேசி அழைப்பு.என்ன செய்வது என்று வேண்டா வெறுப்பாக டாக்ரரைப் பார்க்க நேரம் ஒதுக்கினேன்.

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி அண்ணை. 😊💐

சரியான நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பு என நம்புகிறேன். 

இது பற்றிய அனுபவங்களைப் பகிர்வதற்கு நன்றி. பலருக்கும் விழிப்புணர்வு தருவதாக இருக்கும் என்பது நிச்சயம். தொடருங்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனை... மீண்டும் கண்டதில்  மகிழ்ச்சி.
கடவுளே.. என்று, கடைசி நேரத்தில், வைத்தியரிடம் போனது நல்லதாய் போச்சு.

அதனை எங்களுடன், பகிர்ந்து கொண்டமையால்,
எம்மையும்... உசார் படுத்தியுள்ளது.     

உங்களை மீண்டும் கண்டதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவனமாக இருங்கள் அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.👌

 உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள் தோழர்.. 👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                       சிகிச்சைக்கு முதல்நாள் இரவு பிள்ளைகள் மருமக்கள் கூட்டாக சேர்ந்து அப்பாக்கு மாமாக்கு எத்தனை ஸ்ரென்த் வைப்பார்கள் என்று ஆளுக்காள் போட்டி.ஒன்று இரண்டு மூன்று நான்கு வரை போனது.மனைவியும் நானும் அப்படி எதுவும் நடக்காது.வேணுமென்றால் பழைய ஸ்ரென்த்தை கொஞ்சம் சரி செய்யலாம் என்று நம்பியிருந்தோம்.
                       மார்கழி 7ம் திகதி காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு மகனுடன் போனேன்.கொரோனா காரணமாக சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மீட்புஅறையில் என்னை விட்டுவிட்டு அவர் போய்விட்டார்.

                       சிகிச்சை என்றால் தெரியும் தானே.ஒன்றுக்கு பின்னால் ஒருவர் உடுப்பு மாற்றுதிலிருந்து ஊசிகள் ஏற்றுவது வரை விரைவில் செய்து முடித்துவிட்டார்கள்.நானும் வழமைபோல யாழை நோண்டிக் கொண்டிருந்தேன்.அன்றும் ஏதேதோ எழுதியதாக ஞாபகம்.

                        சரியாக 10 மணிக்கு டாக்ரர் வந்தார்.நான் தான் உனக்கு சிகிச்சை செய்யப் போகும் டாக்ரர்.முன்னரும் இதே சிகிச்சை பெற்றபடியால் இதைப்பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.போனதடவை கையிலா காலிலா செய்தது என்றார்.காலில் தான் செய்தது என்றேன்.இப்போது ஒருவருக்கு சிகிச்சை செய்ய போகிறேன்.அடுத்தது நீ தான் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
  
                         பிற்பகல் 12.15 மணியளவில் ஒருவர் வந்து கிடந்த கட்டிலோடே சிகிச்சை அறைக்கு தள்ளிக் கொண்டு போனார்.23 வருடத்துக்கு முன் பார்த்த சிகிச்சை அறையைவிட நவீனஅறையாக இருந்தது.எனக்கு எதுவித பதட்முமில்லாமல் ஏதோ தியேட்டரில் படம் பார்க்க வந்தவன் எப்படா படம் தொடங்கும் என்று ஆவலுடன் இருப்பதைப் போல பெரிய திரையில் பெயர் வயது வேறு ஏதேதோ போட்டார்கள்.15 நிமிடத்திலேயே டாக்ரர் வந்து சிகிச்சை ஆரம்பிக்க போவதாக சொன்னார்.

                          ஏறத்தாள இரண்டு மணிநேரம் சிகிச்சை.திரையை பார்த்துக் கொண்டருந்த வரை வயருகள் போகுது வருகுது.கமராக்கள் போகுது வருகுது.எதுவுமே எதிர்பாராமல் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ வித்தியாசம் விபரீதம் நடப்பதாகப் பட்டது.சிகிச்சை முடிந்ததும் அருகே வந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது.உனக்கும் சொல்கிறேன் குடும்பத்தில் யாருக்காவது சொல்ல வேண்டுமா என்றார்.
தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உனக்கும் சொல்கிறேன் குடும்பத்தில் யாருக்காவது சொல்ல வேண்டுமா என்றார்.

குண்டை தூக்கி போடுறீங்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

.சிகிச்சை முடிந்ததும் அருகே வந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது

உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி அங்கிள்!! கவனமாக இருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணா கவனமாக இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக அண்ணா மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

 சிகிச்சைக்கு முதல்நாள் இரவு பிள்ளைகள் மருமக்கள் கூட்டாக சேர்ந்து அப்பாக்கு மாமாக்கு எத்தனை ஸ்ரென்த் வைப்பார்கள் என்று ஆளுக்காள் போட்டி.ஒன்று இரண்டு மூன்று நான்கு வரை போனது.மனைவியும் நானும் அப்படி எதுவும் நடக்காது.வேணுமென்றால் பழைய ஸ்ரென்த்தை கொஞ்சம் சரி செய்யலாம் என்று நம்பியிருந்தோம்.

அட பிள்ளையள் மருமக்களுக்கை உங்களை வைச்சு கேம். :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி , உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்....நன்றாக ஓய்வெடுங்கள்.....!   👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

                    சிகிச்சை எல்லாம் நன்றாகவே முடிந்தது.பயப்படும்படியாக எதுவுமில்லை.ஆ இது எனக்கு முதலே தெரியும் தானே என்று எனது நினைக்கிறது.

                    ஒரு இடத்தில் 30 வீதம்   அடைப்பு இருக்கிறது.  மற்றைய இடம் முதல் வைத்த இரு ஸ்ரென்த்தும் ஏறத்தாள 100 வீதமும் அடைத்துவிட்டது இனிமேல் பயப்பட ஏதுமில்லை.வேறு எதாவது கேட்க போறியா?சிறிது மெளனத்தின் பின் இல்லை மிகவும் நன்றி  டாக்ரர் என்றேன்.   இது எனது மகளின் தொலைபேசி இலக்கம் அவவும் மருத்துவதுறையில் இருப்பதால் அவவுடன் கதைப்பது நல்லதென்றேன்.பக்கத்து மேசையில் இருந்த எனது தொலைபேசியைக் காட்டினேன்.இல்லை இல்லை இலக்கத்தை சொல்லு என்று தனது கைதொலைபேசியை எடுத்தார்.

                    இலக்கத்தை சொன்னதும் மகளுடன் நல்லநேரத்துக்கு அப்பா சிகிச்சைக்கு வந்துள்ளார் என்று நடந்த சிகிச்சையைப் பற்றி விபரமாக கூறியிருக்கிறார்.நான் ஓய்வுஅறைக்கு போவதற்கிடையில் குடும்பம் எல்லோருமாக வட்அப் இல் கூட்டமாக என்ன நடந்தது இனி என்ன செய்ய வேண்டும் என நிறைய சட்டதிட்டங்களை ஏகமனதாக நிறைவேற்றிவிட்டனர்.

                     ஓய்வறையில் கொண்டுபோய் விட்டதும் துடையில் போட்ட ஓட்டை மிகவும் வலியாக இருந்தது.முதல்நாள் இரவு சாப்பிட்டதற்கு இன்னமும் சாப்பாடு தண்ணி இல்லை.

                     இதைவிட மனதை குடைந்து கொண்டிருந்தது என்னவென்றால் இதுவரை 23 வருட அனுபவம் நானும் ஒரு குட்டி இருதயவியல் நிபுணர் போல எண்ணிக் கொண்டிருந்தேன்.சாதாரணமாக ஒருவருக்கு இருதயவலி வந்தால் எங்கே எங்கே நோவெடுக்குது என்பதை வைத்து இருதயவலியா என்பதை சுலபமாக பகுத்தறிந்துவிடலாம் என்றே எண்ணியிருந்தேன்.அதனால்த் தான் தொண்டையில் நோ வந்தும் இதயத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று எண்ணினேன்.இப்போது தான் விளங்கியது படித்தவன் எப்போதும் படித்தவன் தான்.

                        அனேகமானவர்களை அன்றன்றே வீட்டுக்கு அனுப்பினார்கள். என்ன காரணமோ என்னை அடுத்த நாளே அனுப்புவதாக கூறினார்கள்.நல்ல சாப்பாடுகள் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கொரு தடவை துடையில் போட்ட ஓட்டையால் இரத்தம் வருகிறதா வீக்கம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டார்கள்.எனக்கு பொறுப்பாக இருந்த தாதி மிகவும் பொறுப்பாகவும் ஏதோ குடும்ப உறுப்பினர் போலவும் நடந்து கொண்டது நெஞ்சை நெகிழ வைத்தது.

                          அடுத்தநாள் காலை 9.30 மணிபோல வீட்டுக்கு அனுப்ப போகிறோம் யாரையாவது வரச் சொல்லு அவர்கள் கீழே வந்த பினபு தான் உன்னை இங்கிருந்து அனுப்புவோம் என்றார் தாதி.மகன் 5 நநிமிடத்திலேயே வந்து கீழே நிற்பதாக சொன்னார்.ஒரு சக்கர நாற்காலியில் இருத்தி கீழே கொண்டுவந்து மகனிடம் ஒப்படைத்தார்கள்.
தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நலமாக திரும்பி யாழ் வந்ததையிட்டு சந்தோசம் ஈழப்பிரியன் அண்ணா. நான்தான் காணாமல் போயிருந்தேன் என்று நினைத்தேன். திரும்ப வந்து பார்த்தால் உங்களையும் காணவில்லை. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். 

அன்புடன் தங்கை நில்மினி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இதைவிட மனதை குடைந்து கொண்டிருந்தது என்னவென்றால் இதுவரை 23 வருட அனுபவம் நானும் ஒரு குட்டி இருதயவியல் நிபுணர் போல எண்ணிக் கொண்டிருந்தேன்.சாதாரணமாக ஒருவருக்கு இருதயவலி வந்தால் எங்கே எங்கே நோவெடுக்குது என்பதை வைத்து இருதயவலியா என்பதை சுலபமாக பகுத்தறிந்துவிடலாம் என்றே எண்ணியிருந்தேன்.

 உங்கை கனபேருக்கு நாலுதரம் ஆஸ்பத்திரிக்கு போய்வந்தால் அரை வைத்தியர் எண்ட நினைப்பு.. 😁 (எனக்கும் உந்த நினைப்பு எக்கச்சக்கம்):cool:

ரெஞ்சன் ஆகாமல் இருப்பதுதான் எல்லாத்துக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி , உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்....நன்றாக ஓய்வெடுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.